வலைப்பதிவர் சந்திப்பு – பாஸ்டன்

நண்பர்களே,
ஏற்கனவே நம்ம பாபா சொன்ன மேட்டர்தான்… வர சனிக்கிழமை நம்ம பாஸ்டன் ஏரியாவுல வலைப்பதிவர் சந்திப்பு நடக்க போகுது. வலைப்பதிவர் சந்திப்புனா வலைப்பதிபவர்கள் மட்டும் இல்லை. படிக்கறவங்களும் தாராளமா வரலாம்.

உங்களை கேள்வி எல்லாம் கேட்டு யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. சும்மா என்ன பேசறாங்கனு நம்ம கேட்டுட்டு அப்பப்ப ஏதாவது கருத்து சொல்லிட்டு வரலாம். கருத்து இல்லைனாலும் பரவால தாராளமா வாங்க. நல்ல சாப்பாடு கிடைக்கும். இதையெல்லாம் நம்பி தான் நானும் போறேன் 🙂

சரி யார் யார் வராங்கனு பார்க்கலாம்…

தேன் துளி பத்மா அரவிந்த்
நவன்’ஸ் வெப்லாக
பார்வை
மெய்யப்பன்
வேல் முருகன்
பாஸ்டன் பாலா
கண்ணபிரான ரவி சங்கர்
பாடும் நிலா பாலு சுந்தர்
வெயிலில் மழை ஜி

இடம்: பாஸ்டன்
நாள்: டிசம்பர் 16, சனிக்கிழமை
நேரம்: மதியம் 2 மணியிலிருந்து…

தொடர்புக்கு: bsubra@yahoo.com அல்லது bsubra@gmail.com

ஏற்கனவே பாபா நிறைய வாக்குறுதி கொடுத்திருக்காரு… நானும் என் பங்குக்கு ஒண்ணு கொடுக்கறேன்…

1. அடுத்து வரும் உங்கள் பதிவுக்கு நீங்கள் விரும்பும் பட்சத்தில் 10 – 100 வரை பின்னூட்டங்கள் அளிக்கப்படும்.

we will meet… will meet… meet

47 பதில்கள்

  1. ரிப்பீட்டூ…

  2. டிக்கெட்டு எடுத்து அனுப்புய்யா!

    நல்ல சந்திப்பா அமையட்டும்!

    நான் இட்லிவடைய பாத்தேன்னா சேதி சொல்லிடறேன். :))))

  3. இங்கு சிறந்த முறையில் போண்டாக்கள் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும். முக்கியமாக வலைப்பதிவர் சந்திப்புக்கு குறைந்த கட்டணமே.

    முன்பதிவு இலவசம்.

  4. —நான் இட்லிவடைய பாத்தேன்னா —

    ஆஹா… அப்படி பார்த்து விட்டால், யார் என்பதை எனக்கு மட்டுமாவது சொல்லவும் : )

  5. //போண்டா கடை ஓனர் said…
    இங்கு சிறந்த முறையில் போண்டாக்கள் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும். முக்கியமாக வலைப்பதிவர் சந்திப்புக்கு குறைந்த கட்டணமே.

    முன்பதிவு இலவசம்.//

    அட்ரஸ் கொடுக்க மறந்திட்டீங்க ஓனர். கொடுத்தீங்கன்னா ஆர்டர் பண்றதுக்கு வசதியா இருக்கும்.

  6. //ஜி said…

    ரிப்பீட்டூ… //

    We will meet. will meet.. meet…

  7. //தம்பி said…

    டிக்கெட்டு எடுத்து அனுப்புய்யா!
    //
    எதுக்குப்பா டிக்கெட்டெல்லாம் பாஸ்டனுக்கு வந்து ஒரு போனை போடு வந்து கூப்பிட்டு போயிக்கறோம் 😉

    //
    நல்ல சந்திப்பா அமையட்டும்!
    //
    மிக்க நன்றி!!! நானும் நீ பண்ணத தான் பண்ண போறேன் 😉

    //
    நான் இட்லிவடைய பாத்தேன்னா சேதி சொல்லிடறேன். :)))) //
    நீ தான் அந்த ஆளா??? இப்பதான் புரியுது.

  8. // போண்டா கடை ஓனர் said…

    இங்கு சிறந்த முறையில் போண்டாக்கள் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும். முக்கியமாக வலைப்பதிவர் சந்திப்புக்கு குறைந்த கட்டணமே.

    முன்பதிவு இலவசம். //

    ஃப்ரீ டெலிவரி இருக்கா?
    அப்படினா அட்ரஸ் தரேன்… தனி மடலில் தொடர்பு கொள்ளவும் 😉

  9. பாஸ்டன் தேநீர் விருந்து மாறி ஹிஸ்டரில வலைப்பதிவர்களின் பாஸ்டன் போண்டா விருந்தா இது அமையும்னு நினைக்கிறேன் :))))

  10. //ஜி said…
    அட்ரஸ் கொடுக்க மறந்திட்டீங்க ஓனர். கொடுத்தீங்கன்னா ஆர்டர் பண்றதுக்கு வசதியா இருக்கும்.//

    அட்ரஸ் கொடுங்க; ஆனா கொடுத்தா
    ஆர்டர் அனுப்புவாங்களா இல்லை
    ஆட்டோ அனுப்புவாங்களா?:-)

    பாத்துப்பா பாத்து! எதுக்கும் நம்ம் ஜி profile ஐ ஒரு எட்டு பாத்துட்டு வாங்க! //உறைந்த ரத்தம் நான் உறுஞ்சும் வாசம்! உருண்டோடும் தலைகள் நான் எட்டி விளையாடும் பந்துகள்! // :-)))

  11. சூப்பரா என்சாய்ய்ய்ய்ய்ய்ய் பண்ணுங்க 🙂

  12. ******* kannabiran, RAVI SHANKAR (KRS) said…
    அட்ரஸ் கொடுங்க; ஆனா கொடுத்தா
    ஆர்டர் அனுப்புவாங்களா இல்லை
    ஆட்டோ அனுப்புவாங்களா?:-)

    பாத்துப்பா பாத்து! எதுக்கும் நம்ம் ஜி profile ஐ ஒரு எட்டு பாத்துட்டு வாங்க! //உறைந்த ரத்தம் நான் உறுஞ்சும் வாசம்! உருண்டோடும் தலைகள் நான் எட்டி விளையாடும் பந்துகள்! // :-))) ******

    ஒரு எஃபெக்டுக்காகப் போட்டதுக்கா இப்படி ஒரு ரத்தவெறி. நல்லவேளை என்னோட profileல அட்ரஸ் போடல. தேடி வந்து அடிப்பீங்க போலிருக்கே!

  13. அனானி நண்பரே,
    என் பதிவுல எந்த சாதி பெயரும் வெளியிட மாட்டேனு ஏற்கனவே சொல்லியதால் உங்களுடைய பின்னூட்டத்தை பப்ளீஷ் பண்ண முடியல. மன்னிக்கவும்.

    நீங்க நினைக்கிற எந்த கூட்டத்திலும் நான் இல்லை 🙂

  14. 😦 naan bostonla illaiya.. sari nalla sandichu enjoy pannunga!

  15. Hope and wish the Boston bloggers meet goes on well!

    [வெட்டி, சனிக்கிழமை இரவே பாஸ்டன் ப்ளாக்கர்ஸ் மீட் பற்றிய செய்திகள் உங்கள் பதிவில் எதிர் பார்க்கலாமா??]

  16. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

    //சரி யார் யார் வராங்கனு பார்க்கலாம்…//

    பாலாஜி; உங்க பேரைக் காணோமே! வர்ர்ர்ரீங்க ல?
    அதானே மாப்பிள்ளை இல்லாம கண்ணாலமா? :-))//

    ஆஹா… ஆட்டத்தை இப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா???

    பத்திரிக்கை வெச்சிட்டு வராம போயிடுவேனா?

  17. //Arunkumar said…

    சூப்பரா என்சாய்ய்ய்ய்ய்ய்ய் பண்ணுங்க :)//

    மிக்க நன்றி அருண்…

  18. சந்திப்பு ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாய் அமைய வாழ்த்துகள் 🙂

  19. —அடியேனை எப்படி மறந்தீங்க! உங்களுக்கு மட்டுமாவது சொன்னதை எனக்கு மட்டுமாவது—

    என்கிட்ட ஒரு ரகசியம் சொன்னா பத்திரமா காப்பாத்திடுவேன்… வலைப்பதிவில் மட்டுமே இடுவேன். தனியா எல்லாம் சொல்லமாட்டேன் 😉

  20. யப்பா இப்போவே வாழ்த்துக்கள சொல்லிடரேன்…அப்பத்தான் பின்னாடி கலாய்க்கும் போது யாராவது கேள்வி கேட்டா சொல்ல வசதியா இருக்கும். (பலருக்கும் மறந்திருக்கலாம் சென்னை சந்திப்பு பற்றி கலாய்க்கும் போது எழுந்த கேள்வி).

  21. //கருத்து இல்லைனாலும் பரவால தாராளமா வாங்க. நல்ல சாப்பாடு கிடைக்கும். இதையெல்லாம் நம்பி தான் நானும் போறேன் :-)//

    ம்ம்ம்… கொடுத்து வச்சவுங்க.. ஜமாயுங்க.. 🙂
    உங்கள் சந்திப்பு இனிமையாக அமையட்டும்! வாழ்த்துக்கள்!!

  22. Also, please send conference bridge number for domestice participants and International participants & pass code for remote bloggers 🙂

    – Unmai

  23. ரிப்பீட்டூ…

    சரி வெட்டி உன்னோட தூறல் கதை ஊர்ரெல்லாம் மெயில சுத்துது.

    :))))))))))))))))

  24. //Dreamzz said…

    😦 naan bostonla illaiya.. sari nalla sandichu enjoy pannunga! //

    ட்ரீம்ஸ்,
    நீங்க இருக்கற ஏரியாவுல யாரையாவது புடிச்சி மீட் போட்டுடுங்க.. அவ்வளவுதான் 😉

  25. //Divya said…

    Hope and wish the Boston bloggers meet goes on well!
    //
    Thx a lot!!!

    //
    [வெட்டி, சனிக்கிழமை இரவே பாஸ்டன் ப்ளாக்கர்ஸ் மீட் பற்றிய செய்திகள் உங்கள் பதிவில் எதிர் பார்க்கலாமா??] //
    கொஞ்சம் கஷ்டம்தான்.. பார்க்கலாம் 🙂

  26. //சுதர்சன்.கோபால் said…

    சந்திப்பு ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாய் அமைய வாழ்த்துகள் 🙂 //

    மிக்க நன்றி ஓமப்பொடியாரே!!!
    பெங்களூர் வரும்போது பெருசா ஏற்பாடு பண்ணிடலாம் 😉

  27. //அரை பிளேடு said…

    பாஸ்டன் தேநீர் விருந்து மாறி ஹிஸ்டரில வலைப்பதிவர்களின் பாஸ்டன் போண்டா விருந்தா இது அமையும்னு நினைக்கிறேன் :)))) //

    வரலாற்றுல இடம் பிடிக்கும்னு சொல்றீங்க.. பாக்கலாம் 😉

  28. //Boston Bala said…

    —அடியேனை எப்படி மறந்தீங்க! உங்களுக்கு மட்டுமாவது சொன்னதை எனக்கு மட்டுமாவது—

    என்கிட்ட ஒரு ரகசியம் சொன்னா பத்திரமா காப்பாத்திடுவேன்… வலைப்பதிவில் மட்டுமே இடுவேன். தனியா எல்லாம் சொல்லமாட்டேன் 😉 //
    ஆஹா.. அப்ப சீக்கிரமே வலைப்பதிவுல போட்டுடுவீங்களா???
    தம்பி நீ எங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டாம். பாபாக்கு மட்டும் சொல்லு போதும் 😉

  29. // Anonymous said…

    யப்பா இப்போவே வாழ்த்துக்கள சொல்லிடரேன்…அப்பத்தான் பின்னாடி கலாய்க்கும் போது யாராவது கேள்வி கேட்டா சொல்ல வசதியா இருக்கும். (பலருக்கும் மறந்திருக்கலாம் சென்னை சந்திப்பு பற்றி கலாய்க்கும் போது எழுந்த கேள்வி).//

    அனானி நண்பரே,
    வாழ்த்துக்கு நன்றி!!!
    கொஞ்சம் பார்த்து கலாய்ங்க… நாங்க எல்லாம் பாவம் 😉

  30. //கத்துக்குட்டி said…

    //கருத்து இல்லைனாலும் பரவால தாராளமா வாங்க. நல்ல சாப்பாடு கிடைக்கும். இதையெல்லாம் நம்பி தான் நானும் போறேன் :-)//

    ம்ம்ம்… கொடுத்து வச்சவுங்க.. ஜமாயுங்க.. 🙂
    உங்கள் சந்திப்பு இனிமையாக அமையட்டும்! வாழ்த்துக்கள்!! //

    மிக்க நன்றி கத்துக்குட்டி…
    நானும் வலைப்பதிவுக்கு கத்துக்குட்டி தான்

  31. // Anonymous said…

    Also, please send conference bridge number for domestice participants and International participants & pass code for remote bloggers 🙂

    – Unmai //
    உண்மை,
    இது எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியல.. இப்படி ஏதாவது ப்ளான் இருந்தால் நிச்சயம் தெரிவிக்கிறேன் 🙂

  32. வரலாறு காணாத படை திரளும் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள்.
    ரவி , எல்லாவற்றையும் பதிவு செய்ய வீடியோக்ராபர் ரெடியா.
    பாலாஜி
    வராதவங்களுக்கும் சாப்பாடு யு.பி எஸில் அனுப்புவீர்களா.:-))
    Have a GooD TIME.

  33. //நாடோடி said…

    ரிப்பீட்டூ…

    சரி வெட்டி உன்னோட தூறல் கதை ஊர்ரெல்லாம் மெயில சுத்துது.

    :)))))))))))))))) //

    மிக்க நன்றி மேக்ரோ…
    அந்த கதை எனக்கே மூணு தடவை வந்துடுச்சி… ஆனா நான் எழுதினேனு சொன்னா எவனும் நம்ப மாட்றாங்க 😦

  34. //வல்லிசிம்ஹன் said…

    வரலாறு காணாத படை திரளும் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள்.
    //
    மிக்க நன்றி வல்லிசிம்ஹன்

    //
    ரவி , எல்லாவற்றையும் பதிவு செய்ய வீடியோக்ராபர் ரெடியா.
    பாலாஜி
    வராதவங்களுக்கும் சாப்பாடு யு.பி எஸில் அனுப்புவீர்களா.:-))
    Have a GooD TIME. //
    ரெண்டு பாலாஜி இருக்காங்க… ஆனா நீங்க சொல்றது பாபாவுக்குங்கறதால அவர் வந்து பதில் சொல்வார் 😉

  35. சந்திப்பு நல்லபடியா அமைய வாழ்த்துக்கள்!!!

    அப்படியே எனக்கு ரெண்டு போண்டா பார்சல் 🙂

  36. //தூறல் கதை ஊர்ரெல்லாம் மெயில சுத்துது.//

    அப்படியே எனக்கும் அனுப்பி வையுங்க

  37. //Dharumi said…

    //தூறல் கதை ஊர்ரெல்லாம் மெயில சுத்துது.//

    அப்படியே எனக்கும் அனுப்பி வையுங்க //

    ஆஹா.. தருமி ஐயா,
    முதல் முறையா நம்ம பக்கத்துக்கு வரீங்கனு நினைக்கிறேன்… ரொம்ப சந்தோஷம்.

    அந்த கதை இன்னைக்கு எனக்கே வந்துச்சு.. ஆனா நான் என் மெயில்ல இருந்து அனுப்பனா சர்வர் எல்லா தமிழெழுத்தையும் கேள்வி குறியா மாத்திடும்…

    லிங் இதோ

  38. சென்னையிலும் 17 தியதி சந்திக்கிறோம்ல…

  39. //மாஹிர் said…

    சென்னையிலும் 17 தியதி சந்திக்கிறோம்ல… //

    வாழ்த்துக்கள் மாஹிர்…

  40. நண்பர்களே,

    //சரி யார் யார் வராங்கனு பார்க்கலாம்…

    தேன் துளி பத்மா அரவிந்த்
    நவன்’ஸ் வெப்லாக்
    பார்வை மெய்யப்பன்
    வேல் முருகன்
    பாஸ்டன் பாலா
    கண்ணபிரான் ரவி சங்கர்
    பாடும் நிலா பாலு
    வெயிலில் மழை ஜி
    //

    தவிர்க்க இயலாத காரணங்களால் பாடும் நிலா பாலு இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் அவர் சார்பாக அவரது ரசிகனான என்னைக் கலந்து கொள்ளும்படி பணித்திருக்கிறார். ஆகையால் ‘பாடும் நிலா பாலு’ சுந்தர் ஆகிய நான் உங்களை சந்திக்கவிருக்கிறேன் என்று குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மைசூர் போண்டாவில் எப்படி மைசூர் இருக்காதோ அதேபோல ‘பாடும் நிலா பாலு’ சுந்தராகிய என்னிடம் பாட்டெல்லாம் இருக்காது என்பதையும் முன்கூட்டியே குறிப்பிட்டுவிட விரும்புகிறேன்! மற்றவை சனியன்று! 🙂

  41. //
    தவிர்க்க இயலாத காரணங்களால் பாடும் நிலா பாலு இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் அவர் சார்பாக அவரது ரசிகனான என்னைக் கலந்து கொள்ளும்படி பணித்திருக்கிறார். ஆகையால் ‘பாடும் நிலா பாலு’ சுந்தர் ஆகிய நான் உங்களை சந்திக்கவிருக்கிறேன் என்று குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மைசூர் போண்டாவில் எப்படி மைசூர் இருக்காதோ அதேபோல ‘பாடும் நிலா பாலு’ சுந்தராகிய என்னிடம் பாட்டெல்லாம் இருக்காது என்பதையும் முன்கூட்டியே குறிப்பிட்டுவிட விரும்புகிறேன்! மற்றவை சனியன்று! 🙂
    //

    வலைப்பதிவை பொறுத்த வரை பாடும் நிலா பாலுனா அது சுந்தர்னு எல்லாருக்கும் தெரியுங்க 😉

    I am the waiting…

  42. //மைசூர் போண்டாவில் எப்படி மைசூர் இருக்காதோ அதேபோல ‘பாடும் நிலா பாலு’ சுந்தராகிய என்னிடம் பாட்டெல்லாம் இருக்காது//

    மைசூர் போண்டாவில் மைசூர் இல்லீன்னாலும்,
    மசால் வடையில் மசால் இருக்குமுங்களே!
    இட்லி வடையில் இட்லி இருக்குமுங்களே!
    பாடும் நிலா பாலு கிட்ட பாட்டு இருக்குமுங்களே!

    பாட்டோட வாங்க சாரே!:-)

  43. பாலாஜி

    சனிக்கிழமை மதியம் 2 அல்லது மூன்று மணிக்கு உங்கள் செல்லில் கூப்பிடுகிறேன். நேரில் தான் வரமுடியவில்லை என்றாலும் போனிலாவது அனைவரோடும் பேசலாமல்லவா?

    மீட்டிங்கில் போண்டா உண்டா?:-)

  44. //செல்வன் said…

    பாலாஜி

    சனிக்கிழமை மதியம் 2 அல்லது மூன்று மணிக்கு உங்கள் செல்லில் கூப்பிடுகிறேன். நேரில் தான் வரமுடியவில்லை என்றாலும் போனிலாவது அனைவரோடும் பேசலாமல்லவா?

    மீட்டிங்கில் போண்டா உண்டா?:-) //

    தாராளமாக கூப்பிடுங்கள் தலைவா…

    போண்டா இருக்கானு தெரியலையே… போயிட்டு வந்து சொல்றேன் 🙂

  45. சந்திப்பு சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள் வெட்டி! என்ஜாய் மாடி 🙂

  46. நிறைய வலைப்பதிவு பித்தம் (?) தெளிய வேண்டியிருப்பதால் பாவக்காய் பஜ்ஜி (ஆளுக்கு ஒண்ணு!) கொண்டுவர அனுமதியுண்டா? 😉

  47. //அனானி நண்பரே,
    வாழ்த்துக்கு நன்றி!!!
    கொஞ்சம் பார்த்து கலாய்ங்க… நாங்க எல்லாம் பாவம் //

    வாழ்த்து உங்களுக்கு கலாய்ப்பு யாருக்கோ, நீங்க ஏங்க பயப்படுறீங்க.

Boston Bala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி