யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
Part -1 http://www.youtube.com/watch?v=9cqRRlubxoY&mode=related&search=
Part -2 http://www.youtube.com/watch?v=pkqCOu45Fos&mode=related&search=
தவறாமல் பார்க்கவும்!!!
Filed under: உங்களுக்காக | 6 Comments »
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
Part -1 http://www.youtube.com/watch?v=9cqRRlubxoY&mode=related&search=
Part -2 http://www.youtube.com/watch?v=pkqCOu45Fos&mode=related&search=
தவறாமல் பார்க்கவும்!!!
Filed under: உங்களுக்காக | 6 Comments »
என் அன்பிற்குரிய வாசக நண்பர்களே!!! உங்கள் பாசத்திற்குரிய வெட்டியின் மனமார்ந்த நன்றிகள்!!!
எனது இரண்டு படைப்புகளுக்கும் (தீயினால் சுட்ட புண் (30), லிப்ட் ப்ளீஸ்(21) )ஓட்டு போட்ட அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.
போட்டியில் வெற்றி பெற்ற
1. அசாத்
2. ராசுக்குட்டி
3. யோசிப்பவர்
4. முரட்டுக் காளை
ஆகியோருக்கு என் பாராட்டுக்கள்!!!
வித்தியாசமான/அருமையான தலைப்பை கொடுத்த எங்கள் கொங்கு ராசாவிற்கும் என் நன்றி!!!
Filed under: Uncategorized | 37 Comments »
கணினி துறையில் வேலை செய்பவர்களே! இதோ உங்களுக்கான வாழ்த்து!!!
Filed under: Uncategorized | 34 Comments »
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லுவார்கள். தெய்வத்திற்கு மேலாக குருவை சொல்கிறோம். ஆனால் ஒரு சில குருக்கள் அளிக்கும் தண்டனை மாணவரின் வாழ்க்கையையே மாற்றுகிறது.
நான் சொல்லப்போவது என் ஜினியர் பலரது கவலைக்கிடமான நிலைமையைப் பற்றி.
இஞ்சினியரிங் கல்லூரிகளில் 100க்கு 20 மதிப்பெண்கள் இண்டர்னல் மார்க்காக அளிக்கப்படுகிறது. இதை பல ஆசிரியர்கள் தவறாக கையாள்கிறார்கள்.
மாணவர்கள் மேல் இருக்கும் சின்ன சின்ன வருத்தங்களால் 20க்கு 1லிருந்து 5 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்கிறார்கள். பிறகு அந்த ஆசிரியர்களே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது. இவர்கள் இவ்வாறு குறைந்த மதிப்பெண்கள் போடுவதால் 80க்கு 49 மதிப்பெண் பெற்றால்தான் பாஸ் என்று நிர்ணயமாகிறது.
80க்கு 50 கூட வாங்க முடியல இவனெல்லாம் எதுக்கு இஞ்சினியரிங் படிக்கனும்னு தயவு செய்து கேக்காதீங்க! இஞ்சினியரிங் பேப்பரெல்லாம் எப்படி திருத்தறாங்கனு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியல… எனக்கு தெரிந்த ஒருவன் 80% வாங்கினான். ஆனால் அவன் பேப்பர பாத்தீங்கனா ஒரு மண்ணும் இருக்காது. அதனால மார்க் அதிகமா எடுத்தா புத்திசாலினு நினைக்காதிங்க.
பெரும்பாலும் திருத்தற ஆசிரியர்கள் 35 மார்க் போட்டா பையன் பாஸாகிடுவான்னு 35 போட்ருவாங்க. இவனுக்கு இண்டர்னல்ல 1 மார்க் போட்டாங்கனு அவருக்கு தெரியாது.
இன்னும் லேப்ல குத்தறதும் இருக்கு. பிடிச்ச பசங்கனா அதிக மார்க், பிடிக்காத பசங்கனா மார்க் குறைக்கறது. இதுவாவது பரவாயில்ல. மார்க்தான் குறையும். ஃபெயில் ஆன அடுத்த முறை எப்படியாவது பாஸாகிடலாம். ஆனால் இண்டர்னல் மார்க் ஆசிரியர்களே நினைத்தாலும் அடுத்த செமஸ்டரில் மாத்த முடியாது.
இந்த மாதிரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் எத்தனை தடவை எழுதியும் க்ளியர் பண்ண முடியாம போயிடுது. சுத்தி இருக்கிற சொந்தக்காரவங்க பேசற அவமான சொற்கள் அவுங்களை தப்பான முடிவுக்கும் இட்டு செல்கிறது.
நான் மாணவர்கள் மேல தப்பே இல்லனு சொல்லல… அந்த வயசுல அவங்க செய்யற சின்ன தப்புக்கு அவுங்க வாழ்க்கையையே வீணாக்காதீங்க… ப்ளீஸ்!!!
ஆசியர்களே தயவு செய்து இண்டர்னல் மார்க்குகளை வைத்து மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்!!!
Filed under: Uncategorized | 68 Comments »
நேற்று வலையில் வழக்கம் போல் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு அதிசய எண்ணை பற்றி கேள்விப்பட்டேன். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பெருமை இருக்கும் ஆனால் இந்த எண்ணை பற்றி படித்தவுடன் அசந்தே போனேன்!!! இதோ உங்களுக்காக
1. இந்தியாவின் கணித மேதை பாஸ்கராச்சார்யா கலியுகத்தின் இத்தனாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.
2. டெஸிமஸ் ஜினியஸ் ப்ரூட்டஸ் அல்பினஸ் கொல்லப்பட்ட ஆண்டு (யூ டூ ப்ரூட்டஸ்தான் ;-))
3. க்ளாடியஸ் ரோம பேரரசை ஆண்ட ஆண்டு
4. “அறிவுடைமை” திருக்குறளின் இத்தனாம் அதிகாரம்.
5. மஹாத்மா காந்தி தனது இந்த வயதில், ஐரோப்பிய ஆடைகளை உடுத்துவதையும், பால் அருந்துவதையும் நிறுத்தினார். இந்த வயதிலிருந்து பழங்களை மட்டுமே உண்ண ஆரம்பித்தார்.
6. தந்தை பெரியார் தனது இந்த வயதில் திருப்பூரில் நடத்திய காங்கிரஸ் மாநாட்டில் போட்ட தீர்மானம், அனைத்து மக்களும் சாதி வேறுபாடு இன்றி கோவில்களில் நுழைந்து இறைவனை தரிசிக்க வழி செய்தது.
7. அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் பிறந்த நாள் (Feb 12), வருடத்தின் எத்தனையாவது நாள்?
8. ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி எத்தனையாவது நோபல் பரிசை வாங்கினார்?
9. ஆஸ்திரியாவின் ISD Code என்ன?
10. ஜெரால்டு பீட்டர்சன் எத்தனையாவது விம்பில்டெனில் முதல் பரிசை தட்டி சென்றார்?
11. “மன்னாதி மன்னன்”க்கு முன்பு புரட்சி தலைவர் எத்தனை படங்களில் நடித்திருந்தார்?
12. “பாசமலர்” நடிகர் திலகத்தின் எத்தனையாவது படம்?
13. “தில்லு முல்லு” சூப்பர் ஸ்டாரின் எத்தனையாவது தமிழ் படம்?
14. “ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது” உலக நாயகனின் எத்தனையாவது படம்?
15. ராய்பூரிலிருந்து விசாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் எண்.
16. பொன்னியின் செல்வனில் முதல் பகுதியான “புது வெள்ளம்” பகுதியில் வரும் “பழையாறை” எத்தனையாவது அதிகாரம்?
17. மத்திய ஆப்பிரிக்கா பரப்பளவின் அடிப்படையில் உலகின் எத்தனையாவது பெரிய நாடு?
18. வெனிசுலா மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் எத்தனையாவது நாடு?
19. மிக சிறிய சென் ப்ரைம் நம்பர் (Chen Prime Number)
20. ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை.
21. Smallest atomic number of an element that does not posses Stable Isotope
22. இந்த எண் அதன் பேஸ் (Base) 6 ஆக இருக்கும் பொது “111” என்று மாறும்.
23. தற்போதைய அமெரிக்க அதிபர் “ஜார்ஜ் புஷ்”, அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?
24. அகரவரிசை படுத்தும் பொழுது “டெக்ஸாஸ்” அமெரிக்காவின் எத்தனையாவது மாநிலம்?
25. மனிந்தர் சிங் இந்திய ஒரு நாள் போட்டிகளின் எத்தனையாவது ஆட்டக்காரர்?
26. டெஸ்ட் போட்டிகளில் இந்தியா கொடுத்த மிக குறைந்த டார்கெட் என்ன (ஒரு இன்னிங்கஸில்)?
27. இங்கிலாந்துக்கெதிராக ஆஸ்திரேலியா எடுத்த மிக குறைந்தபட்ச ரன் (70) உலகின் எத்தனையாவது ஒரு நாள் போட்டி?
28. வைட்டமின் “கே”வை கண்டுபிடித்த எட்வர்ட் அடெல்பெர்ட் டாய்ஸி எந்த ஆண்டு நோபல் பரிசை பெற்றார்?
29. டாக்டர் கலைஞர் தனது இந்த வயதில்தான் முதன்முதலில் “சைதாப்பேட்டை” தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
30. “சிவகாசி” விஜயின் இத்தனையாவது படம்.
31. “வரலாறு” (God Father) அஜித்தின் இத்தனையாவது படம். (இந்த வாரம் வெளியாகும் என்ற நம்பிக்கையில்)
32. சென்னை ஐ.ஐ.டியில் இந்த வருடம் நடைபெறும் பட்டமளிப்பு விழா எத்தனையாவது பட்டமளிப்பு விழா?
33. பாப் பாடகி “மடோன்னா”வின் “ஹங் அப்” என்ற பாடல் எத்தனை நாடுகளில் முதல் இடத்தில் இருந்தது?
34. கூன் பசினா அமித்தாபின் எத்தனையாவது படம்? (தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த “சிவா”)
35. விஸ்கான்ஸின் செல்லும் ஹைவேயின் எண் என்ன?
36. சுஸ்மிதா சென் வெற்றி பெற்றது எத்தனையாவது மிஸ் யுனிவர்ஸ் போட்டி?
37. சச்சின் நியுசிலாந்து அணிக்கெதிராக 99ஆம் ஆண்டு சண்டிகரில் எடுத்த 126 அவரது எத்தனையாவது சதம்? (ஒரு நாள் போட்டிகளில் அடித்த சதங்களையும் சேர்த்து)
38. ஜமாய்க்காவை சேர்ந்த லிசா ஹானா எத்தனையாவது உலக அழகி போட்டியில் வென்றார்?
39. விண்கலம் (Space Shuttle) செலுத்துவதற்கு எத்தனை நேரத்திற்கு முன்னிருந்து நேரத்தை கணக்கிட ஆரம்பிப்பார்கள்?
40. டிபிஆர் ஜோசப் தமிழ்மணத்தின் எத்தனையாவது வார நட்சத்திரமாக ஜொலித்தார்?
41.கோபி அவர்களின் “கணங்கள்” தமிழ்மணத்தின் எத்தனையாவது வலைப்பூ?
42. நாற்பத்தி இரண்டிற்கு பின் வரும் எண் எது? 😉
43. உங்களுடைய லிப்ட்காக (ஓட்டிற்காக) தேன்கூடு போட்டியில் காத்திருக்கும் வெட்டிப்பயல் எழுதிய “லிப்ட் ப்ளீஸ்!!!” கதையின் எண்!!!
மறக்காமல் ஓட்டு போட்டுடுங்க!!! அப்படியே 69 (தீயினால் சுட்ட புண்) க்கும் போட்டுடுங்க!!! அந்த நம்பருக்கு நான் எதுவும் விளக்கம் சொல்லல 😉
Filed under: Uncategorized | 79 Comments »
தமிழகத்தில் வசிக்கும் என் அருமை வலையுலக நண்பர்களே!!!
உங்களிடம் ஒரு உதவி வேண்டியே இந்த பதிவு.
நேற்று என் நண்பன் ஒருவன் அவசரமாக போன் செய்து சொன்ன செய்தி.
“தமிழகம் எங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் புரட்சி கலைஞரின் “பேரரசு” படத்தில் கேப்டனுக்கு பன்ச் டயலாக் இல்லையாம். அதைப்போலவே அவருடைய மிரள வைக்கும் நடன காட்சிகளும் படத்தில் இல்லையாம். இது வாசிம் கானின் சதியாக இருந்தாலும் இருக்கலாம் என்று முன்னனி நாளிதழில் வெளிவரும் “சிட்டு குருவியார்” கேள்வி பதிலில் இருந்ததாம்”
இது என் நண்பன் என்னை ஏமாற்ற சொன்ன செய்தியோ என்று சந்தேகமாக உள்ளது. இந்த சந்தேகத்தை தயவு செய்து யாராவது தீர்த்து வையுங்களேன்.
“வேட்டையாடு விளையாடு”, “சில்லென்று ஒரு காதல்” போன்ற படத்திற்கு விமர்சனம் போட்ட வலைப்பதிவாளர்களே, உங்களிடமிருந்து தலைவரின் “பேரரசு” படத்திற்கும் விமர்சனத்தை எதிர்பார்த்து தூங்காமல் கண்விழித்திருக்கிறேன்…
கிசுகிசு:
படத்தில் இரண்டு சூரியனாம் 😉
(யாருப்பா அது, ஒண்ணுக்கே இங்க கண்ண கட்டுதுனு சொல்றது 😀 )
Filed under: திரைப்படம், நகைச்சுவை, லொள்ளு | 56 Comments »
“டேய் கிருஷ்ணா! மணி 5:30 ஆச்சு… எழுந்திரி!” வழக்கம் போல் அம்மாவின் குரல்
“ஏம்மா! இப்படி உயிர வாங்கற!!! 7 மணிக்கு தான முகூர்த்தம்… பொறுமையா போயிக்கலாம்”
“ஏன்டா நேத்து நைட்டே நீ படுக்கறதுக்கு முன்னாடி சொன்னேன் இல்ல. காலைல சீக்கிரம் போகனும்னு”
“நம்ம கரெக்ட் டைமுக்கு போகலன்னா அங்க என்ன மாப்பிள தாலி கட்டறதையா நிறுத்த போறாரு”
“இப்படியெல்லாம் அதிக பிரசங்கித்தனமா பேசாத. உங்க அக்கா மாமனாரோட தம்பி பொண்ணு கல்யாணம். ஏற்கனவே அவ மாமனார் வேற உங்க அப்பா வராததுக்கே கோச்சுக்குவாரானு பயமா இருக்கு. நம்ம லேட்டா போனா அவ்வளவுதான்”
“அந்த ஆள எங்கயாவது போ சொல்லு. அப்பா என்ன ஓடி விளையாடவா போயிருக்காரு. வேலை விஷயமாத்தானே போயிருக்காரு. இவர் தப்பா நெனச்சா நாம ஒண்ணும் பண்ண முடியாது”
“இந்த பேச்சு பேசறதுக்கு நீ எழுந்திரிச்சு குளிச்சி, கெளம்பியிருக்கலாம்”
“சரி. நான் குளிச்சிட்டு வரேன்… காபி போட்டு வைங்க”
“அதெல்லாம் கல்யாண மண்டபத்துல போய் குடிச்சுக்கலாம்… நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா”
கல்யாண மண்டபத்திற்குள் போய் சேரும் போது மணி சரியாக 6:45.
“ஏம்மா… கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?” அக்காவின் குரலில் வழக்கம் போல் அதிகாரம் தெரிந்தது.
“எல்லாம் இவன் பண்ண வேல… இவன எழுப்பறதுக்குள்ள என் உயிரே போகுது”
“ஏன்டா ஒரு நாள் கூட உன்னால சீக்கிரம் எழுந்திரிக்க முடியாதா?”
“ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? நாங்க தான் முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி வந்துட்டோம் இல்ல”
“ஆமாம். எங்க உங்க வீட்ல இருந்து யாரையும் காணோம்னு இப்பதான் எங்க மாமியார் கேட்டாங்க”
“ஏன் ஆரத்தி எடுத்து வரவேற்கவா???”
“உனக்கு திமிருதான். அவுங்க முன்னாடி இப்படியெல்லாம் பேசி வைக்காத. அப்பறம் எனக்குத்தான் பிரச்சனை”
“சரி சரி நான் எதுவும் பேசல. அதுவும் இல்லாம நான் முகூர்த்தம் முடிஞ்சவுடனே கிளம்பறேன். எனக்கு கம்பெனில நிறைய வேலை இருக்கு”
“சரி முகூர்த்தம் முடிஞ்சவுடனே ஏழரைக்கு எல்லாம் பந்தி போட்டுடுவாங்க… சாப்பிட்டு போயிடு” அம்மாவின் குரல்
“என்னது பந்தியா??? ஏம்மா உயிர வாங்கற. காலங்காத்தால இவனுங்க கேசரி, இட்லி, வடை, பூரி, பொங்கல்னு தூக்கம் வர ஐட்டமா போட்டு உசுர வாங்குவாங்க. நான் கம்பெனில போய் ஏதாவது சாப்பிட்டுக்கறேன்”
“ஏன்டா ஐநூறு ரூபா மொய் வெக்கறோம். ரெண்டு பேர் கூட சாப்பிடலனா எப்படி?”
“ஏன். தெருல இருக்கறவங்க எல்லாத்தயும் கூப்பிட்டு வர வேண்டியதுதான? போம்மா நீ மொய் வெக்கறதால எல்லாம் என்னால சாப்பிட முடியாது”
எங்க அக்காவோட மாமியார் அவளை பார்த்து ஏதோ ஜாடை செய்து கூப்பிட அவள் இடத்தை காலி செய்தாள். அப்போது எங்களை பார்த்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தார்.
“நீங்க சாந்தி அம்மாதானே” எங்க அம்மாவை பார்த்து கேட்டார் அவர்.
ஏன் எல்லாம் இப்படி இருக்காங்க? கிருஷ்ணா அம்மானு சொன்னா குறைஞ்சிடுவாங்களா? வீட்ல இருக்குற பொண்ணு பேற சொல்லிதான் எல்லாம் சொல்லுவாங்க. அவளுக்கு தான் கல்யாணமாகி மாமியார் விட்டுக்கு போயிட்டா இல்ல. இனியாவது கிருஷ்ணா அம்மானு சொன்னா என்ன?
இந்த மாதிரி யார் சொன்னாலும் எனக்கு அவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும். இவர் மேலும் வெறுப்பு வர தவறவில்லை.
“ஆமாம். நீங்க அருண் அம்மாதான?”
எங்க அம்மா நல்லவங்களா இருக்காங்க. பரவாயில்லை!!!
“ஆமாம். பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. அருண் நாலு வயிசு இருக்கும் போது கொயம்பத்தூர்ல இருந்து கெளம்பனது”
“ஆமாம். பதினஞ்சு பதினாறு வருஷம் ஆகிடுச்சு. அதான் பாத்தவுடனே கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சு”
“ஆமாம் சாந்தி, கிருஷ்ணா எல்லாம் எப்படி இருக்காங்க. என்ன பண்றாங்க?”
“சாந்திக்கு கல்யாணமாயிடுச்சு. 1 பையன் இருக்கான் 2 வயசு ஆகுது. இதுதான் கிருஷ்ணா. இஞ்சினியரிங் படிச்சுட்டு இங்க ப்ரிக்கால்ல வேலை செய்யறான்”
“ஓ! இவ்வளவு பெரிய பையானா வளந்துட்டான்”
ஆமாம் பதினஞ்சு வருஷமா வளராம அப்பு கமல் மாதிரியா இருப்பாங்க? லேசாக சிரித்து வைத்தேன்.
“சின்ன வயசுல எப்பவும் நீ அவுங்க வீட்லதான் இருப்ப” அம்மா ஒத்து ஊதினார்கள்.
“இப்ப உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காது. அருண்ட கிள்ளு வாங்கிட்டு அழுதுட்டே உங்க வீட்டுக்கு ஓடிடுவ”
ஓ! இது வேற நடந்துருக்கா… அவனுக்கு இருக்கு.
“ஆமாம் அதுக்குத்தான் இவன் சூடு வெச்சிட்டானே!” அம்மா என்னை பார்த்து முறைத்து கொண்டே சொன்னார்கள்.
ஓ!!! பரவாயில்ல… அப்பவே நம்ம வெயிட்டு காமிச்சிட்டோம். மனதிற்குள் ஒரு சந்தோஷம்.
“ஆமாம் அருண் இப்ப என்ன பண்றா?”
“அருண் இங்க தான் காலேஜ்ல படிக்கறா”
“ஓ!!! காலேஜ் படிக்கிறாளா??? எந்த காலேஜ்”
“இங்கதான் அவினாஸிலிங்கம்ல ஹோம் சயின்ஸ் படிக்கிறா. இங்கதான நின்னுட்டு இருந்தா. எங்க காணோம்???
அங்க நின்னுட்டு இருக்கா. இருங்க கூப்பிட்டு வரேன்”
ஓ!!! அருண் பையன் இல்லயா? மனசன கொழப்பறதுலயே இருங்க…
மம்மி வீட்டுக்கு வா உனக்கு இருக்கு
அந்த ஆண்ட்டி சென்று 2 நிமிடத்திற்குள் வந்தார்கள். இந்த முறை அவருடன் ஒரு அழகான தேவதை இருந்தாள். பிங் சுடிதாரில் அழகாக இருந்தாள்.
பொதுவா சொந்தகாரர்கள் இருக்கும் இடத்தில் நான் நல்ல பிள்ளை. ஆனா இந்த முறை அம்மா பக்கத்துல இருந்ததையும் மறந்துவிட்டேன்.
2 நிமிடத்திற்குள் அறிமுகப்படலம் முடிந்து திரும்பிவிட்டாள். நானோ கனவுலகிலே சஞ்சரித்து இருந்தேன். அக்கா வந்து பேசியவுடன் தான் நினைவு திரும்பியது.
ஒருவழியாக சாப்பாடு பந்தியிலிருந்தும் தப்பித்து வெளியே வந்தேன்.
“ஏன் தம்பூல பையை வாங்காம வந்துட்ட? தேங்கா போட்ருக்காங்க”
அம்மா அக்கறையாக வழியனுப்ப வந்தாங்கனு பாத்தேன்… இல்ல மொய்கணக்க எப்படியாவது சரி பண்ணனும் வந்துருக்காங்க
“அம்மா அசிங்கமா தாம்பூலம் எல்லாம் என்னால வாங்க முடியாது. நீ பொறுமையா வரும் போது வாங்கிட்டு வா”
“சரி. நீ என்ன சொன்னாலும் கேக்கவே மாட்ட”
வெளியே வந்து திரும்பும் போது மண்டபத்திற்கு வெளியில் அவள் நின்று கொண்டிருந்தாள்.
“என்னங்க இங்க நின்னூட்டு இருக்கீங்க?” கூச்சப்படாமல் பேசினேன். அவளை தவிர வேறு யார் நின்றிருந்தாலும் பேசியிருக்க மாட்டேன் என்றே தோன்றியது.
“இல்ல காலேஜ்க்கு நேரமாச்சு. ஆட்டோ கிடைக்குமானு பாத்துட்டு இருக்கேன்”
“நானும் அந்த வழியாத்தான் போறேன். வேணும்னா வாங்க ட்ராப் பண்ணிடறேன்”
“இல்லைங்க உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்”
“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க… நான் அந்த வழியாத்தான் போறேன்”
“சரி எனக்கும் நேரமாச்சு. நீங்க அந்த டர்னிங்ல நிக்கறீங்களா? நான் வந்து ஏறிக்கிறேன். இங்க யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க”
“யாருங்க தப்பா நினைக்கப் போறா. நீங்க வாங்க”
“இல்லைங்க வேணாம்” தயங்கினாள்.
“சரி நான் டர்னிங்ல வெயிட் பண்றேன்”
எல்லாமே இப்படித்தான் ஊர ஏமாத்தறாங்களா?
சரியாக மூன்று நிமிடத்திற்குள் வந்து வண்டியில் என் பின்னால் அமர்ந்தாள்.
இன்னைக்கு நல்ல நாள்தான்.
“ஆமாம்… உங்க பேர் கிருஷ்ணாதான?”
“ஆமாம்” இது தெரியாமத்தான் என் பின்னாடி வந்து உட்கார்ந்தாளா? கலிகாலம்.
“உங்க பேர் அருணாங்க?”
“அருண் இல்லைங்க… அருணா. வீட்ல பையன் யாரும் இல்லாததால என்ன அருண்னு கூப்பிட்டு சந்தோஷப்பட்டுக்கறாங்க. சரி நீங்க சாப்பிட்டீங்களா?”
“இல்லை. நீங்க?”
“நானும் சாப்பிடல. முதல் பந்தில உக்காந்தா அசிங்கமா இருக்குமேனு சாப்பிடாமலே வந்துட்டேன். எங்க காலேஜ் முன்னாடி ஒரு அண்ணபூர்ணா இருக்கு அங்க வேணும்னா ரெண்டு பேரும் சாப்பிடலாமா?”
“சாப்பிடலாமே” இன்னைக்கு உண்மையாலுமே அதிர்ஷ்ட நாள்தான்.
இருவரும் ஆளுக்கு ஒரு ரோஸ்ட் ஆர்டர் செய்தோம்.
“உங்களத்தான் நான் நினைவு தெரிஞ்ச நாளா தேடிக்கிட்டு இருக்கேன்”
என்னடா இப்படி சொல்றா? இவ எதுக்கு என்ன தேடனும். ஒரு வேளை “தித்திக்குதே”வா இருக்குமா? ச்ச இத கூட ஞாபகம் வெச்சிக்காம இருந்துட்டேனே. என்னை நானே நொந்து கொண்டேன்.
“என்னையா? ஏன்?”
“இங்க பாருங்க”
அவள் கையை நீட்டினால், அதில் நீட்டமாக ஒரு தழும்பு தெரிந்தது.
“என்னங்க எதோ தழும்பு மாதிரி இருக்கு”
“நல்லா கேளுங்க! நீங்க வெச்சது தான். நான் ஏதோ தெரியாம கிள்ளிட்டன்னு அடுப்புல இருந்து கொள்ளிக்கட்டை எடுத்து என் கைல வெச்சிட்டீங்களாம். எங்க அம்மா சொன்னாங்க”
இது கேக்கத்தான் என் கூட வண்டீல வந்தாளா? அக்கறையா சாப்பிட போகலாம்னு சொன்னது கூட இதுக்குத்தானா? நான் தான் அவசரப்பட்டுட்டனா?
“என்னங்க நான் என்ன தெரிஞ்சா பண்ணேன். ஏதோ தெரியாம கோபத்துல பண்ணது. எனக்கு சத்தியமா ஞாபகம் கூட இல்ல. அப்ப எனக்கு வயசு என்னா ஒரு ஆறு இல்லனா ஏழு இருக்குமாங்க? அப்ப பண்ண தப்புக்கு இப்ப வந்து கேட்டீங்கனா நான் என்ன பண்ண முடியும்? வேணும்னா சொல்லுங்க ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்”
அதிகமா பேசின மாதிரி தோன்றியது.
“ஆமாம். இதுக்கு போய் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவாங்களா? தெரியாம ஏதாவது சின்னதா பண்ணியிருந்தா பரவாயில்ல. தண்ணி காயறதுக்கு அடுப்பாங்கறைல வெச்சிருந்த விறகு கட்டய எடுத்துட்டு வந்து வெச்சிருக்கீங்க” கோபமாக பேசினாள். ஆனால் சமாதானமாகிவிடுவாள் என்று தோன்றியது.
“சரி அந்த சம்பவம்(?) உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
“இல்ல. எங்க அம்மாதான் சொன்னாங்க”
“பாருங்க உங்களுக்கும் ஞாபகமில்ல. எனக்கும் ஞாபகமில்ல. அப்பறம் எதுக்கு நீங்க இவ்வளவு டென்ஷம் ஆகறிங்க?”
“ஆமாம். உங்களுக்கு என்ன? சின்ன வயசுல எல்லாம் என்ன கரிகால சோழன் மாதிரி இவ கரிக்கை சோழினு ஓட்டுவாங்க. அப்ப இருந்தே உங்க மேல எனக்கு கோபம்”
“கரிக்கை சோழி ரொம்ப நல்லா இருக்கே!”
“என்னது?” முறைத்தாள். ஆனால் செல்லமாக முறைப்பது போல்தான் எனக்கு தோன்றியது.
“இப்ப என்ன பண்ண சொல்றீங்க? வேணும்னா நீங்களும் என் கைய சுட்டுக்கோங்க. தெரிஞ்சே யாராவது இந்த மாதிரி பண்ணுவாங்களா? அதுவும் அழகான பொண்ணு கைய சுடறதுக்கு யாருக்காவது மனசு வருமா?” ஓரளவு வழியாமல் சொன்னேன்.
“ரொம்ப ஐஸ் வெக்காதீங்க. நான் உங்களுக்கு சூடு எல்லாம் வெக்க போறதில்ல. இந்த பில்ல பே பண்ணிட்டு, என்ன காலேஜ்ல இறக்கி விட்டுடுங்க”
சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“நான் தெரியாம பண்ணிருந்தாலும், ஐ ரியலி ஃபீல் சாரி. மன்னிச்சுடுங்க”
“பரவாயில்ல. உங்க மேல ரொம்ப கோவமா இருந்தேன். இப்ப எல்லாமே போயிடுச்சு”
ஒரு வழியாக அவளை காலேஜில் இறக்கிவிட்டு, வேலைக்கு சென்றேன். நாள் முழுதும் அவள் நியாபகமாகவே இருந்தது. வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 7 ஆகியிருந்தது.
“இவ எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்தா? அவ மாமியார் வீட்ல இருந்து துரத்திவிட்டுட்டாங்களா?”
“டேய்! என்ன யாரும் தொரத்தல.. உன்னத்தான் நம்ம வீட்ல இருந்து துரத்திடுவாங்கனு நினைக்கிறேன்” அக்கா சிரித்து கொண்டே சொன்னாள்.
“என்ன யாரும் துரத்த முடியாது. அம்மா சூடா ஒரு கப் காபி கொடேன்”
“ஒரு அஞ்சு நிமிஷம் இரு. கொண்டு வரேன்”
“ஆமாம். அக்கா இன்னைக்கு காலைல ஒரு ஆண்ட்டி நம்ம அம்மாட்ட பேசிக்கிட்டு இருந்தாங்களே, அவுங்கள உனக்கு ஞாபகம் இருக்கா?”
“இருக்கே! நம்ம அருண் அம்மா. ஏன் உனக்கு ஞாபகமில்லையா?”
“இல்ல. அவுங்க நமக்கு என்ன வேணும்?”
“நம்ம பக்கத்து வீட்ல இருந்தாங்க. இப்ப சொந்தக்காரவங்க ஆகிட்டாங்க!” நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள். மனசுல பெரிய புத்திசாலினு நினைப்பு.
“கொஞ்சம் தெளிவா சொல்லு” கோபமாக கேட்டேன்
“எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான் அவுங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க” மறுபடியும் அதே நக்கல் சிரிப்பு.
“அவுங்க நமக்கு என்ன வேணும்” கோபத்தை அடக்கி கொண்டு கேட்டேன்
“அவங்க வீட்டுக்காரர் உனக்கு அண்ணன் முறை ஆகறாரு”
“என்னது? அண்ணனா? அவர் வயசு என்ன? என் வயசு என்ன? இப்ப உண்மைய சொல்லல உன் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது தலைல ப்ளேடு பொட்டுடுவன். ஆமாம்”
“ஏன்டீ அவனோட விளையாடற? அண்ணனும் இல்ல தம்பியுமில்ல. கொஞ்சம் தூரத்து சொந்தம்தான். அந்த பொண்ணு அருண பாத்தவுடனே எனக்கு புடிச்சு போச்சுடா. சரின்னு அவ அம்மாட்ட பேசி பாத்தேன் அவளும் சரி ஜாதகம் அனுப்பறேன் ஒத்து வந்துச்சுனா முடிச்சிக்கலாம்னு சொன்னா. உனக்கு புடிச்சியிருக்கா?”
அம்மா நீயே என் தெய்வம். உனக்கு கண்டிப்பாக கோவில் கட்டணும்.
“ஆமாம். அந்த பொண்ண இவன் “பே”னு பாத்தததான் கல்யாண மண்டபத்துல எல்லாரும் பாத்தாங்களே” அக்கா நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள்.
இதுக்குத்தான் அப்ப இருந்து இப்படி நக்கலா சிரிச்சிக்கிட்டே இருந்தாளா?
“என்ன கேக்காம எப்படி நீங்க ஜாதகம் பத்தியெல்லாம் பேசலாம்” கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன்.
“சரி. அவனுக்கு பிடிக்கலயாம். வேணாம்னு சொல்லிடுங்கம்மா” அக்கா ரொம்ப அக்கறையாக பேசினாள்.
“அதில்லமா… ஜாதகம் எல்லாம் மூட நம்பிக்கை. அது பாக்க வேணாம்னு சொன்னேன்” நான் வழிந்து கொண்டே சொன்னதை பார்த்து அம்மாவும், அக்காவும் சிரித்தனர்.
Filed under: சிறுகதை | 115 Comments »
நண்பர்களே!!!
உங்கள் அனைவருக்கும் என் பொறியாளர் தின நல்வாழ்த்துக்கள்.
Wish you a Happy Engineer’s Day.
இந்தியாவின் மிக சிறந்த பொறியாளர்களுள் ஒருவரான சர் விஸ்வேஸ்வரைய்யாவின் பிறந்த தினமான இன்று (Sep-15) பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
Filed under: Uncategorized | 8 Comments »
கேப்டன் டாக்டராகிறார்.
என்ன அதுக்குள்ள அதிர்ச்சியடஞ்சா எப்படி??? நான் சொல்ல வந்தது அவரோட அடுத்த படம் சபரியில் அவர் டாக்டராக நடிக்கிறார்னு.
அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் “தர்மபுரி” தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் “சபரி”யும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரி கேப்டனின் 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரியில் இடம்பெற போகும் பன்ச் டயலாக்
(கேப்டன் ஸ்டைலில் படிக்கவும்)
இங்க பாரு,
நான் நெனச்சா ஈஸியா டாக்டராக முடியும்,
உன்னால Gaptainஆக முடியுமா???
aanghhhh”
We will meet…. will meet…. meet
(இத படிச்சு யாரும் “என்ன கொடுமை சரவணன் இது”னு பின்னூட்டமிடக்குடாது…
ஆமாம் சொல்லிட்டேன் ;))
Filed under: திரைப்படம், நகைச்சுவை, லொள்ளு | 45 Comments »
அகில உலகம் எங்கும் உயிரை துச்சமென மதித்து கணிணி (கண்ணி இல்லப்பா) முன் உட்கார்ந்து இருபத்தி நான்கு மணி நேரமும் உழைக்கும்(???) என் அருமை ப்ரோக்ராமர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
வருடத்தின் 256வது நாள் ப்ரோக்ராமர் நாளாம் (2^8). அதன்படி செப்டம்பர் 13ம் நாளான இன்று நமக்கான தினம். இதனை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். அனைத்து ப்ரோக்ராமர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Filed under: Uncategorized | 20 Comments »