• Top Clicks

    • எதுவுமில்லை
  • அதிகம் பார்வையிடப்பட்டவை

  • Blog Stats

    • 33,972 hits

கோழியின் அட்டகாசங்கள் -1

காலேஜ் முதல் வருடத்தில் சீனியர் அதிகமாக ரேகிங் செய்யுமிடத்தில் மெஸ்ஸிற்கு தான் முதலிடம்…

ஞாயிறு மதியம் சிக்கன். எல்லோரும் பம்பிட்டே சாப்பிட்டிருந்தோம்…
திடிர்னு சிக்கன் தீந்திடுச்சி (பர்ஸ்ட் இயர் பசங்க வந்திருக்காங்க கொஞ்சம் அதிகமா செய்யனும்னு தெரியாதா அந்த மெஸ்ல இருக்கறவனுங்க செஞ்ச வேலை).

எங்க முன்னாடி உட்கார்ந்திருந்த சீனியர்கிட்ட வந்த அவன் பிரண்டு,

சீ.2: டேய் மச்சான் சிக்கன் தீந்திடுச்சாம்…திரும்ப புதுசா செஞ்சிட்டு இருக்கானுங்க… இன்னும் அரை மணி நேரமாகுமாம்…

சீ.1: அதுவறைக்கும் என்ன பண்ணலாம்????

சீ.2: (என்னிடம்) டேய் நீ என்ன டிப்பார்ட்மென்ட்ரா?

நான்: ஐ.டி சார் (அண்ணானு சொல்ல கூடாதாம்)

சீ.2: சரி நீ போய் மெஸ்ல சாப்பிட்டுட்ருக்கற ஐ.டி பசங்க எல்லாத்தையும் கூப்ட்டு வா…

நான்: சரிங்க சார்

சீ.1: மவனே அப்படியே எஸ்ஸான…அவ்வளவுதான்…தெரியுமில்லை.

நான்: அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் சார்…

சீ.2: சரி போ…5 நிமிஷத்தில இங்க இருக்கனும். (என் பக்கத்தில் அமர்ந்திருப்பவனிடம்) டேய்…நீ 1,2 சொல்லு…
(என்னிடம்) அவன் 300 சொல்லி முடிக்கறத்துக்குள்ள நீ இங்க இருக்கனும்.

நான்: சரி சார்… (மனசுக்குள்ள: நாதாரி நாயி… பெரிய M.N.நம்பியார்னு நினைப்பு…உனக்கெல்லாம் சத்தியமா வாஷ் அவுட்தான்டா ஆகும்)

5 நிமிடத்திற்குள் ஒருவழியாக மெஸ்ல இருக்கிற எல்லா ஐ.டி பசங்களையும் கூப்பிட்டு வந்துவிட்டேன்.

சீ.2: (என்னிடம்) சரி நீ உக்காரு…
(மீதி இருப்பவர்களை பார்த்து) ஏன்டா நீங்க எல்லாம் சிக்கனையே பாத்ததில்லையா??? ஏன்டா இப்படி ஊருக்கு முன்னாடி வந்து தின்னு தீக்கறீங்க?

நான் மனதிற்குள்: டேய் நாயே உனக்கு கிடைக்கலங்கற வயித்தெரிச்சல்ல பேசிட்டு… எங்களை அலையறோங்கிறயா???

சீ.1: சரி… இப்ப நீங்க என்ன பண்ண போறீங்கனா, ஒருத்தவன் ஒருத்தவனா
வந்து கோழி புடிக்கிறீங்க..என்ன புரியுதா???

ஒவ்வொருத்தவனா வந்து கோழி புடிக்கிற மாதிரி நடித்தார்கள்…

சீனியர் கமென்ட்ஸ்:
* ஏன்டா கோழி புடிடானா நாய் புடிக்கிற மாதிரி ஓடற…
* ஏன்டா செத்த கோழியா புடிக்கிற…ஒளுங்கா புடிடா
* டேய மச்சான், அங்க பாருடா அவன் கோழி புடிடானா கபடி ஆடறான்

கூடவே நிறைய சென்ஸார் செய்ய வேண்டிய வசனங்கள்…

இந்த நிலைமையில் எங்களை காப்பாற்ற வந்தான் காரமடை சிங்கம்…

அவன் கோழி புடிக்கிற அழக பாத்து எல்லோரும் அரண்டு போயிட்டானுங்க…
(அப்பறம் ஒவ்வோரு சீனியர் ரூமுக்கும் போயி கோழி புடிச்சி காட்டினான். அது வேற கதை)

அன்றிலிருந்து அவன் பெயர் “கோழி” என்றானது…அவன் செய்த அட்டகாசங்களுக்கு அளவே இல்லை… அதை பற்றிய ஒரு தொடரே இது…

ஒரு சின்ன ஆராய்ச்சி…

இது நேத்து உனக்கும் எனக்கும் பார்க்கும் போது எனக்கும் என் ரூம் மேட்டுக்கும் நடந்த ஒரு உரையாடல்…

ரூ.மே: நம்ம த்ரிஷா நடிச்ச வெற்றி படங்களுக்கும், தோல்வி படங்களுக்கும் வித்தியாசம் என்ன???

நான்: வந்த புதுசுல, கிடைச்ச படங்கள் எல்லாத்துலையும் நடிச்சாங்க…இப்ப கதைய தேர்ந்தெடுத்து நடிக்கறாங்க…

ரூ.மே: டேய் மச்சான் என்ன ஆச்சி உனக்கு. தெளிவா தானே இருக்க??? தமிழ் படத்துல ஹீரோஸே கதைய கேக்கறதில்லை. நீ என்னனா அவுங்க கதைய கேட்டு நடிக்கிறாங்கன்ற???

நான்: அப்படி இல்லை. படத்துல் அவுங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கற மாதிரி பாத்து நடிக்கிறாங்க…

ரூ.மே: டேய் என்னடா ஆச்சி உனக்கு. திருப்பாச்சி பாத்த இல்லை… அதுல அவுங்க தான் கதாநாயகினு பாட்ட வெச்சிதான் தெரிஞ்சிக்க முடியும்.

நான்: சரி இப்ப நல்ல பெரிய ஹீரோஸ் கூட நடிக்கிறாங்க…

ரூ.மே: “ஆறு” பாத்த இல்லை??? அப்பறம் என்ன இப்படி சொல்ற???

நான்: சரி நீயே சொல்லு…

ரூ.மே: சரி அவுங்க நடிச்ச ஹிட் படமெல்லாம் சொல்லு

நான்: சாமி, கில்லி, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும்

ரூ.மே: தெலுகு படத்தையும் சொல்லு…

நான்: வர்ஷம், நூ வொஸ்தானன்டே நேன்னொத்துன்டானா?, அத்தடு, பவுர்ணமி

ரூ.மே: பிளாப் படமெல்லாம் சொல்லு

நான்: லேசா லேசா, அலை, மனசெல்லாம், ஜி, எனக்கு 20 உனக்கு 18, ஆய்த எழுத்து, ஆதி, ஆறு, அல்லரி புல்லுடு (தெலுகு)…

ரூ.மே: நல்லா யோசிச்சி பாரு…

நான்: ஒன்னும் தெரியல நீயே சொல்லு.

ரூ.மே: ஹிட் படத்துல எல்லாம் அம்மணி பாவாடை தாவணில வருவாங்க…
பிளாப் படத்துல எல்லாம் மாடர்ன் டிரஸ்ல வருவாங்க :-)))

நான்: ஆஹா, இதை நான் யோசிக்கவே இல்லையே….
டேய் “ஜி”ல பாவாடை தாவணில தான வருவாங்க???

ரூ.மே: ஏன்டா “தலை” எஃபக்ட் இருக்கும் போதூ த்ரிஷா எஃபக்ட் ஒர்க் அவுட் ஆகாது. புரியுதா???

நான்: அது சரிதான்…சரி நான் ஒன்னு கேக்கறன். நீ சொல்லு.
“ஜி” படத்துக்கு பெயர் காரணம் சொல்லு.

ரூ.மே: நான் அந்த படம் பாக்கல நீயே சொல்லு…

நான்: டேய் மச்சான்…இப்ப என்ன ஆச்சி உனக்கு??? எத்தனை வருஷம் படம் பாக்கற… படத்துக்கும் பேருக்கும் என்னைக்காவது சம்பந்தம் இருக்குமா?

ரூ.மே: நிஜத்துல தான் நம்மல ஒரு பயலும் மதிக்க மாட்றான்…படத்து பேராவது நம்மல மதிக்கிற மாதிரி இருக்கணும்னா???

நான்: டேய் இது கொஞ்சம் டூ மச்…
திரைப்படத்துறைல டாப் ஹீரோஸ் (அதிக ரசிகர்கள்) யார் யார்???

ரூ.மே: எம்.ஜி.ஆர், ரஜினி.

நான்: இவுங்க ரெண்டு பேர் பேருலையும் ஒரு ஒத்தும இருக்கு பாரு…

ரு.மே: என்ன ஒத்தும???

நான்: அஜித் பேருலையும் அது இருக்குடா…நல்லா பாரு…

ரூ.மே: ஆமான்டா..மூணு பேர் பேருலையும் நடு எழுத்து ‘ஜி’

நான்: அதே :-))