• Top Clicks

  • எதுவுமில்லை
 • அதிகம் பார்வையிடப்பட்டவை

 • Blog Stats

  • 28,692 hits
 • Advertisements

சைக்காலஜி – பதில்கள்

கேள்விகளை படிக்காதவர்கள் தயவு செய்து படித்துவிட்டு வரவும். படித்தவர்கள் மீண்டும் ஒரு முறை படிக்கவும் (சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன)

பதில்கள்:

1) அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் உங்கள் உண்மையான குணங்கள்.

2) இரண்டாவதாக உங்களுக்கு பிடித்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் மற்றவரை பொருத்தவரை உங்கள் குணம். (From others perspective)

3) நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய விரும்புவது அந்த நிறம் குறிக்கும் பொருள் தான். (அமைதி, வெற்றி, சக்தி…)

4) இது செக்ஸில் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டை குறிக்கிறது.

5) இது நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற எண்ணத்தை குறிக்கிறது. (மகிழ்ச்சி, துயரம், அமைதி, அமைதியின்மை, ஒழுக்கம்…)

6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.

7) உங்கள் மரணம் உங்கள் கண் முன் தெரியும் தருவாயில் நீங்கள் இவ்வாறுதான் உணர்வீர்கள்.

விடை எந்த அளவிற்கு உங்களுக்கு சரியாக இருந்தது என்று தெரியப்படுத்தினால் மகிழ்வேன்…

Advertisements

22 பதில்கள்

 1. பாலாஜி,

  50 – 50

  பதிவுக்கு நன்றி.

 2. 1) அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் உங்கள் உண்மையான குணங்கள்.

  – நமக்குப் பிடித்த விலங்கு எதுன்னு ஊருக்கே தெரியும்.. :)) இது சரியாத் தான் இருக்கு..

  2) இரண்டாவதாக உங்களுக்கு பிடித்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் மற்றவரை பொருத்தவரை உங்கள் குணம். (From others perspective)

  – இதுவும் சரியாத் தான் இருக்கு .. (இதுவும் எந்த விலங்குன்னு மக்களுக்குத் தெரிஞ்சிருக்கும் 😉 )

  3) நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய விரும்புவது அந்த நிறம் குறிக்கும் பொருள் தான். (அமைதி, வெற்றி, சக்தி…)
  – கரெக்டு கரெக்டு..

  4) இது செக்ஸில் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டை குறிக்கிறது.

  – ம்ம்..

  5) இது நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற எண்ணத்தை குறிக்கிறது. (மகிழ்ச்சி, துயரம், அமைதி, அமைதியின்மை, ஒழுக்கம்…)
  – ம்ம்ம்.. (so.. so.. இன் தமிழ்..)

  6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.

  – பக்கா..

  7) உங்கள் மரணம் உங்கள் கண் முன் தெரியும் தருவாயில் நீங்கள் இவ்வாறுதான் உணர்வீர்கள்.

  — சரியான்னு இப்போ தெரியலியேபா!! 🙂

 3. சி.பா,
  மிக்க நன்றி!!!
  அப்படியே எந்த கேள்விகளுக்கு சரியா வரலைனு நம்பர் மட்டும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்!!!

 4. ஆறாவது ஒத்துப் போகவில்லையோ என்று தோன்றுகிறது. ஏழாவதைப் பற்றி இப்போதைக்குத் தெரியாது. அது ‘கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்’ வகை. 🙂

 5. பொன்ஸக்கா,
  இவ்வளவு விளக்கமா சொன்னதுக்கு ரொம்ப நன்றி!!!

  இது நான் பெங்களூர்ல இருக்கும் போது பக்கத்து ரூம் பையன் எங்க 5 பேர வெச்சி கேட்டான்… எல்லாரும் வேற வேற பதில்…

  அதுவும் அந்த சாவிதான் ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு…
  ஒருத்தன் சொன்ன பதில்.. சாவு திருப்பனா திரும்பிக்கிட்டே இருக்கும்.. உடையவே உடையாது…

  அவன் நம்ம எது சொன்னாலும் நம்ப முன்னாடி சரி சரினு சொல்லுவான்… ஆனா அத கேக்க மாட்டான்…
  ரொம்ப ஆச்சர்யமான பதில். என்னால அந்த மாதிரி சாவிய நினைச்சு கூட பாக்க முடியல 🙂

 6. ஓகோ! இதுதான் வெவரமா!

  1. ஆனை ( குணங்களாகக் கருதியது 1. வலிமை, 2.அந்த வலிமை இருந்தாலும் அதன் அமைதி 3. சின்ன ஊசியைக் கூடத் தூக்க முடியும் சாதுர்யம்)
  (இது என்னோட பண்பா! கிழிஞ்சது போ)

  2. இதுவும் ஆனையத்தான் நெனச்சேன்.
  (வெளங்குனாப்புல தான்)

  3. இளஞ்சிவப்பு (baby pink) – அது குறிப்பதாகக் கருதியது துன்பமற்ற இன்பம்…
  (இது சரியாயிருக்கும் போல தோணுது)

  4. மழையில் நனைவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் மழையில் நனைந்து கொண்டே பைக் ஓட்டுவது இன்னமும் பிடிக்கும்.
  (நோ கமெண்ட்ஸ் 🙂 )

  5. ஒருவித வியப்பு கலந்த அடக்கம் (என்னோட வாழ்க்கைய இப்பிடியா நான் பாக்குறேன். இருந்தாலும் இருக்கலாம்.)

  6. பிஸ்கோத்து ரேஞ்சுல ஒரு சாவி. லேசா அழுத்துனாலே ஒடஞ்சு போறாப்புல. ( ஈகோ அவ்வளவு சீக்கிரமா ஒடஞ்சிருமா என்ன…தெரியலையே…பொதுவா ஈகோ பாக்குறதில்லை. நல்லதோ கெட்டதோ தெரியலையே)

  7. அமைதியா இருந்து நடக்குறத ஏத்துக்குவேன் (மரணத் தருவாயில் உணர்வேனா….இங்கதாங்க தப்பு செஞ்சிட்டேன். எல்லாப் பக்கமும் மூடியிருக்கிறப்போ முருகா காப்பாத்துன்னு கூப்பிடாம அமைதியா இருப்பேனா…தெரியலையே…முருகா எதுன்னாலும் நீதான் பொறுப்பு)

  வெட்டி, இந்தாங்க என்னோட விடைகள்.

 7. அட…எல்லாக் கேள்விகளுக்குமே ஓரளவு ஒத்துப்போகிறது…

 8. 1அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் உங்கள் உண்மையான குணங்கள்.

  பூனை, அதனின் மென்மையான பாதங்கள்!

  2.இரண்டாவதாக உங்களுக்கு பிடித்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் மற்றவரை பொருத்தவரை உங்கள் குணம். (From others perspective)

  மென்மை, இதேதான் என்னோட கேரக்டர்னு எல்லாரும் சொல்றாங்க 🙂

  3.நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய விரும்புவது அந்த நிறம் குறிக்கும் பொருள் தான். (அமைதி, வெற்றி, சக்தி…)

  நீலநிறம் பிடித்த, கடல், மேகம்.

  4. தெரியும்.

  5.வியப்பு

  6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.

  கெலிச்சிட்டேன்.

  7) ஒரு அறையில் நீங்கள் தனியாக உள்ளீர்கள். அந்த அறையின் அனைத்து வழிகளும் அடைப்பட்டுள்ளன… (வழிகளே இல்லை என்று வைத்துக்கொள்ளவும்). அந்த அறையிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. அப்போழுது உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்?

  அறைன்னு ஒண்ணு இருந்தா அதுக்கு கதவு, வாசகாலு, சன்னலுன்னு ஏதாவது ஒண்ணு கண்டிப்பா இருக்கும்.

  தேடுவேன்.

  எம்புட்டு மார்க்கு எனக்கு போட்டுக்கறதுன்னு தெரியல, நீயே போட்டுக்க வெட்டி

 9. //எம்புட்டு மார்க்கு எனக்கு போட்டுக்கறதுன்னு தெரியல, நீயே போட்டுக்க வெட்டி //
  இதுல மார்க் எல்லாம் எதுவும் இல்ல. நமக்கு நம்மை பற்றி தெரியாத சில விஷயங்கள் இதம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்… அவ்வுளவுதான் 😉

 10. 1 correct
  2 correct
  3 incorrect
  4 correct:-))
  5 incorrect
  6 incorrect
  7 correct

  Very good survey.Will post again in evening in tamil

 11. 1) புலி (power, strength, appearance)
  2) யானை (அமைதி, வலிமை, தோற்றம்)
  3) கருப்பு (actually, கரு நீலம். இதுக்கு என்ன அர்த்தம்??)
  4) correct 🙂
  5) சோகம் 😦 [maybe, இப்போ இருக்கிற மனநிலை அப்படினு நினைக்கிறேன்]
  6) நான் ரொம்ப கணமா (heavy) இருக்கும்னு நெனச்சேன். அப்படினா?? (உறுதியை தப்பா படிச்சிட்டேன். இது எந்த அளவு சரி?ன்னு தெரியலை)
  7) யோசிப்பேன் 😕

  திரு.வெட்டிப்பயல், உங்களுக்குத் தெரிந்தால் என்னோட கேள்விகள் 3, 6 க்கு பதில் ப்ளீஸ்!!

  -விநய்*

 12. விநய்,
  3. Black is the symbol of Power!!!
  6. கணம்னா அதன் உறுதியை பொருத்துதான் சொல்ல முடியும்…

  சரி இது விளையாட்டுதான், ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதீங்க…

  சோகமா இருக்கீங்களா? சும்ம நம்மல மாதிரி ஒரு பிளாக் ஆரம்பிச்சு யார் கூடவாவது சண்டை போடுங்க!!! ஜாலியா இருக்கும் 😉

 13. சண்டை போடுறதுக்கெல்லாம் எதுக்கு பாலாஜி தனி ப்ளாக்.. நான் தினமும் உங்க ப்ளாக்ல வந்தே சண்டை போடுறேன் 🙂
  சரி சரி.. இப்படியே காலத்த ஓட்டுறீங்க, அடுத்த கதை எப்போ ரிலீஸ்??

  -விநய்*

 14. //Anonymous said…
  சண்டை போடுறதுக்கெல்லாம் எதுக்கு பாலாஜி தனி ப்ளாக்.. நான் தினமும் உங்க ப்ளாக்ல வந்தே சண்டை போடுறேன் 🙂
  சரி சரி.. இப்படியே காலத்த ஓட்டுறீங்க, அடுத்த கதை எப்போ ரிலீஸ்??

  -விநய்*
  //
  ஆஹா!!! காரியத்துல கண்ணா இருக்கீங்களே!!! இன்னைக்கு தான் சிறில் தலைப்பு கொடுத்திருக்கார். எப்படியும் ரெண்டு நாள்ல எழுதிடறேங்க!!!

 15. 1 சரி
  2 சரி
  3 சரின்னு தான் நினைக்கிறேன்; கரும் பச்சை அப்பிடின்னு mixed color-ஆ நினைக்கிறவங்க கதி என்னாபா?
  4 சரியே! யாருக்குத் தான் மழையில் நனையப் பிடிக்காது? அதனால்…
  5 சரி தான்
  6 சாவி சமாச்சாரத்துக்குள்ள இவ்ளோ விடயம் இருக்கா? ஆனா ஒரு விடயம். ego என்பது சாவியின் உறுதியா இல்லை பூட்டின் பலம்/பலவீனமா? ஏன் கேட்கிறேன்னா, உடைபடப் போவது பூட்டு தானே?

  7 இது முற்றும் துறந்த முனிவர்க்கே தெரியுமான்னு தெரியலயே!

  ஆக மொத்தம் self introspection பண்ன வச்சிட்டீங்க! நன்றி!

 16. அடங்கொக்கொமக்கா
  எல்லாம் சரியா இருக்கப்பூ
  சென்ஷி

 17. //கரும் பச்சை அப்பிடின்னு mixed color-ஆ நினைக்கிறவங்க கதி என்னாபா?
  //
  KRS,
  என்ன கலர் பிடிக்குதுனு முக்கியமில்ல அந்த கலரோட குணமா நாம என்ன நினைக்கிறோம்னுதான் முக்கியம்… வெள்ளையே கூட அரசியல் காரணத்துக்காக பிடிக்கலாம்… அதனால அவர்கள் அமைதிய விரும்புறாங்கனு அர்த்தமில்லை 🙂

  சாவி மேட்டர் நமக்கு சரியா தெரியல… ஆனா விடை சரியா இருந்துச்சு 😉

 18. //6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.

  7) உங்கள் மரணம் உங்கள் கண் முன் தெரியும் தருவாயில் நீங்கள் இவ்வாறுதான் உணர்வீர்கள்.//

  வெட்டி…!

  இது ஒரு நல்ல தத்துவமாக தெரிகிறது !
  பிடித்திருக்கிறது …!

  டிஸ்கி: இதுக்கும் ஒரு சைக்காலஜி சொல்லிடாதிங்க 🙂

 19. எனக்குப்பிடித்த மிருகம் குதிரை…அதன் வேகம், வலிமை மற்றும் கம்பீரத்திற்காக பிடிக்கும்… நானா அப்படியா – Totally Wrong

  எனவே மேலே செல்லவில்லை 😦 மற்றபடி சுவாரசியமாக இருந்தது!

 20. பாலாஜி,

  சரி – 1,2,3.

  தவறு-4,5,6.

  தெரியவில்லை – 7.

 21. 1, doggy
  2. kutti doggy
  3. black
  4. hee hee
  5. எனக்கு fresh மீன் கிடைச்சா fry பன்னலாம்னு தோனும்
  6. நல்ல கெட்டியான பெரிய சாவி, ராஜா காலத்து படத்துல வர மாதிரி
  7. ஒரு கோட்டர் இருந்தா அடிச்சிட்டு தூங்கிடலாம்னு இருக்கும்

 22. nalla irukkuthu enakku pidiththathu aththa savikkathai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: