புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது!!!

இன்னைக்கு தாங்க வாழ்க்கைல முதல் தடவையா பனி பெய்யறத பாக்கறேன். நானும் வந்த நால்ல இருந்து இது எப்படி இருக்கும்னு பார்க்கனும் ரொம்ப ஆர்வமாயிருந்தேன். சும்மா லைட்டா நம்ம தெர்மாகோல் மாதிரி இருக்குங்க.

பனி பெய்யறதை பார்த்தவுடனே ஆபிஸ் போற அவசரத்துலயும் வெளிய வந்து பனில போட்டோவெல்லாம் எடுத்தாச்சு :-). நாங்க போட்டோ எடுக்கறதை பார்த்துட்டு அந்த வழியா போன ஒரு வெள்ளைக்கார ஃபிகரு ஒரு மாதிரி பார்த்துட்டு போச்சு.

ஏன்னா குளிராத மாதிரி ஒரு எஃபக்ட் கொடுத்துட்டு (ஜாக்கெட் கழுட்டிட்டு டி-சர்டோடு) போட்டோ எடுத்துட்டு இருந்தோம். ஆனா இந்த காத்து அடிச்சாதாங்க உசுரே போற மாதிரி குளிருது.

எப்படித்தான் சினிமால எல்லாம் ஹீரோயின்ஸ் இந்த மாதிரி பனில குட்டி பாவடை போட்டுட்டு ஆடறாங்கனே தெரியலை. இந்த விஷயத்துல நம்ம Gaptain ரொம்ப மோசம். அவர் பாகிஸ்தானி தீவிரவாதிகளை பிடிக்க காஷ்மீர் போவாரு. கூடவே நம்ம ஹீரோயின்ஸையும் கூப்பிட்டு போயிடறாரு. தீவிரவாதிய பிடிக்கறதுக்கு க்ளைமாக்ஸ்ல இவுங்க ஒரு டேன்ஸ் தீவிரவாதிங்க முன்னாடி கண்டிப்பா ஆடுவாங்க.

இந்த கொடுமைல ஒரு டூயட் (Gaptain உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?) வேற இருக்கும். அதுல அவர் மட்டும் விவரமா சட்டை, ஸ்வட்டர், ஜாக்கேட், அதுக்கு மேல இன்னும் ஏதாவது ரோஸ் கலர்ல கண்ணு கூசற மாதிரி போட்டுட்டு பனில நிப்பாரு.நம்ம ஹீரோயின்ஸ் அவரை சுத்தி சுத்தி ஆடனும். அதுவும் குட்டை பாவடை போட்டு அந்த குளிர்ல ஆடனும். படத்துல பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனா அவுங்களை நினைச்சா இப்ப பாவமா இருக்கு…

இப்ப இந்த பழமொழிதான் ஞாபகத்துக்கு வருது…
வெயிலின் அருமை பனியில் தெரியும் 🙂