சும்மா சும்மா…

மானட மயிலாட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரும் நமீதா அணிந்து வரும் உடைகள் முகம் சுழிக்க வைக்கின்றன. மிக ஆபாசமாக உடையணிகிறார்.”

இப்படினு ஒருத்தர் சட்ட சபைல பேசியிருக்காரு. இதை பத்தி யாரும் பதிவு போடலையே. என்ன கொடுமை சரவணன்?

அப்படி என்ன மாதிரி ட்ரெஸ் போட்டு வராங்கனு போட்டோவோ அல்லது யூ டியுப் லிங்கோ கொடுத்தா நல்லா இருக்கும். தப்பா நினைக்காதிங்க. சும்மா தெரிஞ்சிக்கத்தான்…

தனியார் ரேடியோக்களும், டிவிக்களும் வந்த பிறகு தான் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி, பெற்ற மகளையே தந்தை மானபங்கம் செய்தார் போன்ற செய்திகள் எல்லாம் வருகின்றன.”

இப்படி வேற சொல்லியிருக்காரு. வலைப்பதிவுல படிக்கிற காமெடியெல்லாம் விட சட்டசபைல நிறைய காமெடி இருக்கும் போல. என்னமா சிந்திக்கிறாங்க.

இதுக்கு பேசாம தமிழ் வலைப்பதிவெல்லாம் படிக்கிறதால தான் நிறைய குடும்பத்துல சண்டை வருதுனு பேசியிருக்கலாம் 😉

————————————————-

இந்த வருஷம் ஆரம்பமே அசத்தலுங்க..

ஒரு பக்கம் பினாத்தல் சுரேஷ், வவ்வாலு இன்னோரு பக்கம் அய்யனார், தமிழச்சி, ஓசை செல்லா, லக்கி லுக், அண்ணாச்சி. இப்படி பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடைசியா செந்தழல் ரவி வேற கலத்துல இறங்கிட்டார். அவரை திரும்ப எழுத வெச்சதுக்காகவே இவுங்க எல்லாருக்கும் நன்றி சொல்லனும்…

—————————————————

நேத்து ஃபிரெண்டு ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருந்தேன்…

“மச்சான் தமிழ் நியூ இயரை மாத்திட்டாங்களாம்டா.. தெரியுமா?”னு கேட்டான்…

தமிழ்   நியு இயரா??? விளங்கனா போல தான்

——————————-

டைகர் பிஸ்கெட்

பொதுவாக வார இறுதி நாட்களில் கடைகளுக்கு சென்று மற்ற நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். நேற்று அதை போல அருகே இருக்கும் இந்தியன் ஸ்டோர் சென்றேன் . அங்கே பார்த்த ஒரு பொருள் எனக்கு என் கல்லூரி நாடகளை அசை போட வைத்தது.

கல்லூரி நாட்களில் ஒவ்வொரு பரிட்சைக்கும் முதல் நாள் இரவு 2 – 3 மணி வரை படிப்போம் (விழித்திருப்போம்). பனிரெண்டு மணிக்கு மேல் நன்றாக பசிக்க ஆரம்பித்துவிடும். அப்போதெல்லாம் எங்கள் பசியை போக்க உதவியது மூன்று ரூபாய் டைகர் பிஸ்கெட்தான். சில நாட்களில் அதுவே உணவான கதைகளும் உண்டு.

கேண்டினில் பரிட்சை நேரங்களில் ஸ்டாக் தீர்ந்துவிடும் அளவுக்கு விற்று தீர்க்கும் ஒரு பொருள் டைகர் பிஸ்கெட்தான். என்னதான் குட்-டே, லிட்டில் ஹார்ட்ஸ் என்று மற்ற நாட்களில் வாங்கி சாப்பிட்டாலும், பரிட்சை வந்தால் அனைத்து ரூம்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு பொருள் டைகர் பிஸ்கெட்தான்.

பொதுவாக ஒவ்வொரு பரிட்சை முடிந்தவுடனும் ஒரு படத்திற்கு செல்வது வழக்கம் (எப்படியும் 2-3 நாள் லீவு இருக்கும்). படத்திற்கு போய் வரும்பொழுது நன்றாக சாப்பிட்டுவிட்டு வருவோம். முதல் நாள் பரிட்சைக்கு படிக்கிற பில்ட் அப்பில் ஹாஸ்டலிலே ஏதாவது சாப்பிட்டு படிப்பதால், ரிலாக்ஸாக இருக்க இந்த வழி. (படம் பாக்கறதுக்கு ஒரு காரணம் – கண்டுக்காதீங்க)

அப்படித்தான் கடைசி வருடம் நியுரல் நெட்வொர்க்ஸ் பரிட்சை முடிந்து எல்லோரும் படத்திற்கு கிளம்பினார்கள். நான் மட்டும் போகாமல் ஹாஸ்டலிலே இருந்துவிட்டேன். ஆனால் வரும் போது எனக்கு பரோட்டா, தோசை எல்லாம் பார்சல் வாங்கி வர சொல்லிவிட்டேன்.

அவர்கள் வரும் நேரம் பார்த்து தூங்கி கொண்டிருந்தேன். சரியாக 10:00 மணிக்கு எழுந்து சாப்பிடலாம் என்று பார்த்தால்… எனக்கு வாங்கி வெச்சிருந்த பார்சல எந்த நாதாரி நாயோ எடுத்து தின்னுட்டு “டைகர் பிஸ்கெட்” வெச்சிருந்தானுங்க.

எவன் இத பண்ணதுன்னு விசாரிச்சா இருக்குற பிஸ்கெட்டும் போயிடும்னு அதை மட்டும் சாப்பிட்டு தண்ணி குடிச்சிட்டு தூங்கிட்டேன்… இப்படி நம்ம வாழ்க்கையில ஒரு முக்கியமான இடம் இந்த பிஸ்கெட்டுக்கு இருக்கு.

நேற்று அதை பார்த்தவுடன் அந்த பரிட்சை பயம் மனதில் வந்தது. (பரிட்சையே இல்லாம காலேஜ் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் :-))