• Top Clicks

  • எதுவுமில்லை
 • அதிகம் பார்வையிடப்பட்டவை

 • Blog Stats

  • 33,972 hits

பிரிவு

பிரிவு-2 பிரிவு-3 பிரிவு-4

“தனா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சொல்லு… பாக்கலாம்”

“ஒண்ணும் இல்லை… என் ரூம் மேட் திவ்யாக்கு அவ பிராஜக்ட்ல எக்ஸெல்ல மேக்ரோ பண்ண சொல்லியிருக்காங்க. அவ எனக்கு போன் பண்ணி ஹெல்ப் பண்ண முடியுமானு கேட்டா. நீ தான் அதுல பெரிய ஆளேச்சே! கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் ப்ளீஸ்”

“திவ்யானா? அன்னைக்கு கமெர்ஷில் ஸ்ட்ரீட்ல உன்கூட லூசு மாதிரி ஒண்ணு இருந்துச்சே அதுவா?”

“ஏய், லூசு கீசுன்ன அவ்வளவுதான்”

“சரி சொல்லு என்ன பண்ணனும்”

“இரு நான் அவள்ட டீட்டெயிலா கேட்டு சொல்றேன்”

…………………….

“ஹலோ திவ்யா நான் ஐஸூ பேசறேன். அந்த எக்ஸல்ல ஏதோ பண்ணனும்னு சொன்னியே, கொஞ்சம் டீட்டயிலா சொல்லு, தனா பண்ணி தரன்னு சொல்லி இருக்கான்”

” ”

“இரு நீ என்ன சொல்றனே எனக்கு புரியல. நான் தனா எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட் பண்ணறேன். அவன்ட நீயே பேசிக்கோ”

………………….

“தனா உன் எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட பண்றேன். கொஞ்சம் அவள்ட என்ன செய்யனும்னு டீட்டெயிலா கேட்டுக்கோ”

“சரி”

“டேய்! அவளை எல்லாரையும் ஓட்டற மாதிரி ஓட்டாத”

“சரி…. சொல்லிட்ட இல்ல. ஃபிரியா விடு”

…………………

“ஹலோ! நான் தனா பேசறேன். சொல்லுங்க என்ன செய்யனும்”

என்ன வேணும்னு தெளிவாக சொன்னாள்.

“சரிங்க.. இது செய்யறதுக்கு ஒரு 5 மணி நேரமாகும். ஒரு மணி நேரத்துக்கு $60. மொத்தம் $300. எப்படி அனுப்பறீங்க?. இண்டர் நெட் டிரான்ஸ்பர் பண்ணிடறீங்களா?”

“என்னங்க இப்படி சொல்றிங்க? உங்களூக்கே இது அநியாயமா தெரியலையா?”

“சரி நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட்ன்றதால பாதி ரேட்ல பண்ணி தரேன். ஓகேவா?”

“ஐயய்யோ வேணாங்க… நான் வேற ஆளை பாக்கறேன்”

“கவலைப்படாதீங்க! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எப்ப வேணும்னு சொல்லுங்க?”

“நாளைக்கு மதியத்துக்குள்ள பண்ணி தர முடியுமா?”

“சரிங்க நாளைக்கு மதியம் சாப்பிட போறதுக்கு முன்னாடி அனுப்பி வெச்சிடறேன்”

ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டு அனுப்பிவிட்டேன். நன்றி சொல்லி மெயில் அனுப்பினாள்.

……………………………..

ஒரு வாராத்திற்கு பிறகு…
எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது

“ஹலோ தனா ஹியர்”

“நான் ஐஸ்வர்யா ஃபிரெண்டு திவ்யா பேசறேன்”

“எந்த ஐஸ்வர்யா?””

“நீங்க தனபாலன் தான?”

“ஆமாம் அப்படிதான் என்னை எல்லோரும் கூப்பிடறாங்க”

“உங்க பிராஜக்ட் மேட் ஐஸ்வர்யா பிரண்ட் திவ்யா. அன்னைக்கு கூட எக்ஸேல்ல மேக்ரோ பண்ணி குடுத்தீங்களே”

“நியாபகம் இருக்குங்க. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அப்பறம் ஐஸ்கிட்ட நான் இந்த மாதிரி கேட்டன்னு சொல்லிடாதிங்க”

“சரிங்க. அப்பறம் ஒரு சின்ன பிரச்சனை”

“சொல்லுங்க உங்க மேனஜரை போட்டு தள்ளனுமா?”

“ஐயய்யோ அதெல்லாம் இல்லை. அன்னைக்கு நீங்க பண்ண மேக்ரோவை நான் பண்ணன்னு சொல்லி குடுத்துட்டேன். அது எங்க மேனஜ்ருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. இப்ப அதைவிட கொஞ்சம் அட்வான்சா ஒன்னு கொடுத்து பண்ண சொல்லி இருக்காரு. ப்ளீஸ் நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். ”

“இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? நான் பண்ணதை நீங்க பண்ணீங்கனு கதைய விட்ருக்கீங்க”

“ஸாரிங்க. நீங்க வேற கம்பனி. இதை சொன்னா பிரச்சனையாயிடும்”

“புரியுது. என்ன செய்யனும்னு சொல்லுங்க? எப்படி செய்யனும்னு உங்களுக்கு நான் சொல்லி தரேன்”

ஒரு வழியாக விளக்கினாள்.

“உங்களுக்கு VB தெரியுமா?”

“தெரியாதே! காலேஜ்ல நாலாவது செமஸ்டர்ல படிச்சேன். மறந்து போச்சு”

“ஃபிரியா விடுங்க… எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை. எப்ப வேணும்?”

“திங்க கிழமை காலைல. முடியுமா?

“என்னங்க மணி 4 ஆயிடுச்சி. நான் பொதுவா வெள்ளிக்கிழமை 1 மணிக்கு மேல எந்த வேலையும் பண்ணமாட்டேன்”

“சாரிங்க… இந்த ஒரு தடவை மட்டும்”

“இந்த தடவை நானே பண்ணி தரன். ஆனால் எனக்கு ட்ரீட் கொடுக்கனும். ஓகேவா???”

“ட்ரீட்டா??? ”

“பின்ன… போன தடவையே 300 டாலர் வாங்கியிருக்கனும். மிஸ் பண்ணிட்டேன். இந்த தடவை எப்படியும் ட்ரீடாவது கொடுக்கனும்”

” ”

“என்னங்க பேச்சையே கானோம்”

“சரிங்க. நீங்க பண்ணி குடுங்க. ட்ரீட் வெச்சிக்கலாம்…..
எங்கனு நீங்களே சொல்லுங்க”

“லீலா பேலஸ்”

“இதெல்லாம் கொஞ்சம் ஓவர்…”

“சரி ப்ரிகேட் ரோட்ல இருக்கற “Cafe Coffee Day”ல வெச்சிக்கலாம். அடுத்த வீக் என்ட். ஓகேவா???”

“சரிங்க”

“திங்க கிழமை காலைல உங்க மெயில் பாக்ஸ்ல எக்ஸல் இருக்கும்”

“ரொம்ப தேங்ஸ்ங்க”

……………………………….

“டேய்! மேக்ரோ பண்ணி குடுக்கறதுக்கு ட்ரீட் கேட்டயாமே… உண்மையா???”

“ஆமாம்… அப்ப தான் அடிக்கடி கேக்க மாட்டா. கத்துக்கனும்னு தோனும்”

“கிழிக்கும்… இனிமே ட்ரீட் கொடுத்தே உங்கிட்ட வேலை வாங்கிடலாம்னு அவ நேத்து கூட ரூம்ல சொல்லிட்டு இருந்தா!!!”

“ஓ!!! பாத்தா லூசு மாதிரி இருக்கா… இப்படியெல்லாம் வேற பேசறாளா??? அவளுக்கு இருக்கு.
நான் வேற அவளுக்கு முன்னாடியே அந்த எக்ஸெல அனுப்பி வெச்சிட்டேன்”

“சரி வீக் என்ட்தான் பாக்க போறியே அப்பறமென்ன??? அப்ப கேட்டுக்கோ”

“ஏய் டுபுக்கு.. நான் சும்மா பேச்சுக்கு சொன்னா, சீரியசா எடுத்துக்க்கிட்டயா? ட்ரீட் எல்லாம் எதுவும் வேணாம். அவள்ட சோல்லிடு”

“சரி”

…………………

அடுத்த நாள் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.

“ஹலோ! தனா ஹியர்”

“நான் திவ்யா பேசறேன்”

“சொல்லுங்க திவ்யா!!! அடுத்த எக்ஸல் ரெடியாயிடுச்சா???”

“ஐயய்யோ அதெல்லாம் இல்லைங்க. சும்மா தான் போன் பண்ணேன்””

“சொல்லுங்க”

“நேத்து ஐஸ்வர்யாட்ட ட்ரீட் வேணாம்னு சொன்னிங்களாமே? நிஜமாவா?”

“இல்லையே நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே”

“நீங்க வேணாம்னு சொன்னிங்கனு அவ சொன்னா”

“சும்மா சொன்னங்க. நான் தான் வேணாம்னு சொன்னேன்”

“நான் அவள்ட சும்மா ஓட்றத்துக்காக சொன்னதை அவ உங்ககிட்ட வந்து சொல்லிட்டா. சீரியஸா எடுத்துக்காதீங்க. நான் உங்களுக்கு கண்டிப்பா ட்ரீட் கொடுக்கறேன்”

“உங்க இஷ்டம். சரி நீங்க எந்த பிரான்ச்ல வேலை பாக்கறீங்க? உங்க கம்பனிதான் ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலையும் வெச்சிருக்கானே””

“நான் எலக்ட்ரானிக் சிட்டில இருக்கேன். போன வாரம் வரைக்கும் மடிவாளால இருந்தேன்”

“சரி அப்ப ஏதாவது ஓரு நாள் லன்ச்க்கு மீட் பண்ணுவோம்”

“வாவ்!!! இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே… இன்னைக்கு நான் என் பிரெண்ட்ஸ் கூட போகனும்.. நாளைக்கு மீட் பண்ணுவோமா?”

“சரிங்க……”

(தொடரும்)

22 பதில்கள்

 1. கதை நல்லா போகுது… அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

 2. ம்ம்..அப்புறம்??

  //எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை//

  :))

  அடுத்த பாகம் எப்போ ரிலீஸ்?

 3. ஊமைகப்பி,
  நன்றி. அடுத்த பாகம் இன்று இரவுக்குள் போட்டுவிடுகிறேன்.

 4. எக்ஸல் மேக்ரோ *இப்படி* எல்லாம் பயன்படுத்தப்படுகிறதா ? :-)))

 5. udhay,
  Done…

  anony,
  சிறு துரும்பும் பல் குத்த உதவும் 😉

 6. ஓ!, நீங்கள் எல்லாம் இப்படிதான் பிகர் மடக்கிரீங்ககளா, இத்தனை நாளா இது எனக்கு தெரியாம போச்சே!

 7. Hello, I am also struggling in macros. Could you please guide me how to improve my skills in macros?

 8. வேந்தன்,
  இது கதை. என் வாழ்க்கை வரலாறு இல்ல 😉

  Abiramam,
  Macro is nothing but VB for Applications. If you can tell me ur requirement, I may be able to help u.

 9. சுருக்கச் சொல்லுப்பா.. அப்புறம் என்ன ஆச்சு..

  இனிமே.. நீங்க கதை எழுதறதாயிருந்தா.. எல்லா பார்ட்-ம் எழுதின பின்னாடி போட்டா போதும்.. தெரியுதா..?

  இந்த மாதிரி சஸ்பென்ஸெல்லாம் வெச்சு மண்டையைப் பிச்சுக்க வெக்கறீங்களே..

  இனிமே யாராவது Excel Macro கேட்டா என் எxடென்ஷன் கொடுங்க..

  அது ஒண்ணுதான் கத்துக்கலே… இன்னிக்கு ராத்திரிக்கு படிச்சிடறேன்..

  என் டோக்கன் நம்பர் ஓண்ணு.. வேற யாராவது பசங்க வந்து எxடென்ஷன் கொடுத்தா டோக்கன் 10 மேல கொடுத்து உக்கார வையுங்க.. :))
  அன்புடன்
  சீமாச்சு..

  பி.கு: இனிமே வெட்டிப்பயல் ங்கற உங்க பேரை சுட்டிப்பயல் -னு மாத்திக்குங்க..

 10. சீமாச்சு,
  எழுத ஆரம்பிக்கும் போது இரண்டு பார்ட்ல முடிச்சிடலாம்னு ஆரம்பிச்சேன். பாக்கலாம் இன்னும் 2 பதிவுல முடிக்க முடியுமானு?

  அப்பறம் உங்க எக்ஸ்டென்ஷன் கொடுங்க… அபிராமமுக்கு ஏதோ மேக்ரோல சந்தேகமாம் 😉

 11. macro-ல சின்ன சந்தேகம்.
  தனாவோட போன்நம்பர் கெடைக்குமா?

  :)))

  //எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை//

  தூள்…

 12. பெத்த ராயிடு,
  தனா ஏற்கனவே ஒருத்தவங்களுக்கு சொல்லி கொடுத்து கஷ்டப்பட்டுட்டு இருக்காரு. வேணும்னா சீமாச்சு நம்பர் வாங்கிக்கலாம் 😉

  ////எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை//

  தூள்… //

  நன்றி

 13. எனக்கும் macroவில சந்தேகம்.
  (பக்கத்து table figureஅ மட்க்குவதுக்குதான்..) சொல்லிகுடு தல…

  இருந்தாலும் தல பொண்ணுன உடனே பல்ல காமிச்சிட்டியே..

  macroஉடன்,
  மேக்ரோமண்டையன்…

 14. மேக்ரோமண்டையன்…
  இதெல்லாம் கொஞ்சம் ஓவர்…
  இது கதைப்பா…

  தனா நான் இல்லைங்கோ…

 15. //மேக்ரோமண்டையன்…
  இதெல்லாம் கொஞ்சம் ஓவர்…
  இது கதைப்பா…

  தனா நான் இல்லைங்கோ..//

  தல கதைனாலும் பல்ல காமிச்சது காமிச்சதுதான்.

  maroஉடன்,
  மேக்ரோமண்டையன்.

 16. //எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை//

  உங்களுக்கு காலேஜ் படிச்சமான்றது நியாபகம் இருக்கா?.

 17. மேக்ரோமண்டையரே,
  //தல கதைனாலும் பல்ல காமிச்சது காமிச்சதுதான்.//

  இந்த கேள்விக்கு தனா சொன்ன பதில்,
  இது வாலிப வயசு… ஒரு இளைஞன் இளைஞிக்கு பல்ல காட்டாமா என்ன பண்ணுவான்… சிறு பிள்ள தனமா இல்ல இருக்கு…

  ////எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை//

  உங்களுக்கு காலேஜ் படிச்சமான்றது நியாபகம் இருக்கா?. //

  எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே!!!

 18. //இது வாலிப வயசு… ஒரு இளைஞன் இளைஞிக்கு பல்ல காட்டாமா என்ன பண்ணுவான்… சிறு பிள்ள தனமா இல்ல இருக்கு… //

  கட்டதுரை பின்னாடி வந்துகிட்டுருக்கார்….

  maroஉடன்,
  மேக்ரோமண்டையன்.

 19. மேக்ரோமண்டையரே,
  //
  கட்டதுரை பின்னாடி வந்துகிட்டுருக்கார்….
  //

  அந்த கட்டதுரைக்கு நேரம் சரியில்லை… சொல்லி வைங்க…

  (மேக்ரோமண்டையர் நீங்க யாருனு நாங்க தெரிஞ்சிக்கலாமா??? )

 20. //(மேக்ரோமண்டையர் நீங்க யாருனு நாங்க தெரிஞ்சிக்கலாமா??? )//

  நான் யார் என்று சொல்வது எங்கள் அனானிகள் சங்கத்துக்கு துரோகம்.

  எங்கள் வேலை … அதான் தமிழ்மணம் புரா தெரிஞ்சதெ.

  //
  அந்த கட்டதுரைக்கு நேரம் சரியில்லை… சொல்லி வைங்க…
  //

  இது கரக்ட்டான வின்னர் பட் டயலாக் இல்ல.

  அந்த கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை.

  இதற்க்கு பதில்,

  சரியா கேட்கால.. கிட்டவந்து சொல்லுங்க….

  maroஉடன்,
  மேக்ரோமண்டையன்.

 21. //
  மேக்ரோமண்டையர் நீங்க யாருனு நாங்க தெரிஞ்சிக்கலாமா???
  //

  தலைவா ஏதோ ஒரு பிகரு காலய்க்குதுனு நினைச்சுகிட்டு பிட்டு போடலாமானு பாக்குறிங்களா…

  ஏமாந்திராதிங்க தலைவா…

  maroஉடன்,
  மேக்ரோமண்டையன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: