தமிழ் சேனல்கள் இணையத்தில்…

நாங்க இன்னும் எவ்வளவு நாள் இங்க இருப்போம்னு தெரியாததால டீவி வாங்கல. சரின்னு படத்தை மட்டும் டவுன்லோட் செய்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

நேத்து ஏதேச்சையாக இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும் போது இதைப் பார்த்தோம். இணையத்தில் இந்த தளத்தில் சன் டீவி, கே டீவி, விஜய் டீவி கிடைக்கிறது. (ஓசில இல்லப்பா காசுக்குத்தான் 😦 )

சன் டீவியும், கே டீவியும் சேர்ந்து வாங்கினால் $15 , தனியாக ஒரே சேனல் வாங்கினால் $10.

நமது பேண்ட்வித்தைப் (Bandwidth) பொறுத்தே படம் நன்றாக தெரியும். வேண்டுமென்றால் முயற்சித்துப் பார்க்கலாம்.

நாங்க உடனே வாங்கி, தலைவரோட “தாய்வீடு” பார்த்தோம். அப்பறம் புதுபட ட்ரைலர், விளம்பரம் கூட விடாமப் பார்த்தோம். ஆனால் எல்லா விளம்பரமும் பழசாவே இருந்தது :-(.

இந்த ஞாயிற்றுக்கிழமை “டாப் டென் மூவிஸ்” பாக்கனும் :-))