அலாரம் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்தோம். மணி ஐந்து நாற்பது. நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்து விட வேண்டுமென்பது எனது எண்ணம். அறையில் நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது. ஏற்கனவே கவரிலிருந்து பிரித்து வைத்திருந்த அந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் குச்சியை தீபாவிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் ஒருவித கலக்கத்துடன் பாத்ரூமிற்கு சென்றாள்.
இரண்டு நிமிடத்திற்கு பின் வெளியே வந்தாள். கையில் எதுவும் இல்லை. என் பார்வையாலே அது எங்கே என்று நான் கேட்டதை புரிந்து கொண்டாள்.
“உள்ள இருக்கு. நீங்களே போய் பாருங்களேன். ப்ளீஸ்”
உள்ளே சென்று பார்த்தேன். வாஷ் பேசின் மேல் இருந்தது. அதை பத்திரமாக எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தேன். என் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக ஒரு கோடு தெரிந்தது. இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகமாகி இருந்தது. இரண்டு நிமிடங்களுக்குப் பின் லேசாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது. நன்றாக உத்துப்பார்த்தேன். அடுத்த இரு நிமிடங்களில் தெளிவாகவே தெரிந்தது.
தீபாவை என் மடியிலிருந்து தூக்கினேன். என்ன ரிசல்ட்? அவள் கண்களில் அந்த கேள்வி தெரிந்தது. இறுக்கமாக அணைத்து நெத்தியில் முத்தமிட்டேன். புரிந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. ரொம்ப சந்தோஷப்பட்டா தீபா உடனே அழுதுவிடுவாள்.
“லூசு. அழாத” சொல்லிவிட்டு கண்ணை துடைத்தேன். மீண்டும் மடியில் சாய்ந்து கொண்டாள்.
அறை முழுக்க மௌனமே நிரம்பி வழிந்தது.
“என்னடா குட்டி உங்கம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?”
“வேணாம். அவுங்க பேச மாட்டாங்க” லேசாக விசும்ப துவங்கினாள்.
அவளை தூக்கி நேராக என் முகத்தைப் பார்க்க வைத்தேன். விசும்பல் சத்தம் குறைந்தது.
”அழாதடா குட்டிப்பையா. இனிமே எல்லாம் சரி ஆகிடும். பாப்பா வர நேரத்துக்குள்ள எனக்கு மறுபடியும் வேலை கிடைச்சிடும். நம்ம ரெண்டு பேர் வீட்லயும் சரி ஆகிடுவாங்க. சரியா?”
“பாப்பானு எப்படி சொல்றீங்க?”
“எனக்கு ஜோசியம் தெரியும்”
“சொல்லுங்க. எப்படி சொல்றீங்க?”
“பெண் குழந்தை பிறந்தா தான் அம்மா அழகா மாறுவாங்களாம். பையன்னா குரங்கு மூஞ்சி மாதிரி மாறிடுமாம். நீ தான் இன்னும் அழகாயிட்டயே. அதான்”
“கதை விடாதிங்க. அதெல்லாம் ஏழு மாசத்துக்கு அப்பறம் தான் தெரியுமாம்”
“நீ வேணா பாரு. நிச்சயம் பாப்பா தான் பொறக்கும்”
”ஏன் உங்க அக்கா பையனுக்கு கொடுக்கணும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்”
“அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம்டா. நான் போய் இப்பவே இண்டர்நெட்ல பேர் பாக்கறேன். R இல்லைனா Sல தன் வைக்கணும்”
“நீங்க முதல்ல நௌக்ரில இருந்தோ மான்ஸ்டர்ல இருந்தோ ஏதாவது மெயில் வந்திருக்கானு பாருங்க”
“ஒரு வாரத்துல என்ன பெருசா மாறிடும்னு நினைக்கிற. எங்கயும் மேனஜர் போஸ்டிங்கு ஆள் எடுக்குற மாதிரி தெரியலை. ஃப்ரெஷர்னா கொஞ்சம் கஷ்டப்பட்டாவாது கிடைக்கும் போல. எலக்ஷன் வரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்ப கொத்து கொத்தா தூக்கறானுங்க.”
“அதுக்கு என்னங்க பண்ண? இப்ப பாப்பா வேற வர போகுதே சமாளிக்க முடியுமா?”
“ஏய்… ஏன் இப்படி ஃபீல் பண்ணற? வீட்டு லோன் இருபத்தி ரெண்டாயிரம் போக மீதி எட்டாயிரத்துல குடும்பத்தை நடத்திக்கலாம். ஆடம்பர சொலவெல்லாம் குறைச்சிட்டு அத்தியாவசிய தேவைகளை மட்டும் கவனிச்சிக்கலாம்”
“நம்ம ஆடம்பர செலவு எதுவுமே செய்யறதில்லையே”
“நம்ம ரெண்டு பேர் செல்ஃபோன் பில் நாலாயிரம் வருது. நான் என்னோடதை தூக்கப் போறேன். ஏதாவது இண்டர்வியூ கால்னாலும் லேண்ட்லைன்லயே பேசிக்கலாம். நீயும் அதை குறைக்க பாரு. இனிமே நோ சினிமா, ஹோட்டல். அப்பறம் கரெண்ட் பில் ரெண்டாயிரம் வருது. எங்கம்மா நூறு ரூபாய்க்கு மேல கட்டணதே இல்லை. அதையும் குறைக்கணும். இப்படி நிறைய குறைக்க வேண்டியது இருக்கு”
“சமாளிச்சிக்கலாம்னு சொல்றீங்களா? நான் வேணா ஏதாவது பர்சனல் லோன் எடுக்கவா?”
“அதெல்லாம் வேண்டாம்டா. வீட்டு லோனே நிறைய இருக்கு. எப்படியும் மூணு நாலு மாசத்துல சரி ஆகிடும். அப்ப நீயும் லீவு போட வசதியா இருக்கும். எப்படியும் வாங்கிடலாம்டா”
“உங்களை வேலையை விட்டு தூக்கினதுக்கு பதிலா என்னைய தூக்கிருந்தா கூட ஓரளவு சுலபமா சமாளிச்சிருக்கலாம். இன்னும் ஒரு பத்தாயிரம் அதிகமா வரும்”
“ஆமாம். நீயும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருந்திருக்கும். உன்னை இப்ப வேலைக்கு அனுப்பவே எனக்கு கஷ்டமா இருக்கு”
“ஏன் அப்படி சொல்றீங்க? எல்லாம் நம்ம தேவைக்குத் தானே.”
“ஹ்ம்ம்ம். எப்படியும் நான் சீக்கிரம் வாங்கிடறேன்”
“சீக்கிரம் வாங்கிடுவீங்கனு எனக்கும் நம்பிக்கை இருக்கு. நீங்க எதுக்கும் கஷ்டப்படாதீங்க” என்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு முகம் கழுவ பாத்ரூம் சென்றாள்.
நான் எழுந்து போய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். கடைசியாக எப்பொழுது ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலையை ஆரம்பித்தேன் என்று நினைவில்லை.
நௌக்ரியிலிருந்து சம்பந்தமே இல்லாத சில வேலை வாய்ப்பு மெயில்கள் வந்திருந்தன. எனக்கு வேலை போய் சரியாக இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. பத்து தூக்கம் இல்லாத இரவுகள். வீட்டில் பகைத்து கொண்டு செய்த காதல் திருமணம் என்பதால் இருவர் வீட்டிலும் தள்ளி வைத்து விட்டார்கள். அந்த வீராப்பிலே முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கியிருந்தோம். ஃபர்னிச்சர் மத்த சாமான்கள் எல்லாம் சேர்ந்து முப்பத்தைந்து ஆகியிருந்தது. கையிலிருந்த அனைத்து சேமிப்புகளும் இதில் கரைந்து விட்டது.
இது வரை என்னுடைய நிறுவனம் எப்பொழுதும் லே ஆஃப் செய்யாத தைரியம் இதையெல்லாம் என்னை செய்ய வைத்திருந்தது. எப்படியும் சமாளித்துவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். இப்பொழுது தான் பயம் வந்துள்ளது. எப்படியும் சிட்டியில் உள்ள சிறந்த மருத்துவமனையில் தான் தீபாவிற்கு காட்ட வேண்டும். அதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
காலை டிபனை தீபா தயார் செய்ய, முதன் முதலாக நான் கீழறங்கி குடிநீரை குடத்தில் பிடித்து தூக்கி வந்தேன். இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கடந்த ஒரு வாரமாக அவளை என் வண்டியில் தான் அழைத்து சென்று கொண்டிருந்தேன்.
“குட்டி, இந்த நிலைமைல நீ டூவீலர்ல வரலாமா? பஸ்லயும் தூக்கி தூக்கி போடும் இல்லை? கால் டேக்சி ஏதாவது சொல்லவா?”
“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க. டூவீலர்லயே போகலாம்”
“ஹ்ம்ம்ம். மதியம் நான் ஏதாவது சமைச்சி கொண்டு வந்து கொடுக்கவா?”
”ஐயா சாமி. அன்னைக்கு நீங்க முட்டையை வேக வெச்சி கொடுத்ததே போதும். ஆஃப் பாயிலா முட்டையை வேக வெச்ச முதல் ஆள் நீங்க தான். எங்களை விட்டுடுங்க” வயிற்றில் கை வைத்து காட்டினாள்.
ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கிலும் பார்த்து நிதானித்து ஓட்டினேன். வழக்கத்தை விட முப்பது நிமிடம் அதிகமாக எடுத்திருந்தேன். அவளை விட்டுவிட்டு எங்கும் போக மனமில்லாததால் வீட்டிற்கு வந்தேன். ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் மனமில்லை. இரண்டு லட்சம் இன்று முப்பதாயிரமாக மாறி இருப்பதை பார்த்து எரிச்சலடைவதை விட பார்க்காமலிருப்பதே மேல். அம்மாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லலாமா? ஓரளவு கோபம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. எதற்கும் டாக்டரிடம் ஒரு முறை சோதித்துவிட்டு இருவர் வீட்டிலும் சொல்லிவிடலாம். சனிக்கிழமை செக் அப் செய்துவிட்டு சொல்லிவிடலாம் என்று திட்டம். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது.
ஒரு வழியாக இன்று வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. சமையலில் உதவவில்லை என்றாலும் பாத்திரத்தை கழுவி வைத்தேன். அவளை கனமான பொருட்களை தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி வந்தவளை மகாராணி போல பார்த்து கொள்வது என் கடமை. இரண்டு நாட்களாக தீபா டென்ஷனாகவே இருக்கிறாள். செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. வசதியாக வாழ்ந்தவள். எப்படியும் சமாளித்து கொள்ளலாம் என்று அவளுக்கு ஆறுதல் கூறி வந்தேன். சனிக்கிழமை வீட்டில் சொல்லலாம் என்று சொன்னதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. மௌனம் சம்மதம். வீட்டிலிருந்து உதவி கிடைத்தாலும் அதை ஏற்பதாக இல்லை. சமாளிக்க முடியாத பட்சத்தில் வண்டியை வித்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். எப்படியும் முப்பதாயிரம் கிடைக்கும். அதை வைத்து மூன்று மாதத்தை ஓட்டிவிட்டால் போதும். வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்திலே புது வண்டி வாங்கி விடலாம். இதை தீபாவிடம் சொல்லவில்லை.
”இந்த காலாண்டில் XXXXX நிறுவனம் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது சென்ற வருடத்தின் இதே காலாண்டை காட்டிலும் ஒரு சதவிகிதமே குறைவு. உலக பொருளாதார தேக்க நிலையிலும் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது பிரமிக்கத்தக்கது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்” டீவியில் ஓடிக்கொண்டிருந்தது
தீபா கம்பெனிதான். ஷேர் நஷ்டக்கணக்கு ஓரளவு குறைந்திருக்கும்.
மாலை ஆறு மணி. தீபாவிற்காக காத்திருந்தேன். தேவையில்லாமல் அழைப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தோம்.
வீடு திறக்கும் சத்தம் கேட்டது. கம்ப்யூட்டரை விட்டு ஹாலிற்கு வந்தேன்.
தீபாவுடன் வினோ வந்திருந்தாள். அவளைக் கைத்தாங்களாக பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். எழுந்து போய் தீபாவைப் பிடித்து கொண்டேன். தீபா மிகவும் களைத்துப் போயிருந்தாள்
“என்ன வினோ, தீபாக்கு என்ன ஆச்சு? ஏதாவது மயக்கமா?”
”ஒண்ணுமில்லை. அவளை படுக்க வை”
வைத்தேன்.
“சிவா, ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சனை”
“”
“உனக்கே தெரியும் இப்ப சிச்சுவேஷன் சரியில்லை. அதனால பிரக்னண்ட் லேடீஸ் எல்லாத்துக்கும் மூணு மாசம் மேட்டர்னிட்டி லீவ் கொடுத்தா ஆப்பரேட்டிங் மார்ஜின் அஃபக்ட் ஆகும்னு”
“ஆகும்னு”
“தூக்கறாங்களாம். அதான்…”
“திஸ் இஸ் அன்ஃபேர். இவ்வளவு எத்திக்ஸ் பேசிட்டு எப்படி பெண்களுக்கு எதிரா இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணறாங்க?”
“பிராஃபிட் கணக்கு காட்டணுமில்லையா?”
“சரி, இப்ப தீபாவை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அதானே?”
“இல்லை அவ ப்ரெக்னண்ட்னு ஆபிஸ்ல யாருக்கும் தெரியாது”
“அப்பறம் என்ன பிரச்சனை?”
“உனக்கும் இப்ப வேலை இல்லை. வீட்டு லோன் வேற ஹெவியா இருக்காம்.”
“வினோ. டோண்ட் கில் மி. தீபாக்கு என்ன ஆச்சு?”
”அதுக்கு பயந்து அவ அபார்ஷன் பண்ணிட்டா”
இருதயத் துடிப்பே ஒரு நிமிடம் நின்றது போல் இருந்தது. என்னால் இதை முழுதாக ஜீரணிக்க முடியவில்லை. எதையாவது பிடித்து கொள்ள வேண்டும். வேலையிலிருந்து நீக்கும் போது இருந்ததை விட ஆயிரம், லட்சம் மடங்கு உடைந்துவிட்டது போல் தோன்றியது. உள்ளே தீபாவின் விசும்பல் சத்தம் கேட்டது.
மெதுவாக உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்தேன்.
“ஏன்டா செல்லம் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே. இந்த வீட்டைக் கூட வித்திருக்கலாமேடா. இதுக்காக நீ இவ்வளவு வலியைத் தாங்கணுமாடா?”
“குட்டிப் பாப்பா ரெசஷன்ல கஷ்டப்பட வேண்டாம்னுதாங்க”
……………………..
இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
Filed under: சிறுகதை, Tamil Nadu | Tagged: Short story |
மிகவும் அருமையாக இருக்கு! வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி குசும்பரே 🙂
பாலாஜி,
மன்னிக்கவும், இந்த கதை எனக்கு பிடிக்கலை….. 😦
ராம் அண்ணா,
கருத்திற்கு நன்றி…
இப்படி ஒரு கேவலமான சமூகத்துல நாம இருக்கறது எனக்கு கூட பிடிக்கல 😦
கதை என்ற அளவில் நல்லா இருக்கு!
நன்றி புலி 🙂
ஜீரணிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் நாட்டின் இன்றைய நிலைமை இதுதான்.
ஆமாம் சிவா… இதைப் போல வெளிய சொல்லாமல் விட்ட கதைகள் அதிகம். வேலையை வீட்டு நீக்கியவுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இருக்கின்றன 😦
@ராம்
20 வருடம் நடந்துவந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ்ல 10000 பேரை வீட்டுக்கு அனுப்ப போறாங்களாம்பா
:((
மனசை பிழியுது! சிவா சொன்ன மாதிரி கதை என்ற வகையில் நல்லா இருக்கு!
நன்றி அண்ணா!
அண்ணா கதை சூப்பர்.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்:)
வெட்டி கதை நல்லா இருக்கு.. கதைக்கு நல்லா இருக்கும் நிஜத்தில் கேட்கவே கொடுமையா இருக்கு 😦
ஆமாம் சந்தோஷ். என்னைவிட உங்களுக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம் …
Kathai nalla irukku… vetri pera Vaazhtukkal….
மிக்க நன்றி அமுதா. வேலையெல்லாம் எப்படி போகுது? 🙂
மனதுக்கு கஷ்டமான முடிவு.
ஆமா, இப்படி ஒரு பிளாக் நீங்க வச்சுருக்குறது இத்தன நாளா கண்லயே
படலியே
//மனதுக்கு கஷ்டமான முடிவு.
//
ஆமாம் முக
//ஆமா, இப்படி ஒரு பிளாக் நீங்க வச்சுருக்குறது இத்தன நாளா கண்லயே
படலியே//
ஒரு காலத்துல தினமும் ஒரு பதிவும் போடும் போது சில விஷயங்களை தமிழ்மணத்தில் இணைத்திருக்கும் பதிவில் எழுத முடியாத நிலை இருந்தது. அதற்காக தனியாக ஆரம்பித்த பதிவு இது. எழுதுவது குறைந்ததும் இதற்கு பயனில்லாமல் போய்விட்டது 🙂
Good Story. Gray shades of life.
மிக்க நன்றி நிர்மல்
😦
All the Best !!!
Thanks Nathas
இன்றைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை அருமையான நடையில் எழுதியுள்ளீர். வாழ்த்துக்கள்
மிக்க நன்றி மை ஃபிரெண்ட்…
😦
நிச்சயமற்ற சூழ்நிலையில் தான் எல்லாரும் வாழ்கிறோம்.
ஆமாம் பாஸ். ஆனா இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இது தொடரும்னு தான் தெரியல 😦
நாட்டாமை.. முடிவை மாத்தலியா?
இல்லை தல… முடிவு மாத்தினா நான் சொல்லனும்னு நினைச்ச விஷயத்தை தவற விட்டுடுவேனோனு ஒரு பயம். அந்த முறைல கதையை புத்திசாலித்தனமா கொண்டு போன மாதிரி இருக்கும். ஆனா சொல்ல வந்த விஷயம் மறைக்கப்பட்டு போகும்னு ஒரு பயம்… கதைல பிரில்லியன்ஸி இல்லைனாலும் கொஞ்சம் நேர்மையா சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடுவோமேனு தான் சஸ்பென்ஸ் வைக்கல 😦
இதயம் கசந்த்தது.. கண்கள் பணித்தது…
நன்றி ஸ்ரீதரன்
:-((
நன்றி சரவணகுமரன்
கலக்கிட்டீங்க பாஸ்!! சூப்பர்!!! வாழ்த்துகள்:)
நன்றி தமிழ்மாங்கனி
வெற்றி பெற வாழ்த்துகள்..!
நா.இ,
மிக்க நன்றி!
Excellent write-up.. 🙂
Quite painful to read the end!!!
மிக்க நன்றி Vg
மனதைச் சுடும் நிதர்சனமான உண்மை…. படித்து முடித்ததும் நெஞ்சுக்குள் ஒரு குளிர் பரவிற்று… இது வெறும் கதை அல்ல.. பல குடும்பங்களில் நடந்துவரும் கொடுமை…………… வாழ்த்துக்கள்அண்ணா….
மிக்க நன்றி நிலா.
நீங்கள் சொல்வது போல் இது நிதர்சனமான, வேதனையான உண்மை தான் 😦
வெட்டி கதை super….. வெற்றி பெற வாழ்த்துக்கள் ….
மிக்க நன்றி பரத்
நிதர்சனத்தின் பிரதிபலிப்பு…. 😦
வெற்றி பெற வாழ்த்துக்கள்… 🙂
மிக்க நன்றி பாலகுமார்…
நல்ல கதை, ஆனால் முடிவு தன்னம்பிக்கை ஊட்டுவது போன்றோ எந்தவித சோதனைகளையும் சமாளிப்பது போன்றோ இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். (அதாவது வெட்டி அண்ணே.. ஒரு மெஸ்ஸேஜ் கொடுத்திருக்கலாம்னு சொல்ல வர்ரேன்)
ஷஃபி,
கதைல மெசேஜ் கொடுத்தா விக்ரமன் பாணி ஆகிவிடும். சில சமயம் வலியைக் கொடுத்தால் தான் மருந்து வேலை செய்யும்…
1500…பட்ஜெட்ட போட்டு வைங்க.. பரிசுத் தொகை கன்ஃபார்ம் தல.. நல்லா எழுதி இருக்கீங்க உணர்வுகளை.
தல,
நீங்க சொல்லும் போது சந்தோஷமா தான் இருக்கு. இருந்தாலும் இந்த கதைப் போல நிதர்சனம்னு ஒண்ணு இருக்கு இல்லை 🙂
கதை நன்றாக இருக்கின்றது….
முதல் இரண்டு பத்திகளை trim செய்தால் கொஞ்சம் crisp ஆக இருக்கும் என்பது என் கருத்து…
வெற்றி பெற வாழ்த்துக்கள் பாலாஜி….
மிக்க நன்றி மோகன்…
முதல் ரெண்டு பத்தி… நிச்சயம் கை வைக்க முடியாது. அது காதலின் வெளிப்பாடு. முதல் பாதி நான் சில வருஷங்கள் கழித்து படிக்க ஆசைப்படுகிறேன் 🙂
நல்லாவே இல்லை சொதப்பல் உவ்வே !!
உங்களை நம்பி திங்கள் கிழமை காலையில் முதல் bloga படிச்சேன்!! too bad 😦
மன்னிக்க வேண்டும் கண்ணன்… நல்ல கதை எழுத முயற்சிக்கிறேன்…
ஐயோ ரொம்ப “serious”a எடுத்துகாதீங்க வெட்டி. எனக்கு சோக கதை பிடிக்காது அவ்வளவு தான்.
I think a company laying off people does not imply it does not have ethics. But laying off people citing “unproductivity” because of pregnancy is a serious human rights violation. My employer Oracle had a policy that it will never discriminate based on sex and status (including pregnancy). Am sure any company will have such policies. In reality If a company behaves like this (laying off pregnant employees) you could file a PIL and am sure all companies know about this. Do you really know a company (Small/big) which did such a thing ?
கண்ணன்,
வேலையிலிருந்து வெளியேற்றப்படும் போது சொல்ற காரணம் கார்ப்ரேட் வார்த்தைகளை தூவி அழகா இருக்கும். யாருக்கும் கார்ப்ரேட் உலகை எதிர்க்க துணிவில்லை. ஃபீல்ட் சரியானவுடனே மறுபடி உள்ள போயிக்கலாம் என்கிற எண்ணம் தான். கம்பெனி பெயர்களை சொன்னாலும் சாட்சி கொண்ட வர முடியாது. ஏன்னா சாட்சி சொல்ற துணிவு நம்ம யாருக்கும் கிடையாது 😦
கவுண்டர்ஸ் டெவில் ஷோ எழுதுற வெட்டி எழுதுன பதிவா இது? நம்பவே முடியலை..
கதையில் நடக்கும் எதுவும் நமக்கு நாளை நடக்கவே நடக்காது என்ற குறைந்த பட்ச உத்தரவாதம் கூட இல்லாத இடத்தில்தான் நாம் இருக்கிறோம் என்ற நினைப்பே வலிக்கிறது வெட்டி..
பாராட்டுகள் & வெற்றி பெற வாழ்த்துகள்
வெண்பூ,
நீங்க என்னோட சிறுகதை எதுவும் படிச்சதில்லை போல 🙂
வாழ்த்துகளுக்கு நன்றி… இன்றைய நிலையில் சாய்ஸ் என்பது சுத்தமாக இல்லை 😦
பாலாஜி.. எனக்கு இந்த கதை முடிவில் முற்றிலும் உடன்பாடு இல்லை.. .. 😦
தமிழ் பிரியன்,
எனக்கு இங்கே நடப்பது எதிலும் உடன்பாடு இல்லை. வேடிக்கைப் பார்க்க மட்டுமே முடிகிறது என்ற வேதனையின் வெளிப்பாடு தான் இந்த கதை 😦
ரொம்ப நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி வாழவந்தான்…
அருமையான கதை இன்றைய சூழ்நிலைக்கு.
எத்தனை பேர் வாழ்வில் நடந்ததோ….
மிக்க நன்றி மணி… இன்றைய சூழ்நிலையில் இன்னும் எத்தனை பேர் வாழ்வில் நடக்கப் போகிறதோனு தான் பயம் எனக்கு 😦
😦
😦
Pesimistic thinking.. When both of them are qualified and have a house that they could sell, the decision Deepa took was something no girl would do. The story might touch the hearts of the readers sentimentally, but the message it conveys is not so good.
Software engineeing profession is not a goverment job. Everyone should be prepared for recession. Suicide or killing (is this case) is a step only cowards would take.
(I’m also a Software Engineer married to a SE; so don’t answer me saying this is the reality)
ப்ரியா,
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
இன்றைய சூழ்நிலையில் பெங்களூரில் வீடு விற்க கார் தருகிறார்கள். ஒரு வீட்டிற்கு இரண்டு பிளாட் தருகிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கிய வீட்டை விற்றால் லோன் போக எவ்வளவு வரும். ஐந்து லட்ச ரூபாய்கள் போட்டு வாங்கிய ஃபர்நிச்சர் மற்றும் பொருட்கள் எல்லாம் விற்றால் எவ்வளவு வரும். லோன் போக கையில் காசு வருமா என்பதே சந்தேகம். நம் கையிலிருந்து பணம் கூட கேட்கலாம். இது தான் இன்றைய நிலை.
அடுத்து இந்த கதையில் அந்த பெண் இப்படி செய்வாளா மாட்டாளா என்பது கேள்வியல்ல. நிறுவங்கள் இப்படி செய்கிறதே என்பது தான் கேள்வி. கடிவாளம் இல்லாத இந்த குதிரைகளை எப்படி சமாளிக்கப் போகிறோம்.
Ethics, Values எல்லாம் வேலை செய்பவர்களுக்கே தவிர, நிறுவனங்களுக்கு இல்லை. அதைப் பதிவு செய்து வைப்பது என் கடமையாக நான் உணர்கிறேன். நாளை உலக பொருளாதாரம் சரியாகும் பட்சத்தில், புதிதாக வேலையில் வருபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். பணத்தை இஷ்டத்திற்கு செலவு செய்து பிறகு ஆப்பை அசைத்த குரங்கு போல மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட. இது தான் இந்த கதையின் நோக்கம்.
வேலையை விட்டு நீக்கியவுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இருக்கின்றன.
கோழைகளும் இந்த சமூகத்தில் இருக்கிறார்களே! அவர்களுக்காக யார் பேசப் போகிறார்கள்? எப்பொழுது பேசப் போகிறார்கள்?
கதை என்றாலும் எனக்கும் பிடிக்கவில்லை பாலாஜி! 😦
எனக்கு நிஜத்திலும் பிடிக்கவில்லையே! 😦
இப்படியும் நடக்குமா யோசிச்சேன். இப்படியெல்லாம் நடக்கக்கவும் கூடாது!
அமீரகத்தில் வேலை இழப்புகள் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. இங்கு எனக்கும் தலைக்கு மேல் கத்தி தொங்கிகொண்டுதான் இருக்கிறது. அலுவலகத்தில் meething னாலே ஒருவித பயம் உண்டாகிறது. எது நடந்தாலும் தன்னம்பிக்கைய மட்டும் விட்டுவிடகூடாது.
இது தான் இப்போடைய எதார்தம் என்றாலும் கதையின் முடிவு ரொம்ப கொடுமையா இருக்கு.
ஜீவன்பென்னி,
என்ன சொல்றதுனு தெரியல. எப்ப நிலைமை சரியாகும்னும் தெரியல 😦
இது கதையல்ல, உண்மை.
வெட்டி, உண்மைய சொல்ல போன நாம எல்லோரும் இந்த நிலைமைல தான் இருக்கோம் …
இன்னும் மனசு வலிக்குது. எப்போ முடியுமோ தெரியவில்லை
ஆமாம் ஈசுவரன்… சீக்கிரம் சரியாகணும்னு பிரார்திக்க தான் முடியுது 😦
அன்பு வெட்டிஜி…
நன்றாக இருக்கின்றது என்று சொன்னால் நான் மெண்டலி அஃபெக்டட். நடக்க வேண்டாம் என்று விரும்பும் சாதா ப்ரஜை தான்.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி வசந்த குமார். நிலைமை சரியாகணும் என்பது தான் என் விருப்பமும்.
வெட்டி,
அதிர்ச்சி தரக் கூடிய முடிவு!
முடிவை மாத்தி இருந்தா, சொல்ல வந்த மெசேஜோட முக்கியத்துவம் போயிருக்கும்!
ஆமாம் தள. அதான் இப்படி முடிவு வைக்க வேண்டியதா போயிடுச்சி 😦
Good Story
மிக்க நன்றி கமல்
Very good story
மிக்க நன்றி ரவிகுமார்
Hello saab,
I totally disagree with this. Even a daily cooly is leading their life peacefully. Y can’t an educated couple??! Lots of ways are there.. as mentioned in the story.. they could have sold the house. Yes, I agree… there is recession. But its really affecting people who lavishly spent their sal and had no savings and just lots of EMIs.. All are pointing out recession recession… But the main thing is we really forgot the word simplicity & savings and just lead a king size life..and suffering during this period.
My parents are teachers. They din’t earn much.. bt they lead a very simple life and made us to live like that. Now , we both are in good position.. How come its possible? its through reasonable spending. Please guys.. don’t supress ourselves like other ppl do and try to create sympathy. Surely this recession is going to disappear in couple of years..after that atleast we need to wake up..
Naamala namae ean asingapaduthikanum nu thonuthu enaku! Software la irukavanga ellam kolainga illa nu oru story ezhuthungalaen plz.. nambikaya ean yarum kathai ezhutha matareenga.. !!!! 🙂
Sorry if anythin i mentioned is wrong.
ப்ரியா,
வருகைக்கு நன்றி. இதுல அசிங்கம்னு சொல்ல எதுவுமே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை முறை இருக்கும். மிடில் கிளாஸ் வாழ்க்கை முறைக்கும் மீதி இரண்டு கிளாஸ் வாழ்க்கை முறைக்கும் பெரிய வித்யாசம் இருக்கும். இன்னைக்கு உருவாகியிருக்கிற இந்த அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை பிரச்சனையை மையமா வெச்சி தான் நான் இதை எழுத முயற்சி செய்திருக்கிறேன்.
இன்ஃபோஸிஸிலிருந்து வேலையை விட்டு தூக்கியவுடன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மனைவி எப்ப பாரு ஃபோன்ல பேசிட்டு இருக்கானு சந்தேகப்பட்டு ஒருவர் கொலை செய்து, பிறகு தற்கொலை செய்து கொண்டார். இதெல்லாம் இந்த துறைல இருக்குற பிரச்சனைகள் தான். படிச்சவங்க இப்படி செய்யலாமானு கேட்டா? செய்யக்கூடாது என்பது தான் என் விருப்பம். என் விருப்பப்படி உலகம் இயங்குவதில்லையே 😦
தன்னம்பிக்கை கொடுக்குற மாதிரி கதையும் எழுதலாம். அது விக்ரமன் படம் மாதிரி ஆகிடும்னு ஒரு பயம் 🙂
காதல் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள்.. காதல் தீவிரம் மாதிரி க,ஷ்டத்திலும் ஸமாளிப்பு வேண்டும். கதை தறகாலத்தை சித்தரிக்கிரது. ஓட்டத்தடை.நிதரிசனம். கதை என்று தோன்றவில்லை.மனது இருக்கமானது.
ஆமாம் சொல்லுகிறேன். உண்மை தான் மிகவும் குறைந்துவிட்டார்கள். ஆனால் ஒரு சில வருடங்கள் வரை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள் சிலரும் இருக்கிறார்கள்.
கருத்திற்கு மிக்க நன்றி…
வெட்டி கதையை படிச்சவுடன் அடபோய்யான்னு தோணுது!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😉
கோபி,
ஒண்ணும் சொல்றதுக்கில்ல 🙂
கத நல்லாயிருக்குண்ணே. !!!
இப்போ இருக்குற நெலமைல நெசத்துல யாராவது இந்த முடிவெடுத்தாகூட தப்பு சொல்லமுடியாது. 😦
கல்கி,
மிக்க நன்றி!
எப்படியும் நிலைமை சரியாகும்னு நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம் 😦
தல,
வழக்கம் போல கலக்கல்…
ஆனா முடிவு கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு..கொஞ்சம் வாழ்கை மேல தன்னம்பிக்கை ஊட்ற மாதிரி இருக்கலாம் இல்லீங்களா…
உங்கள படிக்கறவங்க மிகவும் அதிகம்..வேலை போன வாழ்க்கையே போன மாதிரி நீங்களே சொன்ன எப்படி…??
எதோ நான் மனசுல பட்டதை சொன்னாங்க…அதிகப்ரசங்கிதனமா இருந்த மன்னிச்சிருங்க..
பாலா,
தன்னமிக்கை ஊட்ற மாதிரி சொல்லலாம் தான். ஆனா அப்படி சொன்னா அது மெசஜ் சொல்ற படம் மாதிரி ஆகிடும்.
இன்னைக்கு நமக்கு எந்த அளவுக்கு அழுத்தம் இருக்குனு தெரிஞ்சா தான் நாளைக்கு அதை சமாளிக்கிற முன்னெச்சரிக்கை வரும். அதுக்கு பயம் அவசியம்னு நினைக்கிறேன்.
2011ல வேலைக்கு வரவன் 2005ல வந்தவங்க மாதிரி செலவு செய்யக்கூடாது என்பது தான் என் விருப்பம்.
பின்னூட்டங்களிலிருந்து, பல பேருக்கு முடிவு பிடிக்கவில்லை போல.
ஆனால் நாம் மட்டும்தான் பொருட்களின் மீதான பிடிப்பில் வாங்கிய எதையும் விற்க மறுக்கின்றோம்.
குழந்தையை விட வீடு முக்கியமில்லை அல்லவா?
விற்று அதனை முதலீடு செய்தாகிலும் தற்காலிகமாக குடும்பத்தினையும் குழந்தையையும் காப்பாற்றியிருக்கலாம்தான்.
ஆனால் ப்ரியாவுக்கு சொன்ன பதிலே இதற்க்கும் பொருந்தும் போலிருக்கிறது.
ஆயினும் கதை உண்மையாகவும், கோர்வையாகவும், நன்றாகவும் வந்திருக்கிறது வெட்டி.
நிச்சயம் 20வதில் ஒன்று உங்களது.
தல,
வருகைக்கு நன்றி!
எனக்கு இன்னைக்கு இருக்குற இந்த நிலைமை சுத்தமா பிடிக்கல. நமக்கு பிடிக்கலனு சொல்லி உண்மையை மறுக்க முடியுமா?
இப்ப எல்லாம் தினமும் ஒரு பத்து கால் வெச்சி கொல்றாங்க. பயங்கர கடுப்பா தான் இருக்கு. என்ன பண்ண? 😦
வாழ்த்திற்கு நன்றி…
நல்ல கதை. நிறைய பேர் முடிவு பிடிக்கலை என்று சொன்னதே கதையின் வெற்றி. Good luck!
வாங்க தலைவா…
உங்க வாழ்த்தே வெற்றி பெற்ற சந்தோஷத்தை தருகிறது!
As a story its nice, but don’t want this to happen. Good luck.
மிக்க நன்றி குணா.. நிஜத்தில் நடக்க கூடாது என்பது தான் என் ஆசையும் …
அங்கங்கே நடந்திருக்கக் கூடிய ஒன்றைத்தான் எழுதி இருக்கீங்க பாலாஜி. சோக முடிவிலும் மெசேஜ் இருக்கத் தான் செய்கிறது. இருவரின் குழந்தை தானே. அவனை ஒரு வார்த்தை கேட்காமல் இந்த முடிவுக்கு வந்து செயல் படுத்துவது – கொஞ்சம் யதார்த்தத்தில் இருந்து விலகியது போல இருக்கு. மற்றபடி மிக நல்ல, சோகமான கதை.
நல்லா எழுதுறீங்க பாலாஜி. இந்த மாதிரி இரண்டு ப்ளாக் வெச்சு, இரண்டு கதை எழுதி, இரண்டு பரிசு வாங்குறது ரொம்ப ரொம்ப தப்பாட்டம். இல்ல, கொஞ்சம் பணத்த நம்ம கிட்டயும் ஷேர் பண்ணிக்குங்க 🙂
அனுஜன்யா
வாங்க யூத்..
இருவருக்கும் சொந்தம் தான். இருந்தாலும் இதைப் பற்றி கணவனிடம் பேச அவளுக்கு பயங்கர தயக்கம். இந்த கேள்வியைக் கேட்டால் அவன் தாங்கி கொள்வானா என்பது முதல். அடுத்து அவன் தன்னால் தான் தன் மனைவிக்கு இந்த நிலை என்று அவன் மேலே வருத்தப்படுவான். அனைத்து சுமைகளையும் அவன் மேல் இறக்கி வைத்தது போல் ஆகிவிடும். தற்போது உள்ள சூழ்நிலையில் அவள் தான் சுமை தாங்கி. அதனால் அவள் கணவனைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. காலத்திற்கும் அவன் மேல் பழி. பழியை அவளே ஏற்றுக் கொள்கிறாள்.
பணத்துக்காகவா யூத் எழுதறோம். அங்கிகாரம் தானே இங்க முக்கியம் 🙂
வாழ்த்துக்கள் பாலாஜி!
தல மிக்க நன்றி!!!
முதல் முறையா என்னோட கதைக்கு வந்துருக்கீங்கனு நினைக்கிறேன். நன்றி!!!
இந்த கதையைப் பற்றி டிஸ்கஸ் செய்ய வேண்டாம்.
வெட்டி
அருமையான நடை
—
பொருளாதார காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்வது கால காலமாக நடப்பது தானே 😦 😦
—
ஒரு சில வேளைகளில் இருப்பவர்கள் கர்ப்பமடையக்கூடாது என்று சட்டமே பல வருடங்களாக இருக்கிறது
மிக்க நன்றி டாக்டர்.
உங்களுடைய பின்னூட்டம் கதைக்கு மேலும் வலுவூட்டுகிறது.
சார்… அருமையான கதை. நெஞ்சை உருக்கும் முடிவு. நிகழ்கால பிரச்சனையோடு கதையை பின்னியது அழ்கு..!
மிக்க நன்றி சுகுமார். உங்களுடைய படங்கள் எல்லாம் அருமை.
suupeerrrr….
[…] எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பா இதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் […]
இருதயத் துடிப்பே ஒரு நிமிடம் நின்றது போல் இருந்தது. என்னால் இதை முழுதாக ஜீரணிக்க முடியவில்லை. ippidi dhan irundhudhu enakkum! good one…
i was in a similar situation….in US…8 months pregnant…and my husband lost his job…couldn’t travel to india for delivery…spending the little savings we had on everyday expenses…just hoping we’d have the baby before our health insurance was cut…
கண்கள் பணித்தது.. உண்மை
வாழ்த்துக்கள் 😉
—
ilamaran