விகடனும் நானும்!!!

நான் கல்லூரியில் நான்காமாண்டு படித்து கொண்டிருந்த பொழுது விகடன் பவள விழா கொண்டாடி கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கென்று ஒரு போட்டியும் அறிவித்திருந்தனர். மாணவர்கள் சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதாவது கட்டுரை எழுத வேண்டும் என்பதே அந்த போட்டி.

பொதுவாக போட்டிகளில் நான் பங்கு பெற மாட்டேன்.ஒரே காரணம் சோம்பேறி தனம். இதில் மக்களுக்கு உதவும் வகையில் ஏதாவது சொல்ல வாய்ப்பிருக்கிறது என்று கருதியதால் கலந்து கொண்டேன். ஆனால் விகடனாருக்கு ஏனோ பிடிக்கவில்லை போலும்.

இதோ நான் அனுப்பிய படைப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் பொழுது சுயநலத்தின் காரணமாக பிறருக்கு உதவவில்லையென்றாலும் இறந்த பிறகாவது உதவலாம். இறந்த பிறகு உதவுவதா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம். இறந்த பிறகு நமக்கு நம் கண்ணோ மற்ற எந்த உறுப்புகளோ உதவ போவதில்லை. வீணாக அதை புதைத்தோ எரித்தோ என்ன பயன்?

ஒவ்வொரு வீட்டிலும் யார் இறந்தாலும் அடுத்த செய்ய வேண்டிய சடங்கை பற்றியே சிந்திப்பர். மேலும் அந்த துக்கத்திலிருந்து விடுபடவே பல நாட்களாகும். இந்த நிலையில் யாரும் கண் தானத்தை பற்றியோ, உடல் உறுப்புகள் தானத்தை பற்றியோ சிந்திக்க மாட்டார்கள். இதனால் யாருக்கும் உதவ முடியாமலே விலைமதிப்பில்லாத உடலுறுப்புக்கள் மண்ணுக்கோ, நெருப்பிற்கோ உணவாகின்றன.

மற்றவருக்கு உதவ கூடாது என்ற எண்ணத்தில் யாரும் இதை செய்வதில்லை. இது அறியாமையினாலேதான் பெரும்பாலும் நடக்கிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியது மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் மற்றும் இதை ஒழுங்கு படுத்துவதுமே!

முதலில் ,எந்தந்த உறுப்புகளை தானமாக அளிக்க முடியும் என்று அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நான் கேள்விப்பட்ட வரையில் கண் தானமாக அளிக்க முடியும் . கமல் தன் உடலுறுப்புகள் அனைத்தையும் தான் இறந்த பிறகு தானம் செய்வதாக அறிவித்ததாலே மற்ற பாகங்களையும் தானமாக அளிக்க முடியும் என்று தோன்றுகிறது.

இதை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் எந்தெந்த உறுப்புகளை தானமாக அளிக்க முடியும் என்ற பட்டியல் வெளியே எழுதியிருக்க வேண்டும். மேலும் அனைத்து திரையரங்குகளிலும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இதை பற்றிய அறிவிப்பு வெளியாக வேண்டும்.

அடுத்து ஒவ்வோரு வார்ட்டிலும் வார்ட் மெம்பர் என்று ஒருவர் இருப்பார். அவரிடம் ஒவ்வொரு வீட்டிலும் இன்னன்னார் இந்த இந்த உறுப்பை தானம் செய்வதாக ஒரு பட்டியல் இருக்க வேண்டும். தானமளிக்க விரும்பும் நபரின் கையொப்பம் வாங்கி ஒரு பிரதி அரசு மருத்துவமனையிலும் மற்றொன்று வார்ட் மெம்பரிடமும் இருக்க வேண்டும்.

எப்படியும் ஒரு வீட்டில் யாராவது மரணமடைந்தால் அந்த வார்ட் மெம்பருக்கு எளிதில் தெரிந்துவிடும். இல்லையென்றால் இந்த திட்டத்தின் மூலம் அந்த தெருவில் வசிப்போர் அவரிடம் தெரிவிக்க முடியும். அவரிடமிருக்கும் பட்டியலை சரி பார்த்து அதற்கு தகுந்தவாறு அவர் மருத்துவமனையை தொடர்பு கொண்டு எளிதில் இறந்தவரின் ஆசையை நிறைவேற்ற முடியும்.

இதற்கு ஆகும் செலவும் அதிகமில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பட்டியல் மற்றும் அவர்கள் இறந்தால் ஒரு லோக்கல் கால். ஆனால் இதன் பலன் என்னவென்று நான் சொல்லி தெரிய தேவையில்லை.

ஒவ்வொரு தேர்தல் முடியும் போதும் பட்டியல் புதிய வார்ட் மெம்பருக்கு கைமாறும். அவ்வளவே. அதை போல இடமாறுபவர்கள் புதிதாக செல்லுமிடத்தில் பதிந்து கொள்ளலாம்.இயற்கை நமக்களித்த வரத்தை ஏன் நாம் சரிவர பயன்படுத்தி கொள்ள கூடாது?

29 பதில்கள்

 1. ஓ..நீங்களும் விகடன் பிள்ளையா பாலாஜி..

 2. சரிதான் பாலாஜி. இப்பொழுது இறந்த பின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்துவது போல் மற்ற பாகங்களை பொருத்த முடியுமா?

  ஒரு மனிதன் ப்ரெயின் டெட் எனச் சொல்லப்படும் நிலையை அடைந்து, அதிலிருந்து திரும்ப வழி இல்லை என ஆகும் பொழுது அவன் உயிரோடு இருக்கும் பொழுதே அவன் உறுப்புகளை அறுவடை செய்து அடுத்தவர்களுக்கு பொருத்த முடியும் என்றே நினைக்கிறேன்.

  ஆனால் இறந்தபின் அவ்வுடலை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் முடியுமே தவிர, அதன் மூலம் வேறு என்ன பயன் கிடைக்கும் என்று தெரியவில்லை.

  கொஞ்சம் விளக்கினால் தேவலாம்.

 3. வார்ட் மெம்பருக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன
  நாட்டின் நிலவரம் தெரிந்துதான் சொல்கிறீர்களா?

  கோவையில் நீர் ஆதாரங்களுக்கு “சிறுதுளி” என்ற தனி அமைப்புஇ செயல் படுவதைப் போன்று இதற்கும் ஒரு த்ன்னார்வத் தொண்டு நிறுவனம் முன் வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்!

  SP.VR.சுப்பையா

 4. //மு.கார்த்திகேயன் said…

  ஓ..நீங்களும் விகடன் பிள்ளையா பாலாஜி..//

  தொடர்ந்து விகடன் படித்து வந்திருக்கிறேன்…

  மத்தபடி எல்லாமே ஒரே மாதிரி தான் 🙂

 5. //மு.கார்த்திகேயன் said…

  நானும் இது மாதிரி நிறைய திருப்பு அனுப்பபட்ட படைப்புகளை இங்கே தான் பதிவிடப்போகிறேன் பாலாஜி//

  நிறைய அனுப்பியிருக்கீங்களா??? சீக்கிரம் போடுங்க. நாங்க எல்லாம் காத்திருக்கிறோம்…

  நான் இந்த ஒரு போட்டிக்கு தான் அனுப்பிவெச்சேன்… அதுவுன் ஊத்திகிச்சு :-))

 6. //இலவசக்கொத்தனார் said…

  சரிதான் பாலாஜி. இப்பொழுது இறந்த பின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்துவது போல் மற்ற பாகங்களை பொருத்த முடியுமா?

  ஒரு மனிதன் ப்ரெயின் டெட் எனச் சொல்லப்படும் நிலையை அடைந்து, அதிலிருந்து திரும்ப வழி இல்லை என ஆகும் பொழுது அவன் உயிரோடு இருக்கும் பொழுதே அவன் உறுப்புகளை அறுவடை செய்து அடுத்தவர்களுக்கு பொருத்த முடியும் என்றே நினைக்கிறேன்.

  ஆனால் இறந்தபின் அவ்வுடலை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் முடியுமே தவிர, அதன் மூலம் வேறு என்ன பயன் கிடைக்கும் என்று தெரியவில்லை.

  கொஞ்சம் விளக்கினால் தேவலாம்.//

  கொத்ஸ்,
  எனக்கு தெரிஞ்சி கண்ணு மட்டும்தான். யாராவது டாக்டர்கள் வந்து சொன்னா சரியா இருக்கும்…

 7. //SP.VR.சுப்பையா said…

  வார்ட் மெம்பருக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன
  நாட்டின் நிலவரம் தெரிந்துதான் சொல்கிறீர்களா?

  கோவையில் நீர் ஆதாரங்களுக்கு “சிறுதுளி” என்ற தனி அமைப்புஇ செயல் படுவதைப் போன்று இதற்கும் ஒரு த்ன்னார்வத் தொண்டு நிறுவனம் முன் வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்!

  SP.VR.சுப்பையா//

  வாத்தியாரே,
  இது ரொம்ப சாதரண விஷயமாத்தான் எனக்கு தெரியுது…
  இதுக்கும் ஒரு தொண்டு நிறுவனம் எதிர்பார்ப்பது அனாவசியம் என்றே நினைக்கிறேன்…

 8. Aiyaa.. ithana post podareenga? Andha nellikkai post epponga poda poreenga? Evlo aarvama wait pannitirukkom 😦

 9. Dedicated Hotline (24X7) in Chennai:
  CU Shah Eye Bank
  2828 1919

  வார்டு மெம்பரிடம் சொல்வது போதாதென்று, அக்கம் பக்கத்தில் நாலு பேரிடம் சொல்லி வைத்தால், ஒருவராவது நினைவுபடுத்துவார்.

  நல்ல பதிவு பாலாஜி!
  விகடனாருக்கு கிடைக்காத ஒன்று தமிழ்மணத்துக்கு கிடைக்க வேண்டும் என்று உள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!

 10. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  Dedicated Hotline (24X7) in Chennai:
  CU Shah Eye Bank
  2828 1919

  வார்டு மெம்பரிடம் சொல்வது போதாதென்று, அக்கம் பக்கத்தில் நாலு பேரிடம் சொல்லி வைத்தால், ஒருவராவது நினைவுபடுத்துவார்.
  //
  KRS,
  இதை ஒரு பழக்கமாகவே கொண்டு வர வேண்டும்… யாராவது இறந்தால் தகவல் வார்ட் மெம்பரை அடைய வேண்டும். இது பெரும் நகரங்களில் வேண்டுமானால் கடினமாக தெரியலாம் மற்ற படி ஓரளவு சின்ன ஊர்களில் பெரும் பலனளிக்கும்…

  //
  நல்ல பதிவு பாலாஜி!
  விகடனாருக்கு கிடைக்காத ஒன்று தமிழ்மணத்துக்கு கிடைக்க வேண்டும் என்று உள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!//

  மிக்க நன்றி!!!
  ஆமாம்!!! எப்படியாவது மக்களுக்கு நாம் சொல்ல விரும்புவது சென்றடைந்தால் சரிதான்…

 11. //G3 said…

  Aiyaa.. ithana post podareenga? Andha nellikkai post epponga poda poreenga? Evlo aarvama wait pannitirukkom :(//

  என்னங்க பண்றது… திடீர்னு நட்சத்திரமாயாச்சு. எல்லாரும் வித்யாசமா ஏதாவது எதிர்பாக்கறாங்க.

  இன்னும் 2 மணி நேரத்துல நெல்லிக்காய் வருங்க 🙂

 12. நல்ல கருத்துதான் பாலாஜி, குறைந்த பட்சம் நம்முடைய குடும்ப டாக்டரிடமோ அல்லது தொடர்ந்து செல்லும் மருத்துவமனையிலோ இதை சொன்னால் கூட போதும் அவர்களே ஆவண செய்துவிடுவர். எப்படியும் இயற்கை மரணமென்றாலும் கூட ஒரு மருத்துவரிடம் கருத்து கேட்போம் அல்லவா அவர் மூலம் கூட இந்த நல்ல செயல் நிறைவேறும். ரத்ததானம் போன்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினால் அனைவரும் முன்வருவர் என்பது என் எண்ணம்!

  நட்சத்திரம் மின்னுது 😉

 13. \”இதை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் எந்தெந்த உறுப்புகளை தானமாக அளிக்க முடியும் என்ற பட்டியல் வெளியே எழுதியிருக்க வேண்டும். மேலும் அனைத்து திரையரங்குகளிலும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இதை பற்றிய அறிவிப்பு வெளியாக வேண்டும்\”

  வெட்டி நல்லதொரு பதிவு, பாராட்டுக்கள்!

  எந்தெந்த உறுப்புகளை தானமாக அளிக்க முடியும் என்னும் தகவலை உங்கள் பதிவில் கூறியிருந்தால் நன்றாகயிருந்திருக்கும். [ முடிந்தால் தகவல் பெற்று உங்கள் பதிவிலிடுங்கள் வெட்டி]

 14. ம்ம்ம்….இது மிகவும் சிக்கலான சமாச்சாரம். அதிலும் உணர்வுகளோடு தொடர்புள்ளது. ஆனாலும் முடிந்தவரை இந்த மாதிரி உடலுறுப்பு தானம் செய்யப்படுவது நல்லது. பெங்களூரில் ராஜ்குமார் இறந்த பின் அவரது கண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தச் செய்திக்குப் பின்னர் பெங்களூரில் கண்தானம் பெருகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

 15. நல்லதொருச் செய்தியைச் சொல்லும் பதிவு பாலாஜி வாழ்த்துக்கள்

 16. என்னோட கண்ணை ஏற்கனவே”எழுதிக்கொடுத்தாகிவிட்டது” அதை எடுக்கனும் என்றால் நான் போகும்போது சென்னையில் இருக்கனும்.பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
  இங்கு இறந்தால் நீங்கள் எதுவும் எழுதிக்கொடுக்காத பட்சத்தில் கட்டாயமாக உறுப்புகள் எடுத்து தேவைப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.
  சிறிய தேசம்,மக்கள் தொகை குறைவு அதனால் அனாமத்தாக போய்விடக்கூடாது என்ற நிலையில் இப்படி சட்டம் போட்டுவிட்டார்கள்.நல்லது தானே.

 17. நல்ல யோசனை….சாத்தியப்பட்டால் மகிழ்ச்சியே..

 18. கமல் தானம் செய்திருப்பது, மருத்துவக் கல்லூரிக்கு என்று நினைக்கிறேன். உடலுருப்புகள் அனைத்தையும் மற்றவர்களுக்குப் பொருத்த முடியாது என்றே நினைக்கிறேன். மற்றப்படி, வயதாகி மக்கள் இறந்து போனால், அவர்களுடைய உடல் பாகங்கள் மற்றவர்களுக்கு எந்த அளவுக்கு பயன்படும் என்று தெரியவில்லை..

 19. //G.Ragavan said…

  ம்ம்ம்….இது மிகவும் சிக்கலான சமாச்சாரம். அதிலும் உணர்வுகளோடு தொடர்புள்ளது. ஆனாலும் முடிந்தவரை இந்த மாதிரி உடலுறுப்பு தானம் செய்யப்படுவது நல்லது. பெங்களூரில் ராஜ்குமார் இறந்த பின் அவரது கண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தச் செய்திக்குப் பின்னர் பெங்களூரில் கண்தானம் பெருகியிருப்பதாகச் சொல்கிறார்கள். //

  இந்த மாதிரி பெரிய ஆளுங்க செய்யும் போது நல்ல விஷயங்கள் சீக்கிரம் பரவும்.

 20. //தேவ் | Dev said…

  நல்லதொருச் செய்தியைச் சொல்லும் பதிவு பாலாஜி வாழ்த்துக்கள் //

  மிக்க நன்றி தேவ்!!!

 21. //வடுவூர் குமார் said…

  என்னோட கண்ணை ஏற்கனவே”எழுதிக்கொடுத்தாகிவிட்டது” அதை எடுக்கனும் என்றால் நான் போகும்போது சென்னையில் இருக்கனும்.பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
  இங்கு இறந்தால் நீங்கள் எதுவும் எழுதிக்கொடுக்காத பட்சத்தில் கட்டாயமாக உறுப்புகள் எடுத்து தேவைப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.
  சிறிய தேசம்,மக்கள் தொகை குறைவு அதனால் அனாமத்தாக போய்விடக்கூடாது என்ற நிலையில் இப்படி சட்டம் போட்டுவிட்டார்கள்.நல்லது தானே. //
  ரொம்ப நல்ல விஷயம் குமார்…
  நம்ம நாட்டிலும் இந்த மாதிரி விஷயங்கள் பரவணும்…

 22. //கத்துக்குட்டி said…

  அருமையான கருத்து பாலாஜி! இன்று இருக்கும் வார்ட் மெம்பர்களிடம் இதுபோன்ற சேவைகளையெல்லாம் எதிர்பார்க்கமுடியுமா?//

  சட்டம் போட்டா தானா செய்யறாங்க. அப்பறம் வார்ட் மெம்பர்னா எதுக்கு ரோடு போடவும், சாக்கடைக்கும் கொடுக்கற காண்ட்ராக்ட கொல்லை அடிக்க மட்டும் தானா?

 23. //
  ஆழியூரான் said…

  நல்ல யோசனை….சாத்தியப்பட்டால் மகிழ்ச்சியே.. //

  ஆமாம் ஆழியூராரே!!!

 24. //ஜி said…

  கமல் தானம் செய்திருப்பது, மருத்துவக் கல்லூரிக்கு என்று நினைக்கிறேன். உடலுருப்புகள் அனைத்தையும் மற்றவர்களுக்குப் பொருத்த முடியாது என்றே நினைக்கிறேன். மற்றப்படி, வயதாகி மக்கள் இறந்து போனால், அவர்களுடைய உடல் பாகங்கள் மற்றவர்களுக்கு எந்த அளவுக்கு பயன்படும் என்று தெரியவில்லை.. //

  ஜி,
  மத்த எந்த உறுப்புக்கள் இல்லையென்றாலும் கண் தானமாவது செய்யலாமே!!!

 25. நல்ல பதிவு பாலாஜி.
  பாராட்டுக்கள்.

 26. //Arunkumar said…

  நல்ல பதிவு பாலாஜி.
  பாராட்டுக்கள். //

  மிக்க நன்றி அருண்…

 27. // Anonymous said…

  Ethanai pEr idhai padichiruppanganu theriyala…hats off to the parents!
  http://timesofindia.indiatimes.com/NEWS/India/In_death_infant_becomes_youngest_organ_donor/articleshow/779685.cms
  Malli //

  மல்லி நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

 28. மல்லி அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயம் இங்கே…

  HYDERABAD: Four generations of his family served the Indian Army, battling enemies from across the border. His father is a Sena Medal winner and with Showrya as name, the boy seemed almost destined to follow.

  But a fatal fall from the first floor balcony ended it all and the toddler was pronounced brain dead.

  Then his family performed a rare gesture. They donated the one-and-a-half-year-old’s organs, making Showrya the youngest organ donor in the country.

  Showrya Malik fell off the balcony on December 8 in his Secunderabad home where his father, Sidharth Malik, is undergoing a training. He was declared brain dead the next day.

  The same evening, his family decided to donate his organs. The recipient was found through the Multi-Organ Harvesting Aid Network (MOHAN) Foundation and on December 10, Showrya’s eyes went to L V Prasad Eye Institute and his kidneys to a 31-one year old man.

  “It was tricky. Showrya was probably the youngest donor of organs. In the limited time one has to harvest the organs, that is to retrieve and transplant them. We found one recipient who, except for being an adult, was suited to receive the kidneys. “Since it was from a child to a man, we transplanted both the kidneys,”said Dr S Sahariah, chief transplant neurologist at the city-based Krishna Institute of Medical Sciences, where the transplant surgery was done.

  As fate would have it, the boy’s kidneys were fused. Doctors call it a horseshoe kidney and according to Dr Sahariah, though it will take a few days to know how the recipient’s body has accepted it, he is sure that the man will have a healthy life.

  “The kidneys will adapt to the new body and in time will grow along, on par with the body,”Dr Sahariah said. But, he is quick to give all credit to Showrya’s family. “Medical miracles happen, but what the boy’s parents did is unparalleled,”he says.

  Ironically, Showrya’s family went from his death bed to that of his great grand father’s, who is in a hospital in Faridabad.

  “My son has killed militants. He wanted his son to be a hero as well, and so decided to donate the organs. We assumed the organs will go to another child, but no matter, my grandson did save another life,”said Colonel (retired) S S Malik, grandfather of Showrya, told TOI.

  “My family has been through this and it was decided that we would not keep Showrya on the ventilator too and that is when my son decided to donate his organs and we all agreed,”Col Malik said.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: