கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – பேரரசு

வணக்கம்!!! நீங்கள் பார்த்து கொண்டிருப்பது கவுண்டர் பெல்ஸ் Devil’s Advocate பார்ட் 2.

இந்த வாரம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் நான்கு வெற்றி திரைப்படங்களை இயக்கிய ஸ்பீட் லாயர் பேரரசு!!!

க: வா மேன்!!! உன்னையத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன். நீயே வந்து மாட்டிக்கிட்ட. திருப்பாச்சி படத்தோட வெற்றிக்கு என்ன காரணம்னு நினைக்கிற?

பே: மக்களோட மனச நான் நல்லா புரிஞ்சி வெச்சதுதான் காரணம். படத்துல ஆக்ஷன் சீன் அப்பறம் செண்டிமெண்ட் தான் படத்தோட வெற்றிக்கு காரணம்.

க: ஓ! நீங்க மக்கள் மனச நல்லா புரிஞ்சி வெச்சிருக்கீங்க. ஏன்டா ஒன்றையனா சந்தனத்தை முகத்துல பூசுனா ஆள் அடையாளம் தெரியாதா? எங்க இருந்துடா புடிச்ச இந்த கான்ஸெப்ட.

பே: நான் ஒரு தடவை இப்படித்தான் சந்தனத்தை பூசிக்கிட்டு எங்க வீட்ல இருந்து வெளிய வந்தப்ப எங்க பக்கத்து வீட்டு நாயிக்கு அடையாளம் தெரியாம துரத்துச்சு. அப்பத்தான் சந்தனம் பூசனா யாராலயும் கண்டு பிடிக்க முடியாதுனு தெரிஞ்சிக்கிட்டேன்…

க: டேய் நாயே!!! அது அடையாளம் தெரியாம தொரத்தியிருக்காதுடா.
உன்னைய எல்லாம் விட்டு வைக்கக்கூடாதுனு தான் நாயே அந்த நாய் உன்னைய தொரத்தியிருக்கும்.
சரி உன் படத்து வில்லனுங்க பேரு எல்லாம் கொஞ்சம் நம்ம மக்களுக்கு சொல்லு

பே: பட்டாசு பாலு, பான்பராக் ரவி, சனியன் சகடை, மூளி முங்காயி, பல்லாக்கு பாண்டி, சிலந்தி கருப்பு, பெருச்சாலி கருப்பு

க: அடேய் அர டவுசர் மண்டையா! எங்க இருந்துடா இந்த மாதிரி பேரெல்லாம் பிடிக்கற.

பே: சின்ன வயசுல எல்லாம் என்னைய அப்படித்தான் பசங்க ஓட்டுவாங்க. அதான் அதையே படத்துல யூஸ் பண்ணிக்கிட்டேன்…

க: பாரு வெக்கமே இல்லாம இத வெளிய சொல்லிக்கிட்டு இருக்கு!
சரி நீ பாட்டு எழுதி மக்கள கொடுமை பண்றியாமே! ஏன் அப்படி?

பே: யார் சொன்னா நான் கொடுமை படுத்தறேனு. நான் எழுதன கட்டு கட்டு பாட்டும், அப்பன் பண்ணு தப்புலையும் அந்த வருஷத்துலயே பெரிய ஹிட்.

க: எங்க அந்த அப்பன் பண்ண தப்புல பாட்ட எடுத்துவிடு கேப்போம்

பே: அப்பன் பண்ண தப்புல
ஆத்த பேத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சி சமஞ்சிடுச்சிடா

க:ஓ! நோ!!!
நிறுத்து மேன்!
இது ஒரு பாட்டு இத எழுதனதுல உனக்கு பெருமை வேற?
மவனே நீ மட்டும் இனிமே பாட்டு எழுதனனு கேள்வி பட்டேன்.. உனக்கு சங்குதாண்டி. என்ன புரியுதா?

பே: இந்த பாட்டையும் ஒரு தடவை கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்களேன்…

க: சரி அது என்ன பாட்டு.. பாடி தொலை கேக்கறேன்

பே: கட்டு கட்டு கீரை கட்டு ( கவுண்டர் பாதி பாட்டு வரை கேட்கிறார்)

க: டேய் நிறுத்து! என்னடா கீர கட்டு, ஜப்பான் ஜாக்கெட்டு, ஒடஞ்ச பக்கெட்டுனு பாட்டு எழுதிட்டு இருக்க?
மவனே! ஐ ம் ஸ்ட்ரிக்ட்லி டெல்லிங்…இனிமே யூ நோ பாட்டெழுதிஃபயிங். புரியுதா?

பே: சரிங்க

க: அது சரி… நீ ஏதோ படத்துல எல்லாம் வரியாம். என்ன ராசா விளையாட்டு அது?

பே: அது சும்மாச்சுக்கும்…

க: சும்மாச்சுக்குங்கூட நீ படத்துல நடிக்கக்கூடாது புரியுதா? அஜித் பாவம் படம் எதுவும் ஹிட்டாகலனு உன் படத்துல நடிச்சா அதுல நீயே ஹீரோவாயிட்ட.
மவனே இனிமே இந்த படத்துல பாதில நீ யாரானு எவனாது கேட்டதுக்கப்பறம் பேர் போடறது, அப்பறம் பாட்ஷா மியூசிக்ல வரது இந்த மாதிரி ஏதாவது கேள்விப்பட்டேன்… உன் படத்துல பான்பராக் ரவிய வாயுல கொசு மருந்து அடிச்சி கொன்ன மாதிரி உன்னைய நாங்க கொல்ற நிலைமை வந்துடும் புரிஞ்சிதா?

பே: சரிங்கண்ணே! நான் கிளம்பளாமா?

க: உன்னைய அவ்வளவு சீக்கிரத்துல வீட்டுடுவோமா? நீ என்ன லேசுப்பட்ட ஆளா?

பே: நான் ஏதாவது தெரியாம பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்களேன்.

க: சரி! கடைசியா இந்த கேள்விக்கு மட்டும் பதில சொல்லிட்டு ஓடிப்போ நாயே!

பே: கேளுங்க

க: ஏன்டா Gaptain படத்த ஏற்கனவே அவனவன் நாறடிக்கிறானுங்க. இதுல நீ என்னனா அவர் இடப்புல அருணாக்கயிருல சாமிக்கு படைக்கிற அந்த தட்டை கட்டிவிட்டு துப்பாக்கியால சுட்டா புல்லட் அப்படியே திரும்பி வில்லன அட்டாக் பண்ணும்னு காமெடி பண்ணியிருக்க. அதை நம்பி நம்ம போலிசுக்கெல்லாம் அவர் முதலமைச்சர் ஆன உடனே அரணாக்கயிரும் படையல் தட்டும் கொடுத்தா என்னடா நடக்கும்? எதுக்கு அப்படி பண்ண? நீ வாசிம் கான் ஆளா?

பே: ஐயய்யோ தெரியாம பண்ணிட்டேங்க. இனிமே நான் கோடம்பாக்கம் பக்கமே தலைய வெச்சி கூட படுக்க மாட்டேன். என்னைய விட்டுடுங்க…

(பேரரசு அப்படியே ஜம்ப் செய்து ஓடுகிறார்)

க: மக்களே! ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியத்தை பண்ணிட்டேன். இனிமே இந்த மாதிரி டைரக்டருங்களை எல்லாம் பெரிய ஆளாக்கி நம்ம மக்கள் ரசனைய கேவலம்னு நினைக்கிற மாதிரி பண்ணிடாதீங்க.

54 பதில்கள்

 1. //க: அடேய் அர டவுசர் மண்டையா! எங்க இருந்துடா இந்த மாதிரி பேரெல்லாம் பிடிக்கற.

  பே: சின்ன வயசுல எல்லாம் என்னைய அப்படித்தான் பசங்க ஓட்டுவாங்க. அதான் அதையே படத்துல யூஸ் பண்ணிக்கிட்டேன்…//

  அட்டகாசம்!!

  கலக்குங்க!!
  :))

 2. laughing my ass off….good one machi

  But dude…how do u get time to blog this much…I guess ur blogname is a true metaphor for u

 3. //SK said…
  //க: அடேய் அர டவுசர் மண்டையா! எங்க இருந்துடா இந்த மாதிரி பேரெல்லாம் பிடிக்கற.

  பே: சின்ன வயசுல எல்லாம் என்னைய அப்படித்தான் பசங்க ஓட்டுவாங்க. அதான் அதையே படத்துல யூஸ் பண்ணிக்கிட்டேன்…//

  அட்டகாசம்!!

  கலக்குங்க!!
  :))
  //

  SK ஐயா,
  உங்களிடமிருந்து முதல் கமெண்ட் வருவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 🙂

 4. //Wyvern said…
  laughing my ass off….good one machi
  //
  Thx Machi…

  //
  But dude…how do u get time to blog this much…I guess ur blogname is a true metaphor for u
  ///
  come on dude… If u have interest u will find time…

  for the last 10 days my average sleeping time is around 5 hsr (for the last 2 days its just 4 hrs). Nothing comes that easily :-))

 5. நீங்க Gaptain சப்போர்ட்டா?

  முதலமைச்சர் ரேஞ்சிக்கு தூக்குறீய…

  ஒரு நாயே நாய் துரத்துகிறதே.. அடடா.. ஆச்சர்யகுறி..

  பட்டாசு கெளப்பிருக்கீங்க…

 6. ….பயலே கலக்கல்…. வயிறு வலிக்குதுங்கோ…

 7. இது கற்பனையாக மட்டும் தான் இருக்குமா? ஹும்ம்ம்ம்ம்.

 8. \”என்னடா கீர கட்டு, ஜப்பான் ஜாக்கெட்டு, ஒடஞ்ச பக்கெட்டுனு\”

  வெட்டி, அட்டகாசமா எழுதி சிரிக்க வைச்சுடீங்க, கலக்கல்ஸ் வெட்டி!!

  கீர கட்டு பாட்டு விட, உங்க கற்பனையில் வந்த இந்த கவுண்டர் பாட்டு சூப்பர்…..ரொம்ப ரசிச்சு சிரித்தேன் ஒவ்வொரு வரிகளிலும்!

 9. அருமையா இருந்துச்சு..! நல்லா வாய் விட்டு சிரிச்சேன்..! புல் பார்ம்ல இருக்க அடிச்சு ஓட்டு ..
  போன வாட்டி கமெண்ட் எழுதும் போது அனானியா வந்திடுச்சு..இனிமேல் கேர்புலா இருக்கேன்..

 10. கவுண்டர் உண்மையாகவே பேட்டி எடுத்தால் இந்த அளவிற்குத் தில்லாகப் பேசுவாரா என்பது சந்தேகமே!

  நீங்கள் கவுண்டருக்கு ஸ்கிரீன் ப்ளே எழுதினால் கவுண்டர் மீண்டும் ஒரு ரவுண்டு வந்தாலும் வருவார்!

  கவுண்டர் காதில் வேண்டுமென்றால் போட்டு வைக்கட்டுமா?

  SP.VR.SUBBIAH

 11. அண்ணன் தங்கச்சி பாசத்துக்கு பாசமலருக்கு பின்னாடி என்னடான்னு பாத்தா திருப்பாச்சி..

  அதல பாதாளத்துல இருந்த அஜீத் இன்னிக்கு ஃபீல்டுல கீறார்னா அதுக்கு காரணமான திருப்பதி,

  கேப்டனுடைய சினிமா வாழ்க்கையை முடிச்சி வைச்சு, அரசியல்ல அவர பர்மனன்ட் ஆக்குன தர்மபுரி…

  இதையெல்லாம் கொடுத்தவரு எங்க பேரரசு.

  மிஸ்டர் கவுண்டபெல்.. அவர பேட்டியெடுத்த உங்களுக்கு தாங்ஸ்.

  பல்லாவரம் பேரரசு ரசிகர் மன்றம் சார்பாக
  அரைபிளேடு

 12. அப்படி போடு அருவாள!!!

  உம்மேல வரப்போற கோவத்துல கள்ளக்குறிச்சின்னு ஒரு படம் எடுத்து உன்னயே ஹிரோ ஆக்கிடப்போறாரு!

 13. // பரணீ said…

  ….பயலே கலக்கல்…. வயிறு வலிக்குதுங்கோ… //

  நல்லா சிரிங்க பரணி…
  அதுதான் நமக்கு வேணும் 🙂

 14. //குமரன் (Kumaran) said…

  இது கற்பனையாக மட்டும் தான் இருக்குமா? ஹும்ம்ம்ம்ம். //

  நிஜமா நடந்தா நல்லாத்தான் இருக்கும் 🙂

 15. //குமரன் (Kumaran) said…

  நானும் பதிவு வந்தவுடனேயே படிக்கத் தொடங்கிட்டேனே. ஆனா நடுவுல ஒருத்தன் வந்து கேள்வி கேட்டு தாமதப்படுத்திட்டான். இல்லாட்டி எஸ்.கே.யை முந்தியிருப்பேன். 😦

  அவர் சொன்னதையே சொல்லிக்கிறேன். 🙂 //

  கேள்வி கேட்டவன் மட்டையில ஒரு போடு போட்டு, “டேய் மண்டையா நான் இங்க எவ்வளவு முக்கியமான விஷயத்த படிச்சிட்டு இருக்கேன்.. இப்ப வந்து டிஸ்டர்ப் பண்றியே”னு சொல்லியிருக்க வேண்டியது தானே… (Just Kidding :-))

 16. //ஜி said…

  நீங்க Gaptain சப்போர்ட்டா?

  முதலமைச்சர் ரேஞ்சிக்கு தூக்குறீய…
  //
  நாம எல்லாம் யாருக்கும் சப்போர்ட் இல்லை 🙂
  அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா 😉

  //
  ஒரு நாயே நாய் துரத்துகிறதே.. அடடா.. ஆச்சர்யகுறி..

  பட்டாசு கெளப்பிருக்கீங்க… //
  மிக்க நன்றி!!!

 17. //Divya said…

  \”என்னடா கீர கட்டு, ஜப்பான் ஜாக்கெட்டு, ஒடஞ்ச பக்கெட்டுனு\”

  வெட்டி, அட்டகாசமா எழுதி சிரிக்க வைச்சுடீங்க, கலக்கல்ஸ் வெட்டி!!

  கீர கட்டு பாட்டு விட, உங்க கற்பனையில் வந்த இந்த கவுண்டர் பாட்டு சூப்பர்…..ரொம்ப ரசிச்சு சிரித்தேன் ஒவ்வொரு வரிகளிலும்! //

  மிக்க நன்றி திவ்யா…
  எல்லாம் நம்ம கவுண்டர் அருள்தான் 🙂

 18. //தமிழ்ப்பிரியன் said…

  அருமையா இருந்துச்சு..! நல்லா வாய் விட்டு சிரிச்சேன்..! புல் பார்ம்ல இருக்க அடிச்சு ஓட்டு ..//
  ரொம்ப தாங்ஸ்டா…
  முடிஞ்ச வரைக்கும் எல்லாரையும் ரசிக்க வைப்போம் 🙂

  //
  போன வாட்டி கமெண்ட் எழுதும் போது அனானியா வந்திடுச்சு..இனிமேல் கேர்புலா இருக்கேன்.. //
  ஓ! அது நீ தானா? செந்தில சேர்க்க சொன்னது? அடுத்த பதிவுல கொண்டு வந்திடறேன் 🙂

 19. //SP.VR.சுப்பையா said…

  கவுண்டர் உண்மையாகவே பேட்டி எடுத்தால் இந்த அளவிற்குத் தில்லாகப் பேசுவாரா என்பது சந்தேகமே!

  நீங்கள் கவுண்டருக்கு ஸ்கிரீன் ப்ளே எழுதினால் கவுண்டர் மீண்டும் ஒரு ரவுண்டு வந்தாலும் வருவார்!

  கவுண்டர் காதில் வேண்டுமென்றால் போட்டு வைக்கட்டுமா?//

  வாத்தியாரே,
  கண்டிப்பாக இந்த மாதிரி எல்லாம் கவுண்டர் கேக்க மாட்டாரு. ஆனா அவருக்கு மட்டும் முழு சுதந்திரமிருந்தா இதை விட பல மடங்கு அருமையா பேசியிருப்பாரு…

  நக்கல்ல அவர் சூரியன்… நான் ஒரு சின்ன பென்சில் டார்ச் மாதிரி 🙂

 20. //அரை பிளேடு said…

  அண்ணன் தங்கச்சி பாசத்துக்கு பாசமலருக்கு பின்னாடி என்னடான்னு பாத்தா திருப்பாச்சி..
  //
  அரை பிளேடு,
  ஏன்? இல்லை ஏன்னு கேக்கறேன்?
  சிவாஜி, சாவித்திரி, பீம் சிங் எல்லாம் செத்துட்டாங்கன்ற தைரியத்துல பேசறியா?

  // அதல பாதாளத்துல இருந்த அஜீத் இன்னிக்கு ஃபீல்டுல கீறார்னா அதுக்கு காரணமான திருப்பதி,//
  உனக்கு மனசாட்சியே இல்லையா? உனக்கு தண்டனையா திருப்பதி போட்டு காட்டணும்…

  //
  கேப்டனுடைய சினிமா வாழ்க்கையை முடிச்சி வைச்சு, அரசியல்ல அவர பர்மனன்ட் ஆக்குன தர்மபுரி…
  //
  இது ஓகே

  // இதையெல்லாம் கொடுத்தவரு எங்க பேரரசு.

  மிஸ்டர் கவுண்டபெல்.. அவர பேட்டியெடுத்த உங்களுக்கு தாங்ஸ்.

  பல்லாவரம் பேரரசு ரசிகர் மன்றம் சார்பாக
  அரைபிளேடு //
  கொடுத்தவரு இல்லை… தமிழ் சினிமாவ கெடுத்தவரு

 21. //தம்பி said…

  அப்படி போடு அருவாள!!!

  உம்மேல வரப்போற கோவத்துல கள்ளக்குறிச்சின்னு ஒரு படம் எடுத்து உன்னயே ஹிரோ ஆக்கிடப்போறாரு! //

  ஏன் உனக்கு எப்பவும் என் மேல ஒரு கொல வெறி???

  வேணும்னா கச்சிராப்பாளையம்னு உன்னைய வெச்சி ஒரு படம் எடுக்க சொல்றேன்…

 22. பட்டைய கெளப்பிட்டீங்க 🙂
  நல்ல ரசிச்சேன்

  ஹ்ம்ம்.. இதெல்லாம் blogல மட்டும் தான் நடக்குமா?

 23. ரகளையா இருந்தது பாலாஜி.. நாங்க எல்லாம் நாறுநாறா பேரரசுவை கேக்கணும்னு இருந்ததை நீங்க கேட்டு இருக்கீங்க..

  கவுண்டர் கலக்குறார்பா மெய்யாலுமே

 24. very good!! enjoyed it.

  — Shiva

 25. //க: மக்களே! ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியத்தை பண்ணிட்டேன். இனிமே இந்த மாதிரி டைரக்டருங்களை எல்லாம் பெரிய ஆளாக்கி நம்ம மக்கள் ரசனைய கேவலம்னு நினைக்கிற மாதிரி பண்ணிடாதீங்க.//

  யப்பா ராசா, இப்படி எல்லாம் நடக்கக்கூடாதான்னு ஆதங்கப்பட வெச்சுட்டியே…. 🙂

 26. வெட்டி எப்பவும் போல கலக்கிட்டீங்க…ROTFL-O-ROTFL 🙂

 27. லொள்ளு சபாவையே பாத்து பாத்து அசதி வந்தபோது இது மாதிரி பதிவு!!
  எப்படி சொன்னாலும் போதாது.
  நீங்க கண்டிப்பா ஒரு டாக் ஷோ நடத்துங்களேன். தமிழகம் பிழைத்துப் போகும்.;-)

 28. வெ.ப,

  கவுண்டமணி இல்லாதது ஒரு குறையாகவே இருக்கிறது

  சல்மான்

 29. ஹ்ம்ம்ம்ம்… இதுக்கெல்லாம் நாங்க அடங்கிடுவோமா…

  தசாவதாரத்துக்கு முன்னாடி கமல் வச்சி பரமக்குடி-னு ஒரு படம் குடுக்கலாம்னு இருந்து ஜஸ்ட் மிஸ் ஆகிப்போச்சு.

  வர்றோம்… வர்றோம்… அடுத்த விஜய் படம் பேரரசுதான். நல்ல ஊர் பெயரா தேடிட்டிருக்காரு.

  நீங்க ஆனந்த விகடன் ஜாலி விலாஸ் மொக்கராசுவோட relative-ஆ? அடிச்சு பின்றீங்க போங்க…

 30. Thaliva, Appadiyae Nammethava vachu oru devil show kodunga….

 31. அண்ணச்சி!!!
  சூப்பரப்பு!! அடுத்த சாய்ஸ் யாரு??? எதாவது நல்ல கதாநாயகியா போடுங்க தல!! உங்களுக்காக ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்க!!!

 32. கலக்கல் வெட்டி…

 33. என்ன வச்சு ஏதும் காமெடி, கீமெடி பண்ணலியே!!!

 34. //for the last 10 days my average sleeping time is around 5 hsr (for the last 2 days its just 4 hrs).//

  போச்சுடா! இதுல தினமும் நான் வேற பத்து நிமிடம் Chatஆ, அதுவும் சரியா நடுராத்திரி 12:00 மணிக்கு!

  தூங்காதே தம்பி தூங்காதே! நீ
  வெட்டிப் பையல் என்ற பெயர் வாங்காதே! :-))) என்று பாட முடியாது போலிருக்கே!!

 35. “கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – இறுதி பாகத்தில நம்ம வெட்டிப்பையல் பாலாஜிய கவுண்டர வுட்டு பேட்டி எடுக்கச் சொல்லுங்க! 🙂

  அப்ப தெரியும் ரவுசுக்கே ரவுசா என்று!

 36. //Arunkumar said…

  பட்டைய கெளப்பிட்டீங்க 🙂
  நல்ல ரசிச்சேன்
  //
  மிக்க நன்றி அருண்..

  // ஹ்ம்ம்.. இதெல்லாம் blogல மட்டும் தான் நடக்குமா? //
  பெங்களூர்ல இருந்தப்ப அப்பப்ப ரூம்லயும் நடக்கும் 😉

 37. //மு.கார்த்திகேயன் said…

  ரகளையா இருந்தது பாலாஜி.. நாங்க எல்லாம் நாறுநாறா பேரரசுவை கேக்கணும்னு இருந்ததை நீங்க கேட்டு இருக்கீங்க..

  கவுண்டர் கலக்குறார்பா மெய்யாலுமே //
  மிக்க நன்றி கார்த்தி…

  அந்த பேரருவை மேல கொஞ்சம் கோபம் அதிகமாதான் இருந்துச்சு… அதான் சான்ஸ் கிடைச்சவுடனே நொங்கெடுத்தாச்சு 😉

 38. // Anonymous said…

  very good!! enjoyed it.

  — Shiva //

  Thx a lot Shiva…

 39. //இலவசக்கொத்தனார் said…

  //க: மக்களே! ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியத்தை பண்ணிட்டேன். இனிமே இந்த மாதிரி டைரக்டருங்களை எல்லாம் பெரிய ஆளாக்கி நம்ம மக்கள் ரசனைய கேவலம்னு நினைக்கிற மாதிரி பண்ணிடாதீங்க.//

  யப்பா ராசா, இப்படி எல்லாம் நடக்கக்கூடாதான்னு ஆதங்கப்பட வெச்சுட்டியே…. 🙂 //

  கொத்ஸ்,
  இப்படி நடந்தா நமக்கும் சந்தோஷம்தான் 🙂

 40. //Syam said…

  வெட்டி எப்பவும் போல கலக்கிட்டீங்க…ROTFL-O-ROTFL 🙂 //

  எல்லாம் நீங்க கொடுக்கற உற்சாகம்தான் நாட்டாமை 🙂

 41. //Syam said…

  போன டெவில் ஷோவும் படிச்சுட்டேன்…அதுவும் செம கலக்கல்…அதுல இன்னொன்னும் சேர்த்து இருக்கலாம்….
  க.ஏண்டா டான்ஸ் ஆடும் போது மூஞ்ச நாய் கடிச்ச மாதிரியே வெச்சு இருக்க…
  சொம்பு:அது போய் டான்ஸ் ஆடி பாருங்க தெரியும்…
  க:ஆமா இவரு பெரிய மைக்கேல் ஜாக்ஸன்…கரகாட்டத்த பேண்ட் சர்ட் போட்டுட்டு ஆடுறான் அந்த கொடுமய போய் வேற பார்கனுமாம்… //

  இது டாப்பு 🙂

 42. //வல்லிசிம்ஹன் said…

  லொள்ளு சபாவையே பாத்து பாத்து அசதி வந்தபோது இது மாதிரி பதிவு!!
  எப்படி சொன்னாலும் போதாது.
  நீங்க கண்டிப்பா ஒரு டாக் ஷோ நடத்துங்களேன். தமிழகம் பிழைத்துப் போகும்.;-) //

  ஆஹா,
  வல்லிசிம்ஹன் நம்மல நாலு பேர் நக்கலடிக்கிற மாதிரி பண்ணிடுவீங்க போல :-))

 43. //சல்மான் said…

  வெ.ப,

  கவுண்டமணி இல்லாதது ஒரு குறையாகவே இருக்கிறது

  சல்மான் //

  ஆமாம் சல்மான்…
  அதனாலதான் அவரை வெச்சி இப்படி ஒரு தொடர்…

 44. //Sridhar Venkat said…

  ஹ்ம்ம்ம்ம்… இதுக்கெல்லாம் நாங்க அடங்கிடுவோமா…

  தசாவதாரத்துக்கு முன்னாடி கமல் வச்சி பரமக்குடி-னு ஒரு படம் குடுக்கலாம்னு இருந்து ஜஸ்ட் மிஸ் ஆகிப்போச்சு.

  வர்றோம்… வர்றோம்… அடுத்த விஜய் படம் பேரரசுதான். நல்ல ஊர் பெயரா தேடிட்டிருக்காரு.
  //
  ஆஹா… ஆதி ஒரு படம் ஃபிளாப் ஆனதுக்கே விஜய் கொஞ்சம் ஆடிப்போயிட்டாரு.. இது அவரை இண்டஸ்ட்ரியை வைத்து ஓட விட்டுடும் :-))

  //
  நீங்க ஆனந்த விகடன் ஜாலி விலாஸ் மொக்கராசுவோட relative-ஆ? அடிச்சு பின்றீங்க போங்க… //
  அப்படியெல்லாம் இல்லைங்கோ!
  மிக்க நன்றி!!!

 45. // கேப்டன் said…

  என்ன வச்சு ஏதும் காமெடி, கீமெடி பண்ணலியே!!! //

  Gaptain,
  வேலில போற ஓணான எதுக்கு எடுத்து வேட்டிக்குள்ள உட்டுக்கறீங்க???

 46. //இன்பா said…

  கலக்கல் வெட்டி… //

  மிக்க நன்றி இன்பா…

 47. //dubukudisciple said…

  அண்ணச்சி!!!
  சூப்பரப்பு!! அடுத்த சாய்ஸ் யாரு??? எதாவது நல்ல கதாநாயகியா போடுங்க தல!! //
  மிக்க நன்றிங்க…
  கதாநாயகி உள்ள வந்தா நம்ம கவுண்ட்ஸ் அவுட் ஆகிடுவாரு…

  //
  உங்களுக்காக ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்க!!! //
  வரேன் இருங்க…

 48. //கத்துக்குட்டி said…

  வெட்டி! உங்களுடைய நையாண்டி ஆனந்தவிகடனில் வெளிவரும் ஜோக்கிரி@ஜாலி.காம் பகுதிக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல…

  //
  மிக்க நன்றி கத்துக்குட்டி!!! எல்லாம் ஒரு சிறு முயற்சியே!!!

  //கவுண்டரு கரீக்டாதான்பா சொல்றாரு! இந்த பேரரசு பண்ணுற ரவுசு தாங்க முடியலீங்கண்ணா… போற போக்குல டி.ஆர். மாதிரி அஷ்டாவதானியாகி அநியாயம் செய்தாலும் ஆச்சர்யப்படுவத்ற்கு ஒன்றுமில்லை.. எல்லாம் நம்ம மக்கள சொல்லனும்..
  //
  இந்த கொடுமையெல்லாத்தையும் தடுக்கணும்னு தான் நாம இதையெல்லாம் செய்யறது 🙂

  //
  வெட்டி! மறக்காமல் எஸ்.ஜே.சூர்யா பண்ணுற ரவுசுகளையும் நம்ம கவுண்டரிம் சொல்லி கலாய்க்க சொல்லுங்க..//
  அவருக்கும் இருக்கு ஆப்பு 🙂

 49. //ஸயீத் said…

  //நீ என்னனா அவர் இடப்புல அருணாக்கயிருல சாமிக்கு படைக்கிற அந்த தட்டை கட்டிவிட்டு துப்பாக்கியால சுட்டா புல்லட் அப்படியே திரும்பி வில்லன அட்டாக் பண்ணும்னு காமெடி பண்ணியிருக்க.//

  வெட்டி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. //
  ஆஹா… இதுக்கு டாக்டர் ஃபீஸெல்லாம் நம்மக்கிட்ட கேக்க கூடாது 🙂

 50. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  “கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – இறுதி பாகத்தில நம்ம வெட்டிப்பையல் பாலாஜிய கவுண்டர வுட்டு பேட்டி எடுக்கச் சொல்லுங்க! 🙂

  அப்ப தெரியும் ரவுசுக்கே ரவுசா என்று! //
  நான் அவரோட ரசிகன்னு என்னைய விட்டுடுவாரு 😉

 51. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  //for the last 10 days my average sleeping time is around 5 hsr (for the last 2 days its just 4 hrs).//

  போச்சுடா! இதுல தினமும் நான் வேற பத்து நிமிடம் Chatஆ, அதுவும் சரியா நடுராத்திரி 12:00 மணிக்கு!
  //
  உங்களுக்கு பிங் பண்றது நான் தானே!
  அதுக்கு அப்பறம் ஒரு மூணு மணி நேரம் கழிச்சிதான் தூங்கறேன் 🙂

  நேத்து 1 மணிக்கெல்லாம் ஜீட் விட்டாச்சு 🙂

  //
  தூங்காதே தம்பி தூங்காதே! நீ
  வெட்டிப் பையல் என்ற பெயர் வாங்காதே! :-))) என்று பாட முடியாது போலிருக்கே!! //
  அடுத்த வாரம் நீங்க தாராளமா பாடலாம் 🙂

 52. Vetti,

  Super Post. ithai konjam parunga.

 53. ஹிஹி….நல்ல வேலை, இது வரை நான் இந்த ஆள் படம் எதுவும் பாத்தது இல்லை….

  http://internetbazaar.blogspot.com

 54. //க: மக்களே! ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியத்தை பண்ணிட்டேன். இனிமே இந்த மாதிரி டைரக்டருங்களை எல்லாம் பெரிய ஆளாக்கி நம்ம மக்கள் ரசனைய கேவலம்னு நினைக்கிற மாதிரி பண்ணிடாதீங்க.//

  பாலாஜி,
  இந்தப் பதிவுல இருந்த காமெடி, கவுண்டரோட டயலாக் எல்லாம் ரசிச்சு சிரிச்சிருந்தாலும், கடைசியா கவுண்டர் மூலமா நீங்க சொன்ன கருத்து சூப்பர். மனசுல நிக்குது. மக்களை மாங்கா மடையன்னு நெனக்கிறவங்களுக்கு நல்ல பாடத்தைக் கத்துக் குடுக்கனும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: