புது வெள்ளம்!!!

1904ஆம் ஆண்டு நாசிக் நகரில் ப்ளேக் நோய் தாக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காலமாயினர். உயிருக்கு பயந்து ஊரை விட்டு பலர் காலி செய்தனர். ப்ளேக் நோயால் இறந்தவர்களை தொடவே அவர்கள் உறவினர்களும் அஞ்சினர். அந்த நிலையில் ஊரில் பெருவணிகனாக இருந்த 25 வயதே நிரம்பிய ராகுல் சின்ஹா என்பவர் களமிறங்கி இறந்தவர்களை தன் முதுகில் சுமந்து சுடுகாட்டிற்கு எடுத்து சென்றார். இதை பார்த்து அவருடைய நண்பர்களும் அவருக்கு உதவினர்.

1909ல் 9 வயதில் திருமணம் செய்து, கணவனை இழந்த, தன் சகோதரியின் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்து புரட்சியை ஏற்படுத்தினார்.

நாசிக் நகரின் சிறப்பு மாஜிஸ்ட்ரேட்,நகர வங்கி, மத தேவஸ்தான அறக்கட்டளை தலைவர் போன்ற 29 துறைகளுக்கு தலைவராக பணியாற்றிய அவர் காந்திஜியின் வழி சேர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்து பதவிகளையும் தூக்கியெறிந்தார்.

ஒரு பவுன் 10 ரூபாய் பெறாத அந்த காலத்தில் வருடத்திற்கு 20,000 ஈட்டும் குடும்ப தொழிலை விட்டு நாட்டு விடுதலையில் பங்கு கொண்டார். நாசிக் நகரில் ஆங்கிலேயரால் முதன் முதலில் 144ல் கைதி செய்யப்பட்டார். அதன் பிறகு காந்திஜியின் அறைகூவலை ஏற்று அன்றிலிருந்து அவர் கதராடையையே உடுத்த ஆரம்பித்தார். அவரது குடும்பத்தினறையும் அவ்வாறே செயல்பட வைத்தார்.

கள்ளுக்கடை மறியலை காந்திஜி துவங்குவதற்கு காரணமே இவரின் மனைவியும், தங்கையும் தான். கள்ளுக்கடை மறியலையும் தானே முன்னின்று நடத்தினார். மேலும் கள் உற்பத்திக்காக தன் நிலத்தில் வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட மரத்தை வெட்டி வீழ்த்தினார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராகவும் 4 ஆண்டுகள் தலைமை ஏற்று நடத்தினார். இடஒதுக்கிட்டீன் தேவையை முதன்முதலில் பறை சாற்றியவரும் இவரே. மகாராஷ்ட்டிரத்தில் நிலவிய தீண்டாமையை ஒழிக்க இவர் போராடிய அளவிற்கு யாருமே இந்தியாவில் போராடியதாக தெரியவில்லை.

இவர் கட்சி தலைமை பதவி வகித்திருந்தாலும் ஆட்சியில் அமர முற்பட்டதில்லை. இவர் விருப்பப்பட்டிருந்தால் எளிதாக முதலமைச்சராகியிருக்கலாம். ஆனால் பதவியை இவர் விரும்பவில்லை. செல்வ சீமானான இவருக்கு பணத்திலும் விருப்பமில்லை. பிற்காலத்தில் காந்திஜியின் பாதையையே தவறென்று கடுமையாக சாடினார். புகழுக்கு ஆசைப்பட்டிருந்தால் காந்திஜிக்கு ஜால்ரா போட்டு மென்மேலும் புகழடைந்திருக்கலாம். ஆனால் இவருக்கு பணம், பெயர், புகழ் எதிலும் ஆசையில்லை. போராட்டமே இவர் வாழ்க்கையாக இருந்தது.

எந்த மனிதனும் மற்றவனுக்கு குறைந்தவனில்லை என்று உரக்க கூவினார். மனிதனே மனிதனை அடிமைப்படுத்துவதை எதிர்த்து போராடினார். இதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் அடித்து நொறுக்கி அவனுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கினார். அது விநாயகர் சிலையாக இருந்தாலும் சரி இராமர் திருவிக்ரகமாக இருந்தாலும் சரி.

“நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?”

இதை புரிந்தவர்களுக்கு அவரின் செயல் எந்த விதத்திலும் தவறாக படாது. இந்து மதத்தில் புரையோடிக்கிடந்த தவறுகள் இவரால் அடித்து நொறுக்கி சீர்பட்டன. தேங்கி கிடந்த குட்டையில் புதுவெள்ளம் பாய்ந்து அதை தூய்மை செய்தது.
கோவிலுக்கு வெளியே நின்று வணங்கியவர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட வழி பிறந்தது.

எரிமலைகள் வெடிக்கும் போது ஒரு சில ரோஜாக்களும் கருகுவதை போல இவரின் போராட்டத்தால் ஒரு சிலரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவருடைய ஒரு சில கொள்கைகளில் தவறிருக்கலாம். அதை இவரும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். நானும் உங்களை போல ஒரு சாதாரண மனிதன்தான் என்று. இவரின் போராட்டங்கள் எதுவும் அவருடைய சுயநலத்திற்காக செய்யப்படவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். கடைசி வரை மக்களின் உண்மையான விடுதலைக்காகவும், சுயமரியாதைக்காகவுமே போராடினார்.

சரி இப்போது சொல்லுங்கள் இந்த நபர் நல்லவரா? கெட்டவரா?

நண்பர்களே ஒரு சிறு தவறு ஏற்பட்டுவிட்டது. மேலே நீங்கள் ஒரு சில மாற்றங்களை செய்து மீண்டும் ஒருமுறை படிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
தவறான சொல் – சரியான சொல்
நாசிக் – ஈரோடு
ராகுல் சின்ஹா – ஈ.வே.ராமசாமி (@) பெரியார்
மகாராஷ்ட்ரா – தமிழ்நாடு

எதுக்கு இவன் பேரை மாத்தி போட்டானு பாக்கறீங்களா? ஒரு சிலர் இந்த பேரை கேட்டவுடனே மனசுக்கு முன்னாடி ஒரு இரும்பு திரையை போட்டுக்கறீங்க. வாழ்க்கை முழுதும் சுயநலம் பாராமல் போராடிய ஒருவனை வெறும் கடவுள் மறுப்பு கொள்கைகளில் அடைத்து வைக்க முடியாது.
வரும் 24ஆம் தேதி அவரின் மறைந்த நாளை முன்னிட்டு இந்த பதிவை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.

பின்குறிப்பு:
இந்த பதிவிற்கு சாதி பெயர்களுடனோ, பெரியாரை தரக்குறைவாக தாக்கி வரும் பின்னூட்டங்களோ வெளியிடப்படமாட்டாது.

77 பதில்கள்

 1. நாந்தான ஃபர்ஸ்ட்டு??? :)))
  அப்பாலிக்கா படிக்கறேன்.. தூங்கணும்பா :))))

 2. கடைசியா போட்ட பின் குறிப்புதான் நச்..

 3. ஆகா.. பெரியார் பதிவு.. அவரோட நினைவு நாளை முன்னிட்டு..
  படிச்சாச்சி…
  இத படிக்கறத விட்டுபோட்டு தூங்கறதாவது..
  ஒரு சமூகத்திற்கே விழிப்புணர்வு தந்தவரை பத்தி விழிச்சிருந்து படிக்கறது தப்பே இல்லை..
  வெண்தாடி வேந்தரை பத்தி அற்புதமான பதிவு..

  நன்றி.

 4. உங்களது நட்சத்திர பதிவுகளில்,இதற்கு*****

  மீனாட்சி அருண்குமார்

 5. நல்ல பதிவு பாலாஜி…

 6. —ஒரு சிறு தவறுகள் ஏற்பட்டுவிட்டன. மேலே நீங்கள் ஒரு சில மாற்றங்களை செய்து மீண்டும் —

  வெகு அருமை! விக்கிப்பீடியா பதிவு மாதிரி இருக்கிறதே என்று எண்ணும் சமயத்தில் நல்ல டச்.

 7. //நாந்தான ஃபர்ஸ்ட்டு??? :)))
  அப்பாலிக்கா படிக்கறேன்.. தூங்கணும்பா :))))//

  சரி.. பொறுமையா வாங்க 🙂

 8. //ஜி said…

  கடைசியா போட்ட பின் குறிப்புதான் நச்..//
  அப்ப பதிவு இல்லைனு சொல்றீங்களா???

 9. //அரை பிளேடு said…

  ஆகா.. பெரியார் பதிவு.. அவரோட நினைவு நாளை முன்னிட்டு..
  படிச்சாச்சி…
  இத படிக்கறத விட்டுபோட்டு தூங்கறதாவது..
  ஒரு சமூகத்திற்கே விழிப்புணர்வு தந்தவரை பத்தி விழிச்சிருந்து படிக்கறது தப்பே இல்லை..
  வெண்தாடி வேந்தரை பத்தி அற்புதமான பதிவு..

  நன்றி.//

  ஆமாங்க…
  பள்ளிக்கூடங்கள் கட்டியவர் காமராசர் என்றால் அதில் மற்றவர்களுடன் அமர்ந்து படிக்கும் தைரியத்தை வழங்கியவர் பெரியார்…

  ஒரு பெரிய சமுதாய புரட்சியே ஏற்படுத்தியவர்…

 10. நன்று ,… நன்று ,…

  எங்க தமிழ் ஐயா … இப்படிதான் Good பொடுவாரு.

  வாழ்த்துக்கள் . நல்ல பதிவு

 11. பார்த்தாலே கண்ணை மூடிக்கொள்ளும்
  சிலரையும் படிக்க வச்சிட்டது…சாதனைதான்!

  படிக்கும்போதே எனக்குப் புரிந்து விட்டது!

  அவர் வெட்டிவீழ்த்தியது 3000 முதல் 4000 மரங்கள் என்று கூறப்படுகின்றது.

  வடநாட்டில் ஈச்ச மரங்களிலிருந்து மது இறக்கப்படும்.அதுமட்டுமே அம்மரத்தின் உபயோகம்

  இங்கு தெண்ணை பலவகைகளிலும்
  பயன்படுவதை காந்தியடிகளுக்கு
  யாரும் எடுத்துச்சொல்லவில்லை.

  தலைவர் ஆணையிட்டார்;தொண்டர் அப்படியேப் பின்பற்றினார்……

 12. பார்த்தேன்,படித்தேன், ரசித்தேன், நினைத்தேன்.

 13. நல்லபதிவு+ சொல்லப்பட்ட விதமும் புதுமை!

  வாழ்த்துக்கள்.

 14. வெட்டி,

  நீங்க கதை மட்டும் தான் நல்லா எழுதுவீங்கன்னு நினைச்சேன்.

  இது எல்லாத்தையும் விட சூப்பர்.

  தொடர்ந்து பெரியார் பற்றி நிறைய எழுதுங்கள்.

  -விழிப்பு!

 15. மிக மிக மிக நல்ல பதிவு நண்பரே. . . . . .

  உங்கள் கவுண்டர் Devil Show பதிவில் இப்பொழுதெல்லாம் 4 மணி நேரம் தான் தூங்குவதாக சொல்லி இருந்தீர்கள், நாம் நாளைக்கு கூட தூங்களாம், ஆனால் சிலரை இன்றே எழுப்பியாக வேண்டும்.

 16. பதிவின் நிறைவுப் பகுதி நிறைவு.

 17. பத்த வச்சுயே பரட்டை.. திரும்பவும் பத்தவச்சுடேயே..

  பெரியார் என்றவுடன் அனைவருக்கும் வரும் நினைவு என்ன?.

  99% வருவது கடவுள் எதிர்ப்பு,மறுப்பு. இதைவிட பல நல்ல காரியங்கள பண்ணியிருந்தும் ஏன் அது மட்டும் நினைவுக்கு வருகிறது.

  இதற்கு பதில் தேடுபவர்களிடம் பதில் ஏற்கனவே உள்ளது. ஆனால் கீழ்தரமான அரசியல் உண்மையான பதில் தாராது. சால்ஜாப்புகள்தான் உனக்கு இங்கு கிடைக்கும்.

 18. //எரிமலைகள் வெடிக்கும் போது ஒரு சில ரோஜாக்களும் கருகுவதை போல இவரின் போராட்டத்தால் ஒரு சிலரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்//

  அழகான உவமை!

  //தேங்கி கிடந்த குட்டையில் புதுவெள்ளம் பாய்ந்து அதை தூய்மை செய்தது//

  முற்றிலும் உண்மை!
  காலத்தால் சேர்ந்து விட்ட கசடுகளை எல்லாம், காட்டாற்று வெள்ளம் வந்து, ஒரு நாள் அடித்து விட்டு, அதனுடன் எடுத்துக் கொண்டு சென்றது.

  வள்ளலாரின் மென்மை ஈட்டித் தராத ஒன்றை, பெரியாரின் வன்மை ஈட்டித் தந்தது!

  அதற்கு நமது தேசமும் தர்மமும் கடமைப்பட்டவர்களாகவே இருக்கிறோம்!

 19. different thinking n well presented article.

  keep it up….

 20. பதிவு மிக அருமையாக இருக்கு பாலாஜி.பின்குறிப்பு சூப்பர்.

 21. அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!!

 22. //Boston Bala said…

  —ஒரு சிறு தவறுகள் ஏற்பட்டுவிட்டன. மேலே நீங்கள் ஒரு சில மாற்றங்களை செய்து மீண்டும் —

  வெகு அருமை! விக்கிப்பீடியா பதிவு மாதிரி இருக்கிறதே என்று எண்ணும் சமயத்தில் நல்ல டச். //

  மிக்க நன்றி பாபா…
  பெயரை பார்த்தவுடன் மனதை இறுகி கொள்ளும் ஒரு சிலருக்காகவே இந்த பதிவு

 23. //MeenaArun said…

  உங்களது நட்சத்திர பதிவுகளில்,இதற்கு*****

  மீனாட்சி அருண்குமார் //

  மிக்க நன்றி மீனாட்சி அருண்குமார்…

 24. //பொன்ஸ் said…

  நல்ல பதிவு பாலாஜி… //

  மிக்க நன்றி பொன்ஸக்கா…

 25. //சுந்தர் said…

  நன்று ,… நன்று ,…

  எங்க தமிழ் ஐயா … இப்படிதான் Good பொடுவாரு.

  வாழ்த்துக்கள் . நல்ல பதிவு //

  மிக்க நன்றி சுந்தர்

  (தமிழய்யாகிட்ட நன்று வாங்கி எத்தனை நாளாகுது :-))

 26. //sivagnanamji(#16342789) said…

  பார்த்தாலே கண்ணை மூடிக்கொள்ளும்
  சிலரையும் படிக்க வச்சிட்டது…சாதனைதான்!
  //
  மிக்க நன்றி… அதற்காகத்தான் பெயரை மாற்றி எழுதினேன்.

  // படிக்கும்போதே எனக்குப் புரிந்து விட்டது!
  //
  இவ்வளவு போராட்டங்களை செய்தது அவர் மட்டுமே!!! அதனால் பாதியிலே புரிந்துவிடும். இருந்தாலும் இவன் ஏன் இப்படி எழுதினான் என்று கண்டிப்பாக இறுதி வரை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையே!!!

  //
  அவர் வெட்டிவீழ்த்தியது 3000 முதல் 4000 மரங்கள் என்று கூறப்படுகின்றது.

  வடநாட்டில் ஈச்ச மரங்களிலிருந்து மது இறக்கப்படும்.அதுமட்டுமே அம்மரத்தின் உபயோகம்

  இங்கு தெண்ணை பலவகைகளிலும்
  பயன்படுவதை காந்தியடிகளுக்கு
  யாரும் எடுத்துச்சொல்லவில்லை.

  தலைவர் ஆணையிட்டார்;தொண்டர் அப்படியேப் பின்பற்றினார்…… //
  தகவல் periyar.org லிருந்து எடுத்தேன்.

  முல்லை கொடிக்கு தேரை விட்டு வந்ததும் முட்டாள் தனம் தானே!!! ஆனால் அவரை வள்ளல் என்று சொல்லவில்லையா? நல்லதை நினைத்து செய்யும் செயல்களை அறிவால் ஆராயாமல் மனதால் ஆராயவும்…

 27. //Udhayakumar said…

  பார்த்தேன்,படித்தேன், ரசித்தேன், நினைத்தேன். //

  சொல்லின் செல்வராகிவிட்டீர்கள் சவுண்ட்
  :-))

 28. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  //எரிமலைகள் வெடிக்கும் போது ஒரு சில ரோஜாக்களும் கருகுவதை போல இவரின் போராட்டத்தால் ஒரு சிலரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்//

  அழகான உவமை!
  //
  மிக்க நன்றி KRS…

  // //தேங்கி கிடந்த குட்டையில் புதுவெள்ளம் பாய்ந்து அதை தூய்மை செய்தது//

  முற்றிலும் உண்மை!
  காலத்தால் சேர்ந்து விட்ட கசடுகளை எல்லாம், காட்டாற்று வெள்ளம் வந்து, ஒரு நாள் அடித்து விட்டு, அதனுடன் எடுத்துக் கொண்டு சென்றது.

  வள்ளலாரின் மென்மை ஈட்டித் தராத ஒன்றை, பெரியாரின் வன்மை ஈட்டித் தந்தது!

  அதற்கு நமது தேசமும் தர்மமும் கடமைப்பட்டவர்களாகவே இருக்கிறோம்! //
  சரியா சொல்லியிருக்கீங்க…

  அவர் செய்த சாதனைகள் மிகப்பெரியவை… நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாததை அவர் சாதித்தார்.

  மனிதனை பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்வதைவிட கொடுமை வேறு எதுவும் கிடையாது…

  சிலை வைத்துதான் மதத்தை செழிக்க வைக்க முடியுமென்பதில்லை…

 29. நல்லா எழுதியிருக்கீங்க வெட்டி!

 30. நல்ல பதிவு

 31. பாலாஜி,

  அந்த கடைசி குறிப்பை போடது விட்டிருக்கனும் ஒரு வாரம் கழித்துப் போட்டிருந்தால் என்ன மாதிரியான விமர்சனம் வரும் என்று பார்த்திருக்கலாம். அருமையான பதிவு வாழ்த்துக்கள்

 32. Really very very Nice article Balaji.
  You made the burning issue topic in cool way.

  VETTI VAZGA.

 33. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  பாலாஜி

  சுவாரஸ்யமான திருப்பங்களைத் தருவதில் நீங்கள் வல்லவர் என்று பட்சி…சாரி பதிவு சொல்கிறதே!

  வித்தியாசமான ஆனால் வெற்றிகரமான பதிவாக்கம்! வாழ்த்துக்கள் பாலாஜி! //

  மிக்க நன்றி KRS

 34. வெட்டி….முதலில் உன் பெயரை மாற்று. சொல்ல வந்த கருத்திலாகட்டும்…சொல்லும் விதத்திலாகட்டும்…என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

  முருகா! கற்றது கைமண்ணளவு. (இது எனக்கு).

  பெரியாரின் கொள்கைகள் என்று நான் புத்தகம் படித்ததில்லை. ஆனால் சிலச்சில கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையிலும் தமிழ்க் கொள்கையிலும் எனக்கு மறுப்பு உண்டு. ஆனால் சமூக நீதிக் கருத்துகளிலும் பெண்ணுரிமைக் கருத்துகளிலும் மிகுந்த ஒப்புதல் உண்டு. பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும். முடிந்து போயிற்று விஷயம் அத்தோடு.

  இன்றைக்கு ஜிரா விரும்பினாலும் அறுபடை வீட்டில் எந்த வீட்டிலும் முருகனுக்குப் பூசனை செய்ய முடியாது. பாலாஜியும் திருப்பதி பாலாஜியைப் பார்த்ததுமே ஜருகண்டி ஜருகண்டிதான். இந்த நிலையும் மாறத்தான் அவர் பாடுபட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.

  அவரும் மனிதர்தான். தவறுகள் செய்திருக்கலாம். சமீபத்தில் கீழ்வெண்மணி படுகொலை பற்றி ரோசாவசந்த் பதிவிட்டிருந்தாரே. அதற்காக அவர் சொல்லும் எல்லாமும் தவறு என்று சொல்வது மூடத்தனம்.

  இன்றைய நிலையில் பெரியார் எதிர்ப்பு என்பதும் ஆதரவு என்பதும் buzz words. இருவருமே அவரை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

 35. பெரியாரை பத்தி ஒரு அருமையான பதிவு வெட்டி…

  //ஒரு சிலர் இந்த பேரை கேட்டவுடனே மனசுக்கு முன்னாடி ஒரு இரும்பு திரையை போட்டுக்கறீங்க//

  ரொம்ப சரி…கடவுள் எதிர்ப்பு கொள்கைனு சொல்றதவிட மூட நம்பிக்கை எதிர்ப்புனு சொல்லலாம்…

 36. பாலாஜி ,

  என்ன உங்க பதிவில் எப்போதும் முதலில் கமெண்ட் எழுதும் சில பேரைக் காணவில்லை …..

 37. அந்தக் கடைசி ட்விஸ்டைத் தவிர்த்தால், புதிய செய்தி ஒன்றுமில்லை இப்பதிவில்.

  சொல்லப்பட்ட விதம் புதுமை.

  நல்ல பதிவு பாலாஜி
  !!.

 38. நல்ல பதிவு பாலாஜி…

 39. பெரியாரைப் பற்றி ஒரு அருமையான பதிவு. உங்கள் நட்சத்திர வாரத்தை நன்றாக பயன்படுத்துகிறீர்கள்.

 40. //நாடோடி said…

  பத்த வச்சுயே பரட்டை.. திரும்பவும் பத்தவச்சுடேயே..
  //
  என்னங்க பண்றது? நம்ம உக்கார்ந்திருக்கற இடம் அப்படியாயிடுச்சு 🙂

  //
  பெரியார் என்றவுடன் அனைவருக்கும் வரும் நினைவு என்ன?.

  99% வருவது கடவுள் எதிர்ப்பு,மறுப்பு. இதைவிட பல நல்ல காரியங்கள பண்ணியிருந்தும் ஏன் அது மட்டும் நினைவுக்கு வருகிறது.

  இதற்கு பதில் தேடுபவர்களிடம் பதில் ஏற்கனவே உள்ளது. ஆனால் கீழ்தரமான அரசியல் உண்மையான பதில் தாராது. சால்ஜாப்புகள்தான் உனக்கு இங்கு கிடைக்கும். //
  :-))
  ஏற்கனவே அது எனக்கு கிடைத்துவிட்டது. என் முதல் பதிவை பார்க்கவும் 😉

  யாரையும் கேட்காமல் நாமே படித்து ஒரு முடிவுக்கு வருவதே நல்லது 🙂

 41. //அழகு said…

  //எரிமலைகள் வெடிக்கும் போது ஒரு சில ரோஜாக்களும் கருகுவதை போல இவரின் போராட்டத்தால் ஒரு சிலரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவருடைய ஒரு சில கொள்கைகளில் தவறிருக்கலாம். அதை இவரும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். நானும் உங்களை போல ஒரு சாதாரண மனிதன்தான் என்று.//

  இதைப் படித்த‌ உடனே வேறு ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்று விளங்கி விட்டது.

  யாருக்கு அப்படிச் சொல்வதற்கு துணிவிருந்தது? //

  சரியாக சொன்னீர்கள்…

 42. //singari said…

  It is really a good post. The way you presented also makes people read this one. Thodarattum ungal Sevai.
  //
  Thx a lot…

  // Note: Tamil – la eppadi type panrathunu theriyala. New to Tamizmanam //

  Hi Singari,
  you can dowload e-kalappai from here

 43. //வெங்கட்ராமன் said…

  மிக மிக மிக நல்ல பதிவு நண்பரே. . . . . .
  //
  மிக்க நன்றி வெங்கட்ராமன்…

  // உங்கள் கவுண்டர் Devil Show பதிவில் இப்பொழுதெல்லாம் 4 மணி நேரம் தான் தூங்குவதாக சொல்லி இருந்தீர்கள், நாம் நாளைக்கு கூட தூங்களாம், ஆனால் சிலரை இன்றே எழுப்பியாக வேண்டும். //
  முடிந்த வரை பயன்படுத்தி கொள்ளவே பார்க்கிறேன்.

  அலுவலகத்திலும் வேலை பளு கொஞ்சம் அதிகமாகிவிட்டது. கிரிஸ்மஸ் விடுமுறைக்கு செல்வதற்கு முன் அனைத்து வேலையும் முடிக்க வேண்டுமென்று இங்கே ஆசைப்படுவதால் முன்பைவிட ஒரு மடங்கு வேலை அதிகமாகிவிட்டதே அதற்கு காரணம் 🙂

 44. //இன்பா said…

  பதிவின் நிறைவுப் பகுதி நிறைவு. //

  மிக்க நன்றி இன்பா…

 45. //யெஸ்.பாலபாரதி said…

  நல்லபதிவு+ சொல்லப்பட்ட விதமும் புதுமை!

  வாழ்த்துக்கள். //

  தொடர்ந்து வரவும்னு சொன்னதும் வந்துட்டீங்களே!!!

  மிக்க நன்றி…

  தொடர்ந்து வரவும் 🙂

 46. //விழிப்பு! said…

  வெட்டி,

  நீங்க கதை மட்டும் தான் நல்லா எழுதுவீங்கன்னு நினைச்சேன்.

  இது எல்லாத்தையும் விட சூப்பர்.

  தொடர்ந்து பெரியார் பற்றி நிறைய எழுதுங்கள்.

  -விழிப்பு! //

  மிக்க நன்றி விழிப்பு…

  எல்லாமே ஒரு முயற்சிதான். எனக்கு எது நல்லா எழுத வரும்னு இன்னும் எனக்கே தெரியல…

  பெரியாரை பற்றி இன்னும் அதிகம் எழுதுகிறேன் விழிப்பு…

 47. எல்லாரும் சொன்ன மாதிரி மிகவும் அருமையான பதிவு பாலாஜி,
  நட்சத்திர வாரத்தில் ஒரு சூப்பர் போஸ்ட்..வாழ்த்துக்கள்..

  பின் குறிப்பு தான் இந்த பதிவுக்கு + பாயிண்ட்..இல்லேன்னா கண்ட கண்டதுக்கெல்லாம் ரிப்ளை பன்னி சொல்ல வந்த மெஸேஜ் ஸ்பாயில் ஆயிருக்கும்..

 48. //சபாபதி சரவணன் said…

  அருமை.

  பதிவிட்டிருந்த முறை முற்றிலும் புதுமையாக இருந்தது.

  பாராட்டுகள். //

  மிக்க நன்றி சரவணன்…
  தொடர்ந்து வரவும் 🙂

 49. //செல்வன் said…

  பதிவு மிக அருமையாக இருக்கு பாலாஜி.பின்குறிப்பு சூப்பர். //

  மிக்க நன்றி தலைவா…

  பின்குறிப்பு பதிவை ஹைஜேக் பண்ணாம இருக்க தேவைப்பட்டுது…

 50. //கப்பி பய said…

  அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!! //

  மிக்க நன்றி கப்பி…

 51. //இம்சை அரசி said…

  different thinking n well presented article.

  keep it up…. //

  thx a lot IA 😉

 52. //இலவசக்கொத்தனார் said…

  நல்லா எழுதியிருக்கீங்க வெட்டி! //

  மிக்க நன்றி கொத்ஸ்…

 53. //நிர்மல் said…

  நல்ல பதிவு //

  மிக்க நன்றி நிர்மல்

 54. // சுப்பு said…

  பாலாஜி,

  அந்த கடைசி குறிப்பை போடது விட்டிருக்கனும் ஒரு வாரம் கழித்துப் போட்டிருந்தால் என்ன மாதிரியான விமர்சனம் வரும் என்று பார்த்திருக்கலாம். அருமையான பதிவு வாழ்த்துக்கள் //

  இல்லை சுப்பு,
  அது பதிவை ஹை ஜாக் செய்திருக்கும் 😦

  மிக்க நன்றி!!!

 55. //கிராமவாசி said…

  Really very very Nice article Balaji.
  You made the burning issue topic in cool way.

  VETTI VAZGA. //

  Thk u very much Gramavaasi…

 56. //G.Ragavan said…

  வெட்டி….முதலில் உன் பெயரை மாற்று. சொல்ல வந்த கருத்திலாகட்டும்…சொல்லும் விதத்திலாகட்டும்…என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
  //
  மிக்க நன்றி ஜி.ரா…

  //
  முருகா! கற்றது கைமண்ணளவு. (இது எனக்கு).
  //
  உங்களுக்கே கற்றது கைமண்ணளவுனா ஏனக்கு நகக்கண் அளவுணுதான் சொல்லணும் 🙂

  // பெரியாரின் கொள்கைகள் என்று நான் புத்தகம் படித்ததில்லை. ஆனால் சிலச்சில கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையிலும் தமிழ்க் கொள்கையிலும் எனக்கு மறுப்பு உண்டு. ஆனால் சமூக நீதிக் கருத்துகளிலும் பெண்ணுரிமைக் கருத்துகளிலும் மிகுந்த ஒப்புதல் உண்டு. பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும். முடிந்து போயிற்று விஷயம் அத்தோடு.
  //
  மிகவும் சரி…
  ஒருவரை நாம் முழுதாக ஏற்று கொள்ள வேண்டுமென்று அவசியமில்லை. அவர் செய்த சமுதாய புரட்சியை பற்றி சிந்திதாலே போதும்!!!

  //
  இன்றைக்கு ஜிரா விரும்பினாலும் அறுபடை வீட்டில் எந்த வீட்டிலும் முருகனுக்குப் பூசனை செய்ய முடியாது. பாலாஜியும் திருப்பதி பாலாஜியைப் பார்த்ததுமே ஜருகண்டி ஜருகண்டிதான். இந்த நிலையும் மாறத்தான் அவர் பாடுபட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.
  //
  :-))

  //
  அவரும் மனிதர்தான். தவறுகள் செய்திருக்கலாம். சமீபத்தில் கீழ்வெண்மணி படுகொலை பற்றி ரோசாவசந்த் பதிவிட்டிருந்தாரே. அதற்காக அவர் சொல்லும் எல்லாமும் தவறு என்று சொல்வது மூடத்தனம்.

  இன்றைய நிலையில் பெரியார் எதிர்ப்பு என்பதும் ஆதரவு என்பதும் buzz words. இருவருமே அவரை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. //

  ரொம்ப தெளிவா சொன்னீங்க ஜி.ரா…

 57. //Syam said…

  பெரியாரை பத்தி ஒரு அருமையான பதிவு வெட்டி…
  //
  மிக்க நன்றி நாட்டாமை!!!

  //
  //ஒரு சிலர் இந்த பேரை கேட்டவுடனே மனசுக்கு முன்னாடி ஒரு இரும்பு திரையை போட்டுக்கறீங்க//

  ரொம்ப சரி…கடவுள் எதிர்ப்பு கொள்கைனு சொல்றதவிட மூட நம்பிக்கை எதிர்ப்புனு சொல்லலாம்… //
  இதை எதிர்த்துத்தான் அவர் வாழ்நாள் முழுதும் போராடினார்…

 58. //Syam said…

  //இவர் கட்சி தலைமை பதவி வகித்திருந்தாலும் ஆட்சியில் அமர முற்பட்டதில்லை//

  இன்னைக்கு யாரு இப்படி சுயநலம் பாக்காம இருக்காங்க… //

  ரொம்ப சரியா சொன்னீங்க…
  இன்னைக்கு மக்கள் நலனைவிட தங்களின் சுயநலமே முக்கியம் என்று நினைக்கும் தலைவர்கள்தான் அதிகம் :-((

 59. // சுப்பு said…

  பாலாஜி ,

  என்ன உங்க பதிவில் எப்போதும் முதலில் கமெண்ட் எழுதும் சில பேரைக் காணவில்லை ….. //

  எல்லாம் வருவாங்க சுப்பு…
  பதிவு போட்டது இந்திய நேரத்தில இல்லையா???

 60. //SK said…

  அந்தக் கடைசி ட்விஸ்டைத் தவிர்த்தால், புதிய செய்தி ஒன்றுமில்லை இப்பதிவில்.

  சொல்லப்பட்ட விதம் புதுமை.

  நல்ல பதிவு பாலாஜி
  !!. //

  SK ஐயா,
  புதிதாக நாம் சொல்ல என்ன இருக்கிறது? எல்லாமே அவரை பற்றி சொல்லியாகிவிட்டது. நானும் என் பங்கிற்கு எனக்கு தெரிந்த வகையில் சொல்கிறேன் அவ்வளவே!!!

  மிக்க நன்றி ஐயா!!!

 61. //குமரன் (Kumaran) said…

  நல்ல பதிவு பாலாஜி… //

  மிக்க நன்றி குமரன்…

 62. //Arunkumar said…

  பெரியாரைப் பற்றி ஒரு அருமையான பதிவு. உங்கள் நட்சத்திர வாரத்தை நன்றாக பயன்படுத்துகிறீர்கள். //

  மிக்க நன்றி அருண்குமார்…

  முடிந்த வரை நாம் வெளிச்சத்திலிருக்கும் நேரத்தில் நல்ல விஷயங்களை செய்துவிடலாமென்றுதான் 🙂

 63. //தமிழ்ப்பிரியன் said…

  எல்லாரும் சொன்ன மாதிரி மிகவும் அருமையான பதிவு பாலாஜி,
  நட்சத்திர வாரத்தில் ஒரு சூப்பர் போஸ்ட்..வாழ்த்துக்கள்..
  //
  மிக்க நன்றி சங்கர்…

  //
  பின் குறிப்பு தான் இந்த பதிவுக்கு + பாயிண்ட்..இல்லேன்னா கண்ட கண்டதுக்கெல்லாம் ரிப்ளை பன்னி சொல்ல வந்த மெஸேஜ் ஸ்பாயில் ஆயிருக்கும்.. //
  ஆமாம்… பதிவு திசை மாற வேண்டாம்னுதான் அதை போட்டுட்டேன்

 64. இடைவிடாத வேலைகளுக்கு இடையில (????) இந்த பதிவை விட்டுட்டனேப்பா!

  வித்யாசமான பதிவுப்பா வித்யாசமான பார்வையில சொல்லியிருக்க!!

  நிச்சயா பாராட்டாம இருக்கமுடியல!!!

  இங்க குறிப்பா பெரியாரை பத்தின சர்ச்சைகள் மெத்த படிச்சவங்களும் வாழ்க்கையில பல அனுபவங்களை பெற்றவர்களும்தான் விவாதம் என்கிற பேர்ல ஒரே விஷயத்த திரும்ப திரும்ப பேசிட்டு இருக்காங்க. இந்த விஷயத்துல நவீன இன்றைய இளைஞர்களின் பார்வை இதுவரைக்கும் சரியான விதத்தில சொல்லாதது ஒரு குறையே. அப்படி பார்க்கும்போது இந்த பதிவு அந்த குறைய போக்குது.

  இந்த பதிவை படிச்ச உடனே என் மனசில தோன்றியது இதுதான்.

  இந்த தலைமுறை சரியான வழில போயிட்டு இருக்கு

 65. // சுப்பு said…
  // முருகா! கற்றது கைமண்ணளவு //

  சிவபெருமானுக்கு முருகன் என்றொரு மகன் இருப்பதாக எனது வட இந்திய நண்பர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார். நான் விசாரித்த வகையில் அனைத்து வட இந்தியரும் முருகக் கடவுள் சிவனின் மைந்தன் என்று ஒப்புக் கொள்ளவில்லை – இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. //

  🙂 அதற்குக் காரணம் மிக எளிது. முருகன் தமிழ்க் கடவுள். அவ்வளவுதான் விஷயம். இன்னும் விளக்கமாக நான் சொன்னால்….சண்டைதான் நடக்கும். 🙂 ஆரிய திராவிடக் கலப்பில் பல மாறின. தென்னாடுடைய சிவனும் ருத்ரனும் ஒன்றானார்கள். இன்னமும் சைவ சித்தாந்தம் சிவனை மும்மூர்த்திகளில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. ருத்திரந்தான் மும்மூர்த்திகளில் ஒருவன். இவர்கள் மூவருக்கும் மேலான தேவாதி தேவன் சிவன் என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது. அதே போல மாயனும் விஷ்ணுவும் ஒன்றாகிப் போனார்கள். இன்றைக்கு மாயன் என்ற பெயர்பயன்பாடு கூட மிகக் குறைவுதான். ஆனால் முருகன் மட்டும்…எத்தனை பெயர்கள் கருத்துகள் வந்து சேர்ந்தாலும் அத்தனையையும் சேர்த்துக்கொண்டு இன்னமும் முருகன் என்ற பெயரோடு இருக்கிறானே..தமிழ்க் கடவுள்…அவனை வடவரோ…கிழக்கரோ..யார் ஏற்றால் என்ன…மறுத்தால் என்ன. அனைவரையும் ஏற்பது அவன் கருணை.

 66. Very nice post!!I have been reading your blog for a long time and this is the best..

 67. ஈவெரா என்று நேரடியாகப் பெயர் போட்டு எழுதினால் அனைவரும் வந்து நேராகப் படிக்கக்கூட முடியாத செயல்கள், கொள்கைகள் கொண்டவர்!

  மெய்யாக பெரியவர் எனில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க கொள்கைகள் கொண்டவராக இருத்தல் அவசியம்.

 68. அட்டகாசம்! வெட்டி கலக்கிட்டய்யா. சொன்ன விதம் புதுசா பொருத்தமா இருந்துச்சு. நம்முடைய இரட்டை நிலையை நாமே புரிந்துகொள்ள வைத்திருக்கிறீர்கள் அருமை. முன்முடிவுகள்… எவ்வளவு நகைப்புக்குரிய விஷயம்!

  //”நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
  சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
  நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
  சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?”//

  முழுப்பாட்டையும் வெளியிட முடியுமா?

  என் இரண்டனா இது… ஆனால் இந்தப் பதிவு பவுன் 10 ரூபா பெறாத காலத்து 20,000!

 69. //Hariharan # 26491540 said…
  ஈவெரா என்று நேரடியாகப் பெயர் போட்டு எழுதினால் அனைவரும் வந்து நேராகப் படிக்கக்கூட முடியாத செயல்கள், கொள்கைகள் கொண்டவர்!

  மெய்யாக பெரியவர் எனில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க கொள்கைகள் கொண்டவராக இருத்தல் அவசியம். //

  முதலில் தங்களுக்கு பதில் சொல்லிவிடுகிறேன்..

  உலகில் எந்த ஒரு நபரையும் எல்லோரும் ஏற்று கொண்டது கிடையாது. ஆகவே அனைவரும் ஏற்று கொண்டால் மட்டுமே ஒருவர் பெரியவர் என்று அர்த்தமில்லை.

 70. Balaji,
  some persons are not understood all through their lives. and some persons are misunderstood.
  thiru.E.V.R had both persons following him.
  A veru good balanced post. thank you verymuch.
  pardon me for commenting in English.

 71. //தம்பி said…

  இடைவிடாத வேலைகளுக்கு இடையில (????) இந்த பதிவை விட்டுட்டனேப்பா!
  //
  படம் பார்க்கறதுதானே அந்த இடைவிடாத வேலை 🙂

  //
  வித்யாசமான பதிவுப்பா வித்யாசமான பார்வையில சொல்லியிருக்க!!
  //
  மிக்க நன்றி!!!

  // நிச்சயா பாராட்டாம இருக்கமுடியல!!!

  இங்க குறிப்பா பெரியாரை பத்தின சர்ச்சைகள் மெத்த படிச்சவங்களும் வாழ்க்கையில பல அனுபவங்களை பெற்றவர்களும்தான் விவாதம் என்கிற பேர்ல ஒரே விஷயத்த திரும்ப திரும்ப பேசிட்டு இருக்காங்க. இந்த விஷயத்துல நவீன இன்றைய இளைஞர்களின் பார்வை இதுவரைக்கும் சரியான விதத்தில சொல்லாதது ஒரு குறையே. அப்படி பார்க்கும்போது இந்த பதிவு அந்த குறைய போக்குது.

  இந்த பதிவை படிச்ச உடனே என் மனசில தோன்றியது இதுதான்.

  இந்த தலைமுறை சரியான வழில போயிட்டு இருக்கு//

  ரொம்ப நன்றி கதிரு…

 72. //Priya said…

  Unbiased opinion அ கொண்டு வர நீங்க follow பண்ணின tecchnique superb.//

  மிக்க நன்றி ப்ரியா…

 73. //ராசுக்குட்டி
  ராசுக்குட்டி said…

  அட்டகாசம்! வெட்டி கலக்கிட்டய்யா. சொன்ன விதம் புதுசா பொருத்தமா இருந்துச்சு. நம்முடைய இரட்டை நிலையை நாமே புரிந்துகொள்ள வைத்திருக்கிறீர்கள் அருமை. முன்முடிவுகள்… எவ்வளவு நகைப்புக்குரிய விஷயம்!
  //
  ஆமாங்க ராசுக்குட்டி. ஒருத்தவங்களை பத்தி நாமே ஒரு முடிவுக்கு வந்து அவுங்க பேரை கேட்டாலே டென்ஷனாயிடுவோம். ஆனா உண்மையா அவுங்க எப்படிப்பட்டவர்கள்னு ஆராய இந்த மாதிரி தான் செய்ய வேண்டியிருக்கு..

  //

  //”நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
  சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
  நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
  சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?”//

  முழுப்பாட்டையும் வெளியிட முடியுமா?

  //
  எனக்கு தெரிஞ்சது இவ்ளோதாங்க. நம்ம ஞானவெட்டியான் ஐயா பதிவை பாருங்க… அதுல நிறைய சித்தர் பாட்டு கிடைக்கும்…

  //
  என் இரண்டனா இது… ஆனால் இந்தப் பதிவு பவுன் 10 ரூபா பெறாத காலத்து 20,000!//
  உங்க பதிவை பார்த்தேன்… சரியான உள்குத்து பதிவா இருந்துச்சு..

 74. //venki said…

  Very nice post!!I have been reading your blog for a long time and this is the best..//

  thx a lot venki…

 75. Vetti This is a good technique, using this u can show even Hitler in a good light. Every coin has two sides thats it.

 76. //Anonymous said…

  Vetti This is a good technique, using this u can show even Hitler in a good light. Every coin has two sides thats it.//

  ஹிட்லரை பற்றி நான் சொல்ல எதுவுமில்லை.

  பெரியார் இல்லையென்றால் இன்றும் பலர் கோவிலுக்கு வெளியேதான் நிறுத்தப்பட்டிருப்பர்…

 77. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க பாலாஜி. சொல்லிய கருத்தும் முடித்த விதமும் வெகு அருமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: