கோழியின் அட்டகாசங்கள் – 3

இது கடைசி வருடம் நடந்த நிகழ்ச்சி…

கோழியும், இருமியும் டூ- வீலரில் சாய்பாபா காலணி போயிட்டு திரும்ப காலேஜ் வந்து கொண்டிருந்தனர். துடியலூர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வேண்டும்… (ஹாஸ்டலில் இருக்கும் அனைத்து வண்டியும் எப்போதும் ரிஸர்வில்தான் ஓடிக்கொண்டிருக்கும்)

(இருமி – வந்த புதிதில் அதிகமாக இறுமிக் கொண்டிருந்ததால் வந்த பெயர்)

இருமி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

இருமி: கோழி ரைட்ல திரும்பனும் கையப் போடு…

கோழி: ஒகே

திரும்பும் போது பின்னால் இருந்த வந்த ஒருவன் கேவலமான வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றான்…

இருமி: டெய் கோழி கைப் போட்டியாடா???

கோழி: ஏண்டா நீ சொன்ன உடனே போட்டுட்டன்… இன்னும் எடுக்கவே இல்லை…

இருமிக்கு ஒரு நிமிஷம் புரியாம என்னனு பாத்தா, கோழி இருமியோட தோள்ல கையப் போட்டிருக்கான் :-)))

இருமி: ஏண்டா!!! நீ என்ன என் லவ்வராடா???
பில்லியன்ல உக்காந்து என் தோள்ல கைப் போட்டு வரதுக்கு…
திரும்பறதுக்கு ரைட்ல சிக்னலுக்கு கைப் போடுனா தோள்ல கையப் போட்ருக்க :-X

பெட்ரோல் பங்ல போனவுடனே பார்த்தா முன்னாடி சக்கரத்துல காத்து ரொம்ப கம்மியா இருந்தது… துடியலூர் பெட்ரோல் பங் ரொம்ப சின்னது…

இருமி பெட்ரோல் போடுபவனிடம்: அண்ணே!!! முன்னாடி வீல்ல காத்து கம்மியா இருக்கு.. பக்கத்துல எங்கயாவது காத்து பிடிக்கிற இடம் இருக்கா?

பெ.போ: முன்னாடி வீல் தானே!!! இங்கயே லெக் பம்ப் இருக்கு அடிச்சிக்கலாம்… உள்ள இருக்கு போய் எடுத்துக்கோங்க…

இருமி: கோழி போய் லெக் பம்ப் எடுத்துட்டு வாடா…

உள்ளே போன கோழி கைல எடுத்துட்டு வந்ததை பார்த்து எல்லோரும் அரண்டு போயிட்டாங்க!!!

அவன் கைல இருந்தது Fire Extinguisher :-)))

கடைசி வருட ஜாவா லேப்:
கோழி OPயோட சிஸ்டம் பக்கத்துல உட்கார்ந்து கடலைப் போட்டுட்டிருந்தான்…

OP ஏதோ டவுட்னு என் இடத்துக்கு வந்து கேட்டான்… நானும் சரினு OP சிஸ்டத்துல என்னனு பொயி பாக்கலாம்னு போனேன்…

அங்க போனா Notepad அப்ளிக்கேஷனக் கானோம் (Java Program நாங்க Notepadல தான் போடுவோம்)…

நான்: OP, பிரோக்ராம் எங்க???

OP: கோழி Notepad எங்க காணோம்???

கோழி: டேய் சத்தியமா நான் எடுக்கலைடா…. வேணும்னா என் எடத்துல வேணாலும் போய் பாத்துக்கோ!!!

இதை கேட்டு லேபில் இருந்த எல்லோரும் :-)))))))

அட்டகாசம் தொடரும்…