சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-8!!!

சின்ன சின்ன டிப்ஸ்:
– எந்த கம்பெனிக்கு ஆப்டிடுயுட் டெஸ்ட் (Aptitude Test)க்கு செல்வதென்றாலும் அதற்கு முன்பு அந்த கம்பெனி பழைய கேள்வித்தாள்களை படித்துவிட்டு செல்லவும். (நான் சிண்டல் (syntel) எழுத போகும்போது பழைய கேள்விகளை படித்துவிட்டு போனதால் எளிதாக தேர்வானேன். 50 கேள்விகளில் 30 கேள்விகள் பழைய கேள்விகளில் இருந்தே வந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் அதில் சேரவில்லை). www.freshersworld.com ல் பழைய கேள்வித்தாள்கள் இருக்கும்.

முடிந்த வரை நண்பர்களுக்கு உதவவும். எந்த கம்பெனியாவது வாக் இன் (Walk In) நடத்தினால், நண்பர்கள் அனைவருக்கும் சொல்லவும். எங்கே அவர்கள் நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்று நினைக்கவேண்டாம். பொறாமை நம்மை அழித்துவிடும். (நண்பர்களுக்கு நான் எந்த கம்பெனிக்கு தயார் செய்யும் முறையை சொல்லி கொடுத்தேனோ அந்த கம்பெனியிலே சேர்ந்தேன்)

-1 மணி நேரத்தில் 50-60 கேள்விகள் என்று ஆப்டிடுயுட் டெஸ்ட் இருந்தால், முதலில் எல்லா கேள்விகளையும் வாசிக்கவும். ஏனெனில் ஒரு சில கேள்விகளுக்கு படித்தவுடனே விடை தெரிந்துவிடும் (Next day after Tuesday…1,3,5,?). அதனால் துவக்கத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் கேள்விகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

– இன்போஸிஸ் தயார் செய்ய: முதலில் Quantitative Aptitude, அடுத்து shakuntala Devi’s Puzzle to Puzzle You & More Puzzles, அடுத்து Puzzles and Teasers by George Summers, மிக முக்கியமானது பழைய கேள்வித்தாள்கள்.

– சின்ன சின்ன ப்ரோகிராம் எந்த நேரத்தில் கொடுத்தாலும் போடுமாறு தெரிந்து வைத்துக் கொள்ளவும். (Fibanocci Series, Find Prime Number, find whether Palindrome, sum of a number…)

– வாக் இன் (Walk In) நடத்தினால் முடிந்தவரை சீக்கிரமாக சென்றுவிடவும். 10 மணி வாக் இன் என்றால் 7-8 மணிக்கே சென்றாலும் தப்பில்லை. அழைப்பின் பேரில் (Call Letter) சென்றால் 30 நிமிடம் முன்னால் சென்றாலே போதும்.

– ஒவ்வொரு கம்பெனியாக சென்று ரெசுமே கொடுத்து நேரத்தை வீணாக்காதீர்கள். பெரும்பாலான கம்பெனிகள் இ-மெயிலில் தான் ரெசுமே வாங்குகிறார்கள். அந்த நேரத்தில் உட்கார்ந்து படியுங்கள்.

-மீண்டும் சொல்கிறேன். தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுங்கள். நான் அனைத்தையும் படித்துவிட்டு சொல்லி தருவேன் என்று சொல்லாதீர்கள்.

இறுதியாக என் பள்ளியின் தாரக மந்திரமான “உழைப்பே உயர்வு தரும்” (Labor Omnia Vincit) என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்தவரை நான் அனுபவித்ததை உங்களுடன் பகிர்ந்துவிட்டேன். சீக்கிரம் வாங்க உங்களுக்காக நிறைய Treat காத்துக்கிட்டு இருக்கு….

ஒரு சின்ன சந்தேகம்!!!

ஒரு சின்ன சந்தேகம். யாரும் தப்பா எடுத்துக்காதீங்க!!!

கங்கை சிவனோட மனைவியா?

அப்படினா பாரதத்துல வர சந்தானு மன்னனை மணந்து 8 பிள்ளைகள் பெறுவதும் கங்கை தானே???

தெரிந்தவர்கள் சொன்னா நல்லா இருக்கும்…

கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த “கரகாட்டக்காரன்” பார்ட்-II

நம்ம டவுசர் புகழ் கி”ராமராஜன்” ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.
ராமராஜன் – CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் – டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா – சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.
கோவை சரளா – சாப்ட்வேர் இஞ்சினியர்.

காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.

ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!

கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.

ரா.ரா: யார் யாரு???

கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!

செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.

கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட…

ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???

கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???
….

2 நிமிடம் கழித்து

கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?

1 நிமிடம் கழித்து:

கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.

ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?

கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்… ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.

ஜி.பாலையா: ஹாஹாஹா

கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.

காட்சி – 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு…

கவுண்ட்ஸ்: ஏய் ஏய்… நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன…ஏய் சொல்லு…சொல்லு

புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் “A” போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!

கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?

செந்தில்: ஒரு விளம்பரம்தான்…

கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????

கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்…

கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்……ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ, நியூ யார்க்ல IBMல கூப்டாகோ…. என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?

கோ.சரளா: ஹிக்க்க்க்ம்…இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை…

கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!

ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்…

(வாழைப்பழ ஜோக் அடுத்த பாகத்தில்)….

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-7!!!

Technical Interviewவிற்கு தயார் செய்வது எப்படினு முந்தைய பகுதியில் பார்த்தோம்.

நேர்முக தேர்வை (Personal Interview) அணுகுவது எப்படினு இந்த பகுதியில் பார்ப்போம்.

செய்யக் கூடாதவை:
-சரியான நேரத்தில் சென்றால் போதும் நினைக்காதீர்கள்.
-அடிக்கிற மாதிரி கலர்ல டிரஸ் போடதீர்கள். (நீங்கள் ராமராஜன், விஜயகாந்த், சிம்பு ரசிகரா இருக்கலாம். அதுக்காக உங்க பாசத்த இண்டர்வியூவில் காட்ட வேண்டாம்)
-இண்டர்வியூவின் போது சிவிங் கம் (Chewing Gum) சாப்பிடாதீர்கள்.
-உங்கள் வறுமை நிலைமையை சொல்லி வேலை கேட்காதீர்கள்.
-அதிக பிரசங்கி தனமாக எதுவும் பேசாதீர்கள். (Dont act over smart)
-இந்த ஊரில்தான் வேலை செய்வேன் என்று அடம்பிடிக்காதீர்கள்.

செய்யவேண்டியவை:
– 30 நிமிடத்திற்கு முன்னாதக இண்டர்வியூ நடக்கும் இடத்திற்கு சென்றுவிடவும்.
– Formalsல் செல்லவும். முழுக்கை சட்டை, பேண்ட், ஷீ அணியவும்.(Even if the company does not have dress code)
– தேவையான சர்ட்டிபிகேட் கையில் வைத்திருக்கவும். அதற்கு ஒரு செக்-லிஸ்ட் வைத்திருக்கவும். சர்ட்டிபிகேட்களை சரியான முறையில் அடுக்கி வைக்கவும். தேவைப்படும் போது எடுக்க வசதியாக இருக்கும்.
-உங்கள் பெயரை அழைத்தவுடன் உள்ளே செல்லவும்.
-உள்ளே சென்றவுடன் நட்புடன் சிரித்து வாழ்த்து சொல்லவும். (Have a Friendly Smile and Say “Hi/Hi, how r u doing?”. Let it be casual)
-இண்டர்வியூ எடுப்பவர் கை கொடுத்தால் மட்டும் கை கொடுக்கவும்.
-கை கொடுக்கும் போது ஓரளவு இறுக்கமாக கை கொடுக்கவும் (Let it be Firm to show ur confident). பயம் வேண்டாம்.
-கேள்வி கேட்பவரின் கண்ணைப் பார்த்து பெசவும். 4-5 பேர் இண்டர்வியூ பேனலில் இருந்தால், கேள்வி கேட்பவரைப் பார்த்து பதில் சொல்லவும்.
-தன்னம்பிக்கையுடன் பதில் சொல்லவும். இதுவே வேலை வாங்குவதற்கு உதவும்.
-செல் போனை தவிர்க்கவும். எடுத்து சென்றாலும் அணைத்துவிடவும் (Switch it Off)
– முடிந்தவரை உண்மையை பேசவும்.

பெரும்பாலான கம்பெனிகளில் முதல் கேள்வி, உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்பதுதான். (Tell me about yourself)
என்னைக் கேட்டால் இந்த கேள்விக்கு பதிலை மனப்பாடம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒப்பிக்கற மாதிரி இருக்கக்கூடாது. பொறுமையா நிதானமாக சொல்வது மாதிரி இருக்க வேண்டும்.
(நான் மனசுக்குள்ளே இதை 100 முறையாவது சொல்லி இருப்பேன்).

Tell me about youselfல் நான் சொல்லியது இதுதான்:
என் பெயர்.
கல்வி விவரம் (கல்லூரி விவரம் போதும்)
குடும்பம் (அப்பா, அம்மா, சகோதர/சகோதிரியின் இன்றைய நிலை. அவர்கள் பேர் எல்லாம் சொல்ல தேவையில்லை. படிக்கிறார்கள் என்றால் படிக்கிறார்கள்/ வேலைக்கு செல்கிறார்கள் என்றால் என்ன வேலை அவ்வளவுதான்)
உங்கள் பொழுது போக்கு (அதிகமாக சொல்லாதீர்கள். உண்மையை சொல்லவும். நான் சொன்னது சமையல்)
உங்கள் பலம்.
அவர்கள் கேட்டால் பலவீனத்தை சொல்லவும். பலவீனமும் ஒரு வகையில் பலமாக இருக்குமாறு சொல்லவும். நான் சொன்னது, எனக்கு இரக்ககுணம் அதிகம், அதனால் மற்றவர்களுக்கு உதுவுகிறேன் பேர்வழியாக என்னையே கஷ்டப்படுத்தி கொள்வேன். ஆனால் அந்த பணி வெற்றியடைந்த பிறகு மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.

முடிந்த அளவு 90-120 நொடிகளுக்குள் முடித்து கொள்ளவும். குறைந்த பட்சம் 20 முறையாவது சொல்லி பார்க்கவும்.

தன்னம்பிக்கையுடன் பேசவும், தலைகனத்துடன் வேண்டாம்.

சின்ன சின்ன டிப்ஸ்….

தொடரும்…

கேப்டனுக்கு ஒரே போட்டியாளர்!!!

நகைச்சுவை படங்களில் நடிப்பதற்கு கேப்டனுக்கு போட்டியாளர்கள் யாருமில்லை என்று நினைத்திருந்த அகில இந்திய கேப்டன் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

அவருக்கு போட்டியாக ஆந்திராவில் ஒரு புயல் மையம் கொண்டிருந்ததை இத்தனை நாளாக யாரும் உணரவில்லை.

முன்னெச்சரிக்கை:
18 வயதுக்கு கீழிருப்பவர்களும், இதய பலகீனமுள்ளவர்களும் இதை பார்க்க வேண்டாம்.

MI-IIhttp://www.youtube.com/watch?v=ygR68FIvri0&search=ballaya

Attacking Terroristhttp://youtube.com/watch?v=GZJDTszmN_Y&search=balayya

Trainhttp://youtube.com/watch?v=5ZxyGrJpwN0&search=balayya

Bikehttp://www.youtube.com/watch?v=eB5JzLy2e3c&search=balayya

மேலே உள்ள காட்சிகளைப் பார்த்து நரசிம்மாவைவிட சிறந்த நகைச்சுவை படமாக பாலைய்யாவின் விஜயேந்திர வர்மா உள்ளதாக கேப்டன் ரசிகர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.
அதுவும் பாராசூட்டில் தரையிலிருந்து ஹைதராபாத்திலிருந்து பாகிஸ்தான் சென்று அனைத்து தீவிரவாதிகளையும் ஒரே ஆளாக கொன்ற பாலைய்யாவை Vice-Captainஆக சேர்த்துக் கொள்ளுமாறு ரசிகர்கள் கேப்டனை வேண்டியுள்ளனர்.

அறிவியலும் ஆன்மீகமும்

ஒரு சில அறிவியல் விதிகள் எனக்கு ஆன்மீக சிந்தனைகளையே தூண்டிவிட்டன. உங்களுக்கு தெரிந்ததையும் சொல்லுங்கள்.

“For Every Action, there is an Equal and Opposite Reaction”
நீ செய்யும் ஒவ்வொரு நல்ல செயல்களும் தீய செயல்களும் அதே அளவு உனக்கு திரும்பி கிடைக்கிறது.

நான் பத்தாவது படிக்கும் போது ஆங்கில ஆசிரியர் சொன்னது.
“தம்பிகளா, உலகம் உருண்டை. நீ வீசுகின்ற ஒவ்வொரு கல்லும் உன்னையே திருப்பித் தாக்கும். அதனால மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்ளுங்கள்.”

“Energy Can Neither be created nor be destroyed but its converted to one form to another”
ஆன்மா உருவாவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை. அது பல உடல்களைப் பெற்று ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுகிறது”

இந்து மதமும் சாதியும்!!!

$elvan அவர்களின் பதிவில் மயூரான் அவர்கள் கேட்டக் கேள்வியின் பதிலாக இந்த பதிவு.

மதத்தின்/கடவுளின் அடிப்படையில் தோன்றியதா சாதி? எனக்கு புரிந்த வகையில் இல்லை. அப்படி என்றால் திருமாலை வணங்குபவர்கள் அனைவரும் ஒரு சாதியாகவும், சிவனை வணங்குபவர்கள் அனைவரும் ஒரு சாதியாகவும் இருந்திருக்க வேண்டும்.

தொழிலை சார்ந்தே சாதிகள் அமைந்தன. அதனால் அன்றைய நிலையில் ஒரு சில நன்மைகளும் இருந்தன. வைத்தியன் மகன் சிறுவயதிவிருந்தே தந்தைக்கு உதவி செய்து தொழிலைக் கற்றுக் கொண்டான். வணிகனுடைய பிள்ளைகள், கோவில் அர்ச்சகரின் பிள்ளைகள், விவசாயின் பிள்ளைகள், அரச வாரிசுகள் என்று அனைவரும் பெரும்பாலும் தங்கள் தந்தையிடமிருந்தே கற்றனர்.
(இன்றைய கல்வி வசதி அவர்களுக்கு இல்லை)

இது அனைவருக்கும் பொருந்தியதாகவே இருந்தது. ஒரு பெருவணிகனுடைய மகன் விவசாயம் செய்ய வந்தால் அவனுக்கு அந்த தொழிலில் அனுபவமிருக்காது. அதனால் அதில் அவனுடைய வெற்றி வாய்ப்பும் குறைவே.
இன்றைய நிலையில் இருக்கும் புத்தகங்கள் அவர்களுக்கு இருந்திருக்குமா என்பதும் சந்தேகமே.

பெண் கொடுக்கும் விஷத்திலும் இதுவே முறையானது. வணிகன் ஒருவனின் மகள் அரச குடும்பத்தில் சென்றால் பணம் அதிகம் சம்பாதிப்பது ஒன்றே அவள் குறியாக இருக்குமே தவிர மக்கள் நலனில் எண்ணம் செல்லாது.
அதனால் ஒரே தொழில் செய்யும் மக்களுக்குள் பெண் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.

முதலில் இந்த முறையில் மக்களுக்கு எளிமையாக இருப்பதற்காகவே சாதிகள் தோன்றின. பிறகு இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வலியவன் எளியோனை அடக்கி ஆள ஆரம்பித்தான்.

இன்று பலர் சொல்வது போல் தமிழர்கள் அனைவரும் முட்டாள்களாக இருந்ததாகவும், எங்கிருந்தோ வந்தவர்கள் அவர்களை ஏமாற்றிவிட்டதாகவும் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை.

சாதியின் இன்றைய நிலை:
ராஜாஜி அவர்களின் குலவழிக் கல்வி மட்டும் இன்று தமிழ் நாட்டில் இருந்திருந்தால், நானெல்லாம் இன்று வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கமாட்டேன். எங்கோ மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன்.

கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் திட்டத்தால் அனைவருக்கும் கல்வி என்ற நிலை ஏற்பட்டது. பள்ளியில் அனைத்து சாதி மக்களும் இணைந்து பாடம் படிப்பதனால் அவரவர் தங்களின் சாதியின் அடையாளத்தை இழந்து வருகின்றனர்.

இன்று பல கலப்பு திருமணங்கள் நடக்கின்றன. சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் நான் பார்த்து பல காதல் திருமணங்களுக்கு பெற்றோர்கள் மறுப்பு
தெரிவித்தாலும் ஒருவழியாக இறுதியில் ஒத்துக் கொள்கின்றனர்.

கல்வி முறை மாறி 50 வருடங்கள் தான் ஆகிறது. ஓரளவு மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மையே. 2000 ஆண்டுகளாக ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் வரும். பொறுத்திருங்கள் இன்னும் 50-100 ஆண்டுகளுக்குள் முற்றிலும் மாறிவிடும்.

ஏதோ என் அறிவிற்குட்பட்ட அளவிற்கு எழுதியிருக்கிறேன்.

மாற்றம் ஒன்றே நிலையானது….

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-6!!!

முதல் சுற்றுக்கு தயார் செய்வது எப்படினு பார்த்தாச்சு.

அடுத்த சுற்று “Technical Interview”. இந்த சுற்று பெரும்பாலும் உங்கள் ரெசுமேவைப் பொருத்தே இருக்கும்.

சொந்தமாக பிராஜக்ட் செய்திருந்தாலோ அல்லது பிராஜக்ட்டை பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலோ, அதைப் பற்றி அவர்கள் கேட்கும் முன்னரே தெரிவிக்கவும்.

பிறகு அவர்கள் அதிலிருந்தே கேட்பார்கள் ஓரளவிற்கு ஒப்பேற்றிக் கொள்ளலாம். முடிந்த அளவு பிராஜக்ட் செய்திருக்கும் Languageஐ Area Of Interestல் போடவும்.

AOIல் இருப்பதை ஓரளவிற்கு நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள். AOIல் 2ற்கு மேல் போடாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு OOPS தான் தெரியும் ஏன்றால் கேள்விக் கேட்பவர் அதில் திறமையில்லாதவராக இருந்தாலும் அதிலே கேட்பார். அதில் அவர் திறமையுள்ளவராக இருந்தாலும் Fresher என்பதால் ஓரளவு சுலபமாகவே இருக்கும்.

அதனால் 4-5ஐப் போட்டு அதில் அறைகுறையாக தெரிந்து கொள்வதைவிட 1-2 போட்டு அதில் அதிகமாக தெரிந்து கொள்வதே சிறந்தது. அகல உழுவதைவிட ஆழ உழுவதே சிறந்தது.

முடிந்தவரை Group discussion செய்யவும். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதனாலயே அதிகம் கற்றுக் கொள்ள முடியும். படித்ததும் மறக்காது. நண்பர்களிடையே Mock Interview செய்து கொள்ளவும்.

Personal Interviewவிற்கு தயார் செய்வது என்று அடுத்து பார்க்கலாம்…

தொடரும்…

பிகு:
AOI தேர்ந்தெடுப்பது.
C நன்றாக தெரியுமென்றால் Data Structure போட்டுக் கொள்ளலாம். Stack, Queue, Linked List, Search, Sort Program எல்லாம் எழுத கற்றுக் கொள்ளவும். என் நண்பன் ஒருவனுக்கு Linked List Program எழுதனவுடன் ஒரு MNCல் Offer letter கொடுத்துவிட்டார்கள். புரிந்து படித்தால் Data Structure வாழ்க்கை முழுக்க மறக்காது.
C++, Java நன்றாக தெரியுமென்றால் OOPS போட்டுக் கொள்ளலாம்.
Oracle நன்றாக தெரியுமென்றால் RDBMS போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் லாஜிக்கலாக யோசித்துப் போடவும்.

விரதம்!!!

பொதுவா எல்லார் வீட்டுலயும் வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விரதமிருப்பார்கள். அதன் பலன் முழுதாக கிடைக்க என்ன செய்யனும்னு நான் 10வது படிக்கும் போது எங்க ஆரோக்கியசாமி வாத்தியார் சொன்னாரு.
எனக்கு அது மிகவும் திருப்தியாக இருந்தது. முடிந்தால் நீங்களும் கடைப்பிடிக்கலாம்…

நாம் உணவு உண்ணாது இருக்கும் வேளையில், அந்த ஒரு வேளைக்கு நம் குடும்பத்திற்கு உணவுக்கென்று எவ்வளவு செலவாகுமோ, அதை ஏழை எளியோரின் பசியைப் போக்க உதவ வேண்டும். இதுவே உண்மையான விரதத்திற்கான பலனைத் தரும். நம் மனமும் திருப்தி அடையும். கடவுளை உண்மையில் தரிசித்த மகிழ்ச்சி தரும்.

உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் கடைப்பிடிக்களாமே???

அசுரர்களும் தேவர்களும் இன்று எங்கே???

தேவர்கள், அசுரர்கள்னு புராணங்களில் படித்துள்ளோமே, இன்று அவர்கள் எல்லாம் எங்கே???

எனக்கு தெரிந்த வகையில் ஒரு சின்ன விளக்கம்:

சத்ய யுகம்/கிருத்த யுகம்:
அசுரர்கள் பாதாள உலகிலும் தேவர்கள் மேலுலகிலும் மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்தனர்.

திரேதா யுகம்:
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வாழ்ந்த யுகம். அசுரர்களும், தேவர்களும் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
ராமர் அயோத்தியுலும் ராவணன் இலங்கையிலும் வாழ்ந்தனர்.

துவாபர யுகம்:
பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த யுகம்.
அசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தனர்.
கிருஷ்ணர்-கம்சன்/சிசுபாலன்.

கலி யுகம்:
அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்கிவிட்டனர்.
சில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம்.
ஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம்.
சில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்…

ஏதோ என்னளவில் தோன்றிய ஒரு விளக்கம்.