• Top Clicks

  • எதுவுமில்லை
 • அதிகம் பார்வையிடப்பட்டவை

 • Blog Stats

  • 34,066 hits

இந்தியா ஒளிர்கிறதா???

எங்க ஊர் கள்ளக்குறிச்சிங்க. இது தென்னாற்காடு மாவட்டத்துல (தற்போது விழுப்புரம்) இருக்கற ஒரு சின்ன ஊர். நகரமா கிராமமானு சொல்ல முடியாது. எங்க ஊர்ல தொழில்னு பார்த்தா ரைஸ் மில் அதிகமா இருக்கும். கொஞ்சம் பக்கத்துலயே பெரிய சுகர் பேக்ட்ரி இருக்குது.

அதனால சுத்தி இருக்குற கிராமங்கள்ல விவசாயம்தான் அதிகமா இருக்கும். எனக்கு விவசாயத்தை பத்தி அதிகமா எதுவும் தெரியாது. நான் பஸ்ல போகும் போது அதிகமா நெல்லு, கரும்பு தான் பார்ப்பேன்.

நான் பெங்களூர் போனதுக்கப்பறம் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஊருக்கு போவேன். போகும் போது பஸ் மாறி மாறி போவேன். எப்படினா சேலத்துக்கு வண்டி இருந்தாலும் ஏறாம ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் இப்படித்தான் மாறி மாறி போவேன். அப்படி போகும் போது ரொம்ப நேரம் பிரயாணம் செய்யற மாதிரியும் இருக்காது. நிறைய மக்களை பார்க்கலாம். அப்பறம் முக்கியமா நிறைய படம் பார்க்கலாம்.

வரும் போது எங்க ஊர்ல இருந்து பெங்களூர் வண்டீல ரிசர்வ் பண்ணி வந்துடுவேன். பாதி பேருக்கு என்னடா கள்ளக்குறிச்சில இருந்து பெங்களூர்க்கு வண்டி இருக்கானே சந்தேகம் வரும். இராத்திரி தமிழ் நாடு அரசு பேருந்து இரண்டு மற்றும் பெங்களூர் KSRTC வண்டி ஒண்ணு இருக்கு. அதுவும் பஸ்ல கூட்டத்தை பார்த்தீங்கனா நம்ம ராஜ்கிரணோட மாணிக்கம் பாக்கற மாதிரி அத்தனை பேர் இருப்பாங்க. எப்படியும் ஒரு பஸ்ல குறைஞ்சது 100 பேருக்கு மேல இருப்பாங்க. நான் எலக்ட்ரானிக் சிட்டில இறங்கனும்னா ஓசூரை தாண்டிய உடனே எழுந்து வந்தால்தான் இறங்க முடியும். அதுவும் வழியெல்லாம் கால் வைக்க கூட இடமில்லாமல் எல்லாரும் உக்கார்ந்திருப்பாங்க. பாதி பேர் கை குழந்தை வேற வெச்சிருப்பாங்க. நம்மதான் பார்த்து பக்குவமா போகணும்.

என்னடா கிராமம் மாதிரி இருக்கே இங்க இருந்து இத்தனை சாப்ட்வேர் இஞ்சினியர்களானு யோசிக்கறீங்களா? இல்லைங்க. அந்த வண்டீல வரதுல 98% பேர் பெங்களூர்ல கொளுத்து வேலை (பில்டிங் கட்டும் பணி) செய்யறதுக்குத்தான் வருவாங்க. இத்தனை பேர் அந்த பக்கத்துல இருந்து கொளுத்து வேலை செய்ய போறாங்களானு ஆச்சரியமா இருக்கா? போன வருஷத்துக்கு முன்னாடி ஒரு 4 – 5 வருஷமா மழையே இல்லைங்க. அதனால விவசாயம் அதிகமா பாதிச்சிருச்சாம். பொழைக்க வழி தெரியாம கொஞ்ச கொஞ்சமா எல்லாம் கொளுத்து வேலை செய்ய ஆரம்பிச்சாங்களாம். இதே வேலை எங்க ஊர்ல செஞ்சா ஒரு நாள் கூலி 60 ரூபாயம். தினமும் வேலை இருக்குமானும் சொல்ல முடியாதாம்.

பெங்களூர், சென்னை மாதிரி பெரு நகரங்களில் தற்போது ஏற்பட்டுள்ள தொழிற் வளர்ச்சியால் அங்கே இவர்களின் தேவை அதிகமாக இருப்பதால் அங்கே தினமும் வேலை கிடைப்பதாகவும் சம்பளமும் 120 – 150 வரை கிடைக்கிறதாம். ஒரு குடும்பத்தில் 6 பேர் இருந்தால் (நாம் இருவர் நமக்கு இருவர் எல்லாம் அவர்களிடையே கிடையாது) அதில் 4 பேர் வைலை செய்தால் ஒரு நாளைக்கு 300-400 ரூபாய் அதிகமாக கிடைக்கிறதாம். அதில் செலவு போக எப்படி பார்த்தாலும் 200 ரூபாய் கையில் நிற்குமாம். இதனால் அவர்களும் ஓரளவு திருப்தியாக இருப்பதாகவே சொல்கிறார்கள். மழை வந்த பிறகும் இதில் பெரும்பாலானோர் ஓரளவு நல்ல வருமானம் கிடைப்பதால் அதே தொழிலையே செய்கின்றனர். யாரும் விவசாயத்திற்கும் திரும்புவதில்லை போலும்.

இங்கே எனக்கு ஏற்படும் சந்தேகம் இதுதான். இங்கே நடப்பது முழுக்க முழுக்க சரியா?.
வருமானம் அதிகம் கிடைக்குமிடத்தில் வேலை செய்வது தான் புத்திசாலித்தனம். இருப்பினும் என் மனதில் தோன்றிய சில கேள்விகள்
1. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறதா இல்லையா? இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.
2. நம்மிடையே இன்று ஏற்பட்டிருக்கும் ஒரு சமமற்ற வளர்ச்சியை (Unbalanced Growth) எப்படி சமாளிக்க போகிறோம்?
3. இதை சமாளிக்க என்னை போன்ற படித்த இளைஞர்களிடம் சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது?
4. முன்பை விட ஓரளவு அதிக வருமானம் கிடைப்பதால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்கிறதா?
5. உண்மையாகவே இந்தியா ஒளிர்கிறதா?

62 பதில்கள்

 1. யப்பா சாமி, பெரிய பெரிய கேள்வி எல்லாம் கேட்டுப்புட்ட. ஐயாம் தி எஸ்கேப். :))

 2. பத்தவச்சுடேயே பரட்டை..
  பத்தவச்சுடேயே.

 3. என்னப்பா வெட்டி இப்படி கேட்டுட்ட?

  இந்த மாதிரி வேலைக்கு போறவங்க எல்லாம் சொந்த நிலம் இல்லாதவங்கதான். அதுக்காக விவசாயமே நின்னுடிச்சின்னு சொல்ல முடியாது. விவசாயம் நடந்துகிட்டுதான் இருக்கு. முன்னாடி ஏர் ஓட்டணும்னா நாலு வண்டி ஒரு நாள் முழுக்க ஒரு ஏக்கரா நிலத்தை உழுகணும், இப்போ தொழில் வளர்ச்சினால முக்கால்வாசிப்பேர் டிராக்டர் வாங்கிட்டாங்க. மீதி பேரு வாடகைக்கு எடுத்து உழுகறாங்க. பல மணி நேரம் வேலைய சில மணி நேரத்தில முடிஞ்சிருது. ஒரு போகம் நெல்லு வெளஞ்சி முடிக்கறதுக்குள்ள களை புடுங்கறது, நாத்து நடறதுன்னு நிறைய வேலை இருக்கும், இப்பதான் எல்லாத்துக்கும் பூச்சிக்கொல்லி மருந்து வைக்கறாங்க எல்லாமே நாசமா போயிடுது. இதெல்லாம் சரி வர செஞ்சாலும் கொள்முதல் செய்யிறதுல கோளாரு, நியாயமான விலை நிர்ணயம் பண்ணாம அடிமாட்டு ரேட்டுக்கு போடறது எல்லாமே நடக்குது. உனக்கே தெரியும் நம்ம ஊர்ல ஒரு விதைப்பண்ணை இருக்கறதும் அதுக்கு எதிர்த்தாப்பலயே கொள்முதல் நிலையம் இருக்கறதும். ஒரு விவசாயி விளைவிச்ச பொருளை அரசாங்கத்துக்கு கொண்டு போகறதுக்கு எவ்ளோ விதிமுறைகள் இருக்குன்னு. நடுவில இருக்குற தரகர்கள் நெல்மண்டி முதலாளிகள் காசு கொடுத்து வாங்கி பதுக்கி வெச்சி மறுபடியும் விவசாயிகிட்டயே அதிக விலைக்கு அரிசியா விக்கறாங்க. அடுத்தது கரும்புதான் பிரதான பயிரா இருந்தாலும் நியாயமான விலை இல்லை, உள்ள விலையே கரும்ப ஆலையில போட்டு ஆறு மாசத்துக்கு அப்புறம்தான் கண்ணுல காட்டறாங்க. இந்த மாதிரி நிறைய தில்லுமுள்ளு நடக்குது.

  இந்தியா ஒளிர்கிறதுன்னு சொல்றது உண்மைதான்.

  கொள்ளையடிக்கறவன் வீட்டுல,

 4. //இந்தியா ஒளிர்கிறதுன்னு சொல்றது உண்மைதான்.

  கொள்ளையடிக்கறவன் வீட்டுல,//

  நச்…

 5. //பதிவ படிச்சா அனுபவிக்கனும்… ஆராயக்கூடாது :-)//

  அப்டீன்னு போட்டுட்டு கேள்வி கேட்ட எப்டி வெட்டி. படிச்சிட்டேன். அனுபவிச்சிட்டேன். 🙂

 6. பாலாஜி
  ஆன்மீகம் ஆகட்டும், சமுதாயம் ஆகட்டும், நையாண்டிக் கதைகள் ஆகட்டும், எதுவா இருந்தாலும் கேள்விய மட்டும் இப்படி அடுக்குறீங்களே! (சரி தானே ஜிரா?:-)

  எப்படி உங்களுக்கு இப்படி கேள்வி கேட்க வருது?….எப்படி?எப்படி?எப்படி?எப்படி?எப்படி?எப்படி?:-)

 7. I am coming with same contest of your writeup. Why you all software engineers are going USA? How your vaccany is filled up in India besides the braindrain? In the same way agriculture will also be filled by some means…Its not only by means of manpower but with machines also. So no one depends on others.

 8. Balaji,
  I will come up with my words once after going back to home.

  But guys,

  INDIA is SHINING LIKE only with Mercury lamps, not with Landar lamps.

 9. //இலவசக்கொத்தனார் said…

  யப்பா சாமி, பெரிய பெரிய கேள்வி எல்லாம் கேட்டுப்புட்ட. ஐயாம் தி எஸ்கேப். :)) //

  கொத்ஸ்,
  இது நான் ஒவ்வொரு வாரமும் பார்த்த ஒரு நிகழ்ச்சியின் காரணமாக எழுந்த கேள்விகளே 🙂

 10. //நாடோடி said…

  பத்தவச்சுடேயே பரட்டை..
  பத்தவச்சுடேயே. //

  என்னங்க நாடோடி இப்படி சொல்லிட்டீங்க 🙂

 11. \\இந்தியா ஒளிர்கிறதுன்னு சொல்றது உண்மைதான்.

  கொள்ளையடிக்கறவன் வீட்டுல,\\

  ஐயோ சூப்பர்.

 12. இந்தக் கேள்வியத்தான் கடந்த ஒரு மாதமா நான் மனசுக்குள்ள கேட்டுக்கிட்டிருக்குறது. உண்மையிலேயே இந்தியா ஒளிரலைன்னுதான் நான் சொல்வேன். வளர்ச்சி இருக்குது. இல்லாம இல்ல. ஆனா சமச்சீரான வளர்ச்சி இல்லை. அதற்குக் காரணம் இந்திய அரசாங்கந்தான். இன்னைக்குத் தொழில் வளர்ச்சின்னு அவங்க காலரத் தூக்கி விட்டுக்க முடியாது. அது பணக்காரங்களாலையும் எப்படியாவது பிழைச்சாகனுமேன்னு உழைச்ச படிச்சவங்களாலையும் வந்தது. மத்தபடி எந்த அரசாங்கமும் அதுக்கு உரிமை கொண்டாட முடியாது. அதுவுமில்லாம தொழில்துறை இந்தியாவின் உள்கட்டமைப்பைச் சார்ந்து இல்லாம வெளிநாட்டைச் சார்ந்தே இருக்கு. இது பெரிய தவறு. இந்தியாவுக்கு இது ரொம்பவுமே தாமதமாப் புரியப் போகுதுன்னு நெனைக்கிறேன். இந்தியப் பொருளாதாரம் இந்தியாவை மையப்படுத்தித்தான் வளரனும். அதுதான் நின்னு நிலைக்கும். ஆனால் அந்த அளவுக்குத் திட்டம் போட்டுச் செயல்படுத்துற மனப்பக்குவம் இன்றைய நிலையில எந்த இந்திய அரசியல்வாதிக்கும் கிடையாது. மக்களுக்கும் அது பத்திக் கவலையில்லை. மதம், மொழின்னு கவலைப்பட எவ்வளவோ இருக்கும் பொழுது…இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

 13. //உண்மையாகவே இந்தியா ஒளிர்கிறதா?//

  வாழ்த்துக்கள் பாலாஜி. நட்சத்திரம் ஆனதற்கு.

  இந்தியா நிச்சயமாக ஒளிர்கிறது.

  உதாரணமாக நான் எஞ்ஜினியரிங் பட்டம் வாங்கி வேலைக்கு போய் ஒரு மொபட் வாங்குவதற்குள் வாயில் நுறை தள்ளிவிடும். ஆனால் இன்று வெகு சுலபமாக சாத்தியப்படுகிறது. எல்லாருக்கும் ஒரு வழியில் முடிகிறது.

  ஏழை மக்களின் அவலநிலையை பற்றி பேசுவார்கள். ஏழைமக்கள் அமெரிக்காவிலும் கூட இருக்கிறார்கள். அவர்களை உயர்த்த தனிமனிதனால் முடியுமா? அரசாங்கம் அரசியல்வாதிகள் மனது வைக்கவேண்டும். ஆனால் நம் நாட்டில் ஏழையில் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று டயாலாக் விட்டுவிட்டு காசு பார்ப்பதில் குறியாய் இருக்கிறார்கள்.

  India is shining inspite of the dirty politicians.

  இந்தியா ஒளிரக் காரணமானவர்கள் உங்களை போன்ற இளைஞர்கள். நாங்கள் படிக்கும் காலங்களில் வருடம் ஒரு ஸ்டிரைக், தமிழ் எங்கள் உயிர் ஹிந்தி எங்கள் ##ர் போன்ற கோஷங்களில் வாழ்க்கையை தொலைத்தவர் எத்தனை பேர்.

  ஆனால் இன்று இளைஞர்கள் உழைக்கிறார்கள் ஒளிர்கிறார்கள் அவர்களால் இந்தியா ஒளிர்கிறது.

  அரசியல்வாதிகள் சற்றே திருந்தினால் இந்தியா மிக ஒளிரும்

 14. வாழ்த்துக்கள் பாலஜி.. தங்கள் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கபட்டமைக்கு வாழ்த்துக்கள்.. மிகவும் சந்தோசம் எமக்கு

 15. தம்பி,
  நீ சொல்றதுதான் உண்மை. இதுக்கெல்லாம் என்ன முடிவுனு தான் தெரியல 😦

 16. //ஜி said…

  //பதிவ படிச்சா அனுபவிக்கனும்… ஆராயக்கூடாது :-)//

  அப்டீன்னு போட்டுட்டு கேள்வி கேட்ட எப்டி வெட்டி. படிச்சிட்டேன். அனுபவிச்சிட்டேன். 🙂 //

  ஜி,
  நட்சத்திர வாரத்திலாவது ஆராயற மாதிரி ஒரு பதிவ போடலாமேனு தான் 🙂

 17. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  பாலாஜி
  ஆன்மீகம் ஆகட்டும், சமுதாயம் ஆகட்டும், நையாண்டிக் கதைகள் ஆகட்டும், எதுவா இருந்தாலும் கேள்விய மட்டும் இப்படி அடுக்குறீங்களே! (சரி தானே ஜிரா?:-)

  எப்படி உங்களுக்கு இப்படி கேள்வி கேட்க வருது?….எப்படி?எப்படி?எப்படி?எப்படி?எப்படி?எப்படி?:-) //
  நம்ம கடமைல இருந்து நாம ஏதாவது நயவுகிறோமானு ஒரு பயம்தான் காரணம்…

  இந்த கேள்விகளுக்கே இப்படினா நான் காலேஜ்ல க்ளாஸ்ல கேக்கற கேள்விகளை கேட்டால் நீங்க என்ன சொல்றீங்க?

 18. //அரை பிளேடு said…

  அட்டன்டன்ஸ் ஒன்லி….
  அப்பாலிகா படிச்சிட்டு வர்றேன்.. //

  வாங்க! வாங்க!!!

 19. // Anonymous said…

  I am coming with same contest of your writeup. Why you all software engineers are going USA? How your vaccany is filled up in India besides the braindrain? In the same way agriculture will also be filled by some means…Its not only by means of manpower but with machines also. So no one depends on others. //

  Anony,
  I am here for assisting my project thats going on in India and I will be back once when my term is over 🙂

  So u are saying that we are attaining balanced growth and that’s not going to affect the society…

  If that’s the case, then I am really happy…

 20. // Anonymous said…

  Balaji,
  I will come up with my words once after going back to home.

  But guys,

  INDIA is SHINING LIKE only with Mercury lamps, not with Landar lamps. //

  Good to hear this…

 21. படிச்சாச்சி..
  ஏழை பாழை மேல எம்மாம் கரிசனம்பா உனக்கு…

  நீ ஒரு உண்மய தெரிஞ்சிக்கணும்..

  விவசாயம் கீதே.. இது ஆஃபீஸ் வேலை கடியாது…
  வாரம் அஞ்சி நாளு வேல.. இரண்டு நாளு லீவ்னு கரிக்டா இருக்கறதுக்கு..

  விதைப்புக்கும் அறுப்புக்கும்தான்பா இங்க வேல..
  மத்த நாளுக்கு..

  மம்முட்டிய புடிக்கற கை மடை மாத்த மட்டுமில்ல.. சிமெண்ட் கலவை கலறவும் செய்யும்…

  வருஷம் புல்லா பொழைப்பு இருக்கணும்ல..

  இருக்கற சாப்டுவேரு இஞ்சினியர்க்கே பெங்களூர்ல விலவாசி ஜாஸ்தின்னா.. நம்ப ஏழை விவசாயி அங்கிய என்ன பண்ணுவான்..

  விவாசாயம் இல்லாத மூணு மாசம் ஒரு காண்டிராக்ட்ல போணமா.. ஊருக்கு ஒதுக்கால ஒரு குடிசையில ஒதுங்கனமா.. லாரில ஏறி வேலைக்கு போனமா.. ஏதோ மூணு காச பாத்தமா.. ஊருக்கு திரும்பி திருப்பவும் வேலய பாத்தமான்னுதான் இருப்பாங்க..

  மேல ஒரு புண்ணியவான் சொன்னா மாறி..
  சாப்டுவேரு இஞ்சினியர்னா ஊர உட்டு அமெரிக்கா வந்துட்டாலும் எப்படா ஊர பாக்க போவம்னு எல்லாருக்குள்ளயும் உள்ளாற ஒரு உதைப்பு இருக்கும்…

  வாய்க்கையின்றது மாறிக்னே இருக்கறதுதான்.. எல்லார்க்கும் அவங்க அவங்க பொயப்பு..

  நாளைக்கு பொயப்பு நல்லா ஓடுனமில்ல…

 22. // பாலாஜி
  ஆன்மீகம் ஆகட்டும், சமுதாயம் ஆகட்டும், நையாண்டிக் கதைகள் ஆகட்டும், எதுவா இருந்தாலும் கேள்விய மட்டும் இப்படி அடுக்குறீங்களே! (சரி தானே ஜிரா?:-) //

  ரவி…அதெல்லாம்…அப்படியே வர்ரது. ஒன்னும் செய்ய முடியாது. ஊரு பேரப் பாத்தீங்கள்ள 😉

 23. இந்தியா, ஆம் ஒளிர்கிறது! எப்படியெனில்,
  சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்:

  ஜெஸ்ஸிகா லால் தீர்ப்பில், அந்த மந்திரியின் மகனுக்கு தண்டனை கொடுத்த
  மாதிரி பாவ்லா காட்டிட்டு, லல்லுவை
  நிரபராதி மாதிரி விடுவிப்பது!

  ‘உண்மை விளம்பி’

 24. //அரசியல்வாதிகள் சற்றே திருந்தினால் இந்தியா மிக ஒளிரும்//

  சரியா சொன்னிங்க சிவா!

  ஒரு வார்டு எலெக்சன்ல தோத்ததுக்கு ஒரே இரவில மந்திரி பதவில இருந்து மாவட்ட செயலாளர் பதவி வரைக்கும் தூக்கறாங்க! அடுத்த ரெண்டே மாசத்துல மறுபடியும் அவரே அமைச்சராம் கூடுதலா ஒரு துறை வேற அவருக்கு ஒதுக்கி.

  அந்த ரெண்டு மாச கேப்புல என்ன “தகுதி”ய வளர்த்துக்கிட்டாருன்னு தெரியல!

  எங்க ஊர்லயும் மந்திரி இருந்தாருப்பா அவரோட நாறின கதைதான் இது.

 25. தம்பி குறிப்பிட்டது போல் நிலமில்லாத தொழிலாளர்கள் தான் இதுபோன்ற கட்டிட வேலைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இப்போது டிராக்டர் மட்டுமல்லாமல் அறுவடை மிஷின்களும் வந்துவிட்டதால் அறுவடை வேலைகளும் குறைந்துவிட்டது.மிஷின்கள்ளே நெல்லையும் வைக்கோலையும் தனியே பிரித்துவிடுகின்றன. இந்நிலையில் இவர்களுக்கு வேலை கிடைக்கும் நாட்கள் குறைந்துவிடுகிறது.

  சிறுவிவசாயிகள் மிஷின் வாடகைக்கும் ஆட்கள் வைத்து வேலை செய்தால் கொடுக்க வேண்டிய கூலியையும் கணக்குப் போட்டு தங்கள் நிலத்தின் அளவிற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

  இதன்மூலம் விவசாயம் குறையவில்லை. ஆனால் குறுவிவசாயிகள் நிலத்தை விற்று வேறு வேலைகளுக்குச் செல்வது அதிகமாகிறது. பெருவிவசாயிகளுக்கு லாபமும் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.(பதுக்கலில் அரிசிமண்டிக்காரர்களுக்கு இணையாக பெருவிவசாயிகளுக்கும் பங்குண்டு)

  இப்போது அரிசி, கரும்பு ஆகியவற்றில் லாபம் குறைவதால் பலர் தோட்டப்பயிர்கள் வைக்க ஆரம்பித்திருப்பதும் இத்தகைய வேலை பற்றாக்குறைக்குக் காரணமோ?

  ஆண்டுக்கு குறைந்தபட்ச வேலைநாட்கள் எல்லாம் வெறும் வாக்குறுதிகளிலும் வாய்ப்பேச்சுகளிலுமே இருக்கின்றது 😦

  இன்றைய நாட்களில் கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பங்கு கனிசமாக இருக்கின்றது.

 26. //இதை சமாளிக்க என்னை போன்ற படித்த இளைஞர்களிடம் சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது?
  //

  பாலாஜி. கல்வியும் வேலைவாய்ப்புகளும் தான் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உலக அறிவு வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் அடிப்படை. அதனால் நம்மால் முடிந்த அளவிற்கு மக்கள் தரமான கல்வி பெற உழைப்பதே நம்மிடம் எதிர்பார்க்கப்படுவது.

 27. ஜி.ரா,
  நமக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது இந்த அரசாங்கம் தானே. பல இஞ்சினியரிங் கல்லூரிகள் அமைந்ததற்கும் அவர்களின் பங்களிப்பு இருக்கிறது.

  //வளர்ச்சி இருக்குது. இல்லாம இல்ல. ஆனா சமச்சீரான வளர்ச்சி இல்லை.//
  இதைத்தான் நானும் நம்புகிறேன்…

 28. //கால்கரி சிவா said…

  //உண்மையாகவே இந்தியா ஒளிர்கிறதா?//

  வாழ்த்துக்கள் பாலாஜி. நட்சத்திரம் ஆனதற்கு.
  //
  மிக்க நன்றி சிவா…

  //
  இந்தியா நிச்சயமாக ஒளிர்கிறது.

  உதாரணமாக நான் எஞ்ஜினியரிங் பட்டம் வாங்கி வேலைக்கு போய் ஒரு மொபட் வாங்குவதற்குள் வாயில் நுறை தள்ளிவிடும். ஆனால் இன்று வெகு சுலபமாக சாத்தியப்படுகிறது. எல்லாருக்கும் ஒரு வழியில் முடிகிறது.
  //
  ஆமாம்… நானும் சின்ன வயசுல இருக்கும் போது எங்க அப்பாக்கிட்ட நீங்க டி.வி யெல்லாம் வாங்க மாட்டீங்க டீ தான் வாங்குவீங்கனு சொல்லி விளையாடிக்கிட்டு இருப்பேன் (ஆனால் அவர் அதை சீரியஸா நினைத்து அடுத்த வாரமே வாங்கினார்)

  ஆனால் நாங்க வேலைக்கு சேர்ந்த புதிதில் சும்மா டீ குடிக்கலாம்னு பேக்கரி போயிட்டு அப்படியே திடீர்னு தோணுச்சினு போய் டி.வி வாங்கிட்டு வந்தோம் (Credit Card தான்). அப்ப தான் நினைச்சிக்கிட்டேன் வாழ்க்கை தரம் எப்படி மாறிவிட்டது என்று

  // ஏழை மக்களின் அவலநிலையை பற்றி பேசுவார்கள். ஏழைமக்கள் அமெரிக்காவிலும் கூட இருக்கிறார்கள். அவர்களை உயர்த்த தனிமனிதனால் முடியுமா? அரசாங்கம் அரசியல்வாதிகள் மனது வைக்கவேண்டும். ஆனால் நம் நாட்டில் ஏழையில் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று டயாலாக் விட்டுவிட்டு காசு பார்ப்பதில் குறியாய் இருக்கிறார்கள்.

  India is shining inspite of the dirty politicians.

  இந்தியா ஒளிரக் காரணமானவர்கள் உங்களை போன்ற இளைஞர்கள். நாங்கள் படிக்கும் காலங்களில் வருடம் ஒரு ஸ்டிரைக், தமிழ் எங்கள் உயிர் ஹிந்தி எங்கள் ##ர் போன்ற கோஷங்களில் வாழ்க்கையை தொலைத்தவர் எத்தனை பேர்.

  ஆனால் இன்று இளைஞர்கள் உழைக்கிறார்கள் ஒளிர்கிறார்கள் அவர்களால் இந்தியா ஒளிர்கிறது.

  அரசியல்வாதிகள் சற்றே திருந்தினால் இந்தியா மிக ஒளிரும் //

  திருந்தினால் நல்லாதான் இருக்கும்.. பார்க்கலாம்

 29. //மு.கார்த்திகேயன் said…

  வாழ்த்துக்கள் பாலஜி.. தங்கள் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கபட்டமைக்கு வாழ்த்துக்கள்.. மிகவும் சந்தோசம் எமக்கு //

  மிக்க நன்றி கார்த்திகேயன்…
  நீங்க தமிழ்மணத்தில் சேர்ந்ததிலிருந்து உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிக்கிறேன்…

 30. அரை பிளேடு,
  சும்மா நச்சுனு சொல்லியிருக்கீங்க…

 31. //G.Ragavan said…

  // பாலாஜி
  ஆன்மீகம் ஆகட்டும், சமுதாயம் ஆகட்டும், நையாண்டிக் கதைகள் ஆகட்டும், எதுவா இருந்தாலும் கேள்விய மட்டும் இப்படி அடுக்குறீங்களே! (சரி தானே ஜிரா?:-) //

  ரவி…அதெல்லாம்…அப்படியே வர்ரது. ஒன்னும் செய்ய முடியாது.
  //
  ஹி ஹி ஹி

  //ஊரு பேரப் பாத்தீங்கள்ள 😉 //
  பெயரில் என்ன இருக்கிறது???

 32. இந்தியா ஒளிர்கிறதா ?
  என்று கேள்வி கேட்டிருக்கிறீர்கள் பாலாஜி
  ஆமாம் இந்தியா ஒளிர்கிறது

  இதை நாம் இப்போது சொல்வதற்கு முன்பே – அதாவது 3 ஆண்டுகளூக்கு முன்பே ஒரு பாகிஸ்தானிப் பத்திரிக்கையாளர் புள்ளி விவர்ரங்களோடு சொல்லியிருகின்றார்

  இப்போது அதில் 30% சதவிகிதத்தைக் கூட்டிக்கொள்ளுங்கள்

  அந்த பாகிஸ்தானிப் பத்திரிக்கையாளர் 3 வருடஙக்ளுக்குமுன் சொன்னது இந்தியா முழுக்க மின்ஞ்சல் மூலம் பிபலமான ஒன்று

  நான் எனது கணினியில் பாதுகாத்து வைத்திருக்கிறேன்

  உங்கள் பார்வைக்காக அனுப்பியுள்ளேன்

  முழுவதையும் பொறுமையாகப் படித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள் – இந்தியா ஒளிர்கிறதா இல்லையா என்று!

  அன்புடன்
  SP.VR.சுப்பையா
  ———————–
  From: Mission2004 [shilparts@kappa.net.in]
  Sent: Monday, February 23, 2004 3:43 PM
  Subject: “India Shining”, writes a Pakistanj journalist
  A wonderful article article on India. Hope you enjoy it.

  Ajay Singh
  Mission2004
  Beyond the edge.
  by Masood Hasan.
  (The writer is a Lahore-based columnist and a well-known journalist , his contact email address is masood_news@hotmail.com)
  THE NEWS INTERNATIONAL (Pakistani Newspaper)

  DECEMBER 14, 2003
  The sight of Indian actress Urmilla on the rooftops of the old city
  of Lahore is a sight for sore eyes any time of the day. This week
  another 270 delegates from India among which are Naseeruddin Shah and Shabana Azmi, are expected to cross over into Pakistan. As both countries take a series of steps, gingerly to start with, there is just that little light at the end of the dark and endless tunnel that has held us “prisoners of our own device” – as The Eagles put it in the famous number Hotel California. Will these measures lead to peace is a question for which even Tauqir Zia has no answers. All we can do is hope, pray and contribute in whatever way we can to normalise relations and bury the many hatchets that we have brandished for the last half-century.

  Travelling last week on the Wazirabad-Sambrial road towards Sialkot, the potholes and bumps on that narrow ribbon strip road began to revive memories of long forgotten journeys made on that same road. I could have, after a few violent and rib-shaking miles, sworn these holes and craters were the same when one was in Kindergarten. Nothing seemed to have changed except that the dust was thicker, the pollution dismal and the people in numbers too large to comprehend. Perhaps in most of India the situation is not very much different and our much-touted smirking observations that India has huge problems might have given us years of self-induced smugness, but things across the divide are changing at a speed that baffles the mind. Some years ago, an Indian said to a Pakistani, “It is true we are both in the gutter. The difference is, we are looking at the stars. You are looking at the gutter.” Many of us associate India’s new progress with its IT revolution and it is part

  Only Rs 1,000 crore – Indian rupees I might add. This firm sells data-storage products to seven of the world’s top 10 CD-R producers.

  There is another unknown. Tandon Electronics. Its hardware exports are Rs 4,000 crore.

  There is more depressing data, all of it quite true and impartial.

  15 of the world’s major automobile makers are obtaining components from Indian companies. This business fetched India $375 million last year and in 2003 the number will be $1.5 billion. In half a decade, they will reach $15 billion. Hero Honda with 17 lakh motorcycles a year is now the largest motorcycle manufacturer in the world. The prestigious UK automaker, Rover is marketing 1 lakh Indica cars made by Tata in Europe, under, wait a minute, its own name.

  Bharat Forge has the world’s largest single-location forging facility. It produces 1.2 lakh tonnes per annum and its clients include Honda, Toyota and Volvo among others.

  Asian Paints now owns 22 production facilities over 5 continents and is the market leader in 11 of these countries. Hindustan Inks has the world’s largest single stream fully integrated ink plant of 1-lakh tones per annum capacity and 100% owned subsidiaries in USA and Austria. EsselPropack is the world’s largest laminated tube manufacturer with presence in 11 countries and a global marketing share of 25% already. Ford has just presented its Gold World Excellence Award to India’s Cooper Tyres.

  Other industries are winning equally prestigious awards all the time.While on cars, Aston Martin has contracted prototyping its latest luxury sports car to an Indian-based designer and is set to produce thecheapest Aston Martin ever. Suzuki, which makes Maruti in India has decided to make India its manufacturing, export and research hub outside Japan. Hyundai India is set to become the global small car hub for the Korean giant and will produce 25,000 Santros to start with. By 2010 it is set to supply half a million cars to Hyundai Korea. HMI and Ford.

  India are leaping ahead, posting astonishing results in the global markets from Brazil to China.

  The Indian pharmaceutical industry is blazing ahead too. At $6.5 billion and growing at 8-10% annually, it is the 4th largest pharmaceutical industry in the world. Its exports are over $2 billion. India is among the top five bulk drug makers and at home, the local industry has edged out the MNCs whose share of 75% in the market is down to 35%. Trade of medicinal plants has crossed Rs 4,000 crore already. As for technology, India is among the three countries that have built supercomputers on their own. The other two are USA and Japan. Not a bad club to be in, is it?

  India is among six countries that launch satellites and do so even for Germany and Belgium. India’s INSAT is among the world’s largest domestic satellite communication systems.

  Here are more depressing facts. India is one of the world’s largest diamond cutting and polishing centres. About 9 out of 10 stones sold anywhere in the world, pass through India. With China, India’s arch enemy, trade has grown by 104% in the past year and in the first 5 months of 2003, India has amassed a surplus in trade close to half a million dollars. In the recession-hit West, Indian exports are up by 19% this year and the country’s foreign exchange reserves stand at an all-time high of $82 (Now over 100) billion. India is dishing out aid to 11 countries, pre-paying their debt and loaned IMF $300 million!!

  And since we think banning fashion shows is the way ahead, it might be interesting to know that Wal-Mart sources $1 billion worth of goods from India – half its apparel, GAP about $600 million and Hilfiger $100 million.

  These success stories are not propaganda and haven’t happened overnight or by good fortune. The Indians have the same bureaucracy and many of the politicians simply play politics, the infrastructure creaks andpoverty abounds, corruption flourishes and there are huge pockets of inefficiency and walls that block meaningful progress. Sure, it has an army that is not bursting with power-grabbing and subjugating its people every few years, but India’s success can no longer be denied and the gap between us and them grows wider by, if I may use my childhood idiom,leaps and bounds. What makes them tick?

  The answers are not simple and require great space and analysis by minds far superior to that of a weekly hack, but Cost and Brains are two factors. Add to that, a determination to rise above what faces you everyday, a vision of the stars as the man said. India provides IT services at one-tenth the price. No wonder more and more companies are basing their operations in India. An Indian MBA costs $5,000. An American MBA $120,000. Development of an automobile in the US costs $1 billion. In India, less than half. A cataract operation costs $1500 in the US. In India, $12. Bypass in the US anywhere up to Rs 6 lakhs. In India, it is Rs 40,000.

  Over 70 MNCs have set up R&D facilities in India in the past five years. 100 of the Fortune 500 are now present in India vs 33 in China. Intel’s Indian staff strength has gone up from 10 to 1,000 in four years. GE with a $60 million invested in India employs 1,600 researchers, while it has only 100 in China. With better systems comes efficiency. The turnaround time in Indian ports is down to 4 days from 10 and its telecom infrastructure in 1999 provided a bandwidth of 155 Mbps. Today, it is 75,000 times more and with fibre optic networks in 300 cities, it will change the face of business. Mobile phones are growing by about 1.5 million a month. Long distance rates are down by two-thirds in five years and by 80% for data transmission. The facts go on and on.

  So what are the answers? They lie in the way we look at things, our discourse, our vision, our ability to look ahead and our desire to genuinely put our country on the right road. The people of the subcontinent are naturally talented and bright. When will we unleash the great potential of our people that lies dormant, crushed by the forces of evil that stop our progress for their personal agendas?

  —————-

 33. இந்தியா ஒளிர்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் இதைச் சொன்னபோது என் நண்பர்கள் என்னை கும்மாங்குத்து குத்தி விட்டார்கள். இதை சொன்ன அரசியல் கட்சிக்கும் அதே கதிதான் நேர்ந்தது.

  பத்தாண்டுகளுக்கு முன் நன்பர்களுடான ஒரு விவாதத்தில் நான் இவ்வளவு பெரிய மக்கள் தொகை ஏன் நாட்டின் செல்வமாக கருதப்படாமல் நாட்டின் சுமையாகக் கருதப்படுகிறது என்று கேட்டதற்கும் கும்மாங்குத்து குத்திவிட்டார்கள். மூன்று நாட்களுக்குமுன் நான் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் இதையே ஒரு பேச்சாளர் சொன்னபோது சிலர் கை தட்டினார்கள்.

  ஒளிரும் இந்தியாவை
  உணர முடியாமல் மறைக்கிறார்கள்
  அரசியல்வாதிகள்.
  கல்வியின் அகல்விளக்கு
  எல்லோரிடமும் ஏற்றப்படும்போது
  பல இந்தியர்களுக்கு
  கண்பார்வை வரும்.
  அப்போது காணக் கண் கூசும்படி
  இந்தியா ஓளிர்வது தெரியும்!

 34. //தம்பி said…

  //அரசியல்வாதிகள் சற்றே திருந்தினால் இந்தியா மிக ஒளிரும்//

  சரியா சொன்னிங்க சிவா!

  ஒரு வார்டு எலெக்சன்ல தோத்ததுக்கு ஒரே இரவில மந்திரி பதவில இருந்து மாவட்ட செயலாளர் பதவி வரைக்கும் தூக்கறாங்க! அடுத்த ரெண்டே மாசத்துல மறுபடியும் அவரே அமைச்சராம் கூடுதலா ஒரு துறை வேற அவருக்கு ஒதுக்கி.

  அந்த ரெண்டு மாச கேப்புல என்ன “தகுதி”ய வளர்த்துக்கிட்டாருன்னு தெரியல!

  எங்க ஊர்லயும் மந்திரி இருந்தாருப்பா அவரோட நாறின கதைதான் இது. //

  நம்ம ஊரு ஆளா?
  யாருப்பா அது?

 35. //கப்பி பய said…

  தம்பி குறிப்பிட்டது போல் நிலமில்லாத தொழிலாளர்கள் தான் இதுபோன்ற கட்டிட வேலைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இப்போது டிராக்டர் மட்டுமல்லாமல் அறுவடை மிஷின்களும் வந்துவிட்டதால் அறுவடை வேலைகளும் குறைந்துவிட்டது.மிஷின்கள்ளே நெல்லையும் வைக்கோலையும் தனியே பிரித்துவிடுகின்றன. இந்நிலையில் இவர்களுக்கு வேலை கிடைக்கும் நாட்கள் குறைந்துவிடுகிறது.

  சிறுவிவசாயிகள் மிஷின் வாடகைக்கும் ஆட்கள் வைத்து வேலை செய்தால் கொடுக்க வேண்டிய கூலியையும் கணக்குப் போட்டு தங்கள் நிலத்தின் அளவிற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

  இதன்மூலம் விவசாயம் குறையவில்லை. ஆனால் குறுவிவசாயிகள் நிலத்தை விற்று வேறு வேலைகளுக்குச் செல்வது அதிகமாகிறது. பெருவிவசாயிகளுக்கு லாபமும் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.(பதுக்கலில் அரிசிமண்டிக்காரர்களுக்கு இணையாக பெருவிவசாயிகளுக்கும் பங்குண்டு)

  இப்போது அரிசி, கரும்பு ஆகியவற்றில் லாபம் குறைவதால் பலர் தோட்டப்பயிர்கள் வைக்க ஆரம்பித்திருப்பதும் இத்தகைய வேலை பற்றாக்குறைக்குக் காரணமோ?

  ஆண்டுக்கு குறைந்தபட்ச வேலைநாட்கள் எல்லாம் வெறும் வாக்குறுதிகளிலும் வாய்ப்பேச்சுகளிலுமே இருக்கின்றது 😦

  இன்றைய நாட்களில் கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பங்கு கனிசமாக இருக்கின்றது. //

  கப்பி,
  அருமை!!!

 36. //haran said…

  வெறும் 10% கூட மாற்றம் அடையாத கிராமங்களும், 10 மடங்கு ஏற்றம் அடைந்த நகரங்களும் இன்றைய யதார்த்தம். நாளுக்கு நாள் சூம்பிப்போய்க்கொண்டிருக்கும் பெரும்பகுதியும், அசுரத்தனமாக வளர்ந்துவரும் சிறுபகுதியும் கொண்ட மனிதனை நாம் ஆரோக்யமானவன் என்று சொல்வதில்லை. இது வளர்ச்சி அல்ல; வீக்கமே. பணக்காரனுக்கும், ஏழைக்கும் இடையே உள்ள இடைவெளி நாளும் குறைந்து வருவதே ஆரோக்யமான பொருளாதாரம்.

  “இந்தியா ஒளிர்கிறது, ஒரு தொழுநோயாளியின் மினுமினுப்பைப்போல”

  வருத்தத்துடன்…..
  //
  ஹரன்,
  நீங்க சொல்றது ஓரளவு உண்மைதான்…
  பெங்களூர்ல நடக்கற திருட்டுகளுக்கும் காரணம் இந்த பொருளாதார வித்யாசமே… இது போக போக சரியாகிவிடும் என்றே நினைக்கிறேன்…
  பார்க்கலாம்.

  // (Dear V.P, நான் உங்கள் ஊர் பக்கம்தான் (கச்சிராயபாளையம்) //
  ஆஹா.. கலக்கல்
  நம்ம தம்பியும் கச்சிராப்பாளையம்தான்…

 37. //குமரன் (Kumaran) said…

  //இதை சமாளிக்க என்னை போன்ற படித்த இளைஞர்களிடம் சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது?
  //

  பாலாஜி. கல்வியும் வேலைவாய்ப்புகளும் தான் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உலக அறிவு வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் அடிப்படை. அதனால் நம்மால் முடிந்த அளவிற்கு மக்கள் தரமான கல்வி பெற உழைப்பதே நம்மிடம் எதிர்பார்க்கப்படுவது. //

  எங்கள் நிறுவனத்தில் பெங்களூரிலிருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு வார இறுதி நாட்களில் சென்று அங்கே இருக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பார்கள். கன்னடம் தெரியாததால் செல்ல முடியவில்லை. இதற்காகவே சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கேட்டு பார்த்தேன். கிடைக்கவில்லை. அடுத்த வருடம் சென்றால் கண்டிப்பாக அந்த குழுக்களில் இணைவேன்…

 38. சுப்பையா ஐயா,
  தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!!

  இந்தியா ஒளிர வேண்டும் என்பதுதான் என் ஆசையும். எனக்கு நான் மேல் சொன்ன இடத்தில் நடப்பது சரியா என்றும் தவறென்னும் பட்சத்தில் நாங்கள் செய்ய வேண்டியது பற்றியுமே சந்தேகம். ஒரு தலைமுறை பட்டினி கிடந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பியதன் கனியை நாங்கள் உண்கிறோம். அதை போல எங்களுடைய கடமையை நாங்கள் செய்தால் அடுத்த தலைமுறை இன்னும் சந்தோஷமாக இருப்பார்கள் என்ற எண்ணமே இந்த கட்டுரையின் நோக்கம்.

 39. ஓகை,

  //ஒளிரும் இந்தியாவை
  உணர முடியாமல் மறைக்கிறார்கள்
  அரசியல்வாதிகள்.
  கல்வியின் அகல்விளக்கு
  எல்லோரிடமும் ஏற்றப்படும்போது
  பல இந்தியர்களுக்கு
  கண்பார்வை வரும்.
  அப்போது காணக் கண் கூசும்படி
  இந்தியா ஓளிர்வது தெரியும்!//

  மிக அருமையாக சொன்னீர்கள்!!!

 40. வேலை பார்க்கும் நிறுவனம் போக வெளியிலும் சில இருக்கின்றன பாலாஜி. முடிந்தால் இந்த வலைப்பூவைப் பாருங்கள்.

  http://abtdreamindia2020.blogspot.com/

 41. //குமரன் (Kumaran) said…

  வேலை பார்க்கும் நிறுவனம் போக வெளியிலும் சில இருக்கின்றன பாலாஜி. முடிந்தால் இந்த வலைப்பூவைப் பாருங்கள்.

  http://abtdreamindia2020.blogspot.com/ //
  இதோ பார்க்கிறேன்…

 42. வெ. ப

  நீங்கள் குறிப்பிடும் கூலி வேலை செய்பவர்கள் சொந்த நிலத்தில் உழுது வேலை செய்பவர்களில்லை. பிறர் நிலத்தில் வேலை செய்பவர்கள். வரும்படி எந்தத் தொழிலில் அதிகம் இருக்கிறதோ அதற்குத் தாவிவிடுவர். அது தான் நடக்கிறது.

  சொந்த நிலம் உள்ளவர்கள் விவசாயம் தான் பார்க்கவேண்டும் என்று என்ன விதியா ?

  1980 கனவிலும் நினைக்க முடியாத விஷயங்கள் சாமானியர் வீட்டில் வந்தடைந்துள்ளது.

  இங்கே வலைப்பதிவில் அதிகம் பேசப்படும் நாட்டார் மங்கலம் கிராமத்துவாசிகள் கூட செல் போன் வைத்துக் கொண்டு காய்கரி வியாபாரம் செய்யும் நிலையில் உள்ளனர். ஒரு காலத்தில் ஃபோனுக்கு 5 கி. மீ குறைந்த பட்சம் நடந்து செல்லவேண்டும் என்ற நிலை மாறியுள்ளது.

  Decentralization எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் கிராமங்களும் குக் கிராமங்களும் முன்னேறும்.

  உங்கள் உதாரணத்திலேயே தமிழ்நாடு அரசுப் பேருந்து ரெண்டும் KSRTC (Karnataka state road transport corporation) வண்டி ஒண்ணு தான் அந்த ஊருக்குப் போகுதுங்குறீங்க. அதுவும் கூட்டமா நெருக்கிகிட்டு போகுதுங்குறீங்க.

  ஆனா, இதே தனியார் வண்டிகள் ஓட விட்டால் இன்னும் நிறைய மக்கள் வேலைக்குப் போய் படிப்பு வசதிகள் பெறக்கூடும். அரசியல் பிரமுகர்களிடம் பள்ளிகள், சாலைகள் வேண்டி போராடத் தூண்டும். ஊரும் முன்னேரும்.

 43. இந்தியாவின் முதுகெலும்பான கிராமத்தை மறந்(த்)துவிட்டு நகரத்தை மட்டும் சுற்றிபாத்துவிட்டு இந்தியா ஒளிர்கிறது என சொல்ல வேண்டாம்.

  இன்று கால் வயிறு சோறு வேண்டுமானால் அனைவருக்கும் கிடைக்கும்.

  கல்வி
  சுகாதாரம்
  போண்றவை இன்னமும் கேள்விக்குறியே…

  (1)அனைத்து கிராமபுற மாணவர்களலும் 12 வது முடிக்கமுடிகிறதா? அட 10 வது…ஊம்ம்..இல்லை…அப்புறம் என்ன கல்வி… 2 லட்சம் 12 மாணவர்கள், அதில் 50000 engineers..ஆனால் எத்தனை கிராமபுற மாணவர்கள் பயண் பெறுகிறார்கள்? ஒரு கிராமதில் நாலு பேர் engineer ஆனால் போதுமா?

  (2) இன்னமும் நம் மக்களுக்கு சரியான மருத்துவ பாதுகாப்பு இல்லை..அதை விட்டுவிட்டு செண்னையில் தான் உலகதரம் வாய்ந்த மருத்துவமனைகள் உள்ளது என பிதற்ற வேண்டாம்… எல்லோரும் அப்போலோ காசு கட்டுபடியாகாது…

  இன்னமும் எத்தனை கிராமங்களில் முதியோர்கள் மருத்துவம் இல்லாமல் சாகிறார்கள் தெரியுமா? அட அது கூட பரவாயில்லை பெற்ற பிள்ளை கூட பாப்பதில்லை..இந்திய அரசாங்கம் வாய் கிழிய பேசும்…

  நாமும் IT, maufacturing, Automotive, Fablab,SEZ என கூறி இந்தியா ஒளிர்கிறது என சொல்வோம்…

  ஆனால் உண்மையில் இருட்டில் ஊசியை தேடிக்கொண்டிருக்கிறோம்…

  Not only mercury lamp can give shining…அகல் விளக்கும் ஒளி கொடுக்கும்.

 44. //ஐயாம் தி எஸ்கேப். :))//

  நானும் கொத்ஸ் மாதிரி தான் 🙂 திருக்கோவிலூருக்கு அடுத்த கிராமத்துக்கு நாங்க அடிக்கடி போவோம். அப்புறம், சோமண்டார்குடியில் நண்பர்கள் இருக்காங்க.

 45. அருமையான கேள்விகள் பாலாஜி

  1.. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறதா இல்லையா? இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.

  விவசாயத்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் பெரியதாக உயராது. மக்கள் நல்வாழ்வு பெற அடுத்த தலைமுறை படித்து வேறு தொழில்களுக்கும் வேலைகளுக்கும் போவது அவசியம்.

  2. நம்மிடையே இன்று ஏற்பட்டிருக்கும் ஒரு சமமற்ற வளர்ச்சியை (ஊன்பலன்cஎட் Gரொந்த்) எப்படி சமாளிக்க போகிறோம்?

  அனைவருக்கும் ஒரே ஊதியம், சொத்து- இது எந்த அரசிலும் சாத்தியமில்லை

  அனைவருக்கும் கல்வி, அடிப்படை தேவைகள் – இது சாத்தியம்

  அடித்தட்டு மக்களுக்கு முதலில் கல்வி, சாலி, வேலை, உணவு ஆகியவற்றை தர அரசு முயலவேண்டும். அதுதான் உடனடி தேவை

  3. இதை சமாளிக்க என்னை போன்ற படித்த இளைஞர்களிடம் சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது?

  நான் என்ன செய்தேன் நாட்டுக்கு? என்ற கேள்வியை கேட்க நீங்கள் ஆரம்பித்திருப்பது மிக நல்ல அறிகுறி.வாழ்த்துக்கள்.

  என்றென்றும் அன்புடன் பாலா செய்வது போல் கல்விப்பணி, செந்தழல் ரவி போல் வேலைவாய்ப்பு பணி என பல வழிகள் தேச சேவை செய்வோருக்கு இருக்கின்றன.ஒன்றும் செய்ய இயலாதோர், வசதி அற்றோர் கூட ஒரு மரக்கன்றை நடலாம்.அதை விட பெரிய தேச சேவை எது?

  5. உண்மையாகவே இந்தியா ஒளிர்கிறதா?

  இல்லை.ஆனால் ஒரு நம்பிக்கை கீற்று இந்திய இளைஞர்களுக்கு தெரிகிறது.அந்த சுடரை அணையாது காத்தால் இன்னும் சில பத்தாண்டுகள் கழித்து இந்தியா உண்மையிலேயே ஒளிரும்

 46. Please forgive me for writing this in English.
  I do not know how I can write this in Tamil.

  An excellent post by the author. I have been asking this question myself for many years now.

  I am sure many who read this post had the same thinking in my mind for years.

 47. இந்தியா ரொம்ப நல்லாவே ஒளிருதுங்கோ இங்கே ஹைதிராபாத்தில்.இன்னும் மின்சாரமே பார்க்காத கிராமங்கள் ஆயிரக்கணக்கில் இருக்க இங்கே 24 மணி நேரமும் எரியும் தெருவிளக்குகளை பார்க்கும்போது வயிறும் சேர்த்தே எரியுதுங்கோ!

  VENDAN

 48. எல்லாரிடமும் தூங்கி கொண்டிருக்கும் சில கேள்விகளை , மன்றத்தில் முன் வைத்ததில் மகிழ்ச்சி .

  செல்வனின் பதில்களை நான் வழிமொழிகிறேன் !

 49. //Vajra said…

  வெ. ப

  நீங்கள் குறிப்பிடும் கூலி வேலை செய்பவர்கள் சொந்த நிலத்தில் உழுது வேலை செய்பவர்களில்லை. பிறர் நிலத்தில் வேலை செய்பவர்கள். வரும்படி எந்தத் தொழிலில் அதிகம் இருக்கிறதோ அதற்குத் தாவிவிடுவர். அது தான் நடக்கிறது.
  //
  மிகவும் சரி… இதை தான் நான் கண்டேன்!!!

  // சொந்த நிலம் உள்ளவர்கள் விவசாயம் தான் பார்க்கவேண்டும் என்று என்ன விதியா ?
  //
  அப்படியெல்லாம் நான் சொல்லல சங்கர். நிலம் அதிக்கமில்லாத விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் வண்ணம் ஏதாவது செய்ய முடியுமா?

  // 1980 கனவிலும் நினைக்க முடியாத விஷயங்கள் சாமானியர் வீட்டில் வந்தடைந்துள்ளது.

  இங்கே வலைப்பதிவில் அதிகம் பேசப்படும் நாட்டார் மங்கலம் கிராமத்துவாசிகள் கூட செல் போன் வைத்துக் கொண்டு காய்கரி வியாபாரம் செய்யும் நிலையில் உள்ளனர். ஒரு காலத்தில் ஃபோனுக்கு 5 கி. மீ குறைந்த பட்சம் நடந்து செல்லவேண்டும் என்ற நிலை மாறியுள்ளது.
  //
  நான் எங்க வீட்டை பார்த்தாலே வித்யாசம் தெரிகிறது.

  // Decentralization எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் கிராமங்களும் குக் கிராமங்களும் முன்னேறும்.

  உங்கள் உதாரணத்திலேயே தமிழ்நாடு அரசுப் பேருந்து ரெண்டும் KSRTC (Karnataka state road transport corporation) வண்டி ஒண்ணு தான் அந்த ஊருக்குப் போகுதுங்குறீங்க. அதுவும் கூட்டமா நெருக்கிகிட்டு போகுதுங்குறீங்க.
  //
  ஐயோ எங்க ஊருக்கு 2 பஸ்னு சொல்லல. எங்க ஊருக்கு பெங்களூர்ல இருந்து வர வண்டி மொத்தம் 3.

  // ஆனா, இதே தனியார் வண்டிகள் ஓட விட்டால் இன்னும் நிறைய மக்கள் வேலைக்குப் போய் படிப்பு வசதிகள் பெறக்கூடும். அரசியல் பிரமுகர்களிடம் பள்ளிகள், சாலைகள் வேண்டி போராடத் தூண்டும். ஊரும் முன்னேரும்.//
  தனியார் வண்டிகள் நல்ல வருமானம் உள்ள ஊர்களுக்கே அதிகம் செல்வதால் வருமானமற்ற வழியில் இருக்கும் ஊர்களுக்கு மட்டும் அரசு பேருந்துகள் இயக்கினால் அரசுக்கு பலத்த நஷ்டமே ஏற்படும். அதுவுமில்லாமல் லாங் டிஸ்டன்ஸ்க்கு தனியார் வண்டிகள் அதிகம் செல்வதில்லை…

 50. //கிராமவாசி said…

  இந்தியாவின் முதுகெலும்பான கிராமத்தை மறந்(த்)துவிட்டு நகரத்தை மட்டும் சுற்றிபாத்துவிட்டு இந்தியா ஒளிர்கிறது என சொல்ல வேண்டாம்.

  இன்று கால் வயிறு சோறு வேண்டுமானால் அனைவருக்கும் கிடைக்கும்.

  கல்வி
  சுகாதாரம்
  போண்றவை இன்னமும் கேள்விக்குறியே…

  (1)அனைத்து கிராமபுற மாணவர்களலும் 12 வது முடிக்கமுடிகிறதா? அட 10 வது…ஊம்ம்..இல்லை…அப்புறம் என்ன கல்வி… 2 லட்சம் 12 மாணவர்கள், அதில் 50000 engineers..ஆனால் எத்தனை கிராமபுற மாணவர்கள் பயண் பெறுகிறார்கள்? ஒரு கிராமதில் நாலு பேர் engineer ஆனால் போதுமா?

  (2) இன்னமும் நம் மக்களுக்கு சரியான மருத்துவ பாதுகாப்பு இல்லை..அதை விட்டுவிட்டு செண்னையில் தான் உலகதரம் வாய்ந்த மருத்துவமனைகள் உள்ளது என பிதற்ற வேண்டாம்… எல்லோரும் அப்போலோ காசு கட்டுபடியாகாது…

  இன்னமும் எத்தனை கிராமங்களில் முதியோர்கள் மருத்துவம் இல்லாமல் சாகிறார்கள் தெரியுமா? அட அது கூட பரவாயில்லை பெற்ற பிள்ளை கூட பாப்பதில்லை..இந்திய அரசாங்கம் வாய் கிழிய பேசும்…

  நாமும் IT, maufacturing, Automotive, Fablab,SEZ என கூறி இந்தியா ஒளிர்கிறது என சொல்வோம்…

  ஆனால் உண்மையில் இருட்டில் ஊசியை தேடிக்கொண்டிருக்கிறோம்…

  Not only mercury lamp can give shining…அகல் விளக்கும் ஒளி கொடுக்கும்.//

  கிராமவாசி,
  கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னாலிருந்ததை வைத்து பார்த்தால் ஓரளவு முன்னேற்ற பாதையிலே செல்வது போன்றே தோன்றவில்லை…

 51. //சேதுக்கரசி said…

  //ஐயாம் தி எஸ்கேப். :))//

  நானும் கொத்ஸ் மாதிரி தான் 🙂 திருக்கோவிலூருக்கு அடுத்த கிராமத்துக்கு நாங்க அடிக்கடி போவோம். அப்புறம், சோமண்டார்குடியில் நண்பர்கள் இருக்காங்க.//

  ஆஹா,
  திருக்கோவிலூர் தாங்க நான் பிறந்த ஊர் 🙂

 52. //செல்வன் said…

  அருமையான கேள்விகள் பாலாஜி

  1.. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறதா இல்லையா? இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.

  விவசாயத்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் பெரியதாக உயராது. மக்கள் நல்வாழ்வு பெற அடுத்த தலைமுறை படித்து வேறு தொழில்களுக்கும் வேலைகளுக்கும் போவது அவசியம்.
  //
  அப்படினா விவசாயமில்லாத சமுதாயத்தை உருவாக்க போகிறோமா?
  இது பல பிரச்சனைகளுக்கே எடுத்து சொல்வது போல் தோன்றவில்லை.

  //
  2. நம்மிடையே இன்று ஏற்பட்டிருக்கும் ஒரு சமமற்ற வளர்ச்சியை (ஊன்பலன்cஎட் Gரொந்த்) எப்படி சமாளிக்க போகிறோம்?

  அனைவருக்கும் ஒரே ஊதியம், சொத்து- இது எந்த அரசிலும் சாத்தியமில்லை

  அனைவருக்கும் கல்வி, அடிப்படை தேவைகள் – இது சாத்தியம்

  அடித்தட்டு மக்களுக்கு முதலில் கல்வி, சாலி, வேலை, உணவு ஆகியவற்றை தர அரசு முயலவேண்டும். அதுதான் உடனடி தேவை
  //
  நான் எல்லோருக்கும் ஒரே சம்பளம் வேணும்னு சொல்லல. மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்யாசத்தை பற்றியே பேசுகிறேன்.

  ஆனால் நீங்க சொன்ன உடனடி தேவைகளை பூர்த்தி செய்தால் மற்றவை தானாக அமையும்…

  //
  3. இதை சமாளிக்க என்னை போன்ற படித்த இளைஞர்களிடம் சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது?

  நான் என்ன செய்தேன் நாட்டுக்கு? என்ற கேள்வியை கேட்க நீங்கள் ஆரம்பித்திருப்பது மிக நல்ல அறிகுறி.வாழ்த்துக்கள்.

  என்றென்றும் அன்புடன் பாலா செய்வது போல் கல்விப்பணி, செந்தழல் ரவி போல் வேலைவாய்ப்பு பணி என பல வழிகள் தேச சேவை செய்வோருக்கு இருக்கின்றன.ஒன்றும் செய்ய இயலாதோர், வசதி அற்றோர் கூட ஒரு மரக்கன்றை நடலாம்.அதை விட பெரிய தேச சேவை எது?
  //
  முடிந்த வரை இதை போல உதவிகள் செய்தே வருகிறேன். பெங்களூரிலிருக்கும் போது அருகிலிருக்கும் அறை நண்பர்களுக்கு தினமும் சொல்லி கொடுத்திருக்கிறேன். அதில் பலர் வேலைக்கும் சென்றிருக்கிறார்கள்.

  //
  5. உண்மையாகவே இந்தியா ஒளிர்கிறதா?

  இல்லை.ஆனால் ஒரு நம்பிக்கை கீற்று இந்திய இளைஞர்களுக்கு தெரிகிறது.அந்த சுடரை அணையாது காத்தால் இன்னும் சில பத்தாண்டுகள் கழித்து இந்தியா உண்மையிலேயே ஒளிரும்//
  இதை ஏற்கிறேன்

 53. வெட்டிப்பயல் நல்ல கேள்விகள்.

  கால்கரி சிவா சொன்னதுடன் சிறிதளவு ஒத்துப் போகிறேன். வளர்ச்சி என்பது இருக்கிறது. இன்று அப்பர் மிடில் கிளாஸ் சமூகத்தில் அதிகரித்து வருகிறது என்பது உண்மை.

  ஆனால் அதே சமயம் இன்று வளர்ச்சி வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களிடையே சென்று முழுமையாக அடையவில்லையோ என்ற கேள்வி மேலும் மேலும் எழுந்து கொண்டே இருக்கிறது.

  8% GDP என்று பேசிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் பட்டினி சாவுகள் அங்கங்கே நடந்து கொண்டே தான் இருக்கிறது.

  எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளை குறை சொல்லி நம்முடைய சமூகக் கடமைகளை மறந்து அவர்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்வது எனக்கு சரியாகப் படவில்லை.

  இன்று Right to information முதல் பல சட்டங்கள் இருந்தும் எத்தனை பேர் இதனை எல்லாம் பயன்படுத்துகிறோம்.

  தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்

  என்று பாரதி ஏன் முழங்கினான் என்றால் ஒரு தனி மனிதனுக்கு உணவு கிடைக்க வைக்க இந்த உலகில் உள்ள மற்ற எல்லா மனிதர்களுக்கும் கடமை இருக்கிறது என்பதை வழியுறுத்தத் தான்.

  இது போன்ற நிலைமை இருக்கிறது என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது இதனை சரி செய்ய நாட்டில் உள்ள எல்லோருக்கும் கடமை இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

  இதெல்லாம் முடியாது என் குடும்பம் என் வீடு என்று இருப்பவர் இருந்து விட்டு போகட்டும்.

  வஞ்சனை பேய்கள் என்பார்..
  இந்த மரத்தில் என்பார்
  அந்த குளத்தில் என்பார்..
  அஞ்சி அஞ்சி சாவார்…
  இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே…

  மற்றவர் அனைவரும் இதனை தன்னுடைய கடமையாக எடுத்து செய்ய வேண்டும்.

 54. நல்ல கேள்வி!

  பதில்? இன்னும் ஒளிரலை.
  நகரங்களில் காணும் முன்னேற்றங்கள் எல்லாம் அரசாங்கத்தால் வந்தது அல்ல. சில தொழிலதிபர்களால் வந்தது.

  நகரங்களில் காணும் முன்னேற்றம் கிராமங்களிலும் வரவைக்க வேண்டியது அரசின் கடமை – இதற்க்கு வேண்டியதை செய்ய புத்திசாலி ஆட்சியாளர்களும், பொதுநலம் மட்டுமே முதன்மையாகக் கொண்ட அதிகாரிகளும் வேண்டும்.
  இந்த ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பெருத்த பஞ்சம் நிலவுகிறது.

  மனதில் ஈரம் இருக்கும், உங்களை போன்றவர்கள் எல்லாம் களத்தில் இறங்கி சின்ன சின்னதாய் ஊருக்கும் ஊர் மக்களுக்கும் நல்லது செய்ய தொடங்கணும்.

  -BNI

 55. சிந்தனையைத் தூண்டும் பதிவு & பின்னூட்டங்கள்.

  —ஏறாம ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் இப்படித்தான் மாறி மாறி போவேன். —

  வித்தியாசமான ஆளுங்க நீங்க… காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பிபி கிடைக்காததால் வருத்தத்தில் ஆழ்ந்தவன் நான். வாழ்க்கையை நின்னு நிதானமா அனுபவிப்பீங்க போல!

  —தமிழ் நாடு அரசு பேருந்து இரண்டு மற்றும் பெங்களூர் KSRTC வண்டி ஒண்ணு இருக்கு. —

  இந்த சொற்றொடர் கொஞ்சம் இடிக்குது. வலையில் படிக்காமல், அச்செடுத்துப் படித்ததால் மேலும் உறுத்தியது… ‘ரெண்டு த.நா. வண்டியும் ஒரு கர்நாடகா வண்டியும் இருக்கு’?

  —நம்ம ராஜ்கிரணோட மாணிக்கம் பாக்கற மாதிரி அத்தனை பேர்—

  🙂 அருமையான உவமை (எனக்கு ஆச்சரியமானதும் கூட… என்னுடைய நீண்ட நாள் கேள்வி: இராஜ்கிரண் திரைப்படங்கள் எப்படி வெற்றி பெற்றது? சோகம், அழுகை, சராசரியான பாடல், என்று சிவாஜியை மிள்பதிவு பார்த்த பயம் என்னை விட்டு அகலவில்லை ;-))

  —சமமற்ற வளர்ச்சியை (Unbalanced Growth) எப்படி சமாளிக்க போகிறோம்?—

  ஆசிரியர்களுக்கு கம்மி சம்பளம்; அதே வாடகை. பல துறைகளிலும் ஏற்றத்தாழ்வு பெரிதாகிக் கொண்டே போகிறது.

  எனக்குத் தோணினது…
  1. கிழக்கு ஐரோப்பியா, சீனா என்று வேலைகள் பரவலானால், இந்தியாவிலும் 9/11-க்கு பின் அமெரிக்காவில் கீழ் விழுந்த பொருளாதாரச் சரிவு நிகழலாம். இதனால் சமச்சீர் நிலைக்கு நெருங்கலாம்.

  2. ஆசிரியர்கள், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுவதால், அவர்களின் சமபளமும் இன்னும் உயரும். (அமெரிக்காவில் ப்ளம்பிங், கார்ப்பெட்ண்டர் போன்றவர்களுக்கும் நம்மைப் போல் அதே ரேட்தான்)

  3. கட்டுமானப் பணியில் இருந்து மாறி, புதிய நுட்பங்களை அறிவொளி இயக்கத்தின் அடுத்த கட்டமாக சொல்லித் தந்து, கம்யூனிடி கல்லூரிகள் உருவாக்கி, வேலை வாய்ப்பைப் பெருக்கலாம்.

 56. \\கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னாலிருந்ததை வைத்து பார்த்தால் ஓரளவு முன்னேற்ற பாதையிலே செல்வது போன்றே தோன்றவில்லை…\\

  தோன்றுகிற்து, ஆனால் அதுவே ஒளிர்கிறது என்று பொருள் கொள்ள கூடாது, முன்னேற்றம், சமச்சீர்அற்ற முன்னேற்றம்..

 57. //1. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறதா இல்லையா? இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.//

  இந்தியா ஒளிர்கிறது என்ற வெற்று கோஷங்களை எழுப்புவதை விட்டு விட்டு இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகளின் மீது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் மான்யங்கள் முறையாக எந்தவித தில்லுமுல்லுமில்லாமல் உண்மையான விவசாயிகளுக்கு விரைவாக சென்றடைய வழிவகைகள் செய்ய வேண்டும். வெறும் பெயரலளவில் இல்லாது நல்ல நோக்கத்தோடு விவசாயிகளிடையே குறைந்த முதலீட்டில் அதிக மகசூல் செய்வதற்கான வழிமுறைகளை போதித்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும். உண்மையான சிறு மற்றும் குறு விவசாயிகள் விளைவித்த பொருளை அரசே நியாயமான விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். அரசிடமிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன், மான்யங்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்வது போன்றவற்றுக்கான அரசின் விதிமுறைகள் நடைமுறைக்கேற்ப்ப தளர்த்தப்பட வேண்டும். இவையெல்லாம் முறையாக கடைபிடிக்கப் பட்டால் விவசாயிகள் ஏன் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு பிழைப்புத்தேடி நகரங்கள்/வெளிநாடு செல்லப் போகிறார்கள்? இவற்றையெல்லாம் செய்வது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கையில் உள்ளது.. செய்வார்களா…???

  //2. நம்மிடையே இன்று ஏற்பட்டிருக்கும் ஒரு சமமற்ற வளர்ச்சியை (Unbalanced Growth) எப்படி சமாளிக்க போகிறோம்?//

  நம் நாட்டை பொறுத்தவரை பணக்காரர்களிடம் பணம் பெருத்துக்கொண்டே இருக்கிறது.. ஆனால், வறுமை கோட்டிற்க்கு கீழே வாழும் மக்களின் நிலையில் மட்டும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. அவர்களை அழுத்தும் விலைவாசி ஏற்றங்கள் மற்றும் வரிச்சுமைகளிலிருந்து அவர்களை காப்பாற்ற அரசு அவர்களை பாதிக்கும் வரிகளை குறைக்க வேண்டும். முதலில் எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும். நம் நாட்டில் பயிற்றுவிக்கும் பாடதிட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். சிறுவயது முதலே செய்முறை பயிற்ச்சியுடன் கூடிய தொழிற்க்கல்வியும் கட்டாயமாக பயிற்றுவிக்கபட வேண்டும். உண்மையாக சுயதொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்கு கடன்கள் எளிதாகவும் விரைவாகவும் கிடைப்பதற்க்கு உண்டான வழிமுறைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமங்கள்தோறும் பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் போல் ஆண்களும் உருவாக்கவேண்டும். பங்களாதேஷில் நடைமுறையில் உள்ளது போல் நம் நாட்டிலும் குறுங்கடன்(Micro Credit) கிடைக்க வழிவகைகள் செய்யவேண்டும். இவையெல்லாம் நடந்தால் நாம் மெல்ல மெல்ல சமச்சீரான வளர்ச்சியை நோக்கி முனேறுவோம்…

  //3. இதை சமாளிக்க என்னை போன்ற படித்த இளைஞர்களிடம் சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது?//

  குறைந்தபட்சம் அடிப்படைக் கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கல்வி போதிக்கலாம், இயன்ற அளவு மரம் நடலாம், இரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம். வசதி வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களை பராமரிக்கும் இல்லங்கள் ஆகியவற்றுக்கு தன்னாலான பொருளுதவியை செய்யலாம். இயன்றால், உண்மையான அக்கரையுடன் சமூக சேவையில் ஈடுபட்டு இந்த சமுதாயம் முன்னேற பாடுபடலாம்…

  //4. முன்பை விட ஓரளவு அதிக வருமானம் கிடைப்பதால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்கிறதா?//

  வெகு நிச்சயமாய் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. குறைந்தபட்சம் மாற்றுத்துணி வைத்துக்கொள்ளும் அளவுக்கு…

  //5. உண்மையாகவே இந்தியா ஒளிர்கிறதா?//

  இப்பொழுது தான் சுடர் விட ஆரம்பித்து இருக்கிறது.. நிச்சயமாக இந்தியா ஒளிரும்!!! நம்பிக்கை தானே வாழ்க்கை.. நம்பிக்கையுடன் காத்திருப்போம்…

  //இந்தியா ஒளிர்கிறதா???//
  பாலாஜி! அருமையான பதிவு!! நியாயமான கேள்விகள்!! வாழ்த்துக்கள்!!!

 58. \\இந்தியா ஒளிர்கிறது என்ற வெற்று கோஷங்களை எழுப்புவதை விட்டு விட்டு இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகளின் மீது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் மான்யங்கள் முறையாக எந்தவித தில்லுமுல்லுமில்லாமல் உண்மையான விவசாயிகளுக்கு விரைவாக சென்றடைய வழிவகைகள் செய்ய வேண்டும்.\\

  மிக சரியாகச் சொன்னீர்கள்.

  இதைப்படித்தால் நிச்சமாக விவசாயிகளின் தற்போதைய நிலை என்ன என்று தெரியவரும்.

  கல்விக்காக ஏங்குகிறார்கள் மக்கள் சிலர் இங்கு.

  இவர்களுக்கு இந்தியா ஒளிரவில்லையே!.

 59. எல்லாரும் மூக்கை சிந்தும் அளவுக்கு மோசம் இல்லையென்றாலும். சமச்சீரில்லாத வளர்ச்சி இருப்பது உண்மைதான்.

  விவசாயத்தை தள்ளி வைத்துவிட்டு எந்த நாடும் முன்னேற முடியாது. முக்கியமாக நம்மைப் போன்ற மக்கள் செல்வத்தில் நிறைந்த நாட்டில் விவசாய வளர்ச்சிதான் தன்னிறைவுக்கான முதல்படி. அதுவே இல்லாமல் மற்ற வளர்ச்சிகளை முன்னிறுத்துவது காற்றில் கோட்டை கட்டுவது போலத்தான்.

  நம்மால் ஆன மட்டும் செய்யக் கூடியது விவசாயத்தில் நேரடியாக முதலீடு செய்யலாம், முடியாத பட்சத்தில் அது தொடர்பான பங்குகளில் முதலீடு செய்யலாம் சிறிய சிறிய அளவுகளில். மற்றோர் மேலும் நிறைய யோசனைகள் கூறுவார்கள் என நினைக்கிறேன்

 60. இப்பத்தான் ஒளிர ஆரமிச்சிருக்கு…கூடிய சீக்கிரம் நல்ல ஒரு நிலைக்கு வரும்னுதான் நினைக்கறேன். இவ்வளவு கீழ்தரமான அரசாங்கங்கள் இருக்கிறதால தான் கொஞம் லேட் ஆகுது. ஆனா இந்த அரசியல் வாதிகள் ஆட்டம் ரொம்ப நாள் நிலைக்காதுனு நம்பறேன்.

 61. என்ன வெட்டி இன்னும் நான் எதிர்பார்த்த கும்மிய காணேம்.

  ஓ.கோ .கொஞ்சம் வெயிட் பண்ணி பாக்குறேன்.

 62. அப்படினா விவசாயமில்லாத சமுதாயத்தை உருவாக்க போகிறோமா?
  இது பல பிரச்சனைகளுக்கே எடுத்து சொல்வது போல் தோன்றவில்லை.//

  விவசாயம் என்பதை ஒரு தொழில் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் சொல்வது எத்தனை உண்மை என விளங்கும்.

  நாட்டின் 60% மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.கிடைக்கும் வருவாய் வயிற்றுக்கும், வாய்க்குமே போதவில்லை எனும்போது மாற்று வழி என்ன என சிந்திக்க வேண்டும்.

  விவசாயிகள் தம் குழந்தைகளை பெரிய படிப்பு படிக்க வைத்து முன்னுக்கு கொண்டுவருவதே இதற்கு தீர்வு. 5 அல்லது 10% ஜனத்தொகை மட்டும் விவசாயத்தில் ஈடுபடும் நிலை உருவானால் விவசாயம் லாபகரமானதாக மாறும்.தற்போது அரை ஏக்ரா, கால் ஏக்ராவில் பயிர் சாகுபடி செய்து குடும்பமே பிழைக்கும் நிலை காணப்படுகிறது.விவசாயம் பொய்த்தால் தற்கொலை, பயிருக்கு விலை கிடைக்காமை ஆகியவை நடக்கின்றன.

  இது விவசாயமைல்லாத சமூகத்தை உருவாக்கும் யோசனை அல்ல. அதிகமான ஜனத்தொகை ஒரு தொழிலை நம்பி இருப்பதை மாற்றும் முயற்சி.

  30 கோடி computer programmers அல்லது 20 கோடி எஞ்சினியர்கள் நாட்டில் இருந்தால் programing துறை என்ன ஆகும், சம்பள விகிதம் எப்படி வீழும் என்பதை யோசித்து பாருங்கள்.விவசாயத்திலும் அதே கதைதான் நடக்கிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: