எனக்கு பிடித்த திரைப்படங்கள் – 1

இது சன் டிவில வர மாதிரி டாப் 10 இல்ல…
எல்லாமே எனக்கு பிடிச்ச படங்கள் தான்.

எதிர் நீச்சல்:
நாகேஷ் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் கூட என்று என்னை முழுதும் நம்ப வைத்த படம்.
முத்துராமன், சுந்தர் ராஜன், ஜெயந்தி, சவுக்கார் ஜானகி, ஸ்ரீகாந்த் ஆகியோறின் நடிப்பும் இயல்பாகவே இருந்தது. (நல்ல வேளை சவுக்கார் ஜானகி வழக்கம் போல அழாம நடிச்சிருந்தாங்க…)
“அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா?” – நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை நன்றாக எடுத்துக்காட்டுகின்ற பாட்டு.
ஒரே வீட்டிற்குள் வைத்து இவ்வளவு சிறப்பா படம் எடுத்ததுக்கு KBய கண்டிப்பா பாராட்டனும்.

தங்கமலை இரகசியம்:
ராஜா காலத்து படத்துல எனக்கு எப்பவுமே ஒரு ஈடுபாடு.
அதுவும் இதுல கொஞ்ஜம் மாயாஜாலமும் இருந்தது எனக்கு பிடித்ததற்கான ஒரு முக்கிய காரணம்.
விக்ரமாதித்தன் கட்டிலில் கிளிகள் பேசுவது, ஒவ்வொரு மலைக்குமான பாஸ்வேர்டை டீகோட் பண்றது, முரடனான சிவாஜிய ஜமுனா மாத்தறது போன்ற காட்சிகள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

ஆண்டவன் கட்டளை:
ஏன் எந்த படத்துலயும் கதாநாயகன ஒரு பக்கா “ஜெண்டில் மேன்”ஆ காட்ட மாட்றாங்கனு நான் ரொம்ப நாள் யொசிச்சதுண்டு. அதை நிறைவு செய்த படம் இது. இதில் சிவாஜி கல்லூரி ஆசிரியர்.
சிவாஜி அறிமுக காட்சி – காலையில் சிவாஜி கல்லூரிக்கு செல்வதைப் பார்த்து ஒரு கடை முதலாளி 9 மணியில் இருந்து 8:55க்கு திருத்துவார். இதைவிட சிவாஜியின் கேரக்டரை விளக்க காட்சி தேவை இல்லை.
ஒரு பெண்ணால் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது தான் கதை.
அமைதியான நதியினிலே ஓடம், ஆறு மனமே ஆறு, சிரிப்பு வருது சிரிப்பு வருது – போன்ற இந்த படத்தின் பாடல்களும் அருமை.

எங்க வீட்டுப்பிள்ளை:
எம்.ஜி.ஆர் படம்னாவே ஒரு ஈர்ப்பு. ஏன்னா படத்துல எப்படியும் நல்லவங்க ஜெயிப்பாங்க. எங்க வீட்டுப்பிள்ளை – வழக்கமான ஆள் மாறாட்ட கதை தான். ஆனால் அதை எம்.ஜி.ஆர் பண்ணும் போது அது ஒரு கிக்கு தான்.
நம்பியார் அப்பாவி எம்.ஜி.ஆர அடிக்கும் போது அழுகையா வரும் (சின்ன வயசுல… இப்ப பாத்தா சிரிப்பு வருது). அதுவே இன்னோரு எம்.ஜி.ஆர்ட நம்பியார் அடி வாங்கும் போது விசில் அடிக்க தோனும். இதுதான் எம்.ஜி.ஆரை நம்ம வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ள செய்தது.
இந்த படத்துல பாட்டு எல்லமே நல்லா இருக்கும்.

உலகம் சுற்றும் வாலிபன்:
இந்த மாதிரி படம் இதற்கு பிறகு வராதது எனக்கு வருத்தம்.
எம்.ஜி.ஆர்- இரட்டை வேடம். ஒருவர் ஆராய்ச்சியாளர் :). அவரை வில்லன் கடத்தி கொண்டுப் போக, அவருடைய கண்டு பிடிப்பு கெட்டவர்கள் கைக்கு போகமல் தடுக்கவும், மக்களுக்கு அதை பயன்படும்படி செய்யவும் இரண்டாவது எம்.ஜி.ஆர் ஒவ்வொரு நாடாக செல்வது தான் கதை.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு க்ளு. கடைசி வரை விறுவிறுப்பாக செல்லும் படம்.

இன்னும் நிறைய இருக்கு….

என்ன எழுதலாம்…

எப்படியோ ரொம்ப நாளா யோசிச்சி ஒரு பிளாக் ஆரம்பிச்சாச்சி.
என்ன எழுதலாம்னு சிந்திச்சா ஒன்னுமே வரமாட்டேங்குது.
குணால கமல் சொல்ற மாதிரி –
பிளாக் எழுத ஆரம்பிக்கும் பொழுது ஐடியா மனசுல அருவியா கொட்டுது
அதை எழுதனும்னு உட்கார்ந்தா அந்த எழுத்து தான்…….வார்த்தை …..னு
பாட வேண்டியதுதான்னு யோசிச்சி, அதையே எழுதுவோம்னு எழுதிட்டேன்.

அனைவருக்கும் வணக்கம்