• Top Clicks

    • எதுவுமில்லை
  • அதிகம் பார்வையிடப்பட்டவை

  • Blog Stats

    • 34,478 hits

நெல்லிக்காய் – 3

காய் 1
காய் 2

முதல் இரண்டு நாள் அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்கள், எந்த பிரச்சனைக்கு யாரை அணுக வேண்டும் என்ற தகவல்கள், சம்பளத்திற்கான வங்கி கணக்கு துவங்குதல், பி.எஃப் கணக்கு துவங்குதல், மதிப்பெண் பட்டியல் சரி பார்த்தல் போன்றவைகள் நடைபெற்றன.

மூன்றாவது நாள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட லேபில் அனைவரும் ஆளுக்கொரு கணினி முன்பு அமர்ந்திருந்தனர். அவர்களுக்கென்று ஒரு மேய்ப்பாளர் (இன்ஸ்ட்ரெக்டர்) இருந்தார்.

“நண்பர்களே, இங்கு ஆளுக்கு ஒரு கணினி கொடுக்க முடியாத நிலையால் ஒரு கணினியை இருவர் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் அருகிலிருப்பவரோடோ அல்லது உங்கள் நண்பர்களுடனோ நீங்கள் சேர்ந்து அமர்ந்து கொள்ளலாம். நான் இதற்கு 10 நிமிடம் அவகாசம் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு இன்ஸ்ட்ரெக்டர் சென்று விட்டார்.

அனைவரும் அவரவர் நண்பர்களுடன் அமர அருணுக்கு யாரும் கிடைக்காமல் தனியே அமர்ந்தான். அனைவருக்கும் PC பார்ட்னர் கிடைத்துவிட அருணுக்கு மட்டும் யாரும் கிடைக்காதது அவனுக்கு வருத்தத்தை தந்தது.

அன்று ஒரு வழியாக வகுப்புகள் முடிய அவன் மட்டும் தனியாக கணினியில் சொல்லி கொடுத்ததை கற்று கொண்டிருந்தான். அவனுக்கு அந்த தனிமையும் ஒரு விதத்தில் நல்லதாகவே பட்டது. யாருடனும் நேரத்தை பங்கு போடாமல் நன்றாக படிக்கலாம் என்று தோன்றியது.

அடுத்த நாள் வழக்கம் போல் அவன் அவனது கணினியில் படித்து கொண்டிருக்க, தீபா இண்ஸ்ட்ரெக்டருடன் ஏதோ பேசி கொண்டிருந்தாள். அது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

“சார், நேத்து நான் வரலை. இன்னைக்கு வந்து பார்த்தால் எல்லா கம்ப்யூட்டர்ஸும் ஃபுல்லா இருக்கு. நான் எங்க உட்காறதுனு சொன்னீங்கனா நல்லா இருக்கும்”

“இங்க பாரும்மா, இது காலேஜ் இல்லை. இங்க சார்னு கூப்பிடக்கூடாது. என்ன ராஜிவ்னு கூப்பிடு”

“சரிங்க. எனக்கு ஒரு கம்ப்யூட்டர் கொடுங்களேன் ராஜிவ்”

“எல்லா கம்ப்யூட்டர்லயும் ரெண்டு ரெண்டு பேர் இருக்கணும்… ஏதுலயாவது ஒரு ஆள் உக்கார்ந்திருந்தால் நீ அவரோட ஷேர் பண்ணிக்கோ. ஓகேவா? எதாவது பிரச்சனைனா எங்கிட்ட சொல்லு”

“ஓகே”

சொல்லி விட்டு ஒரு ஒரு வரிசையாக பார்த்து கொண்டே வந்தாள்.

அருண் மட்டும் தனியே இருப்பதை பார்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை லேப்பை சுற்றி வந்தாள். வேறு வழியில்லாததால் மீண்டும் அருணிடம் வந்தாள்.

“உங்ககூட யாராவது கம்ப்யூட்டர் ஷேர் பண்றாங்களா?”

“இல்லையே”

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா நான் உங்க கூட ஷேர் பண்ணிக்கலாமா?”

“இது என்ன என் சொந்த கம்ப்யூட்டரா நான் ஆட்சேபம் தெரிவிக்க. நீங்க தாராளமா ஷேர் பண்ணிக்கலாம்”

சொந்த கம்ப்யூட்டராக இருந்தால் நிச்சயமாக ஆட்சேபம் தெரிவித்திருப்பான் என்றே அவளுக்கு தோன்றியது.

“நேத்து க்ளாஸ்ல சொல்லி கொடுத்த ஸ்லைட்ஸ் இங்க இருக்கு. நீங்க வேணும்னா படிச்சிட்டு இருங்க. நான் வரேன்”

சொல்லிவிட்டு பக்கத்து கம்ப்யூட்டரிலிருந்த கார்த்திக்கிடம் ஏதோ பேசி அவனை வெளியே கூப்பிட்டு சென்றான்.

காபி குடிக்குமிடத்திற்கு கார்த்திக்கை அழைத்து சென்றான் அருண்.

“கார்த்திக், நீ தப்பா எடுத்துக்கலனா நீயும் நானும் ஒரு கம்ப்யூட்டர்ல உக்கார்ந்துக்கலாம். ராஜியும், தீபாவும் ஒரு கம்ப்யூட்டர்ல உக்கார்ந்துக்கட்டுமே. ப்ளீஸ்”

“டேய், லூசாடா நீ? அவனவன் பொண்ணுங்க பக்கத்துல உக்காரத்துக்கு அலையறானுங்க. நல்ல வேளை அவள் என் க்ளாஸ் மேட்டுங்கறதால எனக்கு எப்படியோ சான்ஸ் கிடைச்சது.நீ என்னடானா அதை கெடுத்துக்க சொல்றீயே”

“எப்படியும் பக்கத்து கம்ப்யூட்டர்லதான அவ உக்கார்ந்திருப்பா. நீ ஈஸியா பேசலாம். எனக்கு அந்த பொண்ணு பக்கத்துல உக்கார்ந்து வேலை செய்ய முடியாது.. ப்ளீஸ்”

“ஏன்டா ஏதோ கவர்ன்மெண்ட் பஸ்ல சீட் மாத்தர மாதிரி மாத்த சொல்ற. போனா போகுது, நான் ராஜிக்கிட்ட பேசி பாக்கறேன்.”

கார்த்திக் உள்ளே சென்று ராஜியிடம் ஏதோ சொல்ல ராஜி தீபாவின் கம்ப்யூட்டருக்கு சென்றாள். இதை பார்த்தவுடன் சந்தோஷமாக உள்ளே வந்து கார்த்திக் பக்கத்தில் அமர்ந்தான் அருண்.

நடந்ததை யாரும் சொல்லாமலே புரிந்து கொண்டாள் தீபா.

சில நாட்களிலே கார்த்திக்கும், அருணும் நல்ல நண்பர்களாகினர். ராஜியும் தீபாவும்தான். ஒருவருக்கொருவர் தெரியாததை சொல்லி கொடுத்து உதவி கொண்டனர். அனைத்து தேர்விலும் கார்த்திக்தான் முதல் மதிப்பெண் எடுத்தான். அருணும் ஓரளவு நல்ல மதிப்பெண்ணே பெற்றான்.

நால்வரும் ஒன்றாகவே சுற்ற ஆரம்பித்தனர். சாப்பிட சென்றாலும், காபி, டீ இடைவேளைகளிலும் ஒன்றாகவே இருந்தனர். அருணும் தீபாவும் மட்டும் அவ்வளவாக பேசிக்கொள்ளாததை கார்த்திக்கும் ராஜியும் நன்கு அறிந்திருந்தனர்.

பெரும்பாலான நாட்களில் அருணும் கார்த்திக்கும் அசைவ உணவையே சாப்பிட தீபா ஒரு நாள் கேட்டே விட்டாள்.

“எப்படி நீங்க ஆடு, கோழி எல்லாம் சாப்பிடறீங்க? உங்களுக்கு அத பார்த்தா பாவமா தெரியலையா?”

கார்த்திக் அமைதி காத்தான். அருண் பேச ஆரம்பித்தான்.

“நீங்க மட்டும் கீரையெல்லாம் சாப்பிடல. அதுக்கும் தான் உயிர் இருக்கு. வேரோட பிடிங்கி தானே சாப்பிடறீங்க? இதுவாவது பரவாயில்லை. இலை, காய், பழம் எல்லாம் சாப்பிடறது எப்படி தெரியுமா? கைய கால பிக்கிற மாதிரி. அதுக்கு எப்படி வலிக்கும். அதையே தான் இந்த ஆடும் செய்யுது. செடிய கடிச்சி சாப்பிடுது. அந்த செடியெல்லாம் எப்படி அழுதுச்சினு உங்களுக்கு தெரியுமா? செடி கொடிகளை காப்பாத்த வேற வழியே இல்லாம நாங்க ஆடு, கோழினு சாப்பிட வேண்டியதா போச்சு”

“பழமெல்லாம் மத்தவங்க சாப்பிடத்தான் செடியே தருது. அதுல இருக்கற விதைதான் அதோட குழந்தை. பழத்தை சாப்பிடறது தப்பில்லை” என்று மீண்டும் வாதாடினாள் தீபா.

“சரி நீங்க இதுவரைக்கும் சாப்பிட்ட பழத்துல இருந்து ஒரு சதவிகிதமாவது விதைய எடுத்து நட்டிருக்கீங்களா?
சாப்பிட்டு குப்பைல போட வேண்டிய்து. இல்லைனா பாலித்தீன் பேப்பர்ல பத்திரமா போட்டு குப்பை தொட்டில போட வேண்டியது. இதுல விதைக்காத்தான் பழத்தை சாப்பிட்டோம்னு கதை விட வேண்டியது. அதுக்கு எங்களை மாதிரி கொன்றால் பாவம் தின்றால் தீரும்னு சொல்லிட்டு போகலாம்” மீண்டும் விதாண்டாவாதம் பேசினான் அருண்.

ஒருவழியாக பேச்சை திசைத்திருப்பினான் கார்த்திக்.

“தீபா அந்த ராஜிவ்க்கு உன் மேல ஒரு கண்ணுனு நினைக்கிறேன். எப்பவுமே உன்னய சைட் அடிச்சிக்கிட்டே இருக்கறான்”

“அப்படியெல்லாம் இல்லை. நீ எதாவது கதை கட்டிவிடாதப்பா சாமி” சமாளித்தாள் தீபா…

“அருண், நான் சொல்றது உண்மைதான?” அருணையும் துணைக்கு அழைத்தான் கார்த்திக்.

“ஆமாம்.. அப்படித்தான்னு நினைக்கிறேன்” சொல்லிவிட்டு தீபாவை பார்த்தான் அருண்.

அவள் அவனை முறைத்து கொண்டிருந்தாள். அந்த முறைப்பிலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று அவன் உள்ளுணர்வு அவனுக்கு சொல்லியது…

(தொடரும்…)

அடுத்த பகுதி

32 பதில்கள்

  1. Hi Friends,
    Sorry for the delay. Due to some personal reasons I couldnt concentrate much on blogs. Will try to post the next part soon…

  2. வெட்டி கதை சூப்பராக போகுது, இன்னும் மோதல் தானா??? ஆனால் அதிலேயும் ஒரு thrill இருக்கதான் செய்கிறது,
    யதார்த்தமான, இயற்கையான உரையாடல்கள் , அடுத்த பாகத்திற்க்காக வெயிட்டீங்

  3. //Divya said…
    வெட்டி கதை சூப்பராக போகுது
    //
    மிக்க நன்றி திவ்யா…

    // இன்னும் மோதல் தானா??? //
    அதுக்குள்ளவே சேர்ந்துடுவாங்களா என்ன?

    //
    ஆனால் அதிலேயும் ஒரு thrill இருக்கதான் செய்கிறது, //
    //
    அது!!!

    //
    யதார்த்தமான, இயற்கையான உரையாடல்கள் , அடுத்த பாகத்திற்க்காக வெயிட்டீங்//
    மிக்க நன்றி… சீக்கிரம் போட முயற்சிக்கிறேன்

  4. இந்த பதிவ சுருக்கா முடிச்சிட்டா மாதிரி தெரியுது! எதிரும் புதிருமாவே இருக்காங்களே ரெண்டு பேரும் ஏன்?
    சரி சரி கடைசில ரெண்டு பேரையும் பத்திரமா ஒண்ணு சேத்துருவல்ல?

    யோவ் இன்னும் தூங்கலயா நீயி!

  5. //தம்பி said…
    இந்த பதிவ சுருக்கா முடிச்சிட்டா மாதிரி தெரியுது!
    //
    சுருக்கவா? இது தொடர் கதை… அதனால அப்படித்தான் எழுதனும் 😉

    // எதிரும் புதிருமாவே இருக்காங்களே ரெண்டு பேரும் ஏன்?
    //

    என்னய கேட்டா? நான் என்ன பண்ணுவேன்?

    //சரி சரி கடைசில ரெண்டு பேரையும் பத்திரமா ஒண்ணு சேத்துருவல்ல?//

    நம்ம கைல என்ன இருக்கு தம்பி!!! எல்லாம் விதியின் கைப்பாவைகள் 😉

    //யோவ் இன்னும் தூங்கலயா நீயி! //
    மணி 2:30யாச்சா? சரிப்பா நான் ஜீட்…
    இன்னைக்கு எழுதலைனா அடுத்து எப்பனு சொல்ல முடியாது. அதனாலத்தான் எழுதி முடிச்சிட்டு தூங்கலாமேனு எழுதிட்டேன்…

  6. கதை நல்லா போகுதுங்க. சீக்கிரமா அடுத்த பதிவ போடுங்க

  7. //அனுசுயா said…
    கதை நல்லா போகுதுங்க. சீக்கிரமா அடுத்த பதிவ போடுங்க //

    ரொம்ப நன்றிங்க…
    எப்படியும் சனி ஞாயிறுக்குள்ள போட முயற்சி செய்யறேங்க…

  8. GReat Going dude :)))

  9. தல கத பட்டாசா போகுது போங்க….. கண்டிப்பா சேத்து வச்சிருங்க…. இப்படி நாலு பேரு ஒண்ணா சுத்துனா நாங்க குடும்பம்னு ஓட்டுவோம் காலேஜ்ல…. ஆனா கம்பெனில ம்ம்ம்ம்… ஒண்ணும் நடக்காது..

  10. வெட்டி…சூப்பரு….நீ சொல்ற எடமெல்லாம் கண்ணு முன்னாடி வர்ர மாதிரி இருக்குதுப்பா.

    உன்னோட எழுத்துல என்ன வலிமைன்னு உனக்குத் தெரியுமா? ரொம்பவும் கஷ்டப்பட்டு யோசிக்க வேண்டிய பாத்திரங்களோ…கதைக்களங்களோ…உணர்ச்சிகளோ…இல்லாமல்…ரொம்பவும் தெரிஞ்சதா இருக்கிறது. அதுனால எல்லாராலையும் ஒன்றிட முடியுது.

    சரிதானா மக்களே?

  11. நல்ல கதை!! சொந்த கதையா? சோக கதையா?

  12. யதார்த்தமான உரையாடலகளுடன் கதை சீராக போகிறது வெட்டி..

    //அந்த முறைப்பிலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று அவன் உள்ளுணர்வு அவனுக்கு சொல்லியது…
    //

    மாப்ள சிக்கிட்டானா?? 😉

  13. //கதை நல்லா போகுதுங்க. சீக்கிரமா அடுத்த பதிவ போடுங்க//

    நானும் அதையே தான் சொல்றேன். வெட்டி உன்னோட ஆடியன்ஸை ஏமாத்தாதே…சூப்பரா போவுது கதை.

  14. //G.Ragavan

    G.Ragavan said…
    வெட்டி…சூப்பரு….நீ சொல்ற எடமெல்லாம் கண்ணு முன்னாடி வர்ர மாதிரி இருக்குதுப்பா.

    உன்னோட எழுத்துல என்ன வலிமைன்னு உனக்குத் தெரியுமா? ரொம்பவும் கஷ்டப்பட்டு யோசிக்க வேண்டிய பாத்திரங்களோ…கதைக்களங்களோ…உணர்ச்சிகளோ…இல்லாமல்…ரொம்பவும் தெரிஞ்சதா இருக்கிறது. அதுனால எல்லாராலையும் ஒன்றிட முடியுது.

    சரிதானா மக்களே? //
    ஜி.ரா,
    மிக்க மகிழ்ச்சி… இதுவே இந்த மாதிரி நிறைய கதை எழுதுற நம்பிக்கையை கொடுக்கும்…

  15. opposite ல போய்டு இருந்த ரெண்டு வண்டியும் லேசா டிராக் மாறி இப்போ பக்கதுல வர மாதிரி இருக்கு…சீக்கிரம் parallel ஆ போகும்னு நினைக்கறேன்… 🙂

  16. //aparnaa said…
    நல்ல கதை!! சொந்த கதையா? சோக கதையா? //

    மிக்க நன்றி ஆப்பு வைக்கும் அப்பு 😉
    சொந்தமாக யோசித்து எழுதும் சோகமில்லாத கதை 😉

  17. //தேவ் | Dev said…
    GReat Going dude :)))//

    மிக்க நன்றி தேவ்!!!

  18. //அமுதன்

    அமுதன் said…
    தல கத பட்டாசா போகுது போங்க….. கண்டிப்பா சேத்து வச்சிருங்க…. இப்படி நாலு பேரு ஒண்ணா சுத்துனா நாங்க குடும்பம்னு ஓட்டுவோம் காலேஜ்ல…. ஆனா கம்பெனில ம்ம்ம்ம்… ஒண்ணும் நடக்காது..//

    மிக்க நன்றி அமுதா!!!
    நம்ம கைல என்ன இருக்கு… பாக்கலாம் 🙂

  19. //கப்பி பய said…
    யதார்த்தமான உரையாடலகளுடன் கதை சீராக போகிறது வெட்டி..
    //
    மிக்க நன்றி கப்பி

    //

    //அந்த முறைப்பிலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று அவன் உள்ளுணர்வு அவனுக்கு சொல்லியது…
    //

    மாப்ள சிக்கிட்டானா?? 😉
    //
    அப்படித்தான்னு நினைக்கிறேன் 😉

  20. //நானும் அதையே தான் சொல்றேன். வெட்டி உன்னோட ஆடியன்ஸை ஏமாத்தாதே…சூப்பரா போவுது கதை//

    தல,
    மிக்க நன்றி!!!

    நான் வெச்சிக்கிட்டேவா வஞ்சனை பண்றேன்…

    சீக்கிரம் போடறேன்…

  21. //மிகச் சரியே! வழிமொழிகிறேன்!!
    வாழ்த்துக்கள் பாலாஜீ!
    அருண், கார்த்திக், பாலாஜி, எல்லாரும் நம்ம பசங்க மாதிரி தான் தெரியுறாங்க!//
    மிக்க நன்றி KRS…
    அப்பறம் இந்த கதைல எங்கங்க பாலாஜி வந்தாரு?

    //அதுவும் தீபாவும் ராஜியும் நம்ம தோழிங்க மாதிரியே தான் இருக்காங்க! இல்லிங்க ஜிரா??
    //
    ஜிரா, சொல்லவே இல்லை 😉

    //
    பாலாஜி, பட்டுக்கோட்டை பிராபகரின் நாவல் ஸ்டைலில், அப்படியே கதையின் நடுவே ஒரு படமும் போடுப்பா! கலக்கலா இருக்கும்! யோசிச்சி வைங்க!!
    //
    போட்டுட்டா போச்சு 😉

  22. //Syam said…
    opposite ல போய்டு இருந்த ரெண்டு வண்டியும் லேசா டிராக் மாறி இப்போ பக்கதுல வர மாதிரி இருக்கு…சீக்கிரம் parallel ஆ போகும்னு நினைக்கறேன்… 🙂
    //
    நாட்டாமை தீர்ப்பை மாத்த முடியுமா? 😉

  23. //செந்தழல் ரவி said…
    வெட்டி, சூப்பர்…:))))))))
    //

    மிக்க நன்றி தலைவா!!!

  24. //நாட்டாமை தீர்ப்பை மாத்த முடியுமா? 😉 //

    இப்புடியே ஏத்திவிட்டு ஏத்திவிட்டு…
    :-))))))

  25. வெட்டி -> கதை உண்மையிலயே கற்பனையா… ம்ம் நல்லா இருக்குங்கய்யா ஒரே ரொமாண்டிக் கதையாவே கொட்டுதே என்ன விஷயம் அதான் ஃபோன் இமெயில்னு பலது இருக்கே….ப்ளாக்-லயே தூதுவிட்டு மேட்டர் வளக்குறீகளா??

  26. //dany said…
    going great guns //
    Thx a lot Dany 🙂

  27. //Syam said…
    //நாட்டாமை தீர்ப்பை மாத்த முடியுமா? 😉 //

    இப்புடியே ஏத்திவிட்டு ஏத்திவிட்டு…
    :-)))))) //

    அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே… விடுங்க பாஸ் 😉

  28. //ராசுக்குட்டி said…
    வெட்டி -> கதை உண்மையிலயே கற்பனையா… ம்ம் நல்லா இருக்குங்கய்யா ஒரே ரொமாண்டிக் கதையாவே கொட்டுதே என்ன விஷயம் அதான் ஃபோன் இமெயில்னு பலது இருக்கே….ப்ளாக்-லயே தூதுவிட்டு மேட்டர் வளக்குறீகளா?? //

    உண்மையிலே கற்பனைதான்…
    ஏன் எங்களூக்கு கற்பனை இருக்க கூடாதா??? இப்படியே கேட்டா எனக்கு எத்தனை கதை தான் இருக்கும்னு நினைக்கறீங்க 🙂

    ப்ளாக்ல தூதா? இதுவும் புது டெக்னிக்கா இருக்கே 😉

    நான் சீக்கிரமே ஒரு க்ரைம் கதையோட வரேன் 😉

  29. வெட்டி ப்ளாக் template மாத்திடீங்களா, முந்திய template நல்லா தானே இருந்தது, [ அந்த பொண்ணு மேல ஏதும் கோபமா????]

  30. //Divya said…
    வெட்டி ப்ளாக் template மாத்திடீங்களா, முந்திய template நல்லா தானே இருந்தது, [ அந்த பொண்ணு மேல ஏதும் கோபமா????]//

    இந்த டெம்ப்ளேட் கொஞ்சம் சிம்பிளா இருக்கற மாதிரி இருந்துச்சு…

    ஒரே டெம்ப்ளேட் பார்த்து போர் அடிச்சுடுச்சி…

    அதுவும் இல்லாமல் அந்த பொண்ணு இருக்கறதால தான் ஒரே லவ் ஸ்டோரியா வருது வாஸ்து சரியில்லைனு கொஞ்சம் பேர் சொன்னாங்க… அதனால மாத்தியாச்சு :-))

  31. //
    opposite ல போய்டு இருந்த ரெண்டு வண்டியும் லேசா டிராக் மாறி இப்போ பக்கதுல வர மாதிரி இருக்கு…சீக்கிரம் parallel ஆ போகும்னு நினைக்கறேன்… 🙂
    //

    நாட்டாம, சரியா கேட்டிங்க… 🙂

    நானும் அதத்தான் எதிர்பாக்குறேன் 🙂

நாமக்கல் சிபி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி