என்னாது… இலவசம்.. இல்லையா???

வழக்கம் போல் அலுவகத்திலிருந்து வீட்டிற்கு சென்றவுடன் என் சொந்த உபயோகத்திற்கான மின்னஞ்சலை பார்க்கலாம் என்று என் மடிக்கணினியை
திறந்து பார்த்தேன்.

யாரென்று தெரியாத ஒருவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல். அதை திறந்தவுடனே அமெரிக்க அரசிடமிருந்து வந்திருப்பது புரிந்தது. அவசரமாக படிக்க ஆரம்பித்தேன்.

அதன் தமிழாக்கமிங்கே (அப்பப்ப ஆங்கிலமுன் வரும் கண்டுக்காதீங்க, அப்படியே பிராக்கெட்ல இருக்கறது நம்ம கமெண்ட்)

திரு.பாலாஜி மனோகரன், (மரியாத தெரிஞ்ச பசங்க)
இது முனைவர். ஜோனதன் பி போஸ்டல் அவர்களின் வழக்கின் வெற்றியை முன்னிறுத்தி அனுப்பப்பட்டுள்ளது. (எவனோ ஜெயிச்சதுக்கு எனக்கு எதுக்குடா மெயில் அனுப்பறீங்க)

முனைவர். ஜோனதன் பி போஸ்டல் அவர்கள் வலையுலகின் தந்தை என்பது தாங்களறிந்ததே (அட நாயிங்களா? இது எனக்கு எப்படா தெரியும்?).
பல ஆண்டுகளாக அவர் ஆராய்ந்து கண்டுபிடித்த வலையுலகை மக்கள் இலவசமாக பயன்படுத்துவதால் பொறுப்பற்ற தன்மையுடன்
பயன்படுத்துவதாகவும், ஆகவே அவர்கள் பயன்படுத்துவதற்கு அரசிற்கு பணம் செலுத்த வேண்டுமென்றும் அதில் ஒரு சிறு பகுதியை தங்களுக்கு வழங்க வேண்டுமென்றும் அவர் வாரிசுகள் இட்ட வழக்கின் நியாயத்தை உணர்ந்து நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமான வழக்கை வழங்கியதும் தாங்களறிந்ததே. (உங்களுக்கு காசு வருதுன்னவுடனே அதுல நியாயம் இருக்குனு சொல்லிட்டேங்களேடா… சரி அதுக்கு எதுக்குடா எனக்கு மெயில் அனுப்பறீங்க?)

இதுவரை நீங்கள் வலையுலகை எவ்வாறு உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள் என்று 6 மாதங்களாக நாங்கள் செய்த ஆராய்ச்சியின் மூலம் நீங்கள்
எங்களுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்ற கணக்கு தயாராகி வரும் நிலையில் அதை பற்றிய ஒரு முன்னோட்டத்திற்காகவே இந்த
மின்னஞ்சல்.(டேய் வெளக்கெண்ணெய்ங்களா… இத முன்னாடியே சொல்லியிருக்கலாமே. இப்ப வந்து சொன்னா நான் என்ன பண்ணுவேன்)

நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் 10 ரூபாய்.(இது தெரியாம கண்ட கண்ட நாயிக்கெல்லாம் மெயில் அனுப்பிட்டனே… ஆண்டவா நான் என்ன பண்ணுவேன்)

உங்களுக்கு வந்த மின்னஞ்சலுக்கு 5 ரூபாய். (டேய் எவனோ எனக்கு மெயில் அனுப்பனதுக்கு நான் என்னடா பண்ணுவேன்… இதுல வேற அப்பப்ப லேப்-டாப் ஃபிரியா வாங்கிக்கோங்க, $500க்கு கிஃப்ட் வவுச்சர் வாங்கிக்கோங்க, I-Pod still Pending இப்படி வந்த மெயிலுக்கு எல்லாம் நான் என்னடா பண்ணுவேன்)

ஆர்குட்டில் நீங்கள் செய்த ஒவ்வொரு ஸ்க்ரேப்புக்கும் 5 ரூபாய். (சரி… இது வரைக்கும் வாங்கன சம்பளம் அவுட்)

உங்களுக்கு வந்த ஸ்க்ரேப்புக்கு 3 ரூபாய்… (சரி ICICIல பர்சனல் லோன் எப்படியும் 8% கொடுப்பானுங்க. பாத்துக்கலாம்)

நீங்கள் ப்ளாகரில் அக்கவுண்ட் வைத்திருப்பவர் என தெரியவந்துள்ளது. (அடப்பாவிகளா அது ஒரு தப்பா?)

நீங்கள் போட்ட பதிவொன்றுக்கு 10 ரூபாய். (ஆஹா நல்ல வேலை நம்ம இன்னும் 100 கூட போடலை… )

அதுவே இவர் பார்வைக்கு, அவர் பார்வைக்கு என்று இட்டிருந்தால் 20 ரூபாய் (என்னடா சொல்றீங்க. நீங்களும் தமிழ்மணம் படிச்சிருக்கீங்களா?)

உங்களுக்கு மற்றவர்கள் இட்ட பின்னூட்டம் ஒவ்வொன்றுக்கும் 3 ரூபாய் (ஆஹா… சந்தோஷப்பட்டதெல்லாம் வீணா போச்சே. அடப்பாவமே இது
தெரிஞ்சிருந்தா எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ணிருப்பேனே)

நீங்கள் உங்கள் பதிவில் நன்றி சொல்லி இட்ட பின்னூட்டங்களுக்கும், பதில் பின்னூட்டங்கள் ஒவ்வோன்றுக்கும் 2 ரூபாய். (நன்றி சொல்றது தப்பா?
இறைவா இது என்ன சோதனை. எல்லாரும் செஞ்சதையே தானே நானும் செஞ்சேன். இது ஒரு பாவமா?)

மற்றவர் பதிவில் உங்கள் பெயரில் நீங்கள் இட்ட பின்னூட்டங்களுக்கு 1 ரூபாய். (பரவாயில்லைப்பா. ஓரளவுக்கு நல்லவனாத்தான் இருக்கானுங்க)

மற்றவர் பதிவில் அனானியாக அவரை புகழ்ந்து இட்ட பின்னூட்டங்களுக்கு 3 ரூபாய் (டேய் நீங்களும் விவரமாத்தான் இருக்கீங்க)

மற்றவர் பதிவில் அனானியாக அவரை திட்டி இட்ட பின்னூட்டங்களுக்கு 10 ரூபாய் (இப்பதாண்டா உங்களை நல்லவன்னு சொன்னேன் அது தப்பா?)

உங்கள் பதிவிலே உங்களை புகழ்ந்து அனானியாக பின்னூட்டமிட்டிருந்தால் 20 ரூபாய் (ஆஹா… நம்மல புகழ்ந்து நாலு வார்த்தை போட்டா தப்பா?
இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்டா)

தமிழ்மணத்தில் வருவதற்காக சும்மா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தால் 5 ரூபாய்(டேய் இதெல்லாம் அநியாயம்டா. உங்களை எதிர்த்து கேக்க ஆளே
இல்லையா?)

100 பின்னூட்டத்திற்கு மேல் வருவதற்கு கயமைத்தனம் செய்திருந்தால் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் 10 ரூபாய்… (ஆடிய ஆட்டமென்ன
பாடல் கண்முன்னே வந்தது… தலைவா கொத்ஸ் நீ எங்கிருக்கிறாய்? உன்னிடம் பாடம் பயின்ற எனக்கா இந்த சோதனை?)

அக்கவுண்ட் இல்லாதவர்கள் அனானியாக இட்ட பின்னூட்டங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 1 ரூபாய். (எனக்கு ஏன்டா இதெல்லாம்)

மற்றவர் பெயரில் பின்னூட்டமிட்டிருந்தால் (அதர் ஆப்ஷனில்) 50 ரூபாய். (50 ரொம்ப கம்மி. 100 ரூபாயாக்க சொல்லி ஒரு மெயில் அனுப்பனும். நமக்கு கவலையில்லை :-))

ஒரு முக்கியமான விஷயம் நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் இந்த எண்களை அப்படியே அமெரிக்க டாலருக்கு மாற்றி கொள்ளவும். (என்னது
இதயத்துடிப்பு குறைஞ்சிக்கிட்டே வர மாதிரி இருக்கு… ஏண்டா ஒரு பிளாக் ஆரம்பிச்சது தப்பாடா. எல்லாரும் பண்ணதையே தான்டா நானும் பண்ணேன். இது தெரிஞ்சா ஊரே கை கொட்டி சிரிக்குமே.

நாதாரிங்களா… ஆறு மாசத்துக்கு முன்னாடி அடக்கமாத்தாண்டா இருந்தேன் அப்பவே சொல்லியிருக்க கூடாதா? இப்படி நாடு விட்டு நாடு வந்து
சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிட்டேனே!!!

நல்ல வேலை அனானியா ஆட்டம் போடலை. இருந்தாலும் யார் யார் சொத்தெல்லாம் பறிமுதல் ஆகப்போகுதோ தெரியலையே! அதையும் எவனாவது பதிவுல போடுவான். தப்பி தவறி கூட பின்னூட்டம் போட்ற கூடாது. முடியுமானு தெரியலையே)

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். (எப்படிடா உங்களால மட்டும் ஆப்படிச்சிட்டு அருள் வாக்கு சொல்ல முடியுது?)

– அமெரிக்கன் கவர்ன்மெண்ட்

மக்களே! நீங்களே இது நியாயமானு சொல்லுங்க. ஊரவிட்டு வந்து தனியா இருக்கற ஒரு அப்பாவி பையன் பொழுத போக்கறதுக்காக
விளையாட்டுத்தனமா எழுதறது தப்பா? இவனுங்க கேக்கற காசுக்கு நான் வாழ்க்கை முழுசா சம்பாதிச்சாலும் பத்தாதே! பேசாம யாருக்கும்
சொல்லிக்காம ஊரு பக்கம் வந்து விவசாயம் பாக்கலாம்னு யோசிக்கிறேன்!

ஒரு பத்து மணிக்கா இந்தியால இருந்து போன் வந்துது.

“ஹலோ பாலாஜி ஹியர்”

“டேய் பாலாஜி, நான் கோழி பேசறேன்டா”

“டேய் கோழி எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன்டா… அப்பறம் ஊருக்கு வர போறனு மச்சான் சொல்லிட்டு இருந்தான்”

“ஆமாண்டா கோழி… நம்ம எழுதின அந்த ப்ளாகால சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிட்டேண்டா. சரி அதெல்லாம் உனக்கு புரியாது. ரூம்ல
எல்லாம் எப்படி இருக்கீங்க?”

“நாங்க எல்லாம் நல்லா இருக்கோம். அப்பறம் அந்த லிஸ்ட்ல நன்றி சொல்லி போட்ட பதிவுக்கு 5 ரூபாய்னு ஒரு கேட்டகிரிய சேர்த்துக்கோ”

“டேய் கோழி என்னடா சொல்ற? உனக்கு எப்படி அதெல்லாம் தெரியும்”

“ஏன்டா அனுப்புனவுக்கு தெரியாதா உள்ள என்ன இருக்குதுனு”

“அடப்பாவி உன் வேலை தானா அது?”

“ஆமாம் மெயில்ல IP addressஐ வெச்சி இந்தியால இருந்து வந்திருக்குனு நீ கண்டுபிடிக்க கூடாதுனுதான் யூ.எஸ் சர்வருக்கு கனெக்ட் பண்ணி
மெயில் அனுப்பினேன்”

“அது சரி… நான் அதெல்லாம் பாக்கவே இல்லையே! ஏன்டா கோழி இப்படி பண்ண?”

“நீ மட்டும் என்னய எப்பவும் லந்து பண்ணுவ. நான் பண்ண கூடாதா?”

“ஏன்டா கொஞ்சமிருந்தா என் இதயமே நின்னுருக்குமே… இனிமே உன்னைய லந்து பண்ண மாட்டேன் தெய்வமே”

“அது… போனா போவுது எப்பவும் போல எதையாவது லூசுத்தனமா எழுதிட்டு இரு. நான் ஆர்குட்ல வரேன்”

“ஆர்குட்டா? சரி வா”

ஆஹா நல்ல வேலை அப்ப எல்லாமே இலவசம் தான்….இல்லைனா?

82 பதில்கள்

 1. Superb :))

 2. நல்ல நகைச்சுவைப் பதிவு நண்பா!:)))
  அதிலும் ஒவ்வொரு வரிக்கும் தாங்கள் போட்டிருந்த கமெண்டுகள் அருமை!

  நண்பர் கோழிக்கும் வாழ்த்துக்கள்!

  அன்புடன்…
  சரவணன்.

 3. கோழி நல்ல விவரம்தான்:-)))))

  இப்ப எனக்கு இந்தப் பின்னூட்டத்துக்கு நீங்க தரவேண்டியது 100$ மட்டுமே:-)

 4. super comedy! :))

 5. //அனுசுயா said…
  Superb :)) //
  மிக்க நன்றி!!! முதல் கமெண்ட்க்கு நன்றி!!!

 6. //தம்பி said…
  super comedy! :)) //
  தம்பி,
  காசெல்லாம் இல்லை சும்மாதான் பின்னூட்டம் பெருசாவே போடலாம் தப்பில்லை 🙂

 7. //உங்கள் நண்பன் said…
  நல்ல நகைச்சுவைப் பதிவு நண்பா!:)))
  அதிலும் ஒவ்வொரு வரிக்கும் தாங்கள் போட்டிருந்த கமெண்டுகள் அருமை!

  நண்பர் கோழிக்கும் வாழ்த்துக்கள்!

  அன்புடன்…
  சரவணன். ///

  நண்பா சரவணா,
  மிக்க நன்றி!!!

  கோழிக்கு சொல்லிடறேன் 😉

 8. //துளசி கோபால் said…
  கோழி நல்ல விவரம்தான்:-)))))
  //
  ஆமாம் டீச்சர்… கொஞ்சம் இருந்தா இந்த வலையுலகம் ஒரு நல்ல பதிவரை இழந்திருக்கும்.
  இல்லையா??? 😉

  //
  இப்ப எனக்கு இந்தப் பின்னூட்டத்துக்கு நீங்க தரவேண்டியது 100$ மட்டுமே:-)//
  டீச்சர்… இது என்ன நட்சத்திரம் பின்னூட்டம் போட்டால் $100??? டூ மச்!!!

 9. //மற்றவர் பெயரில் பின்னூட்டமிட்டிருந்தால் (அதர் ஆப்ஷனில்) 50 ரூபாய். (50 ரொம்ப கம்மி. 100 ரூபாயாக்க சொல்லி ஒரு மெயில் அனுப்பனும். நமக்கு கவலையில்லை :-))//

  இதுல ட்ரிபிள் மீனிங் எதுவும் இல்லயே…

  அதான பாத்தேன்!

 10. அல்டிமேட்… போட்டிக்கு கோர்த்து விடுங்க…

 11. //இதுல ட்ரிபிள் மீனிங் எதுவும் இல்லயே…

  அதான பாத்தேன்! //

  எனக்கு தெரியாதுப்பா…

  நான் பொதுவாத்தான் சொன்னேன் 😉

 12. //Udhayakumar said…
  அல்டிமேட்… போட்டிக்கு கோர்த்து விடுங்க… //

  மிக்க நன்றி!!!

  போட்டிக்குத்தான் உதய் 😉

 13. கொக்கரக்கோ கும்மாங்கோ 🙂

 14. அதானே பார்த்தேன்! பதிவர்களை வச்சு காமெடி – கீமடி பண்ணாமிருக்க முடியுமா!

  இருந்தாலும், இந்த மாதிரியெல்லாம் சொல்லாதீங்க! அவிக கேட்ற போறாக!
  அப்புறம் நிசமாகவே மெயில் வந்தாலும் வரும் சொல்லிட்டேன்.
  🙂

 15. பாலாஜி,
  ஹஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா…………………..
  விழுந்து விழுந்து
  சிரிச்சு சிரிச்சேன்.
  இதுக்கு பேர் தான் கோழி ஆப்பு (சூப்)
  னு சொல்லுவாங்கலா?

 16. கலக்கிட போ …. சும்மா சுப்பர் அப்பு

 17. //இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
  (எப்படிடா உங்களால மட்டும் ஆப்படிச்சிட்டு அருள் வாக்கு சொல்ல முடியுது?)
  //

  :-))))
  இது நான் மிக மிக ரசித்தது!

  பாலாஜி, இதை ஆங்கிலத்தில் கொஞ்சம் மொழி பெயர்த்து தாங்க ப்ளீஸ்!
  இங்க இது மாதிரி ரொம்ப ராவடி பண்ணிட்டுக், கடைசியிலே “Have a good day” என்று சொல்லி முடிக்கும் சில பல “கஷ்டமர்” சர்வீஸ் ஆளூங்க கிட்ட எடுத்து விட வசதியா இருக்கும்! :-))

  பாலாஜி
  உங்கள் “நகை”ச்சுவை இலவசம்!
  எங்கள் சிரிப்பும் இலவசம்!!
  போட்டியும் இலவசம்; பரிசும் இலவசம்!!

 18. நல்ல கற்பனை..சிரிச்சேன் ரசிச்சேன்.

 19. வயிற்றில் பால வார்த்தய்யா?

  சிறிது நேரம் ஆட வச்சுட்டியே….

 20. கலக்கல் வெட்டி!!!

  போட்டியில தூக்கிறலாம் 🙂

 21. ஹி ஹி சூப்பரா இருக்குப்பா பாலாஜி!!!!

 22. //கார்த்திக் பிரபு said…

  நல்ல கற்பனை..சிரிச்சேன் ரசிச்சேன். //
  மிக்க நன்றி கா.பி 😉

 23. //பாலாஜி, இதை ஆங்கிலத்தில் கொஞ்சம் மொழி பெயர்த்து தாங்க ப்ளீஸ்!
  இங்க இது மாதிரி ரொம்ப ராவடி பண்ணிட்டுக், கடைசியிலே “Have a good day” என்று சொல்லி முடிக்கும் சில பல “கஷ்டமர்” சர்வீஸ் ஆளூங்க கிட்ட எடுத்து விட வசதியா இருக்கும்! :-))
  //
  இந்த அளவுக்கு நமக்கு நக்கலா ஆங்கிலத்துல மொழி பெயர்க்க வராதே!!! நீங்களே பண்ணிடுங்க…

  //பாலாஜி
  உங்கள் “நகை”ச்சுவை இலவசம்!
  எங்கள் சிரிப்பும் இலவசம்!!
  போட்டியும் இலவசம்; பரிசும் இலவசம்!!//
  அதுக்குத்தான் இலவசம்னு கொடுத்திருக்கார் நம்ம லக்கி 😉

 24. //நாகை சிவா said…

  வயிற்றில் பால வார்த்தய்யா?

  சிறிது நேரம் ஆட வச்சுட்டியே…. //

  புலி,
  நானே ஆடிப்போயிதான் இருந்தேன்…

  கூண்டோட கைலாசம்தான் 😉

  இதுல நட்சத்திரமா இருந்த வாரத்துல ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் $100 😉

 25. //தேவ் | Dev said…

  கொக்கரக்கோ கும்மாங்கோ 🙂 //
  🙂

  //TAMIZI said…

  அதானே பார்த்தேன்! பதிவர்களை வச்சு காமெடி – கீமடி பண்ணாமிருக்க முடியுமா!
  //
  நம்மல நாமலே பண்ணலைனா வேற யார் பண்ணுவா 😉

  //
  இருந்தாலும், இந்த மாதிரியெல்லாம் சொல்லாதீங்க! அவிக கேட்ற போறாக!
  அப்புறம் நிசமாகவே மெயில் வந்தாலும் வரும் சொல்லிட்டேன்.
  🙂 //
  ஆஹா… வயித்துல புளிய கரைக்கறீங்களே 😉

 26. // sumathi.s. said…

  பாலாஜி,
  ஹஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா…………………..
  விழுந்து விழுந்து
  சிரிச்சு சிரிச்சேன்.//
  அடிகிடி படலை இல்ல 😉

  //
  இதுக்கு பேர் தான் கோழி ஆப்பு (சூப்)
  னு சொல்லுவாங்கலா? //
  அப்படித்தான் நினைக்கிறேன் 😉

 27. //சுந்தர் said…

  கலக்கிட போ …. சும்மா சுப்பர் அப்பு //
  மிக்க நன்றி சுந்தர் 🙂

 28. //கப்பி பய said…

  கலக்கல் வெட்டி!!!

  போட்டியில தூக்கிறலாம் 🙂 //

  //ராம் said…

  ஹி ஹி சூப்பரா இருக்குப்பா பாலாஜி!!!! //

  கப்பி/ராம்,
  மிக்க நன்றி!!!

 29. Nalla comedy, nalla vaelai thappiteergal 😉

 30. தலைவா வெட்டி…என்ன இது..

  கோழி நேரடியாகவே ஆப்பு அடிக்க ஆரம்பிச்சிட்டாரா?

 31. // C.M.HANIFF said…

  Nalla comedy, nalla vaelai thappiteergal 😉 //

  ஆமாம் சாமி… எப்படியோ தப்பிச்சிட்டேன் 😉

 32. //Kattuvasi said…

  தலைவா வெட்டி…என்ன இது..

  கோழி நேரடியாகவே ஆப்பு அடிக்க ஆரம்பிச்சிட்டாரா? //

  ஆமாம்பா… என்ன பண்றது?

  எப்படியோ அது உண்மையில்லை 🙂

 33. //கப்பி/ராம்,//

  அடபாவமே இது என்னாப்பா புது பட்டமா இருக்கு….. 😉

 34. //ராம் said…

  //கப்பி/ராம்,//

  அடபாவமே இது என்னாப்பா புது பட்டமா இருக்கு….. 😉 //
  ஒரு வரில கமெண்ட் போட்டா அப்படித்தான் 😉

 35. //ஒரு வரில கமெண்ட் போட்டா அப்படித்தான் 😉 //

  ஹி ஹி இல்லேப்பா…. எல்லாத்தேயும் படிச்சி பார்த்துட்டு எதே Tag பண்ணுறதுன்னு ஓரே கன்பியுசன். அதானாலேதான் கொஞ்சமா அதாவது ஒரே வரிலே போயிருச்சு….. 😉

 36. //ராம் said…

  //ஒரு வரில கமெண்ட் போட்டா அப்படித்தான் 😉 //

  ஹி ஹி இல்லேப்பா…. எல்லாத்தேயும் படிச்சி பார்த்துட்டு எதே Tag பண்ணுறதுன்னு ஓரே கன்பியுசன். அதானாலேதான் கொஞ்சமா அதாவது ஒரே வரிலே போயிருச்சு….. 😉 //

  ஹிம்… டேக் பண்றதுக்கு எதுவுமே நல்லா இல்லையா 😦

 37. //ஹிம்… டேக் பண்றதுக்கு எதுவுமே நல்லா இல்லையா 😦 //

  யாரு சொன்னா…எல்லாமே சூப்பரப்பு!!!

  Don’t Feel Bad!!(ஹி ஹி அப்பப்போ நமக்கும் இங்கிலிபிசு தெரியிமின்னு காட்டிக்கோவோம்.)

 38. //யாரு சொன்னா…எல்லாமே சூப்பரப்பு!!!
  //
  மிக்க நன்றி!!!

  //
  Don’t Feel Bad!!(ஹி ஹி அப்பப்போ நமக்கும் இங்கிலிபிசு தெரியிமின்னு காட்டிக்கோவோம்.)//
  துறை இங்கிலிபீஸெல்லாம் பேசுது 🙂

 39. சூப்பர் லந்து வெட்டி. செம ரவுசு !!!

  வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙂

  //
  ஆப்படிச்சிட்டு அருள் வாக்கு சொல்ல முடியுது
  //
  சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிட்டேனே!!!
  //

  அல்டிமேட் !!!
  விழுந்து விழுந்து சிரிச்சேன் 🙂

 40. //Arunkumar said…

  சூப்பர் லந்து வெட்டி. செம ரவுசு !!!

  வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙂

  //
  ஆப்படிச்சிட்டு அருள் வாக்கு சொல்ல முடியுது
  //
  சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிட்டேனே!!!
  //

  அல்டிமேட் !!!
  விழுந்து விழுந்து சிரிச்சேன் 🙂 //

  மிக்க நன்றி அருண்…

 41. //”நீ மட்டும் என்னய எப்பவும் லந்து பண்ணுவ. நான் பண்ண கூடாதா?”//

  தலைவா! கோழி! கலக்கிப் புட்டீங்க. வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டுன்னு நிரூபிச்சிட்டீங்க. TN ரெஜிஸ்ட்ரேஷன் வண்டியை TNல ஓட்டிட்டு கமுக்கமா இருந்தாலும் US பையனுக்கு வெச்சீங்களே ஆப்பு? சூப்பர் தல.

  இவண்
  கைப்புள்ள
  அகில உலக கோழி ரசிகர் மன்ற கொ.ப.செ.
  ஆமதாபாளையம்

 42. //தலைவா! கோழி! கலக்கிப் புட்டீங்க. வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டுன்னு நிரூபிச்சிட்டீங்க. TN ரெஜிஸ்ட்ரேஷன் வண்டியை TNல ஓட்டிட்டு கமுக்கமா இருந்தாலும் US பையனுக்கு வெச்சீங்களே ஆப்பு? சூப்பர் தல.//

  ஏன் இந்த இரத்த வெறி???

  நம்மல ஒருத்தவன் ஏமாத்தனதுல அவ்வளவு ஆனந்தம்…

  சரி இந்த முறையாவது 2 மாசம் கழிச்சு வராம இப்பவே வந்தீங்களே…

  இது தேன்கூடு போட்டிக்கு அனுப்பியாச்சு… பிடிச்சிருந்தா எல்லாரும் ஓட்டு போடுங்க.. திரும்ப திரும்ப சொல்ல முடியாது 🙂

 43. அட… அரட்டை, விகடன்/குமுதம் படிப்பது எல்லாம் இலவசமா!!!

  நன்றாக இருக்கிறது : )))

 44. //Boston Bala said…

  அட… அரட்டை, விகடன்/குமுதம் படிப்பது எல்லாம் இலவசமா!!!
  //
  அரட்டையும் மெயில் போலத்தான் 😉

  விகடனுக்குத்தான் பணம் கட்டியிருப்பீர்களே 😉

  குமுதத்திற்கும் விரைவில் பணம் செலுத்த வேண்டி வரும் 😉

  // நன்றாக இருக்கிறது : ))) //
  மிக்க நன்றி… பாபா 😉

 45. சூப்பர்ங்க…இதுதான் யானைக்கு ஒரு காலம் வந்தா கோழிக்கு ஒரு காலம் வரும்கறது…இத படிக்கும் போதே எத்தனை படிதிவு போட்டு இருக்கோம்..எவ்வளவு பின்னூட்டம் போட்டு வாங்கி இருக்கோம்னு நினைச்சு பார்த்து…நானும் இருக்கற காசுல ஊருக்கு டிக்கட் வாங்கி ஐ ஏம் தி எஸ்கேப் பண்ணலாம்னு பார்த்தேன் 🙂

 46. நல்ல நகைச்சுவை..

  யாருப்பா அது.. English Translation கேட்கறது…

  அப்புறம் புஷ்ஷு படிச்சிட்டு நல்லா கீதே
  நமக்கு தோணலியேன்னு கொண்டாந்துட போறாரு..
  ஆமாங் சொல்லிட்டேன்….

 47. //Syam said…

  சூப்பர்ங்க…இதுதான் யானைக்கு ஒரு காலம் வந்தா கோழிக்கு ஒரு காலம் வரும்கறது…
  //
  நாட்டாமை,
  கரெக்டா சொன்னீங்க 🙂

  //
  இத படிக்கும் போதே எத்தனை படிதிவு போட்டு இருக்கோம்..எவ்வளவு பின்னூட்டம் போட்டு வாங்கி இருக்கோம்னு நினைச்சு பார்த்து…நானும் இருக்கற காசுல ஊருக்கு டிக்கட் வாங்கி ஐ ஏம் தி எஸ்கேப் பண்ணலாம்னு பார்த்தேன் 🙂 //
  சும்மாவா…
  ஒவ்வொரு பதிவுக்கும் 100 பின்னூட்டம் வாங்கறவராச்சே நீங்க 😉

 48. //நல்ல நகைச்சுவை..
  //
  மிக்க நன்றி சாத்வீகன்..

  //
  யாருப்பா அது.. English Translation கேட்கறது…

  அப்புறம் புஷ்ஷு படிச்சிட்டு நல்லா கீதே
  நமக்கு தோணலியேன்னு கொண்டாந்துட போறாரு..
  ஆமாங் சொல்லிட்டேன்….//
  அவர் கேட்டது அந்த ஒரு வரிக்கு மட்டும் தான் சாத்வீகன்… அதனால பிரச்சனையில்லை 😉

 49. நல்ல காமெடி..கமென்ட்ஸெல்லாம் நல்லாயிருக்கு
  இந்தாங்க என் ‘ஓட்டு’..
  தேன்கூட்டுல போட்டேன்னு சொன்னா நம்ப மாட்டீங்களோனு தான் இங்கயே போட்டுட்டேன் 😉

  -விநய்

 50. // Anonymous said…

  நல்ல காமெடி..கமென்ட்ஸெல்லாம் நல்லாயிருக்கு
  இந்தாங்க என் ‘ஓட்டு’..
  தேன்கூட்டுல போட்டேன்னு சொன்னா நம்ப மாட்டீங்களோனு தான் இங்கயே போட்டுட்டேன் 😉

  -விநய் //

  மிக்க நன்றி விநய்…
  இங்க போட்டுட்டேனு சொல்லிட்டு அங்க போடாம விட்டுடாதீங்க 😉

 51. //Divya said…

  Super O Super Vetti !!! //

  மிக்க நன்றி திவ்யா 😉

 52. \\\இவண்
  கைப்புள்ள
  அகில உலக கோழி ரசிகர் மன்ற கொ.ப.செ.
  ஆமதாபாளையம் \\\

  வெட்டி…என்ன இது…கோழிக்கு ரசிகர் மன்றமா??????…
  நான் இங்க இருக்கும் போது நீ கவலை படாத …கோழிய ஓரேயடியா அமுக்கி கொழம்பு வச்சிரலாம்…

 53. //Kattuvasi said…

  \\\இவண்
  கைப்புள்ள
  அகில உலக கோழி ரசிகர் மன்ற கொ.ப.செ.
  ஆமதாபாளையம் \\\

  வெட்டி…என்ன இது…கோழிக்கு ரசிகர் மன்றமா??????…
  நான் இங்க இருக்கும் போது நீ கவலை படாத …கோழிய ஓரேயடியா அமுக்கி கொழம்பு வச்சிரலாம்… //
  வேணாம்பா, கோழி நம்ம ஆள்தான் 😉
  வேணும்னா அவர் கோ.ப.ச வை அமுக்கி கொழம்பு வெச்சிடுவோமா? 🙂

 54. தல செம பதிவு.. ::)))))))))))))) மொத்தமா பாத்தா நம்ம சொத்த எழுதி வச்சாக்கூட பத்தாதே……

 55. //அமுதன் said…
  தல செம பதிவு.. ::)))))))))))))) மொத்தமா பாத்தா நம்ம சொத்த எழுதி வச்சாக்கூட பத்தாதே…… //

  மிக்க நன்றி…

  சொத்தா… ஆயிசுக்கும் சம்பாதிச்சாலும் முடியாது 😉

 56. இலவசமா இருக்கிறதனாலதான் யாரு வேணுமின்னாலும் எதைப்பத்தி வேணுமின்னாலும் எழுதறாங்க.

 57. வெற்றிபெற வாழ்த்துக்கள்..

 58. :))))))))))

  அருமையானக் காமெடி!!

  வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

 59. நாமதான் யாருக்கும் எந்தக் குத்தமும் பண்ணலயே சாமி!
  அப்புறம் ஏம்ப்பா இப்புடி பீதிய கெளப்புற!
  நல்ல வேள கதையில கோழிய கொண்டுவந்து கோர்த்துவிட்ட… இல்லன்னா.. நெடுஞ்சாங்கிடையா புஷ்ஷண்ணங்கிட்ட குப்புற வுலுந்தரவேண்டியதுதான்.

 60. Nalla Nagaichuvaiyaga irukirathe…!!!!!

  Balaji….ithellam paartha….ennakku oru fact thonuthu……Intha mathiri oru mail US Govt anuputho illayo…..Unga Office la irunthu yaaaravathu itha mathiri anupina aaachiriya padarathukku onnum illai!!!!!!……

  Enna naan solrathu…?????

 61. //ILA(a)இளா said…

  இலவசமா இருக்கிறதனாலதான் யாரு வேணுமின்னாலும் எதைப்பத்தி வேணுமின்னாலும் எழுதறாங்க. //

  விவா,
  கரிக்கெட்டா சொன்னீங்க…
  இல்லைனா நானெல்லாம் சத்தியமா மக்களுக்கு இந்த மாதிரி தொந்தரவை கொடுத்திருக்க மாட்டேன் 😉

 62. //செந்தழல் ரவி said…

  வெற்றிபெற வாழ்த்துக்கள்.. //

  மிக்க நன்றி சீனியர் 🙂

 63. //கவிப்ரியன் said…

  நாமதான் யாருக்கும் எந்தக் குத்தமும் பண்ணலயே சாமி!
  அப்புறம் ஏம்ப்பா இப்புடி பீதிய கெளப்புற!
  நல்ல வேள கதையில கோழிய கொண்டுவந்து கோர்த்துவிட்ட… இல்லன்னா.. நெடுஞ்சாங்கிடையா புஷ்ஷண்ணங்கிட்ட குப்புற வுலுந்தரவேண்டியதுதான். //
  கவிப்ரியன்,
  நமக்கும் கொஞ்சமிருந்தா இதயத்துடிப்பே நின்னுருக்கும்… என்ன பண்ண…

  அதிகமா ஆட்டம் போட்டா அப்படித்தான் 😉

 64. //அருட்பெருங்கோ said…

  :))))))))))

  அருமையானக் காமெடி!!

  வெற்றி பெற வாழ்த்துக்கள்!!! //

  மிக்க நன்றி அருட்பெருங்கோ

 65. //Rajesh said…

  Nalla Nagaichuvaiyaga irukirathe…!!!!!

  Balaji….ithellam paartha….ennakku oru fact thonuthu……Intha mathiri oru mail US Govt anuputho illayo…..Unga Office la irunthu yaaaravathu itha mathiri anupina aaachiriya padarathukku onnum illai!!!!!!……

  Enna naan solrathu…????? //

  வாங்க ராஜேஷ்.. இப்பதான் நம்ம வீட்டுக்கு வழி தெரிஞ்சிருக்கா?

  இந்த மாதிரி ஆபிஸ்ல இருந்து வந்தா அப்படியே ஜம்ப் பண்ணிடமாட்டோம் 😉

 66. வெற்றிபெற வாழ்த்துக்கள்..

 67. //காண்டீபன் said…

  வெற்றிபெற வாழ்த்துக்கள்.. //
  மிக்க நன்றி காண்டீபன்…

 68. //ஆஹா நல்ல வேலை அப்ப எல்லாமே இலவசம் தான்….இல்லைனா? //

  யாருப்பா அங்க, AC ya on pannu..
  5 nimisathula satiya nanichuputangia…

  கலக்கலுப்புபு….

 69. //மணி ப்ரகாஷ்

  மணி ப்ரகாஷ் said…
  //ஆஹா நல்ல வேலை அப்ப எல்லாமே இலவசம் தான்….இல்லைனா? //

  யாருப்பா அங்க, AC ya on pannu..
  5 nimisathula satiya nanichuputangia…
  //
  நல்ல வேளை சட்டை நனையறதோட நின்னுச்சு…

  //கலக்கலுப்புபு…. //
  மிக்க நன்றி மணி…

 70. vetti kalakita poma :))…

 71. நல்ல நகைச்சுவை உணர்வு.படித்தேன்,
  ரசித்தேன்,நகைத்தேன்,வியந்தேன்.
  என்றென்றும் அன்புடன்,
  பா.முரளி தரன்.

 72. //சந்தோஷ் said…
  vetti kalakita poma :))… //

  மிக்க நன்றி சந்தோஷ் 🙂

 73. //G.Ragavan said…
  :-))))))))))))))))))))

  வெட்டி, எனக்கு ஒரு நிமிசம் பேச்சே வரலை. நாம நாலஞ்சு பிளாகு வெச்சிருக்கோமே….அது மட்டுமில்லாம இன்னுஞ் சிலதுல பங்காளியா வேற இருக்கோமே………அதுக்கெல்லாம் எவ்வளவு வருமோன்னு நெனைக்கும் போதே கிறுகிறுன்னுச்சு.
  //
  உங்களை எல்லாம் நெனச்சி பார்த்துதான் எனக்கு ஓரளவு மனசே நிம்மதியாச்சு 😉

  //
  படமெல்லாம் போட்டதுக்கு வேற காசு குடுக்கனுமோன்னு தெரியலையேன்னு நெனச்சேன். ஒன்னுமில்லாத விஷயத்த…அதான் ஊருக்குப் போறதையே மூனு பதிவாச் சொல்ற பதிவுக் கயமைத்தனத்துக்கு என்ன வெலையோன்னு நடுங்கினேன். நல்லவேளை…
  //
  நீங்களாவது அப்பப்பதான் இப்படி பண்றீங்க… நான் ப்ளாக் முழுசா இப்படித்தான் பண்றேன் 😉

  //
  எல்லாம் கோழி செஞ்ச வேலை. பேசாமக் கோழிய பிரியாணி போட்டிர வேண்டியதுதான்னு நெனைக்கிறேன்.//
  பிரியாணி நமக்கு வராது… நேத்து தான் சிக்கன் குருமா வெச்சோம் 😉

 74. //Anonymous said…
  நல்ல நகைச்சுவை உணர்வு.படித்தேன்,
  ரசித்தேன்,நகைத்தேன்,வியந்தேன்.
  என்றென்றும் அன்புடன்,
  பா.முரளி தரன். //

  முரளி,
  மிக்க நன்றி!!!

 75. அருமையான நகைச்சுவை!

  உங்க பதிவ எதோ ஒரு பயித்தியகார அமைச்சர் படிச்சுட்டு உண்மையாவே இது மதிரி எதாவது பண்ணிடப் போவுது!!

  வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 76. //அருமையான நகைச்சுவை!

  உங்க பதிவ எதோ ஒரு பயித்தியகார அமைச்சர் படிச்சுட்டு உண்மையாவே இது மதிரி எதாவது பண்ணிடப் போவுது!!

  வெற்றிபெற வாழ்த்துக்கள்.//

  ஓகை,
  மிக்க நன்றி!!!

  எல்லா கட்சிக்காரவங்களும்தான் இங்க இருக்காங்களே… இதை வெச்சி அரசியல் பண்ணி ஆட்சிய பிடிச்சிடமாட்டாங்க? 😉

 77. இன்னா நைனா இது

  இப்பதான ஏதோ பிளாகு எயுத வந்தேன்
  கதிய பாதி பட்சி பயந்து பூட்டேம்பா..
  முழுசா பட்சதும்தான் நிம்மதியாச்சி….

 78. //அரை பிளேடு said…

  இன்னா நைனா இது

  இப்பதான ஏதோ பிளாகு எயுத வந்தேன்
  கதிய பாதி பட்சி பயந்து பூட்டேம்பா..
  முழுசா பட்சதும்தான் நிம்மதியாச்சி…. //

  புதுசா எழுத ஆரம்பிச்சா இன்னாத்துக்கு பயப்படனும்… ஏற்கனவே ஆட்டம் போட்டவங்களுக்குத்தான் ஆப்படிச்ச மாதிரி இருக்கனும்.. அதுல நாம எல்லாம் டாப்ல இருக்கோம் 😉

  கடைசியா நிம்மதியாச்சா.. அப்ப சந்தோஷம் 😉

 79. ரொம்ப நல்லா இருக்கு வெட்டி 🙂

 80. //Anonymous said…
  ரொம்ப நல்லா இருக்கு வெட்டி 🙂
  //
  அனானி,
  மிக்க நன்றி!!!

 81. //ஆழியூரான் said…

  ரொம்பவே தாமதமான பின்னூட்டம்தான்.இருந்தாலும் அருமையான நகைச்சுவையுடம் எழுதப்பட்ட கட்டுரைக்கு ஒரு பின்னூட்டம் இடாவிட்டால் பத்து ரூபாய் கட்டவேண்டும் என்று யாராவது சொல்லிவிட்டால் என்ன செய்வது..?
  வாழ்த்துக்கள்..சூப்பர் //
  மிக்க நன்றி ஆழியூராரே!!!
  நீங்க குடுத்த உற்சாகம்தான் எனக்கு அடுத்த போட்டிக்கு டானிக்…

  நடுவர்கள் மார்க் பார்த்தவுடனே ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு… ஏன்டா முதல் பத்துக்குள்ள வந்துச்சுனு. இல்லைனா இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேணாமேனு!!!

  கற்பனையான நிகழ்வுகள் போட்டிக்கு தகுதியில்லைனு நடுவர்கள் நினைத்துவிட்டார்கள் போலும் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: