டைகர் பிஸ்கெட்

பொதுவாக வார இறுதி நாட்களில் கடைகளுக்கு சென்று மற்ற நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். நேற்று அதை போல அருகே இருக்கும் இந்தியன் ஸ்டோர் சென்றேன் . அங்கே பார்த்த ஒரு பொருள் எனக்கு என் கல்லூரி நாடகளை அசை போட வைத்தது.

கல்லூரி நாட்களில் ஒவ்வொரு பரிட்சைக்கும் முதல் நாள் இரவு 2 – 3 மணி வரை படிப்போம் (விழித்திருப்போம்). பனிரெண்டு மணிக்கு மேல் நன்றாக பசிக்க ஆரம்பித்துவிடும். அப்போதெல்லாம் எங்கள் பசியை போக்க உதவியது மூன்று ரூபாய் டைகர் பிஸ்கெட்தான். சில நாட்களில் அதுவே உணவான கதைகளும் உண்டு.

கேண்டினில் பரிட்சை நேரங்களில் ஸ்டாக் தீர்ந்துவிடும் அளவுக்கு விற்று தீர்க்கும் ஒரு பொருள் டைகர் பிஸ்கெட்தான். என்னதான் குட்-டே, லிட்டில் ஹார்ட்ஸ் என்று மற்ற நாட்களில் வாங்கி சாப்பிட்டாலும், பரிட்சை வந்தால் அனைத்து ரூம்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு பொருள் டைகர் பிஸ்கெட்தான்.

பொதுவாக ஒவ்வொரு பரிட்சை முடிந்தவுடனும் ஒரு படத்திற்கு செல்வது வழக்கம் (எப்படியும் 2-3 நாள் லீவு இருக்கும்). படத்திற்கு போய் வரும்பொழுது நன்றாக சாப்பிட்டுவிட்டு வருவோம். முதல் நாள் பரிட்சைக்கு படிக்கிற பில்ட் அப்பில் ஹாஸ்டலிலே ஏதாவது சாப்பிட்டு படிப்பதால், ரிலாக்ஸாக இருக்க இந்த வழி. (படம் பாக்கறதுக்கு ஒரு காரணம் – கண்டுக்காதீங்க)

அப்படித்தான் கடைசி வருடம் நியுரல் நெட்வொர்க்ஸ் பரிட்சை முடிந்து எல்லோரும் படத்திற்கு கிளம்பினார்கள். நான் மட்டும் போகாமல் ஹாஸ்டலிலே இருந்துவிட்டேன். ஆனால் வரும் போது எனக்கு பரோட்டா, தோசை எல்லாம் பார்சல் வாங்கி வர சொல்லிவிட்டேன்.

அவர்கள் வரும் நேரம் பார்த்து தூங்கி கொண்டிருந்தேன். சரியாக 10:00 மணிக்கு எழுந்து சாப்பிடலாம் என்று பார்த்தால்… எனக்கு வாங்கி வெச்சிருந்த பார்சல எந்த நாதாரி நாயோ எடுத்து தின்னுட்டு “டைகர் பிஸ்கெட்” வெச்சிருந்தானுங்க.

எவன் இத பண்ணதுன்னு விசாரிச்சா இருக்குற பிஸ்கெட்டும் போயிடும்னு அதை மட்டும் சாப்பிட்டு தண்ணி குடிச்சிட்டு தூங்கிட்டேன்… இப்படி நம்ம வாழ்க்கையில ஒரு முக்கியமான இடம் இந்த பிஸ்கெட்டுக்கு இருக்கு.

நேற்று அதை பார்த்தவுடன் அந்த பரிட்சை பயம் மனதில் வந்தது. (பரிட்சையே இல்லாம காலேஜ் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் :-))

59 பதில்கள்

 1. டைகர் பிஸ்கெட்டா??
  நாங்களும் ‘Semester exams’க்கு முதல் நாள் தான் படிப்போம் (விழித்திருப்போம் :)). ஆனா நாங்க (ஆறு பேர்) ‘Day Scholars’. க்ரூப் ஸ்டடினு ஒருத்தனோட பாட்டி வீட்டுக்குப் போயிடுவோம். இறவு 1 மணிக்கு மேல நேரா சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் போயி (5 கிமீ தான்) நல்லா கொத்து பராட்டாவும், கோழி கரியும் சாப்பிட்டு வந்து தூங்கிடுவோம்.. அதெல்லாம் ஒரு பொற்க்காலம்!! அது சரி, பரிட்சை இல்லாம காலேஜா?? ஆஹா, நினைத்துப் பார்க்கவே நல்லா இருக்கு!! 🙂

  – விநய்*

 2. //கொத்து பராட்டாவும், கோழி கரியும்//
  நல்லா படிச்சி இருக்கீங்க…

  ஹாஸ்டெல்ல இதெல்லாம் சாப்பிடனும்னா ரொம்ப கஷ்டம்… நம்ம கொத்து பரோட்டா ஆயிடுவோம் 😉

 3. கங்குலி வந்து வெளம்பரப்படுத்துனத விட…உங்க வெளம்பரம் சூப்பர் அப்பு…

  3 ரூவாய்க்கு எந்த நாதாரியும் பிஸ்கெட் விக்கமாட்டான்…டைகர் பிஸ்கட் தவிர…

  நாம் படிக்கிற காலத்துல 2 ரூவாய்க்கு கெடச்சது…பார்லி ஜி இன்னொறு பிராண்டு…அத்தப் பாக்கும்போதெல்லாம் ஹாஸ்டல் பசங்க பரீட்சைக்கு படிச்சது தான் எனக்கும் ஞாபகம் வரும்…

  நல்லவேளை நான் தப்பிச்சேன்…என்னெக்குமே டே ஸ்காலராகவே இருந்து ..

 4. //Vajra said…
  கங்குலி வந்து வெளம்பரப்படுத்துனத விட…உங்க வெளம்பரம் சூப்பர் அப்பு…

  3 ரூவாய்க்கு எந்த நாதாரியும் பிஸ்கெட் விக்கமாட்டான்…டைகர் பிஸ்கட் தவிர…
  //
  அந்த ஒரு காரணத்துக்காக தான் அத வங்கறதே!!!

  //
  நாம் படிக்கிற காலத்துல 2 ரூவாய்க்கு கெடச்சது…பார்லி ஜி இன்னொறு பிராண்டு…அத்தப் பாக்கும்போதெல்லாம் ஹாஸ்டல் பசங்க பரீட்சைக்கு படிச்சது தான் எனக்கும் ஞாபகம் வரும்…
  //
  பார்லி-ஜி யவிட டைகர் நல்லாதாங்க இருக்கும் 😉

  //நல்லவேளை நான் தப்பிச்சேன்…என்னெக்குமே டே ஸ்காலராகவே இருந்து ..
  //
  ஹாஸ்டல் வாழ்க்கை அருமையான வாழ்க்கைங்க… அதெல்லாம் வாழ்ந்து பாத்தாதான் தெரியும்

 5. கொத்ஸ்,
  ஏமாத்திட்டனா??? கூடிய சீக்கிரம் ஏதாவது நல்ல பதிவு தர முயற்சி செய்கிறேன்.

 6. சேம் ப்ளட் 😉

  //ஹாஸ்டல் வாழ்க்கை அருமையான வாழ்க்கைங்க… அதெல்லாம் வாழ்ந்து பாத்தாதான் தெரியும்//

  இதுக்கும் சேம் ப்ளட் தான்…

  லாலல்லா..லாலல்ல்லால்ல்லாஆஆ…

  வேற ஒன்னுமில்ல எஸ்.ஏ. ராஜ்குமார் மாதிரி ட்ரை பண்ணேன் :))

 7. //
  ஹாஸ்டல் வாழ்க்கை அருமையான வாழ்க்கைங்க… அதெல்லாம் வாழ்ந்து பாத்தாதான் தெரியும்
  //

  வெளி நாட்டு ஹாஸ்டல் வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கோம் தல… நல்லாத்தான் இருக்கு…! ஆனா இது ஹாஸ்டலைவிட ஒரு படி மேல…வீடு மாதிரி.. டைகர் பிஸ்கட்டெல்லாம் வாங்கி வவுத்த நெரப்பிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை…! சமைத்துச் சாப்பிடலாம்…

  டே ஸ்காலராக இருந்த காலத்திலேயே, தனி வீடு பார்த்து நண்பர்களுடன் தங்கியிருந்து வந்துட்டுப் போனேனுங்க…எங்களுக்கும் தெரியும்யா…ஹாஸ்டல்னா இன்னா பண்ணுவாய்ங்கன்னு….

 8. //
  லாலல்லா..லாலல்ல்லால்ல்லாஆஆ…
  //

  ஏய்..ஏய்… நிறுத்துங்கப்பா ..!! ஓவரா…e-motion ஆகாதீங்கப்பா.

 9. //கொத்ஸ்,
  ஏமாத்திட்டனா??? கூடிய சீக்கிரம் ஏதாவது நல்ல பதிவு தர முயற்சி செய்கிறேன்.//

  யப்பா சாமி. நல்ல பதிவுன்னுதானே சொல்லியிருக்கேன். உ.கு எல்லாம் ஒண்ணும் இல்லை சாமி.

 10. // Vajra said…
  //
  ஹாஸ்டல் வாழ்க்கை அருமையான வாழ்க்கைங்க… அதெல்லாம் வாழ்ந்து பாத்தாதான் தெரியும்
  //

  வெளி நாட்டு ஹாஸ்டல் வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கோம் தல… நல்லாத்தான் இருக்கு…! ஆனா இது ஹாஸ்டலைவிட ஒரு படி மேல…வீடு மாதிரி.. டைகர் பிஸ்கட்டெல்லாம் வாங்கி வவுத்த நெரப்பிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை…! சமைத்துச் சாப்பிடலாம்…
  //
  வீட்டவிட்டு வெளிய இருக்கறது மட்டும் ஹாஸ்டெல் இல்லங்க…

  ஆமாம் நீங்க படிக்கறீங்களா? அப்படினா ஒரு வேளை நீங்க ஃபீல் பண்ணலாம். ஆனா நம்ம ஊர் மாதிரி வருமானு தெரியல…

  அதெல்லாம் அப்ப கஷ்டம் மாதிரிதான் தெரியும் சங்கர்… இப்ப நினைத்து பார்த்தால் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

 11. //கப்பி பய said…
  சேம் ப்ளட் 😉

  //ஹாஸ்டல் வாழ்க்கை அருமையான வாழ்க்கைங்க… அதெல்லாம் வாழ்ந்து பாத்தாதான் தெரியும்//

  இதுக்கும் சேம் ப்ளட் தான்…
  //
  கப்பி,
  யூ டூ…

  //லாலல்லா..லாலல்ல்லால்ல்லாஆஆ…

  வேற ஒன்னுமில்ல எஸ்.ஏ. ராஜ்குமார் மாதிரி ட்ரை பண்ணேன் :))
  //
  இது எந்த லாலாப்பா…

  பல லாலாலாக்கல் இருக்கின்றன…

  ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ – லாலாலா லல்ல லாலாலா

  ஏதோ ஒரு பாட்டு –
  லாலா லல லாலா

  எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (வானத்தை போல) –
  லாலா லால லாலா லாலா லாலலா…

  இன்னும் நிறைய இருக்கு பேசாம ஒரு பதிவா போட்டுடலாம் 😉

 12. //
  ஆமாம் நீங்க படிக்கறீங்களா? அப்படினா ஒரு வேளை நீங்க ஃபீல் பண்ணலாம். ஆனா நம்ம ஊர் மாதிரி வருமானு தெரியல…
  //

  ஆராய்ச்சிப் படிப்பு தல…Over qualified கேசுங்க நாங்கல்லாம்..!! வேலையும் கெடைச்சித் தொலையாது..!! டிசம்பரோட இஸ்ரேலுக்கு டாட்டா!! அதுக்கப்புறம்தான் என் பாடு!!

  நம்மவூரு ஹாஸ்டல் மாதிரி வராதுதான்… ஒரு பக்கம் வெறுப்பா இருந்தாலும்…இப்ப நெனக்கிம்போது சந்தோஷம் தான்…

  சோத்துக்கு வழியில்லாம 5-10 கிலோஎல்லாம் சர்வசாதரணமா ஆறு மாசத்துல தொலைத்த நண்பர்கள் இருந்தார்கள்.. இப்ப ஜெர்மனி, யூ.கே ன்னு இருக்கானுங்க நம்ம பசங்க..

  நீங்க எழ்துற மாதிரித்தன் நாங்க skype ல அப்பப்ப பேசிக்குவோம்.. அது தான். வேறொண்ணுமில்ல…

 13. //இலவசக்கொத்தனார் said…
  //கொத்ஸ்,
  ஏமாத்திட்டனா??? கூடிய சீக்கிரம் ஏதாவது நல்ல பதிவு தர முயற்சி செய்கிறேன்.//

  யப்பா சாமி. நல்ல பதிவுன்னுதானே சொல்லியிருக்கேன். உ.கு எல்லாம் ஒண்ணும் இல்லை சாமி.
  //
  கொத்ஸ்,
  மிக்க நன்றி…
  உங்களுக்கு வேற வயசாயிடுச்சா 😉
  இந்த மாதிரி பதிவு எல்லாம் போர் அடிக்குதோனு நெனச்சிக்கிட்டேன்…

  இதுல உள்குத்து இருக்கானு உங்களுக்கு தெரியாதா என்ன 😉

 14. // Vajra said…
  //
  லாலல்லா..லாலல்ல்லால்ல்லாஆஆ…
  //

  ஏய்..ஏய்… நிறுத்துங்கப்பா ..!! ஓவரா…e-motion ஆகாதீங்கப்பா.
  //
  கப்பியோட ஃபீலிங்ஸ்க்கு ஏம்பா புல் ஸ்டாப் வைக்கற!!!

  நீ ஃபீல் பண்ணுமா 😉

 15. //Vajra said…
  //
  ஆமாம் நீங்க படிக்கறீங்களா? அப்படினா ஒரு வேளை நீங்க ஃபீல் பண்ணலாம். ஆனா நம்ம ஊர் மாதிரி வருமானு தெரியல…
  //

  ஆராய்ச்சிப் படிப்பு தல…Over qualified கேசுங்க நாங்கல்லாம்..!! வேலையும் கெடைச்சித் தொலையாது..!! டிசம்பரோட இஸ்ரேலுக்கு டாட்டா!! அதுக்கப்புறம்தான் என் பாடு!!
  //
  ஓ!!! சீக்கிரமே ஆராய்ச்சியெல்லாம் முடித்து நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்!!!

  //சோத்துக்கு வழியில்லாம 5-10 கிலோஎல்லாம் சர்வசாதரணமா ஆறு மாசத்துல தொலைத்த நண்பர்கள் இருந்தார்கள்.. இப்ப ஜெர்மனி, யூ.கே ன்னு இருக்கானுங்க நம்ம பசங்க..
  //
  அப்ப நானும் இஸ்ரேலுக்கு ஆறு மாசம் வரேன் 😉

  //நீங்க எழ்துற மாதிரித்தன் நாங்க skype ல அப்பப்ப பேசிக்குவோம்.. அது தான். வேறொண்ணுமில்ல…
  //
  சேம் பிளட் 😦

 16. //
  அப்ப நானும் இஸ்ரேலுக்கு ஆறு மாசம் வரேன் 😉
  //

  ஐயா…ராசா…இஸ்ரேலுக்கு வந்து எவனும் வெயிட்டத் தொலைக்கவில்லைய்யா…

  அதெல்லாம் மதுரையிலதான்…!! சோத்துக்கு இங்கென்ன கேடு…வஞ்சனையில்லாம வவுத்துக்கு போட்டுக்கலாம்…!!

 17. //ஏய்..ஏய்… நிறுத்துங்கப்பா ..!! ஓவரா…emotion ஆகாதீங்கப்பா. //

  அடிக்கடி இப்படித்தான் ஃபீல் ஆகும்..வாங்கி சாப்பிட்ட பிஸ்கட் அப்படி…அதெல்லாம் கண்டுக்கப்படாது ;))

  //இது எந்த லாலாப்பா…

  இன்னும் நிறைய இருக்கு பேசாம ஒரு பதிவா போட்டுடலாம் 😉
  //

  விளங்கிரும்!!!

 18. // Vajra said…
  //
  அப்ப நானும் இஸ்ரேலுக்கு ஆறு மாசம் வரேன் 😉
  //

  ஐயா…ராசா…இஸ்ரேலுக்கு வந்து எவனும் வெயிட்டத் தொலைக்கவில்லைய்யா…

  அதெல்லாம் மதுரையிலதான்…!! சோத்துக்கு இங்கென்ன கேடு…வஞ்சனையில்லாம வவுத்துக்கு போட்டுக்கலாம்…!!
  //
  மதுரைல சாப்பாடு சூப்பரா இருக்கும்… எந்த நேரம் போனாலும் வயித்துக்கு பிரச்சனையில்லனு கேள்விப்பட்டேன்.. அங்க வந்து உடம்பு குறைஞ்சிட்டாங்களா???

 19. //இது எந்த லாலாப்பா…

  இன்னும் நிறைய இருக்கு பேசாம ஒரு பதிவா போட்டுடலாம் 😉
  //

  விளங்கிரும்!!! //

  🙂

 20. டைகர் பிஸ்கெட்டா….. எப்படிப்பாயிருக்கும் ஞாபகத்துக்கே வரமாட்டேன்ங்குது….

 21. அடடா, பாலாஜி,
  ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.
  ஏன் பல பேரு,”நீ என்ன பெரிய பிஸ்கோத்தா” ன்னு கேட்கறாங்க-ன்னுட்டு!

  உங்க பதிவ பாத்ததுக்கு அப்புறம் தான் புரியுது…மாணவ மணிகள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, டைகர் பிஸ்கோத்து சாப்பிட்டுப் பரீட்சை எழுதி பெரிய லெவலுக்கு வராங்க!

  அதனால தான், அப்படி எல்லாம் கஷ்டப்படாதவங்கள பாத்து,”நீ என்ன பெரிய பிஸ்கோத்தா” ன்னு கேக்கறாங்க போல 🙂

 22. // Mr.Vettipayal Said நேற்று அதை பார்த்தவுடன் அந்த பரிட்சை பயம் மனதில் வந்தது. (பரிட்சையே இல்லாம காலேஜ் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் :-)) //

  இரண்டு பக்கமும் கோல் போஸ்ட்டே இல்லாமல் கால் பந்து ஆடுவதைப் போல இருக்கும்
  சஸ்பென்ஸே இல்லாமல் சினிமா பார்ப்பதைப்போல இருக்கும்
  – வாத்தியார்

 23. நான் ஹாஸ்டலில் ஒரு நாள் கூட இருந்ததில்லை.ஆனா ஹாஸ்டல் பசங்க சொல்லும் ராகிங் கதை எல்லாம் கேட்டா மனசு வெறுத்திடும்.அதனாலேயே ஹாஸ்டல் என்றால் ஒரு சின்ன பயம் இப்போதும் மனதில் இருக்கிறது

 24. //எலிவால்ராஜா said…
  டைகர் பிஸ்கெட்டா….. எப்படிப்பாயிருக்கும் ஞாபகத்துக்கே வரமாட்டேன்ங்குது….//
  ஏனுங்க… நீங்க இந்தியா விட்டு வந்து எத்தனை வருஷமாகுதுங்கண்ணொவ்?

  பிரிட்டானியா மில்க் பிகிஸ் தெரியுங்களா? அது மாதிரியே இருக்குங்க 😉

 25. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…
  அடடா, பாலாஜி,
  ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.
  ஏன் பல பேரு,”நீ என்ன பெரிய பிஸ்கோத்தா” ன்னு கேட்கறாங்க-ன்னுட்டு!

  உங்க பதிவ பாத்ததுக்கு அப்புறம் தான் புரியுது…மாணவ மணிகள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, டைகர் பிஸ்கோத்து சாப்பிட்டுப் பரீட்சை எழுதி பெரிய லெவலுக்கு வராங்க!

  அதனால தான், அப்படி எல்லாம் கஷ்டப்படாதவங்கள பாத்து,”நீ என்ன பெரிய பிஸ்கோத்தா” ன்னு கேக்கறாங்க போல 🙂 //

  ஆஹா!!! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா???

 26. //SP.VR.SUBBIAH

  SP.VR.SUBBIAH said…
  // Mr.Vettipayal Said நேற்று அதை பார்த்தவுடன் அந்த பரிட்சை பயம் மனதில் வந்தது. (பரிட்சையே இல்லாம காலேஜ் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் :-)) //

  இரண்டு பக்கமும் கோல் போஸ்ட்டே இல்லாமல் கால் பந்து ஆடுவதைப் போல இருக்கும்
  சஸ்பென்ஸே இல்லாமல் சினிமா பார்ப்பதைப்போல இருக்கும்
  – வாத்தியார் //
  சார், நீங்க சொல்றதும் சரிதான்…
  பரிட்சை இல்லனா காலேஜே தேவையில்லை 🙂

 27. //செல்வன் said…
  நான் ஹாஸ்டலில் ஒரு நாள் கூட இருந்ததில்லை.ஆனா ஹாஸ்டல் பசங்க சொல்லும் ராகிங் கதை எல்லாம் கேட்டா மனசு வெறுத்திடும்.அதனாலேயே ஹாஸ்டல் என்றால் ஒரு சின்ன பயம் இப்போதும் மனதில் இருக்கிறது //

  ராகிங் எல்லாம் சும்மா 2 – 3 மாசத்துக்குதாங்க இருக்கும்… அப்பறமா ஹாஸ்டல் சொர்கம்தான் 🙂

 28. //சோத்துக்கு வழியில்லாம 5-10 கிலோஎல்லாம் சர்வசாதரணமா ஆறு மாசத்துல தொலைத்த நண்பர்கள் இருந்தார்கள்.. இப்ப ஜெர்மனி, யூ.கே ன்னு இருக்கானுங்க நம்ம பசங்க..
  //
  அப்ப நானும் இஸ்ரேலுக்கு ஆறு மாசம் வரேன் ;)//

  தல எங்கயே இடிக்குதே…
  ஏன் தல பஸ்ல என்னமாதிரி ஒல்லிபிச்சான்க உக்காந்திருக்கிற சீட்டா தேடி பாத்து உக்கார்ர சைஸா?…

  மேக்ரேமண்டையன்

 29. ஆஹா வெட்டியின் சக்தியின் ரகசியம் டைகர் பிஸ்கெட்.

  பரோட்டா சாப்புட்டுட்டு டைகர் பிஸ்கெட்டாவது வாங்கி வச்சாங்களே…அந்த நல்ல மனசுக்கு நீங்க தான் அவுங்களைப் பாராட்டனும்
  🙂

 30. //மேக்ரேமண்டையன் said…
  //சோத்துக்கு வழியில்லாம 5-10 கிலோஎல்லாம் சர்வசாதரணமா ஆறு மாசத்துல தொலைத்த நண்பர்கள் இருந்தார்கள்.. இப்ப ஜெர்மனி, யூ.கே ன்னு இருக்கானுங்க நம்ம பசங்க..
  //
  அப்ப நானும் இஸ்ரேலுக்கு ஆறு மாசம் வரேன் ;)//

  தல எங்கயே இடிக்குதே…
  ஏன் தல பஸ்ல என்னமாதிரி ஒல்லிபிச்சான்க உக்காந்திருக்கிற சீட்டா தேடி பாத்து உக்கார்ர சைஸா?…
  //
  அவ்வளவு மோசமான சைஸ் எல்லாம் இல்லப்பா நார்மல் வெயிட் தான்… கொஞ்ச நாளாவது ரொம்ப ஒல்லியா இருக்கனும்னு ஆசை…

  நல்லா பிடிக்கறாங்கப்பா!!!

 31. // கைப்புள்ள said…
  ஆஹா வெட்டியின் சக்தியின் ரகசியம் டைகர் பிஸ்கெட்.
  //
  எனக்கு மட்டும் இல்ல தல… நிறைய பேருக்கு அது தான்…

  //
  பரோட்டா சாப்புட்டுட்டு டைகர் பிஸ்கெட்டாவது வாங்கி வச்சாங்களே…அந்த நல்ல மனசுக்கு நீங்க தான் அவுங்களைப் பாராட்டனும்
  🙂
  //
  ஆமாம்… அதுவாவது எடுத்து வெச்சானே!!! இல்லனா 10 மணிக்கு கெளம்பி வெளைய போயிருக்கனும்… எப்படியும் பேக்கரில ஏதாவது வாங்கி சாப்பிடலாம்…

 32. பாலாஜி,

  டைகர் பிஸ்கெட் என்னோட வாழ்க்கையிலும் பின்னிப்பிணைச்சிருக்குப்பா. என்னானா இங்கெனே பெங்களூருலே 9.30 மணிக்கே சோத்துக்கடையே மூடிருவானுங்க…. உனக்கும் தெரியுமே நீயுந்தான் பெங்களூர்லே குப்பை கொட்டிருக்கீயே…

  ok coming to the point( ஹீ ஹீ இங்கிலிபிசு)

  இந்த வெள்ளகார தொரக’கிட்டே பேசிட்டு வீட்டுக்கு போறதுக்கு சமயத்திலே மணி நைட் பத்து பதினொன்னு ஆகிருச்சுன்னா ஒன்னும் கிடைக்காது, நம்ம உறுத்து நண்பர்க்கிட்டே வாங்கி வைங்கடான்னு சொன்னா அதைச் செய்யமாட்டானுவே, (ஆனா வெள்ளிக்கிழமைன்னா செய்யிவானுங்க.)

  என்னா பண்ணுறது அந்த புலிப் பொறையைதான் தின்னு பசியாத்திக்கிறது அந்த காலகட்டத்திலே… 😦

 33. எனக்கு ராத்திரி முழுக்க உக்காந்து படிக்கிறது பிடிக்கவே பிடிக்காது. ரொம்ப முக்கியமான பரிச்சைக்குக் கூட பதினோரு மணிக்கு மேல உக்காந்து படிச்சதில்லை. அஞ்சு மணிக்கு முன்ன எந்திரிச்சதில்ல. அதுனால டைகரு லயன் பிஸ்கோத்தெல்லாம் தெரியாதப்பா!

 34. ராம் said…
  பாலாஜி,

  டைகர் பிஸ்கெட் என்னோட வாழ்க்கையிலும் பின்னிப்பிணைச்சிருக்குப்பா. என்னானா இங்கெனே பெங்களூருலே 9.30 மணிக்கே சோத்துக்கடையே மூடிருவானுங்க…. உனக்கும் தெரியுமே நீயுந்தான் பெங்களூர்லே குப்பை கொட்டிருக்கீயே…
  //
  பெங்களூர்ல இதுதான் பிரச்சனை…
  அப்பறம் சாம்பார்ல வெல்லம் வேற போடுவானுங்க…

  ரூம்ல எப்பவும் 2 மேகி வாங்கி வெச்சிக்கோங்கப்பா… ஐ மீன் நூடுல்ஸ்.

  //
  ok coming to the point( ஹீ ஹீ இங்கிலிபிசு)
  //
  துர இங்கிலிஸு எல்லாம் பேசுது…

  //இந்த வெள்ளகார தொரக’கிட்டே பேசிட்டு வீட்டுக்கு போறதுக்கு சமயத்திலே மணி நைட் பத்து பதினொன்னு ஆகிருச்சுன்னா ஒன்னும் கிடைக்காது, நம்ம உறுத்து நண்பர்க்கிட்டே வாங்கி வைங்கடான்னு சொன்னா அதைச் செய்யமாட்டானுவே, (ஆனா வெள்ளிக்கிழமைன்னா செய்யிவானுங்க.)
  //
  வெள்ளிக்கிழமை 10 மணிக்கு போனா மிச்சம் இருக்குமா?

  //என்னா பண்ணுறது அந்த புலிப் பொறையைதான் தின்னு பசியாத்திக்கிறது அந்த காலகட்டத்திலே… 😦
  //
  புலி புல்லத்தான் திங்க கூடாது… பொறைய சாப்பிடலாம் 😉

 35. வந்துட்டொம்ல! வந்துட்டோம்ல!

  ஒரு புண்மொழி சொல்லவா?

  டைகர் பிஸ்கட் மனிதன் சாப்பிடலாம், ஆனால நாய் பிஸ்கட்ட நாய்தான் சாப்பிடணும்.

  பிஸ்கோத்து பதிவுனு சொல்றாங்களே அதானா இது…

 36. Athu innaba tiget biscuit ?. Naanga padikara kalathulla, rathri 1 maniku mela namma rajendra theatre (athampa SSR Pankajam, Saligramam) ethirla tea kadai masala teayum oru King size dhummum than sorkam. athukku apram suru surupa padichi, pass panni, vela thedi enna ennamo agi pochi – athampa kalyanam, pulla kutti etc.

 37. //
  மதுரைல சாப்பாடு சூப்பரா இருக்கும்… எந்த நேரம் போனாலும் வயித்துக்கு பிரச்சனையில்லனு கேள்விப்பட்டேன்.. அங்க வந்து உடம்பு குறைஞ்சிட்டாங்களா???
  //

  …ஹாஸ்டல்..தல…

  மதுரை காமராஜ் யுனீசிடி (தமிழில் university) ஹாஸ்டலப்பத்திக் கேட்டுப்பாருங்க…

  நாட்ஸீ கேம்பவிட கேவலமான சாப்பாடு…அதையே Dam கட்டி அடிக்கிற கேசுங்க இருக்கானுங்க..

  ஆனா சைன்ஸ் பசங்க எல்லாம் வெயிட்டத் தொலச்சிருவானுங்க…ஆர்ட்ஸ் பசங்க பூரா வெயிட்டு போட்டுருவானுங்க…ஆனா பில்லு மட்டும் காமன் பில்லு..அதனாலயே ஹாஸ்டல வுட்டு காலி பண்ணினோம்…

 38. //G.Ragavan said…
  எனக்கு ராத்திரி முழுக்க உக்காந்து படிக்கிறது பிடிக்கவே பிடிக்காது. ரொம்ப முக்கியமான பரிச்சைக்குக் கூட பதினோரு மணிக்கு மேல உக்காந்து படிச்சதில்லை. அஞ்சு மணிக்கு முன்ன எந்திரிச்சதில்ல. அதுனால டைகரு லயன் பிஸ்கோத்தெல்லாம் தெரியாதப்பா!
  //
  நாங்க எல்லாம் ராக்கோழிங்க…
  2 மணிக்கு முன்னாடி நல்ல நாள்லே தூங்க மாட்டோம்…

  பரிட்சைனா 3 மணிக்கு படுத்துட்டு 7 மணிக்கு எழுந்திருப்பேன்… சத்தியமா ஃபுல் நைட்டெல்லாம் போட்டதில்லை 😉

 39. //தம்பி said…
  வந்துட்டொம்ல! வந்துட்டோம்ல!
  //
  உன்னத்தாம்பா தேடிக்கிட்டு இருந்தேன்… நேத்து போட்ட பதிவுக்கு இன்னைக்கு வர 🙂

  //
  ஒரு புண்மொழி சொல்லவா?

  டைகர் பிஸ்கட் மனிதன் சாப்பிடலாம், ஆனால நாய் பிஸ்கட்ட நாய்தான் சாப்பிடணும்.

  பிஸ்கோத்து பதிவுனு சொல்றாங்களே அதானா இது…
  //
  தம்பி, எப்படி இதெல்லாம்…
  கலக்கற போ!!!

 40. யோவ்! நம்ம செல்லத்துக்கு ரொம்ப பிடிக்கும். நம்ம செல்லத்த பத்தி நாளைக்கு எழுதுறேன். வரட்டா

 41. //உன்னத்தாம்பா தேடிக்கிட்டு இருந்தேன்… நேத்து போட்ட பதிவுக்கு இன்னைக்கு வர :-)//

  அதான் சொன்னோம்ல ரெண்டு நாள் லீவுன்னு..

  தெரிஞ்சிகிட்டே கேட்டா எப்படி?

  கடைக்கு போய் மளிக சாமான் வாங்கினதுகெல்லாம் பதிவா? கூடவே கொஞ்சம் கொசுவத்திய சுத்த விட்டு ஒரு பில்டப் வேற..

  நமக்கு இந்த மாதிரி ஐடியா தோண மாட்டேங்குதே!!

  கப்பி கப்பி மேரே தில் மே கயாலு ஆத்தா ஹே…

  மொத முறையா இந்திப்படத்துக்கு போறோம்ல அதான் பாட்டு ரிகர்ஸலு.

  வர்ட்டா..

 42. //Anonymous said…
  Athu innaba tiget biscuit ?. Naanga padikara kalathulla, rathri 1 maniku mela namma rajendra theatre (athampa SSR Pankajam, Saligramam) ethirla tea kadai masala teayum oru King size dhummum than sorkam. athukku apram suru surupa padichi, pass panni, vela thedi enna ennamo agi pochi – athampa kalyanam, pulla kutti etc.
  //
  அது ஒன்னும் பெரிய விஷயமில்லைங்கன்னா… மூனு ரூபா பிஸ்கோத்து…

  ஹாஸ்டல்ல தம்மு எல்லாம் அடிக்க முடியாதுங்கண்ணா…

 43. //Vajra said…
  //
  மதுரைல சாப்பாடு சூப்பரா இருக்கும்… எந்த நேரம் போனாலும் வயித்துக்கு பிரச்சனையில்லனு கேள்விப்பட்டேன்.. அங்க வந்து உடம்பு குறைஞ்சிட்டாங்களா???
  //

  …ஹாஸ்டல்..தல…

  மதுரை காமராஜ் யுனீசிடி (தமிழில் university) ஹாஸ்டலப்பத்திக் கேட்டுப்பாருங்க…
  //
  எல்லா ஹாஸ்டலும் அப்படித்தான் இருக்கும்… ஆனா அவுங்களை வெளி மாநிலத்துக்கு அனுப்புங்க… அப்ப தெரியும் ஹாஸ்டல் எவ்வளவு பரவாயில்லைனு…

  //
  நாட்ஸீ கேம்பவிட கேவலமான சாப்பாடு…அதையே Dam கட்டி அடிக்கிற கேசுங்க இருக்கானுங்க..

  ஆனா சைன்ஸ் பசங்க எல்லாம் வெயிட்டத் தொலச்சிருவானுங்க…ஆர்ட்ஸ் பசங்க பூரா வெயிட்டு போட்டுருவானுங்க…ஆனா பில்லு மட்டும் காமன் பில்லு..அதனாலயே ஹாஸ்டல வுட்டு காலி பண்ணினோம்…
  //
  அதெல்லாம் போக போக பழகிடுங்க!!!

  நான் 7வதுல ஹாஸ்டல்ல சேர்ந்த புதுசுல 1 இட்லி கூட சாப்பிட முடியாம இருந்தேன்… ஆனா 10வதுல அசால்டா 10 இட்லிக்கு மேல சாப்பிடுவேன் 😉

  (இப்ப விட்டிங்கனா 1 இட்லி கூட சாப்பிட முடியாது ;))

 44. //நாகை சிவா said…
  யோவ்! நம்ம செல்லத்துக்கு ரொம்ப பிடிக்கும். நம்ம செல்லத்த பத்தி நாளைக்கு எழுதுறேன். வரட்டா
  //
  ஆஹா!!! சீக்கிரம் போடுங்க… படிக்க ரெடியா இருக்கொம் 😉

 45. // தம்பி said…
  //உன்னத்தாம்பா தேடிக்கிட்டு இருந்தேன்… நேத்து போட்ட பதிவுக்கு இன்னைக்கு வர :-)//

  அதான் சொன்னோம்ல ரெண்டு நாள் லீவுன்னு..

  தெரிஞ்சிகிட்டே கேட்டா எப்படி?
  //
  லீவா இருந்தாலும் தமிழ் தொண்டாற்றனும் 😉 புர்தா???

  //கடைக்கு போய் மளிக சாமான் வாங்கினதுகெல்லாம் பதிவா? கூடவே கொஞ்சம் கொசுவத்திய சுத்த விட்டு ஒரு பில்டப் வேற..
  //
  இப்படியெல்லாம் ஏதாவது போட்டத்தன் உண்டு…

  //நமக்கு இந்த மாதிரி ஐடியா தோண மாட்டேங்குதே!!
  //
  தண்டவளத்துல ஒன்னுக்கு போனா தப்பா?னு கேட்டது நீதான??? 😉
  நீயே இப்படி சொன்னா நாங்க எல்லாம் என்னா பண்றது 😉

  //கப்பி கப்பி மேரே தில் மே கயாலு ஆத்தா ஹே…
  //
  ஏம்பா… நம்ம கப்பி தான் உண்டு தன் வேலை உண்டுனு உருகுவேல இருக்காரு… அவரை போயி கலாய்க்கிறியே 😉

  //
  மொத முறையா இந்திப்படத்துக்கு போறோம்ல அதான் பாட்டு ரிகர்ஸலு.

  வர்ட்டா..
  //
  சரி போயி பாத்துட்டு வந்து அதப்பத்தி ஒரு பதிவு போடு 😉

 46. ahaa!! nanga classla epodum tiger biscuit than, bench bencha suthitu irukkum niraya packet:))

 47. //சரி போயி பாத்துட்டு வந்து அதப்பத்தி ஒரு பதிவு போடு ;)//

  போட்டாச்சி போட்டாச்சி

 48. //சரி போயி பாத்துட்டு வந்து அதப்பத்தி ஒரு பதிவு போடு ;)//

  போட்டாச்சி போட்டாச்சி

 49. //சரி போயி பாத்துட்டு வந்து அதப்பத்தி ஒரு பதிவு போடு ;)//

  போட்டாச்சி போட்டாச்சி

 50. அனானியாக வந்து முதல் பின்னூட்டமிட்ட விநய் அவர்களுக்கு நன்றி!!

  என்ன முழிக்கறிங்க வெட்டி?

  50 போட்டாச்சி இல்ல அதான் இந்த நன்றி!!

  நோ பீலிங்ஸ் வெட்டி, ஆட்டைல இதெல்லாம் ஜகஜம்!!:)

 51. தல இதுலாம் ரொம்ப கம்மி. நான் எக்ஸாமுக்கு முன்னாடி புல் நைட்டு போடுவேன். 2, 3 நாள்லாம் இருந்துருக்கிறேன். இதுல கொடுமை என்னனா நான் பிரண்ட் ரூமுக்கு போவேன். நான் புல் நைட் போடுரதாலா நான்தான் அலாரம் டைம்பீஸ்.கிட்டதட்ட 8, 10 இருப்போம்.12 மணிக்குமேல ஒவ்வொருத்தனா சாமி ஆட ஆரம்பிச்சு என்கிட்ட டைம் சொல்லி ஒவ்வொருத்தனா தூங்க ஆரம்பிச்சுருவாங்க. அவங்க சொன்ன டையம்முக்கு எழுப்பினா இன்னும் கொஞ்ச நேரமுனு சொல்லி திரும்பவவும் தூங்கிருவாங்க. அப்படி இப்படி டீ,பிஸ்கட்டு சாப்பிட்டு எழுந்திருக்குறதுக்குள்ல விடிஞ்சிரும்.அப்புறம் காலைல எங்கூட சண்டை நடக்கும் ஏன் எழுப்பலைனு. அதுலாம் சரியான காமடியா இருக்கும்.

  தல உங்கலோட blogல அதிகமா text் smilies use பண்ணுறிங்க. அந்த textஐ image smiliesஆ மாத்த script இருக்குல யூஸ் பண்ண வேண்டியதுதான..

  மேக்ரோமண்டையன்

 52. //CAPitalZ said…
  ஆகா, வலியை உணருகிறேன்.
  //
  சேம் பிளட்???

  //பொற்கொடி said…
  ahaa!! nanga classla epodum tiger biscuit than, bench bencha suthitu irukkum niraya packet:))
  //
  க்ளாஸ்லேவா??? நாங்க காலேஜ் போனா டேஸ்காலர் பசங்க டிபன் பாக்ஸ்தான் 😉

 53. // தம்பி said…
  //சரி போயி பாத்துட்டு வந்து அதப்பத்தி ஒரு பதிவு போடு ;)//

  போட்டாச்சி போட்டாச்சி
  //
  அட்டெண்டன்ஸ் போட்டாச்சி 😉

 54. //மேக்ரோமண்டையன் said…
  தல இதுலாம் ரொம்ப கம்மி. நான் எக்ஸாமுக்கு முன்னாடி புல் நைட்டு போடுவேன். 2, 3 நாள்லாம் இருந்துருக்கிறேன். இதுல கொடுமை என்னனா நான் பிரண்ட் ரூமுக்கு போவேன். நான் புல் நைட் போடுரதாலா நான்தான் அலாரம் டைம்பீஸ்.கிட்டதட்ட 8, 10 இருப்போம்.12 மணிக்குமேல ஒவ்வொருத்தனா சாமி ஆட ஆரம்பிச்சு என்கிட்ட டைம் சொல்லி ஒவ்வொருத்தனா தூங்க ஆரம்பிச்சுருவாங்க. அவங்க சொன்ன டையம்முக்கு எழுப்பினா இன்னும் கொஞ்ச நேரமுனு சொல்லி திரும்பவவும் தூங்கிருவாங்க. அப்படி இப்படி டீ,பிஸ்கட்டு சாப்பிட்டு எழுந்திருக்குறதுக்குள்ல விடிஞ்சிரும்.அப்புறம் காலைல எங்கூட சண்டை நடக்கும் ஏன் எழுப்பலைனு. அதுலாம் சரியான காமடியா இருக்கும்.
  //
  தல, நீங்க பெரிய படிப்ஸ் போல இருக்கு. நான் ஃபுல் நைட் போட்டதே இல்ல… எனக்கு கொஞ்ச நேரமாவது தூங்கியாகனும்… இல்லனா பரிட்சை எழுதவே முடியாது 😦

  //
  தல உங்கலோட blogல அதிகமா text் smilies use பண்ணுறிங்க. அந்த textஐ image smiliesஆ மாத்த script இருக்குல யூஸ் பண்ண வேண்டியதுதான..
  //
  என்னங்க Script அது??? கொஞ்சம் கொடுங்களேன்

  If you dont mind, can u give me ur mail id. I will not share it with anyone.

 55. //தம்பி said…
  அனானியாக வந்து முதல் பின்னூட்டமிட்ட விநய் அவர்களுக்கு நன்றி!!

  என்ன முழிக்கறிங்க வெட்டி?

  50 போட்டாச்சி இல்ல அதான் இந்த நன்றி!!

  நோ பீலிங்ஸ் வெட்டி, ஆட்டைல இதெல்லாம் ஜகஜம்!!:)

  //
  தம்பி,
  நோ பீனிங்ஸ்னு வேற சொல்லிட்ட… இருந்தாலும் முடியல…

  மிக்க நன்றி விநய் & தம்பி

 56. ஒரு ரூபாய்க்கு குளுக்கோஸ் ரொட்டி, பார்லி ஜி எல்லாம் இருந்தாலும் டைகர் பிஸ்கட் மாதிரி ஹிட் ஆனது வேறு எதுவும் இல்லை..நானும் டைகர் பிஸ்கட்டையே உணவா திண்ணு வளர்ந்து படிச்சவன்.வித்தியாசமான பதிவு

 57. //ரவிசங்கர் said…

  ஒரு ரூபாய்க்கு குளுக்கோஸ் ரொட்டி, பார்லி ஜி எல்லாம் இருந்தாலும் டைகர் பிஸ்கட் மாதிரி ஹிட் ஆனது வேறு எதுவும் இல்லை..நானும் டைகர் பிஸ்கட்டையே உணவா திண்ணு வளர்ந்து படிச்சவன்.வித்தியாசமான பதிவு//
  நீங்களும் நம்ம மாதிரிதானா???

  இந்த பதிவ பிற்கால சந்ததியனர் பாத்தாங்கனா நம்ம நாட்ல எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிச்சிருக்காங்கனு தெரிஞ்சிக்குவாங்கனுதான் ;)–>

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: