• Top Clicks

    • எதுவுமில்லை
  • அதிகம் பார்வையிடப்பட்டவை

  • Blog Stats

    • 33,972 hits

தப்பு பண்ணிட்டேன்!!!

நான் பாட்டுக்கு நான் உண்டு தமிழ்மணமுண்டுனு எல்லா பிளாக்கையும் படிச்சிட்டு இருந்த காலம்…

திடீர்னு மீட்டிங்னு கூப்டாங்க! சரிடா எப்பையும் போறதுதானே இன்னிக்கு மட்டும் என்ன ஆகப் போகுதுனு போனேன். மீட்டிங்ல மேனஜரு இனிமே ஒவ்வொரு வருசத்துக்கும் ஒவ்வொரு சர்டிபிகேசன் பண்ணனுமாம். நம்ம பிராஜக்ட்க்கு ஜாவால பண்ணலாம். யார் யார் பண்றீங்கனு கேட்டாங்க???

கூட இருக்கறவங்க எல்லாம் கையத்தூக்கிட்டானுங்க!!! நமக்குத்தான் எப்பவுமே கூட்டத்தோட கோவிந்தா போட்டுத்தானப் பழக்கம். சரினு நானும் கையை தூக்கிட்டேன்.

முதல்ல ஜீன் 16 புக் பண்ணோம். படிக்க நேரமில்லாததால, அதை அப்படியே ஜுலை- 22க்கு மாத்தினோம். அப்ப பிளாக் எழுத ஆரம்பிச்சதால படிக்க நேரமில்லையா (சும்மா…எதாவது காரணம் சொல்லனுமில்லை அதுக்குத்தான்) அதனால ஆகஸ்ட்-26க்கு மாத்தினோம். இப்ப செப்டம்பருக்கு மாத்தலாம்னு பாத்தா மூணு தடவைக்கு மேல மாத்த முடியாதுனு சொல்லிட்டான் அந்த பயபுல…

நமக்கு ஜாவால எதுவுமே தெரியாது. (நமக்கு C தான் தெய்வம்).
இன்னும் 20 நாள்ல படிச்சி பாஸாவனானு தெரியல…இருந்தாலும் முயற்சி செய்வோம்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பதென்னவென்றால், இனி வெட்டிப் பயல் கொஞ்ச நாளைக்கு பிஸி பாய் ஆகிறார்…
(பிளாக் ஆரம்பிச்சே ஒரு மாசம் தான் ஆகுது ஓவரா பேசதடானு யாரோ சொல்ற மாதிரி இருக்கு….இருக்கட்டும் வந்து வெச்சிக்கிறன்)

பிகு:
என்னட தப்பு பண்ணிட்டன்னு தலைப்பு வெச்சிருக்கானேனு பாக்கறீங்களா? வருஷத்துக்கு ஒரு சர்டிபிகேசன்னு சொன்னாங்க!!! நான் எங்க பிராஜக்டுக்கு தேவையான முக்கியமான வேற ஒரு சர்டிபிகேசனை பெங்களூர்ல இருக்கும் போதே பண்ணிட்டுதான் இங்க வந்தேன். எல்லாரும் கைய தூக்கறாங்களேனு நானும் தூக்கிட்டு இப்ப அவஸ்தைப்படறேன் :-((

கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்-2!!!

கவுண்டரும் செந்திலும் சின்சியராக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
வெளியே சத்தம் கேட்கிறது…

“பழைய கம்ப்யூட்டர், லேப்-டாப்புக்கு ஸ்ட்ராபெரி பழம்…
பழைய கம்ப்யூட்டர், லேப்-டாப்புக்கு ஸ்ட்ராபெரி பழம்…”

கவுண்டர் டென்ஷனாகி வெளியே வருகிறார். செந்திலும் யாருக்கும் தெரியாமல் வெளியே வருகிறார்.

கவுண்டர் பழம் விற்பவனிடம்:
டேய் என்னட இது?

ப.வி: பழைய கம்ப்யூட்டர், லேப்-டாப்புக்கு ஸ்ட்ராபெரி பழம்னே…

கவுண்டர்: அது என்னட டெய்லி எங்க கம்பனி முன்னாடியே நின்னுட்டு சத்தம் போட்டுட்டு இருக்க?

ப.வி: என்னை ஏன்னே திட்டறீங்க??? நான் வியாபாரின்னே…

கவுண்ட்ஸ்: ஆமாம் இவர் பெரிய கப்பல் வியாபாரி…

செந்தில்: அண்ணன் நான் ஸ்ட்ராபெரி சாப்பிட்டதே இல்லைனே.

கவுண்ட்ஸ்: ஸ்ட்ராபெரி சாப்பிடறதுக்கு உள்ள இருக்கிற காஸ்ட்லி கம்ப்யூட்டர போடலாம்ன்ர??? டெய் லீடு மண்டையா ஒளுங்க உள்ள போயி வேலைய பாரு… இல்ல கீ-போர்டாலே மண்டைய ஒடைச்சிடுவன்..உள்ள போ

கவுண்ட்ஸ் பழ வியாபாரியிடம்: டேய் சீஸ் பர்கர் மண்டையா, இனிமே இந்த பக்கம் உன்னை பார்த்தேன்…அவ்வளவுதான்..ஓடிப் போ நாயே!!!

பழ வியாபாரி இடத்தை காலி செய்கிறார்.

**********************************

காட்சி 2:

கவுண்டர் பிராஜக்ட் டெவலப்மெண்ட் முடித்து ஆன்- சைட்டிற்கு டெஸ்டிங்குக்கு அனுப்பியிருக்கிறார்கள். பிராடக்ட்டில் 2 பக் (bug) இருப்பதாக ஆன்- சைட்டில் இருந்து மெயில் வந்திருக்கிறது. விளக்கமாக சொல்ல போன் செய்யுமாறு சொல்லியுள்ளார்கள்.

கவுண்ட்ஸ்: டெய் லீட்ஸ், இங்க வா

செந்தில்: என்னன்னே கூப்பிட்டீங்களா?

கவுண்ட்ஸ்: ஆன்- சைட்டிக்கு போன் பண்ணி அது என்ன 2 bugன்னு கேட்டு நம்ம என்விரான்மெட்ல இருக்கானு டெஸ்ட் பண்ணி பாரு…
(Testing Environment and Development Environment are different)

செந்தில்: சரிண்ணே!!!

செந்தில் ஆன்- சைட்டிக்கு போன் பண்ணி கேட்டுவிட்டு, ஒரு bugஐ மட்டும் டெஸ்ட் செய்துவிட்டு, புதிதாக சேர்ந்திருக்கும் ஒரு டெவலப்பரை (பொண்ணுதான் இதெல்லாம் கூடவா சொல்லுவாங்க???) கூப்பிட்டு காபி டே சென்று கடலை போட்டுவிட்டு, பிசா ஹட்டில் மதிய உணவை முடித்துவிட்டு, Forumல் (Bangalore Shopping mall) சுற்றிவிட்டு லேட்டாக வருகிறார்.

கவுண்ட்ஸ்: டேய் லீட்ஸ், என்ன டெஸ்ட் பண்ணிட்டியா?

செந்தில்: பண்ணிட்டண்ணே!!!

கவுண்ட்ஸ்: எங்க காட்டு நான் பாக்கறேன்.

செந்தில் ஒரே ஒரு bugஐ மட்டும் டெஸ்ட் பண்ணி காட்டுகிறார்.

கவுண்ட்ஸ்: சரி அந்த இன்னொரு பக் எங்க?

செந்தில்: அந்த இன்னொன்னு தானே இது!!!

கவுண்ட்ஸ்: டேய்!!! நான் உன்ன என்ன பண்ண சொன்னன்.

செந்தில்: bug டெஸ்ட் பண்ண சொன்னிங்க

கவுண்ட்ஸ்: எத்தனை?

செந்தில்: ரெண்டு

கவுண்ட்ஸ்: ஒண்ணு இங்க இருக்கு அந்த இன்னொரு பக் எங்க???

செந்தில்: அந்த இன்னொன்னு தானே இது!!!

கவுண்டர் டென்ஷனாகி கத்துகிறார்…

டீம் மெட்டான ஜுனியர் பாலைய்யா மற்றும் வெள்ளை சுப்பையா வருகிறார்கள்.

ஜு.பா: ஏன்ன அவனை திட்டறீங்க…. என்ன இருந்தாலும் அவன் நம்ம டீம்மு

கவுண்ட்ஸ்: ஆமாம் பெரிய இந்தியன் கிரிக்கெட் டீம்மு… 2 bugஅ டெஸ்ட் பண்ணுடானா, 1 மட்டும் பண்ணிட்டு அந்த இன்னொண்ணு எங்கடானா, என்ன சொல்றான் பாரு..

ஜு.பா: இதுக்கு போயி இவ்வளவு டென்ஷன் ஆயிட்டு!!! பொறுமையா கேட்டா சொல்றான்…

ஜு.பா செந்திலிடம்: தம்பி, அண்ணன் உன்கிட்ட என்ன சொன்னாரு?

செந்தில்: பக் டெஸ்ட் பண்ண சொன்னாரு?

ஜு.பா: எத்தனை?

செந்தில்: ரெண்டு

ஜு.பா: ஒண்ணு இங்க இருக்கு… அந்த இன்னொரு பக் எங்க???

செந்தில்: அந்த இன்னொன்னு தாங்க இது!!!

கவுண்ட்ஸ் மேலும் டென்ஷனாகி கத்துகிறார்.

கோ.சரளா: என்ன இங்க சண்டை??? என்ன இங்க சண்டை???

வெ.சுப்பையா: ஒண்ணும் இல்லக்கா!!! அண்ணன் நம்ம லீட்ஸ்ட 2 பக் டெஸ்ட் பண்ண சொல்லியிருக்காரு!!! 1 மட்டும் டெஸ்ட் பண்ணிட்டு , இன்னொரு பக் எங்கனு கேட்டா அதுவும் இதுதான்னு சொல்றாரு…

கோ.சரளா: த!!! அவர் உன்கிட்ட என்ன சொன்னாரு?

செந்தில்: பக் டெஸ்ட் பண்ண சொன்னாரு?

கோ.சரளா: எத்தனை?

செந்தில்: ரெண்டு

கோ.சரளா: ஒண்ணு த இங்க இருக்கு… அந்த இன்னொரு பக் எங்க???

செந்தில்: அந்த இன்னொன்னு தாம்மா இது!!!

கவுண்ட்ஸ் மேலும் டென்ஷனாகி கத்துகிறார். எல்லோரும் அவரை அடுக்குகிறார்கள்.

கோ.சரளா: ஒரு பக்குக்கு இவ்வளவு பிரச்சனையா?

கவுண்ட்ஸ்: என்ன bugக்க பத்தி அவ்வளவு சாதரணமா பேசிட்ட? ஒரு பக்காள கொலம்பியா விண்கலமே வெடிச்சி போச்சி. அது hardware bug, இது software bug. ஆனால் பிரச்சனை எல்லாம் ஒண்ணுதான்.
சரி விடுங்க நானே கேக்கறன்…

கவுண்டர் பொறுமையாக செந்திலிடம்:
டேய் நான் உன்கிட்ட என்ன பண்ண சொன்னன்?

செந்தில்: Bug டெஸ்ட் பண்ண சொன்னீங்க!!!

கவுண்டர்: ஆன்- சைட்டிக்கு போன் பண்ணியா?

செந்தில்: பண்ணனே!!!

கவுண்டர்: எத்தனை பக் சொன்னான்?

செந்தில்: ரெண்டு

கவுண்டர்: ஒண்ணு தோ இங்க இருக்கு… அந்த இன்னொரு பக் எங்க???

செந்தில்: அந்த இன்னொண்ணு தான்யா இது!!!

கவுண்டர்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்………..

செந்தில் எஸ்கேப் ஆகி ஓடி விடுகிறார்….