நெல்லிக்காய் – 1

அருண், கம்ப்யூட்டர் படித்துவிட்டு பெங்களூர் வந்தால் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பெங்களுர் வந்த ஆயிரக்கணக்கான இஞ்சினியரிங் படித்த மாணவர்களுள் ஒருவன்.

வந்து மூன்று மாதங்களாகியும் எந்த கம்பெனியிலுமிருந்தும் அழைப்பு வராத காரணத்தால் விரக்தியின் உச்சத்திலிருந்தான் அருண்.

அன்று ஞாயிற்று கிழமை. எந்நேரமும் அறையில் தங்கி புளித்து போயிருந்ததால் ஊர் சுற்ற நண்பர்கள் அனைவரும் முடிவெடுத்திருந்தனர்.

“டேய் வாரத்துக்கு ஒரு தடவைதான் வெளிய போறோம், அதனால வாரம் ஃபுல்லா மறக்காத மாதிரி கலர் ஃபுல் இடமா போகனும்” இது அருணின் நண்பன் சதீஷ்.

“அப்படினா வழக்கம் போல M.G Road தான்… பெயிண்டிங் பண்ண வசதியா இருக்கும்” இது வசந்த்.

“டேய் நானும் இந்த முறை வரேன்… இந்த சக்கரை போட்ட சாம்பாரை சாப்பிட்டு வாழ்க்கையே வெறுத்து போச்சு… அப்படியே நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கிற மாதிரி கடை ஏதாவதிருந்தா போயி சாப்பிட்டு வருவோம்” அருண்

“டேய் அது சக்கரையில்லை… வெல்லம். அப்பறம் கமெர்ஷியல் ஸ்ட்ரீட்ல மதுரை மெஸ் ஒண்ணு இருக்காம் நம்ம EEE குமார் சொன்னான்.பென்ஸ் கார்ல வரவனே அந்த தட்டு கடைல வாங்கி சாப்பிட்டு போவானாம். நம்ம அப்படியே அதுக்கும் போவோம். ஒகேவா?” இது குமார்

“சரி… அப்படியே MG Road, Brigade Road எல்லாம் சுத்திட்டு சிவாஜி நகர்ல போயி இறங்கினா கமர்ஷியல் ஸ்ட்ரீட் போயிடலாம்”

“சரிடா… எல்லாரும் பஸ் பாஸ் எடுத்துக்கோங்க”

அனைவரும் 201 பஸ் பிடித்து மேயோ ஹால் சென்று இறங்கினார்கள்.
ரெஸிடெண்ஸி ரோடிலிருந்து பிரிகேட் ரோட் சென்று கூட்டத்தோடு கலந்தனர்.

“டேய் அருண், நம்ம வசந்த மட்டும் பாத்துட்டே வா. இந்த ரோடு முடியறதுக்குள்ள 10 பாயிண்டாவது எடுத்துடுவான்” என்றான் சதீஷ்

“அது என்னடா பாயிண்ட்?”

“ஒரு ஒரு பொண்ணையும் இடிச்சா ஒரு பாயிண்ட்”

“டேய் அதெல்லாம் கேவலமான விஷயம். இந்த மாதிரி சீப்பா நடந்துக்கற மாதிரி இருந்தா அவன நாம கூப்பிட்டு வந்திருக்க வேண்டாம்”

அருண் கோபமாக பேசிய வார்த்தைகள் வசந்த் காதில் விழுந்தது.

“இங்க பாருடா நம்ம சாமியார… டேய் என்னை நீங்க கூப்பிட்டு வந்திருக்கீங்களா? நாங்க தான் வழக்கமா வரவங்க. நீ தாண்டி இங்க புது ஆளு. உனக்கு பிடிக்கலைனா நீ போ. நாங்க எல்லாம் இப்படித்தான்”

“டேய் அவன் பண்றது தப்புனு உங்க யாருக்கும் படலையா?”

சதீஷ், “டேய் ஏன் இப்படி டென்ஷன் ஆகற? நம்ம ஊர்லதான் அதெல்லாம் தப்பு. இந்த ஊர்ல இதெல்லாம் சகஜம். பொண்ணுங்களும் ஒண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க”

“சரி. இதுக்கு மேல உங்க கூட ஆர்கியூ பண்ண நான் விரும்பல. நான் உங்க கூட வரல. பாக்கலாம்”

அருண் கோபமாக திரும்பி ரெஸிடெண்சி ரோட் மேயோ ஹால் போய் சேர்ந்தான்.அவனுக்கு இவர்கள் செய்யும் விஷயம் அருவருப்பாக பட்டது. திரும்பவும் ரூம் போகவும் மனமில்லை.
சரி, நாம வந்தது நம்ம ஊர் சாப்பாடு சாப்பிடத்தானே, அதை செய்வோம் என்று சிவாஜி நகர் பஸ் பிடித்தான்.

ஒரு வழியாக கமர்ஷியல் ஸ்ட்ரீடில் இருக்கும் அந்த மதுரை கடையை கண்டுபிடித்தான். சித்திரை மாதத்தில் மாம்பழத்தை சுற்றி நிற்கும் ஈ போல அந்த கடையை சுற்றி கூட்டமிருந்தது.

அந்த கடை அருகில் 4-5 சிறுவர்கள் வருவோர் போவோரிடமெல்லாம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு பனிரெண்டு பதிமூன்று வயதிருக்கும் போல் தோன்றியது.

இந்த வயதில் வேலை செய்து பிழைக்காமல் பிச்சை எடுப்பவர்களை பார்த்ததும் அவனுக்கு கோபம் வந்தது.

ஒரு வழியாக இட்லி வாங்கி சாப்பிட்டான். பத்து ரூபாய்க்கு 4 இட்லி. பரவாயில்லை, சுவையாக இருந்தது. தோசை ஒன்று வாங்கி சாப்பிடலாம் என்று யோசித்தான். ஆனால் அந்த கூட்டத்தில தோசை கிடைப்பது கடினம் என்று அவனுக்கு புரிந்தது.

அங்கே 4-5 பெண்கள் வந்து இட்லி வாங்கி கொண்டிருந்தனர்.
அந்த பிச்சை எடுக்கும் சிறுவர்கள் அந்த பெண்களை குறி வைத்து தங்கள் கடமையை செய்ய, அதில் ஒரு பெண் மட்டும் இரக்கப்பட்டு அந்த நால்வருக்கும் ஆளுக்கு ஒரு இட்லி பாக்கெட் வாங்கி கொடுத்தாள்.

இதை பார்த்ததும் அருணுக்கு மேலும் கோபம் வந்தது. நேராக அந்த பெண்ணை நோக்கி நடந்தான்.

“ஹலோ மேடம். இந்த மாதிரி பசங்களை என்கரேஜ் செய்யாதீங்க. இந்த மாதிரி செஞ்சா இவங்களுக்கு உழைக்கணும்னு எண்ணமே வராது”

“ஹலோ சார். நீங்க அடுத்தவங்களுக்கு உதவலனாலும் உதவறவங்களை தடுக்காதீங்க” கோபமாக சொன்னாள் அந்த பெண்.

அவளுடனிருந்த மத்த பெண்களும் அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.

அதற்கு மேல் அங்கு நிற்க அவனுக்கு பிடிக்கவில்லை. அந்த பெண் மேல் வெறுப்பு வந்தாலும் அவளின் இறக்க குணம் அவனை அறியாமலே அவனுக்கு பிடித்திருந்தது.

ரூமிற்கு செல்லுமுன் இண்டர்நெட் சென்டர் சென்று மின்னஞ்சல் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்த்தான்.

“Congratulations from xxxxx company” என்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அவசரமாக திறந்து பார்த்தான். xxxxx கம்பெனியிலிருந்து அவனுக்கு தேர்வுக்கு அழைப்பு வந்திருந்தது. முதல் சுற்று ஆப்டிடுயுட் தேர்வு, இராண்டாம் சுற்றுக்கு GD, மூன்றாவது சுற்று பர்ஸனல் இண்டர்வியூ.

சந்தோஷமாக ரூமிற்கு வந்தான். ரூமில் 2 நாட்களாக யாருடனும் பேசாமல் தேர்வுக்கு தயாரானான்.

ஒரு வழியாக முதல் சுற்றில் தேர்வானான். இரண்டாம் சுற்று GDக்கு தயாரானான்.

GDக்கு குளிரூட்டப்பட்ட ஒரு கான்ஃபரன்ஸ் அறை தேர்ந்தெடுத்திருந்தார்கள். உள்ளே சென்றான் அருண். அங்கே அன்று சண்டை போட்ட பெண் உட்கார்ந்திருந்ததை அவன் கவனிக்கத்தவறவில்லை…

உள்ளே ஒரு போர் நடக்கவிருந்ததை யாரும் அறியாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்…
(தொடரும்…)

அடுத்த பகுதி

கோழியின் அட்டகாசங்கள் – 6!!!

மக்களே மீண்டும் உங்களுக்காக கோழியின் அட்டகாசங்கள்…

“டேய் மச்சானுக்கு ஆன்சைட் வந்துடுச்சுடா அடுத்த மாசம் கெளம்பறான்” இது OP

“வாவ்!!! கங்கராட்ஸ்டா மச்சான்…”

“பாலாஜி, அதனால கோழி இப்பல இருந்து டயட்ல இருக்கான்…”

“ஏன்டா அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?”

“அது ஒண்ணுமில்லை… அமெரிக்கா போகும் போது 64 கிலோ வெயிட்ட எடுத்துட்ட்டு போகலாம்னு மச்சான் சொன்னான். அதனால இன்னும் 6 கிலோ குறைச்சிட்டா மச்சான் கூட அமெரிக்கால போயி வேலை தேடலாம்னுதான்…”

“டேய் கோழி உண்மையாடா???”

“ஆமான்டா பாலாஜி… எனக்கும் இங்க போர் அடிக்குது… பேசாம அமெரிக்கா போயிடலாம்னு இருக்கேன்… “

“டேய் கோழி, அது பெட்டி படுக்கைக்கு தான்டா… ஆளுங்களை எல்லாம் கூப்பிட்டு போக முடியாது. அப்படியே இருந்தாலும் மச்சான் எதாவது ஃபிகரை பிக்கப் பண்ணிட்டு கூப்பிட்டு போகமா உன்னைய கூப்பிட்டு போவானா?”

“டேய் நெஜமாவாடா??? இது தெரியாம ஊர்ல இருந்து வண்டிக்கூட அனுப்ப சொல்லிட்டேன்”, இது கோழி

“என்னடா சொல்ற?”

“ஆமாண்டா ஊர்ல நம்ம ஸ்பெலண்டர் சும்மாதான் இருக்கு… அங்க போனா யூஸ் ஆகுமில்ல… அங்க பஸ் எல்லாம் காஸ்ட்லியா இருந்தா என்ன பண்றதுனு?”

“சரிடா இந்த வண்டிய எப்படிடா அங்க எடுத்துட்டு போய் ஓட்டுவ?”

“ஏன்டா நான் என்ன லூசா?
நம்பர் பேட்ல இருக்கற “TN” க்கு பதிலா வண்டில “US”னு எழுதிட்டா போச்சு… போலிஸ் எப்படி கண்டுபிடிப்பாங்க?”

ஆஹா ஆரம்பிச்சிட்டான்யா…

அன்பு!!!

Hi Friends,
This is just a forward.. thought of sharing with you…

An 80 year old man was sitting on the sofa in his house along with his 45-year old highly educated son.

Suddenly a crow perched on their window.

The Father asked his Son, “What is this?”
The Son replied “It is a crow”.

After a few minutes, the Father asked his Son the 2nd time, “What is this?”
The Son said “Father, I have just now told you “It’s a crow”.

After a little while, the old Father again asked his Son the 3rd time, “What is this?”
At this time some _expression of irritation was felt in the Son’s tone when he said to his Father with a rebuff.

“It’s a crow, a crow”.

A little after, the Father again asked his Son t he 4th time, “What is this?”
This time the Son shouted at his Father, “Why do you keep asking me the same question again and again,

although I have told you so many times ‘IT IS A CROW’. Are you not able to understand this?”

A little later the Father went to his room and came back with an old tattered diary, which he had maintained

since his Son was born. On opening a page, he asked his Son to read that page. When the son read it, the

following words were written in the diary: –

“Today my little son aged three was sitting with me on the sofa, when a crow was sitting on the window.

My Son asked me 23 times what it was, and I replied to him all 23 times that it was a Crow.

I hugged him lovingly each time h e asked me the same question again and again for 23 times.

I did not at all feel irritated. I rather felt affection for my innocent child”.

While the little child asked him 23 times “What is this”, the Father had felt no irritation

in replying to the same question all 23 times and when today the Father asked his Son the same question

just 4 times, the Son felt irritated and annoyed.

So…

If your parents attain old age, do not repulse them or look at them as a burden, but speak to them

a gracious word, be cool, obedient, humble and kind to them. Be considerate to your parents.

From today say this aloud, “I want to see my parents happy forever. They have cared for me ever since I was

a little child. They have always showered their selfless love on me. They crossed all mountains and valleys
without seeing the storm and heat to make me a person presentable in the society today”.

Say a prayer to God, “I will serve my old parents in the BEST way. I will say all good and kind words

to my dear parents, no matter how they behave. When I am old, I do not want my child to repeat the words

when the crow perches on my window”.

One kind word can warm three winter months (Japanese proverb)

ஸ்ரீ ஸ்ரீயும் நானும்!!!

ஒரு வழியாக படித்து முடித்து வேலை தேடி பெங்களூர் வந்தேன்… ஒரு ஆறு மாதம் பட்ட கஷ்டத்தில் ஒன்றிற்கு இரண்டு கம்பெனியில் வேலை கிடைத்தது.

ஒரு கம்பெனியில் மும்பையில் வேலை. மற்றோன்று பூங்கா (தற்போது டிராபிக் ஜாம்) நகரத்தில்.
நமக்கு ஹிந்தி மாலும் நஹி…
அதனால பெங்களூர்ல இருக்கற வேலைல சேர்ந்தேன்.

எங்க கம்பெனி பக்கத்துலயே நண்பர்களுடன் தங்க ஆரம்பித்தேன். கொஞ்ச நாள்ல பக்கத்து ரூம்ல 2 மளையாளி பசங்க வந்து ரூமெடுத்தாங்க.அதுல ஒருத்தன் நம்ம அந்நியன் ஸ்டைல நீட்டா முடி வெச்சிருந்தான்…அவன் பெயர் அஜய்.
எங்களுக்கு பார்த்த அன்னைக்கே கொஞ்சம் பயம்…

அப்பறம் ஒரு ரெண்டு நாள் கழிச்சி கைல 4-5 புக் எடுத்துட்டு எங்க ரூம்க்கு வந்தான்.உங்களுக்கு இவங்க எல்லாம் தெரியுமானு அந்த புக்கை காட்டினான். என்னன்னு பார்த்தா நம்ம பாரதியார், வ.ஊ.சி, விவேகானதர், காந்தி, குரு கோவிந்த் சிங் இந்த மாதிரி எல்லாரும் தெரிஞ்சவங்கதான்.

எங்களுக்கேவானு சொல்லிட்டு இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்கதான்… பக்கத்து ரூம்லதான் தங்கியிருந்தாங்க இப்பதான் வெளிய போயிருக்காங்கனு கொஞ்சம் நக்கல் அடிச்சோம்.
பையன் கொஞ்சம் டென்ஷனாகிட்டான்… அப்பறம் சமாதனப்படுத்தினோம்

அவந்தான் அந்த சைக்காலஜி கேள்வியெல்லாம் கேட்டவன்… அடிக்கடி அவன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமம் போவான். அவரை பத்தி ரொம்ப பெருமையா பேசுவான்…நாங்களும் கேட்டுக்குவோம்.

அவரை பத்தி அவன் சொன்ன விஷயத்துல எனக்கு பிடிச்சியிருந்தது அந்த மூச்சு பயிற்சி சுதர்சனக்கிரியா தான்.அதுவும் இல்லாமல் அவர் தான் கடவுளின் அவதாரம்னு சொல்லிகிட்டதில்லைனு கேள்விப்பட்டேன்.(அந்த மாதிரி யாராவது சொன்னா நான் பதிலுக்கு எப்பவும்.. இல்லை இல்லை…நாசர்தான் அவதாரம்னு நக்கலடிப்பேன்)

அந்த சமயத்தில் ஒரு நாள் அவர் பெங்களூர் ஆசிரமத்திற்கு வருகிறார், நீங்களும் வரீங்களா அவரை பார்க்கலாம்னு சொன்னான்.எங்க ரூம்ல ஒருத்தவனுக்கு இதில் நம்பிக்கை அதிகம்.. அதுவும் இல்லாம நாள பின்ன அவரை கடவுளாக்கிட்டா நம்மளும் கடவுள பாத்திருக்கோம்னு பந்தா பண்ணலாமினு நானும் கூட போனேன்.

பெங்களூரிலிருந்து கனகபுரா போகிற வழியில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் சில கோடிகளை விழுங்கி அந்த அறிகுறியே தெரியாமல் அமைதியாக அமைந்திருந்தது ஆசிரமம்.

அதில் புதிதாக கட்டியிருந்த மண்டபம் தாமரை வடிவிலிருந்தது. சில ஆயிரக்கனக்கானோர் அமர்ந்து தியானம் செய்யலாம்.அங்கே அமர்ந்து தியானம் செய்தால் மனதை ஒருமுகப்படுத்த வசதியாக இருக்கும் என்றான். அதை ஏனோ நான் முயற்சி செய்து பார்க்கவில்லை. ஆனால் அங்கே ஒரு அமைதி நிலவியதாகவே தோன்றியது.

நாங்கள் (4 பேர், அஜயையும் சேர்த்து) சரியாக 10 மணிக்கெல்லாம் ஆசிரமத்திலிருந்தோம். ரவி சங்கர் சரியாக 12 மணிக்கு வந்தார்.அஜய் அவரிடம் எந்த கேள்வி வேண்டுமென்றாலும் கேள் அதற்கு அவர் பதில் சொல்வார் என்றான்.

எனக்கு பல கேள்விகள் இருந்தன. இந்து மதம் பற்றியும், உருவ வழிப்பாடு பற்றியும், ஒரு கடவுளை விட மற்றவர் பெரியவர் என்ற குழு பிரச்சனைகளும், அசுரர்களுக்கு சிவன் எதுக்கு வரம் கொடுக்கனும் அதை திருமால் எதற்கு அழிக்க வேண்டும், இன்னும் பல…

ஆனால் என் கூட இருந்த நண்பனுக்கு ஒரே கேள்வி… எல்லாரையும் ஒரு ஸ்ரீ சொல்லி தான சொல்றாங்க உங்களை மட்டும் ஏன் 2 “ஸ்ரீ” (ஸ்ரீ ஸ்ரீ) சொல்லி கூப்படறாங்கனு.நான் யோசிச்சி பார்க்கும் போது என் கேள்விய விட அவன் கேள்விதான் ஞாயமா இருந்துச்சு…

ஸ்ரீ ஸ்ரீ வெள்ளை உடை அணிந்து எளிமையாக இருந்தார். அவர் வந்தவுடன் அவரை நம் மக்கள் சுற்றி கொண்டனர்.அவரை அனைவரும் தொட்டு வணங்கினார்கள். (என்னால் ஏற்று கொள்ள முடியாத ஒன்று)

இதைவிட கொடுமை அவரை தொட்டால் ஏதோ சக்தியும், பெரும் அமைதியும் கிடைப்பதை போல் முகத்தில் ஒரு உணர்ச்சியை காட்டினார்கள். என் கூட இருக்குற பையனும் அவரை தொட்டு அதே மாதிரி உணர்ச்சியை முகத்தில் காட்டி கொண்டிருந்தான்.ஏதோ அவன் உடம்பில் சக்தி பாய்வதை போல்.

இப்ப எனக்கு உண்மையாலுமே சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு வேளை நாம்தான் அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டு கொண்டிருக்கோமோனு கூட்டத்தோட சென்று நானும் அவர் கையை தொட்டேன்…என்ன ஆச்சர்யம்… என் உடம்பிலும் சக்தி பாய்ந்தது…

அப்படினு நான் சொல்லுவன்னு எதிர்பார்த்திங்களா?ஒரு மண்ணுமில்லை… எல்லாம் ஓவர் ஆக்ஷன் பண்றானுங்கனு புரிந்துவிட்டது.

சிம்பு நயந்தாராவை கசக்கின மாதிரி அந்த கூட்டம் ஸ்ரீ ஸ்ரீயை நசுக்கி கொண்டிருந்தது. எனக்கு பார்க்கவே பாவமாக இருந்தது.பிறகு பக்தர் கூட்டம் வந்து அவரை காப்பாற்றியது தனிக்கதை. பிறகு மதியம் 1 மணிக்கு ஆசிரமத்தில் நன்றாக சாப்பிட்டோம்.

3 மணிக்கு அவருடைய சொற்பொழிவு. அதில்தான் இந்த கேள்விகளெல்லாம் கேட்க வேண்டுமென்றிருந்தேன்.கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன் கடும் வெயில் இருந்தது. கூட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களில் தூரல் போட்டு பூமியை இதமாக்கியது.ஒரு மாசமா இல்லாத மழை அன்று வந்தது ஆச்சர்யமாகவே இருந்தது.

ஸ்ரீ ஸ்ரீயின் குரல் இனிமையாக இருந்தது. தமிழ், கன்னடம் அவருக்கு தெரிந்திருந்தது. ரொம்ப சாத்வீகமா பேசினார். (திருச்சிக்காரர்தான்)

இறைவனை வெளியே தேடாதே என்று சொன்னார்… இன்னும் பல… சரியாக ஞாபகமில்லை. யாரும் அவரை எந்த கேள்வியும் கேட்கவில்லை… என்னையும் சேர்த்து

அங்கே நான் பார்த்தவரை உணர்ந்தது. ரவி சங்கர் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவுமே நம்மை போலவே தான் இருந்தார். அவரை சுற்றி கொள்ளும் நம் மக்கள் நடந்து கொண்ட விதம்தான் கேவலமாக இருந்தது.

அவர் சொல்லி கொடுக்கும் மூச்சு பயிற்சி அருமையான ஒன்று. அதற்காக அவரை கடவுளாக்குவது முட்டாள் தனத்தின் உச்சம்…

ஆர்குட்டில் அலம்பல்

மக்களே நானும் பொறுமையா இருக்கனும்னு தான் பாக்கறேன்… ஆனா நம்மல விட மாட்டானுங்க போலிருக்கு…

எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க…

1:
U looking Mallika Sheravath
i looking Imran aasmi
Come let us murder the world

(டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட… அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?)

2.
hey annikku Ravi yoda b’day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???
Hi..

(ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?)

3.
Hi!
if u retain this scrap I will understand that you are interested in meand
if u delete this scrap, it means you are dreaming about me.
Now u decide wat to do

(இவரு புத்திசாலியாம்… அப்படியே மடக்கிட்டாராம்)

4.
hi,the numerical value of L+O+V+E=54
but the numerical value ofF+R+I+E+N+S+H+I+P= 108
54+54= 108
LOVE+LOVE= FRIENDSHIP
so friendship is two times greater than love………….
so will u be my friend ?

(டேய் நாயே, அடுத்து We will divide our friendship by 2னு சொல்லுவ)

5.
heyyy gal,Barcelona hav won the champions league finals!
hurraaaayyyy!!!! come on lets be friends….

(டேய் முடிவா நீ என்னடா சொல்ல வர?)

6.
generally i never scrap to unknown ones but this pic just caught my eye…
awesome pic gal.
kalakita po.. lol

(இவரு நல்லவராம்…. ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம்…
மொன்ன நாயி…இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு)

7.
hi niki.. well can i expect a scrap back from ya..
well thought u are a person who can read and write… is it true.,… ?

(டேய் நாயே எழுத படிக்க தெரியாதவங்க எப்படிடா ஆர்குட்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுவாங்க)

8.
If u add me in ur list ill make ur life more pleasant and colorful…watsay?
scrap me bak if u wannna be ma friend!

(ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்)

9.Scrap- Eyy black beauty,how are you so fair???
If you don’t add me its very unfair…

(இவருக்கு கவிதை வேற…)

10.
Nice face, sexy smile, beautiful Eyes, Lustful Lips….Overall stunning effect…
But Miss Do i know you??? Dont embarass me by saying-u dont know me..
ya i know u dont know me.. but who bothers??
come on-add me as friend..
am waiting 2 b ur fan…

(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா… ஒரு தடவை பாட்ஷா பாருங்கடா…)

மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா…

Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)