நட்சத்திர நன்றி!!!

என்னடா நேத்து சொல்ல வேண்டியதை இன்னைக்கு சொல்றானேனு தப்பா நினைச்சுக்காதீங்க. சுத்தி இருக்குற மக்கள்ட எல்லாம் நல்லா பேசியே ரொம்ப நாளான மாதிரி ஒரு ஃபீலிங். அதனால இந்த வீக் எண்ட் அதிகமா கம்ப்யூட்டர் முன்னாடி உட்காராம அக்கம் பக்கத்துல இருக்கறவங்களோடையும், ரூம் மெட் கூடயும் ரொம்ப நாளைக்கு அப்பறம் உக்கார்ந்து ஜாலியா பேசிக்கிட்டே இருந்துட்டேன். (வேற என்ன வெட்டிக்கதை தான் ;))

பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து கலக்கன இடத்துல நமக்கு ஒரு வாரம் இடம்னு சொல்லும் போது சந்தோஷமா ஒத்துக்கிட்டேன். ஆனா திடீர்னு ஒரு பயம் வந்துடுச்சு. இலக்கியமா எதுவும் நமக்கு எழுத தெரியாது. சமுதாயத்துல நடக்கிற தப்புக்கு என்ன காரணம்னு ஆராய்ச்சி பண்ணி அறிவுப்பூர்வமா எழுதவும் நமக்கு தெரியாது. கவிதை தெரியாது. அரசியல் தெரியாது. பொருளாதாரம் தெரியாது.

இப்படி எதுவும் தெரியாம எப்படி ஒரு வாரத்தை சமாளிக்கறதுனு ரொம்ப யோசிக்க வேண்டியதா போயிடுச்சு. நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர். ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதி இந்த வாரத்தை ஒப்பேத்திவிட்டேன்.

இன்னும் எழுத நினைத்த சில முக்கியமான கட்டுரைகளும், நகைச்சுவை பகுதிகளும் வேலை பளுவினால் முடியாமல் போனது. இன்னும் ஒரு சில பதிவுகளில் இருக்கும் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் போனது. அவை அனைத்தையும் வரும் வாரங்களில் சரி செய்துவிடுகிறேன். (கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – இனி தொடர்ந்து வரும்)

ஒரு வாரம் முழுதும் என்னால் தொடர்ந்து உற்சாகமாக எதையாவது எழுத முடிந்ததென்றால் அதற்கு முழு காரணமும் நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் நன்றி. மேலும் எனக்கு இந்த வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும் என் நன்றிகள் பல.

55 பதில்கள்

 1. Very Good Very Good… I am the first – Kummar Tholkappiam

 2. பாலாஜி ஒரு நிறைவான நட்சத்திர வாரம்… பதிலவுகில் நீங்கள் மேலும் உச்சங்களைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 3. //Anonymous said…

  Very Good Very Good… I am the first – Kummar Tholkappiam//

  Thk u very much Kumar Tholkappiam

 4. //தேவ் | Dev said…

  பாலாஜி ஒரு நிறைவான நட்சத்திர வாரம்… பதிலவுகில் நீங்கள் மேலும் உச்சங்களைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி தேவ்…
  முடிந்த வரை நல்ல பதிவுகளை தர முயற்சிக்கிறேன்…

 5. கயமையின் நாயகனே
  சிறப்பானதொரு வாரத்தை தந்தாய்! து.சி.ஆ.க.க.போ சங்கத்தின் சார்பாக நன்றியினை பேக்ஸ் செய்து விட்டோம்.

 6. லைன் கட்டி பதிவுகள்.
  பெரியார் ல இருந்து பாரதம் வரிக்கும்..
  சிம்பு இருந்து பேரரசு வரிக்கும்..
  நெல்லிக்காய் ஃபினிஷ்…(ஃபினிஷ்தான?)..

  வெட்டி ப்ரூவ்டு ஈ ஈஸ் ஃபுல் ஆஃப் வெரைட்டி…

  ஹேட்ஸ் ஆஃப்…

  :))))

 7. It was a very good week. Thanks.

 8. ரொம்பவே தன்னடக்கம் தான். கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. நீங்க சராசரிக்கும் சற்று குறைவான பதிவரா? 🙂

 9. //ரொம்பவே தன்னடக்கம் தான். கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. நீங்க சராசரிக்கும் சற்று குறைவான பதிவரா? 🙂 //
  ரிப்பீட்டு..

  பாலாஜி, இன்னும் கையில் வச்சிருக்கும் கீரையைச் சாப்பிடலையா? அதான் இப்படி எழுதிட்டீங்க.. சாப்பிட்டுவிட்டு எழுதிய நட்சத்திர வாரப் பதிவுகள் எங்கயோஓஓ போய்டிச்சில்ல.. :))

 10. கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – இனி தொடர்ந்து வரும்

  இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன் . . . . .
  :-))))))

 11. //நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர்.//

  அடக்கம் இருக்கலாம் வெட்டி. ஆனா தன்னடக்கம்….

  டெவில் ஷோவிலிருந்து புது வெள்ளம் வரைக்கும் பல மேட்டர்ஸ் கொடுத்தீங்க… இதுக்கு மேல என்ன வேணும்னு நினைக்கிறீங்க…

 12. இனியதொரு அனுபவமாய் இருந்தது.
  சிகரங்களைத் தொட வாழ்த்துகள்….

 13. சிறப்பானதொரு நட்சத்திர வாரம் வெட்டி!! கலக்கல்ஸ் ஆப் பாஸ்டன் 🙂

  வாழ்த்துக்கள் வெட்டி!!

 14. //தம்பி said…

  கயமையின் நாயகனே
  //

  அடப்பாவீஈஈஈஈஈ!!!

  //
  சிறப்பானதொரு வாரத்தை தந்தாய்!
  //
  மிக்க நன்றி!!!

  //
  து.சி.ஆ.க.க.போ சங்கத்தின் சார்பாக நன்றியினை பேக்ஸ் செய்து விட்டோம். //
  என்னப்பா அது து.சி.ஆ.க.க.போ???

 15. //அரை பிளேடு said…

  லைன் கட்டி பதிவுகள்.
  பெரியார் ல இருந்து பாரதம் வரிக்கும்..
  சிம்பு இருந்து பேரரசு வரிக்கும்..
  நெல்லிக்காய் ஃபினிஷ்…(ஃபினிஷ்தான?)..

  வெட்டி ப்ரூவ்டு ஈ ஈஸ் ஃபுல் ஆஃப் வெரைட்டி…

  ஹேட்ஸ் ஆஃப்…

  :)))) //

  மிக்க நன்றி அரை பிளேடு…
  இன்னும் விட்டுப்போனவைகளை வரும் வாரங்களில் தர முயற்சிக்கிறேன்…

 16. //Alien said…

  It was a very good week. Thanks. //

  thk u very much Alien…

 17. //குமரன் (Kumaran) said…

  ரொம்பவே தன்னடக்கம் தான். கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. நீங்க சராசரிக்கும் சற்று குறைவான பதிவரா? 🙂 //

  குமரன்,
  என்ன இருந்தாலும் தரமில்லாத பதிவுனு தானே தேன்கூடுல நடுவர்கள் எல்லாம் நம்ம பதிவ பத்தி சொன்னாங்க. மக்களுக்கு பிடிக்கறதுங்கறது வேற போட்டிக்கெல்லாம் தகுதிங்கறது வேற 🙂

  (இதுவரை மக்கள் தேர்ந்தெடுத்து பரிசு கிடைக்காம போனது என்னோட பதிவுக்கு மட்டும் தானே :-)…
  அதுல இருந்தே தெரியலையா நாம சராசரிக்கும் சற்று குறைவான தகுதி உள்ள பதிவர்னு…
  இந்த பதில் யார் மனதையும் புண்படுத்த அல்ல)

 18. //பொன்ஸ் said…

  //ரொம்பவே தன்னடக்கம் தான். கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. நீங்க சராசரிக்கும் சற்று குறைவான பதிவரா? 🙂 //
  ரிப்பீட்டு..

  பாலாஜி, இன்னும் கையில் வச்சிருக்கும் கீரையைச் சாப்பிடலையா? அதான் இப்படி எழுதிட்டீங்க.. சாப்பிட்டுவிட்டு எழுதிய நட்சத்திர வாரப் பதிவுகள் எங்கயோஓஓ போய்டிச்சில்ல.. :)) //

  பொன்ஸக்கா,
  நான் சும்மா தன்னடக்கத்துக்காக சொல்லலைங்க. நிஜமாலுமே மனசுல இருந்ததுதான் சொன்னேன்…

  பாராட்டுக்கு நன்றி!!!

 19. //வெங்கட்ராமன் said…

  கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – இனி தொடர்ந்து வரும்

  இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன் . . . . .
  :-)))))) //

  வெங்கட்ராமன்,
  நீங்க எதிர்பார்க்கறத நிறைவேத்தறதுதான் நம்ம கடமை 🙂

 20. //ஜி said…

  //நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர்.//

  அடக்கம் இருக்கலாம் வெட்டி. ஆனா தன்னடக்கம்….
  //
  இல்லைங்க ஜி…
  நிஜமாலுமே தன்னடக்கத்துக்காக சொல்லல…

  //
  டெவில் ஷோவிலிருந்து புது வெள்ளம் வரைக்கும் பல மேட்டர்ஸ் கொடுத்தீங்க… இதுக்கு மேல என்ன வேணும்னு நினைக்கிறீங்க… //

  இன்னும் நிறைய எழுதனும்னு நினைத்து முடியாம பொயிடுச்சிங்க… எல்லாம் சீக்கிரம் வரும் 😉

 21. //சுதர்சன்.கோபால் said…

  இனியதொரு அனுபவமாய் இருந்தது.
  சிகரங்களைத் தொட வாழ்த்துகள்…. //

  மிக்க நன்றி ஓமப்பொடியாரே!!!
  முடிந்த வரை நல்ல பதிவுகளை தர முயற்சி செய்கிறேன்…

 22. //கப்பி பய said…

  சிறப்பானதொரு நட்சத்திர வாரம் வெட்டி!! கலக்கல்ஸ் ஆப் பாஸ்டன் 🙂

  வாழ்த்துக்கள் வெட்டி!! //

  மிக்க நன்றி கப்பி…
  எல்லாம் உங்க உதவியாலதான் முடிஞ்சிது 🙂

 23. //என்ன இருந்தாலும் தரமில்லாத பதிவுனு தானே தேன்கூடுல நடுவர்கள் எல்லாம் நம்ம பதிவ பத்தி சொன்னாங்க. //

  இது என்ன கொடுமை பாலாஜி. இந்தக் கதை எனக்குத் தெரியாதே? :-((

 24. பாலாஜி,
  சிறப்பான ஒரு நட்சத்திர வாரம். ஆனாலும் உங்க தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லையா? சர்வேசனின் சர்வேயில் முன்னாடி போயிட்டு இருக்கிங்க இத விட வேற என்ன வேண்டும் கலக்குங்க :))..

 25. //குமரன் (Kumaran) said…

  //என்ன இருந்தாலும் தரமில்லாத பதிவுனு தானே தேன்கூடுல நடுவர்கள் எல்லாம் நம்ம பதிவ பத்தி சொன்னாங்க. //

  இது என்ன கொடுமை பாலாஜி. இந்தக் கதை எனக்குத் தெரியாதே? :-(( //

  குமரன்,
  இது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை… இன்னும் நான் என்னை வளர்த்துக்கணும்னு எல்லாரும் எதிர்பாக்கறாங்க. அது நல்லது தானே!!!

  அதே மாதிரி போட்டிக்கு அனுப்பணும்னா கதை, கவிதையாதான் இருக்கணும். அனுபவம் அதுவும் கற்பனையான அனுபவமா இருக்கக்கூடாதுனும் தெரிஞ்சிக்கிட்டேன். அவ்வளவுதான்.எல்லாம் ஒரு பாடம் தானே 🙂

 26. //கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. //
  குமரன்,
  இதுல உள்குத்து எதுவும் இல்லையே? ஏற்கனவே மக்கள் இந்த போட்டியை பதிவாப்போட்டு கேவலப்படுத்திடாங்க அதுக்குத்தான் கேட்டுகிட்டேன் :)).

 27. //Santhosh Kumar said…

  பாலாஜி,
  சிறப்பான ஒரு நட்சத்திர வாரம். ஆனாலும் உங்க தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லையா? சர்வேசனின் சர்வேயில் முன்னாடி போயிட்டு இருக்கிங்க இத விட வேற என்ன வேண்டும் கலக்குங்க :)).. //

  சந்தோஷ்,
  மக்களுக்கு பிடிக்கற மாதிரி எழுதறதுங்கறது வேற தரமான படைப்புங்கறது வேற… நான் சொன்னது அந்த வகைல…

  சர்வே எல்லாம் சும்மா விளையாட்டுக்குங்க. நம்ம எங்க இருக்கோம்னு நமக்கு தெரியாதா?

 28. பாலாஜி

  அருமையான வாரத்தை தந்தீர்கள்.பதிவுகள் பலவும் அறுசுவை விருந்தாக இருந்தன.இதுவரை வந்த நட்சத்திர வாரங்களில் சிறப்பான இடத்தை நீங்கள் பிடித்துள்ளீர்கள்.நன்றி

 29. //Santhosh Kumar said…

  //கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. //
  குமரன்,
  இதுல உள்குத்து எதுவும் இல்லையே? ஏற்கனவே மக்கள் இந்த போட்டியை பதிவாப்போட்டு கேவலப்படுத்திடாங்க அதுக்குத்தான் கேட்டுகிட்டேன் :)). //

  சந்தோஷ்,
  நம்ம மக்கள் எல்லாத்தையும் அப்படித்தான் பேசுவாங்க. அவருக்கு தெரிஞ்சதை அவர் செய்யறாரு. முடிஞ்சா அதைவிட சிறப்பா எல்லாரும் ஒத்துக்குற மாதிரி நாம செய்யணும். இல்லைனா அழகா வேடிக்கை பார்த்துட்டு போயிடணும்.

  நம்ம பதிவ எத்தனை பேர் படிக்கறாங்கனு நமக்குத்தான் தெரியுமே 🙂

  வரும் காலங்களில் அவர் இன்னும் சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

 30. //செல்வன் said…

  பாலாஜி

  அருமையான வாரத்தை தந்தீர்கள்.பதிவுகள் பலவும் அறுசுவை விருந்தாக இருந்தன.இதுவரை வந்த நட்சத்திர வாரங்களில் சிறப்பான இடத்தை நீங்கள் பிடித்துள்ளீர்கள்.நன்றி //

  மிக்க நன்றி செல்வன்…
  நான் நட்சத்திரம்னா என்னனு நீங்க இருந்தப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். இப்ப நீங்களே வந்து வாழ்த்தும் போது சந்தோஷமாக உள்ளது 🙂

 31. பாலாஜி ஒரு நிறைவான வாரத்தைக் கொடுத்தீர்கள்.
  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  கற்பனையூற்று வற்றாமல் என்றும் புதிது புதிதாகப் படைக்க உங்களால் முடியும்..

 32. பல சுவையான பதிவுகள். சுவாரஸ்யமான உங்கள் படைப்புகளைத் தொடருங்கள்.

  பாராட்டுகள்.

 33. வாழ்க வளமுடன். நீடு வாழ்க. பீடு வாழ்க.

 34. //அவருக்கு தெரிஞ்சதை அவர் செய்யறாரு. முடிஞ்சா அதைவிட சிறப்பா எல்லாரும் ஒத்துக்குற மாதிரி நாம செய்யணும். இல்லைனா அழகா வேடிக்கை பார்த்துட்டு போயிடணும்.
  //
  நல்லா பதில் சொன்ன வெட்டி.. அதெப்படி அப்படி போயிட்டா எங்களுக்கு என்ன மரியாதை?

 35. I liked your posts. You can also be called varietypayal.
  You will continue to be in my star list:)

 36. natchathira vaaram rombave nalla irundadu.. naan rasithen…

  gounder show ini thodaruma?… SUPER !!!
  kalakkunga vetti 🙂

 37. natchatira vaaram soopara mudichathuku vaazhtukal 🙂

 38. // நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர். ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதி இந்த வாரத்தை ஒப்பேத்திவிட்டேன்.
  //

  வெட்டி என்னய்யா இதெல்லாம்???
  வர வர உன் தன்னடக்கத்துக்கு அளவே இல்லாம போகுதப்பு…

 39. //வல்லிசிம்ஹன் said…

  பாலாஜி ஒரு நிறைவான வாரத்தைக் கொடுத்தீர்கள்.
  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  கற்பனையூற்று வற்றாமல் என்றும் புதிது புதிதாகப் படைக்க உங்களால் முடியும்.. //

  மிக்க நன்றி வல்லிசிம்ஹன்…
  தொடர்ந்து வந்து வாழ்த்தியதற்கு நன்றிகள் பல…

  உங்களின் உற்சாகமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி!!!

  தொடர்ந்து எழுத முயற்சிகிறேன்…

 40. //G.Ragavan said…

  வாழ்க வளமுடன். நீடு வாழ்க. பீடு வாழ்க.

  //

  மிக்க நன்றி ஜி.ரா…

 41. //சுந்தர் said…

  பல சுவையான பதிவுகள். சுவாரஸ்யமான உங்கள் படைப்புகளைத் தொடருங்கள்.

  பாராட்டுகள். //

  சுந்தர்,
  மிக்க நன்றி…
  இனிமேலும் ஆட்டம் தொடரும் 🙂

 42. //Dreamzz said…

  kavundar’s showkku oru nanri mudhalla! appuram ungalukku ennoda xmas matrum new year wishes! //

  thk u very much Dreamzz…

  Wish u the same…

 43. //சந்தோஷ் said…

  //அவருக்கு தெரிஞ்சதை அவர் செய்யறாரு. முடிஞ்சா அதைவிட சிறப்பா எல்லாரும் ஒத்துக்குற மாதிரி நாம செய்யணும். இல்லைனா அழகா வேடிக்கை பார்த்துட்டு போயிடணும்.
  //
  நல்லா பதில் சொன்ன வெட்டி.. அதெப்படி அப்படி போயிட்டா எங்களுக்கு என்ன மரியாதை? //

  அதுவும் சரிதான் 🙂

 44. // Anonymous said…

  I liked your posts. You can also be called varietypayal.
  You will continue to be in my star list:) //

  thk u very much my dear friend 🙂

 45. //Arunkumar said…

  natchathira vaaram rombave nalla irundadu.. naan rasithen…
  //
  மிக்க நன்றி அருண்…

  // gounder show ini thodaruma?… SUPER !!!
  kalakkunga vetti 🙂 //
  கவுண்டர் தான் இனி கலக்க போறார் 😉

 46. //Syam said…

  natchatira vaaram soopara mudichathuku vaazhtukal 🙂 //

  மிக்க நன்றி நாட்டாமை!!!

 47. //Syam said…

  Wish you a Great New Year!!! //

  Thk u and wish you the same…

 48. //இம்சை அரசி said…

  // நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர். ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதி இந்த வாரத்தை ஒப்பேத்திவிட்டேன்.
  //

  வெட்டி என்னய்யா இதெல்லாம்???
  வர வர உன் தன்னடக்கத்துக்கு அளவே இல்லாம போகுதப்பு… //

  இ.அ,
  இது தன்னடக்கம் இல்லை…
  ஒரு சிலர் எனக்கு சொன்னது 🙂

 49. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

  இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

  இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

 50. Vetti, I was just waiting for the end of your star week. Then since I travelled, I could not comment immediately. All your posts during star week were as usual hilarious and informative. Keep up the good work.

  Also special congrats on getting selected as the best blogger for the year 2006 in Surveysan survey.

  Merry Christmas and Happy New Year.

 51. //மு.கார்த்திகேயன் said…

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

  இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

  இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள் //

  மிக்க நன்றி கார்த்திகேயன்…
  தங்களுக்குன் இந்த ஆண்டு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்!!!

 52. //SathyaPriyan said…

  Vetti, I was just waiting for the end of your star week. Then since I travelled, I could not comment immediately. All your posts during star week were as usual hilarious and informative. Keep up the good work.
  //
  Thx a lot Sathya…
  Really happy to see ur message…

  //
  Also special congrats on getting selected as the best blogger for the year 2006 in Surveysan survey.
  //
  All the credit goes to my fellow bloggers and readers who constantly supported me 🙂

  //
  Merry Christmas and Happy New Year. //
  Thk U and Wish you the Same!!!

 53. பாலாஜி,

  நல்ல பதிவுகளை தந்து நட்சத்திர வாரத்தை கலக்கியிருக்கீங்க..

  வாழ்த்துக்கள்

 54. //Sivabalan said…

  பாலாஜி,

  நல்ல பதிவுகளை தந்து நட்சத்திர வாரத்தை கலக்கியிருக்கீங்க..

  வாழ்த்துக்கள் //

  பொறுமையா எல்லாத்தையும் படிச்சிருக்கீங்க 🙂

  மிக்க நன்றி சிபா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: