சுக்கல்லோ சந்திருடு

மக்களே!!! உங்களுக்காக மீண்டும் ஒரு தெலுகு படம்…

படம் வந்து பல நாட்களானாலும் சமீபத்தில்தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
சரி உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த பதிவு.

படத்தின் நாயகன் சித்தார்த். நாயகிகள் சதா, சார்மி, சலோனி (இந்த ஒரு காரணத்திற்காகத்தான் DVD எடுத்தோம் ;))

வெளிநாட்டில் சந்தோஷமாக வாழும் கதாநாயகன், தன் தாத்தா(ANR) வின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால் தனக்கு பிடித்த பெண்ணைதான் திருமணம் செய்வேன் என்று முடிவெடுக்கிறார்.

சிறுவயதில் தன்னுடன் பழகிய பெண்களில் யாராவது ஒருவரை காதலித்து திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் நாயகன். ஆனால் அவர்களுக்கு தான் யாரென்று சொல்லாமல் அவர்களும் தன்னை விரும்பும் பட்சத்தில் அதில் ஒருவரை மணக்க திட்டமிடுகிறார். அவருக்கு துணைக்க்கு நண்பனாக சுனில் (நம்ம விவேக் மாதிரி)


முதல் நாயகி சலோனி, டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை (சானியா மிர்சா மாதிரி). அவளை நாயகன் கவரும் விதம் அருமை. சித்தார்த்ட்துடன் ஊர் சுற்றுவதற்காக முக்கியமான ஆட்டத்தில் தோற்கிறார் சலோனி. அதற்காக சித்தார்த் மிக்க மகிழ்ச்சியடைகிறார். (இந்த இடத்தில் எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு வாக்குவாதமே நடைப்பெற்றது. இந்தியாவை ரெப்ரசண்ட் செய்யும் நாயகி காதலுக்காக வேண்டுமென்றே தோற்பது தவறான ஒரு செயலென்று அவன் சொல்ல. காதலுக்கு முன் எதுவுமே பெரிதல்ல… அதுவும் போக டென்னிஸ் நாடுகளுக்கிடையே நடுக்கும் போட்டியுமல்ல என்று நான் சொல்ல… இறுதியில் இருவருமே அவரவர் எண்ணமே சரியென்று முடித்து கொண்டோம்). ஆனால் இதனால் மனமுடையும் நாயகியின் தந்தை பிரதாப் போத்தனுக்காக காதலை தியாகம் செய்கிறார் சித்தார்த்.


இரண்டாவது நாயகி சார்மி (இவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டோம்). இவருக்கு அட்டகாசமான பாத்திரம், சமுதாயத்திற்காக உழைக்கும் பாத்திரம் (சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்). அடிக்கடி உணர்ச்சிவசப்படும் பாத்திரம். அருமையாக செய்திருக்கிறார். இவரிடம் மாட்டிக்கொண்டி சித்தார்த்தும், சுனிலும் தவிக்கும் காட்சிகள் அருமை. இவருக்கும் சித்தார்த்திற்கும் திருமணம் வரை கொண்டு சென்று இறுதியில் அவரை அவர் காதலன் பிரபுதேவாவுடன் இணைக்கிறார் சித்தார்த்.


மூன்றாவது நாயகி சதா, டாக்டருக்கு படிக்கும் சராசரி நடுத்தர வர்க்கத்து பெண். தன்னம்பிக்கையிழந்து ஓரளவு பயந்த சுபாவம் உள்ள இவரை மாற்றுகிறார் நாயகன். இறுதியில் சதா இவரை தவறாக புரிந்து கொண்டு வேறொருவரை மணக்க சம்மதித்து, திருமணம் வரை சென்று இறுதியில் சித்தார்த்தை கை பிடிக்கிறார்.

படத்தின் பாடல்கள் மனதை கவரும் விதமாக அமையாதது ஒரு பெரிய குறை. மேலும் நாயகனுக்கு நாயகி மேல் காதல் வரும் இடமும் அழுத்தமாக இல்லை. மூன்று நாயகிகளை வைத்து இன்னும் இளமையாக எடுத்திருக்கலாம். ஆனால் படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

இது இயக்குனருக்கு முதல் படமென்று நினைக்கிறேன். அடுத்த படம் இன்னும் சிறப்பாக எடுப்பார் என்று நம்புவோம்.

16 பதில்கள்

 1. என்ன வெட்டிபயல், எப்ப பார்த்தாலும் தெலுகு படம், கொல்ட்டி என கதை . எதோ அம்மாயிடம் மனதை பறிக்கொடுத்துவிட்டீர்களா

 2. அதெல்லாம் இல்லைங்க… நம்ம பழைய ரூமெட் தெலுகு… அவர்கூட தங்கி இருந்த ஆறு மாசமும் தெலுகு படம் பார்த்தேன்…

  பொம்மரில்லு நானே ஆசைப்பட்டு போட்டேன்…இது நேயர் விருப்பம்… இன்னும் 2,3 படம் போட சொல்லி சொல்லியிருக்கார் அந்த அனானி நண்பர்… இப்பதான் நேரம் கிடைச்சுது 😉

 3. கதை நல்லா இருக்கு.ஆனாலும் மசாலா வாசனை அடிக்குது.முதல் காதலி கூடவே சேர்ந்திருந்திருக்கலாம்னு படுது.

 4. செல்வன்,
  இது மூன்றும் ஒன்னுக்கப்பறம் ஒன்னுனு நடக்கறதில்லை. ஒவ்வொரு ஹீரொயினும் பத்து பத்து நிமிஷம்னு ட்ரேக் போகும் 😉

  தெலுகு படங்களை பொருத்தவரை இதெல்லாம் மசாலாவே கிடையாது.. அந்த மாதிரி படமும் எழுதறேன்… சூப்பரா இருக்கும் 😉

 5. இந்தப் படம் பெரிய ஹிட்டாகாததற்கு இதுதான் காரணமா! என்னுடைய கல்லூரியில் கூட படித்தவர்தான் இந்தப் படத்தின் இயக்குநர் : )

  என்னுடைய முந்தைய பதிவு: (மீண்டும்) இயக்குநராகும் தோழன்

 6. //Boston Bala said…

  இந்தப் படம் பெரிய ஹிட்டாகாததற்கு இதுதான் காரணமா! என்னுடைய கல்லூரியில் கூட படித்தவர்தான் இந்தப் படத்தின் இயக்குநர் : )//
  ஆஹா,
  இது தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அடக்கிவாசிச்சிருக்கலாம். இருந்தாலும் அவர்ட சொல்லுங்க, தெலுகு படம்னா ஹீரோயின்ஸ் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்யனும், அளவுக்கு அதிகமா பேசணும். அது இந்த படத்துல மிஸ்ஸிங்.

  அடுத்த படம் ரெடி பண்ணிட்டாரா? நம்ம வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க!!!

 7. //இவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டோம்..//

  ‘பொலிட்டிகல் ரெளடி’ பாத்ததுக்கு அப்புறம் கண்டிப்பாக இக்கூற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  கோதாவரி பாத்தாச்சா?
  நேத்துதான் DVD ப்ரிண்ட் பாத்தோம். அருமையான படம்.

  //தெலுகு படங்களை பொருத்தவரை இதெல்லாம் மசாலாவே கிடையாது.. //

  ‘விக்ரமார்க்குடு’ பாத்துட்டு எழுதுங்க.. 🙂

 8. //பெத்த ராயுடு said…

  //இவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டோம்..//

  ‘பொலிட்டிகல் ரெளடி’ பாத்ததுக்கு அப்புறம் கண்டிப்பாக இக்கூற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
  //
  பாலைய்யா படமா??? எப்படியும் மசாலா படமாத்தான் இருக்கும்.

  அனுகோக்கண்ட ஒக ரோஜு பாத்துட்டுதான் நான் அந்த முடிவுக்கு வந்தேன்.
  //
  கோதாவரி பாத்தாச்சா?
  நேத்துதான் DVD ப்ரிண்ட் பாத்தோம். அருமையான படம்.
  //
  டவுன்லோட் ஆகிட்டு இருக்கு.
  DVD-RIPதான் பார்ப்போம் 😉

  //
  //தெலுகு படங்களை பொருத்தவரை இதெல்லாம் மசாலாவே கிடையாது.. //

  ‘விக்ரமார்க்குடு’ பாத்துட்டு எழுதுங்க.. :)//
  //
  டவுன் லோட் பண்ணியாச்சு. பார்த்தா ஆடியோவும் வீடியோவும் மேட்ச் ஆகல. அதுக்குத்தான் மென்பொருள் தேடிக்கிட்டூ இருக்கோம் 😉

 9. //பாலைய்யா படமா??? எப்படியும் மசாலா படமாத்தான் இருக்கும்.//

  இல்ல…, இது மோஹன்பாபுவோட படம்.

  ஆமா, அநுக்கோ கொண்ட ஒகரோஜுவில சார்மியோட நடிப்பு நல்லாருக்கும். இப்பத்தான் மேற்படி கமெண்ட்ல சிரிப்பான் போட மறந்தது ஞாபகத்துக்கு வருது. :)))

 10. //பெத்த ராயுடு said…

  //பாலைய்யா படமா??? எப்படியும் மசாலா படமாத்தான் இருக்கும்.//

  இல்ல…, இது மோஹன்பாபுவோட படம்.
  //
  ஓ!!! உங்க படமா (பெத்த ராயுடு ;))

  அப்ப கண்டிப்பா பாக்க வேண்டிய படம்தான் 😉

  //

  ஆமா, அநுக்கோ கொண்ட ஒகரோஜுவில சார்மியோட நடிப்பு நல்லாருக்கும். இப்பத்தான் மேற்படி கமெண்ட்ல சிரிப்பான் போட மறந்தது ஞாபகத்துக்கு வருது. :)))//
  ஆமாம்… இருந்தாலும் நீங்க நக்கலுக்குத்தான் சொன்னீங்கனு படத்து பேர் வெச்சே யூகிச்சிட்டேன் 😉

 11. அனானிமஸ் நண்பரே,
  நீங்க கேட்ட ரெண்டு படத்துக்கும் விமர்சனம் இந்த வாரத்துக்குள்ள கண்டிப்பா போட்டுடறேன்… தவறாக நினைத்து கொள்ளாதீர்கள்…

 12. நம்ம ஆந்திர விஜயகாந்த்தின் வீரபத்திரா பத்தி எழுதாம இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், ஆமா!!!

 13. வெட்டி,

  என்னப்பா தமிழே மறந்துடுவ போலருக்கு? ஒரே கொல்டி வாடையா அடிக்குதே. சம்திங் ராங்!!! நடக்கட்டும் நடக்கட்டும் பாபு!

  //அனானிமஸ் நண்பரே,
  நீங்க கேட்ட ரெண்டு படத்துக்கும் விமர்சனம் இந்த வாரத்துக்குள்ள கண்டிப்பா போட்டுடறேன்… தவறாக நினைத்து கொள்ளாதீர்கள்… //

  அனானிங்க மேல இவ்வளோ பாசமா?
  அப்போ யார் அனானியா வந்து கேட்டாலும் எந்த மொழிப்படத்தையும் பாத்துட்டு விமர்சனம் எழுதுவீங்களா?

  விரைவில் வரேன் ராசா!

 14. சித்தார்த் நிறைய தெலுகு படத்துல நடிக்கறாரோ???

 15. // தம்பி said…
  வெட்டி,

  என்னப்பா தமிழே மறந்துடுவ போலருக்கு? ஒரே கொல்டி வாடையா அடிக்குதே. சம்திங் ராங்!!! நடக்கட்டும் நடக்கட்டும் பாபு!
  //
  தம்பி,
  எல்லாரும் தமிழ் படத்துக்கு எழுதறாங்க நான் கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமேனு தெலுகு படத்துக்கு எழுதறேன்… ஒரே படத்துல 2,3 ஹீரோயின் பாக்கறது அதுல ஒரு அட்வாண்டேஜ். அப்பறம் ஹீரோயின்ஸ் எல்லாம் தமிழ் படத்த விட அதிக மேக்-அப்ல அழகா காட்டுவாங்க 😉

  //அனானிங்க மேல இவ்வளோ பாசமா?
  அப்போ யார் அனானியா வந்து கேட்டாலும் எந்த மொழிப்படத்தையும் பாத்துட்டு விமர்சனம் எழுதுவீங்களா?

  விரைவில் வரேன் ராசா!
  //
  தம்பி,
  அனானியா வந்தா பாசம் இருக்க கூடாதா? நானே முதல்ல அனானி தான். ஐ மீன் பிளாக் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி. ஆனால் அதுல என் பேர் சொல்லி கமெண்ட் போடுவேன்.

  அதுவும் இல்லாம அந்த ரெண்டு படமும் நான் ஏற்கனவே பாத்த படம்… ரொம்ப நல்ல படம் 😉

 16. // கப்பி பய said…
  சித்தார்த் நிறைய தெலுகு படத்துல நடிக்கறாரோ???
  //
  3 படம் தான் நடிச்சி இருக்காரு 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: