நீங்க இப்ப பாக்கறது கவுண்டர் பெல்ஸ் Devil’s Advocate part – 3
இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர் தமிழக மக்களின் மனதில் மன்மத ராசாவாக இடம் பெற்றிருக்கும் தனுஷ்…
க: வாங்க தனுஷ்!
தனுஷ் அது எப்படிங்க உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கும் போது இந்த சின்ன வயசுல நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.
த: எனக்கு சின்ன வயசுல இருந்தே சீக்கிரம் கல்யாணமாகி வாழ்க்கையில செட்டில் ஆகணுங்கறதுதான் லட்சியம்
க: ஆஹா லட்சியமென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். அவனவன் படிச்சி வாழ்க்கையில பெரிய ஆளு ஆகனும்னு ஆசைப்பட்டா நீங்க சின்ன வயசுல இருக்கும் போதே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுங்கறத லட்சியமா வெச்சிருக்கறீங்க. அத வெக்கப்படாம வெளிய வேற சொல்லிட்டு அலையறீங்க.
த: ஆமாங்க. கடைசியா படிச்சி பெரிய ஆளாயி என்ன பண்ணப்போறாங்க? எல்லாரும் கல்யாணம் தானே பண்ணிக்க போறாங்க. அதனாலத்தான் நான் அதை சீக்கிரமாவே பண்ணிட்டேன்
க: ஏன்டா எல்லாரும் கடைசியா சாகத்தானே போறாங்க? அதுக்கு ஆசைப்படுவியா? பேசறாம்பாரு…பெரிய இடமா கிடைச்சிது, விட்டா போயிடும்னு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு பேசற எகத்தாளத்தப்பாரு.
ஆமாம் அது என்ன பேரு இந்திய ப்ரூஸ்லி?
த: அதுவா? நான் போடற கராத்தே சண்டைய பார்த்து ரசிகர்கள் அப்படி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.
க: ஏன்டா ப்ரூஸ்லி ஒரு அடி அடிச்சா நீ தாங்குவியா? அவர் எப்படியும் செத்து போயிட்டாருங்கர தைரியத்தில நீயா வெச்சிக்கிட்ட. சரி விடு… அந்த காலத்துல தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் மாதிரினு வெச்சிக்கிறோம். சரி உன்னோட படத்துலயே உனக்கு பிடிச்சது எது?
த: சுள்ளான். அதுலதான் டைரக்டர் ரமணா என்னை ஆக்ஷன் ஹீரோவா காண்பிச்சாரு.
க: ஓ! நீயும் பசுபதியும் மாத்தி மாத்தி
டேய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு கத்துவீங்களே அந்த படமா?
ஏன்டா ஓவரா சவுண்ட் விட்டு நடிச்சா அது ஆக்ஷன் படமா?
த: அதுல பஞ்ச் டயலாக்லாம் வேற இருக்குமே!!!
க: ஓ! அதுவா? அந்த தீப்பந்தத்த எடுத்துட்டு வாங்கப்பா. தம்பிய சுட வைக்கலாம்
த: எதுக்குங்க?
க: நீ தான்டா சொன்ன! சுள்ளான் சூடானேன் சுலுக்கெடுத்துடுவேனு. எனக்கு கால்ல 2 நாளா சுலுக்கு அதான் உன்னைய சூடாக்கி சுலுக்கெடுக்க வைக்கலாம்னு பாக்கறேன்.
த: ஐயய்யோ அது சும்மா ரைமிங்கு பேசனதுங்க…
க: இந்த பாரு இனிமே சும்மா இப்படி மொக்கைத்தனமா பஞ்ச் டயலாக் ஏதாவது பேசின… அவ்ளோ தான். நான் எதுவும் பண்ண மாட்டேன். மக்களே படத்த ஃபிளாப்பாக்கிடுவாங்க…
த: அதுல க்ளைமாக்ஸ் காட்சி கூட அருமையா இருக்குங்களே!
க: டேய் வேணாம் என்னைய டென்ஷனாக்காத! அது ஒரு க்ளைமாக்ஸ் அதுக்கு உனக்கு பெருமை வேற…உன்னைய பேட்டியெடுக்கறதுக்காக என்னைய அந்த ட்ரீம்ஸ், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் எல்லாம் வேற பாக்க வெச்சிட்டானுங்க. ஏன்டா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா?
த: புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பார்த்தீங்களா? அது அப்படியே நம்ம உலகம் சுற்றும் வாலிபன் மாதிரியே இருக்குமே?
க: டேய் டூபாகூர் மண்டையா… அது உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி இருந்துச்சா? இதுக்கு முன்னாடி நீ அந்த படம் பார்த்திருக்கயா? தப்பி தவறி இத வெளிய சொல்லிடாத… எல்லாம் கல்லால அடிச்சியே கொன்னுடுவானுங்க…
சரி இதுக்கு மேல நீ கேள்வி கேட்டா தாங்க மாட்ட. ஓடி போயிடு!!!
மக்களே! என்ன நடந்துச்சுனு நீங்களே பாத்துட்டுதான் இருக்கீங்க. நான் சொல்றதுக்கு இதிலே ஒண்ணுமில்லை.நாளைக்கு உங்களை வேற ஒரு பிரபலத்துடன் சந்திக்கிறேன்… நன்றி! வணக்கம்!!!
Filed under: நகைச்சுவை |
நண்பர்களே!!!
ப்ளாக்கர்ல திடீர்னு ஏதோ பிரச்சனை வந்து எல்லாமே ரெண்டு முறை வர மாதிரி ஆயிடுச்சி…
சிரமத்திற்கு மன்னிக்கவும்!!!
//ஏன்டா எல்லாரும் கடைசியா சாகத்தானே போறாங்க? அதுக்கு ஆசைப்படுவியா//
சூப்பர் வெட்டி…கவுண்டர பேச சொன்னா கூட இப்போ இப்படி எல்லாம் பேசுவாரானு தெரியல…நீங்க கலக்கறீங்க 🙂
/த: சுள்ளான். அதுலதான் டைரக்டர் ரமணா என்னை ஆக்ஷன் ஹீரோவா காண்பிச்சாரு.
க: ஓ! நீயும் பசுபதியும் மாத்தி மாத்தி
டேய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு கத்துவீங்களே அந்த படமா?
ஏன்டா ஓவரா சவுண்ட் விட்டு நடிச்சா அது ஆக்ஷன் படமா?
த: அதுல பஞ்ச் டயலாக்லாம் வேற இருக்குமே!!!
க: ஓ! அதுவா? அந்த தீப்பந்தத்த எடுத்துட்டு வாங்கப்பா. தம்பிய சுட வைக்கலாம்
த: எதுக்குங்க?
க: நீ தான்டா சொன்ன! சுள்ளான் சூடானேன் சுலுக்கெடுத்துடுவேனு. எனக்கு கால்ல 2 நாளா சுலுக்கு அதான் உன்னைய சூடாக்கி சுலுக்கெடுக்க வைக்கலாம்னு பாக்கறேன்.
த: ஐயய்யோ அது சும்மா ரைமிங்கு பேசனதுங்க…//
/
சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது!
:))
:)))
//மக்களின் மனதில் மன்மத ராசாவாக இடம் பெற்றிருக்கும் தனுஷ்…//
இன்னாது??????
கவுண்டர் அந்த கேஸ் போட்டு காதலிச்ச படத்தை மறந்துட்டாரோ!? 🙂
வெட்டி, மீதி எல்லாத்தையும் நிறுத்திட்டு இதையே இன்னும் கொஞ்சம் போடுங்க, சூப்பர் காமெடி!! :)))
//Syam said…
//ஏன்டா எல்லாரும் கடைசியா சாகத்தானே போறாங்க? அதுக்கு ஆசைப்படுவியா//
சூப்பர் வெட்டி…கவுண்டர பேச சொன்னா கூட இப்போ இப்படி எல்லாம் பேசுவாரானு தெரியல…நீங்க கலக்கறீங்க 🙂 //
நாட்டாமை,
என்ன இப்படி சொல்லிட்டீங்க…
அவரெல்லாம் பெரிய தலை… நாம அவர் புகழ் பரப்பும் சாதாரண தொண்டன் 🙂
//SK said…
சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது!
:))
//
SK ஐயா,
நகைச்சுவை பதிவுக்கு நீங்க முதல் ஆளாஅ வரது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தருது…
//கப்பி பய said…
:)))
//மக்களின் மனதில் மன்மத ராசாவாக இடம் பெற்றிருக்கும் தனுஷ்…//
இன்னாது??????
கவுண்டர் அந்த கேஸ் போட்டு காதலிச்ச படத்தை மறந்துட்டாரோ!? 🙂 //
அந்த கொடுமைய மறந்துட்டனே!!!
இப்ப சேத்துக்கலாமா???
//இலவசக்கொத்தனார் said…
வெட்டி, மீதி எல்லாத்தையும் நிறுத்திட்டு இதையே இன்னும் கொஞ்சம் போடுங்க, சூப்பர் காமெடி!! :))) //
கொத்ஸ்,
தங்கள் சித்தம் என் பாக்கியம்…
அடுத்த பதிவு நாளை வரும் 😉
வெட்டி, எப்படி தனியா சேர் போட்டு உட்கார்ந்து இதை எல்லாம் யோசிப்பீங்களா..
நல்லா இருக்கு வெட்டி.. ஏதோ இந்த சின்ன பையன் சொன்னதையும் மனசுல வச்சு தனுஷை பேட்டிக்கு அழைத்து வந்ததற்கு நன்றிங்க பாலாஜி
சூப்பர் வெட்டி…
ஆனா, இன்னும் நிறைய கலாச்சிருக்கலாமோன்னு தோணுது. ‘காதல் கொண்டேன்’ படம், ‘ஏன் ஒரு மாதிரியான படத்துல நடிக்குற’, அப்புறம் ‘எதுக்கு அவன் அண்ணனோட படத்துலேயே நடிக்கிற’ இப்படி இன்னும் கொஞ்சம் நாக்க புடுங்குனா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.
[படிச்சிட்டு ஸைலண்டா போடா வெண்ண.. அப்டீன்னு நீ சொல்றது தெரியுது]
கவுண்டமணி படத்துக்கு வசனம் எழுதினவருடைய பக்கத்து வீட்டில் குடிய்ரிந்தீர்களா அல்லது நீங்கதான் அந்த வசனகர்த்தாவா?
சூப்பர் வெட்டி!
செம காமடியா எழுதியிருக்கிறீங்க……
இன்னும் நிறைய எழுதியிருக்காலாமே, ரொம்ப ஷார்ட்டா இருக்கிறாப்ல தோனுது,
ஆனா அட்டகாசமான கலக்கல்ஸ்!!!
//ஜி said…
சூப்பர் வெட்டி…
ஆனா, இன்னும் நிறைய கலாச்சிருக்கலாமோன்னு தோணுது. ‘காதல் கொண்டேன்’ படம், ‘ஏன் ஒரு மாதிரியான படத்துல நடிக்குற’, அப்புறம் ‘எதுக்கு அவன் அண்ணனோட படத்துலேயே நடிக்கிற’ இப்படி இன்னும் கொஞ்சம் நாக்க புடுங்குனா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.
[படிச்சிட்டு ஸைலண்டா போடா வெண்ண.. அப்டீன்னு நீ சொல்றது தெரியுது] //
ஜி,
ஒரு பிரச்சனை என்னனா எனக்கு செல்வராகவன் படம் பிடிக்கும்…
புதுப்பேட்டைல தாதாவ ஹீரோவா காட்டாம கெட்டவனா காட்றதுக்கு ஒரு தைரியம் வேண்டும்… அதனால செல்வ படத்த ஓட்ட முடியல…
அதுவும் இல்லாம தனுஷ் எங்கயுமே அடக்கி வாசிக்கிற ஆளு. அதனால அளவுக்கு அதிகமா கலாய்க்க வேண்டாம்னு விட்டாச்சு 🙂
ஆகா, சுப்பர்.
அடுத்து, செந்தில், சத்யராஜ், கோவை சரளா, வடிவேல், விவெக்
வருசையா பொட்டு தாக்கு தலைவா.
-உண்மை
//மு.கார்த்திகேயன் said…
வெட்டி, எப்படி தனியா சேர் போட்டு உட்கார்ந்து இதை எல்லாம் யோசிப்பீங்களா..
//
அப்படியெல்லாம் இல்லைங்க தலைவா…
சும்மா அப்படியே அடிச்சி ஆட வேண்டியதுதான் 🙂
//
நல்லா இருக்கு வெட்டி.. ஏதோ இந்த சின்ன பையன் சொன்னதையும் மனசுல வச்சு தனுஷை பேட்டிக்கு அழைத்து வந்ததற்கு நன்றிங்க பாலாஜி //
நீங்க சின்ன பையனா?????????????????
இதை வன்மையாக கண்டித்து நீங்கள் அசின் படம் போடும் வரை பதிவு போடா விரதமிருக்கப்படும் 😉
ச்சும்மாச்சுக்கு சொன்னேன் 🙂
//கால்கரி சிவா said…
கவுண்டமணி படத்துக்கு வசனம் எழுதினவருடைய பக்கத்து வீட்டில் குடிய்ரிந்தீர்களா அல்லது நீங்கதான் அந்த வசனகர்த்தாவா? //
அப்படியெல்லாம் இல்லைங்க… அவருடைய படம் நிறைய பார்த்த எஃபக்ட் 🙂
//Divya said…
சூப்பர் வெட்டி!
செம காமடியா எழுதியிருக்கிறீங்க……
இன்னும் நிறைய எழுதியிருக்காலாமே, ரொம்ப ஷார்ட்டா இருக்கிறாப்ல தோனுது,
ஆனா அட்டகாசமான கலக்கல்ஸ்!!! //
மிக்க நன்றி!!!
பாவங்க சின்ன பையன்…
பேட்டியெல்லாமும் அடக்கமாத்தான் இருப்பாரு… அதனால கொஞ்சம் விட்டாச்சு 🙂
// Anonymous said…
ஆகா, சுப்பர்.
அடுத்து, செந்தில், சத்யராஜ், கோவை சரளா, வடிவேல், விவெக்
வருசையா பொட்டு தாக்கு தலைவா.
-உண்மை //
உண்மை,
ஃபீல் பண்ணாதீங்க.. போட்டு தாக்கிடுவோம் 🙂
:-))))))
நல்லா இருந்துச்சு டா…ரீசெண்டா தனுஷ் சன் டிவில வந்து லைவ் பேட்டி கொடுத்த பார்த்தேன்…பிச்சகாரன் மாதிரியே இருந்தான் 🙂 இன்னும் கொஞ்சம் அடிய போட்டு அனுப்பி இருக்கலாம்…இருந்தாலும் எவ்வளவு தான் டைப் அடிக்கிறது..நான் சொல்றது ஈசி…அத்னால நீ ஒன்னும் கண்டுக்காத..அடுத்தது யாரு..யாராச்சும் ஒரு ஹீரோயின் என்ட்ரி நல்லா இருக்குமே..! கிளு கிளுப்பா… 🙂
உக்காந்து யோசிப்பீங்களோ??? எப்படிய்யா இதெல்லாம்??? அதுவா வருதா?? இல்ல வரவைச்சுகிறீங்களா??
நீ இன்னும் கொஞ்சம் சுளுக்கு எடுத்து இருக்கலாம் வெட்டி. அதுவும் கப்பி சொன்ன படத்தை பாத்து நான் பட்ட பாடு இருக்கே அதுக்காகவே அவனுக்கு அடியை கூட போடலாம். எப்படி எல்லாம் படத்துல நடிச்சி டென்ஷன் ஆக்குறான் மனுசனை.
உங்களால எப்படி இதெல்லாம் think பண்ண வருது? சிரிச்சு வயிறு வலிக்குது. இன்னும் நிறைய போடுங்க!
:-))))
ரசிச்சேன் வெட்டி… செம காமிடி 🙂
தனுஷும் பாவம் அவரை நாம நடிக்க வச்சு பார்க்கிறதும் பாவம்.
அவர் பேட்டியெல்லாம் ரொம்ப
சிறப்பாத்தான் வருது:-(
//குமரன் (Kumaran) said…
:-)))))) //
:-))))
(ஸ்மைலிக்கு ஸ்மைலி)
//தமிழ்ப்பிரியன் said…
நல்லா இருந்துச்சு டா…ரீசெண்டா தனுஷ் சன் டிவில வந்து லைவ் பேட்டி கொடுத்த பார்த்தேன்…பிச்சகாரன் மாதிரியே இருந்தான் 🙂 இன்னும் கொஞ்சம் அடிய போட்டு அனுப்பி இருக்கலாம்…இருந்தாலும் எவ்வளவு தான் டைப் அடிக்கிறது..நான் சொல்றது ஈசி…அத்னால நீ ஒன்னும் கண்டுக்காத..அடுத்தது யாரு..யாராச்சும் ஒரு ஹீரோயின் என்ட்ரி நல்லா இருக்குமே..! கிளு கிளுப்பா… 🙂 //
அதிகமா பேசாதவங்களை எல்லாம் அதிகமா கலாய்க்க கூடாது. இது கவுண்டர் பாலிசி 😉
ஹீரோயின் சீக்கிரமே வருவாங்க 🙂
//ஆதவன் said…
உக்காந்து யோசிப்பீங்களோ??? எப்படிய்யா இதெல்லாம்??? அதுவா வருதா?? இல்ல வரவைச்சுகிறீங்களா?? /
எல்லாம் தானா வரதுதாங்க 🙂
கவுண்டருடைய டை ஹார்ட் ஃபேன் நானு.. அதனால அவர் காமெடி ஈஸியா வருது
//சந்தோஷ் said…
நீ இன்னும் கொஞ்சம் சுளுக்கு எடுத்து இருக்கலாம் வெட்டி. அதுவும் கப்பி சொன்ன படத்தை பாத்து நான் பட்ட பாடு இருக்கே அதுக்காகவே அவனுக்கு அடியை கூட போடலாம். எப்படி எல்லாம் படத்துல நடிச்சி டென்ஷன் ஆக்குறான் மனுசனை. //
சந்தோஷ்,
அந்த படத்தை மறந்துட்டேன்…
அதை கைல எடுத்திருந்தா இன்னும் சுலுக்கெடுத்திருக்கலாம்.. இன்னோரு நாள் பிடிப்போம் 🙂
//singari said…
உங்களால எப்படி இதெல்லாம் think பண்ண வருது? சிரிச்சு வயிறு வலிக்குது. இன்னும் நிறைய போடுங்க! //
எல்லாம் உங்களை மாதிரி உற்சாகப்படுத்தறதாலதாங்க எழுத முடியுது…
கண்டிப்பா நிறைய போடறெனுங்க…
//kannabiran, RAVI SHANKAR (KRS) said…
இந்தப் பதிவை தனுஷுக்கு fwd பண்ணியுள்ளேன் என்று நான் சொன்னால் நீங்க அடுத்து என்ன செய்வீங்க பாலாஜி? 🙂
//
அவருக்கு எப்படியும் மெயில் பார்க்க தெரியாதுனு ஜாலியா இருந்துடுவேன் 😉
//
தனுஷ் புரூஸ் லீயின் வாரிசான்னு எல்லாம் தெரியாது! ஆனா
நீங்க கவுண்டரின் வாரிசு என்று சொல்லவும் வேண்டுமா?
//
ஆஹா… நம்ம யாருக்கும் வாரிசெல்லாம் கிடையாதுங்க. கவுண்டருடைய டேலண்ட்ல நூத்துல ஒரு சதவிகிதம் கூட நமக்கு கிடையாது 🙂
//
வேனும்னா சின்னதா ஒரு ஓட்டெடுப்பு நடத்திடலாம்; மக்கள்ஸ் சும்மா வாக்குச்சீட்டில் குத்திட மாட்டாங்களா? //
இது வேறயா???
//Arunkumar said…
ரசிச்சேன் வெட்டி… செம காமிடி 🙂 //
மிக்க நன்றி அருண்…
//வல்லிசிம்ஹன் said…
தனுஷும் பாவம் அவரை நாம நடிக்க வச்சு பார்க்கிறதும் பாவம்.
//
:-))
//
அவர் பேட்டியெல்லாம் ரொம்ப
சிறப்பாத்தான் வருது:-( //
இந்த பேட்டிய சொல்றீங்களா இல்லை நிஜ பேட்டியை சொல்றீங்களா???
yaradhu dhanusha?
engeyo kelvipatta mathiri irukke
nalla otitinga
yappa
iyyo paavam
innam ethirpaarkiren
petti “mudiyalai”