நன்றி! நன்றி!! நன்றி!!!

நண்பர்களே!!! இது நமக்கு இந்த வலைப்பூவில் 100வது பதிவு. அது என்னுமோ தெரியல, 100 எப்பவுமே ஒரு க்ரேஸ் தான். பப்ளிக் எக்சாம் எதுலயும் நான் 100 எடுத்ததில்லைனு எங்க வீட்ல ரொம்ப வருத்தப்பட்டிருக்காங்க. எனக்கும் அப்ப கொஞ்சம் இருந்துச்சு. அதுவே இந்த நம்பர் மேல ஒரு க்ரேஸ உருவாக்கிடுச்சுனு நினைக்கிறேன். ஆரம்பிச்சி 5 மாசத்துல (தமிழ்மணத்தில் இணைந்தது ஜீன் 29) 100 பதிவு அதிகம் தான்… இனிமே குறைச்சிக்கிறேன் 🙂

சரி இந்த பதிவ கொஞ்சம் வித்யாசமா செய்யலாம்னு யோசிக்கும் போது, யாராவது கொஞ்சம் பெரிய ஆளுங்களை கூப்பிட்டு நம்ம ப்ளாக் பத்தி எழுத சொல்லலாம்னு பார்த்தா, அது எதுக்கு நம்ம ஆசையா எழுதனும்னு ஆரம்பிச்ச ப்ளாக்ல வேற ஒருத்தர எழுத வைக்கனும்னு தொனுச்சு.

சரி அதுவே கொஞ்சம் ஆழமா யோசிச்சவுடனே ஏன் வெட்டியோட இந்த ப்ளாக்ல இந்த பதிவ பாலாஜிக்கு கொடுக்க கூடாதுனு தோனுச்சு. வெட்டி கேள்விகள் கேட்டு அதுக்கு பாலாஜி பதில் சொன்னா எப்படி இருக்கும்?

வேண்டாம் என்ன இருந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளதால் அது ஒரு தலை பட்சமாகவே இருக்கும். அதனால் பாலாஜியின் நெருங்கிய நண்பர் (அவனுடைய alter ego என்று நண்பர்கள் மத்தியில் கருதப்படும்) தீபனை கேள்விகள் கேட்க சொல்லலாம் என்று தோன்றியது. கேள்வி கேக்கறது ஈஸி பதில் சொல்றது கஷ்டம்னு பாலாஜிய ஃபீல் பண்ண வெச்சிட்டார் அவர்.

தீபன் இதுவரையில் என் ப்ளாக் தவிர வேறு எதுவும் அதிகம் படித்ததில்லை. என்னுடையதிலும் அனைத்தையும் படித்ததில்லை என்றே நினைக்கிறேன். இதுவரை ஒரு கமெண்ட் கூட போட்டதில்லை. தமிழ்மணம், தேன்கூடு எதுவும் தெரியாது. சரி… கேள்வி-பதில் ஆரம்பிக்கிறது. பாலாஜியுடன் நானும் (வெட்டி) பதில் சொல்ல போகிறேன்… ஸ்டார்ட் த மீசிக்

தீ: ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு எதற்கு தோன்றியது?

பா: இந்தியாவிலிருக்கும் போது எனக்கு தமிழில் வலைப்பூக்கள் இருப்பதே தெரியாது. அங்கே பார்த்திருந்தால் நிச்சயமாக துவக்கியிருக்க மாட்டேன். யூ.எஸ் வந்த பிறகு ஏற்பட்ட ஒரு வித தனிமையே எனக்கு வலைப்பூ ஆரம்பிக்க முக்கிய காரணம். வந்த புதிதில் சனி ஞாயிறு நைட் முழுக்க விழித்திருந்து இந்தியாவிலிருக்கும் நண்பர்களுடன் பேசினேன்றாலும் இதுவரை யாருக்கும் தொந்தரவாக இல்லாமல் இப்போது அப்படி மாறியிருப்பதாக தோன்றவே, புது நண்பர்களையும், புது உலகையும் சேர ப்ளாக் ஆரம்பித்தேன்.

வெ: எல்லாரும் எழுதும் போது நாமலும் எழுதிதான் பாக்கலாமே…எப்படி எழுதனாலும் 4 பேர் திட்ட போறாங்க 2 பேர் நல்லா இருக்குனு சொல்ல போறாங்க. அந்த தைரியம் தான் 🙂

தீ: நீ எழுதறது எல்லாமே உண்மையா? இல்லை கற்பனையா?

பா: நகைச்சுவை பதிவுகள் முக்கால்வாசி கற்பனைதான்… கதை முழுக்க முழுக்க கற்பனை.நிகழ்வுகள் பெரும்பாலும் உண்மையே

வெ: எல்லாமே படிச்சா சிரிப்புதான் வருது… இதுல கேட்டகிரி வேற பிரிக்கிறான். எல்லாம் தமிழ்மணம் படிக்கிற எஃபக்ட்.

தீ: ஏன் அதிகமா லவ் ஸ்டோரி எழுதற? எதாவது அனுபவம் இருக்கா?

பா: இந்த கேள்விக்கு விடை உனக்கே தெரியுமென்பதால் விட்டுவிடுகிறேன்.

வெ: மக்களே அந்த கண்றாவியெல்லாம் இருந்தா ஏன் இராத்திரி, பகலா வெட்டியா ப்ளாக் எழுதறேன்?

தீ: இந்த ப்ளாக் மூலமா ஏதாவது நல்ல செய்தி மக்களுக்கு சொல்ற எண்ணமிருக்கா?

பா: கண்டிப்பா! முதலில் என்னை சரி செய்து கொள்கிறேன். கொஞ்சம் பக்குவம் வந்தவுடன் கண்டிப்பாக ஏதாவது நல்ல விஷயங்களை செய்வேன்.

வெ: என்னது நல்ல செய்தியா? பாலைய்யா படத்தையும், கேப்டன் படத்தையும் தனியா பார்க்க வேணாம்னு சொல்லியுருக்கேனே. இதுவே நல்ல விஷயமில்லையா? அதுவுமில்லாம நம்ம சொல்லி எவன் கேப்பான்?

தீ: அடுத்து சுவாரசியமா எழுத ஏதாவது திட்டமிருக்கா?

பா: இஞ்சினயரிங் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொடர் எழுதலாம்னு இருக்கேன். அது போல கலை மற்றும் அறிவியல் படிக்கும் மாணவர்கள் சாப்ட்வேர் துறைக்குள் நுழைய சில டிப்ஸ்கள் அடங்கிய தொடரை எழுதலாம்னு இருக்கேன். மற்றும் எனது அமெரிக்க பயணம் குறித்து ஒரு தொடர் எழுதலான் என்று எண்ணம்.

வெ: இன்னும் லொள்ளு நிறைய எழுதனும். தர்மபுரி பார்த்து ரிவியு எழுதனும். அப்பறம் கோழி தொடர் கொஞ்சம் பாக்கி இருக்கு

தீ: அடிக்கடி தெலுகு படம் பத்தி எழுதறியே காரணமென்ன? கொல்ட்டி கதைக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

பா: பல தடவை சொல்லியாச்சு… பழைய ரூமெட் தெலுகு அதனால் வந்த ஆர்வம். தமிழ் படமும் நிறைய பார்க்கிறேன். ஆனால் முன்ன மாதிரி முதல் நாள் பார்க்க வாய்ப்பில்லாததால் போடுவதில்லை. கொல்ட்டி கதைக்கு வரலாறு எதுவுமில்லை.

வெ: பாலைய்யா, ஜீனியர் என்.டி.ஆர், ரவி தேஜாவோட ட்ரெஸ்ஸிங் சென்சும் டென்சும்தான் முக்கிய காரணம்.

தீ: வெட்டிப்பயல்னு பேர் வெச்சதன் காரணம் என்ன?

பா:எடுத்தவுடனே மக்களை கவரும் என்பதுதான். டுபுக்கு பேற பார்த்து நான் எப்படி உடனே அந்த ப்ளாகிற்கு போனேனோ அந்த மாதிரி யாராவது வர மாட்டாங்களானு ஒரு நப்பாசைதான்.

வெ: ஏன் என் பேருக்கு என்ன குறைச்சல்? பதிவுக்கு தகுந்த மாதிரி பேர் இருக்க வேணாமா?

தீ: எல்லா கதையும் சாப்ட்வேர் கம்பனியே மையமா வெச்சி எழுதறயே? ஏன்? நீ அதுல இருக்கனா?

பா: ஆமாம். அதுதான் ஒரு முக்கிய காரணம். எனக்கு அதுல டயலாக் மட்டும் யோசிச்சா போதும். கதைக்கான களம் அமைப்பது எனக்கு ஈஸியா இருக்கு. இப்ப நிறைய பேர் எழுதறதால நான் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய நிலையிலிருக்கிறேன்.

வெ: பின்ன க்ரைம் எழுதனா கூலா வந்து வெட்டி காமெடில உன்னய அடிச்சக்க முடியாதுனு கூசாம சொல்லிட்டு போறாங்க… நான் என்ன பண்ண?

தீ: எதுக்கு ப்ரொபைலில் பாப்பாய் போட்டோ?

பா: செல்வனுடைய ப்ரோபைல் போட்டோவினால் வந்த தாக்கம்.பாப்பாய் எனக்கு பிடித்த கார்ட்டூன் கேரக்டர்.

வெ: பேருக்கு ஏத்த மாதிரி இருக்குனு ஒரு ஃபீலிங் 😉

தீ: உன் போஸ்ட்ல முக்கால்வாசி காமெடியா இருக்கு. உன் கேரக்டர் உண்மையில் காமெடியா இல்லை சீரியஸா?

பா: எனக்கு தெரிஞ்சி நான் கொஞ்சம் சீரியஸ் டைப் தான்… ஆனா அப்பப்ப காமெடியும் வரும்…

வெ: சீரியஸா??? அட்ரஸ் மாத்தி வந்துட்டயா?

தீ: இந்த ப்ளாக் மூலமா நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் என்று நினைக்கிறேன். இந்த அனுபவம் எப்படியுள்ளது?

பா: ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் எப்படி இருப்பனுகூட தெரியாம, என் குணம் தெரியாம, என் எழுத்துக்காகவே எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கேனா அதுக்கு இவுங்க தான் ஒரு முக்கிய காரணம். உன்னையும் அதிகம் தொந்தரவு செய்யாததற்கு அதுவே காரணம்!!!

வெ: ரொம்ப ஃபீலிங்க இருக்குப்பா… ஃபிரெண்ட்ஸ்… உங்க யார் பேரையும் நான் தனியா சொல்ல விரும்பல… நீங்க இல்லைனா நான் சத்தியமா 100 பதிவு வந்திருக்கவே மாட்டேன்…

தீ: உன் போஸ்ட்லயே உனக்கு மிகவும் பிடித்தது?

பா: சாப்ட்வேர் இஞ்சினயராகலாம் வாங்க, லிப்ட் ப்ளீஸ், கொல்ட்டி

வெ: கவுண்டரும் கடையேழு வள்ளல்களும்!

சரி இதோட கேள்வி பதில நிறுத்திக்கலாம்… அப்பறம் மிச்சத்த இன்னொரு பதிவுல பார்க்கலாம்…

நான் பெரிய எழுத்தாளன் இல்லை. ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதுகிறேன். என் எழுத்து மூலமாக உங்களை ஏதாவது வகையில் வருத்தப்பட வைத்திருந்தால் மன்னிக்கவும்…

என்னுடைய ஒவ்வொரு பதிவும் உங்களின் ஊக்கத்தினால்தான் வருகிறது… உங்கள் அனைவருக்கும் என் நன்றி! நன்றி!! நன்றி!!!

136 பதில்கள்

  1. //வெ: ரொம்ப ஃபீலிங்க இருக்குப்பா… ஃபிரெண்ட்ஸ்… உங்க யார் பேரையும் நான் தனியா சொல்ல விரும்பல… நீங்க இல்லைனா நான் சத்தியமா 100 பதிவு வந்திருக்கவே மாட்டேன்…//
    வெட்டி, சொன்னா பயந்து ஓடிடப் போறாங்களேன்னா?!!!

    இந்தப் பதிவு ரொம்ப ரொம்ப நல்லா வந்திருக்கு :))) தீபன் தான் பாவம், இப்படிக் கலாய்க்கிறீங்க 🙂

    //பின்ன க்ரைம் எழுதனா கூலா வந்து வெட்டி காமெடில உன்னய அடிச்சக்க முடியாதுனு கூசாம சொல்லிட்டு போறாங்க… நான் என்ன பண்ண?//
    அச்சிச்சோ… உங்க க்ரைம் கதை எல்லாம் மிஸ் பண்ணிட்டேனே.. லிங்க் கொடுங்க.. படிச்சி பார்க்கிறேன்..

  2. //வெட்டி, சொன்னா பயந்து ஓடிடப் போறாங்களேன்னா?!!!//
    அது என்ன ஓடிடப்போறாங்க? நீங்களும் எனக்கு ஃபிரெண்ட்தான்… போட்டவுடனே வரல 😉

    //
    இந்தப் பதிவு ரொம்ப ரொம்ப நல்லா வந்திருக்கு :))) தீபன் தான் பாவம், இப்படிக் கலாய்க்கிறீங்க :)//
    ரொம்ப டாங்ஸ்கா…
    தீபன கலாய்ச்சனா? எங்க? எனக்கு அப்படி ஒன்னும் தெரியலையே?

    //அச்சிச்சோ… உங்க க்ரைம் கதை எல்லாம் மிஸ் பண்ணிட்டேனே.. லிங்க் கொடுங்க.. படிச்சி பார்க்கிறேன்//
    நம்ம முகப்புல கதைல லிப்ட் ப்ளீஸ்னு இருக்கும் பாருங்கக்கா… பார்த்துட்டு நீங்களாவது சொல்லுங்க!!!

  3. ithuvaraikkum un post ellame padichirakkanu naan nenaikaran..neram kedaikkum pothu naan marupadiyum “palsu kanna Palasu”la valam vanthuttu solran..tharpothaikku naan padikira ore blog unnodathu thaan.athu thavara “Varutha padatha valibar sangam”la onnu rendu post padichirukkan..
    makkale moonavathu kelvikku seriyaana bathil varalannu nenaikaran…paathukonga

  4. //
    Deepan said…
    ithuvaraikkum un post ellame padichirakkanu naan nenaikaran..neram kedaikkum pothu naan marupadiyum “palsu kanna Palasu”la valam vanthuttu solran..tharpothaikku naan padikira ore blog unnodathu thaan.athu thavara “Varutha padatha valibar sangam”la onnu rendu post padichirukkan..//
    பார்த்தியா உன்னையும் என் ப்ளாக்ல கமெண்ட் போட வெச்சிட்டேன்… அதுவும் என்னோட 100வது பதிவுல…

    //makkale moonavathu kelvikku seriyaana bathil varalannu nenaikaran…paathukonga//
    இதுக்கு மேல என்னடா சொல்ல முடியும்… ஏன்டா அப்படி ஏதாவது இருந்தா சத்தியமா உனக்கு சொல்லுவேன்…

    கவிதை எழுதறதுக்குத்தான் அந்த கன்றாவியெல்லாம் பண்ணனும்… கதைக்கு இல்லை 🙂

  5. Hearty congrats and wishes on your 100 th post vetti, hope to wish on your post number 200 very soon……..Keep up your good work Balaji!!

  6. //தீ: ஏன் அதிகமா லவ் ஸ்டோரி எழுதற? எதாவது அனுபவம் இருக்கா?

    பா: இந்த கேள்விக்கு விடை உனக்கே தெரியுமென்பதால் விட்டுவிடுகிறேன்.//

    தீபனுக்குத் தெரியும் சரி எங்களுக்கும் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்ய்யா

  7. //Divya said…

    Hearty congrats and wishes on your 100 th post vetti, hope to wish on your post number 200 very soon……..Keep up your good work Balaji!!//

    thx a lot divya…
    Hope u will overtake me very soon 😉

  8. //தேவ் | Dev said…

    //தீ: ஏன் அதிகமா லவ் ஸ்டோரி எழுதற? எதாவது அனுபவம் இருக்கா?

    பா: இந்த கேள்விக்கு விடை உனக்கே தெரியுமென்பதால் விட்டுவிடுகிறேன்.//

    தீபனுக்குத் தெரியும் சரி எங்களுக்கும் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்ய்யா//

    ரொம்ப முக்கியம்!!!
    நூறாவது போஸ்ட்க்கு வந்தா, வெட்டி நீ நல்லா எழுதற தொடர்ந்து எழுது அப்படி நாலு நல்ல வார்த்தை பேசறத விட்டுட்டு இது மாதிரி கேள்வியெல்லாம் கேட்டுட்டு…

    அதுக்கு தான் வெட்டி பதில் சொல்லியிருக்காறே பாக்கலையா?

    அந்த கேள்வி தீபனிடமிருந்து வந்ததுதான் ஆச்சர்யம்… அதுக்குதான் நான் அப்படி பதில் சொன்னேன் 😦

  9. பாலாஜி பதிவுலகில் நுழைந்தக் காலத்தில் இருந்து அவரது பதிவுகளைப் படித்து வந்தாலும் சமீப காலமாய் தான் அவரோடு நல்ல பரிச்சயம்…

    பாலாஜியின் பதிவுகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் பத்தி சொல்லணும்ன்னா என்னைத் தெலுங்கு படங்கள் பார்க்க தூண்டியது அவர் பதிவுகள் தான்.. குறிப்பாக பொம்மிரிலு பற்றிய அவர் விமர்சனப் பதிவு அருமையா இருக்கும்…

    பாலாஜி 100 வெறும் ஒரு சின்ன மைல்கல் தான்.. இன்னும் இருக்கிறது ஆகாயம் விரியட்டும் உங்கள் சிறகுகள்.. வாழ்த்துக்கள்

  10. //இதுக்கு மேல என்னடா சொல்ல முடியும்… ஏன்டா அப்படி ஏதாவது இருந்தா சத்தியமா உனக்கு சொல்லுவேன்…
    //
    naanum appudi thaan nambaran…paapom
    //அந்த கேள்வி தீபனிடமிருந்து வந்ததுதான் ஆச்சர்யம்… அதுக்குதான் நான் அப்படி பதில் சொன்னேன் 😦
    //
    intha kelvi naan enakkaga kekkala unnoda bloga padikira makkalla oruthana kettan 🙂

  11. வாழ்த்துக்கள் வெட்டிப்பயல்….மேல மேல எழுதுங்கள், குறிப்பா குழுக்களுக்குள் புகுந்துவிடாமல் எழுதுங்க….நான் பெரிதும் எதிர்பார்த்த கோவி, பொன்ஸ் எல்லாம் குழுக்களினுடே புகுந்துவிட்டார்கள் கடந்த 3-4 மாதங்களில், நீங்களாவது தனித்துவமாய் நிற்கவேண்டும்….காலம் பதில் சொல்லும்.

  12. நூறாவது பதிவுக்கு வாழ்தத்துக்கள் வெட்டி.

  13. //இஞ்சினயரிங் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொடர் எழுதலாம்னு இருக்கேன். அது போல கலை மற்றும் அறிவியல் படிக்கும் மாணவர்கள் சாப்ட்வேர் துறைக்குள் நுழைய சில டிப்ஸ்கள் அடங்கிய தொடரை எழுதலாம்னு இருக்கேன். மற்றும் எனது அமெரிக்க பயணம் குறித்து ஒரு தொடர் எழுதலான் என்று எண்ணம்.
    //

    100 வது பதிவுல நல்ல அறிவிப்பு!
    எழுதுங்க! நிறைய பேருக்கு பயனுள்ளதா இருக்கும்!

    வாழ்த்துக்கள்!

  14. வாழ்த்துக்கள் வெட்டி…. இப்பொழுதுதான் 100வது பதிவா?? நான் ஏதோ 500, 600 இருக்கும் என்றல்லவா நினைத்தேன்…. குறுகிய காலத்தில் இவ்வளவு என்பது ஆச்சரியம்தான்…. தொடர்ந்து எழுதுங்கள்…. இதை உங்கள் எழுத்துக்களின் ரசிகன் என்றும் எழுத்துக்கொள்ளலாம்……..
    என்றும் அன்புடன்
    ஆதவன்

  15. எத்தன 4 , எத்தன 6′ சுமமா பிச்சி உதருன….

    100 Not Out. 10-டுல்க்கரா தூக்கிடு உன்ன பொடலாமுனு நினைக்கிறேன் ..

    All the best . Keep Going.
    HighLights

    1. கோழி
    2. சாப்ட்வெர் ஏன்ங் ஆகலாம் வாங்க
    3. இலவசம்

  16. தல நூறு பதிவு போட்டாச்சா…. வாழ்த்துக்கள்….. அடுத்த நெல்லிக்காய் எப்போ தல????

  17. பதிவைப்படிச்சா அனுபவிக்கனும் ; ஆராயக்கூடதுன்னு டைட்டில் கார்டு போட்டிருக்கிறது எங்களுக்கு மட்டும்தானா? உஙகளுக்கு இல்லையா?

    போகட்டும் இந்த ஒரு தடவை விட்டிர்ரோம்
    100 பதிவுகள் குறைந்த காலத்திற்குள் எழுதியமைக்கு வாழ்த்துக்கள்!
    Chinnappa Doss

  18. 100வது பதிவிற்கு வாழ்த்துகள் பாலாஜி. கேள்வி பதில்களைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன். 🙂

  19. வாழ்த்துக்கள் வெட்டி!!

    பதிவை பொறுமையா அப்புறம் வந்து படிக்கறேன் 😉

  20. VALGA VALAMUDAN….MY HEARTIEST WISHES TO CONTINUE YOUR VALUABLE JOB.

  21. //தீ: வெட்டிப்பயல்னு பேர் வெச்சதன் காரணம் என்ன?
    வெ: ஏன் என் பேருக்கு என்ன குறைச்சல்?//

    இது! இது!

    பாலாஜி சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்! இந்தியக் கிரிக்கெட்டில் சதம் காணமுடியாவிட்டாலும், சீசனுக்கு ஏத்தா மாதிரி நீங்களாச்சும் சதம் அடிச்சீங்களே!

    இந்த வாழ்த்து யாருக்கு பாலாஜிக்கா? வெட்டிப்பையலுக்கா??
    எல்லாம் சரி! இரு சதம் எப்போ? இன்னும் இரண்டு மாதத்தில்? 🙂

  22. சொன்னா மாதிரியே வித்தியாசமான பதிவு போட்டுட்டியே வெட்டி!

    யோவ் என்னையும் நாலு கேள்வி கேக்க சொல்லியிருந்தன்னா சந்தோஷபட்டிருப்பேன். தீபன் ஒருத்தரே கேக்கபோயி ரொம்ப ஈசியா பதில சொல்லிபுட்ட!

    //நான் பெரிய எழுத்தாளன் இல்லை. ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதுகிறேன். என் எழுத்து மூலமாக உங்களை ஏதாவது வகையில் வருத்தப்பட வைத்திருந்தால் மன்னிக்கவும்…//

    எல்லா பதிவாளர்களுக்கு பாரபட்சமே இல்லாம இருக்குற குணம்யா இந்த தன்னடக்கம் உன்கிட்ட எக்ஸ்ட்ராவா ரெண்டு கிலோ அளவுக்கு இருக்கு!!

    உன்னோட இலவச பதிவ நம்ம சாத்தான்குளத்தாரு பாராட்டியிருக்காருப்பா, அவரோட பார்வையில முதல் பரிசு இதுக்குத்தானாம்! ஸ்பெசல் வாழ்த்துக்கள் வெட்டி!

  23. //பாலாஜி 100 வெறும் ஒரு சின்ன மைல்கல் தான்.. இன்னும் இருக்கிறது ஆகாயம் விரியட்டும் உங்கள் சிறகுகள்.. வாழ்த்துக்கள்//

    ஆமாம் தேவ்!!!

    நான் இப்பதான் முதல் அடியே எடுத்து வைத்துள்ளேன் என்பதை நன்கு உணர்கிறேன்…

  24. // deepan said…

    //இதுக்கு மேல என்னடா சொல்ல முடியும்… ஏன்டா அப்படி ஏதாவது இருந்தா சத்தியமா உனக்கு சொல்லுவேன்…
    //
    naanum appudi thaan nambaran…paapom
    //

    நம்பிக்க தான் வாழ்க்கை 😉

    //
    //அந்த கேள்வி தீபனிடமிருந்து வந்ததுதான் ஆச்சர்யம்… அதுக்குதான் நான் அப்படி பதில் சொன்னேன் 😦
    //
    intha kelvi naan enakkaga kekkala unnoda bloga padikira makkalla oruthana kettan 🙂 //
    //
    சரி.. ரைட்டு!!!
    என் ப்ளாக் படிக்கறவங்க அப்படியா என்னயப்பத்தி நினைக்கறாங்க???

    நல்ல வேளை கொல பண்ற மாதிரி கதை எழுதல 😉

  25. // Anonymous said…

    வாழ்த்துக்கள் வெட்டிப்பயல்….மேல மேல எழுதுங்கள், குறிப்பா குழுக்களுக்குள் புகுந்துவிடாமல் எழுதுங்க….நான் பெரிதும் எதிர்பார்த்த எல்லாம் குழுக்களினுடே புகுந்துவிட்டார்கள் கடந்த 3-4 மாதங்களில், நீங்களாவது தனித்துவமாய் நிற்கவேண்டும்….காலம் பதில் சொல்லும். //

    மிக்க நன்றி நண்பரே!!!
    முடிந்த வரை தனித்துவமாய் எழுத முயற்சிக்கிறேன்…

  26. //அனுசுயா said…

    நூறாவது பதிவுக்கு வாழ்தத்துக்கள் வெட்டி//

    மிக்க நன்றி அனுசுயா!!!

  27. //
    100 வது பதிவுல நல்ல அறிவிப்பு!
    எழுதுங்க! நிறைய பேருக்கு பயனுள்ளதா இருக்கும்!

    வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி சிபி…
    கண்டிப்பா எழுதுவேன்!!!
    அது அவரேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்கு தான் இருக்கும் 🙂

  28. //ஆதவன் said…

    வாழ்த்துக்கள் வெட்டி…. இப்பொழுதுதான் 100வது பதிவா?? நான் ஏதோ 500, 600 இருக்கும் என்றல்லவா நினைத்தேன்…. குறுகிய காலத்தில் இவ்வளவு என்பது ஆச்சரியம்தான்…. தொடர்ந்து எழுதுங்கள்…. இதை உங்கள் எழுத்துக்களின் ரசிகன் என்றும் எழுத்துக்கொள்ளலாம்……..
    என்றும் அன்புடன்
    ஆதவன் //

    ஆதவன்,
    பாசத்திற்கு மிக்க நன்றி!!!
    உங்களின் உற்சாகமான சொற்கலே என் எழுத்திற்கு காரணம்…

  29. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாலாஜி!..தீபன் வாட்டுக்கு அமைதியா இருந்தான்..அவனையும் கமென்ட் போட வச்சுட்ட..சூப்பர் டா..!

    நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு அது சும்மா தூங்குது!..எப்பவாச்சு எதாவது எழுதி அது யாருக்குமே தெரியாம போற‌ என்ன மாதிரி ஆளுங்க மத்தியில, “வெட்டிப்பயல்” கண்டிப்பா நூறு பதிவு ஒரு மைல்கல் தான்..

    அது எல்லாம் இருக்க‌ட்டும் அது என்ன‌டா அது 3வ‌து கேள்விக்கு
    //தீ: ஏன் அதிகமா லவ் ஸ்டோரி எழுதற? எதாவது அனுபவம் இருக்கா?

    பா: இந்த கேள்விக்கு விடை உனக்கே தெரியுமென்பதால் விட்டுவிடுகிறேன்//

    டிப்லோமேட்டிக் ஆன்ஸ‌ர் ப‌ணணி எஸ் ஆக‌லாம்ன்னு நினைக்காத‌ அப்பு..!
    வ‌லையுல‌க‌ ந‌ண்ப‌ர்க்ள் இந்த‌ கேள்விக்கு ப‌தில் தெரிய‌ உத‌வுவார்க‌ள் என‌ முழு ந‌ம்பிக்கையுட‌ன் அதை அவ‌ர்க‌ளிட‌மே விட்டுவிடுகிறேன்..

    நெருப்பு இல்லாம‌ல் புகையா?
    ச‌ட்டியில் இல்லாம‌ல் ஆப்பையிலா? கேட்டு சொல்லுங்க‌ பாஸ்!!

    நான்,தீப‌ன் எல்லாம் கேட்டா இப்ப‌டித்தான், “உன‌க்கு தெரியாதா டா..எதாச்சும் இருந்தா சொல்ல‌மாட்டேனா அப்ப‌டின்னு சொல்லி ச‌மாளிச்சுடுவான்…”

    நார‌ய‌ணா!!நார‌ய‌ணா!!

    O.K டா, மேலும் எழுத‌வும்…வாழ்த்துக்க‌ள்..காலையில‌ வ‌ந்த‌வுட‌னே ஒரு க‌மென்ட் போட்டாச்சு..இன்னைக்கு ஒரு ந‌ல்ல‌ விச‌ய‌ம் செஞ்சாச்சு!!அப்பாட‌

  30. //சுந்தர் said…

    எத்தன 4 , எத்தன 6′ சுமமா பிச்சி உதருன….

    100 Not Out. 10-டுல்க்கரா தூக்கிடு உன்ன பொடலாமுனு நினைக்கிறேன் ..

    All the best . Keep Going.
    HighLights

    1. கோழி
    2. சாப்ட்வெர் ஏன்ங் ஆகலாம் வாங்க
    3. இலவசம் //
    மிக்க நன்றி சுந்தர்…
    உங்களுடைய இந்த பின்னூட்டங்கள் தான் என்னை எழுத தூண்டுகின்றன…

  31. //அமுதன் said…

    தல நூறு பதிவு போட்டாச்சா…. வாழ்த்துக்கள்….. அடுத்த நெல்லிக்காய் எப்போ தல???? //

    ரொம்ப நன்றிப்பா!!!
    அடுத்த நெல்லிக்காய் விரைவில் வரும்…
    இன்னைக்கு எழுதறது ரொம்ப கஷ்டம்பா… இப்பவே கண்ணெல்லாம் வலிக்குது…

  32. // Anonymous said…

    பதிவைப்படிச்சா அனுபவிக்கனும் ; ஆராயக்கூடதுன்னு டைட்டில் கார்டு போட்டிருக்கிறது எங்களுக்கு மட்டும்தானா? உஙகளுக்கு இல்லையா?

    போகட்டும் இந்த ஒரு தடவை விட்டிர்ரோம்
    100 பதிவுகள் குறைந்த காலத்திற்குள் எழுதியமைக்கு வாழ்த்துக்கள்!
    Chinnappa Doss //

    அது எனக்கு இல்லைப்பா!!! நான் இந்த ப்ளாக படிக்கறதே இல்லை 😉

    மிக்க நன்றி சின்னப்பதாஸ்!!!

  33. //குமரன் (Kumaran) said…

    100வது பதிவிற்கு வாழ்த்துகள் பாலாஜி. கேள்வி பதில்களைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன். 🙂 //

    மிக்க நன்றி குமரன்…

    சீக்கிரம் வாங்க 😉

  34. நூறடித்ததற்கு வாழ்த்துக்கள்..சிலர் எண்ணிக்கை முக்கியமல்ல என்று சொல்லக்கூடும்.இருந்தாலும் எண்ணிக்கை என்பது தொடர்ந்து இயங்குதலின் அடையாளம்.துருப்பிடித்துப் போவதைக் காட்டிலும் தேய்ந்துபோவது மேல்தானே..?

  35. பாலாஜி,

    //இஞ்சினயரிங் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொடர் எழுதலாம்னு இருக்கேன். அது போல கலை மற்றும் அறிவியல் படிக்கும் மாணவர்கள் சாப்ட்வேர் துறைக்குள் நுழைய சில டிப்ஸ்கள் அடங்கிய தொடரை எழுதலாம்னு இருக்கேன்.//

    நல்ல விசயம்…

    வாழ்த்துக்கள்!!!

    100க்கு வாழ்த்துக்கள்!!

  36. // “நன்றி! நன்றி!! நன்றி!!!”//

    யூ ஆர் வெல்கம்

    இட்ஸ் ஓக்கே

    நோ மென்ஷன் ப்ளீஸ்.

    100 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.

  37. //கப்பி பய said…

    வாழ்த்துக்கள் வெட்டி!!
    //
    மிக்க நன்றி கப்பி…
    மக்கள்ஸ் என்னை கதை எழுத தூண்டியவர் இவர்தான் 🙂

    // பதிவை பொறுமையா அப்புறம் வந்து படிக்கறேன் 😉 //
    ரைட்டு!!!

  38. // Anonymous said…

    VALGA VALAMUDAN….MY HEARTIEST WISHES TO CONTINUE YOUR VALUABLE JOB. //

    Thx a lot!!!

  39. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

    //தீ: வெட்டிப்பயல்னு பேர் வெச்சதன் காரணம் என்ன?
    வெ: ஏன் என் பேருக்கு என்ன குறைச்சல்?//

    இது! இது!

    பாலாஜி சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்! இந்தியக் கிரிக்கெட்டில் சதம் காணமுடியாவிட்டாலும், சீசனுக்கு ஏத்தா மாதிரி நீங்களாச்சும் சதம் அடிச்சீங்களே!
    //
    மிக்க நன்றி KRS!!!

    // இந்த வாழ்த்து யாருக்கு பாலாஜிக்கா? வெட்டிப்பையலுக்கா??
    //
    இருவருக்குமேதான்!!! பாலாஜி தன்னுடைய நேரத்தையும், தூக்கத்தையும் விட்டு கொடக்கலனா வெட்டியால இயங்க முடியாது 🙂

    //
    எல்லாம் சரி! இரு சதம் எப்போ? இன்னும் இரண்டு மாதத்தில்? 🙂 //
    ஆஹா!!! அதுக்கு இன்னும் ரொம்ப நாள் ஆகும்னு நினைக்கிறேன்!!!

  40. //தம்பி said…

    சொன்னா மாதிரியே வித்தியாசமான பதிவு போட்டுட்டியே வெட்டி!
    //
    மிக்க நன்றி தம்பி!!!

    //
    யோவ் என்னையும் நாலு கேள்வி கேக்க சொல்லியிருந்தன்னா சந்தோஷபட்டிருப்பேன். தீபன் ஒருத்தரே கேக்கபோயி ரொம்ப ஈசியா பதில சொல்லிபுட்ட!
    //
    சரி நீயும் கேளு… அதை இன்னொரு முக்கியமான சமயத்துல போட்டுடுவோம் 😉

    //

    //நான் பெரிய எழுத்தாளன் இல்லை. ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதுகிறேன். என் எழுத்து மூலமாக உங்களை ஏதாவது வகையில் வருத்தப்பட வைத்திருந்தால் மன்னிக்கவும்…//

    எல்லா பதிவாளர்களுக்கு பாரபட்சமே இல்லாம இருக்குற குணம்யா இந்த தன்னடக்கம் உன்கிட்ட எக்ஸ்ட்ராவா ரெண்டு கிலோ அளவுக்கு இருக்கு!!
    //
    :-))

    //
    உன்னோட இலவச பதிவ நம்ம சாத்தான்குளத்தாரு பாராட்டியிருக்காருப்பா, அவரோட பார்வையில முதல் பரிசு இதுக்குத்தானாம்! ஸ்பெசல் வாழ்த்துக்கள் வெட்டி! //
    ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா!!! வலைப்பதிவர்களும் நமக்கு முதல் இடம்தான் கொடுத்துருக்காங்க!!! அதுக்குள்ள நானே ஏதோ கூட்டம் சேர்த்து வோட்டு வாங்கன மாதிரி பேசிக்கிறாங்க!!! என்ன பண்ண? என் பதிவுக்கு நானே ரொம்ப யோசிச்சிதான் ஓட்டு போட்டேன். சொன்னா யார் நம்புவாங்க 😦

  41. //
    தமிழ்ப்பிரியன் said…

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாலாஜி!..தீபன் வாட்டுக்கு அமைதியா இருந்தான்..அவனையும் கமென்ட் போட வச்சுட்ட..சூப்பர் டா..!
    //
    யாம் பெற்ற இன்பம்(?) பெருக இவ்வையகம் 😉

    // நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு அது சும்மா தூங்குது!..எப்பவாச்சு எதாவது எழுதி அது யாருக்குமே தெரியாம போற‌ என்ன மாதிரி ஆளுங்க மத்தியில, “வெட்டிப்பயல்” கண்டிப்பா நூறு பதிவு ஒரு மைல்கல் தான்..
    //
    மிக்க நன்றி சங்கர்!!!

    //
    அது எல்லாம் இருக்க‌ட்டும் அது என்ன‌டா அது 3வ‌து கேள்விக்கு
    //தீ: ஏன் அதிகமா லவ் ஸ்டோரி எழுதற? எதாவது அனுபவம் இருக்கா?

    பா: இந்த கேள்விக்கு விடை உனக்கே தெரியுமென்பதால் விட்டுவிடுகிறேன்//

    டிப்லோமேட்டிக் ஆன்ஸ‌ர் ப‌ணணி எஸ் ஆக‌லாம்ன்னு நினைக்காத‌ அப்பு..!
    வ‌லையுல‌க‌ ந‌ண்ப‌ர்க்ள் இந்த‌ கேள்விக்கு ப‌தில் தெரிய‌ உத‌வுவார்க‌ள் என‌ முழு ந‌ம்பிக்கையுட‌ன் அதை அவ‌ர்க‌ளிட‌மே விட்டுவிடுகிறேன்..
    //

    ஏம்பா இந்த கொல வெறி??? வெட்டிதான் அதுக்கு பதில் சொல்லியாச்சே!!!

    // நெருப்பு இல்லாம‌ல் புகையா?
    ச‌ட்டியில் இல்லாம‌ல் ஆப்பையிலா? கேட்டு சொல்லுங்க‌ பாஸ்!!
    //
    எங்க வீட்டுக்கு முன்னாடி ஒரே புகையா இரூக்கு!!! நெருப்பத்தான் காணோம் 🙂 (பனிய சொன்னேன்பா)

    // நான்,தீப‌ன் எல்லாம் கேட்டா இப்ப‌டித்தான், “உன‌க்கு தெரியாதா டா..எதாச்சும் இருந்தா சொல்ல‌மாட்டேனா அப்ப‌டின்னு சொல்லி ச‌மாளிச்சுடுவான்…”
    //
    அதானடா உண்மை… உங்களுக்கு தெரியாமலா??? ஏண்டா ஒன்னும் இல்லாத மேட்டர இப்படி ஏத்திவிடறீங்க?

    //
    நார‌ய‌ணா!!நார‌ய‌ணா!!
    //
    நாராயணா!!!

    //
    O.K டா, மேலும் எழுத‌வும்…வாழ்த்துக்க‌ள்..காலையில‌ வ‌ந்த‌வுட‌னே ஒரு க‌மென்ட் போட்டாச்சு..இன்னைக்கு ஒரு ந‌ல்ல‌ விச‌ய‌ம் செஞ்சாச்சு!!அப்பாட‌
    //

    அஹா!!! இந்த நாள் இனிய நாள்!!!

  42. கலக்கல் பதிவு வெட்டி… 🙂

    எங்களையும் நாலு கேள்வி கேட்கவிட்டிருந்தா நாங்களும் உங்களுக்கு நன்றி சொல்லியிருப்போம்ல 😉

  43. //ஆழியூரான் said…

    நூறடித்ததற்கு வாழ்த்துக்கள்..சிலர் எண்ணிக்கை முக்கியமல்ல என்று சொல்லக்கூடும்.இருந்தாலும் எண்ணிக்கை என்பது தொடர்ந்து இயங்குதலின் அடையாளம்.துருப்பிடித்துப் போவதைக் காட்டிலும் தேய்ந்துபோவது மேல்தானே..? //
    மிக்க நன்றி ஆழியூராரே!!!

    அருமையா சொன்னீங்க!!! இந்த எண்ணிக்கை ஒரு புத்துணர்ச்சியை தருகிறது…

  44. //Sivabalan said…

    பாலாஜி,

    //இஞ்சினயரிங் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொடர் எழுதலாம்னு இருக்கேன். அது போல கலை மற்றும் அறிவியல் படிக்கும் மாணவர்கள் சாப்ட்வேர் துறைக்குள் நுழைய சில டிப்ஸ்கள் அடங்கிய தொடரை எழுதலாம்னு இருக்கேன்.//

    நல்ல விசயம்…

    வாழ்த்துக்கள்!!!

    100க்கு வாழ்த்துக்கள்!! //

    மிக்க நன்றி சிபா…

    கண்டிப்பா அந்த தொடரை எழுதுவேன்…

  45. //இலவசக்கொத்தனார் said…

    // “நன்றி! நன்றி!! நன்றி!!!”//

    யூ ஆர் வெல்கம்

    இட்ஸ் ஓக்கே

    நோ மென்ஷன் ப்ளீஸ்.

    100 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள். //

    மிக்க நன்றி கொத்ஸ்…

    எல்லாம் நீங்க கொடுக்கற உற்சாகம்தான் 🙂

  46. //கப்பி பய said…

    கலக்கல் பதிவு வெட்டி… 🙂
    //
    மிக்க நன்றி கப்பி…

    // எங்களையும் நாலு கேள்வி கேட்கவிட்டிருந்தா நாங்களும் உங்களுக்கு நன்றி சொல்லியிருப்போம்ல 😉 //

    சரிப்பா!!! அடுத்த ஏதாவது ஸ்பஷல் அக்கேஷன்ல நீயும் தம்பியும் கேளுங்க… அதுக்கு நான் பதில் சொல்றேன் 😉

  47. பாலாஜி,

    இந்த கேள்வி-பதில் பாணி பதிவு அருமையா இருக்குப்பா….

    நூறு அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்….

    🙂

  48. //ராம் said…

    பாலாஜி,

    இந்த கேள்வி-பதில் பாணி பதிவு அருமையா இருக்குப்பா….

    நூறு அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்….

    🙂 //
    மிக்க நன்றி ராயல்!!! 😉

  49. //ராம் said…

    பாலாஜி,

    இன்னும் உன்னோட சில கதைகளே நான் படிக்கலேப்பா…… :((( //

    ஆஹா…
    கொல்ட்டி மட்டும் படிங்க… அப்பறம் உங்களுக்கு பிடிச்சிருந்தா தூறல் படிங்க…

    கொல்ட்டி பிடிக்கலைனா பிரிவும், தீயினால் சுட்ட புண்ணும் படிங்க 😉

  50. nalvaazthukkaL vetti,

    enakku kooda unga kathaihaLLa pudiccathu ‘lift please’thaan

    arumaiyaan yosanai. nerthiyaana kathaiyamaippu. miha arumaiyaan aRiviyal seharippu. irandu muRai paditha pinnarthaan kathai puriyuthu.

  51. இன்னிக்கு நான் 50

  52. வாழ்துக்கள் வெட்டி,

    “வெட்டிப் பயலாகவே” இருங்கள் முடிந்தவரை. அதாவது நகைச்சுவையாக.

  53. வாழ்த்துகள்!!

    KEEP GOING!

  54. // சுப்பு said…

    வாழ்த்துக்கள் வெட்டி,
    //
    மிக்க நன்றி சுப்பு

    // “வெட்டிப் பயலாகவே” இருங்கள் முடிந்தவரை. அதாவது நகைச்சுவையாக.
    //
    நிச்சயமாக நகைச்சுவை பதிவு எழுத முயல்வேன்… நீங்களா சிரிப்பு வரலைனாலும் சிரிச்சிக்கனும் 😉

  55. //SK said…

    வாழ்த்துகள்!!

    KEEP GOING! //

    மிக்க நன்றி SK ஐயா…

  56. வாழ்த்துகள். நூரு ஆயிரமாகி, ஆயிரம் லட்சமாகி, லட்சம் கோடியாகி, கோடி பலகோடியாக வாழ்த்துக்கள் !

    – உன்மை

  57. //பப்ளிக் எக்சாம் எதுலயும் நான் 100 எடுத்ததில்லைனு எங்க வீட்ல ரொம்ப வருத்தப்பட்டிருக்காங்க. //

    பப்ளிக் எக்ஸாம்ல எடுக்கலை சரி. மத்த எக்ஸாம்ல எல்லாம் எடுத்திருக்கீங்க தானே. ஆகா. எவ்வளவு நாசூக்கா சொல்றீங்க? சூப்பர்.

    அஞ்சு மாசத்துல 100 பதிவுகள் தானா? என்னாங்க பண்றீங்க. அவனவன் கல்யாணம் ஆகி குழந்தை பொறந்த பின்னாடியே 3/4 மாசத்துல 100 பதிவு போடறான். நீங்க என்னடான்னா பாலாஜி, வெட்டின்னு ரெண்டு பேரு விடலைப்பசங்களா இருந்துக்கிட்டு 5 மாசமா சதமடிக்க? ஒன்னும் சொல்றதுக்கில்லை.

    :-))

    கேள்வி பதில்கள் நல்லா இருக்கு பாலாஜி.

  58. //குமரன் (Kumaran) said…

    //பப்ளிக் எக்சாம் எதுலயும் நான் 100 எடுத்ததில்லைனு எங்க வீட்ல ரொம்ப வருத்தப்பட்டிருக்காங்க. //

    பப்ளிக் எக்ஸாம்ல எடுக்கலை சரி. மத்த எக்ஸாம்ல எல்லாம் எடுத்திருக்கீங்க தானே. ஆகா. எவ்வளவு நாசூக்கா சொல்றீங்க? சூப்பர்.
    //
    அதுக்காக இல்லை. உண்மையிலே அந்த ஆதங்கம் இருக்கு. பத்தாவது கணக்குல 99 பார்த்தவுடனே நான் அழுதது இன்னும் ஞாபகம் இருக்கு. Graphla Parabola சரியா வரையாததால ஒரு மார்க் போயிருக்கும்னு மனச தேத்திக்கிட்டேன். பன்னிரெண்டாவதிலும் அப்படித்தான்… ஒரு ஒன் மார்க் தப்பாயிடுச்சு 😦

    // அஞ்சு மாசத்துல 100 பதிவுகள் தானா? என்னாங்க பண்றீங்க. அவனவன் கல்யாணம் ஆகி குழந்தை பொறந்த பின்னாடியே 3/4 மாசத்துல 100 பதிவு போடறான். நீங்க என்னடான்னா பாலாஜி, வெட்டின்னு ரெண்டு பேரு விடலைப்பசங்களா இருந்துக்கிட்டு 5 மாசமா சதமடிக்க? ஒன்னும் சொல்றதுக்கில்லை.

    :-))
    //
    இதுக்கே நிறைய பேர் திட்டிக்கிட்டு இருக்காங்க 🙂

    // கேள்வி பதில்கள் நல்லா இருக்கு பாலாஜி. //
    ரொம்ப நன்றி குமரன்…

  59. // Anonymous said…

    வாழ்த்துகள். நூரு ஆயிரமாகி, ஆயிரம் லட்சமாகி, லட்சம் கோடியாகி, கோடி பலகோடியாக வாழ்த்துக்கள் !

    – உண்மை //

    ஆஹா உண்மை!!! உங்க பாசத்துக்கு நான் என்ன கைமாறு பண்ண போறேன்… வேணும்னா இன்னும் ஒரு நூறு பதிவு போடறேன் 😉

  60. \”
    thx a lot divya…
    Hope u will overtake me very soon ;)\”

    வெட்டி, குருவை மிஞ்சும் சிஷ்யை நானில்லை!

    உங்கள் 100வது பதிப்பினை வாழ்த்தும் அதே தருணத்தில், உங்கள் பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்த சில பதிவுகளை சுட்டிக் காட்ட விரும்புகிறன்.

    1.தொடர் கதை -பிரிவு, அந்த கதையில் வரும் கதாநாயகியின் பெயர் என் பெயராக இருந்ததாலோ என்னவோ அந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது, கதையில் வரும் உரையாடல்கள் அனைத்தும் மிகவும் இயல்பாக இருந்தன, என் மனமார்ந்த பாராடுக்கள்.

    2.தூறல்-கதை
    இந்த கதையில் கதாநாயகனின் மனபாவத்தை, இந்த வரிகள்’ச்சீ என்ன பொண்ணு இவ… யாராவது பார்த்தா… உடனே சிரிக்கணுமா???’ எவ்வளவு அருமையாக உணர்த்துகிறது,சோகமான முடியுதான் கதைக்கு என்றாலும், அது அந்த கதைக்கு இன்னும் மெருகூட்டுவதாகவே அமைத்திருந்தது அருமை.

    உங்கள் அத்தனை பதிவுகளும் ஒவ்வொரு விதத்தில் சுவாரஸ்யமாக இருக்கிறது,
    இன்னும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் வெட்டி!!

  61. //Divya said…

    \”
    thx a lot divya…
    Hope u will overtake me very soon ;)\”

    வெட்டி, குருவை மிஞ்சும் சிஷ்யை நானில்லை!
    //
    கவுத்துட்டீங்களே திவ்யா!!!
    நானே கத்துக்குட்டி… இங்க நல்லா எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. நாம இப்பதான் L.K.G 🙂

    //
    உங்கள் 100வது பதிப்பினை வாழ்த்தும் அதே தருணத்தில், உங்கள் பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்த சில பதிவுகளை சுட்டிக் காட்ட விரும்புகிறன்.

    1.தொடர் கதை -பிரிவு, அந்த கதையில் வரும் கதாநாயகியின் பெயர் என் பெயராக இருந்ததாலோ என்னவோ அந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது, கதையில் வரும் உரையாடல்கள் அனைத்தும் மிகவும் இயல்பாக இருந்தன, என் மனமார்ந்த பாராடுக்கள்.
    //
    அந்த பேர் காதல் கொண்டேன் பார்த்த அன்னிக்கு நைட் எழுதனது. அதுல வர சோனியா அகர்வால் கேரக்டர் ரொம்ப பிடிச்சி போய் அந்த பேர் வைத்தேன் 🙂

    // உங்கள் அத்தனை பதிவுகளும் ஒவ்வொரு விதத்தில் சுவாரஸ்யமாக இருக்கிறது,
    இன்னும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் வெட்டி!!
    //
    பாராட்டுகளுக்கு நன்றி!!!
    நீங்களும் இப்ப கலக்கிட்டுதான் இருக்கீங்க 🙂

  62. 100 வது பதிவு வாழ்த்துக்கள் வெட்டி…அதிலும் கேள்வி பதில் வேற போட்டு கலாசிட்டீங்க… 🙂

  63. //Syam said…

    100 வது பதிவு வாழ்த்துக்கள் வெட்டி…அதிலும் கேள்வி பதில் வேற போட்டு கலாசிட்டீங்க… 🙂 //

    நாட்டாமை,
    உங்களுக்கு ஆயுசு 100. இப்பதான் என்னடா நம்ம நாட்டமைய கானோமேனு யோசிச்சிட்டு இருந்தேன். அடுத்த செகண்ட் உங்க கமெண்ட் இருக்கு.

    மிக்க நன்றி!!!

  64. //கவுண்டரும் கடையேழு வள்ளல்களும்!//

    எனக்கு புடிச்சதும் இதேதான்…இன்னும் அடிக்கடி அத போய் படிப்பேன் 🙂

  65. //Syam said…

    //கவுண்டரும் கடையேழு வள்ளல்களும்!//

    எனக்கு புடிச்சதும் இதேதான்…இன்னும் அடிக்கடி அத போய் படிப்பேன் 🙂 //

    பார்த்தீங்களா உங்களுக்கும் எனக்கும் டேஸ்ட் ஒரே மாதிரி இருக்கு 🙂

    எனக்கு அது பிடிச்சதுக்கு மெயின் காரணம் என்னனா, அது எந்த படத்துல இருந்தும் காப்பி அடிக்காத மாதிரி ஒரு ஃபீலிங்…

    கம்ப்யூட்டர்காரன் என்ன இருந்தாலும் காப்பி தானே 😉

  66. //இப்பதான் என்னடா நம்ம நாட்டமைய கானோமேனு யோசிச்சிட்டு இருந்தேன்//

    அது என்னமோ உங்களுது மட்டும் blogrolling ல updated னு காட்ட மாட்டேங்குது 🙂

  67. //அது அவரேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்கு தான் இருக்கும் //

    பாலாஜி! அதுதான் வேணும்!
    முக்கியமா அவங்களுக்குத்தான் நிறைய கைடன்ஸ் தேவை!

    எல்லா வகுப்பிலும் டாப் ஸ்டூடெண்ட்ஸ் இருப்பாங்க! அவங்க எல்லாம் கேம்பஸ்லயே போயிடுவாங்க!

    கடைசில இருக்குற சிலர் கவலையே பட மாட்டாங்க! கைவசம் குடும்ப பிஸினஸ் இருக்கும்!

    இந்த ஆவரேஜ் நிலைமைதான் மோசம்!
    😦

  68. //Syam said…

    //இப்பதான் என்னடா நம்ம நாட்டமைய கானோமேனு யோசிச்சிட்டு இருந்தேன்//

    அது என்னமோ உங்களுது மட்டும் blogrolling ல updated னு காட்ட மாட்டேங்குது 🙂 //
    ஓ!!! அப்படி இல்லாமலே வந்துருக்கீங்களே!!!

    ரொம்ப டாங்க்ஸிங்கோ!!!

  69. /* // Anonymous said…

    வாழ்த்துகள். நூரு ஆயிரமாகி, ஆயிரம் லட்சமாகி, லட்சம் கோடியாகி, கோடி பலகோடியாக வாழ்த்துக்கள் !

    – உண்மை //

    ஆஹா உண்மை!!! உங்க பாசத்துக்கு நான் என்ன கைமாறு பண்ண போறேன்… வேணும்னா இன்னும் ஒரு நூறு பதிவு போடறேன் 😉

    */

    Ore nalla nuru pathivu poda mudiyuma ?

    – Unmai

  70. //நாமக்கல் சிபி @15516963 said…

    //அது அவரேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்கு தான் இருக்கும் //

    பாலாஜி! அதுதான் வேணும்!
    முக்கியமா அவங்களுக்குத்தான் நிறைய கைடன்ஸ் தேவை!

    எல்லா வகுப்பிலும் டாப் ஸ்டூடெண்ட்ஸ் இருப்பாங்க! அவங்க எல்லாம் கேம்பஸ்லயே போயிடுவாங்க!

    கடைசில இருக்குற சிலர் கவலையே பட மாட்டாங்க! கைவசம் குடும்ப பிஸினஸ் இருக்கும்!

    இந்த ஆவரேஜ் நிலைமைதான் மோசம்!
    😦 //

    சிபி,
    நீங்க சொல்றது ரொம்பவும் சரி!!!
    அதனால் தான் என்னுடைய பழைய தொடர்லயும் நான் அவரேஜ் மற்றும் பிலோ ஆவரேஜையே டார்கடாக வைத்து எழுதினேன்…

    நம்ம எழுதறது நம்ம புத்திசாலித்தனத்த காட்ட வேண்டும் என்பதைவிட மக்களுக்கு உதவ வேண்டும்… கண்டிப்பா சீக்கிரம் ஆரம்பிக்கிறேன்…

  71. வெட்டி

    வாயுக… வளர்க….

    வெட்டியின் இந்த அரும்பணியை இந்நேர்த்ல நெனச்சிக்கறதோட என்னோட சார்பா ஒரு பிளேடு மாலையை…. சே ஒரு மலர் மாலையை வெட்டிக்கு அணிவிக்கிறேன்…

    எல்லாம் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க……

  72. //கணக்குல 99 பார்த்தவுடனே நான் அழுதது இன்னும் ஞாபகம் இருக்கு//

    என்னங்க இது ஒரு மார்க் கம்மியா வாங்குனதுக்கா கவலைப்பட்டீங்க!

    நான் +2ல் 2 மார்க் கம்மியானதுக்கே கவலைப்படாம ஜாலியா இருந்தேன்னு எங்க கணக்கு வாத்தியார் திட்டுனார்.

    ஏன்னா நான் கம்மின்னு சொன்னது ரெண்டே மார்க் வாங்கியிருந்த இன்னொரு பையனைவிட 2 மார்க் கம்மி!

  73. //Ore nalla nuru pathivu poda mudiyuma ?

    – Unmai//

    உண்மை,
    இந்த பதிவுல வந்துதான் இப்படி மானத்த வாங்கனுமா?

    பதிவு போடறேன்… நல்ல பதிவானு நீங்க தான் சொல்லனும் 🙂

  74. //அரை பிளேடு said…

    வெட்டி

    வாயுக… வளர்க….

    வெட்டியின் இந்த அரும்பணியை இந்நேர்த்ல நெனச்சிக்கறதோட என்னோட சார்பா ஒரு பிளேடு மாலையை…. சே ஒரு மலர் மாலையை வெட்டிக்கு அணிவிக்கிறேன்…

    எல்லாம் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க…… //

    பிளேடு நண்பா,
    மிக்க நன்றி!!!

  75. //நாமக்கல் சிபி @15516963 said…

    //கணக்குல 99 பார்த்தவுடனே நான் அழுதது இன்னும் ஞாபகம் இருக்கு//

    என்னங்க இது ஒரு மார்க் கம்மியா வாங்குனதுக்கா கவலைப்பட்டீங்க!
    //
    அது பத்தாவது படிக்கும் போதுங்க…

    // நான் +2ல் 2 மார்க் கம்மியானதுக்கே கவலைப்படாம ஜாலியா இருந்தேன்னு எங்க கணக்கு வாத்தியார் திட்டுனார்.

    ஏன்னா நான் கம்மின்னு சொன்னது ரெண்டே மார்க் வாங்கியிருந்த இன்னொரு பையனைவிட 2 மார்க் கம்மி! //
    காலேஜ் போனவுடனே மாறியாச்சு… ஒன் மார்க் ஒன்னு தெரிஞ்சாலுமே ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். எவண்டா அவன் Question paper எடுத்தவன். நமக்கே தெரியர மாதிரி எடுத்துருக்கானேனு கோபம் வரும்னா பார்த்துக்கோங்களேன் 😉

  76. //Zia said…

    nalvaazthukkaL vetti,
    //
    மிக்க நன்றி zia… (Somehow I missed ur comment… sorry for that)

    // enakku kooda unga kathaihaLLa pudiccathu ‘lift please’thaan

    arumaiyaan yosanai. nerthiyaana kathaiyamaippu. miha arumaiyaan aRiviyal seharippu. irandu muRai paditha pinnarthaan kathai puriyuthu. //
    ஆஹா.. ரொம்ப நன்றிங்க… அந்த கதை நிறைய பேருக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் அது முதல முறை படித்தால் புரியாததே!!!

    ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது 🙂

  77. //நம்ம முகப்புல கதைல லிப்ட் ப்ளீஸ்னு இருக்கும் பாருங்கக்கா… பார்த்துட்டு நீங்களாவது சொல்லுங்க!!!//

    🙂

  78. 100 vathu postku ennodavalthukkal..ithukku comments 100 a thandum!

    supera eludhareenga! continue pannunga!

  79. vetti, 5 maasathula 100 padiva? kalakkal vetti…

    ellarum sonnadu thaan. unga ella postum enakkum romba pidikkum.
    namakku eppavum post-la comedy irukkanum. nalla sirikkanum 🙂

    innum neraya eludunga.

    Congrats and Keep UP the good work 🙂

    -Arun

  80. வாழ்துக்கள் வெட்டிப்பயலே.. பள்ளிக்கூடத்துல வாங்காத நம்பரை இங்கே வாங்கிட்டீங்க

  81. நூறு நூறாய் மேலும் மேலும் எழுதணும்.

    வாழ்த்து(க்)கள்.

  82. //Udhayakumar said…

    //நம்ம முகப்புல கதைல லிப்ட் ப்ளீஸ்னு இருக்கும் பாருங்கக்கா… பார்த்துட்டு நீங்களாவது சொல்லுங்க!!!//

    :-)//

    இதுக்கு என்ன அர்த்தம்???

  83. //Dreamzz said…

    100 vathu postku ennodavalthukkal..ithukku comments 100 a thandum!
    //
    :-))

    //supera eludhareenga! continue pannunga!//
    மிக்க நன்றி ட்ரீம்ஸ்…

  84. //Arunkumar said…

    vetti, 5 maasathula 100 padiva? kalakkal vetti…

    ellarum sonnadu thaan. unga ella postum enakkum romba pidikkum.
    namakku eppavum post-la comedy irukkanum. nalla sirikkanum 🙂

    innum neraya eludunga.

    Congrats and Keep UP the good work :)//
    மிக்க நன்றி அருண்!!!
    முடிஞ்ச அளவுக்கு நகைச்சுவையா எழுத முயற்சிக்கிறேன் 🙂

  85. //மு.கார்த்திகேயன் said…

    வாழ்துக்கள் வெட்டிப்பயலே..
    //
    நான் நூறு போட்டதற்கு நானூறு போட்டவரிடமிருந்து வாழ்த்து பெறுவதற்கு மிக்க மகிழ்ச்சி!!!

    //
    பள்ளிக்கூடத்துல வாங்காத நம்பரை இங்கே வாங்கிட்டீங்க//
    :-))

  86. //துளசி கோபால் said…

    நூறு நூறாய் மேலும் மேலும் எழுதணும்.

    வாழ்த்து(க்)கள்.//

    மிக்க நன்றி டீச்சர்…

  87. ரொம்ப நல்லா இருக்கு!!
    very different.i started writing blogs inspired by urs only.
    all the very best..we expect ur 200th soon 😉

  88. */

    //Ore nalla nuru pathivu poda mudiyuma ?

    – Unmai//

    உண்மை,
    இந்த பதிவுல வந்துதான் இப்படி மானத்த வாங்கனுமா?

    பதிவு போடறேன்… நல்ல பதிவானு நீங்க தான் சொல்லனும் 🙂

    */

    Sorry abt it. What I meant was “can you write 100 blogs in a DAY ?”. My thanglish is so bad that you have to think that as a “nalla” instead of “naal la”. Sorry abt it again. You are doing a great job. keep writing.

    – Unmai

    PS: this forces me to learn how to type in Tamil to avoid misunderstanding.

  89. //aparnaa said…

    ரொம்ப நல்லா இருக்கு!!
    very different.i started writing blogs inspired by urs only.
    all the very best..we expect ur 200th soon 😉 //

    ரொம்ப நன்றி அபர்ணா…
    தொடர்ந்து எழுதவும்!!!

    200தானே சீக்கிரம் போட்டுடலாம் 🙂

  90. //Sorry abt it. What I meant was “can you write 100 blogs in a DAY ?”. My thanglish is so bad that you have to think that as a “nalla” instead of “naal la”. Sorry abt it again. You are doing a great job. keep writing.

    – Unmai

    PS: this forces me to learn how to type in Tamil to avoid misunderstanding.//

    உண்மை,
    ஆஹா…
    நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனா?

    ஒரே நாள்ல ரெண்டு போடறதே ரொம்ப கஷ்டமுங்க… வேணும்னா தலைவர் படத்த போட்டு ஒண்ணு போட்டா நூறு போட்ட மாதிரினு போட்டுடலாம் 😉

    தமிழ்ல டைப் பண்றது ரொம்ப சுலபமுங்கோ 😉

  91. நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துகள் பாலாஜி.

    நீங்க எழுதுனதுலேயே கொல்ட்டி எனக்கு ரொம்ப பிடிச்ச கதை.
    நெல்லிக்கா அதை பீட் பண்ணிடும்னு நென்க்கிறேன். பாப்போம்.

    நல்ல கேள்விகளைக் கேட்ட தீபனுக்கும் பாராட்டுகள்.

  92. //கைப்புள்ள said…

    நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துகள் பாலாஜி.
    //
    கைப்ஸ்,
    மிக்க நன்றி

    //
    நீங்க எழுதுனதுலேயே கொல்ட்டி எனக்கு ரொம்ப பிடிச்ச கதை.
    நெல்லிக்கா அதை பீட் பண்ணிடும்னு நென்க்கிறேன். பாப்போம்.
    //
    ஆஹா… இப்படி எதிர்பார்ப்போட இருக்கற உங்கள ஏமாத்தாத அளவுக்கு எப்படி எழுதுவேன்னு தெரியலையே 😦

    // நல்ல கேள்விகளைக் கேட்ட தீபனுக்கும் பாராட்டுகள். //
    அவனிடம் சொல்லிவிடுகிறேன்!!!

  93. —அந்த கண்றாவியெல்லாம் இருந்தா ஏன் இராத்திரி, பகலா வெட்டியா ப்ளாக் எழுதறேன்?—

    ; P

    —பாலைய்யா, ஜீனியர் என்.டி.ஆர், ரவி தேஜாவோட ட்ரெஸ்ஸிங் சென்சும் டென்சும்தான்—

    முழுப் கிறிஸ்துமஸ் ட்ரீயை பனியில் மறைக்கும் முயற்சி ; )))

    —பின்ன க்ரைம் எழுதனா கூலா வந்து வெட்டி காமெடில உன்னய அடிச்சக்க முடியாதுனு —

    : )))

    —எனக்கு தெரிஞ்சி நான் கொஞ்சம் சீரியஸ் டைப் தான்…—

    உண்மைதான்! காமெடி ரொம்ப சீரியசான விஷயம்.

    —ஆரம்பிச்சி 5 மாசத்துல —

    கோடி காண வாழ்த்துகள் : )

  94. //முழுப் கிறிஸ்துமஸ் ட்ரீயை பனியில் மறைக்கும் முயற்சி ; )))//

    சொன்னா நம்பனும்… 🙂
    நாங்க அடிக்கடி Youtubeல பாலைய்யா டேன்ஸ் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்போம் 😉

    //உண்மைதான்! காமெடி ரொம்ப சீரியசான விஷயம்.
    //
    :-))

    //—ஆரம்பிச்சி 5 மாசத்துல —

    கோடி காண வாழ்த்துகள் : )//

    ஆஹா… பாஸ்டன்ல பாலாஜினு இருக்கவங்க எல்லாம் பாபா ஆயிட முடியுமா? 😉

    வாழ்த்துக்களுக்கு நன்றி பாபா!!!

  95. தீபன் கேட்க மறந்த கேள்விகள் சில 🙂

    கொஞ்சம் ஜாலியாக…

    * தமிழ்ப்பட விமர்சனங்கள் ஏன் எழுதுவதில்லை?

    * நண்பர்களைப் பெறுவதற்கு எது சிறந்த மிடையம்? ஆர்குட்டா… வலைப்பதிவா?

    * எது சிரமம்? பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் இடுவதா அல்லது அரட்டையில் மறுமொழிவதா?

    கொஞ்சம் கிண்டலுக்காக ; ) (சீரியசாக எடுத்துக் கொள்ள வேணாம் :-D)

    * தமிழகம் திரும்பிய பிறகும் தங்கள் கலைப்பயணம் தொடருமா?

    * தலைப்பில் ஆச்சரியக்குறி அதிகம் இடம்பெற்ற பதிவு எது?

    * தலைப்பில் நன்றி அதிகம் இடம்பெற்ற பதிவு எது?

    * 43, 100 என்று எண் கணிதத்தில் வித்தகராவது எப்படி?

    கடைசியில் சீரியசாக…

    * இந்த மாதிரி நக்கல் காமெண்ட்களைக் கூட ஜாலியாக மாற்றும் ரகசியம் என்ன? என்ன?? எப்படி! : )

  96. //Boston Bala said…

    தீபன் கேட்க மறந்த கேள்விகள் சில 🙂

    கொஞ்சம் ஜாலியாக…

    // * தமிழ்ப்பட விமர்சனங்கள் ஏன் எழுதுவதில்லை? //
    ஒரே காரணம் எனக்கு முன்னால் பலர் எழுதிவிடுவதே! அதுவுமில்லாமல் பலர் அவர்கள் நாயகர்கள் படத்தை விமர்சித்தால் அவர்களை விமர்சித்ததாகவே நினைப்பதும்தான். தெலுகு படத்தையோ ஹிந்தி படத்தையோ விமர்சித்தால் அந்த பிரச்சனையில்லை.

    // * நண்பர்களைப் பெறுவதற்கு எது சிறந்த மிடையம்? ஆர்குட்டா… வலைப்பதிவா?
    //
    இது எத்தகைய நண்பர்களை பெற வேண்டும் என்பதையும் நம்மையும் பொருத்தது…

    வலைப்பதிவு தொடங்குவது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதால் ஆர்குட்டுக்கே என் ஓட்டு 😉

    // * எது சிரமம்? பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் இடுவதா அல்லது அரட்டையில் மறுமொழிவதா?
    //
    பின்னூட்டத்திற்கு பின்னூட்டமிடுவதே… ஏனென்றால் அதை ஒருவருக்கு மேல் பலர் பார்ப்பதும்… அதை பற்றி சிந்தக்க அவருக்கு நேரம் இருப்பதும் 🙂

    அரட்டையில் சிந்திக்க நேரமே கொடுக்காமல் அடித்து நொறுக்கிவிடலாம் 😉

    கொஞ்சம் கிண்டலுக்காக ; ) //(சீரியசாக எடுத்துக் கொள்ள வேணாம் :-D)
    //
    அப்படினா???

    // * தமிழகம் திரும்பிய பிறகும் தங்கள் கலைப்பயணம் தொடருமா?//
    கலைப்பயணமா??? ஓ கிண்டல்னு சொல்லியாச்சு இல்லை…
    இந்த அளவுக்கு எழுதுவேனா என நிச்சயம் தெரியாது… ஆனா மாசத்துக்கு ஒன்னு ரெண்டாவது போடுவேன் 🙂
    எல்லாம் முருகன் செயல்

    //
    * தலைப்பில் ஆச்சரியக்குறி அதிகம் இடம்பெற்ற பதிவு எது?
    //
    இது தான்… 6 இருக்கே
    இதுக்கு முன்னாடி இதே தலைப்பில் இன்னோரு பதிவும் இருக்கு 🙂
    அது தேன்கூடு போட்டில தோத்ததுக்கு 🙂

    // * தலைப்பில் நன்றி அதிகம் இடம்பெற்ற பதிவு எது?
    //
    போன பதில்லே இருக்கு 😉

    // * 43, 100 என்று எண் கணிதத்தில் வித்தகராவது எப்படி?
    //
    கணக்கு பாடத்துல அடிக்கடி கப் வைக்கணும் 😉

    கடைசியில் சீரியசாக…

    * இந்த மாதிரி நக்கல் காமெண்ட்களைக் கூட ஜாலியாக மாற்றும் ரகசியம் என்ன? என்ன?? எப்படி! : ) //
    நம்மல கேள்வி கேக்கறவர் நம்ம நெருங்கிய நண்பர்னு நெனச்சிக்க வேண்டியதுதான் 😉

    நம்மல மதிச்சு ஒரு பின்னூட்டமிடறார்னா அவர் நம்ம நெருங்கிய நண்பர்தானே 😉 (நம்ம நண்பருக்கும் நம்ம பதிவு பிடிக்கனும்னு அவசியமில்லையே 😉 )

  97. வரலாற்றுல பெயரை பொறிக்க…

  98. உங்க நூறாவது பதிவுல 100 போட்டு…..

  99. //கப்பி பய said…

    உங்க நூறாவது பதிவுல 100 போட்டு….. வரலாற்றுல பெயரை பொறிக்க… 100 ;)//

    கப்பிமா,
    உன் பாசத்துக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேனோனு தெரியலையே???

    சரி உன் நூறாவது பதிவுல நூறு பின்னூட்டம் போட்டுடலாம் 😉

  100. Vetti,
    ippothan unga “thooral” kathai enakku forward-a vanthathu. inga vanthu partha 100-vathu pathivu. Vazhthukkal, Kallakunga!!!

  101. //Simply Senthil said…

    Vetti,
    ippothan unga “thooral” kathai enakku forward-a vanthathu. inga vanthu partha 100-vathu pathivu. Vazhthukkal, Kallakunga!!! //

    மிக்க நன்றி செந்தில்…

    ஃபார்வேர்ட்ல வந்துச்சா? நாந்தான் எழுதனன்னு சொன்னா எவன் நம்ப போறான்? என் ஃபிரெண்ட்சே போடா உன் லொள்ளுக்கு அளவில்லைனு சொல்றாங்க 🙂

    சரி எல்லாரும் எஞ்சாய் பண்ணட்டும்… முடிஞ்சா நமக்கு ஒரு காப்பி அனுப்புங்களேன் 🙂

  102. 104 அல்லது 105 ஆவதா வந்தா புவியியல்லயாவது இடம் கிடைக்குமா 🙂

  103. //Syam said…

    104 அல்லது 105 ஆவதா வந்தா புவியியல்லயாவது இடம் கிடைக்குமா 🙂 //

    உங்களுக்கு எதுல இடம் வேணும்னு கேளுங்க கொடுத்துடலாம்… வரலாறுல கப்பி பேரு இருந்தா உங்க பேர் இருக்கக்கூடாதுனு சட்டமா? 😉

  104. //நம்மல கேள்வி கேக்கறவர் நம்ம நெருங்கிய நண்பர்னு நெனச்சிக்க வேண்டியதுதான்//

    Very Good!

  105. //உங்களுக்கு எதுல இடம் வேணும்னு கேளுங்க கொடுத்துடலாம்… //

    கேக்கலாம் ஆனா நாலு பேரு படிச்சிட்டு காறி துப்பிட்டு போவாங்களேனு யோசனயா இருக்கு
    🙂

  106. //நாமக்கல் சிபி said…

    //நம்மல கேள்வி கேக்கறவர் நம்ம நெருங்கிய நண்பர்னு நெனச்சிக்க வேண்டியதுதான்//

    Very Good! //

    மிக்க நன்றி ‘தள’ 🙂

  107. //
    கேக்கலாம் ஆனா நாலு பேரு படிச்சிட்டு காறி துப்பிட்டு போவாங்களேனு யோசனயா இருக்கு
    :-)//
    அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணா பொதுவாழ்க்கைல இறங்க முடியுமா???

    பேர் வந்ததுக்கப்பறம் அடுத்தவன் என்ன சொல்றான்னே கேக்கவே கூடாது 😉

  108. //அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணா பொதுவாழ்க்கைல இறங்க முடியுமா???

    பேர் வந்ததுக்கப்பறம் அடுத்தவன் என்ன சொல்றான்னே கேக்கவே கூடாது 😉 //

    ஆனா நான் சொல்லலாம்னு நினைக்கும் போது கரெக்ட்டா சிபி வந்துட்டாரே…சரி அவரு அந்த பக்கம் போகட்டும் சொல்றேன் 🙂

  109. //ஆனா நான் சொல்லலாம்னு நினைக்கும் போது கரெக்ட்டா சிபி வந்துட்டாரே…சரி அவரு அந்த பக்கம் போகட்டும் சொல்றேன் :-)//

    அவர் வேற ஒரு பதிவுல அடிச்சி ஆடிட்டு இருக்காரு… நீங்க தயங்காம சொல்லுங்க 🙂

  110. //அவர் வேற ஒரு பதிவுல அடிச்சி ஆடிட்டு இருக்காரு//

    இப்பத்தான் பார்திட்டு வரேன்..எங்க ஆடிட்டு இருக்காருனு…வேற ஒன்னும் இல்ல நான் வேற எங்க இடம் கேக்க போறேன்…நயன் மனசுல தான் 🙂

  111. //Syam said…

    //அவர் வேற ஒரு பதிவுல அடிச்சி ஆடிட்டு இருக்காரு//

    இப்பத்தான் பார்திட்டு வரேன்..எங்க ஆடிட்டு இருக்காருனு…வேற ஒன்னும் இல்ல நான் வேற எங்க இடம் கேக்க போறேன்…நயன் மனசுல தான் 🙂 //

    ஆஹா… அது நம்ம கைல இல்லயே!!! சிபி… சரி நீங்க அங்க விளையாடற நேரத்துல இங்க ஒருத்தர் விளையாடறாரு பாருங்க 😉

  112. வெட்டி நூறுக்கு வாழ்த்துக்கள் அப்படியே ஆயிரம் ரெண்டாயிரம் அப்படினு போயிட்டே இருக்கணும் என்ன :))..

    ////தீ: ஏன் அதிகமா லவ் ஸ்டோரி எழுதற? எதாவது அனுபவம் இருக்கா?

    பா: இந்த கேள்விக்கு விடை உனக்கே தெரியுமென்பதால் விட்டுவிடுகிறேன்.//

    தீபனுக்குத் தெரியும் சரி எங்களுக்கும் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்ய்யா//

    ரிபீட்டூ…

  113. //சந்தோஷ் said…

    வெட்டி நூறுக்கு வாழ்த்துக்கள் அப்படியே ஆயிரம் ரெண்டாயிரம் அப்படினு போயிட்டே இருக்கணும் என்ன :))//

    ரொம்ப நன்றி சந்தோஷ்…
    ஆனா ஆயிரமெல்லாம் டூ மச்னு படல 🙂

    //
    தீபனுக்குத் தெரியும் சரி எங்களுக்கும் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்ய்யா//

    ரிபீட்டூ…//
    உங்களுக்குத்தான் வெட்டி பதில் சொல்லிட்டாரே…

  114. நானும் ஒவ்வொருநாளும் அடுத்த நெல்லிக்காய் எப்பொழுது வரும் என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்…. இன்னமும் வரவில்லை…. இப்படி எதிர்ப்பார்க்க வைப்பதே அக்கதையின் வெற்றி என்று நினைக்கிறேன்…. வெட்டி(ற்றி)க்கு வாழ்த்துக்கள்…..

  115. //ஆதவன் said…

    நானும் ஒவ்வொருநாளும் அடுத்த நெல்லிக்காய் எப்பொழுது வரும் என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்…. இன்னமும் வரவில்லை…. இப்படி எதிர்ப்பார்க்க வைப்பதே அக்கதையின் வெற்றி என்று நினைக்கிறேன்…. வெட்டி(ற்றி)க்கு வாழ்த்துக்கள்….. //

    ஆதவன்,
    ரொம்ப சாரிங்க…
    சரியா தூக்கமில்லாம கொஞ்சம் உடம்பு சரியில்லாம போச்சுங்க… இன்னைக்கு நைட்டு போட்டுட்றேன்…

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க…

  116. இங்க கயமை பண்றவங்க ஆராச்சும் இருக்கீங்களா?

  117. //தம்பி said…

    இங்க கயமை பண்றவங்க ஆராச்சும் இருக்கீங்களா? ///

    வூட்டாண்ட சொல்லிக்கினு வந்தியா???

    சரி… இன்னா வேணும்???

  118. மருத்துக்கு கூட வேல இல்லியான்னு புலி என்னை பாத்து ஒரு முறை கேட்டுச்சி, நான் இப்ப உன்ன கேக்குறேன். மருந்து குப்பி அளவுக்கு கூட உனக்கு வேலை இல்லியா? :)))

    //வூட்டாண்ட சொல்லிக்கினு வந்தியா???//

    சொல்லவேல்ல!!!!!!!!!!

  119. //தம்பி said…

    மருந்துக்கு கூட வேல இல்லியான்னு புலி என்னை பாத்து ஒரு முறை கேட்டுச்சி, நான் இப்ப உன்ன கேக்குறேன். மருந்து குப்பி அளவுக்கு கூட உனக்கு வேலை இல்லியா? :)))
    //
    அடப்பாவி!!! கமெண்ட் போட்டா வேலையில்லைனு அர்த்தமா? வேலை அதிகமாத்தான் இருக்கு… நாங்க எல்லாம் Multitasking பண்ணுவோம் 😉

    //
    //வூட்டாண்ட சொல்லிக்கினு வந்தியா???//

    சொல்லவேல்ல!!!!!!!!!! //
    //
    போ!!! உன்னய உங்க அம்மா தேடிக்கிட்டு இருக்காங்க 🙂

  120. //வாழ்த்துகள். நூரு ஆயிரமாகி, ஆயிரம் லட்சமாகி, லட்சம் கோடியாகி, கோடி பலகோடியாக வாழ்த்துக்கள் !//

    யாருப்பா இந்த அனானி?
    குடுத்த காசுக்கு மேல கூவறது?
    வாழ்த்தறதுக்கு ஒரு வரம்பு வேணாம். சின்னப்பிள்ளத்தனாமால்ல இருக்கு.

  121. //
    யாருப்பா இந்த அனானி?
    குடுத்த காசுக்கு மேல கூவறது?
    வாழ்த்தறதுக்கு ஒரு வரம்பு வேணாம். சின்னப்பிள்ளத்தனாமால்ல இருக்கு.//

    அனானிங்க மேல ஏன் உனக்கிந்த கொல வெறி???

  122. //அனானிங்க மேல ஏன் உனக்கிந்த கொல வெறி???//

    அடப்பாவி! ஏன்யா இந்த கொளுத்தி போடற வேலை உனக்கு?

    நல்லா இரு!

  123. //தம்பி said…

    //அனானிங்க மேல ஏன் உனக்கிந்த கொல வெறி???//

    அடப்பாவி! ஏன்யா இந்த கொளுத்தி போடற வேலை உனக்கு?

    நல்லா இரு! //

    பின்ன நீ நம்ம ரசிகர திட்டனா… சும்மா விட்டுடுவோமா???

    ஏதோ ஆசையா வாழ்த்தினா அனுபவிப்பியா? இதுல போயி ஆராய்ச்சி எல்லாம் பண்ணிக்கிட்டு 🙂

  124. வாழ்த்துக்கள் வெட்டி. பாலாஜி’க்கும் சொல்லிடு 😉

    அடுத்த நெல்லிக்காய் எப்போ தரப்போற??

    -விநய்

  125. //Anonymous said…

    வாழ்த்துக்கள் வெட்டி. பாலாஜி’க்கும் சொல்லிடு 😉

    அடுத்த நெல்லிக்காய் எப்போ தரப்போற??

    -விநய்//
    மிக்க நன்றி விநய்!!!

    இனிமேதான் எழுத ஆரம்பிக்கனும்….

  126. //ரொம்ப நன்றி சந்தோஷ்…
    ஆனா ஆயிரமெல்லாம் டூ மச்னு படல :-)//
    Veeti for your speed of writing Im wondering whether the numbers existing would be enough :))

  127. //சந்தோஷ் said…

    //ரொம்ப நன்றி சந்தோஷ்…
    ஆனா ஆயிரமெல்லாம் டூ மச்னு படல :-)//
    Veeti for your speed of writing Im wondering whether the numbers existing would be enough :))//
    ஆஹா… இங்க அடுத்த பதிவுக்கே மேட்டர் இல்லாம யோசிச்சிட்டு இருக்கேன்…இதுல இது வேறயா???

    இருந்தாலும் நானே வெக்கப்படற அளவுக்கு புகழறீங்க…

  128. Hi hi…
    romba nalla blog eludhara pa…
    un blog paathu impress aayitu thaan naane blog eludha aarambichiruken therimaaaa…

    keep going..
    super blog.

  129. //Anonymous said…

    Hi hi…
    romba nalla blog eludhara pa…
    un blog paathu impress aayitu thaan naane blog eludha aarambichiruken therimaaaa…

    keep going..
    super blog.//

    மிக்க நன்றி…
    அப்படியே உங்க ப்ளாக் லிங்க் கொடுங்க!!!

  130. Vetti,

    Mail forward panniyachu. Unga gmail id-ya check pannunga

  131. //Simply Senthil said…
    Vetti,

    Mail forward panniyachu. Unga gmail id-ya check pannunga
    //

    செந்தில் வரலைங்களே 😦

  132. Congratulations Mr. Balaji. Expecting your Nellikai next part soon.

  133. ஹாய் வெட்டி,
    100/100.. க்கு வாழ்த்துக்கள்.
    நான் உங்க பதிவுகலையெல்லாம் ரொம்ப ரசிச்சு படிச்சிருக்கேன்.. அதுவும் அந்த ஆர்குட்டு அலம்பல்,அப்பறம் இலவசம் இல்லயா?
    எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு.
    நிறைய நகைச்சுவையா எழுதுங்க..

  134. Vaashthukkal, vaashga valarga 🙂

  135. //sumathi.s. said…

    ஹாய் வெட்டி,
    100/100.. க்கு வாழ்த்துக்கள்.
    நான் உங்க பதிவுகலையெல்லாம் ரொம்ப ரசிச்சு படிச்சிருக்கேன்.. அதுவும் அந்த ஆர்குட்டு அலம்பல்,அப்பறம் இலவசம் இல்லயா?
    எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு.
    நிறைய நகைச்சுவையா எழுதுங்க.//
    மிக்க நன்றி சுமதி…
    முடிந்த வரை நகைச்சுவையாக எழுத முயற்சிக்கிறேன்!!!

  136. //C.M.HANIFF said…

    Vaashthukkal, vaashga valarga :)//

    மிக்க நன்றி ஹனிஃப்…

Anonymous -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி