சூரியன் எஃப்-எம் ஆன்லைனில்!!!

ஊரு விட்டு ஊரு வந்து (நாடு விட்டு நாடு வந்து), ஊரை தொலைச்சிட்டோம்னு வருத்தப்படும் மக்களே… இதோ நமக்காக இப்போ சூரியன் எஃப்.எம் (இன்னும் நிறைய இருக்கு) வின்ஆம்போட (Winamp) இணைந்து வருது…

பழைய Win Amp வெர்ஷனில் வருதானு எனக்கு தெரியல…
புது வெர்ஷன் 5.32ல வருது…
நீங்க செய்ய வேண்டியது இதுதான்…
Winamp download செய்ய இங்கே கிளிக்கவும்
காசு வெச்சிட்டு செலவு பண்றது எப்படினு தெரியாதவங்க காசு கொடுத்து டவுண்லோட் செய்து கொள்ளவும்… நம்மல மாதிரி ஓசில கிடைச்சா போதும்னு நினைக்கறவங்க அப்படியே Free வெர்ஷன் டவுன்லோட் செய்து கொள்ளவும்…

இன்ஸ்டால் செய்த பிறகு, படத்தில் உள்ளது போல் இடது பக்கம் உள்ள மெனுவில் ஆன்லைன் சர்வீஸசில் shoutcast radioவை செலக்ட் செய்யவும். பிறகு Genre “T” தேர்ந்துடுத்து அதில் Tamilஐ கிளிக் செய்யவும்… உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்துடுத்து பாட்டு கேட்டு ரசிக்கலாம்…

பிரிலனா பின்னூட்டமிட்டு கேட்கவும் 😉

26 பதில்கள்

 1. இது சென்னைச் சூரியன் இல்லைங்க.. கொழும்பு சூரியன்

 2. கொழுவி,
  எந்த சூரியனா இருந்தா என்னங்க… பாட்டு கேட்ட்டுட்டு ஜாலியா என்ஜாய் பண்ணுங்க 😉

  (ஆமாம் உலகத்துக்கெல்லாம் ஒரே சூரியன் தானே… Just kidding :-))

 3. template மாறிருச்சா ? முதலில் குளம்பிட்டேன்…

  இருந்தாலும் சூரியன் FM னின் தொடுப்பு கொடுப்பீர்கள் என்றால் winamp தொடுப்பு கொடுத்திருக்கிறீர்கள்!!

  அதே shoutcasts ல் பல தமிழ் ரேடியோ channel கள் உள்ளன.

  இதே விண்டோஸ் மீடியா ப்ளேயரிலும் live 365 ல் சில தமிழ் channel கள் வரும்.

  lankasri.com ல் பல ரேடியோ channel கள் தொகுக்கப் பட்டு இருக்கின்றன.

  அமேரிக்க ஏகாதிபத்திய மொத்த ரூபமான பில்லு கேட்ஸின் விண்டோசை பயன்படுத்துபவர்களுக்குத் தான் பயன் படும்.!!

 4. //Vajra said…

  template மாறிருச்சா ? முதலில் குளம்பிட்டேன்…//

  குழம்பிட்டீங்களா???
  ஹா ஹா ஹா… அதுதான் வேணும் 🙂

  //இருந்தாலும் சூரியன் FM னின் தொடுப்பு கொடுப்பீர்கள் என்றால் winamp தொடுப்பு கொடுத்திருக்கிறீர்கள்!!//

  பொதுவாக நான் பாட்டு கேட்க winampஐயே அதிகம் பயன்படுத்தினேன் அதனால் அதை கொடுப்பதே நல்லது என்று கொடுத்தேன் 🙂

  //இதே விண்டோஸ் மீடியா ப்ளேயரிலும் live 365 ல் சில தமிழ் channel கள் வரும்.

  lankasri.com ல் பல ரேடியோ channel கள் தொகுக்கப் பட்டு இருக்கின்றன.

  அமேரிக்க ஏகாதிபத்திய மொத்த ரூபமான பில்லு கேட்ஸின் விண்டோசை பயன்படுத்துபவர்களுக்குத் தான் பயன் படும்.!!//
  மக்களே இது உங்களுக்குத்தான் பயன்படுத்திக்கோங்க 🙂

 5. மிக்க நன்றி வெட்டிப்பயலாரே. நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும் செஞ்சு பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன். 🙂

 6. //குமரன் said…

  மிக்க நன்றி வெட்டிப்பயலாரே. நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும் செஞ்சு பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன். :-)//

  வாவ்!!! நீங்க ஒருத்தராவது இந்த பதிவால பயனடைஞ்சீங்களே… அதுவரைக்கும் சந்தோஷம்…

 7. //theevu said…

  http://www.sooriyanfm.net/
  //

  தீவு,
  மிக்க நன்றி!!!

  மக்களே பயன்படுத்திகோங்க 😉

 8. தினகரன்.காம் வலை தளத்துக்கு சென்று அங்கு இருந்து ‘மியூசிக்’ என்ற இணைப்பில் சன் குழும சூரியன் எஃப்.எம்.மை (நான்கைந்து நாட்களுக்கு முந்தைய நிகழ்ச்சி) சுமார் 1 மணி நேரத்துக்கு கேட்டு நோகலாம். ஆனா என்னன்னு தெரியல.. அதயும் இப்போ தூக்கிட்டாய்ங்க.

  அதனால என்ன, சன் டி.வி. கிடைக்கிற டிஜிடல் ரிசீவர் இருந்திச்சின்னா அதிலே ரேடியோவில சூரியன் கேட்குதே… (நாடு விட்டு நாடு போன ஆளுங்களுக்கு ஸாரி)

  ம்.. கேளூங்க.. கேளுங்க.. கேட்டுகிட்டே இருங்க.

 9. //மாயவரத்தான்… said…

  தினகரன்.காம் வலை தளத்துக்கு சென்று அங்கு இருந்து ‘மியூசிக்’ என்ற இணைப்பில் சன் குழும சூரியன் எஃப்.எம்.மை (நான்கைந்து நாட்களுக்கு முந்தைய நிகழ்ச்சி) சுமார் 1 மணி நேரத்துக்கு கேட்டு நோகலாம். ஆனா என்னன்னு தெரியல.. அதயும் இப்போ தூக்கிட்டாய்ங்க.

  அதனால என்ன, சன் டி.வி. கிடைக்கிற டிஜிடல் ரிசீவர் இருந்திச்சின்னா அதிலே ரேடியோவில சூரியன் கேட்குதே… (நாடு விட்டு நாடு போன ஆளுங்களுக்கு ஸாரி)

  ம்.. கேளூங்க.. கேளுங்க.. கேட்டுகிட்டே இருங்க.//

  ஏனுங்க பதிவ படிச்சிட்டு சொல்றீங்களா இல்லை தலைப்பை படிச்சிட்டு சொல்றீங்களானே தெரியலையே 😉

 10. டெம்பிளேட்டில் இருந்து,
  ஓரமாய், அழகாய்,
  கூந்தல் பறக்க
  மனங்கள் குளிர
  மெலிதாய்ச் சிரித்த
  மங்கையவள் எங்கே?
  எங்கே? எங்கே?

  யாருக்கு வேண்டும் இந்தச் சூரியன்!
  எமக்குத் தேவை எழில் நிலா!!

  பாலாஜி…எங்கே அந்தப் பாவை???:-)))

 11. //வெட்டிப்பய
  பதிவ படிச்சா அனுபவிக்கனும்… ஆராயக்கூடாது :-)//

  டெம்பளேட் தான் மாறிடுச்சுன்னு பார்த்தா…பதிவு எழுதறவரோட பேரும் மாறிப் போச்சா? கெசெட்ல(Gazette) சேஞ்ச் பண்ணியாச்சா?
  🙂

  சூரியன் எஃப் எம் இப்புடே டிரை சேஸ்தானு

 12. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  டெம்பிளேட்டில் இருந்து,
  ஓரமாய், அழகாய்,
  கூந்தல் பறக்க
  மனங்கள் குளிர
  மெலிதாய்ச் சிரித்த
  மங்கையவள் எங்கே?
  எங்கே? எங்கே?

  யாருக்கு வேண்டும் இந்தச் சூரியன்!
  எமக்குத் தேவை எழில் நிலா!!

  பாலாஜி…எங்கே அந்தப் பாவை???:-)))//

  KRS,
  Thx giving day ஆஃபர்ல நாம மட்டும் புது துணி வாங்கினா போதுமா? அதனாலத்தான் நம்ம வலைப்பதிவுக்கும் புது சொக்கா போட்டாச்சு 😉

  அந்த பாவை இவன் ஓவரா லவ் ஸ்டோரி எழுதறானு ஓடி பொச்சி 😉

 13. //கைப்புள்ள said…

  //வெட்டிப்பய
  பதிவ படிச்சா அனுபவிக்கனும்… ஆராயக்கூடாது :-)//

  டெம்பளேட் தான் மாறிடுச்சுன்னு பார்த்தா…பதிவு எழுதறவரோட பேரும் மாறிப் போச்சா? கெசெட்ல(Gazette) சேஞ்ச் பண்ணியாச்சா?
  🙂
  //
  தல பேர் மாத்தல… அதே தான் இருக்கு.. இப்புடு சூடண்டி 😉

  //
  சூரியன் எஃப் எம் இப்புடே டிரை சேஸ்தானு///

  டிரை செஸ்தி பாகவுண்டினா நா தீர சொப்பண்டி 😉

 14. //பிரிலனா பின்னூட்டமிட்டு கேட்கவும் ;)//

  ஒண்ணுமே பிரில!

  இதுல மிர்ச்சி வருமா மச்சி?

 15. கேட்கிறொம் கேட்கிறோம் ஏட்ட பிறகு சொல்கிறொம்.
  நன்றி வெட்டிப் பயல்.

  ஊரு விட்டு ஊரு வந்து பாட்டு கீட்டுக் கேக்கணுங்க.:-)

 16. //Divya said…

  சூரியன் FM ல் பாட்டு கேட்டுட்டு வந்து பின்னூட்டம் ஓகே வா??//

  ஓகே…
  இன்னும் கேக்கலையா? :-))

 17. //தம்பி said…

  //பிரிலனா பின்னூட்டமிட்டு கேட்கவும் ;)//

  ஒண்ணுமே பிரில!

  இதுல மிர்ச்சி வருமா மச்சி?//

  ஒண்ணுமே பிரிலனா

  http://www.sooriyanfm.net/

  இந்த சைட்ல போய் பாட்டு கேளு :-))

  மிர்ச்சி வருமானு தெரியலைப்பா!!!

  நமக்கு தெரிஞ்சதே ரேடியோ சிட்டிதான் :-))

 18. //வல்லிசிம்ஹன் said…

  கேட்கிறொம் கேட்கிறோம் ஏட்ட பிறகு சொல்கிறொம்.
  நன்றி வெட்டிப் பயல்.

  ஊரு விட்டு ஊரு வந்து பாட்டு கீட்டுக் கேக்கணுங்க.:-)//

  கேளுங்க் கேளுங்க…
  கேட்ட பிறகு சொல்லுங்க 😉

 19. ஆகா.. கொழுவி – டைப் பண்ணா.. கிழவின்னே வந்துகிட்டிருக்கு:-)) – நல்ல வேள சொன்னீங்க. இல்லாட்டி வெட்டியா டவுண்லோடு பண்ணி பாத்திருப்பேன்.
  //
  (ஆமாம் உலகத்துக்கெல்லாம் ஒரே சூரியன் தானே… Just kidding :-))
  //
  ஆனாலும், செம சென்ஸுயா உமக்கு!

 20. //girish said…

  ஆகா.. கொழுவி – டைப் பண்ணா.. கிழவின்னே வந்துகிட்டிருக்கு:-)) – நல்ல வேள சொன்னீங்க. இல்லாட்டி வெட்டியா டவுண்லோடு பண்ணி பாத்திருப்பேன்.

  ஏனுங்க கிரிஷ்..கொழும்புலயும் நம்மல விட அம்சமான தமிழ்ல பேசி அதே விஜய், அஜித், சூர்யா பாட்டுத்தாங்க போடறாங்க…

  முதல்ல ஒரு பத்து நிமிஷம் கேட்டுட்டு யோசிங்க :-))

  //
  //
  (ஆமாம் உலகத்துக்கெல்லாம் ஒரே சூரியன் தானே… Just kidding :-))
  //
  ஆனாலும், செம சென்ஸுயா உமக்கு! //
  ஹி ஹி ஹி…
  மிக்க நன்றி 😉

 21. // Anonymous said…

  Thank you for your install procedures using Winamp to play Suriyan FM.

  We really enjoy listening Tamil songs.

  Appreciate your post on this.

  Radha //

  Hi Radha,
  Thx for the comment…

 22. நான் இப்பல்லாம் ஷகிரா பாட்டு மட்டும்தான் கேட்கறது ;)))))

 23. //கப்பி பய said…

  நான் இப்பல்லாம் ஷகிரா பாட்டு மட்டும்தான் கேட்கறது ;))))) //

  எத்தனை நாள்… இன்னும் எத்தனை நாள் இந்த ஆட்டம்னு கேக்கறேன் 🙂

 24. Simply Superb!!!!!!!
  Keep it up.
  If possible you can write article like this

 25. Hi Love sorriyan So much……………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: