டைரி குறிப்புகள்

போன கதையை படிச்சிட்டு நம்ம ராம் ஏதோ டைரி குறிப்பை பார்க்கற மாதிரி இருக்குனு சொல்லிட்டாரு…

எனக்கு இது என்னோட பெங்களூர் டைரி குறிப்பை நியாபகப்படுத்திடுச்சி…

அடுத்தவங்க டைரி படிக்கறது தப்புனு ஃபீல் பண்ற நல்லவங்க இதோட நிறுத்திக்கோங்க…

இதுக்கு மேல படிக்கறவங்க.. என்ன மாதிரியே ரொம்ப நல்லவங்கனு வெச்சிக்குவோம் 🙂

காலை 7 : வீட்டிலிருந்து அம்மா போன் செய்திருந்தார்கள்.
அம்மா: என்னப்பா ஆபிஸிக்கு கிளம்பிட்டயா?
நான்: குளிச்சிட்டேன்மா… சாப்பிட்டு கிளம்பனும் அவ்வளவுதான்…

காலை 8: அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் படுத்தேன்…

காலை 8:30: ஹீட்டர் போட்டுவிட்டு மண்டும் வந்து படுத்தேன்…

காலை 9 : ஒருவழியா எழுந்திரித்துவிட்டேன்!!!

காலை 9:30 : டிபன் சாப்பிட்டு ஆபிஸிற்கு கிளம்பினேன்

காலை 10: என் சீட்டிலிருந்தேன்…
வந்த இ-மெயில் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்

காலை 10:30: காபி குடிக்கும் நேரம். கேண்டின் சென்றேன்

காலை 11: மீண்டும் சீட்டிற்கு வந்து வந்திருந்த மெயிலுக்கு எல்லாம் பதில் சொல்லி மெயில் அனுப்பினேன்…

சுந்தர் நாயிக்கு அறிவே இல்லை. 15 பேருக்கு இந்த மெயில ஃபார்வேர்ட் பண்ணலனா யாராவது ரத்த வாந்தி எடுத்து சாவாங்களா? இந்த நாயெல்லாம் படிச்சி என்னத்த கிழிச்சுது?

சரி எத்தனை பேத்துக்கு அனுப்பனும்னு இன்னொரு தடவை பாத்துக்குவோம். பயமெல்லாம் ஒன்னும் இல்லை… சும்மா ஜாலிக்குத்தான்…

ராஜேஷ்தான் உண்மையாலும் நல்ல பிரெண்ட்… நல்ல வேளை இந்த மெயில எனக்கு அனுப்பனான். இந்த மெயிலை மட்டும் 20 பேருக்கு அனுப்பினேனா எனக்கு எப்படியும் AOLம் Microsoftம் $765,234 கொடுப்பாங்க. அப்பறம் அந்த காச வெச்சி நாமளும் இந்த மாதிரி ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிடனும். எத்தனை நாளைக்கு தான் இவனுங்களுக்கு கீழ நம்ம வேலை பாக்கறது. குடுக்கற காசுக்கு பிழிஞ்செடுத்தடறானுங்க..

மதியம் 12:00: சாப்பாட்டு நேரம் வந்தாச்சு. வழக்கம் போல் ஹைதராபாதி தம் பிரியாணி சாப்பிட்டு ஒரு ரவுண்டு வாக்கிங் போனேன்.

மதியம் 2: மீண்டும் சீட்டிற்கு வந்தேன்.
சரி நேத்து “R”ல இருக்கவங்களுக்கு போன் பேசியாச்சு. இன்னைக்கு “S”ல இருக்கவங்களுக்கு பேசனும். செல் பொன் எடுத்து “S”ல் ஆரம்பிக்கும் நண்பர்களுக்கு போன் செய்தேன். சுதிருக்கும் என்னை போலவே வேலை அதிகமாம். கம்பனி மாற வேண்டும் என்று சொல்லி கொண்டுருந்தான். எனக்கும் ஏதாவது ஓப்பனிங்ஸ் இருந்தால் சொல்ல சொன்னேன்.

மதியம் 3:30: டீ நேரம்.

மதியம் 4: டீம் மீட்டிங். இந்த மேனஜர் ரொம்ப மோசம். எல்லாரும் வீட்டுக்கு கிளம்பற நேரத்திற்கு மீட்டிங் வைத்திருக்கிறார். “That’s a good idea”, “sorry, I dont think it will work”, “it works as per the client requirement”, “Its not our responsibility. Onsite should have taken care of it”. இந்த வாக்கியங்களை தேவையான இடத்தில் பயன்படுத்திவிட்டேன்.

மாலை 5: ஸ்னாக்ஸ் சாப்பிட கேன்டீன் சென்றோம். நேத்து பானி பூரி சாப்பிட்டாச்சு… இன்னைக்கு பேல் பூரி சாப்பிடுவோம்.

மாலை 6: டாக்குமண்ட் வேலை செய்ய ஆரம்பித்தேன்… நடுநடுவே மதியம் வந்த மெயிலுக்கு பதில் அனுப்பினேன். அப்படியே சில நண்பர்கலிடமிருந்து வந்த போன் கால்களுக்கும் பதில் சொல்லிவிட்டு ஒரு வழியாக வேலையை முடித்தேன்.

இரவு 8: ஆன் சைட்டிற்கு டாக்குமெண்டை மெயில் செய்தேன்.

இரவு 9: வீட்டிற்கு புறப்பட்டேன்…

இரவு 10: சாப்பாடு முடித்துவிட்டு… சன் மியுசிக் பார்த்து கொண்டே நண்பர்களுடன் அரட்டை

இரவு 12:30: படுக்கைக்கு சென்றேன்…

இதுதாங்க நம்ம பெங்களூர் வாழ்க்கை… எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பாத்துருக்கேன்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும்!!!

அதுக்குதான் இவன் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லடானு சொல்லி அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சியிருக்காங்க 😉

52 பதில்கள்

 1. மக்கா!!! இது சும்மா ஜாலிக்காக எழுதன பதிவுதான்…

  நம்ம பேங்களூர்ல இருக்கும் போது காலைல 9 மணில இருந்து ராத்திரி 12 மணி வரைக்கும் பல நாள் கும்மியிருக்காங்க…

 2. enungaa. entha copmanynga neenga. nananum bangaloreukku thirubma polamnnu irukkenunga. opening ethachum irukkuthungala namma companayela

 3. எங்கப்பா தலப்பாடா அடிச்சிக்குவாரு, தினமும் நடந்தத
  ஒரு குறிப்பா எழுதுடான்னு! நம்ம கொள்கையே யார்
  சொல்றதையும் கேக்காகம இருக்கறதுதான.

  பின்னூடக்கயமை செய்யிற சங்கத்தின் தலைவர் வெட்டி வாழ்க!!

 4. //Akil S Poonkundran said…
  enungaa. entha copmanynga neenga. nananum bangaloreukku thirubma polamnnu irukkenunga. opening ethachum irukkuthungala namma companayela
  //
  இது தனிப்பட்ட ஒரு கம்பெனினு இல்லைங்க… பெங்களூர், சென்னைல இருக்குற எந்த கம்பெனிக்கு வேணா போங்க… ஆனா நீங்க இதுக்கு மேனஜரா இருக்கனும் 😉

 5. //தம்பி said…
  எங்கப்பா தலப்பாடா அடிச்சிக்குவாரு, தினமும் நடந்தத
  ஒரு குறிப்பா எழுதுடான்னு! நம்ம கொள்கையே யார்
  சொல்றதையும் கேக்காகம இருக்கறதுதான.
  //
  வேணாம் தம்பி… அப்பறம் திடீர்னு அத தூக்கி ஆறாம் கிளாஸ் பாட புத்தகத்துல போட்டுட போராங்க… பாவம் வருங்கால சந்ததியினர் நல்லா இருக்கட்டுமே 😉

  //
  பின்னூடக்கயமை செய்யிற சங்கத்தின் தலைவர் வெட்டி வாழ்க!!
  //
  தம்பி,
  அந்த சங்கத்தின் நிரந்தர தலைவர் எங்க கொத்ஸ்தான் 😉

 6. —வழக்கம் போல் ஹைதராபாதி தம் பிரியாணி சாப்பிட்டு ஒரு ரவுண்டு வாக்கிங் போனேன்.—

  இது நாளுக்கு நாள் மாறுபடுமே 😛

  ஒரு நாள் சைனீஸ், ஆந்திரா மெஸ், பீட்ஸா, என்று தினந்தோறும் குறிப்புகளைப் போடவும் ; )

  —இவன் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லடானு சொல்லி அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சியிருக்காங்க—

  இங்கே நடப்பதையும் குறித்து வைத்து, இந்தியா திரும்பியவுடன் பகிர்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன் (ஜி.ரா. உங்க ஆஃபீஸ்தானே ; )

 7. தொழில் ரகசியத்தை வெளியே சொல்லிட்டியே வெட்டி, நான் சென்னைல இருந்த வரை இப்படித்தான்… எங்க டீமே உக்காந்து Age of Empires லாம் விளையாடிருக்கோம், இப்போ எல்லாத்துக்கும் சேத்து வைச்சு… ஹூம்!

 8. //Boston Bala said…
  —வழக்கம் போல் ஹைதராபாதி தம் பிரியாணி சாப்பிட்டு ஒரு ரவுண்டு வாக்கிங் போனேன்.—

  இது நாளுக்கு நாள் மாறுபடுமே 😛

  ஒரு நாள் சைனீஸ், ஆந்திரா மெஸ், பீட்ஸா, என்று தினந்தோறும் குறிப்புகளைப் போடவும் ; )

  //
  இல்லைங்க… தினமும் அதுதான் 😉
  வேணும்னா எப்பவாவது ஆந்திரா மீல்ஸ் சாப்பிடுவேன் 😉

  பெங்களூர்ல சாம்பார்ல வெல்லம் போடுவாங்க… அதனால வெஜ் சாப்பிடறது ரொம்ப அதிசயம் 😉

  //இங்கே நடப்பதையும் குறித்து வைத்து, இந்தியா திரும்பியவுடன் பகிர்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன்//
  கண்டிப்பாக… ஆனால் இந்தியாவில பிளாக் எழுத நேரம் கிடைக்காது 😉

  //(ஜி.ரா. உங்க ஆஃபீஸ்தானே ; ) //
  அப்ப அவர் எங்க ஆபிஸ்ல இல்ல 😉

 9. //ராசுக்குட்டி said…
  தொழில் ரகசியத்தை வெளியே சொல்லிட்டியே வெட்டி, நான் சென்னைல இருந்த வரை இப்படித்தான்… எங்க டீமே உக்காந்து Age of Empires லாம் விளையாடிருக்கோம், இப்போ எல்லாத்துக்கும் சேத்து வைச்சு… ஹூம்!
  //
  ஐயோ இது சும்மாச்சுக்கும் எழுதுனது…

  நமக்கு இந்த Age of Empires மட்டும் ஒத்துக்கறதில்ல… நாங்க Brian Lara Cricket Fans

 10. பாலாஜி:-))

  சாப்ட்வேர் துறை சவால்கள் நிறைந்தது என தெரியும்.ஓபி அடிக்கும் சில நாட்கள் அனைத்து துறையிலும் உண்டு.

  எங்கள் கல்லூரியில் இன்று வெள்ளிகிழமை 6.30 முதல் 8.30 வரை ஒரு மீட்டிங் வைத்துள்ளனர். ஆனால் காலையில் இருந்து ஓபிதான்:-))

 11. //சரி நேத்து “R”ல இருக்கவங்களுக்கு போன் பேசியாச்சு. இன்னைக்கு “S”ல இருக்கவங்களுக்கு பேசனும்.//

  அடங்கொக்கா மக்கா..இது தான் விஷயமா? என் பால்ய “ஸ்நேக்கிதன்” ரொம்ப நாள் கழிச்சி, நேத்து என்னைக் கூப்பிட்டு அன்பைக் கொட்டினான். இன்னிக்கி சங்கரதாஸ் என்ற இன்னொரு நண்பர் கிட்ட மூனு மணி நேரம் பேசினான்-னு சொன்னார்! இது RS டெக்னிக்கா? அய்யோ நாளிக்கி தியாகராஜனா? இப்பவே தியாகுவைக் கூப்பிட்டு வார்ண் பண்ணனும்! நாட்டுல மக்கள்ஸ் என்னான்மோ கண்டு புடிக்கிறாங்கப்பா….

 12. ROTFL…கரெக்டா சாப்ட்வேர் இண்ஜினியர் வேலையெ ஒழுங்கா பார்த்து இருக்கீங்க…gud gud 🙂

 13. //செல்வன் said…
  பாலாஜி:-))

  சாப்ட்வேர் துறை சவால்கள் நிறைந்தது என தெரியும்.ஓபி அடிக்கும் சில நாட்கள் அனைத்து துறையிலும் உண்டு.

  எங்கள் கல்லூரியில் இன்று வெள்ளிகிழமை 6.30 முதல் 8.30 வரை ஒரு மீட்டிங் வைத்துள்ளனர். ஆனால் காலையில் இருந்து ஓபிதான்:-))
  //
  இந்த மாதிரி வருஷத்துல ஏதாவது 2, 3 வாரம் இருக்கும்… அதுவும் தொடர்ந்து இல்ல 😦

 14. //நாட்டுல மக்கள்ஸ் என்னான்மோ கண்டு புடிக்கிறாங்கப்பா….
  //
  KRS,
  இப்படியெல்லாம் புதுசு புதுசா பண்ணாதான் மக்கள் எல்லாம் டச்ல இருப்பாங்க…

  இப்பக்கூட பாருங்க உங்க பிரெண்டுதான் உங்களை கூப்பிட்டுருக்காரு… நீங்க கூப்பிடலையே 😉

 15. //Syam said…
  ROTFL…கரெக்டா சாப்ட்வேர் இண்ஜினியர் வேலையெ ஒழுங்கா பார்த்து இருக்கீங்க…gud gud 🙂
  //
  தல,
  ரகசியத்த வெளிய சொன்னதுல பிரச்சனையில்லையே? 😉

 16. // அமுதன் said…
  :))))))
  //
  டாங்க்ஸ்

 17. //மக்கா!!! இது சும்மா ஜாலிக்காக எழுதன பதிவுதான்…//

  யோவ் வெட்டி நல்லா காமெடி பண்ணுறியா நீ…. இப்படி சொன்னா இத எல்லாம் நாங்க நம்பி விடுவோமா என்ன? :)))))))))))

  சரியா தான்ய்யா உன் பெயரு இருக்கு 😉

 18. //ரகசியத்த வெளிய சொன்னதுல பிரச்சனையில்லையே//

  நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பு இல்ல… 🙂

 19. //நாகை சிவா said…
  //மக்கா!!! இது சும்மா ஜாலிக்காக எழுதன பதிவுதான்…//

  யோவ் வெட்டி நல்லா காமெடி பண்ணுறியா நீ…. இப்படி சொன்னா இத எல்லாம் நாங்க நம்பி விடுவோமா என்ன? :)))))))))))
  //
  புலி,
  நியாயமா இது உன்னோட டைரில இருந்துதான் பாத்து எழுதனன்னு உண்மைய சொல்லிருக்கனும்.

  சரி யூ அர் மை பெஸ்ட் ஃபிரெண்ட்னு விட்டா நீ என்னைய கலாய்க்கறியா???

  //சரியா தான்ய்யா உன் பெயரு இருக்கு 😉 //
  :-))
  //

 20. //சரி யூ அர் மை பெஸ்ட் ஃபிரெண்ட்னு விட்டா நீ என்னைய கலாய்க்கறியா???//

  வீ ஆர் ஆல்வேஸ் பெஸ்ட் பிரண்ட் வெட்டி.
  இருந்தாலும் உண்மைனு ஒன்னு இருக்குல. நீதி தோத்துட கூடாதுல, நியாயம் செத்துட கூடாதுல அதுக்கு தான் அந்த பின்னூட்டம், நீ ஏதும் பீல் பண்ணாதடி செல்லம். 🙂

 21. //Syam said…
  //ரகசியத்த வெளிய சொன்னதுல பிரச்சனையில்லையே//

  நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பு இல்ல… 🙂
  //
  தல சொன்னா சரிதான்…
  சீக்கிரமே இன்னும் இந்த மாதிரி பல ரகசியங்களை சொல்லவோம் 😉

 22. // நாகை சிவா said…
  //சரி யூ அர் மை பெஸ்ட் ஃபிரெண்ட்னு விட்டா நீ என்னைய கலாய்க்கறியா???//

  வீ ஆர் ஆல்வேஸ் பெஸ்ட் பிரண்ட் வெட்டி.
  இருந்தாலும் உண்மைனு ஒன்னு இருக்குல. நீதி தோத்துட கூடாதுல, நியாயம் செத்துட கூடாதுல அதுக்கு தான் அந்த பின்னூட்டம், நீ ஏதும் பீல் பண்ணாதடி செல்லம். 🙂
  //
  ஓ உண்மையா அது உன் டைரில இருந்து நான் பாத்து எழுதினேன்னு மக்களுக்கு என் மூலமாவே தெரியப்படுத்தனும்னு என் மேல அப்படி ஒரு பழியப்போட்டியா புலி…

  நியாயத்துக்காக நீ போராடறது எனக்கு புல்லரிக்க வெக்குது 😉

 23. Nalla eshuti irunteenga, padikka aarvamaaga iruntathu 🙂

 24. //தல சொன்னா சரிதான்//

  அண்ணாத்த நமக்கு எல்லாம் ஒரே தல நம்ம கைப்பு தான்..அந்த பட்டம் அவருக்கு தான் பொருந்தும் 🙂

  தல தல னு கேப்புல ஆப்பு வெச்சுடாதீங்கப்பு 🙂

 25. //நீதி தோத்துட கூடாதுல, நியாயம் செத்துட கூடாதுல அதுக்கு தான் அந்த பின்னூட்டம்//

  பங்கு நீதிக்காக உன்னோட போராட்ட குனத்த பார்த்து புல் அரிச்சு போச்சு… 🙂

 26. //C.M.HANIFF said…
  Nalla eshuti irunteenga, padikka aarvamaaga iruntathu 🙂
  //
  daanksnga!!!

 27. //Syam said…
  //தல சொன்னா சரிதான்//

  அண்ணாத்த நமக்கு எல்லாம் ஒரே தல நம்ம கைப்பு தான்..அந்த பட்டம் அவருக்கு தான் பொருந்தும் 🙂

  தல தல னு கேப்புல ஆப்பு வெச்சுடாதீங்கப்பு 🙂
  //
  உங்க பதிவெல்லாம் படிச்சேன்…
  அதுக்கு அப்பறம் என்னையறியாமலே வந்துடுச்சு…

  பட்டைய கிளப்பறீங்க…

 28. //உங்க பதிவெல்லாம் படிச்சேன்…
  அதுக்கு அப்பறம் என்னையறியாமலே வந்துடுச்சு…
  பட்டைய கிளப்பறீங்க… //

  ரொம்ப நன்றிங்கோவ்…வசிஷ்டர் வாயால பிரம்ம ரிஷி பட்டம் வாங்கின மாதிர் இருக்கு… 🙂

  உங்கள மாதிரியே நானும் ஒரு busy schedule போட்டு இருகேன் பார்த்தீங்களா 🙂

 29. Syam,
  படிச்சேங்க… சூப்பர்
  நீங்க தமிழ்மணத்துல உங்க பிளாக்கை சேர்த்தா இன்னும் நிறைய பேர் படிப்பாங்க… அப்பறம் புதுசா எதாவது பதிவு போட்டா தெரியும்.

  அட்டகாசமா எழுதறீங்க!!!

 30. //எத்தனை பேத்துக்கு அனுப்பனும்னு இன்னொரு தடவை பாத்துக்குவோம். பயமெல்லாம் ஒன்னும் இல்லை..//

  வயத்துல புளிய கரைச்சிருக்கும்ம்னு நினைக்கிறேன்..இல்லைய வெட்டி..

  //அதுக்குதான் இவன் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லடானு சொல்லி அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சியிருக்காங்க //

  அதே வேலையை இங்கே செய்யத்தானே..

 31. //வயத்துல புளிய கரைச்சிருக்கும்ம்னு நினைக்கிறேன்..இல்லைய வெட்டி..//
  கார்த்தி,
  நம்ம இந்த மூட நம்பிக்கைல எல்லாம் நம்பறதில்லை… ஆனா நம்ம அத அனுப்பலனா நம்ம ஃபிரெண்ட் ஃபீல் பண்ணுவான்… அதனாலதான் 😉

  //அதே வேலையை இங்கே செய்யத்தானே.. //
  இல்லையே!!! இங்க பிளாகும் எழுதறோமில்லை 😉

 32. நீங்களுமா… :))
  நாங்களும் ‘Need for Speed’ எல்லாம் விளையாடினாலும், நான் Bangaloreல இருந்த ஒரு வருஷம், நல்லா பிழிந்சுட்டாங்க! ஏதோ இங்க வந்து தான் கொன்ஜம் கம்மியா இருக்கு 🙂
  -விநய்*

 33. //Anonymous said…

  நீங்களுமா… :))
  நாங்களும் ‘Need for Speed’ எல்லாம் விளையாடினாலும், நான் Bangaloreல இருந்த ஒரு வருஷம், நல்லா பிழிந்சுட்டாங்க! ஏதோ இங்க வந்து தான் கொன்ஜம் கம்மியா இருக்கு 🙂
  -விநய்*//

  நீங்களும் பெங்களூர்ல தான் இருந்தீங்களா??? சூரியகாந்தி கம்பெனியா இல்ல டை கம்பெனியா???

  NFS 2 இல்ல 5 வா?
  நான் 2 தான் விளையாடுவேன். அப்பறம் Road Rash விளையாடுவோம்… அப்பறம் Commandoeனு ஒரு கேம்… அதை காலேஜ் கட் பண்ணிட்டு எல்லாம் கூட விளையாடியிருக்கோம் 😉

 34. வெட்டி,
  நல்லா எழுதிருக்கீங்க…குறிப்பா முடிச்ச விதம் நல்லாருக்கு.
  🙂

 35. //enRenRum-anbudan.BALA said…

  Nice post, balaji :)//

  Thx Bala

 36. //கைப்புள்ள said…

  வெட்டி,
  நல்லா எழுதிருக்கீங்க…குறிப்பா முடிச்ச விதம் நல்லாருக்கு.
  :)//

  வா தல!!! அடுத்து நம்ம சங்கம் டெக்னாலஜிஸ்ல நம்ம பண்ற வேலையும் போட்டுடுவோம் 😉

 37. டை கம்பெனி தான் 😉 அப்புறம் மாறிட்டேன். NFS 2 தான்.. அது தான் கொன்ஜம் ஈஸியா இருக்கும். ஒரே சிஸ்டத்துல ரெண்டு பேர் Race விளையாடுவோம் 🙂 அதெல்லாம் ஒரு காலம்!
  -விநய்*

 38. //Anonymous said…

  டை கம்பெனி தான் 😉 அப்புறம் மாறிட்டேன். NFS 2 தான்.. அது தான் கொன்ஜம் ஈஸியா இருக்கும். ஒரே சிஸ்டத்துல ரெண்டு பேர் Race விளையாடுவோம் 🙂 அதெல்லாம் ஒரு காலம்!
  -விநய்*//
  ஆஹா… என்ன ஒத்துமை…
  நான் இன்னும் மாறலை 😉
  சொல்ல முடியாது நம்ம பாத்திருக்கக்கூட வாய்ப்பு இருக்கு… சரி இனிமே இங்க வேண்டாம்…

  உங்க மெயில் ஐடி தர முடியுமா??? பப்ளிஷ் பண்ண மாட்டேன் 😉

 39. அப்பா! நல்லவேளை பின்னூட்டம் போடறதும் வெட்டியா இருக்கறவங்கதான்னு யாரும் சொல்லல

 40. :))

  டைரி குறிப்பெல்லாம் பட்டையைக் கிளப்புது…

  நம்ம எல்லாருக்கும் சேர்த்து ஒரே டைரி போதும் போல.. :))

 41. //வேந்தன் said…
  அப்பா! நல்லவேளை பின்னூட்டம் போடறதும் வெட்டியா இருக்கறவங்கதான்னு யாரும் சொல்லல
  //
  பின்னூட்டமிடுபவர்கள் எல்லாம் ரொம்ப நல்லவங்க … போதுமா???

 42. //கப்பி பய said…
  :))

  டைரி குறிப்பெல்லாம் பட்டையைக் கிளப்புது…

  நம்ம எல்லாருக்கும் சேர்த்து ஒரே டைரி போதும் போல.. :))
  //
  கப்பி,
  உருகுவேலையும் உன் டைரி குறிப்பு இதுதானா??? 😉

 43. Hi Vetti, nejamavey ipdi than office la velai parpeengla ??? Nambavey mudilla!

 44. //Divya said…

  Hi Vetti, nejamavey ipdi than office la velai parpeengla ??? Nambavey mudilla!//
  ஏனுங்க… நிஜமாலும் இந்த மாதிரி இருந்தா நான் ஏங்க இங்க வர போறேன்… அப்படியே ஜாலியா வாழ்க்கைய என்ஜாய் பண்ணியிருக்க மாட்டோம் 😉

  அதெல்லாம் சும்மா ஜாலிக்காக எழுதறது…

 45. பாலாஜி,

  என்னோட பேரல்லொம் போட்டிருக்கே… இந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யபோறேன்…

 46. // ராம் said…
  பாலாஜி,

  என்னோட பேரல்லொம் போட்டிருக்கே… இந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யபோறேன்…
  //
  பதிவு போட்டு 4 நாளைக்கு அப்பறம் வந்து கேக்கற கேள்வியா இது??? 😉

  உங்க அன்பே போதும்… இதுக்கு மேல உலகத்துல வேற என்ன வேணும் 🙂

 47. // பாலா said இங்கே நடப்பதையும் குறித்து வைத்து, இந்தியா திரும்பியவுடன் பகிர்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன் (ஜி.ரா. உங்க ஆஃபீஸ்தானே ; ) //

  // வெட்டி said //(ஜி.ரா. உங்க ஆஃபீஸ்தானே ; ) //
  அப்ப அவர் எங்க ஆபிஸ்ல இல்ல 😉 //

  இதோ இப்பொழுதே பேச வேண்டியவர்களிடம் பேசி வைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் பொறி (பொரி அல்ல) வைக்கப்பட்டு விட்டது. இனிமேல் வெட்டியானவர் மிகவும் கவனமானவராக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார். ஹி ஹி

 48. //இதோ இப்பொழுதே பேச வேண்டியவர்களிடம் பேசி வைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் பொறி (பொரி அல்ல) வைக்கப்பட்டு விட்டது. இனிமேல் வெட்டியானவர் மிகவும் கவனமானவராக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார். ஹி ஹி//

  இதெல்லாம் உண்மைனு நீங்களும் நம்பிட்டீங்களா???

  என்ன கொடுமை சரவணன்??? டெஸ்டிங்ல Execution சமயத்தில சாப்பிடாமலே வேலை செய்த சமயங்களும் உண்டு… வேணும்னா பழைய மேனஜர்ட பேசிக்கலாம் 😉
  உலகத்திலே ரொம்ப கொடுமையான உணவான பிசா சாப்பிட்ட சமயங்கள் பல… (மேனஜர் காசுல தான் ;)) ஆனா அது இரவு 9 மணிக்கு மேல மட்டும் 😉

  உண்மைய சொன்ன யாரும் சாப்ட்வேர் ஃபீல்டுக்கே வர மாட்டாங்க 😉

  என் தங்கச்சி (சித்தப்பா பெண்) கல்யாணத்துக்கு கூட லீவு கிடைக்கல :-(…
  நம்ம பதிவுக்கு எல்லாம் இந்த மாதிரி சோகத்தை படிக்கவா வராங்க… படிச்சா ஜாலியா இருக்கனும்.. அதுக்குத்தான் இந்த மாதிரி எல்லாம் 😉

 49. //உண்மைய சொன்ன யாரும் சாப்ட்வேர் ஃபீல்டுக்கே வர மாட்டாங்க ;)//

  வெட்டி -> அவ்வளவு கஷ்டமா படறோம்… ஓ ஸ்மைலிய கவனிக்கல ;-))

 50. //வெட்டி -> அவ்வளவு கஷ்டமா படறோம்… ஓ ஸ்மைலிய கவனிக்கல ;-)) //
  அது மாத்தி போட்ட ஸ்மைலிப்பா 😦

  ஏம்ப்பா!!! சந்தோஷமான பதிவ சோகமாக்கிட்டு…

  நாங்கெல்லாம் சிங்கம் மாதிரி… பாதி நேரம் ரெஸ்ட் எடுக்கற மாதிரி இருக்கும்.. வேட்டையில இறங்கினோம்னா காடே நடுங்கும் 😉 (எப்படி இந்த பில்ட்-அப்பு)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: