பகத்சிங் தீவிரவாதியா???

பகத்சிங், ராஜ குரு, சுக் தேவ் மூவரும் தீவிரவாதிகள் என பத்தாம் வகுப்பு ICSE சிலபஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதை எதிர்த்து வழக்கு தொடர போவதாக மகாராஷ்ட்டிர அரசு தெரிவித்துள்ளது.

மேலும் விவரமறிய:
http://www.hindustantimes.com/news/181_1747191,000900040001.htm

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க!!!

நான் எழுதிய இந்த தொடரை ஒரே பதிவில் தருமாறு நாமக்கல் சிபி அவர்களின் விருப்பத்திற்கிணங்க…

பாகம் 1 – முன்னுரை (சில தவறான புரிதல்கள்)
பாகம் 2 – தேவையான புத்தகங்கள்
பாகம் 3 – ஆங்கிலத்தில் பேசலாம்… எளிமையான வழிமுறைகள்
பாகம் 4 – ரெசுமே
பாகம் 5 – ஆப்ட்டிடுயுட் (Well beginning half done)
பாகம் 6 – டெக்னிக்கல் இன்டர்வியு
பாகம் 7 – பர்சனல் இன்டர்வியு
பாகம் 8 – சின்ன சின்ன டிப்ஸ்
பாகம் 9 – மென்பொருள் பயிலகம்

சொல்ல மறந்த கதை
முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.
உங்களுடைய எந்த ரெக்கார்ட் நோட்டுகளையும் தொலைக்காதீர்கள். நான் எந்த இன்டர்வியூவிற்கு சென்றாலும் அதற்கு முதல் நாள் என் ரெக்கார்டை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் செல்வேன்.

முதல் வருட ரெக்கார்ட் நோட் மிக முக்கியம். சின்ன சின்ன C ப்ரோக்ராம் படிக்க அது உதவும்… ரெக்கார்ட் நோட் இல்லையென்றால் ஜுனியர் பசங்களை பிடியுங்கள்… கண்டிப்பா ஜெயிக்கலாம்!!!

நன்றி

உழைப்பே உயர்வு தரும்!!!

தெய்வ குத்தமாயிடுமாம்…

அமெரிக்கா வந்து புதிது. வார நாட்கள் ஓரளவு பிரச்சனையில்லாமல் இருந்தது. வார இறுதி நாட்களில்தான் பிரச்சனை. பனி அதிகமாக இருந்ததால் வெளியே செல்ல முடியாத நிலை. வீட்டிலும் தனியாக உட்கார்ந்திருந்தால் மனம் வெறுமையாக இருந்தது.

ஏன்டா இங்க வந்தோம்னு எனக்கு நானே பல முறை கேட்டு கொண்டேன். இந்தியாவில் எப்போழுதும் நண்பர்களுடன் தங்கியிருந்ததால், தனிமையென்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் என்னோட மட்டுமே இருப்பது உயிர் போகும் வலியாக இருந்தது. பேசாம எப்படியாவது திரும்ப போயிடலாமனு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.

அந்த நேரத்தில்தான் பிளாக் அறிமுகமானது. இந்தியாவில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் அவர்களுடைய பிளாக் பற்றி சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் ஆங்கிலத்திலே இருந்தது. மேலும் அங்கே எனக்கு வேலையே இரவு 9 மணி வரை இருக்கும். வீட்டிற்கு வந்தால் நண்பர்களுடன் செலவு செய்யவே நேரம் சரியாக இருக்கும். அதனால் பிளாக் படிக்கவோ, எழுதவோ தோன்றவில்லை.

நான் பார்த்த முதல் தமிழ் பிளாக் டுபுக்கு அவர்களுடையது. குட்டி நாய்கிட்ட தேங்காய் மூடி கிடைச்சா என்ன பண்ணும். நானும் அதுவே தான் செய்தேன். அந்த பிளாக்ல இருக்கிற ஒரு பதிவு விடாம 2 -3 தடவை படித்தேன். கிட்டதட்ட 1 மாசம் தினமும் அதுல தான் இருந்தேன். தமிழ்மணம் அந்த பிளாக் மூலமா அறிமுகமாச்சு.

அடுத்து என்னை கவர்ந்த பிளாக் $elvan அவர்களுடையது. அதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு கனலை எரித்த கற்பின் கனலி. அந்த ஒரு பதிவை படித்ததிலிருந்து அவருடைய அனைத்து பதிவையும் படித்தேன். அந்த ஒரு பதிவை நிறைய பேருக்கு அனுப்பி வைத்தேன்.

கர்ணன் படத்துல கண்ணன் குந்தியிடம் சொல்லும் வசனம் “அத்தை! ஆசை யாரை விட்டது???”. இந்த வசனம் எனக்கு சரியாக பொருந்தியது.
நிறைய பிளாக் படித்த பிறகு நாமும் ஒன்று ஆரம்பிப்போமே என்று தோன்றியது.
தமிழில் எழுத யாரை கேட்கலாம் என்று தெரியவில்லை.

பொதுவா எனக்கு என் பேர்ல யாரையாவது பார்த்தால் பிடிக்காது. அதுக்கு எதுவும் பெருசா காரணம் இல்லை. ஸ்கூல்ல எப்பவுமே நாம வாத்தியார்கிட்ட நல்ல பிள்ளைனு பேர் வாங்கற டைப் (காலேஜ்ல இதுக்கு நேரெதிர்).. என் பேர கெடுக்கறதுக்குனே கொஞ்ச பேர் இருந்தானுங்க… அதனால அப்படி ஒரு எண்ணம்.

ஆனால் நான் ஆரம்பிக்கனும்னு நினைச்ச பேர்ல ஒருத்தர் இருந்தாரு. அதுவும் ஊரு, பேரு ரெண்டுமே ஒன்னாயிருக்கு. அதுவும் அவர் பதிவெல்லாம் நமக்கு புரியாத அளவுக்கு அதி புத்திசாலித்தனமா இருக்கு. நம்ம இப்ப அவர் பேர கெடுக்க போறமானு பயம் வந்திடுச்சு. சரி தமிழ்ல எப்படி எழுதறதுனு அவர்டயே கேப்போம்னு கேட்டேன்.

அடுத்த 5 நிமிடத்திற்குள் ஒரு விளக்கமான மெயில். அதுவும் வெறும் லிங் மட்டும் இல்லாமல் விளக்கத்துடன். அவர் ஒரு ஆளானு சந்தேகம் இன்னும் நிறைய பேருக்கு இருக்கு ;). ஆமாம் அது நம்ம பாபா தான் (பாஸ்டன் பாலா).

அதுக்கு பிறகு நான் பிளாக் ஆரம்பிப்பதற்குள் 2 மாதம் ஆனது. எங்கே தவறாக நினைப்பாறோ என்று நான் என்னை பற்றி அவருக்கு சொல்லவே இல்லை (15 நாட்களுக்கு முன்பு வரை). அவர் பேரை கெடுக்கற அளவுக்கு நான் எழுதலன்னு நினைக்கிறேன்… (நானும் பாஸ்டன் பாலாஜி தாங்க ;))

எனக்கு பிளாக் மூலமா நட்பாகி போன் பண்ணி, தமிழ்மணத்துல வீணா வம்புதும்புக்கு எல்லாம் போகாம எதாவது எழுதுனு சொன்னவர் உதய். அதற்கு பிறகு நான் அதிகமா எந்த வம்பு தும்புக்கும் போகலை.

தமிழ்மணத்தில் இணைந்துள்ளவர்களில் என்னை பார்த்து பேசிய ஒரே நபர் (சென்ற வாரம் விழாயன் முடிய), நம்ம உறக்கம் தொலைத்த இரவுகளில் நாயகன் கார்த்திக் பிரபு. என் மேல இருக்கற பாசத்துல என்னைப் பற்றி ஒரு பதிவே போட்டுட்டான். இந்த பதிவுக்கும் இவர்தான் காரணம்.

என்னுடைய இந்த பிளாக் டெம்ப்லேட் மாற்றி சரியாக வடிவமைத்து கொடுத்தவர், என்னையும் கதை எழுத வைத்தவர் நம்ம கப்பி.

இவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இதில் தெரிந்தோ தெரியாமலோ எனக்கு உதவியவர்கள் பலர். இவர்களுக்கு எல்லாம் பிறகு நன்றி தெரிவித்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் நாளை என்பது நிதர்சனமில்லை என்பதால் இன்றே தெரிவித்துக்கொள்கிறேன்.

அது என்னடா தெய்வ குத்தம்னு கேக்கறீங்களா??? ஏதோ ஆறு, ஆறுனு எல்லாரும் எழுதனாங்கலாம். நானும் எழுதனும்னு நம்ம கார்த்திக் பிரபு சொல்லிட்டாரு. அதனால ரெண்டையும் ஒன்னாக்கிட்டேன்.

பிகு:
எப்படியோ 50 பதிவு போட்டாச்சு.