நெல்லிக்காய் – 12 இறுதி பாகம்

அனைவரின் ஆசிகளுடன், வாழ்த்துக்களுடனும் சீரும் சிறப்புமாக அருண்-தீபாவின் திருமணம் நடந்து முடிந்தது. ஒரு வாரம் தீபாவின் வீட்டிலும், அவள்

உறவினர்கள் வீட்டிலும் பலமாக விருந்து நடைபெற்றது. அடுத்த வந்த வார இறுதியில் தம்பதிகள் இருவரும் அருணின் சித்தப்பா வீட்டில் ஏற்பாடு செய்த விருந்திற்கு சென்றிருந்தனர்.

அங்கே அவனுக்கு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் தங்கையும், பதினோராம் வகுப்பு படிக்கும் தம்பியும் இருந்தார்கள். காலை டிபன் முடிந்து அனைவரும் அமர்ந்து மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தனர். சித்தப்பா வெளியே செல்ல…

“அம்மா… நீ போய் சீக்கிரம் சமைமா. நாங்க அண்ணன்டயும், அண்ணிட்டயும் பேச வேண்டியது நிறைய இருக்கு” அருணின் தங்கை சுமதி.

“அப்படி என்ன பேச போறிங்க ரெண்டு பேரும்?”

“சாப்ட்வேர் கம்பெனில எப்படி வேலை செய்வாங்கனு கேட்டு தெரிஞ்சிக்க போறோம். அதெல்லாம் உனக்கு புரியாதுமா. நீ சீக்கிரம் போய் சமை.

இவனுக்கு இப்பவே பசிக்குதாம்” அருகிலிருக்கும் தம்பியை காட்டி சொன்னாள்.

“ஆமாமா. எனக்கு இப்பவே பசிக்குது. நீ சீக்கிரம் போய் சமைமா” தம்பி கௌதம்.

“சரிடா கண்ணு. அம்மா சீக்கிரம் ரெடி பண்ணிடறேன்” சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றாள் அருணின் சித்தி.

“அப்பாடா… அம்மா போயிட்டாங்க. இப்பதான் ஜாலியா பேச முடியும். அண்ணி நீங்க அண்ணனை முதல்ல எங்க பார்த்தீங்கனு ஞாபகம் இருக்கா?”

“அடிப்பாவி இதுக்கு தான் சித்திய உள்ள போக சொன்னியா?” வேகமாக கேட்டான் அருண்

“அண்ணா. நான் உங்கிட்ட கேக்கல. நீ சும்மா இரு. நீங்க சொல்லுங்க அண்ணி” ஆர்வமாக கேட்டாள் சுமதி

முகத்தில் வெட்கத்துடன் பேச ஆரம்பித்தாள் தீபா… “பெங்களூர்ல… சிவாஜி நகர்ல”

“பராவாயில்லையே நியாபகம் வெச்சிருக்கியே” செல்லமாக பேசினான் அருண்

“அப்படினா… நீங்க வேலைக்கு சேறதுக்கு முன்னாடியே பழக்கமா?” முன்பை விட ஆர்வமாக கேட்டாள் சுமதி

“பழக்கம் தான்.. ஆனா அது வேற மாதிரி” கொஞ்சம் ஸ்டைலாக பதில் சொன்னான் அருண்

“அண்ணா.. நீ பேசன அவ்வளவுதான். நான் அவுங்ககிட்ட தானே பேசிக்கிட்டு இருக்கேன்” கொஞ்சம் சீரியஸாக பேசினாள் சுமதி

“சரி. அப்ப நான் வெளிய போயிடுவா?”

“உனக்கும் கேள்வி வரும். அப்ப நீ பதில் சொன்னா போதும். ஓகேவா?”

“சரிம்மா…”

“நீங்க சொல்லுங்க அண்ணி. அண்ணன் அன்னைக்கு உங்ககிட்ட என்ன பேசினாரு?
தீபா நீ அழகா இல்லைனு நினைக்கிறேன். உன்னை எனக்கு பிடிக்கல. நான் உன்னை காதலிக்கல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கனு
சொன்னாரா?”

“யாரு உங்க அண்ணனா? கிழிஞ்சிது. நான் அங்க பாவமா இருந்த பசங்களுக்கு இட்லி வாங்கி கொடுத்தது பிடிக்காம இதெல்லாம் பண்ண கூடாதுனு

அப்பவே அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு”

“ஏய் நான் அதிகாரம் எல்லாம் பண்ணல. அது தப்புனு தான் சொன்னேன்” வேகமாக சொன்னான் அருண்

“எது தப்பு? பாவமா இருக்கற பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கறது தப்பா?” தீபாவிற்கு துணைக்கு நின்றாள் சுமதி

“சரி நான் பேசல. நீங்களே பேசுங்க. நான் அப்பறமா சொல்றேன்” சூழ்நிலை சரியில்லாததால் ஒதுங்கி கொண்டான் அருண்.

“அப்பறம் நீங்க அண்ணனை பத்தி என்ன நினைச்சீங்க அண்ணி”

“வேண்டாம்மா… அத சொன்னா இங்கயே பிரச்சனையாயிடும்”

“அண்ணி.. அண்ணன் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. அதுவும் அப்ப அவர் உங்களுக்கு தெரியாதவர் தானே. தாராளமா சொல்லுங்க”

“இப்படி அதிகாரம் பண்றானே. இவனுக்கு பொண்டாட்டியா வரவ பாவம்னு நினைச்சுக்கிட்டேன்”

“அப்பறம்”

“அப்பறம் என்ன மறுபடியும் குருப் டிஸ்கஷன்ல பார்த்தேன்”

“வாவ்!!! ரெண்டு பேரும் எதிர் அணிதானே”

“பின்ன… நான் கொடுத்த தலைப்பு வேண்டாம்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்தனவுடனே எனக்கு கோபம் தாங்கலை. ஆனா எல்லார் பேரையும் நியாபகம் வெச்சி பேசனவுடனே கொஞ்சம் அசந்துட்டேன். மேல் மாடில கொஞ்சம் கொஞ்சம் இருக்கு அதனால தான் தலைகனம்னு

நினைச்சிக்கிட்டேன்”

“ஓ! சரி… அண்ணா இப்ப நீ சொல்லு… அண்ணி அதுல என்ன பேசினாங்க?”

“அதுவா… முதல்ல நான் இவளை எப்படியாவது தோக்க வைக்கணும்னு தான் தலைப்பையே மாத்தினேன். ஆனா இவ பேசாமலே இருந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சி… பேசினா எப்படியும் சண்டை போட்டு ஜெயிக்கலாம்னு பார்த்தேன். ஆனா இவ பேசவே இல்லை. அதனால கடைசியா

முடிவுரை கொடுக்க சொன்னேன். அதுல எல்லாரும் அசர மாதிரி பேசினா”

“அப்பவே உனக்கு பிடிச்சி போச்சா?”

“அதெல்லாம் இல்லை… எப்ப புடிச்சிதுனு கரெக்டா சொல்ல தெரியாது”

“அண்ணா.. பொய் சொல்லாத. ஒழுங்க சொல்லு”

“நிஜமா. வேணும்னா உங்க அண்ணியையே கேட்டு பாரு”

“அண்ணி நீங்க சொல்லுங்க. அண்ணனை உங்களுக்கு எப்ப பிடிச்சிது?”

“அப்படி ஒரு இடத்தை சொல்ல முடியாது. நிறைய இடமிருக்கு…”

“அண்ணி கொஞ்சம் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்”

தீபா அருணை தர்ம சங்கடமாக பார்க்க… அவன் கண்களாலே சம்மதமளித்தான்…

“நான் போய் பக்கத்துல உக்கார்ந்தவுடனே என்னை ராஜிக்கூட உக்கார வைச்சது, ராஜியையும் கார்த்தியும் சேத்து வெச்சது, ஒரு பொண்ண வண்டீல உக்கார வெச்சி ஓட்டறதுக்கு கூச்சப்பட்டது, எனக்கு அடிப்பட்டவுடனே கூடவே இருந்து கவனிச்சிக்கிட்டது. எங்க அம்மாவை எந்த வேலையும் செய்யவிடாம ஹாஸ்பிட்டல பாத்துக்கிட்டது. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்…” சொல்லிவிட்டு அருணை பார்த்து அவள் புன்னகைத்தாள்.
அருணும் சந்தோஷத்தில் வானில் பறந்து கொண்டிருந்தான்…

“அண்ணி நீங்க போய் பக்கத்துல உக்கார்ந்தவுடனே வேற ஒருத்தவங்கள உங்க பக்கத்துல உட்கார சொன்னதுக்கு உங்களுக்கு கோபம் வரல”

“எனக்கு கோபம் தான். முதல்ல பாதி நாள் நான் தப்பா தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். இவர்கிட்ட பேசவே கஷ்டமா இருக்கும். என்னடா எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கானேனு கடுப்பா இருக்கும்… ஆனா போக போக புரிஞ்சிக்க ஆரம்பிச்சவுடனே எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு”

“ஆமாம் எதுக்கு இப்படி விசாரிச்சிட்டு இருக்க? நீ எதாவது பண்றியா? காலேஜ்ல படிக்கும் போது இதெல்லாம் பண்ணக்கூடாது. தப்பு. புரியுதா? அண்ணனாக மாறி தங்கைக்கு அறிவுருத்தினான் அருண்

“அதெல்லாம் இல்லைனா. எங்க காலேஜ் மேகசின்ல போட ஒரு கதை எழுதலாம்னு பார்த்தேன். சரி உங்க கதையே இண்ட்ரஸ்டிங்கா இருக்கேனு கேட்டுக்கிட்டு இருந்தேன்”

“அடப்பாவமே! காலேஜ் மேகசின்ல எதெல்லாமா போடுவாங்க?” தீபாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது…

“அதெல்லாம் போடுவாங்க… அந்த மேகசின் எடிட்டர் எங்க சீனியர்தான். என்ன பார்த்து எப்பவும் வழிஞ்சிக்கிட்டே இருப்பாரு. அதனால நான் போய் கொடுத்தா கண்டிப்பா போட்ருவாரு. சரி கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?”

“என்ன வைக்கலாம்?” அருணும் தீபாவும் யோசித்து கொண்டிருந்தனர்.

சரியாக அந்த நேரம் பார்த்து அருணின் சித்தப்பா வீட்டிற்கு வந்தார். கையில் ஒரு பேப்பர் போட்டலம் இருந்தது.

“அப்பா கைல என்ன பொட்டலம்? பகோடாவா?” ஆர்வமாக விசாரித்தான் கௌதம்

“வர வழியில ஒரு பாட்டி நெல்லிக்காய் வித்துட்டு போச்சு. சரி இந்த வெயில்ல வித்துட்டு போகுதேனு வாங்கிட்டு வந்தேன். இந்தாங்க எல்லாம் சாப்பிடுங்க” வீட்டு மருமகளிடம் கொடுத்தார் சித்தப்பா…

“ஐயோ! அப்பா நெல்லிக்காய் கசுக்கும்பா. அதுக்கு பதிலா பகோடா வாங்கிட்டு வந்துருக்கலாம்” முகத்தில் வெறுப்புடன் சொன்னான் கௌதம்.

“நெல்லிக்காய் தாம்பா உடம்புக்கு நல்லது. அதுல விட்டமின் C இருக்கு.
அதுவுமில்லாம நெல்லிக்காய் சாப்பிடும் போதுதான் கசக்கும் சாப்பிட்டு முடிச்சு தண்ணி குடிச்சா அமிர்தம் போல இனிக்கும்

இதை கேட்டவுடன் அருண், தீபா, சுமதி மூவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்து சிரித்து கொண்டனர்…

41 பதில்கள்

  1. நண்பர்களே!!!
    இத்தனை நாள் கழித்து போடுவதற்கு மன்னிக்கவும்…

  2. ஓ! இதுதான் நெல்லிக்காய்க்கு அர்த்தமா?

    அது எப்படிங்க தங்கச்சினு வந்தா மட்டும் அண்ணனுங்க பொறுப்பா மாறி அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க?

    கலக்கல் வெட்டி!!!

  3. நான்தான் முதலாவதா???? யப்பா ஒரு மாதிரி கதையை முடிச்சாசு… simpleஅ சொல்லனும்னா கதை…. super…. ஆனா friend ட காதல்தான் பாவம்…. அதையும் சேர்த்து வைச்சிருக்கலாமோ?? உண்மைக்காதல் தோற்க கூடாது இல்ல??
    அடுத்த கதை எப்போ?? waiting for that….

  4. //ஆதவன் said…

    நான்தான் முதலாவதா???? யப்பா ஒரு மாதிரி கதையை முடிச்சாசு… simpleஅ சொல்லனும்னா கதை…. super…. ஆனா friend ட காதல்தான் பாவம்…. அதையும் சேர்த்து வைச்சிருக்கலாமோ?? உண்மைக்காதல் தோற்க கூடாது இல்ல??
    அடுத்த கதை எப்போ?? waiting for that…. //
    ஆமாங்க… நீங்க தான் முதல் ஆள்.

    தொடர்ந்து நீங்க தந்த ஆதரவுக்கு நன்றி!!!

    அந்த காதல் தோத்ததுக்கு காரணம் இன்னும் நம்ம சமுதாயத்துல இருக்கற சாதி தான் காரணம். அதை நாம எல்லாம் சேர்ந்து தூக்கிட்டோம்னா அடுத்து யாருக்கும் இப்படியாகாது…

    அடுத்து சிறுகதை விரைவில் ஆரம்பம் 🙂

  5. //இம்சை அரசி said…

    ஓ! இதுதான் நெல்லிக்காய்க்கு அர்த்தமா?
    //
    ஆமாங்க…
    ஓரளவுக்கு ஒத்துவருதா?

    //
    அது எப்படிங்க தங்கச்சினு வந்தா மட்டும் அண்ணனுங்க பொறுப்பா மாறி அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க?
    //
    படிக்கும் போது காதலிச்சு தடம் மாறிட வேணாம்னு அண்ணன் யோசிக்கறதுல தப்பு இல்லையே 😉

    // கலக்கல் வெட்டி!!!//

    மிக்க நன்றி இ.அ 😉

  6. நல்ல முடிவு!!
    waiting for ur next story!!
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

  7. சூப்பரப்பு!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

  8. இது சொல்லி அடிச்ச நெல்லி…
    கத சும்மா கில்லி…

    வல்லிய கத ஒண்ண கொடுத்த வெட்டிக்கு வாழ்த்துக்கள்.

  9. //
    //ஓ! இதுதான் நெல்லிக்காய்க்கு அர்த்தமா?
    //
    ஆமாங்க…
    ஓரளவுக்கு ஒத்துவருதா?

    //

    நல்லாவே ஒத்து வருதுங்க வெட்டி…

    சும்மா பின்னு பின்னுன்னு பின்றீங்க போங்க…….

  10. ப்ளாஷ்பேக் ஓட்டினதும் மறுபடியும் சண்டை போட ஆரம்பிப்பாங்களோன்னு நினைச்சேன் :))

    கலக்கல் தொடர் வெட்டி!! வாழ்த்துக்கள்!

  11. இந்த எக்ஸ்ப்ளனேசன யாரோ ஒருத்தர் பின்னூட்டத்துல சொல்லிருந்தாங்கன்னு நினைக்கிறேன்.

    அசத்தல் வெட்டி.. இதெல்லாம் படிக்கும்போது நமக்கும்… சரி ஃப்ரீயா விடு வெட்டி…

    அடுத்தத் தொடர் எப்போ வெட்டி…

  12. //aparnaa said…

    நல்ல முடிவு!!
    waiting for ur next story!!
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!! //

    மிக்க நன்றி அபர்ணா…
    அடுத்த கதை விரைவில் 😉

    தங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  13. //தம்பி said…

    சூப்பரப்பு!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! //

    நொம்ப டாங்க்ஸ் தம்பி!!!

    உனக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

  14. //அரை பிளேடு said…

    இது சொல்லி அடிச்ச நெல்லி…
    கத சும்மா கில்லி…

    வல்லிய கத ஒண்ண கொடுத்த வெட்டிக்கு வாழ்த்துக்கள். //

    அண்ணாத்த… ரொம்ப டாங்க்ஸ் 🙂

    எல்லாம் உங்க ஆதரவுதான் 😉

  15. //இம்சை அரசி said…

    //
    //ஓ! இதுதான் நெல்லிக்காய்க்கு அர்த்தமா?
    //
    ஆமாங்க…
    ஓரளவுக்கு ஒத்துவருதா?

    //

    நல்லாவே ஒத்து வருதுங்க வெட்டி…

    சும்மா பின்னு பின்னுன்னு பின்றீங்க போங்க……. //

    மிக்க நன்றி இ.அ 😉
    தொடர்ந்து வரவும் 🙂

  16. //கப்பி பய said…

    ப்ளாஷ்பேக் ஓட்டினதும் மறுபடியும் சண்டை போட ஆரம்பிப்பாங்களோன்னு நினைச்சேன் :))
    //
    இப்ப அவுங்க சொந்தக்காரவங்க வீட்ல இருக்காங்க. அதனால சண்டை போட மாட்டாங்க 😉

    //
    கலக்கல் தொடர் வெட்டி!! வாழ்த்துக்கள்! //
    மிக்க நன்றி கப்பி!!!

  17. //ஜி said…

    இந்த எக்ஸ்ப்ளனேசன யாரோ ஒருத்தர் பின்னூட்டத்துல சொல்லிருந்தாங்கன்னு நினைக்கிறேன்.
    //
    தலைவா,
    நான் அந்த அர்த்ததுல தான் கதைக்கு தலைப்பே வெச்சேன். பின்னூட்டத்துல சொன்னதை காப்பி எல்லாம் அடிக்கல… முதல் பகுதிலயே நம்ம அமுதன் (ராம்குமார்) கண்டு பிடிச்சிட்டாரு…

    //
    அசத்தல் வெட்டி.. இதெல்லாம் படிக்கும்போது நமக்கும்… சரி ஃப்ரீயா விடு வெட்டி…
    //
    சேம் ப்ளட் 😉

    //
    அடுத்தத் தொடர் எப்போ வெட்டி… //
    அடுத்து ஒரு சிறுகதை எழுதிட்டு தொடருக்கு போவோம்!!!

    தொடர் கதை போர் அடிக்குதுப்பா!!!

  18. கலக்கியிருக்கீங்க….
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  19. //Dubukku said…

    கலக்கியிருக்கீங்க….
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் //

    தலைவா…
    மிக்க நன்றி!!! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    தொடர்ந்து படிச்சீங்களா???
    ரொம்ப சந்தோஷமா இருக்கு…

  20. பாலாஜி.. சூப்பரா கதையை முடிச்சீங்க போங்க.. ஆனா பாவம் அந்த ராஜியும் கார்த்தியும்..

    எப்படியோ கதைக்கும் தலைப்புக்கும் சூப்பரா ஒரு லிங்க் கொடுத்துட்டீங்க பாலாஜி..

    உண்மையிலே படிச்ச எங்களுக்கு இந்த நெல்லிக்காய் எப்பவுமே இனிச்சுதான் இருந்தது

  21. கதை சூப்பர். கலக்கிட்டீங்க 🙂

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙂

  22. //மு.கார்த்திகேயன் said…

    பாலாஜி.. சூப்பரா கதையை முடிச்சீங்க போங்க.. ஆனா பாவம் அந்த ராஜியும் கார்த்தியும்..
    //
    மிக்க நன்றி கார்த்திகேயன் 🙂
    ராஜியும் கார்த்தியும் ரொம்ப பாவம் தான்… ராஜி அழுதது இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு… உருகு உருகி காதலிச்சவங்களை பிரித்தது நம் சமுதாயத்தின் தவறுதான் 😦

    //
    எப்படியோ கதைக்கும் தலைப்புக்கும் சூப்பரா ஒரு லிங்க் கொடுத்துட்டீங்க பாலாஜி..
    //
    மிக்க நன்றி!!!
    அதுக்கு தான் அந்த தலைப்பே கொடுத்தேன் 🙂

    // உண்மையிலே படிச்ச எங்களுக்கு இந்த நெல்லிக்காய் எப்பவுமே இனிச்சுதான் இருந்தது //
    மிக்க நன்றி… எல்லாம் உங்க உற்சாகம் தான் 🙂

  23. //G3 said…

    கதை சூப்பர். கலக்கிட்டீங்க 🙂

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙂 //

    மிக்க நன்றி G3…

    தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!

  24. நல்ல ஸ்வாரஸ்யமான வசனங்கள்… வழக்கம்போல் கலக்கல் வெட்டி. Wish you a very Happy New Year 2007

  25. அட, நெல்லிக்காய்னா மட்டும் வந்து பார்த்துட்டு போறான் பாருனு நீ திட்டுறது எனக்குக் கேக்குது. என்ன பண்ண! சரி சரி..லீவ் போட்டு பொறுமையா எல்லாத்தையும் படிக்கறேன் 🙂 இப்போதைக்கு.. இந்த பகுதியும் சூப்பர்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    -விநய்

  26. //”நெல்லிக்காய் தாம்பா உடம்புக்கு நல்லது. அதுல விட்டமின் C இருக்கு.
    அதுவுமில்லாம நெல்லிக்காய் சாப்பிடும் போதுதான் கசக்கும் சாப்பிட்டு முடிச்சு தண்ணி குடிச்சா அமிர்தம் போல இனிக்கும்”//

    நெல்லிக்காய் பேர் காரணம் சொல்லி முடிச்சது சிறப்பாயிருக்கு. நான் ரொம்ப ரசிச்சு படிச்ச தொடர் இந்த நெல்லிக்காய்.

    உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  27. நெல்லிக்காய்க்கு அர்த்தம் சொல்லி, படத்தோட பேரு சினிமாவில் ஒரு இடத்தில் வரா மாதிரி, அழாகாக் கொண்டு வந்திட்டீங்க!

    விறுவிறுப்புகள் ஆரம்பத்தில் நிறைந்த தொடர்! இந்தத் தொடர்கதையின் சிறப்பம்சமே உரையாடல்கள் தான்!
    அத அப்படியே இன்னும் இன்னும் அள்ளி அள்ளி விட்டுக்கிட்டே இருங்க! தூள் கிளப்பிடுவீங்க!

    அடுத்த கதை நெல்லிக்காயை விடப் பன்மடங்கு சிறக்க வாழ்த்துக்கள், பாலாஜி!

  28. //Arunkumar said…

    நல்ல ஸ்வாரஸ்யமான வசனங்கள்… வழக்கம்போல் கலக்கல் வெட்டி. Wish you a very Happy New Year 2007 //

    மிக்க நன்றி அருண்…
    உங்க பேரை காப்பாத்திட்டனா?

  29. // Anonymous said…

    அட, நெல்லிக்காய்னா மட்டும் வந்து பார்த்துட்டு போறான் பாருனு நீ திட்டுறது எனக்குக் கேக்குது. என்ன பண்ண! சரி சரி..லீவ் போட்டு பொறுமையா எல்லாத்தையும் படிக்கறேன் 🙂 இப்போதைக்கு.. இந்த பகுதியும் சூப்பர்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    -விநய் //

    மிக்க நன்றி விநய்…
    நம்மலும் இங்க கொஞ்சம் பிஸிதான்…
    என்ன செய்ய 😦

    சரி தங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  30. //கைப்புள்ள said…

    //”நெல்லிக்காய் தாம்பா உடம்புக்கு நல்லது. அதுல விட்டமின் C இருக்கு.
    அதுவுமில்லாம நெல்லிக்காய் சாப்பிடும் போதுதான் கசக்கும் சாப்பிட்டு முடிச்சு தண்ணி குடிச்சா அமிர்தம் போல இனிக்கும்”//

    நெல்லிக்காய் பேர் காரணம் சொல்லி முடிச்சது சிறப்பாயிருக்கு. நான் ரொம்ப ரசிச்சு படிச்ச தொடர் இந்த நெல்லிக்காய்.

    உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். //

    மிக்க நன்றி தல..
    தொடர்ந்து ஆதரவு தந்ததற்கு என் நன்றிகள் பல…

  31. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

    நெல்லிக்காய்க்கு அர்த்தம் சொல்லி, படத்தோட பேரு சினிமாவில் ஒரு இடத்தில் வரா மாதிரி, அழாகாக் கொண்டு வந்திட்டீங்க!
    //
    இது வரலைனு தான் போன பகுதில நிறைய பேருக்கு வருத்தம்.. அதனால தான் இதுக்கே தனி பகுதி போட்டாச்சு 😉

    //
    விறுவிறுப்புகள் ஆரம்பத்தில் நிறைந்த தொடர்! இந்தத் தொடர்கதையின் சிறப்பம்சமே உரையாடல்கள் தான்!
    அத அப்படியே இன்னும் இன்னும் அள்ளி அள்ளி விட்டுக்கிட்டே இருங்க! தூள் கிளப்பிடுவீங்க!
    //
    மிக்க நன்றி KRS…
    எல்லாம் நீங்க கொடுத்த ஆதரவுதான்…

    // அடுத்த கதை நெல்லிக்காயை விடப் பன்மடங்கு சிறக்க வாழ்த்துக்கள், பாலாஜி! //
    கண்டிப்பா முயற்சி செய்யறேன் 🙂

  32. வணக்கம் பாலாஜி (பெயர் சரிதானே? நானும் ஒரு மென்பொறியாளன் தான், அதுனால உங்கள் வெட்டின்னு கூப்பிட பிடிக்கல)

    இன்னைக்கு தான் உங்கள் ‘ நெல்லிக்காய்’ கதை படிச்சேன். 12 பாகங்களையும் ஒன்னா படிக்க முடிந்ததில் ரொம்ப சந்தோஷம் (என்னால சஸ்பென்ஸ் தாங்கவே முடியாது)

    கதையோட போக்கும் முடிவும் ரொம்பவே யூகிக்க முடிந்த ஒன்றாக தான் இருந்தது. ஆனால் வசனங்களும் சம்பவங்களும் தான் இந்த கதையின் சிறப்பம்சம் ( மென்பொறியாளர்களை பற்றிய கதை என்பதால் ஏதோ நம்ம சுற்றத்துல நடக்குற ஒரு சம்பவம் மாதிரி ஒரு உணர்வு. உங்களோட தூறல் மற்றும் கொல்டி கதைகளும் இதற்காகவே எனக்கு மிகவும் பிடித்தன)

    பல சமயத்தில் சிரிக்கவும், சில சமயங்களில் அழவும் வைத்துவிட்டது உங்கள் தொடர்

    தலைக்கவசம், விபரம், சாதிப் பிரச்சனை இதெல்லாம் சொன்னதற்கு நன்றிகள் பல.

    காதல் கல்யாணங்களை ஆதரிக்க அருணோட அப்பா சொன்ன விளக்கம் ஒரு பெரிய ‘அட’ போட வைத்தது. அவர் கூற்று முற்றிலும் உண்மையே. அதே சமயம் தீபா சொன்னது போல் இது சரியா வருமா என்று தெரிந்து கொண்டு காதலை சொல்வது சால சிறந்தது (ஆனா இது எல்லா நேரங்களிலும் ஒத்து வராமல் போகலாம்)

    இன்னும் எவ்வளவோ சொல்லனும் போல இருக்கு..

    குறிப்பு : இக்கதையின் எல்லா பதிவுகளுக்கான சுட்டிகளையும் ஒரே இடத்தில் போட்டால் படிக்க ஏதுவாக இருக்கும்.

  33. பாலாஜி, அருமையான கதை.

    அடுத்து ஒரு “பலா பழ” கதை எதிர்பார்கிரேன்.

    – உண்மை

  34. பிரேம்,
    பெயர் சரிதான் 🙂

    //நானும் ஒரு மென்பொறியாளன் தான், அதுனால உங்கள் வெட்டின்னு கூப்பிட பிடிக்கல)//
    அதனால என்னங்க.. தாராளமா கூப்பிடலாம் 🙂

    //கதையோட போக்கும் முடிவும் ரொம்பவே யூகிக்க முடிந்த ஒன்றாக தான் இருந்தது. ஆனால் வசனங்களும் சம்பவங்களும் தான் இந்த கதையின் சிறப்பம்சம் ( மென்பொறியாளர்களை பற்றிய கதை என்பதால் ஏதோ நம்ம சுற்றத்துல நடக்குற ஒரு சம்பவம் மாதிரி ஒரு உணர்வு. உங்களோட தூறல் மற்றும் கொல்டி கதைகளும் இதற்காகவே எனக்கு மிகவும் பிடித்தன)//
    கதை ரொம்ப சாதாரணமா நம்ம வாழ்க்கைல பாக்கறவங்களை பத்திதான்… அதனால பல திருப்பங்களை நான் தர விரும்பவில்லை.

    //காதல் கல்யாணங்களை ஆதரிக்க அருணோட அப்பா சொன்ன விளக்கம் ஒரு பெரிய ‘அட’ போட வைத்தது. அவர் கூற்று முற்றிலும் உண்மையே. அதே சமயம் தீபா சொன்னது போல் இது சரியா வருமா என்று தெரிந்து கொண்டு காதலை சொல்வது சால சிறந்தது (ஆனா இது எல்லா நேரங்களிலும் ஒத்து வராமல் போகலாம்)//
    அருண் அப்பா மாதிரி எல்லாரும் சிந்திச்சா ரொம்ப நல்லா இருக்கும்னு ஆசை பட்டேன். அதே மாதிரி தீபா மாதிரியும் கொஞ்சம் தெளிவா இருக்கனும். இல்லைனா ராஜி மாதிரி அழ வேண்டியதுக்கும் ரெடியாயிக்கனும்.

    //இன்னும் எவ்வளவோ சொல்லனும் போல இருக்கு..
    //
    தாராளமா சொல்லுங்க… சந்தோஷமா கேக்கறோம் 🙂

    //
    குறிப்பு : இக்கதையின் எல்லா பதிவுகளுக்கான சுட்டிகளையும் ஒரே இடத்தில் போட்டால் படிக்க ஏதுவாக இருக்கும்.//
    ஒவ்வொரு பகுதிக்கு கீழும் அடுத்த பகுதிக்கு சுட்டி கொடுத்துட்டேங்க 🙂

  35. // Anonymous said…

    பாலாஜி, அருமையான கதை.

    அடுத்து ஒரு “பலா பழ” கதை எதிர்பார்கிரேன்.

    – உண்மை //
    மிக்க நன்றி!!!

    ரொம்ப நாளா ஆளை காணோமேனு பார்த்தேன்…

    சீக்கிரம் அடுத்த கதை ஆரம்பிக்கிறேன் 🙂

  36. //

    ரொம்ப நாளா ஆளை காணோமேனு பார்த்தேன்…

    //

    இங்கு (New Jersey) சரித்திரதில் இல்லாத வெப்பத்தில் திளைத்துக்கொண்டு இருக்கிறோம். இனி அடிக்கடி வந்து பார்க்கிறேன். இது வரை இங்கு பனி பெய்யவில்லை. அங்கு எப்படி ?

    – உண்மை

  37. // Anonymous said…

    //

    ரொம்ப நாளா ஆளை காணோமேனு பார்த்தேன்…

    //

    இங்கு (New Jersey) சரித்திரதில் இல்லாத வெப்பத்தில் திளைத்துக்கொண்டு இருக்கிறோம். இனி அடிக்கடி வந்து பார்க்கிறேன். இது வரை இங்கு பனி பெய்யவில்லை. அங்கு எப்படி ?

    – உண்மை //

    ஓ!!! இன்னும் இங்கயும் பனியில்லை..
    சென்ற சனியன்று வந்த பனியும் திங்களன்று பெய்த மழையால் அடித்து செல்லப்பட்டது…

    நான் பதிவு போட்ட நேரம் இன்னும் பனியே வரலை 😦

    சனிக்கிழமையே போட்டோவெல்லாம் எடுத்துருக்கனும் எங்க போயிட போகுதுனு விட்டுட்டோம் :-))

  38. Hi Vetti,

    unga bloga first time padikiren..soopera irukku.(blog padikira pahakame kidaiyathu but ennoda frndoda blog padika arambichathoda effectla ethu 3rd blog me reading..frnd than unga bloga padika sonnathum).nellikai,thooral stories sooper.

    lift plsla oru chinna doubt – clear pannuringala pls – antha ooty accident athu nijama illa athuvum aaroda imainationla oru parta???

    innum nalla vara ALL THE BEST

  39. கலா,

    மிக்க நன்றி…

    உங்க ஃபிரெண்டுக்கும் என் நன்றிய
    சொல்லிடுங்க.

    லிப்ட் ப்ளீஸ்ல அந்த ஆக்ஸிடெண்ட் நடந்தது உண்மைதான்.

    //அவர ஹிப்னாடிக் ட்ரிட்மெண்ட் பண்ணும் போது அவர் ரெண்டு வருஷத்துக்கு
    முந்தி ஏதோ ஆக்ஸிடெண்ட் பண்ணியிருக்கார். அதுல வண்டி ஓட்னவர்
    இறந்துட்டார். அவர் மனைவி விதவையாகிட்டாங்கனு தீர்க்கமா நம்பறார்.
    அதுவும் இல்லாம அவுங்க இவர பழிவாங்க தேடறாங்கனு பரிபூர்ணமா நம்பறார்//

    இது அந்த டாக்டருங்க பேசறது… அங்க தான் தெரிஞ்சிக்க முடியும். கதை
    ரெண்டாவது ம்முறை படிச்சா புரியும். எல்லாம் ஒரு முயற்சிதான்.

    உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி…

    தொடர்ந்து படிக்கவும்…

  40. நெல்லிக்காய் காய் காய்
    இனிப்புக்காய் தண்ணீரில்
    துவர்ப்புக்காய் ஆனாலும்
    சத்துக்காய் ஆனதே

    நல்ல தொடர் வெட்டி. மக்கள் எத்தனை பேர் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள் பார். அடுத்த தொடர் எப்பொழுதென்று எல்லாரும் கேட்கிறார்கள். நானும்தான். எப்பொழுது கிடாரங்காய் தொடங்குகிறது?

  41. girt says : I absolutely agree with this !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: