கோழியின் அட்டகாசகங்கள் – 5

இதுவரை நான் கோழி செய்ததாக சொன்னதில் 2-3 தான் உண்மை. மத்ததெல்லாம் கோழி செய்தான்னு OPதான் கதை கட்டிவிட்டது. ஆனால் எல்லோரும் அது உண்மைனு நம்பிடுவாங்க. கோழியும் எதுவும் பெருசா கண்டுக்கமாட்டான். அவர்களுக்குள் அப்படி ஒரு நட்பு…

கோழி பெங்களூர் வந்த புதிதில், எங்கள் நண்பர்களுள் ஒருவன் சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது.
“டேய் கோழி பெங்களூர் சுத்தி பார்க்க வந்திருக்கான். 1 மாசத்துல கிளம்பிடுவான். ஒழுங்கா அவனுக்கு எல்லா இடத்தையும் சுத்திக் காட்டுங்க”

ஆனால் ரூம்ல ஒவ்வொருவருக்கா வேலை கிடைக்க ஆரம்பித்தது. அதுவரைக்கும் விளையாட்டுப் பையனா நான் பார்த்த கோழி தீவிரமா படிக்க ஆரம்பிச்சான். சின்ன சின்ன டவுட்னாக்கூட கூச்சப்படாமக் கேட்டு தெரிஞ்சிக்கிட்டான்.

நான் தூங்கும் போதும் படிச்சிட்டுதான் இருப்பான், நான் எழுந்திரிக்கும் போதும் படிச்சிக்கிட்டு தான் இருப்பான். (நான் அப்போழுது வேலையில் சேர்ந்துவிட்டேன்). அவனுக்கு எது தேவையோ அதை மட்டும் படிச்சான். முதல்ல 4-5 கம்பெனி இண்டர்வியுவில ஊத்திக்கிச்சி… ஆனால் அதுல அவன் இண்டர்வியு போனதே எங்களுக்கு எல்லாம் ஆச்சரியம்.

கடைசியா அவனுக்கு ஒரு பெரிய MNCல வேலை கிடைச்சிது. கோழிக்கு வேலை கிடைச்சது எங்க பசங்க எல்லோருக்கும் நம்பிக்கையை கொடுத்தது. அதற்கு பிறகு ஊர்ல இருந்து வந்து வேலை வாங்கனவங்க நிறையப் பேர். அவர்களுக்கு கோழியும் சில சமயம் சொல்லி கொடுப்பான். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

அவனுக்கு லக்குல வேலை கிடைச்சதுன சொல்றவங்களும் இருக்காங்க… ஆனால் கூட இருந்து பாத்தவன் நான். அவனுடைய உழைப்பும், விடாமுயற்சியுமே அவனுக்கு வேலை வாங்கி கொடுத்தது…
இப்ப பிரமோஷன் எல்லாம் வாங்கி… மற்றவர்களை இண்டர்வியு செய்யும் நிலையில் அவன் இருக்கிறான்…

என்னை பொருத்தவரை கோழி ஒரு கதாநாயகன்!!!

கோழியின் அட்டகாசங்கள் – 4

ஒரு வழியாக டிகிரி முடிச்சி கோழி பெங்களூர் வந்து சேர்ந்தான்.

கோழியும், OPயும் பிரௌசிங் சென்டர் சென்று வந்தார்கள்.

OP: டேய், இன்னைக்கு பிரௌசிங் சென்டர்ல கோழி என்ன பண்ணான் தெரியுமா???

நான்: என்ன பண்ணான்?

கோழி: டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லை… இவன் கதைவிடறான்.

OP: இல்லை இல்லை உண்மைதான். கோழி தனியா ஒரு கேபின்ல உட்கார்ந்து பிரௌசிங் பண்ணிட்டு இருந்தான். சரி தனியா என்ன பண்றான்னு எட்டிப் பார்த்த CD-ROMஓட உள்ளே, வெளியே விளையாடிட்டு இருந்தான். டேய் கோழி என்னடா பண்றனு கேட்டேன். அதுக்கு “Click here to get a free DVD”னு ஒரு லிங் இருந்துச்சி, அதை கிளிக் பண்ணிட்டு DVD வரும்னு CD – ROMல செக் பண்ணிட்டு இருந்தான்.

கோழி: டேய் அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஏண்டா DVD போய் CD – ROMல வருமா??? DVD ROMஆ இருந்தா வந்திருக்கும்.

OP: கேளுடா!!! DVD ROMஆ இருந்தா வந்திருக்குமாம் :-)… இதை சொல்லிதான் நான் அவனை சமாதானப்படுத்திக் கூப்பிட்டு வந்தேன்….

ஒரு வாரத்திற்குள் கோழி C படிக்க ஆரம்பித்துவிட்டான்.

Swap two numbers… இதை கோழிக்கு OP சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தான்.

OP: a, b, c மூணு வேரியபுல்ஸ் (Variables)
இப்ப என்ன பண்ணனுமா a ல இருக்கற வேல்யூ b க்கு வரணும். ஒகே வா?

கோழி: ஹிம்… ஓகே

OP:
இது தான் லாஜிக்.
c=a;
a=b;
b=c;
புரியுதா???

கோழி திருதிருன்னு முழிச்சிட்டு இருந்ததை பார்த்த இருமி சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சான்.

இருமி: டேய் கோழி, உன் 2 கையை நீட்டு.

கோழி கையை நீட்டினான்.

இருமி ரெண்டு கையிலும் 2 பந்தை கொடுத்து…

இருமி: இப்ப இந்த கைல இருக்கிற பந்து அந்த கைக்கு வரணும்… அந்த கைல இருக்கிற பந்து இந்த கைக்கு வரணும். எப்படி மாத்துவ?

கோழி: அப்படியே மாத்திக்க வேண்டியதுதான்… (கோழி ரெண்டு கைல இருக்கற பந்தையும் அப்படியே மாத்திக்கிட்டான்)

இருமி: அப்படியெல்லாம் மாத்தக் கூடாது. இரு… இப்ப உன்னோட இந்த கை- i , அந்த கை – j, என்னொட இந்த கை – K… இப்ப உன் கை-i ல இருக்கிற பந்தை என் கை-K க்கு மாத்து. அப்பறம் உன் கை-j ல இருக்கிற பந்தை i-க்கு மாத்து…
இப்ப என் கை-K ல இருக்கிற இந்த பந்தை உன் கை-jக்கு மாத்து…
இப்ப பந்து ரெண்டும் மாறிடுச்சா???

கோழி: ஆமாம்டா….

இருமி: இப்ப புரியுதா….

கோழி: உம்ம்ம்.. புரிஞ்சிடுச்சி

கோழி போய் பெட்ல படுத்துட்டு மேல விட்டத்தைப் பார்த்து யோசிச்சிக்கிட்டு இருந்தான்.

இருமி: OP!!! கோழி ரொம்ப யோசிச்சிக்கிட்டு இருக்கான். எனக்கு அவனுக்கு புரிஞ்சிதானு தெரியல…

10 நிமிஷம் கழிச்சி கோழி வெளில வந்தான்…

கோழி: OP பரதேசி நாயே…. a,b,c ன்னு சொன்னா யாருக்காவது புரியுமா??? இனிமேவாது i, j, kனு சொல்லிக் கொடு… புரிஞ்சிதா???

:-))))))

அட்டகாசங்கள் தொடரும்…