கோழியின் அட்டகாசங்கள் – 6!!!

மக்களே மீண்டும் உங்களுக்காக கோழியின் அட்டகாசங்கள்…

“டேய் மச்சானுக்கு ஆன்சைட் வந்துடுச்சுடா அடுத்த மாசம் கெளம்பறான்” இது OP

“வாவ்!!! கங்கராட்ஸ்டா மச்சான்…”

“பாலாஜி, அதனால கோழி இப்பல இருந்து டயட்ல இருக்கான்…”

“ஏன்டா அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?”

“அது ஒண்ணுமில்லை… அமெரிக்கா போகும் போது 64 கிலோ வெயிட்ட எடுத்துட்ட்டு போகலாம்னு மச்சான் சொன்னான். அதனால இன்னும் 6 கிலோ குறைச்சிட்டா மச்சான் கூட அமெரிக்கால போயி வேலை தேடலாம்னுதான்…”

“டேய் கோழி உண்மையாடா???”

“ஆமான்டா பாலாஜி… எனக்கும் இங்க போர் அடிக்குது… பேசாம அமெரிக்கா போயிடலாம்னு இருக்கேன்… “

“டேய் கோழி, அது பெட்டி படுக்கைக்கு தான்டா… ஆளுங்களை எல்லாம் கூப்பிட்டு போக முடியாது. அப்படியே இருந்தாலும் மச்சான் எதாவது ஃபிகரை பிக்கப் பண்ணிட்டு கூப்பிட்டு போகமா உன்னைய கூப்பிட்டு போவானா?”

“டேய் நெஜமாவாடா??? இது தெரியாம ஊர்ல இருந்து வண்டிக்கூட அனுப்ப சொல்லிட்டேன்”, இது கோழி

“என்னடா சொல்ற?”

“ஆமாண்டா ஊர்ல நம்ம ஸ்பெலண்டர் சும்மாதான் இருக்கு… அங்க போனா யூஸ் ஆகுமில்ல… அங்க பஸ் எல்லாம் காஸ்ட்லியா இருந்தா என்ன பண்றதுனு?”

“சரிடா இந்த வண்டிய எப்படிடா அங்க எடுத்துட்டு போய் ஓட்டுவ?”

“ஏன்டா நான் என்ன லூசா?
நம்பர் பேட்ல இருக்கற “TN” க்கு பதிலா வண்டில “US”னு எழுதிட்டா போச்சு… போலிஸ் எப்படி கண்டுபிடிப்பாங்க?”

ஆஹா ஆரம்பிச்சிட்டான்யா…

70 பதில்கள்

 1. ஹையா, நாந்தான் ஃபர்ஸ்ட்டு..ஒரு கோழி பிரியாணி பார்சல்!!!

 2. ஹாஹாஹா… நமக்கு ஒரு ஆம்லெட்..

 3. //
  நம்பர் பேட்ல இருக்கற “TN” க்கு பதிலா வண்டில “US”னு எழுதிட்டா போச்சு… போலிஸ் எப்படி கண்டுபிடிப்பாங்க?”
  //
  ROTFL 🙂

 4. //வானமே எல்லை said…
  ஹையா, நாந்தான் ஃபர்ஸ்ட்டு..ஒரு கோழி பிரியாணி பார்சல்!!!//

  வா.எ,
  மிக்க நன்றி…
  அப்படியே முனியாண்டி விலாஸ்ல நம்ம அக்கவுண்ட்ல வாங்கிகோங்க…

 5. //பெத்த ராயுடு said…
  ஹாஹாஹா… நமக்கு ஒரு ஆம்லெட்.. //

  சரி… நீங்களும் வாங்கிக்கோங்க…

  இங்க நம்மலே இன்னைக்கு முறுக்கு சாப்பிட்டு ஜீஸ் குடிச்சிட்டு படுக்கறேன்… எல்லாம் வந்து இப்படி கேட்டா நான் என்ன பண்ணுவேன் 😉

 6. //Arunkumar said…
  //
  நம்பர் பேட்ல இருக்கற “TN” க்கு பதிலா வண்டில “US”னு எழுதிட்டா போச்சு… போலிஸ் எப்படி கண்டுபிடிப்பாங்க?”
  //
  ROTFL 🙂 //

  மிக்க நன்றி…

 7. எனக்கு ஒரு ஆஃப்பாயில் . . .

 8. கோழியோட குருமாவா?

  கோழியே குருமாவா?

  பாவம்யா!

 9. சும்மா சொல்ல கூடாது சும்மா சுப்பரா இருக்கு

 10. //Kattuvasi said…
  எனக்கு ஒரு ஆஃப்பாயில் . . .
  //
  சரி… அக்கவுண்ட்ல வாங்கிக்கோங்க 🙂

 11. //தம்பி said…
  கோழியோட குருமாவா?

  கோழியே குருமாவா?

  பாவம்யா!
  //

  சில சமயம் கோழி குருமா, சில சமயம் கோழியே குருமா 🙂

 12. //சுந்தர் said…
  சும்மா சொல்ல கூடாது சும்மா சுப்பரா இருக்கு
  //

  சுந்தர்,
  மிக்க நன்றி!!!

 13. வெட்டி கோழியை கலாய்ப்பது போல் , வெட்டியை நாம் கலாய்க்க ஒரு புதிய பதிவு…
  http://kattuvasi.blogspot.com/

  பின்னூட்டம் போடுங்க…

 14. ஆஹா, ஓஹோ, ஏஹே. ஷ்ஹ் அப்ப்ப்ப்பப்பப்பா

 15. யோவ் இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியல?

 16. //சில சமயம் கோழி குருமா, சில சமயம் கோழியே குருமா 🙂 //

  இது கோழி ஊறுகாய்யா!! ;))

 17. //Kattuvasi said…

  வெட்டி கோழியை கலாய்ப்பது போல் , வெட்டியை நாம் கலாய்க்க ஒரு புதிய பதிவு…
  http://kattuvasi.blogspot.com/

  பின்னூட்டம் போடுங்க… //

  ஆஹா… இது வேறயா… பாத்து ஆப்பு வைங்கப்பா… தல அளவுக்கு நமக்கு கெப்பாசிட்டி இல்லை 🙂

 18. //ILA(a)இளா said…

  ஆஹா, ஓஹோ, ஏஹே. ஷ்ஹ் அப்ப்ப்ப்பப்பப்பா //

  விவசாயி,
  முடிவா என்னா சொல்றீங்க

 19. //இலவசக்கொத்தனார் said…

  யோவ் இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியல? //

  கொத்ஸ்,
  இதெல்லாம் கோழிக்கு சகஜம் 😉

 20. //கப்பி பய said…

  //சில சமயம் கோழி குருமா, சில சமயம் கோழியே குருமா 🙂 //

  இது கோழி ஊறுகாய்யா!! ;)) //

  இல்லப்பா ஃபுல் மீல்ஸ் 🙂

 21. ஹே ஹே ஹே ஹே….

  வெட்டி இது என்னான்னு யோசிக்கிறீயா… அது கோழியே எங்க வீட்டுப் பக்கம் கூட்டிட்டு போறேன்!!!

 22. //ராம் said…

  ஹே ஹே ஹே ஹே….

  வெட்டி இது என்னான்னு யோசிக்கிறீயா… அது கோழியே எங்க வீட்டுப் பக்கம் கூட்டிட்டு போறேன்!!! //

  ராமண்ணா,
  கோழிய உங்களால சமாளிக்க முடியாது…

  ரொம்ப கஷ்டம்… ஆமாம் சொல்லிட்டேன் 🙂

 23. //விவசாயி,
  முடிவா என்னா சொல்றீங்க//
  கோழிக்கு முடிவெல்லாம் சொல்ல முடியாதுங்க. படிச்சுட்டு சிரிச்சாச்சுங்களே. அதான் அப்படி ஒரு சிரிப்பு. NKS மாதிரி சொல்ல நினைச்சா மக்களுக்கு புரிய மாட்டேங்குதே.

  ::அட இப்படி கூட சமாளிக்கலாம்.::

 24. //கோழிக்கு முடிவெல்லாம் சொல்ல முடியாதுங்க. படிச்சுட்டு சிரிச்சாச்சுங்களே. அதான் அப்படி ஒரு சிரிப்பு. NKS மாதிரி சொல்ல நினைச்சா மக்களுக்கு புரிய மாட்டேங்குதே.

  ::அட இப்படி கூட சமாளிக்கலாம்.:://
  யார் அது NKS???

 25. //ராமண்ணா,//

  அடபாவி மக்கா,

  என்னை அண்ணேன்னு சொல்லியே ஓப்பேத்தி வைச்சிருந்திங்கய்யா.. இப்பிடிதான் ஆர்குட்லேயும் அண்ணே’ன்னு கூப்பிட்டு என்னை பார்க்கவர்றவங்க பூராவும் உன்னோட புரொப்பல்’க்கு போயிறாங்க….. :(((

  //கோழிய உங்களால சமாளிக்க முடியாது…

  ரொம்ப கஷ்டம்… ஆமாம் சொல்லிட்டேன் 🙂 //

  அப்பிடிக்கிறே???? சரின்னு நானும் சொல்லீக்கிறேன்!!!

 26. //அடபாவி மக்கா,

  என்னை அண்ணேன்னு சொல்லியே ஓப்பேத்தி வைச்சிருந்திங்கய்யா.. இப்பிடிதான் ஆர்குட்லேயும் அண்ணே’ன்னு கூப்பிட்டு என்னை பார்க்கவர்றவங்க பூராவும் உன்னோட புரொப்பல்’க்கு போயிறாங்க….. :(((//

  ஆமாம் இவர் ப்ரோபைலுக்கு தினமும் 100 பட்சிகள் வருது… நான் எழுதனத பார்த்தவுடனே எல்லாம் ஏன் கூட வந்து பேசறாங்க… ஏதாவது நம்பற மாதிரி சொல்லனும். ஆர்குட்ல நடக்கறதெல்லாம் மக்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க…

  சரி நானும் பாசமா ராமண்ணானு கூப்பிட்டா உங்களுக்கு புடிக்கல..

  சரி இனிமே ராம் தம்பினு கூப்பிடறதா?

 27. ஜெப்ல்லிங்க் மிச்டேக்கு
  NSK..

 28. //ஆமாம் இவர் ப்ரோபைலுக்கு தினமும் 100 பட்சிகள் வருது… நான் எழுதனத பார்த்தவுடனே எல்லாம் ஏன் கூட வந்து பேசறாங்க… ஏதாவது நம்பற மாதிரி சொல்லனும். //

  நம்புப்பா 100பேர் வர்றாங்க… ஆனா ஒருத்தர்கூட ஸ்கிராப் போடுறேதில்லே!!!

  //ஆர்குட்ல நடக்கறதெல்லாம் மக்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க… //

  ஓ அதுவேறேயா…. அப்போ அதிலே இருக்கிற போட்டோ எடுத்திறவேண்டியதுதான்… 😉

  //சரி நானும் பாசமா ராமண்ணானு கூப்பிட்டா உங்களுக்கு புடிக்கல..

  சரி இனிமே ராம் தம்பினு கூப்பிடறதா? //

  தம்பின்னு கூப்பிட்டா கதிருக்கு கோவம் வர்றதா…???/

 29. //ILA(a)இளா said…

  ஜெப்ல்லிங்க் மிச்டேக்கு
  NSK.. //

  ஓ… நம்ம கலைவானரா???

  நீங்க அவரைத்தான் சொல்ல வரீங்கனு தெரிஞ்சிது… இருந்தாலும் கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்னு கேட்டேன் 😉

 30. //நம்புப்பா 100பேர் வர்றாங்க… ஆனா ஒருத்தர்கூட ஸ்கிராப் போடுறேதில்லே!!!//

  மக்கா… நோட் பண்ணிக்கோங்க…

  //ஓ அதுவேறேயா…. அப்போ அதிலே இருக்கிற போட்டோ எடுத்திறவேண்டியதுதான்… ;-)//
  வேணாம்னே… இருக்கட்டும்!

  //
  தம்பின்னு கூப்பிட்டா கதிருக்கு கோவம் வர்றதா…???///
  ராம் தம்பினு கூப்பிட்டா கதிருக்கு ஏன் கோபம் வரப்போகுது…

  கவிஞ்சர் கதிர்னு சொல்லி பழகிக்கோங்க 🙂

 31. //கவிஞ்சர் கதிர்னு சொல்லி பழகிக்கோங்க 🙂 //

  ஓகே அதேமாதிரியே பண்ணிரலாம்…..ஆனா கவிஞ்சர் கப்பிநிலவருக்கு இதிலே ஏதும் ஆட்சோபணை இருக்கான்னு கேட்டு சொல்லுப்பா????

 32. //ஆனா கவிஞ்சர் கப்பிநிலவருக்கு இதிலே ஏதும் ஆட்சோபணை இருக்கான்னு கேட்டு சொல்லுப்பா????//

  ஜாவா கவிஞ்சர் கப்பிநிலவன்னு சொல்லி பழகிக்கோங்க…

  ஜாவா கவிஞ்சரே உங்களுக்கு இதுல ஏதாவது ஆட்சேபனை இருக்கா?

 33. //கவிஞ்சர் கதிர்னு சொல்லி பழகிக்கோங்க :-)//

  யோவ் வெட்டி!

  அமைதியா போயிட்டுருக்கற அந்த பச்ச புள்ளய ஏன்யா பஞ்சராக்க பாக்குறே?

  அது ரொம்ப நல்ல்ல நல்ல்ல தம்பி!

 34. தம்பியை பஞ்சராக்க நினைக்கும் வெட்டியின் பதிவை புறக்கணிக்குமாறு அ.மு.க சங்கத்தின் தலைமை செயலாளர் அறிவித்திருக்கிறார்.

 35. தலைமை செயலகத்தின் அறிக்கையை அவுஸ்திரேலியாவின் கிளை வழிமொழிகிறது.

  அ.மு.க கிளை
  அவுஸ்திரேலியா

 36. //ஓகே அதேமாதிரியே பண்ணிரலாம்…..ஆனா கவிஞ்சர் கப்பிநிலவருக்கு இதிலே ஏதும் ஆட்சோபணை இருக்கான்னு கேட்டு சொல்லுப்பா????
  //

  //ஜாவா கவிஞ்சர் கப்பிநிலவன்னு சொல்லி பழகிக்கோங்க…

  ஜாவா கவிஞ்சரே உங்களுக்கு இதுல ஏதாவது ஆட்சேபனை இருக்கா? //

  என்னய்யா நடக்குது இங்க?? கோழியைப் பத்தி பேசறதை விட்டுட்டு பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள்ளை அனுமதிக்கும் வெட்டியைக் காட்டுத்தனமாக கண்டிக்கிறேன் ;))

 37. //ஜாவா கவிஞ்சர் கப்பிநிலவன்னு சொல்லி பழகிக்கோங்க…//

  வலை உலகில் ஜாவா கவிஞ்சர் என்பவர் ஒருவர்தான் அவர்தான் அத்தை பெண்கள் எனும் ராட்சசிகளின் ரட்சகன் கார்த்திக் பிரபு.

 38. //என்னய்யா நடக்குது இங்க?? கோழியைப் பத்தி பேசறதை விட்டுட்டு பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள்ளை அனுமதிக்கும் வெட்டியைக் காட்டுத்தனமாக கண்டிக்கிறேன் ;))//

  கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொண்டீர்கள் போங்கள் கப்பி அவர்களே!

 39. ரசிக்கும்படியான நகைச்சுவையுள்ள பதிவு, தொடர்ந்து கோழியின் அட்டகாசங்கள் எழுதுங்க வெட்டி.

 40. ha,,ha…Good joke.

  Does kozi know that you write about him?:-))

 41. //யோவ் வெட்டி!

  அமைதியா போயிட்டுருக்கற அந்த பச்ச புள்ளய ஏன்யா பஞ்சராக்க பாக்குறே?

  அது ரொம்ப நல்ல்ல நல்ல்ல தம்பி!//
  யாரு தம்பி நல்ல பிள்ளையா?
  இது ஓவர்… சங்கத்துல நம்ம ஜொள்ளு அண்ணன் பதிவுல என்னய பத்தி என்ன சொல்லி இருக்காரு பாருங்க…

 42. // தம்பி தற்கொலை படை said…

  தம்பியை பஞ்சராக்க நினைக்கும் வெட்டியின் பதிவை புறக்கணிக்குமாறு அ.மு.க சங்கத்தின் தலைமை செயலாளர் அறிவித்திருக்கிறார். //

  அ.மு.க உங்களுக்கு மரியாதை கொடுக்கறதுல முக்கியமான ஆளுங்கள்ல நானும் ஒருத்தன்.. மறந்துடாதீங்க… பாதி பதிவு அனானிங்க அன்புக்காக போடப்படறதுதான் 🙂

 43. // அ.மு.க said…

  தலைமை செயலகத்தின் அறிக்கையை அவுஸ்திரேலியாவின் கிளை வழிமொழிகிறது.

  அ.மு.க கிளை
  அவுஸ்திரேலியா //

  உங்களுக்கும் அதே பதில்தான் 😉

 44. //என்னய்யா நடக்குது இங்க?? கோழியைப் பத்தி பேசறதை விட்டுட்டு பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள்ளை அனுமதிக்கும் வெட்டியைக் காட்டுத்தனமாக கண்டிக்கிறேன் ;))//

  கப்பி,
  உன்னைய பத்தி ராம்தான் சொன்னாரு.. உங்க ரெண்டு பேர் சண்டைல நான் உள்ள வரல 🙂

 45. //வலை உலகில் ஜாவா கவிஞ்சர் என்பவர் ஒருவர்தான் அவர்தான் அத்தை பெண்கள் எனும் ராட்சசிகளின் ரட்சகன் கார்த்திக் பிரபு.//
  அவருக்கு கவிஞ்சர் காதல் பிரபுனு பேர் வெச்சி ரொம்ப நாள் ஆகுதுங்க…

  அவர் ஜாவால பெரிய ஆளானு தெரியலையே 😉

 46. //Divya said…

  ரசிக்கும்படியான நகைச்சுவையுள்ள பதிவு, தொடர்ந்து கோழியின் அட்டகாசங்கள் எழுதுங்க வெட்டி. //

  மிக்க நன்றி திவ்யா…

 47. //செல்வன் said…

  ha,,ha…Good joke.

  Does kozi know that you write about him?:-)) //

  வாங்க வாங்க!!!

  இந்த முறை கோழிக்கு இந்த விஷயத்தை இன்னும் சொல்லல…

  இது கோழி மேல போட்ட பிட் இல்லை… மச்சான் பேர்ல போட்டதுதான்… சரி சுவாரசியமா இருக்கும்னு கோழிய கொண்டு வந்துட்டேன் 😉

 48. —“TN” க்கு பதிலா வண்டில “US”னு எழுதிட்டா—

  ம்ஹூம்! மாட்டிக் கொள்வார்.

  யூஎஸ்ஏ என்று எழுதிக் கொள்ளனும்… சரியா!?

 49. //ம்ஹூம்! மாட்டிக் கொள்வார்.

  யூஎஸ்ஏ என்று எழுதிக் கொள்ளனும்… சரியா!?//

  யாரை ஏமாத்த பாக்கறீங்க?

  வண்டீல நம்பர் ப்ளெட்ல மூணு எழுத்த எழுதமாட்டாங்கனு அவருக்கு தெரியாதா?

 50. //அ.மு.க உங்களுக்கு மரியாதை கொடுக்கறதுல முக்கியமான ஆளுங்கள்ல நானும் ஒருத்தன்.. மறந்துடாதீங்க… பாதி பதிவு அனானிங்க அன்புக்காக போடப்படறதுதான் :-)//

  வெட்டிக்கு வேட்டு வைக்க வேணாம்னு அனானிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

  தம்பியை போலவே வெட்டியும் ரொம்ப நல்ல நல்லவர்.

 51. ஏய் பாவம்ப்பா அந்த கோழி! இப்படி ஊரைக் கூட்டி வச்சி பிரியாணி போடறியே?
  🙂

 52. //
  வெட்டிக்கு வேட்டு வைக்க வேணாம்னு அனானிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

  தம்பியை போலவே வெட்டியும் ரொம்ப நல்ல நல்லவர்.//
  ரொம்ப நன்றிங்க…

  தம்பியும் நம்ம பாசக்கார பையதாங்க… சும்மா அடிக்கடி ஓட்டிக்குவோம் வேற ஒண்ணுமில்லை 🙂

 53. //கைப்புள்ள said…

  ஏய் பாவம்ப்பா அந்த கோழி! இப்படி ஊரைக் கூட்டி வச்சி பிரியாணி போடறியே?
  🙂 //

  சரிங்க… உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு… கோழினு நான் சொன்னதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு. அது எல்லாமே நம்ம தல கைப்பு தானுங்கோ 😉

 54. //சரிங்க… உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு… கோழினு நான் சொன்னதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு. அது எல்லாமே நம்ம தல கைப்பு தானுங்கோ 😉 //

  அட பாவி! இந்த பாவத்துக்கெல்லாம் நீ நல்லா அனுபவிப்பே! இது ஒரு பத்தினி பையனோட சாபம்.
  🙂

 55. //ம்ஹூம்! மாட்டிக் கொள்வார்.
  யூஎஸ்ஏ என்று எழுதிக் கொள்ளனும்… சரியா!?//
  யாரை ஏமாத்த பாக்கறீங்க?
  வண்டீல நம்பர் ப்ளெட்ல மூணு எழுத்த எழுதமாட்டாங்கனு அவருக்கு தெரியாதா?
  //

  கோழியாரே, அல்லாரும் உங்களை ஏமாத்தறாங்கோ! நீங்க CA, NY, MA இப்பிடின்னு மாநிலத்தின் பேரை எழுதிக்கினு வாங்க! யாரு உங்களை டச் பண்ண முடியாது! :-))

  குஞ்சு மிதிச்சி கோழி சாகுமா? என்ன சரி தானுங்களே! :-))

 56. பாலாஜி..நானும் கைப்பு சொன்னத பின்மொழிகிறேன்.. பாவம் கோழி, எதுக்கும் அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு 🙂

  இத படிச்சப்போ இப்படி தான் எனக்கு தோனுச்சு!
  “இந்தக் கோழி நிஜம்னா, மெல்லிய சோகம் கலந்த நகைச்சுவை. கோழி கற்பனைனா, சூப்பர்…பாராட்டுக்கள்”

  -விநய்*

 57. பாலாஜி,
  இன்னொரு மேட்டர்.. “vettipaiyal.blogspot.com”க்கு போனா, நீ கடைசியா போட்ட ரெண்டு பதிவும் வர மாட்டேங்கிது. “ஸ்ரீ ஸ்ரீ” தான் வருது.. இப்போ நான் தமிழ்மணம் மூலமா தான் கோழியப் புடிச்சேன். செக் பண்ணு!

  -விநய்*

 58. //கோழியாரே, அல்லாரும் உங்களை ஏமாத்தறாங்கோ! நீங்க CA, NY, MA இப்பிடின்னு மாநிலத்தின் பேரை எழுதிக்கினு வாங்க! யாரு உங்களை டச் பண்ண முடியாது! :-))

  குஞ்சு மிதிச்சி கோழி சாகுமா? என்ன சரி தானுங்களே! :-))//

  இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்களே 🙂

  கவலைப்படாதீங்க… கோழி இந்த மாதிரி விவரம் தெரியாத ஆள் எல்லாம் இல்லைங்க.. நாங்க இந்த மாதிரி எந்த ஜோக் கண்டுபிடிச்சாலும் அவர் பேர்ல போட்டுடுவோம் 😉

 59. //Anonymous said…
  பாலாஜி..நானும் கைப்பு சொன்னத பின்மொழிகிறேன்.. பாவம் கோழி, எதுக்கும் அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு 🙂

  இத படிச்சப்போ இப்படி தான் எனக்கு தோனுச்சு!
  “இந்தக் கோழி நிஜம்னா, மெல்லிய சோகம் கலந்த நகைச்சுவை. கோழி கற்பனைனா, சூப்பர்…பாராட்டுக்கள்”

  //
  இதெல்லாம் உண்மை கிடையாது விநய் 🙂

 60. //எங்க செட்லையும் இது மாதிரி ஒரு கேரக்டர் உண்டு. இப்போதைக்கு கோழினே வச்சுக்குவோமே..
  கோழி அவனோட நண்பனுக்கு ஏதோ அவசரமா ஃபோன் பண்ணுனான்.
  அப்போ லைன் கிடைக்காம, பதிவு செய்யப்பட்ட குரல் ஆங்கிலத்துல ஒலித்தது!
  “The customer you have dialed is presently not reacheable”னு. அதுக்கு நம்ம கோழி..
  “மேடம், எப்படியாவது கொஞ்சம் Connect பண்ணுங்க, என் Friend கிட்ட அவசரமா பேசனும்.. ப்ளீஸ்..”//

  சூப்பரா இருக்குங்க 🙂

 61. //நம்பர் பேட்ல இருக்கற “TN” க்கு பதிலா வண்டில “US”னு எழுதிட்டா போச்சு… போலிஸ் எப்படி கண்டுபிடிப்பாங்க?”//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்….இப்படிபட்ட அறிவாளிங்க கூட எல்லாம் எனக்கு பிரெண்சிப் இல்லாம போச்சே…..எப்படிங்க இப்படி எல்லாம்..மறுபடியும் ஒரு…அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 🙂

 62. //”ஏன்டா நான் என்ன லூசா?
  நம்பர் பேட்ல இருக்கற “Tந்” க்கு பதிலா வண்டில “ஊS”னு எழுதிட்டா போச்சு… போலிஸ் எப்படி கண்டுபிடிப்பாங்க?”//

  இப்படி எல்லாம் பேசினா கோழியை முனியாண்டி விலாஸுக்கு அனுப்பிட வேன்டியது தான் வெட்டிப்பயலே..
  அந்த கோழிங்கிறது யாருன்..நீங்க தானே உண்மையை சொல்லுங்க

 63. //
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்….இப்படிபட்ட அறிவாளிங்க கூட எல்லாம் எனக்கு பிரெண்சிப் இல்லாம போச்சே…..எப்படிங்க இப்படி எல்லாம்..மறுபடியும் ஒரு…அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)//

  பராவாயில்லை ஃபீல் பண்ணாதீங்க…
  இது எல்லாம் கற்பனைதான் 😉

 64. //இப்படி எல்லாம் பேசினா கோழியை முனியாண்டி விலாஸுக்கு அனுப்பிட வேன்டியது தான் வெட்டிப்பயலே..
  அந்த கோழிங்கிறது யாருன்..நீங்க தானே உண்மையை சொல்லுங்க//

  ஐயய்யோ பாவங்க அவர் 🙂

  நானா? அதுவா? கோழியின் அட்டகாசங்கள் முழுசா படிக்கலையா?

 65. //”ஆமாண்டா ஊர்ல நம்ம ஸ்பெலண்டர் சும்மாதான் இருக்கு… அங்க போனா யூஸ் ஆகுமில்ல… அங்க பஸ் எல்லாம் காஸ்ட்லியா இருந்தா என்ன பண்றதுனு?”//

  appadi podu..

  comedy super 🙂

 66. உங்க பதிவு எல்லாம் படிப்பேன், ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு என்னவோ கோழி உங்க ஆல்ட்ர் ஈகோவா தான் இருக்கும்னு நினைக்கிறேன், இல்லைன்னா கோழிக்கு எனது அனுதாபங்கள்.

  உங்க பதிவை படிக்கும் போது இதை போல் எனக்கும் மற்ற நண்பர்களுடன் நடந்த நிகழ்ச்சிகள் நியாபகம் வருது.

  ரொம்ப நல்லா வந்திருக்கு, நான் மட்டுமா சொல்றேன், படித்தவங்க எல்லாரும் தான் சொல்லி வைத்திருக்காங்க.

 67. vanakam balaji,
  kozhili in atakasangal arumai yana pathivi… ela college la um ipadi oru kozhili irupanga pola? enaga college leum kuda than… athuvum elikutty ya mathi paste pana nanichadu romba arumai ya na saravedi….. aparam avaroda bike idea super….நம்பர் பேட்ல இருக்கற “TN” க்கு பதிலா வண்டில “US”னு எழுதிட்டா போச்சு… போலிஸ் எப்படி கண்டுபிடிப்பாங்க?”

  ha ha ha..
  valthukal…
  barathi

 68. //Dreamzz said…

  //”ஆமாண்டா ஊர்ல நம்ம ஸ்பெலண்டர் சும்மாதான் இருக்கு… அங்க போனா யூஸ் ஆகுமில்ல… அங்க பஸ் எல்லாம் காஸ்ட்லியா இருந்தா என்ன பண்றதுனு?”//

  appadi podu..

  comedy super 🙂 //

  மிக்க நன்றி ட்ரீம்ஸ் 🙂

  நல்லா சிரிங்க 🙂

 69. //C.Nagaraj said…

  உங்க பதிவு எல்லாம் படிப்பேன், ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு என்னவோ கோழி உங்க ஆல்ட்ர் ஈகோவா தான் இருக்கும்னு நினைக்கிறேன், இல்லைன்னா கோழிக்கு எனது அனுதாபங்கள்.
  //
  கோழி நிஜமாலுமே இருக்கற கேரக்டர்தான்… ஆனா இதுல இருக்கறது 2,3 தான் உண்மை… மீதி எல்லாம் கதை கட்டிவிட்டது 🙂
  அவன் இப்ப நல்ல பெரிய எடத்துல இருக்கான்… நீங்க அனுதாபப்பட வேண்டியதில்லை 🙂

  //
  உங்க பதிவை படிக்கும் போது இதை போல் எனக்கும் மற்ற நண்பர்களுடன் நடந்த நிகழ்ச்சிகள் நியாபகம் வருது.
  //
  பழசெல்லாம் ஞாபகம் வந்து சந்தோஷப்பட்டா சரிதான் 🙂

  //
  ரொம்ப நல்லா வந்திருக்கு, நான் மட்டுமா சொல்றேன், படித்தவங்க எல்லாரும் தான் சொல்லி வைத்திருக்காங்க. //
  மிக்க நன்றி நாகராஜ் 🙂

 70. // barathi said…

  vanakam balaji,
  kozhili in atakasangal arumai yana pathivi… ela college la um ipadi oru kozhili irupanga pola? enaga college leum kuda than… athuvum elikutty ya mathi paste pana nanichadu romba arumai ya na saravedi….. aparam avaroda bike idea super….நம்பர் பேட்ல இருக்கற “TN” க்கு பதிலா வண்டில “US”னு எழுதிட்டா போச்சு… போலிஸ் எப்படி கண்டுபிடிப்பாங்க?”

  ha ha ha..
  valthukal…
  barathi //

  மிக்க நன்றி பாரதி…
  Mouse மாத்தி ரைட் க்ளிக் பண்ணது எங்க காலேஜ்ல ரொம்ப ஃபேமஸானது. HODக்கு எல்லாம் தெரியும்… (ஆனா அது உண்மையாலும் நடந்தது இல்லை :-))

  TN-USம் சும்மா கொளுத்தி போட்டது தான் 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: