நெல்லிக்காய் – 12 இறுதி பாகம்

அனைவரின் ஆசிகளுடன், வாழ்த்துக்களுடனும் சீரும் சிறப்புமாக அருண்-தீபாவின் திருமணம் நடந்து முடிந்தது. ஒரு வாரம் தீபாவின் வீட்டிலும், அவள் உறவினர்கள் வீட்டிலும் பலமாக விருந்து நடைபெற்றது. அடுத்த வந்த வார இறுதியில் தம்பதிகள் இருவரும் அருணின் சித்தப்பா வீட்டில் ஏற்பாடு செய்த விருந்திற்கு சென்றிருந்தனர். அங்கே அவனுக்கு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் தங்கையும், பதினோராம் வகுப்பு படிக்கும் தம்பியும் இருந்தார்கள். காலை டிபன் முடிந்து அனைவரும் அமர்ந்து மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தனர். சித்தப்பா வெளியே செல்ல… “அம்மா… [...]

நட்சத்திர நன்றி!!!

என்னடா நேத்து சொல்ல வேண்டியதை இன்னைக்கு சொல்றானேனு தப்பா நினைச்சுக்காதீங்க. சுத்தி இருக்குற மக்கள்ட எல்லாம் நல்லா பேசியே ரொம்ப நாளான மாதிரி ஒரு ஃபீலிங். அதனால இந்த வீக் எண்ட் அதிகமா கம்ப்யூட்டர் முன்னாடி உட்காராம அக்கம் பக்கத்துல இருக்கறவங்களோடையும், ரூம் மெட் கூடயும் ரொம்ப நாளைக்கு அப்பறம் உக்கார்ந்து ஜாலியா பேசிக்கிட்டே இருந்துட்டேன். (வேற என்ன வெட்டிக்கதை தான் ) பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து கலக்கன இடத்துல நமக்கு ஒரு [...]

தட்டுங்கள் திறக்கப்படும்!!!

எனக்கு பிடித்த வாசகங்கள்… (மலை சொற்பொழிவிலிருந்து) துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்து கொள்ளுவார்கள். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது. நான் உங்களுக்கு் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு [...]

சூரியனுக்கு டார்ச் லைட்டு

எனக்கு பிடித்த வலைப்பதிவர்களையும் அவர்களது ஒரு சில பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்… கார்த்திக் பிரபு -கவிதை எல்லாம் அருமையா எழுதுவாரு. வெகுளித்தனமா பெசுவாரு. (கல்யாணமாயிடுச்சில்ல அதுதான் கொஞ்சம் மரியாதை). இப்ப அவருடைய கல்யாண வைபவத்தை நம் கண் முன் கொண்டு வருகிறார் இந்த தொடர் மூலம்நான் கணவனான போது இவருடைய இந்த கவிதைகளை படித்த பிறகு பலர் அவர்களுடைய தாத்தா, பாட்டிகளை திட்டியதாக எனக்கு தகவல் வந்தது (அத்தை இல்லாத காரணத்திற்காக)அத்தை பெண்கள் என்னும் ராகஷசிகள் [...]

கண்ணன் – கர்ணன்

நான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெச்சி ஒரு சில தவறான முடிவு எடுத்தடறாங்க. அதுல என்னை ரொம்ப பாதிச்சது கர்ணன் படம்தான். கர்ணனை கண்ணன் ஏமாற்றி கொன்னுட்டார்னு நம்ம ஆளுங்களுக்கு கண்ணனை பிடிக்காம போயிடுது. இதுல கொடுமை என்னன்ன அவரை பிராடு, ஏமாற்றுக்காரர்னு நிறைய பேர் சொல்றத கேட்டுருக்கேன். நம்ம சினிமால சிவாஜி நடிச்சதால கர்ணனை [...]

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்

நீங்க இப்ப பாக்கறது கவுண்டர் பெல்ஸ் Devil’s Advocate part – 3 இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர் தமிழக மக்களின் மனதில் மன்மத ராசாவாக இடம் பெற்றிருக்கும் தனுஷ்… க: வாங்க தனுஷ்!தனுஷ் அது எப்படிங்க உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கும் போது இந்த சின்ன வயசுல நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. த: எனக்கு சின்ன வயசுல இருந்தே சீக்கிரம் கல்யாணமாகி வாழ்க்கையில செட்டில் ஆகணுங்கறதுதான் லட்சியம் க: ஆஹா [...]

பாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல்———————————————- இந்த சந்திப்பு இலக்கியத் தரமாக இல்லை என்று குற்றஞ்சாட்டி விடக்கூடாது என்பதற்காக, பதிவை இலக்கியத்தரமாக்கும் முயற்சியாக இரு கவிதைகள்: சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல் – எஸ்.பாபு : ஈ – தமிழ் | பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சந்திப்புகள் பத்மா அரவிந்த் பாஸ்டன் வரப்போவதாக தெரிய வந்ததுதான் இந்த சந்திப்புக்கு கால்கோள். பத்மா அரவிந்தை சந்திக்க பலரும் பிரியப்படவே, அதையே பாஸ்டன் வலைப்பதிவர் சந்திப்பாக ஆக்கலாம் என்னும் எண்ணம் எழுந்தது. [...]

கற்றதும்… பெற்றதும்

சரி இதுவரைக்கும் கும்மியடிக்கற மாதிரி பதிவே போடலைனு ஃபீல் பண்றவங்களுக்காக இந்த பதிவு வலைப்பதிவர் சந்திப்புக்கு போனியே அங்க எதாவது பயனுள்ளதா தெரிஞ்சிக்கிட்டியானு நிறைய நண்பர்கள் கேட்டாங்க. சரி அவுங்களுக்கு மட்டும் எதுக்கு, உங்க எல்லாருக்கும் சொல்லிடலாமேனு பதிவா போடறேன்… சில பல இடங்கள்ல எனக்கும் இதுல இவ்வளவு மேட்டர் இருக்கானு தோணுச்சு… ஒண்ணு ஒண்ணா சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க எனக்கும் அங்க இருந்த மூத்த பதிவர்களுக்கும் நடந்த உரையாடல் மாதிரி போட்டிருக்கேன்… இதுல மூத்த பதிவரென்பது [...]

ஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன் – மீள்பதிவு

மேலும் சில தகவல்களுடன்…செந்தழல் ரவி அவர்களின் பதிவை மீண்டும் ஒரு முறை இங்கே பதிப்பிக்கிறேன்… இதுவரை எந்த பதிவை எழுதுவதற்க்கு முன் யோசித்ததில்லை…அதிகபட்சமாகபத்து நிமிடத்தில் கடகடவென டைப்செய்வதுதான்…ஆனால் இதனை எழுதுமுன் தினறல்…பெரிய யோசனை…எப்போது பப்ளிஷ் செய்யலாம்….இதனை வலைப்பூவினர் வரவேற்ப்பார்களா ? வெற்றிகரமாக செய்ய முடியுமா ? ஏற்கனவே என்றென்றும் அன்புடன் பாலா நிறைவாக செய்தாரே !! நம்மாலும்முடியும் – என்ற உந்துதல் ஏற்பட – முதலில் ஒரு பதிவரிடம் சொன்னபோது அவர் மிகச்சிறந்த வழிகாட்டுதலை தந்தார்…இவ்வளவு பீடிகை [...]

புது வெள்ளம்!!!

1904ஆம் ஆண்டு நாசிக் நகரில் ப்ளேக் நோய் தாக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காலமாயினர். உயிருக்கு பயந்து ஊரை விட்டு பலர் காலி செய்தனர். ப்ளேக் நோயால் இறந்தவர்களை தொடவே அவர்கள் உறவினர்களும் அஞ்சினர். அந்த நிலையில் ஊரில் பெருவணிகனாக இருந்த 25 வயதே நிரம்பிய ராகுல் சின்ஹா என்பவர் களமிறங்கி இறந்தவர்களை தன் முதுகில் சுமந்து சுடுகாட்டிற்கு எடுத்து சென்றார். இதை பார்த்து அவருடைய நண்பர்களும் அவருக்கு உதவினர். 1909ல் 9 வயதில் திருமணம் செய்து, கணவனை [...]

Follow

Get every new post delivered to your Inbox.