நெல்லிக்காய் – 2

காய் 1

அந்த குளிருட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்த பனிரெண்டு பேருக்குமே அவர்களின் முகத்திலிருந்த வழிந்த வேர்வை அவர்களின் பயத்தைக்
காட்டி கொடுத்து கொண்டிருந்தது. எப்படியும் வேலை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருந்தது.

அந்த அறையின் மேற்பார்வையாளர் க்ரூப் டிஸ்கஷனை ஆரம்பிக்குமுன் அனைவரையும் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ள சொன்னார். அனைவரின் பெயரையும் நன்கு உன்னிப்பாக கவனித்தான் அருண். அவன் கவனிக்க வேண்டாமென்று நினைத்தும் அவன் மனதில் அந்த பெயர் பதிந்தது. தீபா
என்ற இரண்டு எழுத்து மனதில் பதிய ஒரு நொடிக்கூட தேவைப்படவில்லை.

குருப் டிஸ்கஷனை துவங்கலாம் என்று மேற்பார்வையாளர் சொன்னவுடன் தீபாதான் ஆரம்பித்தாள். தெளிவாக ஆங்கிலத்தில் பேசினாள். நண்பர்களே
நாம் அனைவரும் பங்குபெறும் வகையில் ஒரு நல்ல தலைப்பை தேர்ந்தெடுப்போம். நீங்கள் விரும்பும் பட்சத்தில் இந்த தலைப்பில் விவாதிக்கலாம். காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணமா? இரண்டில் எது சிறந்தது? அனைவரும் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்டனர்.

அருணுக்கு இந்த தலைப்பு சுத்தமாக பிடிக்கவில்லை. தீபாவளியன்று சன் டீவியில் வரும் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற தலைப்பை
போலிருந்தது தீபா கொடுத்த தலைப்பு. அனைவரும் ஒத்துக்கொண்ட நிலையில் அருண் பேச ஆரம்பித்தான்.

நண்பர்களே! நாட்டில் பல பிரச்சனைகளிருக்கும் போது இந்த மாதிரி தலைப்புகளில் விவாதிப்பது நேர விரயமே! நான் இன்று வரும் வழியில் பல பேர் பிச்சையெடுத்து கொண்டிருந்தார்கள். அதற்கு தங்கள் இரக்ககுணத்தை காட்டுகிறோமென்று ஒரு சிலர் அவர்களை ஊக்கப்படுத்தி கொண்டிருந்தனர்.
அதை பார்த்து யார் மேல் தவறு அதிகமென்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் விரும்பும்பட்சத்தில் இதை பற்றியும் விவாதிக்கலாமே!வழக்கம் போல் அனைவரும் இதற்கும் ஒத்துக்கொண்டனர்.

தீபாவிற்கு கோபமாக வந்தது. இது தன்னை தாக்கி நடக்கும் விவாதமென்று நன்றாக புரிந்து கொண்டாள். அவளால் பேச முடியவேயில்லை.
அனைவரும் அரசையும், அரசியல்வாதிகளையும் தாக்கி பேசிக்கொண்டிருந்தனர். அனைவரையும் பெயர் சொல்லி கூப்பிட்டதால் அருணையே தலைவனாக ஏற்று கொண்டனர். அந்த விவாதத்தில் பங்கு பெற முடியாமலிருந்த 4 பேரையும் வரிசையாக கூப்பிட்டு அவர்களின்
கருத்துக்களையும் கேட்டான் அருண் (தீபாவை தவிர). இறுதியாக தீபாவை கூப்பிட்டு அவளை முடிவுரை கொடுக்குமாறு சொன்னான் அருண்.

அவளுக்கு அவன் கட்டளையிட்டது பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனுக்கு மூக்கு உடைய வேண்டுமென்று பேச ஆரம்பித்தாள்.”நண்பர்களே நம் நாட்டில் மக்கள் பிச்சையெடுப்பது கவலையான விஷயம்தான். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிச்சை ஒழிய வேண்டுமே ஒழிய பிச்சைக்காரர்கள் அல்ல. ஒருவன் பசியால் இருக்கும் போது அவனுக்கு மீனை கொடுத்து பிறகுதான் மீன் பிடிக்க கற்று கொடுக்க
வேண்டுமேழொழிய பசியால் வாடுகிறவனுக்கு மீன் பிடிக்க சொல்லி கொடுத்தால் அது அவன் மனதிலும் பதியாது. சொல்லி கொடுப்பவனுக்கு பசியின் வலி தெரியாது. பசியோடு இருப்பவனால் மீன் கிடைக்கும் வரை காக்கவும் முடியாது. அதனால் மனிதாபிமானத்தால் ஒருவனுக்கு உதவுவது
தவறல்ல. அவனை தனக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமென்று நினைப்பதுதான் தவறு.” என்று தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசி
முடித்தாள்.

முடிவுரையென்பதால் யாரும் எதுவும் பேச முடியவில்லை. அருணையும் சேர்த்து.

ஒரு மணி நேரத்தில் தேர்வானவர்களின் பெயரை அறிவித்தார்கள். அதில் அருணின் பெயர் இருந்தது. அதன் பிறகு அன்றே நேர்முகத்தேர்வை
முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, யாருடனும் பேசாமல் அடுத்த தேர்வுக்கு தயாரானான்.

இரண்டாவது நாள் அவனுக்கு அந்த xxxxx கம்பெனியிலிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. ஒரு வாரத்தில் அந்த கம்பெனியின் சென்னை கிளையில் வந்து சேருமாறு மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தது. அன்றே பெங்களூரிலிருந்து சொந்த ஊருக்கு கிளம்பினான் அருண்.

நண்பர்களிடம் சொல்லி கிளம்பலாம் என்று தோன்றியும் அவர்கள் செய்தது அவனால் மன்னிக்கவே முடியாததாக இருந்ததால் அவர்களுக்கு
மின்னஞ்சலில் தகவல் சொல்லிவிட்டு ஊருக்கு பயணமானான்…

ஒரு வாரம் முடிந்த நிலையில் சென்னையில் திருமண மண்டபம் போல் விசாலமான அந்த கான்ஃபரன்ஸ் அறையில் கழுத்தில் டையுடன்
அமர்ந்திருந்தான் அருண். அந்த அறையில் 100க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்கள் முகத்தில் மகிழ்ச்சியுடனும் ஒரு விதமான எதிர்பார்ப்புடனும் அமர்ந்திருந்தனர். அந்த அறையில் அருணால் தீபாவை எளிதாக கண்டிபிடிக்க முடிந்தது. தீபாவாலும் தான்…

(தொடரும்…)

அடுத்த பாகம்

43 பதில்கள்

 1. 2ஆவது நெல்லிக்காயும் நல்லா இருக்கு…

 2. மிக்க நன்றி உதய்…

  எழுது எழுதுனு சொல்லிட்டு யாரும் வரலை 😡

 3. முதல் பகுதியை விட இது அருமையா இருக்கு அடுத்தது இதைவிட சிறப்பா வரணும்.

  காற்றில் ஓர் வார்த்தை மிதந்து வரக் கண்டேன்…

  “எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே வெட்டி” !!

 4. தம்பி,
  நக்கல் பண்ணல இல்லை 🙂

  அப்பறம் நீங்க அடுத்த பதிவ போடறது…

 5. இந்தத் தொடரின் இரண்டு பாகங்களையும் இப்போத் தான் படிச்சேன்…நல்லாப் போகுதுய்யா ம்ம் அடுத்து என்ன நடக்கப் போகுது காதலா? மோதலா?

 6. தல கதையோட நடை சூப்பரா போய்ட்டு இருக்கு….. ஆனா நான் எதிர்பார்த்த மாதிரியே தான் போகுது….. பாக்கலாம் எங்க திருப்பம் கொண்டு வர்றீங்கன்னு…..

  //அந்த அறையில் 100க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்கள் முகத்தில் மகிழ்ச்சியுடனும் ஒரு விதமான எதிர்பார்ப்புடனும் அமர்ந்திருந்தனர்//

  :))))))))) ம்ம்ம் நானும் இப்பத்தான ஜாயின் பண்ணேன்… உண்மையான வார்த்தைகள்…….

  //எழுது எழுதுனு சொல்லிட்டு யாரும் வரலை 😡

  சாரி தல கொஞ்சம் லேட் ஆயிடுச்சு…….

 7. //தேவ் | Dev said…
  இந்தத் தொடரின் இரண்டு பாகங்களையும் இப்போத் தான் படிச்சேன்…நல்லாப் போகுதுய்யா ம்ம் அடுத்து என்ன நடக்கப் போகுது காதலா? மோதலா?//
  மிக்க நன்றி தேவ்…

  காதல் இருக்கும்னு நினைக்கிறேன் 😉

 8. //அமுதன்

  அமுதன் said…
  தல கதையோட நடை சூப்பரா போய்ட்டு இருக்கு….. ஆனா நான் எதிர்பார்த்த மாதிரியே தான் போகுது….. பாக்கலாம் எங்க திருப்பம் கொண்டு வர்றீங்கன்னு….. //

  அமுதா,
  வித்யாசமா எழுதலாம்தான்… ஆனா எப்படியும் காதல் கதைல ரெண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுதானே ஆகனும்… வளர்க்க வேண்டாம்னு விட்டுட்டேன் 😉

  //:))))))))) ம்ம்ம் நானும் இப்பத்தான ஜாயின் பண்ணேன்… உண்மையான வார்த்தைகள்…….//
  தீபா மாதிரி யாராவது இருந்தாங்களா?

  //சாரி தல கொஞ்சம் லேட் ஆயிடுச்சு……. //
  பிரச்சனையில்லப்பா…. ஒழுங்கா படி!!!

 9. தீபா மாதிரி யாராவது இருந்தாங்களா?

  தீபா மாதிரியா??? நெறைய பேரு இருக்காங்க…. :))))))))))))ஆனா காதல் கதைல்லாம் இல்ல….

 10. இன்னமும் இண்ட்ரோதான் ஓடுது. தொடர்கதை அப்படிங்கறதுனால நிதானமா கொண்டு போறீங்க போல. வெயிட்டிங்.

 11. //
  தீபா மாதிரியா??? நெறைய பேரு இருக்காங்க…. :))))))))))))ஆனா காதல் கதைல்லாம் இல்ல….//
  ஆஹா… அப்ப நிறைய எதிர்பார்க்கலாம் போல இருக்கே 😉

 12. //இலவசக்கொத்தனார் said…

  இன்னமும் இண்ட்ரோதான் ஓடுது. தொடர்கதை அப்படிங்கறதுனால நிதானமா கொண்டு போறீங்க போல. வெயிட்டிங். //

  ஆமாம் கொத்ஸ்…
  வீக் எண்ட்ல எப்படியும் மீதியெ போட்டு முடிக்க பாக்கிறேன் 🙂

 13. சின்னப் பயலே வெட்டிப் பயலே கலக்கரீங்களே

  ஸுப்பர் ப்லாக்

  உஙளை எல்லாம் பார்த்து நானும் இரங்கி இருக்கேன்

  அடியேன் ப்லாக்
  kittu-mama-solraan.blogspot.com

  உங்கள் கருத்தை தூவவும் தலைவா!!

 14. வெட்டி,
  ரொம்ப நல்லா போயிட்டுருக்குப்பா…சூப்பர் நடை. அடுத்தது எப்போ?

 15. //Kittu said…

  சின்னப் பயலே வெட்டிப் பயலே கலக்கரீங்களே

  ஸுப்பர் ப்லாக்

  உஙளை எல்லாம் பார்த்து நானும் இரங்கி இருக்கேன்

  அடியேன் ப்லாக்
  kittu-mama-solraan.blogspot.com

  உங்கள் கருத்தை தூவவும் தலைவா!! //

  மிக்க நன்றி கிட்டு…
  இதோ வந்துட்டேன்!!!

 16. //கைப்புள்ள said…

  வெட்டி,
  ரொம்ப நல்லா போயிட்டுருக்குப்பா…சூப்பர் நடை. அடுத்தது எப்போ? //
  கைப்ஸ்,
  மிக்க நன்றி!!!
  அடுத்து சீக்கிரமே வரும்…

 17. எல்லாப் பகுதியும் படிச்சிட்டு பின்னூட்டம் இடலாம் என்று தான் இருந்தேன்..
  சரி, இப்போதைக்கு என் விமர்சனம்-“அடுத்த பகுதிய சீக்கிரம் போடவும்!”
  மற்றவை சஸ்பன்ஸ்..நீ மட்டும் தான் (தொடரும்) போடுவியா :))

 18. //எல்லாப் பகுதியும் படிச்சிட்டு பின்னூட்டம் இடலாம் என்று தான் இருந்தேன்..
  சரி, இப்போதைக்கு என் விமர்சனம்-“அடுத்த பகுதிய சீக்கிரம் போடவும்!”
  //
  சீக்கிரம் போடறேனப்பா!!! நான் என்ன வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணறேன் 😉

  //மற்றவை சஸ்பன்ஸ்..நீ மட்டும் தான் (தொடரும்) போடுவியா :))//
  ஆஹா… நல்லா கெளம்பறாங்கயா?
  இத பார்த்து யாராவது பின்பற்றினால் நம்ம கதை அவ்வளவுதான் 🙂

 19. அப்படிப் போடுங்க வெட்டி. பதிலுக்குப் பதிலா. முக்தா சீனிவாசரு படத்துல இப்படித்தான் ஏட்டிக்குப் போட்டியா இருக்கும். அந்தப் பையலும் சரியாத்தான் சொல்லீருக்கான். இந்தப் பிள்ளையும் சரியாத்தான் சொல்லீருக்கு. என்னாகுமோ! என்னாகும்! காதல் வரும். வந்துதானே ஆகனும்.

 20. மோதல் நடந்தாச்சு…அடுத்த எபிசோட்ல காதலா? இல்லை இன்னும் மோதல் தொடருமா??

  ஐ யாம் தி வெயிட்டிங் 😉

 21. //G.Ragavan said…

  அப்படிப் போடுங்க வெட்டி. பதிலுக்குப் பதிலா. முக்தா சீனிவாசரு படத்துல இப்படித்தான் ஏட்டிக்குப் போட்டியா இருக்கும். அந்தப் பையலும் சரியாத்தான் சொல்லீருக்கான். இந்தப் பிள்ளையும் சரியாத்தான் சொல்லீருக்கு. என்னாகுமோ! என்னாகும்! காதல் வரும். வந்துதானே ஆகனும். //

  ஆமாம் ஜி.ரா…
  இப்பெல்லாம் இந்த மாதிரி ஏட்டிக்கு போட்டியா சண்டை போட்டுக்கறதுங்கதான் கடைசியா லவ் பண்ண ஆரம்பிச்சிடுதுங்க 🙂

 22. //கப்பி பய said…

  மோதல் நடந்தாச்சு…அடுத்த எபிசோட்ல காதலா? இல்லை இன்னும் மோதல் தொடருமா??

  ஐ யாம் தி வெயிட்டிங் 😉 //

  இன்னும் கொஞ்சம் மோதவிடலாம்னு பார்க்கிறேன் 🙂

 23. நல்லா சுவாரஸ்யமா போகுது பாலாஜி.

  //முடிவுரையென்பதால் யாரும் எதுவும் பேச முடியவில்லை. அருணையும் சேர்த்து.//
  இதற்கு அருண் என்ன சொல்லிருப்பாருங்கிறத இனி வரும் பதிவுல சொல்வீங்களா? இல்லைனா இந்த பின்னூட்டத்துல சொல்லுங்களேன்.. it helps picturing Arun’s character! 🙂

  -விநய்

 24. வெட்டி இன்னும் எத்தனை episode மோதல், எப்போ காதல் மலரும்???, கதை நல்லா போய்ட்டு இருக்குது, அடுத்த பாகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 25. நீங்க யாருடனாவது சண்டை போட்டிருக்கீங்களா? 😉

 26. //Divya said…

  வெட்டி இன்னும் எத்தனை episode மோதல், எப்போ காதல் மலரும்???, கதை நல்லா போய்ட்டு இருக்குது, அடுத்த பாகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். //

  தெரியலைங்க திவ்யா…
  இது வரைக்கும் யோசிச்ச கதைய இப்ப மாத்தலாமானு யோசிச்சிட்டு இருக்கேன் 😉
  பாக்கலாம்… எப்படி கொண்டு போறேனு

 27. //கப்பி பய said…

  நீங்க யாருடனாவது சண்டை போட்டிருக்கீங்களா? 😉 //

  நானா?

  நிறைய பேர்கூட 🙂

 28. // Anonymous said…

  நல்லா சுவாரஸ்யமா போகுது பாலாஜி.

  //முடிவுரையென்பதால் யாரும் எதுவும் பேச முடியவில்லை. அருணையும் சேர்த்து.//
  இதற்கு அருண் என்ன சொல்லிருப்பாருங்கிறத இனி வரும் பதிவுல சொல்வீங்களா? இல்லைனா இந்த பின்னூட்டத்துல சொல்லுங்களேன்.. it helps picturing Arun’s character! 🙂

  -விநய் //

  நான் இதை பத்தி யோசிக்கலையே…
  பின்னாடி ரெண்டு பேரும் இதை பத்தி பேசர மாதிரி ஒரு சீனை வெச்சிடுவோம்…

  ஆனால் அப்ப ரெண்டு பேரும் அடுத்தவங்க சொன்னதுதான் சரினு சொல்லுவாங்க 🙂

 29. சூப்பர்…ஆனா இன்னும் முடியலயா..சரி வைட்டிங் லிஸ்ட் தான்…அருணும் தீபாவும் விடாக்கொண்டன் கொடாக்கொண்டனா இருப்பாங்க போல 🙂

 30. //Syam said…

  சூப்பர்…ஆனா இன்னும் முடியலயா..சரி வைட்டிங் லிஸ்ட் தான்…அருணும் தீபாவும் விடாக்கொண்டன் கொடாக்கொண்டனா இருப்பாங்க போல 🙂 //

  அதுக்குள்ள முடிஞ்சிடுமா என்ன?
  இன்னும் குறைஞ்சபட்சம் இன்னும் 2-3ஆவது இருக்கும் 🙂

  எதுக்குங்க விட்டு கொடுக்கனும்னு இப்ப நினைக்கறாங்க 🙂

 31. //Syam said…

  போன போஸ்ட அதே ஓ.எஸ் தான் தெறிஞ்சது ஆனா இந்த போஸ்ட் பேக் டு வட்டம் சதுரம்… 🙂 //

  latha font install பண்ணுங்க…

  நேத்து என் ஃபிரெண்ட் ஒருத்தவனுக்கு அதுக்கு அப்பறம் படிக்க முடிஞ்சிது…

  உங்களுக்கு வந்துச்சுனா சொல்லுங்க

 32. பாலாஜி

  ரொம்ப நாளாச்சு கமல்-ஸ்ரீதேவி படம் பாத்து; அதுல தான் கருத்து மோதல் காதல்-ல போய் முடியும்! (வறுமையின் நிறம் சிகப்பு ஒரு பெஸ்ட் எ.கா.);
  இப்ப எல்லாம் கருத்து மோதல் இல்லையே; சும்மனாங்காட்டியும் வர மோதல் தானே!

  கதையின் நடை சூப்பர்! நடு நடுவே ஒரு ஜ.டி.யில் எப்படி வெற்றி அடைய வேண்டும் என்று வேறு சொல்லாமல் சொல்லி உள்ளீர்கள்!
  வாழ்த்துக்கள்!

  அருணின் பெயரை அன்று அறிவித்து, தீபாவின் பேரை இன்று் அறிவித்தார்களா? – இப்படி சீரியல் சஸ்பென்ஸ் வைக்கறீங்களே! :-))

 33. The story is good. It will great if you add more spices to it

 34. எங்கள் தங்கம் அருண் கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க நாயகியின் பெயரை தீபா என வைத்த வெட்டிப்பயல் வாழ்க!!! ஆனா நம்ம பைய அருண் கனவுல இருக்கான் போல இருக்கு… இந்த பக்கம் வரக் காணோம்…

 35. //latha font install பண்ணுங்க…//

  பண்ணிட்டேங்க இப்பொ சரியா தெரியுது…ரொம்ப டேங்ஸ் 🙂

 36. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  பாலாஜி

  ரொம்ப நாளாச்சு கமல்-ஸ்ரீதேவி படம் பாத்து; அதுல தான் கருத்து மோதல் காதல்-ல போய் முடியும்! (வறுமையின் நிறம் சிகப்பு ஒரு பெஸ்ட் எ.கா.);
  //
  ஓ!!! இதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை KRS…

  // இப்ப எல்லாம் கருத்து மோதல் இல்லையே; சும்மனாங்காட்டியும் வர மோதல் தானே!
  //
  மோதல பத்தி யாரும் கவலையேப்படறதில்லையே!!! எல்லாரும் காதலை பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள் 😉

  //
  கதையின் நடை சூப்பர்! நடு நடுவே ஒரு ஜ.டி.யில் எப்படி வெற்றி அடைய வேண்டும் என்று வேறு சொல்லாமல் சொல்லி உள்ளீர்கள்!
  வாழ்த்துக்கள்!
  //
  ஆமாம் KRS…
  GDல ரெண்டு பேரும் சண்டை போட்டாங்கனு சொல்லியிருக்கலாம். ஆனா ஒரு GDயில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதும் ஓரளவு சொல்லியிருக்கிறேன்.
  மற்றவரின் பெயரை ஞாபகம் வைத்து கொண்டாலே பாதி செலக்ட் ஆன மாதிரி.
  அதை போலவே பேசாதவர்களுக்கு பேச வாய்ப்பளித்தால் மீதி பாதி.அவ்வளவுதான் 🙂

  //
  அருணின் பெயரை அன்று அறிவித்து, தீபாவின் பேரை இன்று் அறிவித்தார்களா? – இப்படி சீரியல் சஸ்பென்ஸ் வைக்கறீங்களே! :-)) //

  சஸ்பென்ஸ் வைக்கனும்னு இல்லை… தானா அமைஞ்சது. அன்னைக்கு அந்த பெண்ணின் பெயர் சொல்ல வேண்டிய அவசியமில்லாமல் போயிடுச்சு 🙂

 37. //Senthil Kumar S P said…

  The story is good. It will great if you add more spices to it //
  Thx a lot senthil…
  Not a problem, we can add it from next part 😉

 38. //Syam said…

  //latha font install பண்ணுங்க…//

  பண்ணிட்டேங்க இப்பொ சரியா தெரியுது…ரொம்ப டேங்ஸ் 🙂 //

  ஆஹா… ஒரு வழியா நம்ம ப்ளாக் படிக்க ஒரு ஃபாண்ட் கண்டுபிடிச்சாச்சு 😉

 39. ரெண்டாவது நெல்லிக்காயும் நல்ல இருக்கு.. ஒரே தம்முல படிக்கிற மாதிரி எழுதி இருக்கீங்க வெட்டிபயலே.. தீபா..அருண்..காதல் செய்ய நல்ல பேரா இருக்கு.. பார்ப்போம் செய்றாங்களா இல்ல எல்லோரும் எதிர்பார்ப்பாங்கன்னு கதையோட்டத்தை மாத்த போறீங்களான்னு

 40. //மு.கார்த்திகேயன் said…
  ரெண்டாவது நெல்லிக்காயும் நல்ல இருக்கு.. ஒரே தம்முல படிக்கிற மாதிரி எழுதி இருக்கீங்க வெட்டிபயலே.. தீபா..அருண்..காதல் செய்ய நல்ல பேரா இருக்கு.. பார்ப்போம் செய்றாங்களா இல்ல எல்லோரும் எதிர்பார்ப்பாங்கன்னு கதையோட்டத்தை மாத்த போறீங்களான்னு
  //
  மிக்க நன்றி கார்த்திகேயன்…
  அருணோட விருப்பத்துக்கேத்த மாதிரி தான் தீபானு ஹீரோயின் பேர் வெச்சேன் 😉

 41. //Udhayakumar said…
  எங்கள் தங்கம் அருண் கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க நாயகியின் பெயரை தீபா என வைத்த வெட்டிப்பயல் வாழ்க!!! ஆனா நம்ம பைய அருண் கனவுல இருக்கான் போல இருக்கு… இந்த பக்கம் வரக் காணோம்…
  //
  மிக்க நன்றி உதய்..

  அவரை பார்த்தா இந்த பக்கம் வர சொல்லுங்க 🙂

 42. அடடா ரொம்ப லேட் பண்ணிட்டேனே…. ஊரு விட்டு ஊரு வந்ததுல மிஸ் ஆயிடுச்சு 😦

  //
  கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க நாயகியின் பெயரை தீபா என வைத்த வெட்டிப்பயல் வாழ்க!!!
  //

  அதே அதே… நன்றி வெட்டி. நான் இன்னும் 3,4,5 படிக்கல… நம்மல தீபா கூட சேத்து வச்சிருப்பீங்க-னு நினைக்கிறேன் 🙂

  கதை சூப்பரா போகுது.

  நெக்ஸ்ட் 3rd-ல மீட் பண்றேன் 🙂

  -அருண்

 43. அப்படி போடுங்க.. ரெண்டு பேருக்கும் ஒரே ஆபிஸ்லதான் வேலையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: