வலைப்பதிவர்களுக்கு என் நன்றி!!!

நேற்று ஆர்க்குட்டில் முகம் தெரியாக நண்பர் ஒருவர் ஸ்க்ராப் (Scrap) செய்திருந்தார்.

“அன்பின் பாலாஜி…… ஆனந்த விகடனில் தங்களுடைய Blog முகவரி கிடைத்தது……. படித்தேன்……. தங்களை ஓர்க்குட்டில் தேடிப்பிடித்தேன்…….மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்களுடன், ராம்குமார்”

நான் யாரோ எங்க பசங்க தான் கலாய்க்கிறானுங்கனு நெனைச்சிக்கிட்டு
“ராம் குமார்,மிக்க நன்றி.இருந்தாலும் ஆனந்த விகடன்ல பார்த்தன்னு கதை விட வேணாம்…”னு அவருக்கு ஸ்க்ராப் செய்தேன்.

அதற்கு பிறகு அவர் எனக்கு அந்த தொடரில் இருந்ததை டைப் செய்து அனுப்பினார். இருந்தும் எனக்கு நம்பிக்கையில்லை. அப்போழுது இந்திய நேரம் 4:00. இனையத்தில் முந்தைய பதிவே இருந்தது. சரி காத்திருப்போம் என்று இருந்தேன்.

காலை 7 மணிக்கு வீட்டிற்கு போன் செய்து, ஆனந்த விகடன் வாங்குமாறு சொன்னேன். ஆனால் விஷயத்தை சொல்லல. எங்கே பொய்யா இருந்தால் வீட்ல கஷ்டப்படுவாங்கனு சும்மா லேசா அதுல எங்க கம்பனி பற்றி வந்திருக்கிறதுனு சொல்லிட்டேன். சரி 9 மணிக்கு போன் செய் என்று அப்பா சொல்லிவிட்டார். (உண்மையை சொல்லியிருந்தால் உடனே வாங்கியிருப்பார்)

பிறகு நல்லா சமைச்சி சாப்பிட்ட பிறகு 9 மணிக்கு போன் செய்து உறுதிபடுத்திக் கொண்டேன். விட்ல ரொம்ப சந்தோஷப்பட்டாங்க!!! (ஒன்னும் நான் பெருசா சாதிக்கலனு அவுங்களுக்கும் தெரியும். இருந்தாலும் தமிழ் நாட்ல முன்னணி வார இதழ்ல நம்ம பையன் பேர் வந்திருக்கேனு ஒரு சந்தோஷம் தான்)

நான் முதல பிளாக் ஆரம்பிக்க போறன்னு என் friend ஒருத்தவங்கட்ட சொன்னப்ப உனக்கு எல்லாம் எதுக்கு இந்த வேலை அப்படினு தான் சொன்னாங்க!!!

என்னுடைய முதல் பதிவே ரொம்ப பிரச்சனைக்குரிய விஷயமா போனதுல ஒரு வருத்தம். சரி அதை ஈடு செய்யும் வகைல ஏதாவது செய்யலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்.

அதே சமயத்துல நான் எங்க ரூம்ல இருந்து வந்தது ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டதுனு எங்க ரூம்ல இருக்கற பசங்க சொன்னாங்க. ரூம்ல வேலை தேடற பசங்க பொதுவா நம்ம இன்சார்ஜ் தான்.

ஒரு சிலருக்கு கம்பெனிக்கு போன பிறகும் போன் செய்து இதை படிச்சியா, அதை படிச்சியானு கேட்டுட்டே இருப்பேன். சரி நாமா இப்ப அங்க இல்லாத குறையை சரி செய்யனும் யோசிச்சப்ப தான் சரி நம்ம பிளாக்ல இதை பற்றியே எழுதிடலாம்னு எழுத ஆரம்பிச்சேன்.

நான் ஒன்னும் ரொம்ப சிறப்பா எழுதலனு எனக்கும் தெரியும். இருந்தாலும் நல்லா எழுதறனு ஊக்கமளித்த பாலச்சந்தர் கணேசன், வடுவூர் குமார் , நாகை சிவா, ஹரி ஹரன், syam ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என்னுடைய பிழைகளை சுட்டிக் காட்டிய எழுத்துப் பிழையாருக்கும்,
தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட குமரன், $elvan, வைக், கார்த்திக் ஆகியோருக்கும், எனக்கு எழுத ஆர்வமளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், தமிழ் வலைபதிவர்களுக்கும் என் நன்றி. (யாரையாவது விட்டிருந்தால் மன்னிக்கவும்)

கடைசியாக என் முயற்சியை மக்களிடம் எடுத்து சென்ற விகடனாருக்கும், என். சொக்கன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

38 பதில்கள்

  1. வந்தேன்,வென்றேன் என்ற மாதிரி வலைபதிய நேற்று தான் நீங்கள் வந்தமாதிரி இருக்கு.அதற்குள் இம்புட்டு பெரிய சாதனை பண்ணிருக்கிங்களே.

    மேன்மேலும் உயர்ந்து ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோட என் வாழ்த்துக்கள்

  2. //நேற்று தான் நீங்கள் வந்தமாதிரி இருக்கு//
    ஆமாம் செல்வன்,
    நான் தமிழ்மணத்தில் இனைந்து 40-45 நாள் தான் இருக்கும்.

    //அதற்குள் இம்புட்டு பெரிய சாதனை பண்ணிருக்கிங்களே//
    செல்வன், இதுல்லாம் சாதனைனா அப்பறம் உண்மையாலும் பண்ற சாதனையெல்லாம் என்ன சொல்வீங்க 🙂

    //மேன்மேலும் உயர்ந்து ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோட என் வாழ்த்துக்கள் //
    மிக்க நன்றி.

  3. வாழ்த்துகள் பாலாஜி. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

  4. வாழ்த்துக்கள் பாலாஜி…

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

  5. வெட்டிப் பயல் ‘வேலை’வெட்டிப்பயல் ஆகியதுகுறித்துமகிழ்ச்சி.

    இன்னும் செயுயுங்கள்.

  6. ராகவன்கப்பிஅலெக்ஸ்,
    மிக்க நன்றி.

  7. நல்ல விசயம்…

    வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்…

  8. ஆம். நானும் விகடனில் உங்கள் பதிவு பற்றி வந்திருந்ததை பதிவாக இட்டுள்ளேன். ஒரு நல்ல உபயோகமான தலைப்பில் எழுதும் போது கவனம் வரத்தான் செய்யும். பொதுவாகவே பாசிட்டிவ்வான முயற்சிக்கு பலன் வரத்தான் செய்யும். உங்களுக்கு கிடைத்த கவனம் இன்னமும் பலர் பாசிட்டிவ்வான விஷயங்களை எழுத தூண்டுதலாக இருக்கும். ஆனால் எழுத ஆரம்பித்த 50 நாட்களுக்களாக கவனம் வந்திருப்பதை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஏனெனில் நீங்கள் எழுதுகிற விஷயம் தான் முதலில் முக்கியம். பின்னர் தான் எவ்வளவு நாள் எழுதுகிறீர்கள் என்பது. (வெகு நாளாக தரத்தை மெயின்டைன் பண்ணினால் அது மேலும் சிறப்பு).

    http://bunksparty.blogspot.com/2006/08/blog-post_04.html

  9. சிவபாலன்,
    மிக்க நன்றி.

    பாலசந்தர் கணேசன்,
    உங்களுடைய பதிவைப் பார்த்தேன். நன்றி சொல்லி பின்னூட்டமிடலாமென்று முயற்சி செய்தேன். ஆனால் அது error கொடுத்தது. சரி நம் பதிவிலே சொல்லிவிடலாமென்று பதிவிட்டுவிட்டேன்.

    //ஆனால் எழுத ஆரம்பித்த 50 நாட்களுக்களாக கவனம் வந்திருப்பதை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஏனெனில் நீங்கள் எழுதுகிற விஷயம் தான் முதலில் முக்கியம். பின்னர் தான் எவ்வளவு நாள் எழுதுகிறீர்கள் என்பது.//
    சரியாக சொன்னீர்கள். ஆனால் இப்பொழுது எனக்கு இன்னும் பொறுப்பு கூடியுள்ளதாகவே உணர்கிறேன். தொடர்ந்து ஊக்கமளித்து வந்ததற்கு மிக்க நன்றி.

  10. நானும் இன்றைக்குக் காலையில் விகடனின் உங்கள் பதிவைப் பற்றியக் குறிப்பைப் பார்த்தேன். நிறைவாக இருந்தது. வாழ்த்துக்கள். பயனுள்ள பதிவுகள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    மா சிவகுமார்

  11. வாழ்க வளர்க,
    நமக்கு தெரிந்தவரைப்பற்றி ஆனந்த விகடனில் வந்தது பற்றி எனக்கு மிகவும் சந்தோஷம்.(இது நம்மாளு)
    இன்னும் பல எழுதி நம் மக்களை மென்மேலும் முன்னேற்ற உதவுங்கள்.
    உங்கள் எழுதுக்களில் மிகவும் பிடித்தது தனக்கு தெரிந்ததை அடுத்தவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என்ற போற்றப்படவேண்டிய குணம்.இது பலரிடம் குறைவாக உள்ளது.
    உங்களிடம் எதிர்பார்க்க நிறைய விஷயம் உள்ளது.
    “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.
    உங்கப்பாவையும் உசத்தீட்டீங்க.

  12. //நானும் இன்றைக்குக் காலையில் விகடனின் உங்கள் பதிவைப் பற்றியக் குறிப்பைப் பார்த்தேன். நிறைவாக இருந்தது. வாழ்த்துக்கள். பயனுள்ள பதிவுகள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
    //
    சிவக்குமார் மிக்க நன்றி.

  13. வடுவூர் குமார்,
    மிக்க நன்றி.
    ஆனால் உங்களுக்கு உதவுற மாதிரி எதுவும் சொல்லலைனு ஒரு வருத்தமிருக்குது.

  14. கலக்கிட்டீங்க. பளாக் எழுதி யாரும் எதுவும் சாதிக்கலைனு யாரோ சொன்னாங்க அத இந்த மாதிரி சில விஷயங்கள்தான் பொய்யாக்குது. வாழ்த்துக்கள், ட்ரிட் எப்ப தரப்போறிங்க? 🙂

  15. முதல் வாழ்த்துகள் என்னுடையதாக தான் இருந்திருக்க வேண்டும்..மன்னிக்க தாமதமாயிற்று,மேலும் உங்களை பற்றி நான் போட்ட பதுவு தலைப்பின் நீளம் காரணமாக
    நீக்கப் பட்டுள்ளது..ஆனால் இப்போது சரி செய்து விட்டேன்..இனி நீங்கள் பின்னூட்டமிடலாம்..வாழ்த்துகள் மீண்டும்

  16. எனக்கு அப்பவே தெரியும் நீங்க பெரிய ரேஞ்சுக்கு வர போறீங்கனு…முளையும் பயிர்…கலக்குங்க..டபுள் வாழ்த்துக்கள்…ஆமா ஆ.வி ல எந்த தலைப்புல வந்து இருக்கு…ஆன் லைன் ல தேடி பார்த்தேன் ஒன்னியும் கானோம்…

  17. வெட்டி,

    வாழ்த்துக்கள்…

    தொடரட்டும் தங்கள் பணி.

  18. பாலாஜி
    உடுங்க,எனக்கும் தேவைப்படுவதை அந்த நேரத்தில் எடுத்துக்கொள்கிறேன்.

  19. வைக்,
    சரியான நேரத்தில் Area Of Interest பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை சொன்னீர்கள். மிக்க நன்றி.
    ட்ரீட் தானே… பெங்களூர்ல பாக்காமலா போயிடுவோம்…அப்ப வெச்சிக்கிவோம் :-))

    sk ஐயா,
    மிக்க நன்றி.

    கார்த்திக்,
    வலைப்பதியும் நண்பர்களில் முதல் வாழ்த்து உன்னுடையதுதான். மிக்க நன்றி. இதோ உன் பதிவுக்கு வந்து கொண்டே இருக்கிறேன்.

    Syam,
    தொடர் ஆரம்பித்ததிலிருந்து ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி. ஆ.வில வல்லிணம், மெல்லினம், இடையினம்ல வந்திருக்கிறது.
    ஆ.வில வருவதற்கு முதல் நாள்தான் நீங்க இதை புத்தகமாக போடலாம் என்று சொன்னீர்கள். அதை நான் என் நண்பர்களிடம் காட்டினேன். மிக்க நன்றி!!!

    சங்கர்,
    மிக்க நன்றி.

    குமார்,
    ஏதாவது புத்தகம் வேண்டுமென்றால் சொல்லுங்கள். இ.புக் இருந்தால் நான் பார்த்து தருகிறேன்.

  20. வாழ்த்துக்கள்! உங்களை இன்னும் ஊக்குவிப்பதாக இது அமையட்டும்!

  21. நானும் இன்றைக்குக் காலையில் விகடனின் உங்கள் பதிவைப் பற்றிப் பார்த்தேன். எனது சக வலைப்பதிவாளரை பற்றிய செய்தி ஒரு முக்கியமான பத்திரிக்கையில் வந்திருப்பது மிகவும் சந்தோசமான விசயம்.வாழ்த்துக்கள். பயனுள்ள பதிவுகள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

    அன்புடன்…
    சரவணன்.

  22. மனமார்ந்த வாழ்த்துகள் பாலாஜி(வெட்டி பையல்).

    தொடர்ந்து சாதனைகள் புரியுங்கள்.

  23. சரவணன்,
    மிக்க நன்றி. தொடர்ந்து நல்ல விஷயங்களை எழுத முயற்சிக்கிறேன்.

    முத்துகுமரன்,
    மிக்க நன்றி.

  24. இது போன்ற பல உருப்படியான விஷயங்களை எழுதி புகழ்பெற வாழ்த்துக்கள் நண்பரே

  25. மணியன்,
    மிக்க நன்றி.

    முத்து தமிழினி,
    மிக்க நன்றி.இனிமே நினைத்ததெல்லாம் எழுத முடியாதுனு ஒரு சின்ன வருத்தம். உருப்படியாம விஷயம் தான் ஏதாவது எழுதியாகனும்.

  26. //”அன்பின் பாலாஜி…… ஆனந்த விகடனில் தங்களுடைய Blog முகவரி கிடைத்தது……. படித்தேன்……. தங்களை ஓர்க்குட்டில் தேடிப்பிடித்தேன்…….மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்களுடன், ராம்குமார்”//

    பா.மோ … ! மாமு மாதிரி சுருக்கிடுவோம்… !

    நேற்று … பாக (பாலச்சந்தர் கணேசன்) இதுபற்றி பதிவு போட்டிருந்தார்… ! படித்தேன்

    உங்கள் பதிவு நல்லா ரீச் ஆகியிருக்குகிறது .. உங்கள் மகிழ்ச்சியில் ‘நண்பர் தின’ நன்னாளில்
    இணைந்து பங்குபெற்று மகிழ்ச்சி அடைகிறேன்… மேலும் எதாவது சொல்லனும் ! ம்

    நண்பர் தின நல்வாழ்த்துக்கள் !

    பலநூறு பதிவுகண்டு பெருவாழ்வு வாழ்க !

  27. //உங்கள் பதிவு நல்லா ரீச் ஆகியிருக்குகிறது //
    ஆமாம் கோவி.கண்ணன், இது உண்மையிலே மகிழ்ச்சி அளிக்கிறது.
    ஒரு முக்கியமான விஷயம் என்னனா, வேலை தேடறவங்க யாரும் ப்ளாக் எல்லாம் படிக்கமாட்டாங்க…இப்ப விகடன்ல வந்ததால யாரவது ஒன்னு, ரெண்டு பேராவது படிப்பாங்கனு நினைக்கிறேன்.

    மிக்க நன்றி.

    உமக்கும் என் மனமார்ந்த நண்பர் தின நல்வாழ்த்துக்கள்.

  28. வாழ்த்துகள் பாலாஜி.

    இது பெரும் சாதனை இல்லை என்று நீங்கள் சொல்வது சரி என்றாலும் நீங்கள் இதுவரை செய்துவந்த உதவிகளைப் பெற்று வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைந்த உங்கள் அறைக்கு வந்த நண்பர்களின் நல்லெண்ணங்களும் வாழ்த்துகளுமே ஒரு முன்னணி வார இதழில் உங்கள் பெயர் வரச் செய்து இணையத்திலும் உங்கள் முதல் இடுகையில் உங்கள் மேல் விழுந்த முத்திரையையும் நீங்கும் வகை செய்திருக்கிறது. நல்ல எண்ணம் இருந்தால் அது எப்போதும் (காலம் தாழ்ந்தாவது) வெளியே தெரிந்தே தீரும். மீண்டும் வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் தரமான மற்றவர்களுக்கு உதவியான பதிவுகளை எழுதுங்கள்.

    இணையத்தில் இன்னொரு நல்ல விதயம் என்ன என்றால் ஒருவர் புதிதாக ஒன்றைச் செய்து அது பலராலும் பாராட்டப்பட்டால் நிறைய பேர் அதனைச் செய்ய முயல்வர். இப்போது நீங்கள் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். இனிப் பாருங்கள். இதே போல் தங்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் பதிவுகள் நிறைய வரும். (அப்படி வரவேண்டும் என்பது என் விருப்பம்).

  29. //இது பெரும் சாதனை இல்லை என்று நீங்கள் சொல்வது சரி என்றாலும் நீங்கள் இதுவரை செய்துவந்த உதவிகளைப் பெற்று வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைந்த உங்கள் அறைக்கு வந்த நண்பர்களின் நல்லெண்ணங்களும் வாழ்த்துகளுமே ஒரு முன்னணி வார இதழில் உங்கள் பெயர் வரச் செய்து இணையத்திலும் உங்கள் முதல் இடுகையில் உங்கள் மேல் விழுந்த முத்திரையையும் நீங்கும் வகை செய்திருக்கிறது.//

    குமரன்,
    நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. இதை நான் என் வாழ்க்கையில் ஒரு சில இடங்களில் அனுபவித்து இருக்கிறேன். எனக்கு வேலை கிடைத்ததே இந்த மாதிரிதான். இதை பற்றி ஒரு பதிவிடுகிறேன்.

    //இணையத்தில் இன்னொரு நல்ல விதயம் என்ன என்றால் ஒருவர் புதிதாக ஒன்றைச் செய்து அது பலராலும் பாராட்டப்பட்டால் நிறைய பேர் அதனைச் செய்ய முயல்வர். இப்போது நீங்கள் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். இனிப் பாருங்கள். இதே போல் தங்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் பதிவுகள் நிறைய வரும். (அப்படி வரவேண்டும் என்பது என் விருப்பம்).
    //
    இந்த மாதிரி நடந்தால் ரொம்ப சந்தோஷம். நானும் எனக்கு தெரிந்த வகையில் எழுதுகிறேன்.

    தொடர்ந்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டு ஊக்கமளித்ததற்கு மிக்க நன்றி.

  30. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  31. சிவா,
    மிக்க நன்றி…
    உமக்கும் எமது நண்பர் தின நல்வாழ்த்துக்கள்…

  32. naan kooda vigatanil padithen.

    congrats.
    hope I can get more information from your blog.

  33. Rasiga,
    Thx for ur wishes.
    Will try to give my best…

  34. Hey Congratulations…Kalakare Balaji ;-))

    Keep up the Good Work :-))

  35. Nithya (Gladtomeetin),
    Thx for the wishes and introducing blogs to me…

முத்துகுமரன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி