என்னை கவர்ந்த பாத்திரங்கள்
மஹாபாரதம் – விதுணர்
பொன்னியின் செல்வன் – ஆழ்வார்க்கடியான்
உன்னால் முடியும் தம்பி – தோட்டக்காரர்
வருஷம் 16 – பூர்ணம் விஸ்வனாதன்
காதல் கோட்டை – ராஜிவ்
காதலிக்க நேரமில்லை – பாலைய்யா
தில்லு முல்லு – தேங்காய் சீனுவாசன்
எதிர் நீச்சல் – மேஜர் சுந்தர்ராஜன்
லவ் டுடே – ரகுவரன்
சேது – ஸ்ரீமன்
அண்ணாமலை – ஜனகராஜ்
காரணங்கள்:
மஹாபாரதம் – விதுணர்
தாசி மகன் என்ற காரணத்தால் அவமானப்பட்டாலும், நியாயத்திற்காக குரல் கொடுத்தவர். தன்னுடைய மான, அவமானத்தைப்பற்றிக் கவலைப் படாமல் கடமையாற்றியவர். சிறந்த பக்திமான். போரில் பங்கேற்காதவர். நியாயமான்.
பொன்னியின் செல்வன் – ஆழ்வார்க்கடியான்
எவ்வளவு பிரச்சனையில் சிக்கினாலும் கடமையே கண்ணாக கருதியவன். என் கதாநாயகன் வந்தியத்தேவனை பல இடங்களில் காப்பாற்றியவர்.
உன்னால் முடியும் தம்பி – தோட்டக்காரர்
சமுதயத்துக்கு தன்னால் முடிந்த நன்மையை செய்தவர். உதயமூர்த்திக்கு உந்துதலை உண்டாக்கியவர்.
வருஷம் 16 – பூர்ணம் விஸ்வனாதன்
அவர பாத்தா எனக்கு பாவமாத்தான் இருக்கும்.
காதல் கோட்டை – ராஜிவ்
எங்க பாசமா இருந்தா மச்சினிச்சி போற எடத்துல தப்பா நினைக்கிற மாதிரி ஆகிடும்னு அவள்ட எப்பவும்மே கோவமா பேசறது…
காதலிக்க நேரமில்லை – பாலைய்யா
தில்லு முல்லு – தேங்காய் சீனுவாசன்
இரண்டுமே ஒரே காரணம் தான்… இப்படியும் யாராவது ஏமாறுவாங்களா?
எதிர் நீச்சல் – மேஜர் சுந்தர்ராஜன்
கஷ்டப்படும் ஒரு வேளைக்கார சிறுவனுக்கு வழிக்காட்டியாக இருந்ததற்காக.
லவ் டுடே – ரகுவரன்
அப்பானா இப்படி தான் இருக்கனும்னு எல்லாரும் feel பண்ற மாதிரி கேரக்டர்.
சேது – ஸ்ரீமன்
நண்பனுக்கு ஒன்னுனா துடிக்கறான் பாருங்க… அது தான்.
அண்ணாமலை – ஜனகராஜ்
நண்பனுக்கு நடக்குற அநியாயத்துக்கு அவர் போரடறது. ரஜினி வீட்டை இடிச்சத பாத்து அவர் கலங்கறது…கடைசி வரைக்கும் நண்பனுக்கு துணையாயிருக்கறது…
Filed under: Uncategorized | 7 Comments »