மருந்து வேண்டும்!!!சின்ன வயசுல இருந்தே இந்த வியாதி நமக்கு இருக்குங்க. ஆனால் காலேஜ் சேர்ந்ததுக்கு அப்பறம்தான் இதை நானே உணர ஆரம்பித்தேன். இந்த வியாதியால் என்னை மாதிரி யாராவது பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

எங்க அப்பாக்கிட்ட இதப்பத்தி ஒரு தடவை சொன்னேன். அதுக்கு அவர் வியாதியும் இல்ல ஒரு மண்ணும் இல்லை… எல்லாம் கொழுப்பு வேற ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டாரு. எங்க அம்மாகிட்ட சொன்னா ஏதாவது சாமி குத்தமா இருக்கும்னு சொல்லி ஏதாவது கோவிலுக்கு கூட்டிட்டு போயிடுவாங்கனு சொல்லலை. சரி உங்கள்ல யாராவது அந்த வியாதிக்கு தீர்வு சொன்னா பரவாயில்லை.

அது என்னடா வியாதினு கேக்கறீங்களா? அதுதாங்க சோம்பேறித்தனம்.
காலேஜ்ல இருக்கும் போதுதான் இதை நான் அதிகமா உணர ஆரம்பிச்சேன். சில நாள் சாப்பிடறதுக்கு சோம்பேறித்தனம் பட்டுட்டு சாப்பிடாம கூட இருந்திருக்கேன். எங்க ரூம்ல இருந்து ஒரு 30-40 அடிதான் மெஸ்ஸுக்கு இருக்கும்.

ஆனால் எழுந்திரிச்சி, செருப்பு போட்டு, அவ்வளவு தூரம் நடந்து போயி, சாப்பாட போட்டு, சாப்பிட்டு… இவ்வளவு கஷ்டப்பட்டு சாப்பிடனுமானு ஃபீல் பண்ணி சாப்பிடாம அப்படியே படுத்து தூங்கிடுவேன். (அப்பறம் நைட் பசிச்சிதுனா தண்ணி குடிச்சிட்டு வந்து தூங்க வேண்டியதுதான். ) ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுக்கற கூட்டத்த சேர்ந்த ஆளு.. (இங்க யாரும் அந்நியன் இல்லைனு நம்பறேன்)

இப்பக்கூட ஒரு ஒரு பதிவு போடறதுக்கும் நிறைய தோணுச்சினாலும் டைப் பண்ண சோம்பேறித்தனம் பட்டுட்டு பாதியோட நிறுத்திக்கறேன். (மேட்டர் இல்லைனாலும் நல்லா ஒப்பேத்தறாண்டானு யாராவது சொன்னீங்க??? அப்பறம் அதுதான் உண்மைனு நான் ஒத்துக்க வேண்டியது வந்துடும்… ஆமாம் சொல்லிட்டேன்)

காலைல ஆறு மணிக்கு எழுந்திரிச்சா போயிடும்னு என் ஃபிரெண்ட் ஒருத்தவங்க சொன்னாங்க. நானும் ஒரு வாரம் ஆறு மணிக்கு அலாரம் வெச்சிட்டு எழுந்திரிச்சி பார்த்தேன் (எழுந்திரிச்சி அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு தூங்கிடுவேன்). இருந்தாலும் அந்த நோய் சரியான மாதிரி தெரியலை.

சரி உங்கள்ல யாருக்காவது இந்த நோய் இருந்துச்சுனா தயவு செய்து சொல்லுங்க. வேற எதுக்கு நமக்கு கம்பெனிக்கு ஆள் இருக்குனு நானும் சந்தோஷப்பட்டுக்குவேன். மருந்து தெரிந்தால் கண்டிப்பாக சொல்லவும். சரிங்க ரொம்ப டைப் பண்ணி டயர்டாய்யிட்டேன்… ரெஸ்ட் எடுக்க போறேன் 😉

71 பதில்கள்

 1. //சரி உங்கள்ல யாருக்காவது இந்த நோய் இருந்துச்சுனா தயவு செய்து சொல்லுங்க//

  பாலாஜி,

  இந்த வியாதி எனக்கும் இருக்குப்பா!!!

 2. நான் உங்களை விட அதிக சோம்பல் உடையவளாக்கும்..

  மீதியை நாளை வந்து சொல்கிறேன்..

  🙂

 3. பின்னூட்டம் பெருசாப் போடனும்னு ஆசைதான். ஆனா………………….

 4. படிச்சேன். பின்னூட்டம் நாளைக்கு வந்து சுறுசுறுப்பாப் போடுறேனே!

 5. ஹ்ஹாஹாவ்வ்வ்வ்வ்

  முழுசா ஏன் படிக்கணும்… எப்படியும் நல்லாத்தான் எழுதியிருப்பீங்க!

  ஆவ்வ்வ்வ்வ்

 6. //ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுக்கற கூட்டத்த சேர்ந்த ஆளு..//

  அதே அதே… இதுக்கு எல்லாம் ஒரு தனி திறமை வேணும்ப்பா. இது எல்லாம் எல்லாராலும் முடியாது. நல்ல மனசு வேணும் அதுக்கு எல்லாம். நமக்கு இது இறைவன் கொடுத்த வரம் இது….

 7. தூக்கமா வருது. அப்புறமா வாரேன்…

 8. vettipayal ngra perai somberi paiyala nu mathirunga

 9. எங்க அப்பாக்கிட்ட இதுக்கு பல தடவை திட்டு வாங்கி இருக்கேன்(அலாரம்) மேட்டருக்கு.

  எட்டு மணிக்கு அலாரம் வச்சி, அத ஆப் பண்ணிட்டு மறுபடியும் தூங்கற ஒரே ஆள் நீ தாண்டா அப்படினு சொல்லுவாரு. சரி அவரும் உண்மைய தானே சொல்லுறாரு, நானும் பேசாம இருந்துடுவேன்.

 10. வெட்டி, நான் என்ன சொல்ல இருந்தேனோ அத அப்படியே பதிவா போட்டுட்ட. அத என்னமோ உனக்கும் எனக்கும் ஒரு அண்டர் ஸ்டாண்டிங்க இருக்கு போல

 11. சோம்பேறி பையனைக் கலாய்க்கவா இந்தப் பதிவு?

  (அப்பாடா மூட்டி விட்டாச்சி இனி அவங்கப் பாத்துப்பாங்க…)

 12. ஆவ்…ரொம்ப டயர்டா இருக்கு… இந்த பிளாக்ல என்ன எழுதியிருக்குன்னு யாராவது படிச்சு சொன்னா நல்லாயிருக்கும்

 13. நல்ல வேளை-எனக்கு இந்த வியாதி இல்லை.
  நம்ம வேலைக்கு இதெல்லாம் சரிப்படாது.பாதி படிக்கட்டு ஏறும் போதே தலை சுத்த ஆரம்பித்துவிடும்.

 14. ஹாவ்…எனக்

 15. பின்னூட்டம் பெருசாப் போடனும்னு ஆசைதான். ஆனா………………….

  🙂

 16. ராம் said…

  //பாலாஜி,

  இந்த வியாதி எனக்கும் இருக்குப்பா!!! //

  அப்பாடி.. இப்பதான் சந்தோஷம் 🙂

 17. //பூங்குழலி said…
  நான் உங்களை விட அதிக சோம்பல் உடையவளாக்கும்..

  மீதியை நாளை வந்து சொல்கிறேன்..

  🙂
  //
  சரி… நான் காத்துட்டிருக்கேன் 😉

 18. // G.Ragavan said…
  பின்னூட்டம் பெருசாப் போடனும்னு ஆசைதான். ஆனா………………….
  //
  தலைவா,
  யூ டூ 🙂

 19. // வடுவூர் குமார் said…
  நல்ல வேளை-எனக்கு இந்த வியாதி இல்லை.
  நம்ம வேலைக்கு இதெல்லாம் சரிப்படாது.பாதி படிக்கட்டு ஏறும் போதே தலை சுத்த ஆரம்பித்துவிடும்.
  //
  ஆஹா… நீங்க ஒருத்தர்தான் இது வரைக்கும் இந்த வியாதி இல்லைனு சொல்லியிருக்கீங்க…
  மருந்த சொல்லலையே 😦

 20. சிவஞானம்ஜி,
  எல்லாரும் உங்களை மாதிரி பின்னூட்டம் போட்டா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்…

  மக்களே, இதெல்லாம் பின்னூட்டக்கயமைத்தனத்துல கணக்குல வராது… ஆமாம் சொல்லிட்டேன் 😉

 21. //தேவ் | Dev said…
  பின்னூட்டம் பெருசாப் போடனும்னு ஆசைதான். ஆனா………………….

  🙂
  //
  போர்வாளே இப்படி சொன்னா என்ன செய்யறது 🙂

 22. //வேந்தன் said…
  ஆவ்…ரொம்ப டயர்டா இருக்கு… இந்த பிளாக்ல என்ன எழுதியிருக்குன்னு யாராவது படிச்சு சொன்னா நல்லாயிருக்கும்
  //
  ஆஹா,
  நமக்கு மேல இருக்கீங்களே!!!

  இப்பதாங்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு 😉

 23. tamilla type pannalaam… aana…

 24. மருந்து நான் சொல்றேன். காலையிலெ 6 மணிக்கு பிகருக்கு அப்பான்ட்மென்ட் கொடுக்கொனும். அப்படியில்லைன்னா 6 மணிக்கு எதிர் வீட்டு பெண் கோலம் பொடுவதை பார்த்தே ஆக வேண்டும் என சபதம் எடுக்க வேண்டும். அப்புறம் …..டயர்டா இருக்கு இன்னொரு நாள் சொல்றேன்.

 25. இப்போ வந்திருக்கிற பின்னூட்டங்களை படிக்கிறதுக்குள்ளே……. ஆவ்வ்வ்

  அப்புறமா வர்றேன்… 🙂

 26. //சாப்பிடறதுக்கு சோம்பேறித்தனம் பட்டுட்டு சாப்பிடாம கூட இருந்திருக்கேன்//

  எவ்வளவு மணி/நாள்/வாரம்/…..? :-)))

  பதிவு எழுதணும்-ன்னு நினைச்சி எழுதாமக் கூட இருந்ததுண்டா?…
  நீங்கள் “இல்லை” என்று பதில் சொன்னால், உங்களுக்கு நோயும் “இல்லை” என்று தான் பொருள்!

  “ஆமாம்/ஆமாம் போல தான் இருக்கு”-ன்னு சொன்னா, இதுக்கு ஒரு மருந்து இருக்கு.
  டைப் அடிச்சு ஒரே டயர்டா ஆயிடுச்சிப்பா…சி யு லேட்டர் 🙂

 27. //நாகை சிவா said…

  வெட்டி, நான் என்ன சொல்ல இருந்தேனோ அத அப்படியே பதிவா போட்டுட்ட. அத என்னமோ உனக்கும் எனக்கும் ஒரு அண்டர் ஸ்டாண்டிங்க இருக்கு போல //

  புலி,
  நீயும் நம்ம இனம்தானா???
  கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா 🙂

 28. //நாகை சிவா said…

  எங்க அப்பாக்கிட்ட இதுக்கு பல தடவை திட்டு வாங்கி இருக்கேன்(அலாரம்) மேட்டருக்கு.

  எட்டு மணிக்கு அலாரம் வச்சி, அத ஆப் பண்ணிட்டு மறுபடியும் தூங்கற ஒரே ஆள் நீ தாண்டா அப்படினு சொல்லுவாரு. சரி அவரும் உண்மைய தானே சொல்லுறாரு, நானும் பேசாம இருந்துடுவேன். //

  புலி,
  ஆனந்த கண்ணீரே வருதுப்பா…

  உலகத்துலயே 9 மணிக்கு அலாரம் வைக்கிற ஒரே ஆள் நீதான்னு எங்க அப்பா சொல்லுவாரு…

  பயமிருந்தா 6 மணிக்கு மேல எப்படி தூக்கம் வரும்னு வேற கேப்பாரு…
  இளம்கன்று பயமரியாதுனு வழக்கம் போல டயலாக் விட வேண்டியதுதான் 😉

 29. //நாகை சிவா said…

  எங்க அப்பாக்கிட்ட இதுக்கு பல தடவை திட்டு வாங்கி இருக்கேன்(அலாரம்) மேட்டருக்கு.

  எட்டு மணிக்கு அலாரம் வச்சி, அத ஆப் பண்ணிட்டு மறுபடியும் தூங்கற ஒரே ஆள் நீ தாண்டா அப்படினு சொல்லுவாரு. சரி அவரும் உண்மைய தானே சொல்லுறாரு, நானும் பேசாம இருந்துடுவேன். //

  புலி,
  ஆனந்த கண்ணீரே வருதுப்பா…

  உலகத்துலயே 9 மணிக்கு அலாரம் வைக்கிற ஒரே ஆள் நீதான்னு எங்க அப்பா சொல்லுவாரு…

  பயமிருந்தா 6 மணிக்கு மேல எப்படி தூக்கம் வரும்னு வேற கேப்பாரு…
  இளம்கன்று பயமறியாதுனு வழக்கம் போல டயலாக் விட வேண்டியதுதான் 😉

 30. //நாகை சிவா said…

  //ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுக்கற கூட்டத்த சேர்ந்த ஆளு..//

  அதே அதே… இதுக்கு எல்லாம் ஒரு தனி திறமை வேணும்ப்பா. இது எல்லாம் எல்லாராலும் முடியாது. நல்ல மனசு வேணும் அதுக்கு எல்லாம். நமக்கு இது இறைவன் கொடுத்த வரம் இது../

  புலி,
  சரியா சொன்ன… அவனவன் தூக்கம் வரலைனு புலம்பறான்… நம்ம நல்லா தூங்கறோம்னு எல்லாருக்கும் பொறாமை…

  ஆனா ஒரு விஷயம் என்னனா, நான் படுக்கறதுக்கு 1 இல்லை 2 ஆயிடும் 🙂

 31. //நாடோடி said…

  தூக்கமா வருது. அப்புறமா வாரேன்… //

  சரி பொறுமையா வாங்க.. ஒண்ணும் அவசரமில்லை.. நான் காத்துட்டிருக்கேன் 🙂

 32. //கார்த்திக் பிரபு said…

  vettipayal ngra perai somberi paiyala nu mathirunga //

  ஆஹா… கார்த்திக் என்னப்பா இது???
  அவர்தான் ஏற்கனவே இருக்காறே!!! அவர் பேற நான் கெடுக்கணுமா?

  அப்பறம் முக்கியமான விஷயம்,
  கார்த்திக் பிரபுன்ற பேற நீ முதல்ல காதல் பிரபுனு மாத்துப்பா 😉

  உன் கவிதைய படிச்சிட்டு அவனவன் அத்தை பொண்ணு இல்லையேனு தாத்தா, பாட்டிய திட்டிக்கிட்டு அலையறானுங்கனு சன் நியூஸ் சிறப்பு பார்வைல வந்துச்சாமே… நிஜமாவா?

 33. //Hariharan # 26491540 said…

  ஹ்ஹாஹாவ்வ்வ்வ்வ்

  முழுசா ஏன் படிக்கணும்… எப்படியும் நல்லாத்தான் எழுதியிருப்பீங்க!

  ஆவ்வ்வ்வ்வ் //

  ஆஹா,
  இப்படி கவுத்துட்டீங்களே தலைவா!!!
  கண்ணுல ஆனந்த கண்ணீரே வருது 🙂

 34. //நாமக்கல் சிபி @15516963 said…

  படிச்சேன். பின்னூட்டம் நாளைக்கு வந்து சுறுசுறுப்பாப் போடுறேனே! //

  தளபதியாரே,
  கண்டிப்பா வரணும்.. இல்லைனா அதை விசாரிச்சி ஒரு பின்னூட்டம் போடப்படும் 🙂

 35. //aparnaa said…

  🙂 //

  என்னங்க.. நம்ம நிலைமைய பாத்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா? 🙂

 36. //Arunkumar said…

  tamilla type pannalaam… aana… //
  சொல்லுங்க…
  இப்படிவிட்டா நாங்க என்னனு நினைக்கிறது?

 37. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  //சாப்பிடறதுக்கு சோம்பேறித்தனம் பட்டுட்டு சாப்பிடாம கூட இருந்திருக்கேன்//

  எவ்வளவு மணி/நாள்/வாரம்/…..? :-)))
  //
  பல தடவை ஒரு நாள் முழுசா கூட சாப்பிடாம இருந்திருக்கேன்…

  //

  பதிவு எழுதணும்-ன்னு நினைச்சி எழுதாமக் கூட இருந்ததுண்டா?…
  நீங்கள் “இல்லை” என்று பதில் சொன்னால், உங்களுக்கு நோயும் “இல்லை” என்று தான் பொருள்!
  //
  இப்பவே 4 கதை இருக்கு… டைப் பண்ண சோம்பேறி தனம் பட்டுட்டு அப்படியே இருக்கு 😦

  //
  “ஆமாம்/ஆமாம் போல தான் இருக்கு”-ன்னு சொன்னா, இதுக்கு ஒரு மருந்து இருக்கு.

  டைப் அடிச்சு ஒரே டயர்டா ஆயிடுச்சிப்பா…சி யு லேட்டர் 🙂 //

  யூ டூ KRS…

 38. //ராம் said…

  இப்போ வந்திருக்கிற பின்னூட்டங்களை படிக்கிறதுக்குள்ளே……. ஆவ்வ்வ்

  அப்புறமா வர்றேன்… 🙂 //

  கண்டிப்பா வரணும்…
  யார் யார் அப்பறமா வரேன்னு சொல்லியிருக்கீங்களோ அவுங்களை எல்லாம் நோட் பண்ணியிருக்கேன்… வரலைனா அதுக்கு ஒரு பதிவு போடப்படும் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் 🙂

 39. // padippavan said…

  மருந்து நான் சொல்றேன். காலையிலெ 6 மணிக்கு பிகருக்கு அப்பான்ட்மென்ட் கொடுக்கொனும். //
  அதெல்லாம் இருந்தா நாம ஏன்ப்பா ப்ளாக் எழுதறோம்… அதுக்கே நேரம் சரியா இருக்காதா 😉

  //
  அப்படியில்லைன்னா 6 மணிக்கு எதிர் வீட்டு பெண் கோலம் பொடுவதை பார்த்தே ஆக வேண்டும் என சபதம் எடுக்க வேண்டும். அப்புறம் …..டயர்டா இருக்கு இன்னொரு நாள் சொல்றேன். //
  ஏன்ப்பா வயித்தெரிச்சல கொட்டிக்கற… நான் படிச்சதெல்லாம் பசங்க படிக்கிற ஸ்கூல், அப்பறம் ஹாஸ்டெல்…

  அப்பறம் காலேஜ் ஹாஸ்டெலுக்கு எதிர்ல யார் கோலம் போடுவாங்க. அதுக்கு அடுத்து பெங்களூர்ல யாருமே கோலம் போடல… இப்ப பாஸ்டன்ல சொல்லனுமா?

 40. //வேந்தன் said…
  ஆவ்…ரொம்ப டயர்டா இருக்கு… இந்த பிளாக்ல என்ன எழுதியிருக்குன்னு யாராவது படிச்சு சொன்னா நல்லாயிருக்கும்
  //

  நான் மிகவும் ரசித்த பின்னூட்டம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  :))))))))))))))))))
  சுறுசுறுப்பா சிரிக்க வெச்சிட்டாருப்பா இந்த வேந்தன்.

 41. யப்பா..நாலு நாளா கஷ்டப்பட்டு ஒரு வழியா இந்த பதிவை படிச்சு முடிச்சு பின்னூட்டமும் போட்டாச்சு 😉

  இந்த நோயெல்லாம் குணப்படுத்த வேண்டிய நோயா?? மருந்து கேட்டுட்டிருக்கீங்களே?? இதெல்லாம் ஒரு வரம்…அனுபவிக்கனும்…

 42. இப்பதாம்பா நிம்மதி!
  நான் தனி ஆள் இல்ல!
  :))))

 43. //தம்பி said…

  இப்பதாம்பா நிம்மதி!
  நான் தனி ஆள் இல்ல!
  :)))) //

  எனக்கும் அதே!!!

  ஆமாம்… அத்திப்பட்டிய மேப்லையே காணோம்னு சொல்லமாட்டீயே 🙂

 44. //கப்பி பய said…

  யப்பா..நாலு நாளா கஷ்டப்பட்டு ஒரு வழியா இந்த பதிவை படிச்சு முடிச்சு பின்னூட்டமும் போட்டாச்சு 😉
  //
  கப்பி,
  இத இன்னைக்குதான் போட்டேன்… 4 நாளைக்கு முன்னாடி எழுதனது போடறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுட்டு விட்டுட்டேன் 😉

  //
  இந்த நோயெல்லாம் குணப்படுத்த வேண்டிய நோயா?? மருந்து கேட்டுட்டிருக்கீங்களே?? இதெல்லாம் ஒரு வரம்…அனுபவிக்கனும்… //
  //
  அப்படினு சொல்றீயா??? அப்ப சரி 🙂

 45. tamil-la type panna somberithanamaa irukkunu solla vanden 🙂

 46. //Arunkumar said…

  tamil-la type panna somberithanamaa irukkunu solla vanden 🙂 //

  இப்படி தெளிவா சொன்னதான புரியும்…
  ஆனா உங்களை ரெண்டாவது பின்னூட்டம் போட வெச்சிட்டேன் பாத்தீங்களா? 😉

 47. //கப்பி,
  இத இன்னைக்குதான் போட்டேன்… 4 நாளைக்கு முன்னாடி எழுதனது போடறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுட்டு விட்டுட்டேன் ;)//

  50!

  அப்ப பதிவு தேதி 25-ன்னு காட்டுச்சே? சரி விடுங்க…சோம்பேறி ப்லாக்கர்..5 நாள் ஸ்லோ 😉

 48. //கப்பி பய said…

  //கப்பி,
  இத இன்னைக்குதான் போட்டேன்… 4 நாளைக்கு முன்னாடி எழுதனது போடறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுட்டு விட்டுட்டேன் ;)//

  50!
  //
  நன்றி!!!

  //
  அப்ப பதிவு தேதி 25-ன்னு காட்டுச்சே? சரி விடுங்க…சோம்பேறி ப்லாக்கர்..5 நாள் ஸ்லோ 😉 //
  இல்லப்பா… பதிவு 25ஆம் தேதி டைப் பண்ணி ரெடியா வெச்சிருந்தேன்… திடீர்னு லொள்ளு எழுதனும்னு தோனுச்சு… சரினு அத எழுதி உடனே போட்டுட்டேன். அப்பறம் சனி, ஞாயிறு வேலை இருந்ததால போட முடியலை. திங்கள் கிழமைதான் போட்டேன். அதனாலத்தான் 25ஆம் தேதி காட்டுது :-)… புரிஞ்சிதா???

 49. //இல்லப்பா… பதிவு 25ஆம் தேதி டைப் பண்ணி ரெடியா வெச்சிருந்தேன்… திடீர்னு லொள்ளு எழுதனும்னு தோனுச்சு… சரினு அத எழுதி உடனே போட்டுட்டேன். அப்பறம் சனி, ஞாயிறு வேலை இருந்ததால போட முடியலை. திங்கள் கிழமைதான் போட்டேன். அதனாலத்தான் 25ஆம் தேதி காட்டுது :-)… புரிஞ்சிதா???
  //

  அட அதைத்தான் நானும் சொல்றேன்..நீங்க பொறுப்பா திங்கட்கிழமை பதிவைப் போட்டீங்களே…ப்லாக்கரும் இதைத் தெரிஞ்சு தானா தேதி மாற வேணாமா?? அதுக்குதான் சொன்னேன்..சோம்பேறி ப்லாக்கர்னு…

  பி.பு: ச்சே..எப்படியெல்லாம் சப்பைகட்டு கட்ட வேண்டியிருக்கு ;))

 50. //
  அட அதைத்தான் நானும் சொல்றேன்..நீங்க பொறுப்பா திங்கட்கிழமை பதிவைப் போட்டீங்களே…ப்லாக்கரும் இதைத் தெரிஞ்சு தானா தேதி மாற வேணாமா?? அதுக்குதான் சொன்னேன்..சோம்பேறி ப்லாக்கர்னு…//

  ஆமாம்பா… நீ சொல்றதுதான் சரி.. நம்ம பப்ளிஷ் பண்ணற டேட்தான் வரணும்.

  யாரப்பா இதை டெஸ்ட் பண்ணது??? யூசர் ரெககொயர்மெண்ட் மீட் பண்ணலப்பா… சீக்கிரம் பக்னு ரிப்போர்ட் பண்ணுங்கப்பா

 51. //மேட்டர் இல்லைனாலும் நல்லா ஒப்பேத்தறாண்டானு யாராவது சொன்னீங்க??? அப்பறம் அதுதான் உண்மைனு நான் ஒத்துக்க வேண்டியது வந்துடும்… ஆமாம் சொல்லிட்டேன்//

  eppaa..ippadi oru vetti pOsta.. en vettinnu per vachchukitteengannu ippO thaan theriyuthu..

 52. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

 53. //Karthikeyan Muthurajan said…

  //மேட்டர் இல்லைனாலும் நல்லா ஒப்பேத்தறாண்டானு யாராவது சொன்னீங்க??? அப்பறம் அதுதான் உண்மைனு நான் ஒத்துக்க வேண்டியது வந்துடும்… ஆமாம் சொல்லிட்டேன்//

  eppaa..ippadi oru vetti pOsta.. en vettinnu per vachchukitteengannu ippO thaan theriyuthu.. //
  ஏனுங்க… இந்த நோய் உங்களுக்கு இருக்கா இல்லையானு அப்படியே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் 😉

 54. //ஆவி அண்ணாச்சி said…

  முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள். எல்லாம் சரியாகிவிடும். //

  ஆவி… இப்பவே அப்படித்தானே செய்யறோம் 🙂

 55. I know the medicine …
  U get some appoinment in every day morning at bustop ( look after some girl) u getup automatically..cos i do..

 56. // Anonymous said…

  I know the medicine …
  U get some appoinment in every day morning at bustop ( look after some girl) u getup automatically..cos i do.. //
  பாசக்கார அனானி,
  நாம இருக்குற ஊர்ல அந்த மாதிரி எல்லாம் பண்ண முடியாது. காலைல இப்ப இருக்குற குளிர்ல நான் வெளிய போய் இந்த மாதிரி நின்னனா குளிர்லயே வெறைச்சி செத்து போயிடுவேன்!!! வேணும்னா பெங்களூர் வந்தவுடனே முயற்சி பண்ணலாம் 😉

 57. //குமரன் (Kumaran) said…

  :-)) //
  இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்…
  உங்களுக்கும் இது இருக்கா? 😉

 58. இத முன்னாடியே பார்த்தேன்…ஆனா இப்போ தான் படிச்சேன்..ஏன்னு சொல்லனுமா என்ன 😉

  ஆனா எனக்கு இந்த வியாதியே சோம்பேறித் தனத்துல விட்டு விட்டு தான் வருது. கடந்த நாலஞ்சு மாசமா இது மறுபடியும் தொத்திக்கிச்சு! ரெண்டு வாரமா நாலு அலாரம் வச்சு எழுந்திரிக்க ட்ரைப் பண்றேன்..ஒன்னும் முடியலை. ஒரு வாரம் தொடர்ந்து அதி காலையில எழுந்துட்டா, சரியா ஏழாம் நாள் மறுபடியும் ஒரு பிண்ணூட்டம் போடறேன் 🙂

  -விநய்*

 59. //அப்பறம் முக்கியமான விஷயம்,
  கார்த்திக் பிரபுன்ற பேற நீ முதல்ல காதல் பிரபுனு மாத்துப்பா 😉

  உன் கவிதைய படிச்சிட்டு அவனவன் அத்தை பொண்ணு இல்லையேனு தாத்தா, பாட்டிய திட்டிக்கிட்டு அலையறானுங்கனு சன் நியூஸ் சிறப்பு பார்வைல வந்துச்சாமே… நிஜமாவா?
  //

  aanalum ungaluku nakkal adhigam..plan panniya madhiri ovvoru padhiva podureengale.nan innum 1 week la kalathila iranguvane..

  anal oru nala namma ella blogers pathi sun news siraupau varvaila varum…

 60. // Anonymous said…

  இத முன்னாடியே பார்த்தேன்…ஆனா இப்போ தான் படிச்சேன்..ஏன்னு சொல்லனுமா என்ன 😉
  //
  ஆஹா.. உங்களுக்கும் இந்த வியாதி இருக்கா???

  // ஆனா எனக்கு இந்த வியாதியே சோம்பேறித் தனத்துல விட்டு விட்டு தான் வருது. கடந்த நாலஞ்சு மாசமா இது மறுபடியும் தொத்திக்கிச்சு! ரெண்டு வாரமா நாலு அலாரம் வச்சு எழுந்திரிக்க ட்ரைப் பண்றேன்..ஒன்னும் முடியலை. ஒரு வாரம் தொடர்ந்து அதி காலையில எழுந்துட்டா, சரியா ஏழாம் நாள் மறுபடியும் ஒரு பிண்ணூட்டம் போடறேன் 🙂

  -விநய்* //
  நான் அலாரத்தை அரை மணி நேரம் முன்னால் வைக்கிறேன்… ஸ்னூஸ்தான் 🙂

  வந்து சொல்லுங்க…

 61. //கைப்புள்ள said…

  . //

  ஏற்கனவே ஒரு புள்ளிய வெச்சி நான் கயமைத்தனம் பண்றேன்னு கொத்ஸ் சொன்னாரு… இப்ப இத நிருபிக்கனுமா???

 62. //aanalum ungaluku nakkal adhigam..plan panniya madhiri ovvoru padhiva podureengale.nan innum 1 week la kalathila iranguvane..

  anal oru nala namma ella blogers pathi sun news siraupau varvaila varum…/
  எனக்கு நக்கல் அதிகமா??? என்னப்பா இப்படி சொல்லிட்ட…

  ப்ளன் பண்ணியா… இதுதான் நக்கல் 🙂

  சரிப்பா சன் நியூஸ்ல வந்துச்சுனா சொல்லு… எங்க வீட்ல நான் சொன்னா சத்தியமா நம்ப மாட்டாங்க…

 63. எனக்கு தெரிஞ்சு காலேஜில படிக்கிற முக்கால்வாசிபேருக்கு இந்த வியாதி இருக்கு. எனக்கும்தான்.. ஆனால், வேலை செய்யும்போது இந்த வியாதி காணாமல் போயிடுது. சனி, ஞாயிறு வீட்டில் இருக்கும்போது இந்த நோய் திரும்பவும் பற்றிகொள்ளுது

 64. //அமுதன் said…

  தல……. நாங்கள்லாம் 9 மணிக்கு அலாரம் வச்சிட்டு 11 மணி வரை ஸ்ணூஸ் போட்டு தூங்குறவங்க…. தூக்கத்துக்காக சாப்பாடு, படிப்பு, பரீட்சைனு எத வேணும்னாலும் தியாகம் பண்ணுவோம்ல…. அப்பு அசர மாட்டோம்… இதெல்லாம் நமக்கு சாதாரணம்…. வரட்டுமா???? //

  அமுதா,
  நீ என் இனம்டா…
  ஆனா கடைசியா பார்த்தா நம்ம தூங்கின நேரம் குறைவா தான் இருக்கும். ஏன்னா நம்ம படுக்கும் போது சேவல் கூவியிருக்கும்… சரியா 😉

 65. // :: MyFriend ::. said…

  எனக்கு தெரிஞ்சு காலேஜில படிக்கிற முக்கால்வாசிபேருக்கு இந்த வியாதி இருக்கு. எனக்கும்தான்.. ஆனால், வேலை செய்யும்போது இந்த வியாதி காணாமல் போயிடுது. சனி, ஞாயிறு வீட்டில் இருக்கும்போது இந்த நோய் திரும்பவும் பற்றிகொள்ளுது //

  காலேஜ்ல தினமும் ஏன்டா இன்னைக்கு காலேஜ் போகனும்னு தோனும். இதே ஏதாவது படம் ரிலீஸ்னா சீக்கிரம் எழுந்திரிச்சி கிளம்பிடுவோம்…

  இப்ப ஆபிஸ் போகும் போது அப்ப அப்ப அதுவே தான் தோனுது… போர் அடிச்சிடுச்சினு நினைக்கிறேன் 🙂

 66. சோம்பேரித்தன வியாதிக்கு மருந்து வேண்டி இந்த பதிவா, இல்ல துணைக்கு ஆள் சேர்க்கவா? 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: