• Top Clicks

  • எதுவுமில்லை
 • அதிகம் பார்வையிடப்பட்டவை

 • Blog Stats

  • 34,066 hits

நெல்லிக்காய் – 11

தீபாவிடம் கோபமாக பேசியதால் கொஞ்சம் வருத்தமும், கார்த்திக்கிற்கு ராஜியால் ஏற்பட்ட காயத்தால் கோபமும் கொண்ட ஒரு மன நிலையிலிருந்தான் அருண்.

ஒரு மணி நேரத்திற்கு பின்பு தீபாவிற்கு போன் செய்தான்.

“ஹலோ. சொல்லு எப்ப வர?”

“ஏன் கேக்கற?”

“கேட்டா ஒழுங்கா பதில் சொல்லு”

“இவர் பெரிய இவரு. கேட்டா நாங்க உடனே சொல்லிடனும். என்ன தான் ஆட்டோ பிடிச்சி வர சொல்லிட்ட இல்லை. அப்பறம் நான் எப்ப வந்தா உனக்கு என்ன?”

“இங்க பாரு மனுசன டென்ஷனாக்காத. இப்ப நீ சொல்லலனா நான் கட் பண்றேன்”

“ஏய்! கட் பண்ணிடாத இரு. நான் காலைல ஒரு 5:30 மணிக்கா வருவேன். நீ எழுந்திரிச்சிடுவியா? உனக்கு கஷ்டமா இருந்தா நான் ஆட்டோலயே வந்துக்கறேன். அப்பறமா நாம மீட் பண்ணலாம்”

“அதெல்லாம் எழுந்திரிச்சிடுவேன். சரி இது என்ன ஒரு வாரம் முன்னாடியே வர?”

“வீட்ல பயங்கர போர். அம்மாவும் காலைல ஸ்கூலுக்கு போயிடுவாங்க. வீட்ல தனியா இருக்க பிடிக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் அப்பா இருந்தாரு. இப்ப தனியா இருக்கவே கஷ்டமா இருக்கு. அதான் இங்க இருக்குற டாக்டரை போய் பார்த்தேன். அவரு ப்ராப்ளம் இல்லை. நீங்க கிளம்பலாம்னு சொன்னாரு. அதான் உடனே புறப்பட்டு வரேன்”

“சரி. நாளைக்கு காலைல மீட் பண்ணலாம்”

“ஓகே. பை”

போனை அணைத்தான்.

சரியாக காலை 5:30 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்தான். அவள் பஸ் ஒரு பதினைந்து நிமிடம் கழித்தே வந்தது. அவனை பார்த்தவுடனே மிகவும் உற்சாகமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்.

“வந்து ரொம்ப நேரமாச்சா?”

“இல்லை. இப்பதான். உன் செல்லுக்கு கூப்பிட்டேன். ரிங் போயிட்டே இருந்துச்சு”

“ஓ! மறந்தே போயிட்டேன். ராத்திரி சைலண்ட் மோட்ல வெச்சிருந்தேன்”

“சரி. போகலாமா?”

“ஒரு காபி குடிச்சிட்டு போகலாமா?”

“சரி வா”

இருவரும் அருகிலிருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.பெரும்பாலும் அனைவரும் அங்கே காபியே குடித்து கொண்டிருந்தனர்.இருவரும் காபி ஆர்டர் செய்து 2 நிமிடத்தில் ஆவி பறக்க அவர்கள் முன் இருந்தது.

“அருண், இந்த நேரத்தில நான் உன்னை வர சொன்னனே! உனக்கு வித்யாசமா தெரியலையா?”

“ஆமாம் வித்யாசமாத்தான் தெரியுது. அதனால தான் வந்தேன்”

“எனக்கு எப்படி சொல்றதுனே தெரியல” அருண் அவளை வித்யாசமாக பார்த்தான்

“எங்கம்மா, நீயும் நானும் லவ் பண்றோமானு என்கிட்ட கேட்டாங்க?”

“நீ என்ன சொன்ன?”

“நான் அப்படியெல்லாம் எதுவும் இல்லைனு சொன்னேன்”

“அத சொல்லத்தான் என்னைய இங்க வர சொன்னியா?”

“இல்லை. நீங்க ரெண்டு பேரும் விரும்பினா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டாங்க. எங்க அம்மாவுக்கு உன்னை எப்படி பிடிச்சுதுனே தெரியல”

“ஏன்னா உங்க அம்மா நல்லவங்க அவுங்களுக்கு என்னை பிடிச்சியிருக்கு”

“அப்ப என்னை கெட்டவனு சொல்றியா?”

“அப்ப உனக்கு என்னைய பிடிக்கலையா?” அருண் இதை கேட்டதும் தீபாவால் பதில் சொல்லமுடியவில்லை. தயங்கியவாறே மெதுவாக கேட்டாள்

“முதல்ல, உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”

“பிடிச்சிருக்கு. ஆனா உனக்கு தான் என்னை பிடிக்கலையே”

“யார் சொன்னா?”

“நீ தான் உங்க அம்மாகிட்ட சொன்னியே”

“ஆமாம் அவுங்க கேக்கும் போது எதுக்கு கேட்டாங்கனு தெரியல. உன்னை கேக்காம ஒத்துக்கவும் மனசில்லை. அப்பறம் நீ உங்க வீட்ல பேசி முதல்ல சம்மதம் வாங்கணும். அதனால நான் எதுவும் எங்க அம்மாகிட்ட சொல்லல”

“அடிப்பாவி. அதுக்குள்ள இவ்வளவு விஷயமிருக்கா? நான் எங்க வீட்ல கேட்டு சம்மதம் வாங்கினாத்தான் லவ் பண்ணவே ஒத்துக்குவியா? இது அநியாயமா இல்லை?”

“இங்க பாரு. கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அப்பா, அம்மாவை விட்டு நீ வரணும். அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. நான் உன் காதலை ஏத்துக்கலைனும், நீ என்னை காதலிக்கவே இல்லைனு நானும் நினைச்சிட்டு இருந்துக்கலாம்”

“பெரிய வார்த்தையெல்லாம் பேசற. அப்பறம் உனக்கு நிஜமாலுமே என்னை பிடிச்சிருக்கா?”

“எத்தனை தடவை இதையே கேப்ப?”

“எத்தனை தடவை கேட்டாலும் சொல்லனும். புரியுதா? இப்பவே இப்படி பண்ணா நாளைக்கு கல்யாணத்துக்கப்பறம் நீ என்னை மதிக்கவே மாட்ட போலிருக்கே”

“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். இப்ப முதல்ல உங்க வீட்ல பேசி பர்மிஷன் வாங்கு. வா கிளம்பலாம். எல்லாம் நம்மையே ஒரு மாதிரி பாக்கறாங்க”

“சரி வா”

இருவரும் கிளம்பினர். வண்டியில் செல்லும் போது ராஜி வீட்டில் நடந்ததை சொல்லி கொண்டே வந்தான்…

சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு…

“என்ன கணேசன் பையனுக்கு இவ்வளவு சீக்கிரம் நிச்சயம் வைக்கறீங்க?”

“என்னங்க பண்றது. லவ் பண்ணி தொலைச்சிட்டான். கட்டிக்கிட்டா இந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்குவனு சொல்றான். சரி இந்த “அலைபாயுதே” படத்த மாதிரி ஓடி போயி கட்டிக்காம நம்ம கால்ல விழுந்து கெஞ்சிட்டிருக்கனேனு ஒத்துக்கிட்டேன். பொண்ணும் நல்ல குடும்பத்து பொண்ணுதான்”

“நம்ம சாதி மாதிரி தெரியலையே”

“ஆமாம் நம்ம சாதி இல்லைதான். என்னங்க செய்ய? நாம கடன்ல இருக்கும் போது எந்த சாதிக்காரன் நம்ம வீட்டுக்கு வந்தானு கேக்கறான். அவன் கேட்டதும் நியாயமாத்தான் இருக்கு. அவன சுத்தி மலை மாதிரி அவன் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்களாம். இப்பவெல்லாம் சொந்தக்காரவங்களைவிட நண்பர்கள் தான் முக்கியமா போயிடறாங்க”

“என்ன இருந்தாலும் சொந்த பந்தம் மாதிரி வருங்களா?”

“சரிவிடுங்க. எல்லாத்தையும்விட நமக்கு அவன் தானே முக்கியம். அந்த பொண்ணும் நாங்க ஒத்துக்காம கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லிடுச்சி.
இவ்ளோ நல்ல பசங்கள எதுக்கு பிரிச்சிக்கிட்டு? சந்தோஷமா இருக்கட்டுமே. நாளைக்கு நமக்கு கடைசி காலத்துல கஞ்சி ஊத்த போறது அந்த பொண்ணுதானே. சாதி சாதினு பார்த்து பண்ணி வெச்சி கடைசில நம்மல வீட்டுவிட்டு துரத்தற பொண்ணா வந்துட்டா என்ன பண்ண?”

“அதுவும் சரிதான்”

………

“சரி இப்பவாவது சொல்லு” அருண் கெஞ்சி கொண்டிருந்தான்.

“என்ன?”

“ஐ லவ் யூனு”

“அதெல்லாம் முடியாது. கல்யாணத்துக்கு அப்பறம் தான்”

“அடிப்பாவி. நிச்சயம்தான் ஆயிடுச்சே”

“சரி நீ கண்ண மூடிக்கோ நான் சொல்றேன்”

சரி நீங்க எல்லாம் காதை மூடிக்கோங்க… தீபா அருண்கிட்ட “ஐ லவ் யூ” சொல்றத யாரும் ஒட்டு கேக்காதீங்கோ…

(தொடரும்…)

பின்குறிப்பு:
மக்களின் விருப்பத்திற்கிணங்க இன்னும் கொஞ்சம் ஜாலியான வசனங்களுடன் அடுத்த பாகத்தில் முடிவடையும்…

அடுத்த பகுதி

51 பதில்கள்

 1. முடிவு சப்

 2. Aaha.. Ella appakalum arunoda appa maadiriyae irundhutta sandhosham 🙂

  Sandhoshama kadhaiya mudichadhu super.. Good that karthik side sogatha sollama directa avan thelinjittaanu sonnadhu.. topu 🙂

  Supera kadha ezhudhareenga.. neraya ezhudhunga.. aana ippadi thodara ezhudhi enga BPya mattum test panna venaam 😀

 3. பாலாஜி… ஒரளவு எதிர் பார்த்த முடிவு தான்.. இருந்தாலும் அருணும் தீபாவும் பிரிந்து விடுவார்களோன்னு ஒரு சின்ன நெருடலைக் கதை நெடுக நீங்கள் உணர்த்தி வந்த விதம் பாராட்டுக்குரியது தான்.

 4. காதலிக்கறவங்க பெற்றோரிடம் எப்படி நடந்துக்கணுமோ [அவங்க கிட்ட அனுமதி வாங்கி கல்யாணம் ]பெற்றவங்க காதலிக்கற பிள்ளைங்க கிட்ட எப்படி நடந்துக்கணுமோ[வாழ்த்தி சேர்த்து வச்சு பார்க்கறது ]
  இரண்டையும் சரியானபடி சொல்லி இருக்கீங்க.
  சேர்த்து வச்சு [கதையில ]புண்ணியத்தை சேர்த்துக்கிட்டீங்க

 5. ஹாய் வெட்டி,
  இது உங்களுக்கே நல்லாயிருக்கா?பாவம்
  இந்த கார்த்திக் & ராஜி மட்டும் என்ன பாவம் செஞ்சாங்க? அவங்கள மட்டும் பிரிச்சிட்டு….
  சதா சண்டகோழியா இருந்த இவங்கள மட்டும் சேர்த்துட்டீங்க. வேணாம்னு சொல்லிகிட்டு இருந்தவங்கள போயி…
  உண்மையா லவ் பண்ணவங்கள பிரிச்சிட்டீங்க .. நீங்க ரொம்ப மோசம்.

 6. இதான் முடிவா…இதான் முடிவா…இதுதான் முடிவா!!!! சரி. சரி. சரி.

 7. அழகா முடிக்க போறீங்க போல கதையை.. ஆமா அப்புறம் ராஜி காதல் என்னாச்சு.. இங்கே சுபம்..அப்போ அங்கே பாலாஜி?

 8. கடைசியில் நாலு பாட்டு, ரெண்டு பைட் ரேஞ்சுக்கு நீயும் இறங்கிட்டியே வாத்தியாரே….:((

 9. இவங்களை சேர்த்து வச்சாச்சு…கார்த்திக், ராஜி என்ன ஆனாங்க?

 10. நட்சத்திர படிவாளர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் வெட்டி…கொஞ்சம் பிஸி அப்புறமா வந்து படிக்கறேன்…உங்க 3 போஸ்ட் பாக்கி 🙂

 11. நல்லா முடிச்சிருக்கிங்க (முடிஞ்ச மாதிரி தானே!)

  //வீட்ல பயங்கர போர்.//
  அப்படி போடு, காதல் வந்தா இப்படி தானா.

  //கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அப்பா, அம்மாவை விட்டு நீ வரணும். அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. நான் உன் காதலை ஏத்துக்கலைனும், நீ என்னை காதலிக்கவே இல்லைனு நானும் நினைச்சிட்டு இருந்துக்கலாம்//

  நச்சுனு சொல்றா தீபா..

  தீபா, அருண் parents மாதிரி எல்லாரும் இருந்தா நல்லா இருக்கும். என்ன பண்றது, ராஜி parents மாதிரி தானே நிறைய பேர் இன்னும் இருக்காங்க. ஆனா, trend மாறிட்டிருக்கறது நிஜம்.

 12. என்ன பாலாஜி ஏதோ மெசேஜ் எல்லாம் குடுக்கிரீங்க போல இருக்கு. ஆக ” பெற்றோர் சம்மதம் இருந்தால் காதலீங்க இல்லாவிட்டால் வீணாக வருத்தப்பட வேண்டும் ” என்ற செய்தியா சொல்ல வரீங்க. ஏது ரொம்ப பொறுப்பு வந்தது போல் தோணுகிறதே. ஏதாவது செட் ஆயிடுச்சா ?

 13. இத இத இந்த அத்யாயத்த தான் நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் 🙂

  காதலிச்சவங்கள பிரிச்சிட்டு ‘பெத்தவங்க ஓகே சொன்னா லவ் பண்ணலாம்’னு சொன்னவங்கள சேத்து வச்சிட்டீங்க. நல்ல எதார்த்தம்.

  நிறைய கதைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்…

  நட்சத்திரம் ஆனதுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் பாலாஜி 🙂

 14. நீங்க இப்படி ஒரு நல்லா வரா
  தமிழ் makkalin சுபம் concept ikku oru super script pooinga..

  gr8t work. .waiting for romance last part.

 15. \”அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. \”

  அஹா இப்படி முதல் ஸ்டேஜிலேயே யோசித்து முடிவெடுக்கிறது எவ்வளவு நல்ல ஐடியா!!

  வெட்டி ரொம்ப ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க,
  பெற்றோருக்கும் ஒரு மெசேஜ் சொல்லியிருக்கிறீங்க பாருங்க அது சூப்பர்!!

  நட்சத்திரத்திற்கு பாராட்டுக்கள்!!

 16. தமிழ் சினிமா ஸ்டைல்ல மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடியுது…ஆனா திரைக்கதை பிரமாதம் உங்க எதார்தமான டச்… 🙂

 17. //MeenaArun said…
  முடிவு சப்
  //
  ரொம்ப எதிர்பார்த்தீங்களா???
  இதுக்கு மேல வித்யாசமா கொடுக்கறனு கதைய கெடுக்க விரும்பலைங்க 😦

 18. //G3 said…
  Aaha.. Ella appakalum arunoda appa maadiriyae irundhutta sandhosham 🙂
  //
  எல்லா பசங்களும் அருண், தீபா மாதிரி இருந்தாலும் சந்தோஷமே 🙂

  //
  Sandhoshama kadhaiya mudichadhu super.. Good that karthik side sogatha sollama directa avan thelinjittaanu sonnadhu.. topu 🙂
  //
  இதுவும் கடந்து போகும்னு வாழ்க்கைய எடுத்துக்கணும்…

  //Supera kadha ezhudhareenga.. neraya ezhudhunga.. aana ippadi thodara ezhudhi enga BPya mattum test panna venaam 😀
  //
  மிக்க நன்றி!!!
  சிறுகதை எழுதுவது ஒரு கலை. அது நமக்கு அவ்வளவா வர மாட்டீங்குது 😦

 19. //தேவ் | Dev said…
  பாலாஜி… ஒரளவு எதிர் பார்த்த முடிவு தான்.. இருந்தாலும் அருணும் தீபாவும் பிரிந்து விடுவார்களோன்னு ஒரு சின்ன நெருடலைக் கதை நெடுக நீங்கள் உணர்த்தி வந்த விதம் பாராட்டுக்குரியது தான்.
  //

  மிக்க நன்றி தேவ்!!!
  முடிவை மாற்ற விரும்பவில்லை 🙂

 20. //லட்சுமி said…
  காதலிக்கறவங்க பெற்றோரிடம் எப்படி நடந்துக்கணுமோ [அவங்க கிட்ட அனுமதி வாங்கி கல்யாணம் ]பெற்றவங்க காதலிக்கற பிள்ளைங்க கிட்ட எப்படி நடந்துக்கணுமோ[வாழ்த்தி சேர்த்து வச்சு பார்க்கறது ]
  இரண்டையும் சரியானபடி சொல்லி இருக்கீங்க.
  சேர்த்து வச்சு [கதையில ]புண்ணியத்தை சேர்த்துக்கிட்டீங்க
  //
  இப்படி நடந்தா சந்தோஷமா இருக்கும்னு ஆசைப்பட்டேன்.. அப்படியே எழுதிட்டேன் 🙂

 21. //sumathi said…
  ஹாய் வெட்டி,
  இது உங்களுக்கே நல்லாயிருக்கா?பாவம்
  இந்த கார்த்திக் & ராஜி மட்டும் என்ன பாவம் செஞ்சாங்க? அவங்கள மட்டும் பிரிச்சிட்டு….
  சதா சண்டகோழியா இருந்த இவங்கள மட்டும் சேர்த்துட்டீங்க. வேணாம்னு சொல்லிகிட்டு இருந்தவங்கள போயி…
  உண்மையா லவ் பண்ணவங்கள பிரிச்சிட்டீங்க .. நீங்க ரொம்ப மோசம்.
  //
  எல்லாம் அவன் செயல்…
  யார் யார் சேர வேண்டுமென்று இருக்கிறதோ அவர்கள் சேருவார்கள் 🙂

 22. //ஜி said…
  என்ன வெட்டி… இப்ப வர்ற படம்லாம் பாக்கிறதில்லையா?

  காதல்ல தோல்வி அடைஞ்சா தான் ஹீரோ. வெற்றிப்பெற்றா சைடு… நீ என்னடானா….
  //
  ஜி,
  அழுது அழுது காதல் செஞ்சவங்க பிரிஞ்சிட்டாங்க. ரெண்டு ஜோடியையும் பிரிச்சி வெச்ச பாவம் நமக்கு வேண்டாமே :-))

 23. //இலவசக்கொத்தனார் said…
  கடைசியில் நாலு பாட்டு, ரெண்டு பைட் ரேஞ்சுக்கு நீயும் இறங்கிட்டியே வாத்தியாரே….:((
  //
  கொத்ஸ்,
  தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டேன். என்ன செய்யறது? 😦

 24. //கப்பி பய said…
  இவங்களை சேர்த்து வச்சாச்சு…கார்த்திக், ராஜி என்ன ஆனாங்க?
  //
  கப்பி,
  அது அவ்வளவுதான் 😦

 25. //Syam said…
  நட்சத்திர படிவாளர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் வெட்டி…கொஞ்சம் பிஸி அப்புறமா வந்து படிக்கறேன்…உங்க 3 போஸ்ட் பாக்கி 🙂
  //

  நாட்டாமை,
  உங்களை தான் தேடிக்கிட்டு இருந்தேன்… பொறுமையா வந்து சேருங்க 🙂

 26. //Priya said…
  நல்லா முடிச்சிருக்கிங்க (முடிஞ்ச மாதிரி தானே!)
  //
  ஆமாங்க 🙂

  //
  //வீட்ல பயங்கர போர்.//
  அப்படி போடு, காதல் வந்தா இப்படி தானா.
  //
  தெரியலையே :-/

  //

  //கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அப்பா, அம்மாவை விட்டு நீ வரணும். அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. நான் உன் காதலை ஏத்துக்கலைனும், நீ என்னை காதலிக்கவே இல்லைனு நானும் நினைச்சிட்டு இருந்துக்கலாம்//

  நச்சுனு சொல்றா தீபா..

  தீபா, அருண் parents மாதிரி எல்லாரும் இருந்தா நல்லா இருக்கும். என்ன பண்றது, ராஜி parents மாதிரி தானே நிறைய பேர் இன்னும் இருக்காங்க. ஆனா, trend மாறிட்டிருக்கறது நிஜம்.
  //
  எப்படி இருக்க கூடாது எப்படி இருக்கனும்னு ரெண்டு Pairஐ வெச்சி எனக்கு தெரிஞ்ச வகைல சொல்லிட்டேன் 🙂

 27. //சுப்பு said…
  என்ன பாலாஜி ஏதோ மெசேஜ் எல்லாம் குடுக்கிரீங்க போல இருக்கு. ஆக ” பெற்றோர் சம்மதம் இருந்தால் காதலீங்க இல்லாவிட்டால் வீணாக வருத்தப்பட வேண்டும் ” என்ற செய்தியா சொல்ல வரீங்க.
  //
  கரெக்டா புரிஞ்சிக்கிட்டீங்க 🙂

  //
  ஏது ரொம்ப பொறுப்பு வந்தது போல் தோணுகிறதே.
  //
  நான் எப்பவுமே பொறுப்பான பையன் தாங்க 🙂

  // ஏதாவது செட் ஆயிடுச்சா ? //
  என்ன இது சின்ன புள்ளை தனமா??? 🙂

 28. //Arunkumar said…
  இத இத இந்த அத்யாயத்த தான் நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் 🙂

  காதலிச்சவங்கள பிரிச்சிட்டு ‘பெத்தவங்க ஓகே சொன்னா லவ் பண்ணலாம்’னு சொன்னவங்கள சேத்து வச்சிட்டீங்க. நல்ல எதார்த்தம்.
  //
  பிரித்ததும் பெற்றவர்கள்.. சேர்த்ததும் பெற்றோர்களே!!! நான் எதுல எதுவும் செய்யல 🙂

  //நிறைய கதைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்… //
  முடிந்த அளவு தருகிறேன். ஆனா அடுத்த ஒரு மாசத்துக்கு எதுவும் வராது 🙂

  //
  நட்சத்திரம் ஆனதுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் பாலாஜி 🙂
  //
  மிக்க நன்றி அருண்…

 29. //Adiya said…
  நீங்க இப்படி ஒரு நல்லா வரா //
  ஏங்க? ரொம்ப மோசமானவன்னு பார்த்தீங்களா?

  //
  தமிழ் makkalin சுபம் concept ikku oru super script pooinga..

  gr8t work. .waiting for romance last part.
  //
  சீக்கிரமே வரும்…
  அது எழுதறதுதான் கொஞ்சம் கஷ்டம் 😦

 30. //Divya said…
  \”அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. \”

  அஹா இப்படி முதல் ஸ்டேஜிலேயே யோசித்து முடிவெடுக்கிறது எவ்வளவு நல்ல ஐடியா!!
  //
  எத்தனை பேர் இதை செய்ய போறாங்க? எப்படி பார்த்தாலும் அப்பா, அம்மாதான் முக்கியம். அவுங்களும் பசங்களை புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கையே சந்தோஷம் தான் 🙂

  //
  வெட்டி ரொம்ப ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க,
  பெற்றோருக்கும் ஒரு மெசேஜ் சொல்லியிருக்கிறீங்க பாருங்க அது சூப்பர்!!

  நட்சத்திரத்திற்கு பாராட்டுக்கள்!!
  //
  மிக்க நன்றி திவ்யா…
  அடுத்த பகுதிக்கும் வந்து சேருங்க 🙂

 31. //Syam said…
  தமிழ் சினிமா ஸ்டைல்ல மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடியுது…ஆனா திரைக்கதை பிரமாதம் உங்க எதார்தமான டச்… 🙂
  //
  நாட்டாமை,
  எந்த காதலத்தான் விட்டு வெச்சாங்க நம்ம தமிழ் சினிமால. அதனால் எந்த காதல் கதை எழுதினாலும் அது தமிழ் சினிமா மாதிரி தான் இருக்கும் 🙂

 32. //கொத்ஸ்,
  தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டேன். என்ன செய்யறது? :-(//

  தமிழ் சினிமாவா? அதை எங்க பார்க்கறீரு? தெலுங்கு படமுன்னு சொல்லுங்க. :))

 33. /*

  // ஏதாவது செட் ஆயிடுச்சா ? //
  என்ன இது சின்ன புள்ளை தனமா??? 🙂

  */

  Ayya, intha pathilaya keytanga ? maluppamal pathila sonna nalla irukkum.

  – Unmai

 34. //இலவசக்கொத்தனார் said…

  //கொத்ஸ்,
  தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டேன். என்ன செய்யறது? :-(//

  தமிழ் சினிமாவா? அதை எங்க பார்க்கறீரு? தெலுங்கு படமுன்னு சொல்லுங்க. :)) //

  கொத்ஸ்,
  யூ டூ…

  தமிழ் படமும் பார்க்கறேன் கொத்ஸ்… ஆனா எல்லா படத்துக்கும் நல்ல பிரிண்ட் கிடைக்க மாட்டீங்குது 😦

 35. // Anonymous said…

  /*

  // ஏதாவது செட் ஆயிடுச்சா ? //
  என்ன இது சின்ன புள்ளை தனமா??? 🙂

  */

  Ayya, intha pathilaya keytanga ? maluppamal pathila sonna nalla irukkum.

  – Unmai //

  உண்மை,
  எத்தன தடவைதான் சொல்றது???
  காதல் கதை எழுதனா காதலிச்சிருக்கணுமா? கொலை பண்ற மாதிரி கதை எழுதினா என்னை கொலை காரன்னு சொல்லிடுவீங்க போல 🙂

 36. தீபாவ சேர்த்து வச்சுட்ட. எப்பவும் போல எதார்த்தமா அழகா இருக்கு இந்த பகுதி!

  //அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே//
  ரெண்டு பேருக்கும் ரொம்ப புடிச்சிருந்து,
  வீட்டுல எதிர்த்தாங்கனா எந்தளவுக்கு அவாய்ட் பண்ண முடியும்னு தெரியல..
  நடைமுறையை விடு..இந்த கதைல அருண் வீட்டுல சம்மதிக்காம இருந்திருந்தா, என்னாகியிருக்கும்?? நல்லா யோசிச்சு சொல்லு!

  அப்புறம் ரெண்டு வாரமா அதிக வேலை. மத்த (நட்சத்திர) பதிவெல்லாம் பொறுமையா படிக்கறேன்.

  நட்சத்திரமா ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள்!!

  -விநய்

 37. பாலாஜி
  பின்னூட்டம் போடறதா வேண்டாமானு ஒரே குழப்பமா இருக்கு:) உரையாடல்கள் கதையில உங்களோட சக்தி. ரொம்பவே பேசறதா கொஞ்சம் தோணுது. ஆனாலும் ரசிக்கிற மாதிரி இருந்துது.

 38. //Anonymous said…

  தீபாவ சேர்த்து வச்சுட்ட. எப்பவும் போல எதார்த்தமா அழகா இருக்கு இந்த பகுதி!
  //
  மிக்க நன்றி விநய்…

  //
  //அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே//
  ரெண்டு பேருக்கும் ரொம்ப புடிச்சிருந்து,
  வீட்டுல எதிர்த்தாங்கனா எந்தளவுக்கு அவாய்ட் பண்ண முடியும்னு தெரியல..
  நடைமுறையை விடு..இந்த கதைல அருண் வீட்டுல சம்மதிக்காம இருந்திருந்தா, என்னாகியிருக்கும்?? நல்லா யோசிச்சு சொல்லு!
  //
  சம்மதிக்காமலே இருந்திருந்தா பிரிந்திருப்பார்கள்.

  // அப்புறம் ரெண்டு வாரமா அதிக வேலை. மத்த (நட்சத்திர) பதிவெல்லாம் பொறுமையா படிக்கறேன்.

  நட்சத்திரமா ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள்!!

  -விநய்//
  மிக்க நன்றி விநய்…
  பொறுமையா வாங்க 🙂

 39. Vetti just as sumathi said..
  What about the other pair?
  Pavama illa?

 40. // “இங்க பாரு. கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அப்பா, அம்மாவை விட்டு நீ வரணும். அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. நான் உன் காதலை ஏத்துக்கலைனும், நீ என்னை காதலிக்கவே இல்லைனு நானும் நினைச்சிட்டு இருந்துக்கலாம்”

  //

  so gud vetti……..

  again n again u r prooving ur writing skills……..

  hearts of u……..

 41. //”ஆமாம் வித்யாசமாத்தான் தெரியுது. அதனால தான் வந்தேன்”
  “எனக்கு எப்படி சொல்றதுனே தெரியல” அருண் அவளை வித்யாசமாக பார்த்தான்

  “நான் அப்படியெல்லாம் எதுவும் இல்லைனு சொன்னேன்”
  “அத சொல்லத்தான் என்னைய இங்க வர சொன்னியா?”

  எங்க அம்மாவுக்கு உன்னை எப்படி பிடிச்சுதுனே தெரியல”
  “ஏன்னா உங்க அம்மா நல்லவங்க அவுங்களுக்கு என்னை பிடிச்சியிருக்கு”
  “அப்ப என்னை கெட்டவனு சொல்றியா?”//

  அப்பப்பா.. இந்த அருணும், தீபாவும் மனசுக்குள்ள காதலை வெச்சுக்கிட்டு என்னமா கண்ணாமூச்சி ஆடறாங்க.. மோதலுடன் காதலை பார்த்து ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…

  //”இங்க பாரு. கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அப்பா, அம்மாவை விட்டு நீ வரணும். அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. நான் உன் காதலை ஏத்துக்கலைனும், நீ என்னை காதலிக்கவே இல்லைனு நானும் நினைச்சிட்டு இருந்துக்கலாம்”

  “ஆமாம் நம்ம சாதி இல்லைதான். என்னங்க செய்ய? நாம கடன்ல இருக்கும் போது எந்த சாதிக்காரன் நம்ம வீட்டுக்கு வந்தானு கேக்கறான். அவன் கேட்டதும் நியாயமாத்தான் இருக்கு. அவன சுத்தி மலை மாதிரி அவன் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்களாம். இப்பவெல்லாம் சொந்தக்காரவங்களைவிட நண்பர்கள் தான் முக்கியமா போயிடறாங்க”

  “சரிவிடுங்க. எல்லாத்தையும்விட நமக்கு அவன் தானே முக்கியம். அந்த பொண்ணும் நாங்க ஒத்துக்காம கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லிடுச்சி.
  இவ்ளோ நல்ல பசங்கள எதுக்கு பிரிச்சிக்கிட்டு? சந்தோஷமா இருக்கட்டுமே.
  //

  நண்பா! வசனங்கள் மிக எளிமையாக நச்சுன்னு இருக்கு!!! கலக்குற மச்சி..

  //பின்குறிப்பு:
  மக்களின் விருப்பத்திற்கிணங்க இன்னும் கொஞ்சம் ஜாலியான வசனங்களுடன் அடுத்த பாகத்தில் முடிவடையும்…//

  வெட்டி! கலர்ஃபுல்லான ஜாலி வசனங்களுக்காக ஆவலுடன் வெயிட்டிங்…

 42. Vetti,

  Athukkulla mudichitinga!!! Innum 4 episode varum-nu ninaichen.

  Proposal part superrrr. Next part eppa?

 43. // Anonymous said…

  Vetti just as sumathi said..
  What about the other pair?
  Pavama illa? //

  நிஜமாலுமே ரொம்ப பாவமாதாங்க இருக்கு. நீங்களாவது அடுத்த தலைமுறைக்கு இந்த சாதிய எடுத்துட்டு போகாம இருங்க… அதுதான் நமக்கு வேண்டும்…

 44. // Anonymous said…

  hi vets

  mudivu super..but karthik-raji love break konjam nerudal..but its ok yaaruku yaarunu kadaisi varaikum uruthiya solla mudiyathu. parants othukitta apurama love pana arambikirathu romba nallathu thaan i agree with you. nellikai mudivukaga waiting.

  yogen //

  ரொம்ப சரி யோகன்…
  பெத்தவங்களை புரிஞ்சிக்க வைக்க முயற்சி செய்யணும்… இல்லைனா வாழ்க்கையில பெரிய ரிஸ்க் எடுக்கறோம்னு அர்த்தம்…

 45. // Jayanthi said…

  // “இங்க பாரு. கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அப்பா, அம்மாவை விட்டு நீ வரணும். அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. நான் உன் காதலை ஏத்துக்கலைனும், நீ என்னை காதலிக்கவே இல்லைனு நானும் நினைச்சிட்டு இருந்துக்கலாம்”

  //

  so gud vetti……..

  again n again u r prooving ur writing skills……..

  hearts of u…….. //

  Thx a lot J…

  எல்லாம் உங்கள மாதிரி இருப்பவர்கள் கொடுக்கும் உற்சாகமே!!!

 46. //கத்துக்குட்டி said…
  அப்பப்பா.. இந்த அருணும், தீபாவும் மனசுக்குள்ள காதலை வெச்சுக்கிட்டு என்னமா கண்ணாமூச்சி ஆடறாங்க.. மோதலுடன் காதலை பார்த்து ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
  //

  ஆமாம் கத்துக்குட்டி…
  அவுங்களோட ஈகோவும் ஒரு காரணம் 🙂

  //நண்பா! வசனங்கள் மிக எளிமையாக நச்சுன்னு இருக்கு!!! கலக்குற மச்சி..//
  மிக்க நன்றி!!! எல்லாம் நம்மல சுத்தி இருக்கறவங்க பேசறதுதான் 🙂

  //
  வெட்டி! கலர்ஃபுல்லான ஜாலி வசனங்களுக்காக ஆவலுடன் வெயிட்டிங்…//
  சீக்கிரமே வரும்…

 47. //Simply Senthil said…

  Vetti,

  Athukkulla mudichitinga!!! Innum 4 episode varum-nu ninaichen.

  Proposal part superrrr. Next part eppa? //

  செந்தில்,
  இதுக்கு மேலையும் வளர்த்தா நல்லா இருக்காதுனு தான் முடிச்சிட்டேன் 🙂

  சீக்கிரமே வரும்

 48. காவியம் ஓவியம்ன்னு எல்லாம் ஜல்லி அடிக்க மாட்டேன்; நடைமுறை வாழ்க்கை இது தான்னு நினைச்சு முடிக்கப் பாக்கறீங்களா, பாலாஜி?

  //இப்பவெல்லாம் சொந்தக்காரவங்களைவிட நண்பர்கள் தான் முக்கியமா போயிடறாங்க//

  //சாதி சாதினு பார்த்து பண்ணி வெச்சி கடைசில நம்மல வீட்டுவிட்டு துரத்தற பொண்ணா வந்துட்டா என்ன பண்ண//
  :-))

 49. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…
  காவியம் ஓவியம்ன்னு எல்லாம் ஜல்லி அடிக்க மாட்டேன்; நடைமுறை வாழ்க்கை இது தான்னு நினைச்சு முடிக்கப் பாக்கறீங்களா, பாலாஜி?
  //
  ஆமாங்க KRS…
  அதுவும் இல்லாம எத்தனை pairஅ பிரிக்கறது… ஏதாவது தோஷம் வந்துடப்போகுது :-))

  //
  //இப்பவெல்லாம் சொந்தக்காரவங்களைவிட நண்பர்கள் தான் முக்கியமா போயிடறாங்க//

  //சாதி சாதினு பார்த்து பண்ணி வெச்சி கடைசில நம்மல வீட்டுவிட்டு துரத்தற பொண்ணா வந்துட்டா என்ன பண்ண//
  :-))
  //
  இப்படி ஒரு ஸ்மைலி போட்டா அதுக்கு என்ன அர்த்தம்???

 50. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…
  //சரி நீ கண்ண மூடிக்கோ நான் சொல்றேன்”//

  யாரு, நம்ம தீபாவா இவ்ளோ வெக்கப்படுது! யம்மாடியோவ்! 🙂
  அது எப்படிங்க பாலாஜி….எப்படி எப்படி எப்படி எப்படி எப்படி எப்படி ?
  (ஜிரா ஸ்டைலில்)
  //

  ஏன்? தீபா வெக்கப்படக்கூடாதா????

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: