தூறல்!!!

டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது…

வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.

இந்த மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல… மழை வரலைனு யாகமெல்லாம் நடத்தறானுங்க… அங்க வராம இங்க வந்து நம்ம உயிர வாங்குது. அதுவும் ஆபிஸ் போற நேரத்துல.

அருகே கம்பெனி ஐடி கார்டை மாட்டிக் கொண்டு நான்கு, ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இவனுங்களுக்கு எல்லாம் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியர்னு பெருமை. இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க.

கடைசியாக சுரிதார் அணிந்து கொண்டு புதிதாக ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை பார்த்து சிரித்தாள்.

ச்சீ என்ன பொண்ணு இவ… யாராவது பார்த்தா… உடனே சிரிக்கணுமா???

பஸ் வந்தவுடன் வேகமாக சென்று ஒரு நல்ல இடம் பார்த்து ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தேன்… i-podல் நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

சரியாக எட்டு மணிக்கு என் சீட்டிலிருந்தேன்… வழக்கம் போல் யாரும் இன்னும் வரவில்லை. இன்று அப்ரைசல் வேறு இருக்கிறது. இந்த முறை ஆன் சைட்டிலிருந்து அப்ரிஸியேஷன் மெயில் வந்திருக்கிறது. அதனால் எப்படியும் இந்த முறை நல்ல ரேட்டிங் கிடைக்கும்.

மேனேஜர் சரியாக பத்து மணிக்கு வந்தார். மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரை பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களை கேட்டால் டிராபிக் ஜாம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி தப்பிவிடுவார்கள். 7 மணிக்கு புறப்பட்டால் எப்படியும் 8 மணிக்குள் வர முடியும். 8 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி வரவே அனைவரும் விரும்புகின்றனர். தலை சரியில்லாத இடத்தில் மற்றவர்களை சொல்லி பயனில்லை.

சரியாக 11 மணிக்கு அப்ரைசல் மீட்டிங். தேவையானவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு மீட்டிங்கிற்கு சென்றேன். உள்ளே மேனஜர் தயாராக இருந்தார். இந்த முறையும் அப்ரைசலில் எல்லா டாஸ்கிற்கும் “C” போட்டிருந்தார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம் டீம் மக்களோடு சரியாக கலக்காமலிருக்கிறேனாம்.

சரியாக வேலை செய்யவில்லை என்றால் சரி. ஆனால் மக்களோடு பழகவில்லை என்று அவர் சொல்வது சும்மா ஒரு சப்பைக்கட்டு!!! இவர்கள் வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் உண்மையாக வேலை செய்பவர்களை என்றும் மதிக்கமாட்டார்கள்.

மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பிட கிளம்பினேன்.

“கார்த்திக்… இன்னைக்கு பிராஜக்ட் பார்ட்டி. பஸ் 12:30க்கு வரும். இப்ப எங்க போற?” அக்கரையாக விசாரித்தாள் ஹாசினி.

“சாரி… நான் வரலை. நான் தான் மெயில்லையே சொல்லிட்டனே… எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் பிடிக்காதுனு” சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட சென்றேன்.

சாப்பிட்டுவிட்டு என் சீட்டிற்கு வந்த போழுது என் ப்ளோர் முழுதும் விரிச்சோடி கிடந்தது. 2 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டில் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் கிடைத்த ஒரு ஆங்கில நாவல் படிக்க ஆரம்பித்தேன். எப்போழுது தூங்கினேனென்றே தெரியவில்லை. தூங்கி எழுந்திரிக்கும் பொழுது மணி 8 ஆகியிருந்தது.

அருகே இருக்கும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். டிவியை ஆன் செய்து ஒரு மணி நேரத்தில் 120 சேனல்களையும் 40 முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். 6 மணிக்கு அலாரம் அதன் வேலையை சரியாக செய்ய 7 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்தேன்.

வழக்கம் போல் பஸ்ஸிற்காக காத்திருப்பவர்கள் இருந்தார்கள். நேற்று புதிதாக வந்திருந்தவளும் அங்கே நின்று கொண்டிருந்தாள். நேற்றை போலவே இன்றும் பார்த்து சிரித்தாள்.

பஸ் வந்ததும் வழக்கம் போல் ஜன்னலோர சீட்டருகே சென்று அமர்ந்தேன்.

“ஹாய்… நான் இங்க உக்காரலாமா?” ஒரு பெண்ணின் குரல்.
திரும்பி பார்த்தேன். அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்.

வழக்கத்தைவிட i-podல் சத்தத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினேன். அதை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் ஒரு ஆங்கில நாவலை கையில் வைத்து படிக்க ஆரம்பித்தாள். வண்டி வழக்கத்தைவிட சீக்கிரம் சென்றாலும் ஏதோ ஒரு யுகம் போனது போலிருந்தது.

தினம் செய்யும் வேலையையே செக்குமாடு போல் செய்துவிட்டு 8 மணிக்கு ஆபிஸிலிருந்து வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாளும் அதை போலவே என் அருகில் அமர்ந்து பயணம் செய்தாள். இதுவே ஒரு வாரம் தொடர்ந்தது.

அன்றும் லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நடைபாதையிலிருந்து கீழிறங்கி பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். வலதுபக்கம் நின்றிருந்த ஒரு ஜோடி ரோட்டில் நிற்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் கையை ஒருவர் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் கோபம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வந்தது.

இதுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு. இதுங்களாலதான் எல்லாருக்கும் கெட்டப்பேரு!!! திடிரென்று யாரோ என் கையை பிடித்து பின்னால் இழுத்தார்கள். திரும்பி பார்ப்பதற்குள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கொஞ்சமிருந்தால் மேலே ஏத்தியிருப்பான். இந்த பெங்களூர்ல ஆட்டோக்காரங்களுக்கு அறிவே இருக்காது.

சரி, பின்னால் இழுத்தது யாரென்று பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். சைட்ல இருந்த அந்த ஜோடியப் பாத்துட்டிருந்த நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கு நன்றி சொல்லலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பஸ் வந்து சேர்ந்தது.

எப்போழுதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தேன். அவளும் வந்து அமர்ந்து கையில் நாவலை எடுத்தாள்.

“ரொம்ப தேங்கஸ்ங்க…” தயங்கியவாறே சொன்னேன்.

“ஓ!!! உங்களுக்கு பேச வருமா??? நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்” புத்தகத்தை பையில் வைத்து கொண்டே சொன்னாள்.

“இல்லைங்க…சாரி. நான் உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேனு நினைக்கிறேன்”

“ஐயய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க…
பை த வே, ஐ அம் ஆர்த்தி”

“ஐ அம் கார்த்திக்”

இன்று பஸ் பயணத்தின் 60 நிமிடங்களும் 60 நொடிகளைவிட குறைவாக தெரிந்தது. 60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன்.

பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன்…

“கார்த்திக்… உன் கூட நான் சாப்பிட வரலாமா? தனியா சாப்பிட போர் அடிக்குது. என் டீமெட்ஸ் எல்லாம் பத்து மணிக்குதான் வருவாங்க”

“உங்களுக்கு எதுவும் பிராபளம் இல்லைனா வாங்க”

“ஏன் ரொம்ப ஃபார்மலா பேசறீங்க??? நீ, வா, போனே பேசலாம்”

“சரிங்க”

“பாத்திங்களா??? திரும்பவும் வாங்க போங்கனு சொல்றீங்க”

“சரி… போலாமா?”

சாப்பிட்டு விட்டு சீட்டிற்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இன்று நாள் போனதே தெரியவில்லை.

அடுத்த நாள் மீண்டும் பஸ் பயணம்…

“ஏய்!!! நேத்து மதியம் உன்ன கேண்டின்ல பாத்தேன்… தனியா சாப்பிட்டு இருந்த… உன் பிராஜக்ட் மேட்ஸ் யாரும் வரலையா?”

“நான் எப்பவும் தனியாதான் சாப்பிடுவேன்”

“ஏன்?”

“யாருக்கும் தொந்தரவு வேண்டாம்னுதான். எனக்கு உங்களை மாதிரி எல்லாம் பேச வராது”

“யார் சொன்னா அப்படியெல்லாம். என் கூட வேணா வரியா?”

“வேணாம். உங்கூட உன் பிரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க. எனக்கு அன்கம்ஃபர்டபுலா இருக்கும்”

“இல்ல… யாரும் வர மாட்டாங்க. உன் செல் நம்பர் தா. நான் மதியம் கூப்பிடறேன்”

“ஏன்கிட்ட செல் போன் இல்ல”

“என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?”

“3 வருஷம். ஏன் செல் போன் இல்லனா வாழ முடியாதா? எனக்கு தான் எக்ஸ்டென்ஷன் இருக்கு இல்ல. அதுக்கே எவனும் கூப்பிட மாட்டான். எனக்கு எதுக்கு செல் போன்? எப்பவாவது ஊர்ல இருந்து கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்”

“சரி உன் எக்ஸ்டென்ஷன் சொல்லு… ” குறித்து கொண்டாள்

காலையும், மதியமும் அவளுடன் சாப்பிட்டேன்… இன்றும் நாள் பொனதே தெரியவில்லை.

அடுத்த நாள்…

“ஏன் இப்படி வயசானவன் மாதிரி டல் கலர்ல சட்டை போடற??? ஒழுங்கா ப்ரைட்டா சட்டை போட்டா என்ன?”

“ஏன் இந்த கலர்க்கு என்ன குறைச்சல். நான் பொதுவா கலரே பாக்க மாட்டேன். போய் எது பிடிச்சியிருந்தாலும் எடுத்துக்குவேன்”

“சரி… இந்த வாரம் நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம். உனக்கு செல் போன் வாங்கனும்.. அப்பறம் நல்லதா ஒரு நாலு அஞ்சு சட்டை வாங்கனும்”

“எனக்கு எதுக்கு செல் போனெல்லாம்?”

“நேத்து நைட் உங்கிட்ட பேசலாம்னு பாத்தேன்… ஆனால் உங்கிட்ட போன் இல்லாததால பேச முடியல”

“நிஜமாவா?”

“ஆமாம்… சத்தியமா!!! இந்த வாரம் கண்டிப்பா போய் வாங்கறோம்”

“சரி…”

வார இறுதியன்று கடைக்கு சென்றோம்…

“லேட்டஸ்ட் மாடலா பாத்து வாங்கிக்கோ… இல்லைனா பின்னாடி மாத்த வெண்டியிருக்கும்”

“எனக்கு சாதரண மாடலே போதும்… காஸ்ட்லியா எல்லாம் வேண்டாம்”

“நீ சும்மா இரு…நான் செலக்ட் பண்றேன்… உனக்கு ஒன்னும் தெரியாது”

“சரிங்க… நீங்களே எடுங்க”

கடைசியாக பத்தாயிரத்தி சொச்சத்திற்கு ஒரு செல் பொன் வாங்கி ஏர்டெல் கனெக்ஷனும் வாங்கினேன். அதிலிருந்து அவள் நம்பருக்கு போன் செய்து அவள் போனை என்னிடம் குடுத்து பேச சொன்னாள். பக்கத்து பக்கத்துல இருந்து செல் பொனில் பேசுவது அசிங்கமாக இருந்தது… ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை.

“பாத்தியா… உன் போன்ல ஃபர்ஸ்ட் பேசனது நான் தான், ஃப்ர்ஸ்ட் பண்ணது என் நம்பருக்குத்தான்”

“சரி சரி… எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க… வா போகலாம்”

அன்றே 5 புது சட்டைகள் வாங்கினோம். ஒவ்வொன்றும் 1500க்கு மேல்.

வீட்டிற்கு சென்றவுடன் போன் செய்து பேசினாள்…

திங்கள் காலை அலுவலகத்தில்

“கார்த்திக்… புது சட்டையெல்லாம் சூப்பரா இருக்கு…கைல ஏதோ செல் போன் மாதிரி இருக்கு” ஹாசினி

“ஆமாம்… நேத்துதான் வாங்கினேன்”

“எங்களுக்கு எல்லாம் நம்பர் தர மாட்டீங்களா?” ராஜிவ்

“உங்களுக்கு இல்லாமலா… இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க…”
அனைவரும் அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.

ஆர்த்தியிடமிருந்து 11 மணிக்கு போன் வந்தது.

“கார்த்திக்… இன்னைக்கு எனக்கு பிராஜக்ட் பார்ட்டி…
நான் மதியம் உங்கூட லஞ்ச்க்கு வர முடியாது. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”

“ஓகே… நான் பாத்துக்கறேன்”

“கார்த்திக்… புது போனெல்லாம் வாங்கியிருக்கீங்க… ஏதாவது விசேஷமா?” மேனஜர் குரல் பின்னாலிருந்து வந்தது.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க… சும்மா வாங்கனும்னு தோனுச்சு… வாங்கிட்டேன்”

“சரி… இன்னைக்கு டீம் லஞ்ச்… எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்னு பிளான். நீயும் கண்டிப்பா வரணும்”

“ஷுர்… கண்டிப்பா வரேன்”

மதியம் அனைவரிடமும் நன்றாக பேசினேன்… எல்லாரும் எவ்வளவு ஜாலியா பேசறாங்க… நான் ஏன் இத்தனை நாள் இப்படி பேசாம போனேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருந்தனோனு தோனுச்சு…

வாழ்க்கையில் ஏதோ பெரிய மாற்றம் நடந்த மாதிரி இருந்தது.

ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. டீமில் அனைவரும் இப்போது நல்ல நண்பர்களாகி விட்டனர். 5 நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது போல் தோன்றியது. அனைத்து மாற்றத்திற்கும் காரணம் ஆர்த்திதான்.

“கார்த்திக் நான் இந்த வீக் எண்ட் சென்னை போறேன்… எப்ப வருவேன்னு தெரியாது. கொஞ்சம் லேட்டானாலும் ஆகலாம். நீ இதே மாதிரி இருக்கணும். ஓகேவா?”

“ஏன் இப்படி சொல்ற? ஏதாவது பிரச்சனையா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல… அதனால சொன்னேன்”

“சரி… அப்ப அப்ப போன் பண்ணு”

“கண்டிப்பா பண்றேன்”

அவள் சென்றதிலிருந்து முதல் இரண்டு, மூன்று நாட்கள் வேலை செய்யவே முடியவில்லை. பிறகு ஓரளவு சமாளித்தேன். ஒரு வாரம் ஓடியது.
அவளிடமிருந்து போனும் வரவில்லை. அவளும் வரவில்லை. ஒரு மாதமாகிய நிலையில் போன் வந்தது.

“ஹலோ கார்த்திக்கா???”

“ஆமாம். நீங்க யார் பேசறது?”

“நான் ஆர்த்தியோட அண்ணன் பேசறேன்… நீங்க சென்னை அப்போலோ வர முடியுமா? ஆர்த்தி கடைசியா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்” அவர் குரலில் நடுக்கம் தெரிந்தது

கடைசியா???” இந்த வார்த்தையை கேட்டவுடன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது.
“ஆர்த்திக்கு என்னாச்சு???”

“நீங்க இங்க வாங்க… அத சொல்ற நிலைமைல நாங்க இல்ல… சென்னை வந்தவுடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க… நான் வந்து உங்களை பிக்-அப் பண்ணிக்கிறேன்”

அந்த நம்பர் மனதில் பதிந்தது…

சென்னைக்கு அப்போழுதே நேராக புறப்பட்டேன்…

ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார் ஆர்த்தியின் அண்ணன். அவளுக்கு ஸ்பைனல் கார்டில் ஏதோ பிரச்சனையாம். ஒரு வருடமாக ட்ரீட்மெண்ட் செய்து வந்தார்களாம். சரியாகிவிடும் என்று அனைத்து டாக்டர்களும் நம்பிக்கையூட்டிய நிலையில் திடீரென்று அவள் மூளையை பாதித்துவிட்டதாம். எனக்கு எதுவும் விளங்கவில்லை. புதுப்புது வார்த்தைகள். புது உலகம்.

ஹாஸ்பிட்டலில் காய்ந்து போனா பூச்சரமாக இருந்தாள் ஆர்த்தி. ஆனாலும் வாசம் மறையவில்லை. ஓரளவு பேசும் நிலைதான்… என்னை விட்டுவிட்டு அவள் அண்ணன் டாக்டரை பார்க்க சென்றார்.

எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.

“கார்த்தி… அழுவாத!!! எனக்கு கஷ்டமா இருக்கு”

“ஏன் ஆர்த்தி? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல”

“நான் எப்படியும் பொழைக்க மாட்டேனு தெரியும். ஆனா எங்க வீட்லதான் ரொம்ப நம்பிட்டு இருந்தாங்க. இங்க எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்கனுதான் நான் பெங்களுருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்”
ஒரு நிமிட அமைதிக்கு பிறகு தொடர்ந்தாள்

“அன்னைக்கு உன்ன முதல் தடவை பார்க்கும் போதே… உன் கண்ல ஒரு விரக்தி தெரிஞ்சிது. வாழ்க்கையோட அருமை உனக்கு தெரியலனு என் மனசுல பட்டுச்சு. சரி நான் சாவறத்துக்குள்ள உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னுதான் உன்கூட பேச ஆரம்பிச்சேன். போக போக உன்கூட பேசறதே எனக்கு ரொம்ப சந்தோஷத்த குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உங்கிட்ட சொல்லி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லல.”

“ஆர்த்தி… உனக்கு ஒன்னும் ஆகாது. நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்ட”

“ஆமாம். நான் எங்கயும் போக மாட்டேன் கார்த்திக்…
நீ பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி… என்ன சரியா???”

ஒரு வாரம் சென்னையில் தங்கிவிட்டு வந்தேன்…

காலை 7 மணி…

வழக்கம் போல் லேசாக தூறல் போட்டு கொண்டிருந்தது. பஸ் வந்தவுடன் ஏறினேன்.

“ஹாய்… நான் இங்க உக்காரலாமா?”

“தாராளமா”

“என் பேர் கார்த்திக்…”

“நான் பாலாஜி…”

(ஆர்த்தியுடன் பேசி கொண்டிருந்தேன்…)

118 பதில்கள்

 1. மக்களே!!! கதை கொஞ்சம் பெருசு…
  படிச்சிட்டு நல்லா இருக்கா இல்லையானு ஒரு வார்த்தை சொன்னீங்கனா நல்லா இருக்கும்…

 2. ரொம்ப அருமையா இருந்தது வெட்டி.

  சூப்பர்மா கலக்கிட்ட.

 3. வெட்டி அசத்திட்ட… அருமையான கதை,

  //60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன//
  இறுக்கி வைத்த உணர்வுகள் பொதுவாக வெள்ளமாகத்தான் வெளிவரும், இதுபோன்று தூறலாக வெளிப்படுத்தியது ரொம்ப புதுசு.

 4. பாலாஜி அருமையான சிறுகதை. பாரட்டுக்கள்.

 5. //நான் எங்கயும் போக மாட்டேன் கார்த்திக்…
  நீ பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி… என்ன சரியா???//

  டச்சிங்!டச்சிங்!!

 6. கதையா?

  நான் இரு உங்க அனுபவம்னு நினைச்சேன்.

  அருமையா வந்துருக்கு.

 7. எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்குற சிங்கத்த தட்டித் தொடச்சி எழுப்பீட்ட வெட்டி. எழுப்பீட்ட. விட மாட்டேன்.

  இப்படி சாப்பிட்டவேர் கம்பெனிய வெச்சிக் காதல் கதையா எழுதித் தள்ளுனா…என்ன நெனப்பாங்க…மக்கள். ஏற்கனவே பேரு ரிப்பேரு ஆகியிருக்குன்னு ஊருக்குள்ள பேச்சு……இப்படியெல்லாம் எழுதுனா……

  நானும் எழுதுறேன். இத்தனை நாள் உள்ளுக்குற்ற ஊறப்போட்டிருந்த சாப்பிட்டவேர் திகில் கதைகளை எழுதுறேன். மக்களைப் பயமுறுத்துறேன். தீபாவளிக்கு அப்புறமா.

  (கதை நல்லாயிருக்கு)

 8. எத்தனையோ மனமாற்றங்களுக்கு இது மாதிரி ஒரு அழகிய பட்டாம்பூச்சி தேவைப் படுகிறது.
  ஆர்த்தி வாழ்க என்றும் புதிதாக.
  நல்ல கதை. வாழ்த்துக்கள்.

 9. அருமையாயிருந்தது, பின்னிட்டீங்க.
  லியோ சுரேஷ்
  துபாய்

 10. மனுஷன கலங்கடிச்சுட்டீங்களே. இந்தக்கதையை விமர்சனம் பண்றாளவுக்குக்கூட இப்போ என் மனநிலைமை இல்லீங்க.

 11. பயலே!
  ஒங்க கதை ரொம்ப நல்லா இருக்கு!
  நல்லா வருதே! உங்களுக்கு கதை விடும் கலை.
  யோகன் பாரிஸ்

 12. hi vets

  man u keep on touching my heart through your wonderful story lines.kathai romba nalla iruku.feel panna vachutinga…keep on writing…all the best.

  Yogen

 13. wow..wonderful!! Its very touching. congrats!! i too first thought its ur exp.

 14. வழக்கமான முடிவு என்றாலும் மறுபடியுயம் ஒருமுறைப் படித்துவிடத்தோன்றியது.

 15. குரு,

  சென்னா ஓகித்து கதி….

 16. கதை அருமை பாலாஜி…ஹாசினி பெயர் சுட்ட மாதிரி தெரியுது..(சும்மா தமாசுக்குத்தான்)..
  மேலும் எழுதவும்..
  நன்றி

 17. வெட்டி,

  நான் சொன்னா நம்பல இல்ல. இங்க எல்லாரும் என்ன சொல்றாங்க?

 18. //தம்பி said…
  ரொம்ப அருமையா இருந்தது வெட்டி.

  சூப்பர்மா கலக்கிட்ட.
  //
  தம்பி,
  மிக்க நன்றி!!!

  //ராசுக்குட்டி said…
  வெட்டி அசத்திட்ட… அருமையான கதை,

  //60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன//
  இறுக்கி வைத்த உணர்வுகள் பொதுவாக வெள்ளமாகத்தான் வெளிவரும், இதுபோன்று தூறலாக வெளிப்படுத்தியது ரொம்ப புதுசு.
  //
  ராசுக்குட்டி,
  மிக்க நன்றி!!! மழைக்காக எழுதன கதை. சரி ஜோனு பெய்யிற மழையும் அழகுதான்… லேசாக இதமாக வந்து செல்லும் தூறலும் அழகுதான்னு தான் அந்த தலைப்பு வைத்தேன்

 19. // வேந்தன் said…
  //நான் எங்கயும் போக மாட்டேன் கார்த்திக்…
  நீ பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி… என்ன சரியா???//

  டச்சிங்!டச்சிங்!!
  //
  வேந்தன்,
  மிக்க நன்றி!!! நமக்கு நக்கலா பேசதான் வரும்… கொஞ்சம் டச்சிங்கா எழுதுவோமேனு தான் இந்த முயற்சி 🙂

  //துளசி கோபால் said…
  கதையா?

  நான் இரு உங்க அனுபவம்னு நினைச்சேன்.

  அருமையா வந்துருக்கு.
  //
  டீச்சர்,
  ஆமாம் கதைதான்… நம்ம அனுபவமெல்லாம் இல்ல. நான் பேச ஆரம்பிச்சா நிறுத்தவேமாட்டேன் 😉

  மிக்க நன்றி

 20. //இலவசக்கொத்தனார் said…
  நல்லா இருக்கு வெ.பை.
  //
  கொத்ஸ்,
  மிக்க நன்றி!!!

 21. //G.Ragavan said…
  எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்குற சிங்கத்த தட்டித் தொடச்சி எழுப்பீட்ட வெட்டி. எழுப்பீட்ட. விட மாட்டேன்.
  //
  சிங்கம் எழுந்திரிச்சா எங்களுக்கும் சந்தோஷம்தான்… உங்க கதைல கடைசியா வர டச் நம்ம கதைல எப்பவுமே மிஸ்ஸிங்தான் 😦

  //
  இப்படி சாப்பிட்டவேர் கம்பெனிய வெச்சிக் காதல் கதையா எழுதித் தள்ளுனா…என்ன நெனப்பாங்க…மக்கள். ஏற்கனவே பேரு ரிப்பேரு ஆகியிருக்குன்னு ஊருக்குள்ள பேச்சு……இப்படியெல்லாம் எழுதுனா……
  //
  இது லவ் ஸ்டோரி இல்ல… நான் இது வரைக்கும் எழுதன கடைசி 2 கதை சாப்ட்வேர் ஃபீல்டை வெச்சி இல்லை… அது மட்டுமில்லாம எனக்கு தெரிஞ்சதுதானே நான் எழுத முடியும் 🙂

  //
  நானும் எழுதுறேன். இத்தனை நாள் உள்ளுக்குற்ற ஊறப்போட்டிருந்த சாப்பிட்டவேர் திகில் கதைகளை எழுதுறேன். மக்களைப் பயமுறுத்துறேன். தீபாவளிக்கு அப்புறமா.
  //
  I am the Waiting 🙂

  //
  (கதை நல்லாயிருக்கு)
  //
  மிக்க நன்றி!!!

 22. //வல்லிசிம்ஹன் said…
  எத்தனையோ மனமாற்றங்களுக்கு இது மாதிரி ஒரு அழகிய பட்டாம்பூச்சி தேவைப் படுகிறது.
  ஆர்த்தி வாழ்க என்றும் புதிதாக.
  நல்ல கதை. வாழ்த்துக்கள்.
  //
  வல்லிஹம்சன்,
  மிக்க நன்றி…
  அணைவதற்கு முன் மற்றொரு தீபத்தை ஏற்றிவிட்டு சென்றிருக்கிறாள் ஆர்த்தி!!!

 23. //Leo Suresh said…
  அருமையாயிருந்தது, பின்னிட்டீங்க.
  லியோ சுரேஷ்
  துபாய்
  //
  மிக்க நன்றி லியோ

  //ILA(a)இளா said…
  மனுஷன கலங்கடிச்சுட்டீங்களே. இந்தக்கதையை விமர்சனம் பண்றாளவுக்குக்கூட இப்போ என் மனநிலைமை இல்லீங்க.
  //
  மிக்க நன்றி இளா… பொறுமையா படிச்சிட்டு சொல்லுங்க… கதை எப்படினு

 24. //Johan-Paris said…
  பயலே!
  ஒங்க கதை ரொம்ப நல்லா இருக்கு!
  நல்லா வருதே! உங்களுக்கு கதை விடும் கலை.
  யோகன் பாரிஸ்
  //
  மிக்க நன்றி யோகன் ஐயா!!!

  இத விட ஏன் லேட்டா வந்தனு கேட்ட பல கதைகளை சொல்லுவேன், காலேஜில் 😉

 25. //Anonymous said…
  hi vets

  man u keep on touching my heart through your wonderful story lines.kathai romba nalla iruku.feel panna vachutinga…keep on writing…all the best.

  Yogen
  //
  Hi Yogen,
  Thx a lot…
  Will try to give my best!!!

 26. //கார்த்திக் பிரபு said…
  epadi valthuradhunu theriyala nall iruku balaji anna.
  //
  கார்த்திக்,
  மிக்க நன்றி!!!

  //appu said…
  wow..wonderful!! Its very touching. congrats!! i too first thought its ur exp.
  //
  Appu,
  thx a lot…
  Its just another story 😉

 27. கதை நல்லா வந்திட்டு இருந்தது, ஆனா heroine செத்து போற climax தான் கொஞ்சம் பழசு!. வேற ஏதாவது முயற்சி பண்ணி இருக்கலாமோ??

  அது சரி! Ragging எல்லாம் மறந்து போச்சா?? அக்கா இல்ல Madam-nu கூப்பிடு !! lol!! (சும்மா சொன்னேன். btw, நான் 2000 batch, அதனால பார்த்திருக்க வாய்ப்பு கம்மி!)

 28. //TAMIZI said…
  வழக்கமான முடிவு என்றாலும் மறுபடியுயம் ஒருமுறைப் படித்துவிடத்தோன்றியது.
  //
  தமிழி,
  நான் பொதுவா சந்தோஷமா முடிக்கத்தான் ஆசைப்படுவேன்… ஆனா இந்த கதைக்களம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

  மிக்க நன்றி!!!

 29. //கப்பி பய said…
  15 + 1 😉
  //

  //ராம் said…
  குரு,

  சென்னா ஓகித்து கதி….
  //
  ரெண்டு பேர்கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் 😉

  மிக்க நன்றி!!!

 30. //தமிழ்ப்பிரியன் said…
  கதை அருமை பாலாஜி…ஹாசினி பெயர் சுட்ட மாதிரி தெரியுது..(சும்மா தமாசுக்குத்தான்)..
  மேலும் எழுதவும்..
  நன்றி
  //
  மிக்க நன்றி சங்கர்…

  ஆமாம் பேர் பொம்மரில்லு ஜெனி பேருதான்… அதைதான் ஹீரோயினுக்கு வெக்கலாம்னு பாத்தேன்… ஆனா அந்த கேரக்டர சாகடிக்க மனசு வராதுனு மாத்திட்டேன் 😉

 31. is this real? very interesting and sentimental story.
  ssss7

 32. //aruna said…
  கதை நல்லா வந்திட்டு இருந்தது, ஆனா heroine செத்து போற climax தான் கொஞ்சம் பழசு!. வேற ஏதாவது முயற்சி பண்ணி இருக்கலாமோ??
  //
  எனக்கு ஹீரோயின் சாவறதே புதுசுதாங்கா…
  சினிமால பாத்தாலும் மனசே கேக்காது… அதனால தான் கொஞ்சம் ட்ரை பண்ணென்…

  அதுவும் இல்லாம அவ போய் பேசறதே அவளுக்கு வாழ்க்கையோட அருமை தெரியதறாலத்தான். சாகப்போறோம் என்ற பயம் வாழ்க்கையின் மேல் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தை கொண்டு வருகிறது.

  // சரி! Ragging எல்லாம் மறந்து போச்சா?? அக்கா இல்ல Madam-nu கூப்பிடு !! lol!! (சும்மா சொன்னேன். btw, நான் 2000 batch, அதனால பார்த்திருக்க வாய்ப்பு கம்மி!)
  //
  ஓ!!! நான் காலேஜ்ல சேர்ந்தப்ப நீங்க ஃபைனல் இயரா???

  Ragging எல்லாம் மறக்க முடியுமா Madam??? ஆனா நாங்களாம் ரேகிங் பண்ணவே இல்லை… 😉

  டேய் ஜினியர்ஸ், யாராவது இத எதிர்த்து பின்னூட்டம் போட்டீங்கனா பப்ளிஷ் பண்ண மாட்டேன்… ஆமா 😉

 33. Anonymous said…
  //is this real? very interesting and sentimental story.
  ssss7
  //
  No… its not real…
  its just a story…

  Thx for the comment

 34. Balaji,

  I have read this story in Infy BB a couple of years back. I was not sure who wrote this.

  Now I know this is your effort. Hats off. Story is really touching.

 35. பாலாஜி….பின்னிட்டீங்க!
  ஏதோ கிராமத்து இளைஞன் தனுஷ் கதையைத் தான் மொதல்ல சொல்லறீங்களோன்னு நினைச்சேன்…அப்பறம் போகப்போக…ஹூம்…கடைசியில் ஆர்த்தி இன் ஹாஸ்பிடல் மட்டும் டிபிக்கல் தமிழ் சினிமா எஃபெக்ட்!!
  அதனால என்ன! நீங்க கோலிவுட்ல ஒரு ரவுண்டு வரலாமே! அழகா திரைக்கதை சொல்ல வருது உங்களூக்கு!

  கதையை விட நடுவுல வுடறீங்க பாரு கமெண்ட், அதுவும் சூப்பர்.
  //இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க// :-))
  //இதுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு.//
  //”என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?”
  //

  அப்பறம் கடைசியா,
  //என் பேர் கார்த்திக்…”
  “நான் பாலாஜி…”// இந்த பாலாஜி யாருங்க? :-)))

 36. // SathyaPriyan said…
  Balaji,

  I have read this story in Infy BB a couple of years back. I was not sure who wrote this.

  Now I know this is your effort. Hats off. Story is really touching.
  //
  Sathyapriyan,
  I beleive you are mentioning about the story by Prasil.
  But I dont think the contents are same…

  thx a lot for the comment 🙂

 37. சந்தோஷமா லன்ச் சாப்பிட்டே படிக்க ஆரம்பிச்சேன் (office desk’ல தனியா தான் 😉 ).. படிச்சு முடிக்கும் போது சாப்பிட மறந்திருந்தேன்… ரொம்ப பீலிங்ஸ் ஆகிடுச்சு, டஜ் பண்ணிடீங்க போங்க!! கிட்ட தட்ட இந்த கார்த்திக் மாதிரி தான் நானும்… ஆனா எனக்கென்னம்மோ கார்த்திக் வடிவுல நான் வெட்டிப்பயல்’ல தான் பார்க்கிறேன்.. உண்மையா??
  -விநய்*

 38. //ரெண்டு பேர்கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் 😉

  //

  அப்படின்னா…

  –நான் இரு உங்க அனுபவம்னு நினைச்சேன்.

  — i too first thought its ur exp.

  –is this real?–

  –எனக்கென்னம்மோ கார்த்திக் வடிவுல நான் வெட்டிப்பயல்’ல தான் பார்க்கிறேன்.. —

  இது மாதிரி ஏதாவது கொளுத்திப் போட்டுடலாமா?? ;))

 39. // kannabiran, RAVI SHANKAR (KRS) said…
  பாலாஜி….பின்னிட்டீங்க!
  //
  மிக்க நன்றி KRS

  //
  ஏதோ கிராமத்து இளைஞன் தனுஷ் கதையைத் தான் மொதல்ல சொல்லறீங்களோன்னு நினைச்சேன்
  //
  கிராமத்து இளைஞன்னு ஆரம்பிக்கல… வாழ்க்கையில எதுலயும் ஒரு பிடிப்பு இல்லாத இளைஞன காட்டனும்னுதான் முயற்சி செய்தேன்..

  //
  …அப்பறம் போகப்போக…ஹூம்…கடைசியில் ஆர்த்தி இன் ஹாஸ்பிடல் மட்டும் டிபிக்கல் தமிழ் சினிமா எஃபெக்ட்!!
  அதனால என்ன! நீங்க கோலிவுட்ல ஒரு ரவுண்டு வரலாமே! அழகா திரைக்கதை சொல்ல வருது உங்களூக்கு!
  //
  ஆஹா… ஆரம்பிச்சிட்டீங்களா??? சரி யாராவது நல்ல டைரக்டரா பாருங்க அஸிஸ்டெண்டா சேர்ந்துக்கலாம் 😉

  //கதையை விட நடுவுல வுடறீங்க பாரு கமெண்ட், அதுவும் சூப்பர்.
  //இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க// :-))
  //இதுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு.//
  //”என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?”
  //
  இந்த இடத்துலதான் கதாபாத்திரத்துல என்ன கொண்டு வந்திடறேன் 😉

  //அப்பறம் கடைசியா,
  //என் பேர் கார்த்திக்…”
  “நான் பாலாஜி…”// இந்த பாலாஜி யாருங்க? :-))) //
  அது நாந்தான்… கார்த்திக்கை நான் பஸ்ல மீட் பண்ண மாதிரி முடிச்சிட்டேன் 😉

 40. The Story is excellent. I enjoy reading your stories.

  Senthil

 41. //Anonymous said…
  சந்தோஷமா லன்ச் சாப்பிட்டே படிக்க ஆரம்பிச்சேன் (office desk’ல தனியா தான் 😉 ).. படிச்சு முடிக்கும் போது சாப்பிட மறந்திருந்தேன்… ரொம்ப பீலிங்ஸ் ஆகிடுச்சு, டஜ் பண்ணிடீங்க போங்க!!
  //
  மிக்க நன்றி!!! நீங்க தான கதை எழுதி நாளாச்சினு சொன்னீங்க… அதனால தான் எழுதினேன்… அடுத்த முறை சந்தோஷமா எழுதிடலாம் 😉

  //கிட்ட தட்ட இந்த கார்த்திக் மாதிரி தான் நானும்… ஆனா எனக்கென்னம்மோ கார்த்திக் வடிவுல நான் வெட்டிப்பயல்’ல தான் பார்க்கிறேன்.. உண்மையா??
  -விநய்*
  //
  என்னங்க இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டுட்டீங்க… பரவாயில்லை எப்பவுமே நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்கும்… இத மட்டும் நம்புங்க…

  அப்பறம் கார்த்திக், வெட்டி இல்லைங்க.
  நான் அதிகமா பேசற ஆளு 😉

 42. //கப்பி பய said…
  //ரெண்டு பேர்கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் 😉

  //

  அப்படின்னா…

  –நான் இரு உங்க அனுபவம்னு நினைச்சேன்.

  — i too first thought its ur exp.

  –is this real?–

  –எனக்கென்னம்மோ கார்த்திக் வடிவுல நான் வெட்டிப்பயல்’ல தான் பார்க்கிறேன்.. —

  இது மாதிரி ஏதாவது கொளுத்திப் போட்டுடலாமா?? ;))
  //

  கப்பி, நீ கொளுத்தனாலும் மக்கள் நம்பமாட்டாங்க… அவுங்களுக்கு தெரியும் வெட்டி வாழ்க்கையில இந்த மாதிரி எல்லாம் நடுந்திருக்காதுனு 😉

 43. மிகவும் ரசித்த இடம்:
  —podல் நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.—

  பிழை?
  —தயங்கியவாரே சொன்னேன்.—
  —புது புது வார்த்தைகள்.—

  சொன்ன பேச்சுக் கேட்காத கார்த்திக்: —“சரிங்க… நீங்களே எடுங்க”—- : )

  ஆலோசனை கொடுக்காமல் பின்னூட்டம் கொடுக்க வராத நோய் உள்ளதால்:
  —அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.—

  உரையாடலில் ஆங்கிலக் கலப்பு அவசியம் விழலாம். (என்னைப் போல் பதிவில் தலைப்பில் முழு நீள ஆங்கிலம் இடம் பெறலாம் :P)

  கதையின் விவரிப்பில் தவிர்க்கலாம் ; )

  கடைசியாக வேண்டுகோள்:
  தங்களின் கதைகள் அனைத்தையும் இடது பக்கத்தில் சேமித்து வைக்கலாமே? இந்தக் கதையை படித்தவுடன், மற்ற ஆக்கங்களையும் புரட்ட விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

  (அவ்வாறே சினிமா விமர்சனம், கோழி, நீங்களும் சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் என்று தலைப்புகள் கொடுத்து தொகுக்கலாம்.)

 44. //Anonymous said…
  The Story is excellent. I enjoy reading your stories.

  Senthil
  //

  Senthil,
  thx a lot 🙂

 45. // Boston Bala said…
  மிகவும் ரசித்த இடம்:
  —podல் நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.—
  //
  :-))

  பிழை?
  —தயங்கியவாரே சொன்னேன்.—
  —புது புது வார்த்தைகள்.—
  என்னங்க நீங்களே சந்தேகத்தோட கேட்டா எப்படி? பிழைதான்… இப்ப திருத்தியாச்சு 🙂

  //
  சொன்ன பேச்சுக் கேட்காத கார்த்திக்: —“சரிங்க… நீங்களே எடுங்க”—- : )
  //
  இல்ல… இது நக்கல் மரியாதை… சரிங்க மேடம்னு சொல்ற மாதிரி 😉

  //
  ஆலோசனை கொடுக்காமல் பின்னூட்டம் கொடுக்க வராத நோய் உள்ளதால்:
  —அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.—

  உரையாடலில் ஆங்கிலக் கலப்பு அவசியம் விழலாம். (என்னைப் போல் பதிவில் தலைப்பில் முழு நீள ஆங்கிலம் இடம் பெறலாம் :P)

  கதையின் விவரிப்பில் தவிர்க்கலாம் ; )
  //
  ஆமாம்… யோசிக்கவே இல்லை. கதைக்கு இதுதான் மிக முக்கியாமான விஷயம். நினைவில் வைத்து கொள்கிறேன்.

  //
  கடைசியாக வேண்டுகோள்:
  தங்களின் கதைகள் அனைத்தையும் இடது பக்கத்தில் சேமித்து வைக்கலாமே? இந்தக் கதையை படித்தவுடன், மற்ற ஆக்கங்களையும் புரட்ட விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

  (அவ்வாறே சினிமா விமர்சனம், கோழி, நீங்களும் சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் என்று தலைப்புகள் கொடுத்து தொகுக்கலாம்.)
  //

  வேண்டுகோள் இல்லை… அறிவுரைனே சொல்லலாம்… நல்ல விஷயம். உடனே செய்கிறேன்.

 46. நான் அப்படி சொல்ல வரல பாலாஜி…கார்த்திக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை இருக்குனு சொல்ல வந்தேன்..
  -நானும் ஆபிஸ்ல 8 மனிக்கு இருப்பேன்!
  -எப்பவும் தனியா தான் சாப்பிடப் போவேன்…எல்லாம் 12 மனிக்கு போனா, நான் மட்டும் 1 மனிக்கு போவேன் – (ஆபீஸ்ல கூட்டத்தைத் தவிர்க்க)
  -வேலையில சேர்ந்து 3 வருஷம் செல்ஃபோன் வாங்கலை (அதுக்கு முன்னாடியும் என்கிட்ட செல்ஃபோன் கிடையாது) …கடைசியா இங்க (US) வந்த பிறகு தான் வாங்கினேன்.. அது வரைக்கும் தேவை படலை! 😀

  இந்தியால இருந்த போது எப்பவும் (almost all the time) நண்பர்கள் கூட தான் இருப்பேன். Bachelor Lifeல அந்த நாதாரிங்க கூட இருக்கிறத விட என்ன பெரிய சுகம் இருக்க முடியும் சொல்லுங்க ;-).. இங்க வந்த பிறகு அத தான் ரொம்ப மிஸ் பண்ண வேன்டியதாப் போச்சு!
  -விநய்*

 47. நான் அப்படி சொல்ல வரல பாலாஜி…கார்த்திக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை இருக்குனு சொல்ல வந்தேன்..
  -நானும் ஆபிஸ்ல 8 மனிக்கு இருப்பேன்!
  -எப்பவும் தனியா தான் சாப்பிடப் போவேன்…எல்லாம் 12 மனிக்கு போனா, நான் மட்டும் 1 மனிக்கு போவேன் – (ஆபீஸ்ல கூட்டத்தைத் தவிர்க்க)
  -வேலையில சேர்ந்து 3 வருஷம் செல்ஃபோன் வாங்கலை (அதுக்கு முன்னாடியும் என்கிட்ட செல்ஃபோன் கிடையாது) …கடைசியா இங்க (US) வந்த பிறகு தான் வாங்கினேன்.. அது வரைக்கும் தேவை படலை! 😀

  இந்தியால இருந்த போது எப்பவும் (almost all the time) நண்பர்கள் கூட தான் இருப்பேன். Bachelor Lifeல அந்த நாதாரிங்கக் கூட இருக்கிறத விட என்ன பெரிய சுகம் இருக்க முடியும் சொல்லுங்க ;-).. இங்க வந்த பிறகு அத தான் ரொம்ப மிஸ் பண்ண வேன்டியதாப் போச்சு!
  -விநய்*

 48. எல்லாரும் இந்த மாதிரி தான்.. இருந்தாலும் படிக்கும் போது ஒரு மாதிரி நல்லா இருந்துச்சு! அத தான் சொல்ல வந்தேன்…

  தொடர்ந்து எழுதுங்க..நீங்க வெட்டியா எதையாவது எழுதுனாக் கூட படிச்சு, பின்னூட்டம் போட நாங்க ரெடி 🙂 இந்த மாதிரி கதைனா கேக்கவே வேண்டாம், தொடர்ந்து எழுதுங்க!!

  -விநய்*

 49. சூப்பர்ங்க….நீங்க சொன்ன மாதிரி பெரிசா இருந்தாலும் படிச்சு முடிக்கும் போது அட முடிஞ்சுருச்சா அப்படினு இருந்தது….

 50. //இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க.
  //

  LOL…நானும் இத எப்பவும் நினைப்பேன் என்னாத்துக்கு இங்க இருந்தே மாட்டிட்டு போறானுகனு…
  🙂

 51. //கார்த்திக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை இருக்குனு சொல்ல வந்தேன்..
  -நானும் ஆபிஸ்ல 8 மனிக்கு இருப்பேன்!
  -எப்பவும் தனியா தான் சாப்பிடப் போவேன்…எல்லாம் 12 மனிக்கு போனா, நான் மட்டும் 1 மனிக்கு போவேன் – (ஆபீஸ்ல கூட்டத்தைத் தவிர்க்க)
  -வேலையில சேர்ந்து 3 வருஷம் செல்ஃபோன் வாங்கலை (அதுக்கு முன்னாடியும் என்கிட்ட செல்ஃபோன் கிடையாது) …கடைசியா இங்க (US) வந்த பிறகு தான் வாங்கினேன்.. அது வரைக்கும் தேவை படலை! 😀
  //
  இவ்வளவு ஒத்துமையா??? சத்தியமா நான் எதிர்பார்க்கலை.

  நான் வேலைக்கு சேரும் போதே செல்போனோடத்தான் சேர்ந்தேன் 🙂

  காலைல வேலை இருந்தா மட்டும் 8 மணிக்கு போவேன்…இல்லைனா 10 மணிக்குத்தான்… முடிந்த வரை தனியா சாப்பிட போகமாட்டேன்…

  முன்னாடியே தெரிஞ்சிருந்தா உங்க பேரே வெச்சிருப்பேன் 🙂

  //இந்தியால இருந்த போது எப்பவும் (almost all the time) நண்பர்கள் கூட தான் இருப்பேன். Bachelor Lifeல அந்த நாதாரிங்கக் கூட இருக்கிறத விட என்ன பெரிய சுகம் இருக்க முடியும் சொல்லுங்க ;-).. இங்க வந்த பிறகு அத தான் ரொம்ப மிஸ் பண்ண வேன்டியதாப் போச்சு!//
  Same Blood 😦

 52. //எல்லாரும் இந்த மாதிரி தான்.. இருந்தாலும் படிக்கும் போது ஒரு மாதிரி நல்லா இருந்துச்சு! அத தான் சொல்ல வந்தேன்…

  தொடர்ந்து எழுதுங்க..நீங்க வெட்டியா எதையாவது எழுதுனாக் கூட படிச்சு, பின்னூட்டம் போட நாங்க ரெடி) இந்த மாதிரி கதைனா கேக்கவே வேண்டாம், தொடர்ந்து எழுதுங்க!!

  -விநய்* //

  விநய்,
  மிக்க மகிழ்ச்சி… நீங்க எல்லாம் கொடுக்கற உற்சாகம்தான் நம்மளையும் எழுத வைக்குது…

 53. //Syam said…
  சூப்பர்ங்க….நீங்க சொன்ன மாதிரி பெரிசா இருந்தாலும் படிச்சு முடிக்கும் போது அட முடிஞ்சுருச்சா அப்படினு இருந்தது….
  //
  மிக்க நன்றி Syam…
  நான் கரெக்டா கம்பெனிக்குள்ள போகும் போதுதான் அந்த டேகை மாட்டுவேன்… அதே மாதிரி வெளிய வந்து 5 அடிக்குள்ள அத எடுத்துடுவேன்…

  ஒரு சிலருக்கு அதுல பெருமை வேற!!!

 54. //indianangel said…
  nalla ezhudiyirukeenga! supurappu!
  //

  Hi Prasanna,
  Thx a lot…
  தொடர்ந்து படிக்கவும்

 55. nethu avasarama comments pottu poitane…en room mates kitalam solli unga blogai padikka solirukane..nalla eludhreenga..oct 31 ku apuram nanum meendum kalamirngalamnu irukane..adhuvaraikum ungal blogai vaichu mansai thethikinum

 56. //இது மாதிரி ஏதாவது கொளுத்திப் போட்டுடலாமா?? ;)) //

  கப்பி ,

  அதுதான் உண்மை….

 57. எப்படிய்யா இதெல்லாம்?? அதுவா வருதா இல்ல வேற ஏதாவது ரகசியமா??

 58. பாலாஜி,

  எனக்கென்னமோ சில வரிகளை பார்க்கும் போது கதையா தெரியல்லே ராசா….!!!!

 59. வாவ் கலகுறப்பூ:)) நல்லா இருக்குபா!!!

 60. //கார்த்திக் பிரபு said…
  nethu avasarama comments pottu poitane…en room mates kitalam solli unga blogai padikka solirukane..nalla eludhreenga..oct 31 ku apuram nanum meendum kalamirngalamnu irukane..adhuvaraikum ungal blogai vaichu mansai thethikinum
  //
  மிக்க நன்றி கார்த்திக்.
  சீக்கிரம் வா… வழக்கம் போல உ.தொ.இ கவிதைகளை எங்களுக்கு தா!!!

 61. //ராம் said…
  //இது மாதிரி ஏதாவது கொளுத்திப் போட்டுடலாமா?? ;)) //

  கப்பி ,

  அதுதான் உண்மை….
  //
  கொளுத்தி போட்டாலும் இங்க எதுவும் வெடிக்காது 😉

  வெடிச்சாலும் நாங்களும் கூட சேர்ந்து கையத்தட்டுவோமில்ல 😉

 62. //ஆதவன் said…
  எப்படிய்யா இதெல்லாம்?? அதுவா வருதா இல்ல வேற ஏதாவது ரகசியமா??
  //
  ஏங்க நீங்க வேற…
  ஒரு கதை எழுதறத்துக்குள்ள உயிரே போயிடுது… குறைந்தது 4-5 மணி நேரமாகுது… அந்த நேரத்துல என் ரூம்மெட்டுகிட்ட நான் வாங்குற திட்டு எனக்கு தான் தெரியும் 🙂

  நீங்க எல்லாம் நல்லா இருக்குனு கொடுக்கற நம்பிக்கைலதான் தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன்!!!

 63. //ராம் said…
  பாலாஜி,

  எனக்கென்னமோ சில வரிகளை பார்க்கும் போது கதையா தெரியல்லே ராசா….!!!!
  //
  ஏன் ராமண்ணா, கட்டுரையா தெரியுதா???

 64. //ஜொள்ளுப்பாண்டி said…
  வாவ் கலகுறப்பூ:)) நல்லா இருக்குபா!!!
  //
  ஜொள்ளு,
  டாங்க்ஸ்…

 65. கதை ரெம்ப நல்லாஅ இருக்கு வெட்டி. வாழ்த்துக்கள்.

  சாஃப்ட்வேர் துறையில் நீங்க சொல்றமாதிரி நடக்குது. பொதுவா டீமோடு கலந்திருப்பவங்களுக்கு அங்கீகாரம் விரைவில் கிடைக்கும்.

  என் கொள்கையெல்லாம், தினம் நமக்கு கிடைக்குற ஆக்டீவான 8-10 மணிநேரத்த ஆபீஸ்ல செலவிடறோம் அங்கயும் வாழ்க்கைய எஞ்ஜாய் பண்ணணுங்கிறதுதான். ஆபீஸ்ல சிரிப்பும் கும்மாளமுமாயிருந்தா தப்பேயில்ல.

  உங்க தூறல மழையில சேத்துட்டேன்

 66. //சிறில் அலெக்ஸ் said…
  கதை ரெம்ப நல்லாஅ இருக்கு வெட்டி. வாழ்த்துக்கள்.
  //
  மிக்க நன்றி!!!

  அப்பறம் அந்த கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு நிறைய பேர் கேக்கறாங்க… அதுக்கான காரணமிங்கே!!!

  தூறலை நட்பிற்கும் காதலை மழைக்கும் உருவகப்படுத்தி எழுதியது. தூறல் சில சமயங்களில் மழையாக வாய்ப்புள்ளது. ஆனால் எப்போழுதும் தூறல் மழையாக வேண்டுமென்று கட்டாயமில்லை.

  அதை போல் தூறல் சில நிமிடமே இருந்தாலும் அதனால் ஏற்படும் மண்வாசனை பல மணி நேரத்திற்கு இருக்கும்.

  இந்த கதையில் கதாநாயகனின் வாழ்க்கை வறண்டிருந்தது. சில நேரமே தோன்றிய ஆர்த்தி என்னும் தூறல் அதை ஈறமாக்கி வாசம் வர செய்துள்ளது…

  இப்படியெல்லாம் சொல்லனும்னு ஆசைதான்… ஆனா காரணம் அதெல்லாம் இல்ல…
  சும்மா வெக்கனுமே வெச்சது… அவ்வளவுதான் 😉

 67. வெட்டிக்கு ரெண்டு “ஓ”ட்டு பார்சல்….

  கலக்கல்….வேறென்ன சொல்ல???

 68. //ஏன் ராமண்ணா, கட்டுரையா தெரியுதா??? //

  அட இல்லப்பா இப்பிடிதான் சில பேரோட டைரிக் குறிப்புகளெல்லாம் இருக்கும். அதுதான் சொல்ல வந்தேன்….:-)))

 69. //சுதர்சன்.கோபால் said…
  வெட்டிக்கு ரெண்டு “ஓ”ட்டு பார்சல்….

  கலக்கல்….வேறென்ன சொல்ல???
  //
  இந்த தடவ நமக்கு ஒரு ஓட்டு கூட போட முடியாதே 😉

  படம் கிளப்பறீங்க…
  சூப்பர்…
  அட்டகாசமான கதை…
  கதா பாத்திரத்த கண் முன்னாடி கொண்டுவந்துட்டீங்க..
  பின்னீட்டீங்க…
  அருமையான கதை…
  மனச தொட்டுட்டீங்க…
  டச்சிங்கா இருக்கு…

  இவ்வளவு இருக்கு… என்ன சொல்லனு கேட்டுட்டீங்களே 😉

 70. //ராம் said…
  //ஏன் ராமண்ணா, கட்டுரையா தெரியுதா??? //

  அட இல்லப்பா இப்பிடிதான் சில பேரோட டைரிக் குறிப்புகளெல்லாம் இருக்கும். அதுதான் சொல்ல வந்தேன்….:-)))
  //
  ராமண்ணா,
  நீங்க சொன்னவுடனேதான் என்னுடைய பெங்களூர் டைரிக்குறிப்பு பத்தி நியாபகம் வருது… அடுத்த பதிவு அத போட்டுடறேன் 😉

 71. வெட்டி,
  கதையல்ல(நிஜம்) சூப்பரு. நல்லா இருக்கு உங்க எழுத்து நடை.

 72. //ச்சீ என்ன பொண்ணு இவ… யாராவது பார்த்தா… உடனே சிரிக்கணுமா//

  //வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்//

  //அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்//

  //நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்//

  மேல உள்ள எல்லாத்துக்கும் தனித்தனியா கமெண்ட் போடலாம்னு இருந்தேன்.. ஆனா கதை போன வேகத்துல..படிச்சு முடிச்சவுடன் நெஞ்சுல வந்த ஒரு சோகத்துல எதுவுமே எழுத முடியல.. கதை ரொம்ப நல்லா இருந்தது வெட்டிபயலே..

  இது மாதிரி நிறைய எழுத வாழ்த்துக்கள்

 73. //ச்சீ என்ன பொண்ணு இவ… யாராவது பார்த்தா… உடனே சிரிக்கணுமா//

  //வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்//

  //அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்//

  //நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்//

  மேல உள்ள எல்லாத்துக்கும் தனித்தனியா கமெண்ட் போடலாம்னு இருந்தேன்.. ஆனா கதை போன வேகத்துல..படிச்சு முடிச்சவுடன் நெஞ்சுல வந்த ஒரு சோகத்துல எதுவுமே எழுத முடியல.. கதை ரொம்ப நல்லா இருந்தது வெட்டிபயலே..

  இது மாதிரி நிறைய எழுத வாழ்த்துக்கள்

 74. //சந்தோஷ் said…
  வெட்டி,
  கதையல்ல(நிஜம்) சூப்பரு. நல்லா இருக்கு உங்க எழுத்து நடை.
  //

  தலைவா,
  இது கதைதான்… நிஜமல்ல…
  மிக்க நன்றி!!!

 75. //மேல உள்ள எல்லாத்துக்கும் தனித்தனியா கமெண்ட் போடலாம்னு இருந்தேன்.. ஆனா கதை போன வேகத்துல..படிச்சு முடிச்சவுடன் நெஞ்சுல வந்த ஒரு சோகத்துல எதுவுமே எழுத முடியல.. கதை ரொம்ப நல்லா இருந்தது வெட்டிபயலே..

  இது மாதிரி நிறைய எழுத வாழ்த்துக்கள்//
  மிக்க நன்றி கார்த்திக்…

  கண்டிப்பா எழுத முயற்சி செய்கிறேன்

 76. Sooper story….romba nalla irundhadhu..i like it…keepup ur good job…
  Never expected this kind of serious story from you…
  – Nagesh

 77. //Anonymous said…
  Sooper story….romba nalla irundhadhu..i like it…keepup ur good job…
  //
  Hi Nagesh,
  thx a lot…

  //
  Never expected this kind of serious story from you…
  //
  Hope u havent read my first story “Golti”… its also in the same plot 🙂
  //

 78. Thala Sema kathai… Ivlo naaL comedy kathaiya ezuthi kalakkittu ippo Sentiment Kalakkala…. Super kathai… Tamil Unicode ulla System kedaikala… Athan English… Itha kooda thenkoodu pottiku post pannunga… Thalaippukku othu varuthu….

 79. vetti, kathai super appu…

  konjam konjama ur enhancing urself…

  hopefully u deliver a novel very soon…

  Advance Vazhthukkal.

  anbudan

  suresh babu

 80. //அமுதன் said…
  Thala Sema kathai… Ivlo naaL comedy kathaiya ezuthi kalakkittu ippo Sentiment Kalakkala…. Super kathai…
  //
  மிக்க நன்றி அமுதன்…
  எவ்வளவு நாள் தான் காமெடிய வெச்சி பொழப்பு ஓட்ட முடியும்… அப்பப்ப இந்த மாதிரி ஏதாவது கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ண வேண்டியதுதான் 😉

  //Itha kooda thenkoodu pottiku post pannunga… Thalaippukku othu varuthu….
  //
  போட்டிக்கெல்லாம் வேண்டாம்பா!!!
  இந்த கதைக்கும் விடுதலைக்கும் சம்பந்தமே இல்லை 😉

 81. //Suresh Babu R said…
  vetti, kathai super appu…

  konjam konjama ur enhancing urself…

  hopefully u deliver a novel very soon…

  Advance Vazhthukkal.

  anbudan

  suresh babu
  //
  Hi Suresh Babu,
  Thx a lot…

  So far I didnt think about writing novels… will plan soon

 82. ” கம்பெனி ஐடி கார்டை மாட்டிக் கொண்டு நான்கு, ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இவனுங்களுக்கு எல்லாம் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியர்னு பெருமை. இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க”-Neenga solli irupathu correct, nalla kathai , continue 🙂

 83. //Neenga solli irupathu correct, nalla kathai , continue 🙂 //
  மிக்க நன்றி ஹனிஃப்

 84. உங்கள் கதைகளை படிக்கும்போது பெரும்பாலானவை சொந்த வாழ்வில் நடந்ததா அல்லது உங்கள் நண்பர்களுக்கு நடந்ததா என தோன்றும். ஒரு வேளை எல்லா கதைகளும் சாப்ட்வேர் கம்பனியை சுற்றி வருவதால் அப்படி தோன்றுகிறதா?

  இந்த கதை நன்றாக இருக்கிறது.ஆரம்பம் மிக அருமை. சோகம் சற்று பிடிக்கவில்லை. ஆனால் முடிவு மிக இயல்பாக வந்து கதைக்கு மெறுகேற்றுகிறது

 85. // செல்வன் said…
  உங்கள் கதைகளை படிக்கும்போது பெரும்பாலானவை சொந்த வாழ்வில் நடந்ததா அல்லது உங்கள் நண்பர்களுக்கு நடந்ததா என தோன்றும். ஒரு வேளை எல்லா கதைகளும் சாப்ட்வேர் கம்பனியை சுற்றி வருவதால் அப்படி தோன்றுகிறதா?
  //
  நீங்க சொல்றத கேட்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு…

  இதுவரைக்கும் நான் எழுதன கதைல எதுவுமே எனக்கு தெரிந்து யாரோடைய சொந்த வாழ்விலும் நடக்கவில்லை. ஆனா நிறைய பேர் வாழ்க்கையில நடக்க வாய்ப்புகள் அதிகம். அதனால ஒருவேளை உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம்.

  //இந்த கதை நன்றாக இருக்கிறது.ஆரம்பம் மிக அருமை. சோகம் சற்று பிடிக்கவில்லை. ஆனால் முடிவு மிக இயல்பாக வந்து கதைக்கு மெறுகேற்றுகிறது
  //
  சோகம் எனக்கும் பிடிக்கலை… அத சரி செய்ய அடுத்த கதை ரெடி…
  ஆனால் அதுக்கு முன்னாடி கொஞ்ச வேற எதாவது பதுவ போடுவோனு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் 😉

 86. என்ன தல, சின்னதா தூறி தூறி, தூறல் 100 போட்ரும் போல இருக்கு!!
  போடலைனாலும் விட மாட்டோம்ல 😉

  -விநய்* 🙂

 87. //Anonymous said…

  என்ன தல, சின்னதா தூறி தூறி, தூறல் 100 போட்ரும் போல இருக்கு!!
  போடலைனாலும் விட மாட்டோம்ல 😉

  -விநய்* :-)//
  எல்லாம் உங்க தயவாலதான்…

  அது பாத்திங்கனா, நம்ம சிறுகதைக்கு மட்டும் 100 பக்கம் வந்திடுது… மத்ததெல்லாம் சும்மா ஒப்புக்கு சப்பாணி பதிவு மாதிரி ஆயுடுது 😉

 88. அது எப்படிங்க.. எல்லாதுக்கும் 100 வந்துட்டா அப்புறம் இந்த மாதிரி கதைக்கு கொஞ்சம் மவுசு கொறஞ்சிடுமில்ல 😉 அதெல்லாம் கண்டுக்காதிங்க, உங்க பதிவெல்லாம் விகடன்ல வர திரை விமர்சனம் மாதிரினு வச்சுக்கோங்க! 50 வந்தாலே பெரிய விஷயம் 🙂

  விகடன்ல ஒரு படத்துக்கு கூட 50க்கு (நூத்துக்கு) மேல கொடுக்க மாட்டாங்க..என்னமோ, விமர்சிக்கிறவரு, ஹாலிவுட்லையே பொறந்து வழந்தவரு மாதிரி.. இவங்க எந்த படத்துக்கு தான் 60க்கு மேலயாவது கொடுப்பாங்கனு தெரியலை 🙂 எனக்குத் தெரிஞ்சு சமீபத்துல அதிக மார்க் எடுத்த படம்னா அது ‘பிதாமகன்’ தான் நினைக்கிறேன் (53).. உங்களுக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா??

  -விநய்*

 89. ///அது எப்படிங்க.. எல்லாதுக்கும் 100 வந்துட்டா அப்புறம் இந்த மாதிரி கதைக்கு கொஞ்சம் மவுசு கொறஞ்சிடுமில்ல ;-)//
  ஆமாம் விநய்… நீங்க சொல்றதும் சரிதான்… எல்லாத்துக்கும் 100 வந்தா அப்பறம் கதையெழுதற ஆசையே வராது 😉

  //உங்களுக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா??//
  நான் கேள்விப்பட்டு 16 வயதினிலேக்குதான் அதிகம். 64 மார்க்னு சொன்னாங்க… உண்மையானு தெரியலை

 90. ரொம்ப நல்ல எழுதியிருக்கிங்க. வாழ்த்துக்கள் !!!

  அதுல பாருங்க, கதைல ஆர்த்தி,ப்ரீத்தினு வந்தாலும் நஜ வாழ்க்கையில… ம்ஹூம்

  எதுலயும் ஒரு பிடிப்பு இல்லாதவன விடுங்க, நம்மல மாதிரி எல்லாத்தயும் ரசிக்கிற
  நல்லவங்களுக்கு (?????) கூட ஒரு ஆர்த்தி மாட்டலியேங்க 😦

  குறிப்பு:
  வெட்டிப்யல்னு பேர வச்சிருக்குறதால “நம்மல”னு போட்டேன். 🙂
  தவறா இருந்தா “எங்கல”னு மாத்திக்கோங்க !!!

  கதை ப்ரமாதம்.

  -அருண்

 91. //Arunkumar said…
  ரொம்ப நல்ல எழுதியிருக்கிங்க. வாழ்த்துக்கள் !!!

  அதுல பாருங்க, கதைல ஆர்த்தி,ப்ரீத்தினு வந்தாலும் நஜ வாழ்க்கையில… ம்ஹூம்
  //
  அதெல்லாம் கிடைச்சா இந்த மாதிரி ப்ளாக் எழுதவோ, படிக்கவோ நேரம் கிடைக்குமா??? 😉

  //எதுலயும் ஒரு பிடிப்பு இல்லாதவன விடுங்க, நம்மல மாதிரி எல்லாத்தயும் ரசிக்கிற
  நல்லவங்களுக்கு (?????) கூட ஒரு ஆர்த்தி மாட்டலியேங்க 😦
  //
  :-((

  //குறிப்பு:
  வெட்டிப்யல்னு பேர வச்சிருக்குறதால “நம்மல”னு போட்டேன். 🙂
  தவறா இருந்தா “எங்கல”னு மாத்திக்கோங்க !!!
  //
  நம்மலனே சொல்லுங்க… ‘நல்லவங்க’னு வேற சொல்லிட்டீங்க.. இனிமே விடுவோமா???

  //
  கதை ப்ரமாதம்.
  //
  மிக்க நன்றி!!!

  -அருண்
  //

 92. சான்சே இல்லை ரொம்ப அருமையான கதை, climax touching

 93. நல்லார்ந்துச்சு பாலாஜி..

 94. vetti mapla…

  kalakitta pa…

  nalla kadai..

  congrats…

 95. //Anonymous said…
  சான்சே இல்லை ரொம்ப அருமையான கதை, climax touching
  //
  மிக்க நன்றி!!!

 96. //எதுலயும் ஒரு பிடிப்பு இல்லாதவன விடுங்க, நம்மல மாதிரி எல்லாத்தயும் ரசிக்கிற
  நல்லவங்களுக்கு (?????) கூட ஒரு ஆர்த்தி மாட்டலியேங்க :(//

  யோவ் ஆர்த்தி என்ன அட்டு பிகரு சுண்டுவிரலுகூட திரும்பிபாக்கமாட்டேங்குது.
  நமக்கில்லை..நமக்கில்லை.. கொடுப்பினை இல்ல.

  மேக்ரோமண்டையன்.

 97. ஹய்யா நான்தான் இப்போ 100வது.

  மேக்ரோமண்டையன்.

 98. //பொன்ஸ் said…
  நல்லார்ந்துச்சு பாலாஜி..
  //
  ஆஹா…
  முதல்முறையா நம்ம கதை நல்லாருக்குனு சொல்லிருக்கீங்க…
  ரொம்ப சந்தோஷம் 😉

 99. //gopi said…
  vetti mapla…

  kalakitta pa…

  nalla kadai..

  congrats…
  //

  gopi machi,

  romba thanxpa…

 100. //Anonymous said…
  //எதுலயும் ஒரு பிடிப்பு இல்லாதவன விடுங்க, நம்மல மாதிரி எல்லாத்தயும் ரசிக்கிற
  நல்லவங்களுக்கு (?????) கூட ஒரு ஆர்த்தி மாட்டலியேங்க :(//

  யோவ் ஆர்த்தி என்ன அட்டு பிகரு சுண்டுவிரலுகூட திரும்பிபாக்கமாட்டேங்குது.
  நமக்கில்லை..நமக்கில்லை.. கொடுப்பினை இல்ல.

  மேக்ரோமண்டையன்.

  //

  மேக்ரோ,
  கவலைப்படாத… உனக்கும் ஒரு காலம் வரும்…

  எப்படியும் வீட்ல பாத்து பண்ணி வெச்சிடுவாங்க 😉

 101. //Anonymous said…
  ஹய்யா நான்தான் இப்போ 100வது.

  மேக்ரோமண்டையன்.
  //
  அது எப்படி??? எனக்கு நான் தான் 100வது 😉

 102. பாலாஜி,
  கதை அருமையா இருக்கு. கதையில நான் ரசிச்ச இடங்களையும், வித்தியாசமா இருக்குன்னு உணர்ந்த இடங்களையும் பாஸ்டன் பாலா ஏற்கனவே சொல்லிட்டாரு. இந்த கதையைப் படிக்கும் போது கூடவே “முத்துமணிச் சுடரே வா” அன்புள்ள ரஜினிகாந்த் படப்பாட்டு என் சிஸ்டத்துல ஓடிட்டு இருந்துச்சு. கதை படிச்சு முடிக்கும் போது இன்னும் கூடுதல் ஃபீலிங்ஸ் ஆகிடுச்சு.

 103. // கைப்புள்ள said…
  பாலாஜி,
  கதை அருமையா இருக்கு. கதையில நான் ரசிச்ச இடங்களையும், வித்தியாசமா இருக்குன்னு உணர்ந்த இடங்களையும் பாஸ்டன் பாலா ஏற்கனவே சொல்லிட்டாரு. இந்த கதையைப் படிக்கும் போது கூடவே “முத்துமணிச் சுடரே வா” அன்புள்ள ரஜினிகாந்த் படப்பாட்டு என் சிஸ்டத்துல ஓடிட்டு இருந்துச்சு. கதை படிச்சு முடிக்கும் போது இன்னும் கூடுதல் ஃபீலிங்ஸ் ஆகிடுச்சு.
  //
  தல,
  இப்பதான் நம்ம கதையெல்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கீங்க போல இருக்கு…

  ஆஹா… இந்த கதைக்கு ஏத்த மாதிரி பாட்டுதான் கேட்டுருக்கீங்க…

  ரொம்ப டாங்ஸ் தல …

 104. முதல் பின்னூட்டமும் நுறாவது பின்னூட்டமும் நீயே போட்டுகிட்டாலும் அது செல்லாது செல்லாது,

  முதல் பின்னூட்டமிட்ட தம்பிக்கு வாழ்த்துக்கள் :))

 105. ஆஹா..திடீர்னு 2 சிக்ஸ் அடிச்சு 100 தான்டிடுச்சு..கலக்குங்க!! நானே ஏதாவது நாலு பின்னூட்டம் போட வேண்டியது இருக்கும் நெனச்சேன் 😉

  சரி சரி இப்போ தான் நான் யாருன்னு தெரிந்சு போச்சுல்ல, இனிமே மரியாதையெல்லாம் எதிர் பார்க்கக் கூடாது..சரியா பாலாஜி?? 🙂

  -விநய்*

 106. //தம்பி said…
  முதல் பின்னூட்டமும் நுறாவது பின்னூட்டமும் நீயே போட்டுகிட்டாலும் அது செல்லாது செல்லாது,

  முதல் பின்னூட்டமிட்ட தம்பிக்கு வாழ்த்துக்கள் :))
  //
  எதையெல்லாம் நோட் பண்றாங்க பாருப்பா???

  தம்பி உனக்கு என் நன்றி… அப்படியே எல்லாருக்கும் ஒரு நன்றி!!! அதுக்காக ஆட்டத்த நிருத்திடாதீங்க… நீங்க கொடுக்குற பின்னூட்டம்தான் அடுத்த கதைக்கு டானிக்…

 107. //Anonymous said…
  ஆஹா..திடீர்னு 2 சிக்ஸ் அடிச்சு 100 தான்டிடுச்சு..கலக்குங்க!! நானே ஏதாவது நாலு பின்னூட்டம் போட வேண்டியது இருக்கும் நெனச்சேன் 😉
  //
  அதெல்லாம் கவலையே படத்தேவையில்லை… கதை நல்லா இருந்தா தான வரும்… இல்லைனா இந்த மாதிரி மக்களா பரிதாபப்பட்டு போட்டுடுவாங்க 😉

  //சரி சரி இப்போ தான் நான் யாருன்னு தெரிந்சு போச்சுல்ல, இனிமே மரியாதையெல்லாம் எதிர் பார்க்கக் கூடாது..சரியா பாலாஜி?? 🙂

  -விநய்*
  //
  நான் என்னைக்கு மரியாதை எதிர்பார்த்தேன்… இங்க பாருங்கடா ஒருத்தர் புதுசா என்னுமோ பேசறாரு… எங்களுக்கேவா???

 108. அதான் நூறு போட்டாச்சுல்ல அப்புறம் ஏய்யா குந்த வச்சி உக்காந்துருக்க!
  அடுத்த பதிவு போடுய்யா!

  //எதையெல்லாம் நோட் பண்றாங்க பாருப்பா???//

  நியாயப்படி பாத்தா பின்னூட்டக்கயமைல புடிச்சு போடணும். கதை நல்லா எழுதறியேன்னு நூட்ரல்ல உட்டாச்சி.

  சீக்கிரம் சீக்கிரம்!

 109. // தம்பி said…
  அதான் நூறு போட்டாச்சுல்ல அப்புறம் ஏய்யா குந்த வச்சி உக்காந்துருக்க!
  அடுத்த பதிவு போடுய்யா!
  //
  போட்டாச்சு…
  நாங்க என்ன தம்பியா??? தினமும் ஒரு பதிவு போடறதுக்கு?

  ஏம்பா உன் அளவுக்கு சரக்கு எங்ககிட்ட இல்லப்பா…

  //
  //எதையெல்லாம் நோட் பண்றாங்க பாருப்பா???//

  நியாயப்படி பாத்தா பின்னூட்டக்கயமைல புடிச்சு போடணும். கதை நல்லா எழுதறியேன்னு நூட்ரல்ல உட்டாச்சி.

  சீக்கிரம் சீக்கிரம்!
  //
  பின்னூட்ட கயமைத்தனமா??? அப்படினா?

  சரி நல்லா எழுதறன்னு சொல்லிட்ட.. அதனால மன்னிச்சு விட்டாச்சு 😉

 110. //dany said…
  Beautiful and touching work.
  //
  Dany,
  Thx a lot!!!

 111. nalla irukku . nice story ………. konjam nenja nakkeeteenkaaaaaaaaaaaaaa

 112. Woo. Your storlyline reflects the inroverts in IT kind of domains. Good and touching line. Keep writing

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: