தட்டுங்கள் திறக்கப்படும்!!!

எனக்கு பிடித்த வாசகங்கள்… (மலை சொற்பொழிவிலிருந்து)


துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்து கொள்ளுவார்கள்.

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

நான் உங்களுக்கு் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்கு பலனில்லை.

ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்.

நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்.

ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுகொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்.

ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்…


நண்பர்கள் அனைவருக்கும் கிரிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!

10 பதில்கள்

  1. உலகத்தில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!

  2. உலகத்தில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!

  3. இனிய புத்தாண்டு / கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்

  4. நன்றி . உலகத்திற்கு வேண்டுகிற நல் எண்ணங்களைப் பதிவு செய்து இருக்கிறீர்கள்.

    கிறிஸ்துமஸ்,புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  5. //மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்//

    மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின்.

    //மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்;//

    ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

    நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நன்னாள் வாழ்த்துக்கள்!

  6. //நான் உங்களுக்கு் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
    //

    இப்படி ஆழமான கருத்துக்க்ள் சொன்ன Jesus நினைவா, உங்கலுக்கும் Merry Christmas!

  7. //தம்பி said…

    1?//

    ஹிம்…

  8. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

    //மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்//

    மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின்.

    //மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்;//

    ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

    நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நன்னாள் வாழ்த்துக்கள்!//

    KRS,
    அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!!!

  9. //Dreamzz said…

    //நான் உங்களுக்கு் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
    //

    இப்படி ஆழமான கருத்துக்க்ள் சொன்ன Jesus நினைவா, உங்களுக்கும் Merry Christmas!//

    மிக்க நன்றி ட்ரீம்ஸ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: