ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களா???

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லுவார்கள். தெய்வத்திற்கு மேலாக குருவை சொல்கிறோம். ஆனால் ஒரு சில குருக்கள் அளிக்கும் தண்டனை மாணவரின் வாழ்க்கையையே மாற்றுகிறது.

நான் சொல்லப்போவது என் ஜினியர் பலரது கவலைக்கிடமான நிலைமையைப் பற்றி.

இஞ்சினியரிங் கல்லூரிகளில் 100க்கு 20 மதிப்பெண்கள் இண்டர்னல் மார்க்காக அளிக்கப்படுகிறது. இதை பல ஆசிரியர்கள் தவறாக கையாள்கிறார்கள்.

மாணவர்கள் மேல் இருக்கும் சின்ன சின்ன வருத்தங்களால் 20க்கு 1லிருந்து 5 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்கிறார்கள். பிறகு அந்த ஆசிரியர்களே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது. இவர்கள் இவ்வாறு குறைந்த மதிப்பெண்கள் போடுவதால் 80க்கு 49 மதிப்பெண் பெற்றால்தான் பாஸ் என்று நிர்ணயமாகிறது.

80க்கு 50 கூட வாங்க முடியல இவனெல்லாம் எதுக்கு இஞ்சினியரிங் படிக்கனும்னு தயவு செய்து கேக்காதீங்க! இஞ்சினியரிங் பேப்பரெல்லாம் எப்படி திருத்தறாங்கனு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியல… எனக்கு தெரிந்த ஒருவன் 80% வாங்கினான். ஆனால் அவன் பேப்பர பாத்தீங்கனா ஒரு மண்ணும் இருக்காது. அதனால மார்க் அதிகமா எடுத்தா புத்திசாலினு நினைக்காதிங்க.

பெரும்பாலும் திருத்தற ஆசிரியர்கள் 35 மார்க் போட்டா பையன் பாஸாகிடுவான்னு 35 போட்ருவாங்க. இவனுக்கு இண்டர்னல்ல 1 மார்க் போட்டாங்கனு அவருக்கு தெரியாது.

இன்னும் லேப்ல குத்தறதும் இருக்கு. பிடிச்ச பசங்கனா அதிக மார்க், பிடிக்காத பசங்கனா மார்க் குறைக்கறது. இதுவாவது பரவாயில்ல. மார்க்தான் குறையும். ஃபெயில் ஆன அடுத்த முறை எப்படியாவது பாஸாகிடலாம். ஆனால் இண்டர்னல் மார்க் ஆசிரியர்களே நினைத்தாலும் அடுத்த செமஸ்டரில் மாத்த முடியாது.

இந்த மாதிரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் எத்தனை தடவை எழுதியும் க்ளியர் பண்ண முடியாம போயிடுது. சுத்தி இருக்கிற சொந்தக்காரவங்க பேசற அவமான சொற்கள் அவுங்களை தப்பான முடிவுக்கும் இட்டு செல்கிறது.

நான் மாணவர்கள் மேல தப்பே இல்லனு சொல்லல… அந்த வயசுல அவங்க செய்யற சின்ன தப்புக்கு அவுங்க வாழ்க்கையையே வீணாக்காதீங்க… ப்ளீஸ்!!!
ஆசியர்களே தயவு செய்து இண்டர்னல் மார்க்குகளை வைத்து மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்!!!

68 பதில்கள்

 1. நான் இதை வழிமொழிகிறேன்!

 2. இன்னும் இந்தியாவில இன்டெர்னல் மதிப்பெண் இருக்கா என்ன?

  கிரேட் சிஸ்டம் இருக்குன்னு சொன்னாங்களே…

 3. ஆவி,
  மிக்க நன்றி!!! ஆமாம் உங்க ஊர்ல இதெல்லாம் இருக்கா?

  எலிவால்ராஜா,
  இருக்குங்க!!! அதனால பாதிக்கப்பட்ட ஒரு பையன்கிட்ட பேசனதுக்கு அப்பறம் வந்த கோபத்துல போட்டதுதான் இந்த பதிவு.

  2 வருஷத்துக்கு முந்தி இன்ஞினியரிங் முடிச்சியிருக்கான். 1 சப்ஜக்ட்ல 1 மார்க் இண்டர்னல் போட்ருக்காங்க… அவனால இன்னும் க்ளியர் பண்ண முடியல. அழுதுகிட்டே சொல்றான். என்ன பண்றது 😦

 4. உண்மை தான். என் குருவின் பையனுக்கே இந்த கதியானது. 2 வருடம் கழித்து தான் சரி செய்ய முடிந்தது. பாவம் அவன் சராசரி மாணவன். என்னிடம் வந்து பாடம் பயின்றால் 60/80 வாங்கலாம் என்று அவன் அப்பா வற்புறுத்தி, போயும் போயும் என்னிடம் அனுப்பி வைத்தார். எனக்குத் தெரியாதா என் லட்சணம்? 🙂 கடைசியில் 51 வாங்கிப் பாஸாகி, என் தலை உருளாமல் என்னைக் காப்பாற்றினான். :-)))

  //சில குருக்கள் அளிக்கும் தண்டனை மாணவரின் வாழ்க்கையையே மாற்றுகிறது//
  சில குருக்களுக்கு, தட்சிணை கொடுத்தால் தண்டனை இல்லை என்பது சில தனியார் கல்லூரிகளில் வாடிக்கையான ஒன்றாகவும் ஆகி விட்டது.

  Internals-ஐ எப்படி கணக்கிடுறார்கள் பாலாஜி? அண்ணா பல்கலையில் அவ்வளவாகப் பிரச்னை இல்லை. ஏன் என்றால் mid term test மதிப்பெண்களைக் கூட்டி, Internals மார்க் என்று போட்டு விடுவார்கள்!

 5. வெட்டி நல்ல பதிவு:)

 6. //
  ெரும்பாலும் திருத்தற ஆசிரியர்கள் 35 மார்க் போட்டா பையன் பாஸாகிடுவான்னு 35 போட்ருவாங்க.
  //

  அதுக்கு பேரு ரப்பர் ஸ்டாம்ப் மார்க். பேப்பர் எடுத்தவுடன் குத்தப்படும் .

  //
  இண்டர்னல் மார்க்குகளை வைத்து மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்!!!
  //

  அதே இண்டர்னல் மார்க்கினால் மிகவும் பாதிக்கப் பட்ட வாத்தி மட்டுமே அதைவைத்து வாழ்க்கையில் விளையாடுவார்கள் என்பது என் கருத்து.

 7. சிலர் சிறுபுத்தி படைத்தோராக இருப்பது உண்மையே!! அவர்களாகத் தான் திருந்த வேண்டும்.
  யோகன் பாரிஸ்

 8. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…
  உண்மை தான். என் குருவின் பையனுக்கே இந்த கதியானது. 2 வருடம் கழித்து தான் சரி செய்ய முடிந்தது. பாவம் அவன் சராசரி மாணவன். என்னிடம் வந்து பாடம் பயின்றால் 60/80 வாங்கலாம் என்று அவன் அப்பா வற்புறுத்தி, போயும் போயும் என்னிடம் அனுப்பி வைத்தார். எனக்குத் தெரியாதா என் லட்சணம்? 🙂 கடைசியில் 51 வாங்கிப் பாஸாகி, என் தலை உருளாமல் என்னைக் காப்பாற்றினான். :-)))
  //
  பரவாயில்லை KRS, ஆசிரியர் பையனைக்கே சொல்லி கொடுத்து கலக்கீட்டீங்க!!! எப்படியோ பாஸாகிவிட்டார். அதுவரை சந்தோஷமே!!!

  //
  //சில குருக்கள் அளிக்கும் தண்டனை மாணவரின் வாழ்க்கையையே மாற்றுகிறது//
  சில குருக்களுக்கு, தட்சிணை கொடுத்தால் தண்டனை இல்லை என்பது சில தனியார் கல்லூரிகளில் வாடிக்கையான ஒன்றாகவும் ஆகி விட்டது.
  //
  பெரும்பாலும் தட்சினையைவிட இவர்களை தெய்வமாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
  அவர்களுடைய பவர் காட்டவே செய்கிறார்கள்.

  //Internals-ஐ எப்படி கணக்கிடுறார்கள் பாலாஜி? அண்ணா பல்கலையில் அவ்வளவாகப் பிரச்னை இல்லை. ஏன் என்றால் mid term test மதிப்பெண்களைக் கூட்டி, Internals மார்க் என்று போட்டு விடுவார்கள்!
  //
  அப்படித்தான் சொல்லுவார்கள். ஆனால் அது பசங்களை பொறுத்து மாறும் 😦

 9. // Dev said…
  வெட்டி நல்ல பதிவு:)
  //
  மிக்க நன்றி தேவ்!!!

 10. அதை ஏன் கேக்குற வெட்டி! நம்மல லேப் பக்கமே வர விடாம விரட்டியடிச்சிட்டாங்க!

 11. அதை ஏன் கேக்குற வெட்டி! நம்மல லேப் பக்கமே வர விடாம விரட்டியடிச்சிட்டாங்க!

 12. உண்மைதான் தல.

  என் கூட படிச்ச ஒருத்தன் ஒரு எக்ஸாமுல மொத்தமே எழுதுனது 50 மார்க்குக்கு. ஆனா அவன் எடுத்தது 85 மேல.

  இதவிட கொடுமை இன்னொருத்தனுக்கு. அவன் முதலில் 60 மார்க்குத்தான் எழுத்தினான்.அந்த paper scoring papper.அதனால எழுதினத அடிச்சு 20 மார்க்கு கொண்டுவந்து அடுத்த செமஸ்டர்ரில் பாத்துகிராலமுனு இருந்தான். ஆனா என்ன கொடுமையுனா அவன 45(எங்களுக்கு 45தான் பாஸ் மார்க்) போட்டு பாஸ் பண்ணி விட்டாங்க(அதாவது கிரேஸ் மார்க்ல பாஸ் பண்ணிட்டான்).

  இன்னொன்னு ஒரு பொண்ணு லேப்ல 100க்கு 98 போட்டுடாங்கனு போய் அழுது 100 வாங்கிட்டுவந்துட்டா.
  இந்த மாதிரி நான் படிச்சப நிறைய நடந்து இருக்கிறது.

  மேக்ரோமண்டையன்.

 13. //வஜ்ரா said…
  //
  ெரும்பாலும் திருத்தற ஆசிரியர்கள் 35 மார்க் போட்டா பையன் பாஸாகிடுவான்னு 35 போட்ருவாங்க.
  //

  அதுக்கு பேரு ரப்பர் ஸ்டாம்ப் மார்க். பேப்பர் எடுத்தவுடன் குத்தப்படும் .
  //
  பல பேருக்கு கிடைக்கும் மார்க் அதுதான் சங்கர் 😦

  //
  //
  இண்டர்னல் மார்க்குகளை வைத்து மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்!!!
  //

  அதே இண்டர்னல் மார்க்கினால் மிகவும் பாதிக்கப் பட்ட வாத்தி மட்டுமே அதைவைத்து வாழ்க்கையில் விளையாடுவார்கள் என்பது என் கருத்து.
  //
  சரிதான்… அவர்களுக்கு அது ஒரு ஆயுதம்.

 14. //Johan-Paris said…
  சிலர் சிறுபுத்தி படைத்தோராக இருப்பது உண்மையே!! அவர்களாகத் தான் திருந்த வேண்டும்.
  யோகன் பாரிஸ்
  //
  ஆமாம். யோகன் ஐயா. நீங்கள் சொல்வது சரிதான்.

  ஆனால் ஒரு சிலர் இதை போல் இருப்பதால் பலர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது 😦

 15. //தம்பி said…
  அதை ஏன் கேக்குற வெட்டி! நம்மல லேப் பக்கமே வர விடாம விரட்டியடிச்சிட்டாங்க!
  //
  அப்படி என்னப்பா பண்ண தம்பி???

  இப்ப கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு… அப்பறம் ஒரு சுவாரசியமான கதை சொல்றேன் 😉

 16. //மேக்ரோமண்டையன். said…
  உண்மைதான் தல.

  என் கூட படிச்ச ஒருத்தன் ஒரு எக்ஸாமுல மொத்தமே எழுதுனது 50 மார்க்குக்கு. ஆனா அவன் எடுத்தது 85 மேல.

  //
  மேக்ரோ கரெக்டா சொன்னீங்க!!! இவனுங்க எப்படித்தான் திருத்தறானுங்கனு தெரியல 😦

  //இன்னொன்னு ஒரு பொண்ணு லேப்ல 100க்கு 98 போட்டுடாங்கனு போய் அழுது 100 வாங்கிட்டுவந்துட்டா.
  இந்த மாதிரி நான் படிச்சப நிறைய நடந்து இருக்கிறது.//
  இது வருஷா வருஷம் நடக்கறது… லேப்ல முதல் அவுட்புட் காட்றது நானாத்தான் இருப்பேன்… ஆனா அவுட்புட்டே வாங்காத பொண்ணுங்கதான் அந்த லேப்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவாங்க 😦

  ஃபைனல் இயர்ல பெஸ்ட் பிராஜக்ட் வாங்கனது எங்க ப்ராஜக்ட்… ஆனா அதிக மார்க் வாங்கனது வேற பொண்ணுங்க 😦

 17. In our Shanmugha College Of Engineering, especially in Electrical & Electronics department the marks computation is quite transparent. Actually we were the first batch to have the Internal Assessment Marks.

  10 -> Computed based on Mid-Term Test performance
  5 -> Computed based on attendance
  5 -> Computed based on assignment submission & seminar

  Mid-Term Test performance marks will be calculated like this.

  (Total Marks obtained in the three tests/150)*10

  Attendence will be computed by this.
  For 90%-100% -> 5 Marks
  For 80%-90% -> 4.5 Marks
  ..etc.

  Generally for the last section, even submission of the assignment and mere standing in front of the class without taking any seminar would fetch you 4 marks out of 5.

  Students can easily compute the marks much before they get that in hand because the attendence percentage for each paper will be given to them on the last day of the semester.

 18. //அப்படி என்னப்பா பண்ண தம்பி???//

  பெரிய தப்பெல்லாம் இல்ல வெட்டி ஹாஸ்டலுக்குள்ள விளையாட்டுத்தனமா பட்டாசு வெடிச்சோம் அதுவும் விளையாட்டுத்தனமா வார்டன் ரூம் பக்கமா போய் விழுந்து வெடிச்சிருச்சி. பின்னால அந்த ஆளெ எக்ஸ்டெர்னலா வருவாருன்னு யாருக்கு தெரியும்!??:((

 19. SathyaPriyan,
  It will be good if we follow these kind of systems everywhere.

  Even in our college some staffs use to calculate mark like this, but not all.

  If the system is transparent and everyone follow the same with conscience it will be great!!!

 20. நானும் வழிமொழிகிறேன்….

  சரியா சொன்னீங்க…ஒரு எக்ஸாம்ல ஒருத்தன் நல்லா படிச்சிட்டு எக்ஸாம் போகும் போது இன்னொருத்தன் தூங்கிட்டு இருந்தத பார்த்து வரலையானு கேட்டதுக்கு அவன் சொன்னான்…நான் ஸ்கூட் அடுத்த செம்ல பார்த்துக்கறேன் அப்படினு…ஆனா படிச்சவன் விடாம சரிதான் வாடா வந்து எழுது அப்புறம் பார்கலாம்னு சொன்னான்…சரினு தூங்குனவனும் போனான்..கடைசில தூங்குனவன் பாஸ் படிச்சவன் பெயில்…
  ஹீ ஹீ அந்த தூங்குனவன் நான் தான் 🙂

 21. // தம்பி said…
  //அப்படி என்னப்பா பண்ண தம்பி???//

  பெரிய தப்பெல்லாம் இல்ல வெட்டி ஹாஸ்டலுக்குள்ள விளையாட்டுத்தனமா பட்டாசு வெடிச்சோம் அதுவும் விளையாட்டுத்தனமா வார்டன் ரூம் பக்கமா போய் விழுந்து வெடிச்சிருச்சி. பின்னால அந்த ஆளெ எக்ஸ்டெர்னலா வருவாருன்னு யாருக்கு தெரியும்!??:((
  //

  எல்லா ஹாஸ்டெல்லயும் இதுதான் பிரச்சனை…

  எங்க ஹாஸ்டெல்லயும் விடல… அப்பறம் வார்டன் ரூமை பூட்டி அவர் ரூமுள்ள போட்டாச்சு…

  இதுல செவத்துல பசங்க எழுதன டயலாக்:
  “திபாவளிக்கு பட்டாசு வெடிக்காம பின்ன உன் செத்த நாளைக்கா வெடிப்பானுங்க” அப்பறம் வழக்கம் போல மானே தேனே பொன்மானே!!!

  அதுக்கு அப்பறம் ஒரு விசாரனை கமிஷன் அமைச்சானுங்க… எதுவும் பண்ண முடியல..

  கடைசியா 9 மணி வரைக்கும் வெடிச்சிக்கலாம்னு சொல்லி தீர்ப்பாயிடுச்சு 😉

 22. //
  இதுல செவத்துல பசங்க எழுதன டயலாக்:
  “திபாவளிக்கு பட்டாசு வெடிக்காம பின்ன உன் செத்த நாளைக்கா வெடிப்பானுங்க” அப்பறம் வழக்கம் போல மானே தேனே பொன்மானே!!!
  //

  அடப்பாவிகளா…

  இந்த வழக்கம் போல மானே தேனே பொன்மானே ங்குறதுக்கு இப்புடி ஒரு அர்த்தம் இருக்கா…?

 23. பழசையெல்லாம் ஞாபகப்படுத்தி ஏன்யா வயித்தெறிச்சலைக் கிளப்பறீங்க 😀

  எப்படியெல்லாம் ஆப்படிக்கலாமோ அப்படியெல்லாம் அடிப்பாங்க…ஒன்னா ரெண்டா…எல்லா சோகக் கதையும் சொல்ல ஆரம்பிச்சா ஒரு தொடராக தான் போடனும் 😦

 24. //லேப்ல முதல் அவுட்புட் காட்றது நானாத்தான் இருப்பேன்… ஆனா அவுட்புட்டே வாங்காத பொண்ணுங்கதான் அந்த லேப்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவாங்க //

  இன்னொன்னு..

  3rd yearல graphic Design lab(நான் mech என்பதால் lab test பெயர் சரியா தெரியவில்லை) ஆண்களுக்கு கொடுக்கப்பட்டது Cயில் இரயில் பெட்டி டிசைன், பெண்களுக்கு கொடுக்கப்பட்டது concenteric Circle.
  அதைக்கூட பண்ணமுடியாமல் அழுத பெண்கள் உண்டு.

  மேக்ரோமண்டையன்

 25. //Syam said…
  நானும் வழிமொழிகிறேன்….

  சரியா சொன்னீங்க…ஒரு எக்ஸாம்ல ஒருத்தன் நல்லா படிச்சிட்டு எக்ஸாம் போகும் போது இன்னொருத்தன் தூங்கிட்டு இருந்தத பார்த்து வரலையானு கேட்டதுக்கு அவன் சொன்னான்…நான் ஸ்கூட் அடுத்த செம்ல பார்த்துக்கறேன் அப்படினு…ஆனா படிச்சவன் விடாம சரிதான் வாடா வந்து எழுது அப்புறம் பார்கலாம்னு சொன்னான்…சரினு தூங்குனவனும் போனான்..கடைசில தூங்குனவன் பாஸ் படிச்சவன் பெயில்…
  ஹீ ஹீ அந்த தூங்குனவன் நான் தான் 🙂
  //
  பாரதியார் யுனிவர்ஸிட்டில இந்த மாதிரி அதிசியமெல்லாம் சாதரணம்தான்… எனக்கு சொல்லி கொடுத்து ஃபெயில் ஆனவங்க நிறைய பேர்… ஆனால் நான் அந்த சப்ஜக்ட்ல எல்லாம் 80% எடுத்துருக்கேன் 🙂

  லேப்ல மார்க் குறைக்கறத கூட போனா போகுதுனு விட்டுடலாம்… ஆனா இண்டர்னல் கடைசி வரைக்கும் மாத்த முடியாத ஒன்னு 😦

 26. //லேப்ல முதல் அவுட்புட் காட்றது நானாத்தான் இருப்பேன்… ஆனா அவுட்புட்டே வாங்காத பொண்ணுங்கதான் அந்த லேப்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவாங்க//

  சரியா சொன்னீங்க வெட்டி!

  அவுட்புட் வரலைன்னு கடைசி வரைக்கும் ஒரு பையன் உக்காந்து இருந்தான்னா அவன பெயிலாக்கிடுவானுங்க, இதே ஒரு பொண்ணு அவுட்புட் வரலைன்னு அழுதானு வச்சிக்க, அழுவாத கண்ணுன்னு கண்ண தொடச்சி உடாத கொறையா ஆதரவு சொல்லி 90 மார்க் போட்டவனுங்கள நான் பாத்திருக்கேன்.

 27. Hi dear Vetti payal,
  You made good point. but dont blme Lecturers for this, only few persons .1 % are doing like that. others never reduce marks and they dont play with students life, unles that student must be punished for some reasons. they are also humen and they were also students onceupon a time.
  for your kind information onceupon a time i was lectrer i never put internal mark below 18(out of 20) to any of my students.

 28. வெட்டி, பொதுவாகவே நான் சராசரி மாணவந்தான். எங்களுக்கு இண்டர்னெல் மதிப்பெண் லேபுக்கு மட்டும் இருந்தது. மத்ததுக்கெல்லாம் நாமதான் விழுந்து விழுந்து எழுதி வாங்கனும். இண்டர்னல் இருந்திருந்தா இன்னும் நெறைய வாங்கீருப்பேன்னு நெனைக்கிறேன். ஓரளவுக்கு ஆசிரியர்களோட நல்ல பழக்கம் இருந்தது்.

  ஒரு முறை எலக்ட்ரிகல் லேப் எக்சாம். மதிய பாட்ச். சாப்பிட்டுப் போனா வரிசைல நாந்தான் மூனாவது ஆளு. எனக்கு முன்னாடி போனவன் யூனிபார்மை இன் பண்ணாமல் போனான். ஒரு மாதிரி ஏனோ தானோன்னு வெச்சுக்கோங்களேன். பின்னாடியே நான் இன் பண்ணிக்கிட்டு நீட்டா போனேன். அவனப் பாத்ததும் எக்ஸ்டெர்னல் அவன ஒழுங்கா இன் பண்ணிக்கிட்டு வரச் சொன்னாரு. அதுவே அவருக்குப் பிடிக்கலை.

  அவனுக்கு ஏதோ கஷ்டமான எக்ஸ்பெரிமெண்ட். அதப் பண்ணவே ரொம்ப நேரமாகும். பொதுவா எக்சாம்ல வெக்க மாட்டாங்க. காலைல பேச்சுக்கும் வைக்கல. குடுத்துப் பாப்பமேன்னு ஒன்னு வெச்சிருக்காங்க. அவன் அத எடுத்துப் பாத்துட்டு மாத்தனும்னு அடம் பிடிச்சு மாத்தீட்டான். பின்னாடியே நான் போய் எடுத்ததும் அதே பேப்பரத்தான். என்னோட நேரம். எக்ஸ்டெர்னர் எங்கிட்ட எக்ஸ்பிரிமெண்ட் மாத்தனுமான்னு கேட்டாரு. நான் தேவையில்லன்னு சொல்லீட்டு அதுக்கான டேபிளுக்குப் போயிட்டேன். ஃபார்முலா நெனவுக்கு வரல. எதையெதையோ எழுதி…என்னென்னவோ தப்புத்தப்பா செஞ்சேன். படிச்சதெல்லாம் நல்ல எக்ஸ்பெரிமெண்டுகள். அதெல்லாம் நண்பர்களுக்குப் போயிருச்சு. நமக்கு இப்பிடி வந்து மாட்டுச்சு.

  எப்படியோ எதையோ செஞ்சு என்னவோ ரீடிங் போட்டுக் கொண்டு போய்க் குடுத்தேன். வைவால மொதக் கேள்வி கேட்டாரு. சரியாச் சொன்னேன். ரெண்டாவது மூனாவது கேள்விக்கு தெரியாதுன்னு ஒடனே சொல்லீட்டேன். அவ்வளவுதான். வெளிய வந்தாச்சு.

  அப்புறமா எல்லாம் முடிஞ்சப்புறம் ஒரு நல்ல லெக்சரர் எங்க கண்ணுல பட்டாரு…அவரு எங்கிட்ட கேட்டது “எக்ஸ்டெர்னல என்ன செஞ்ச?”

  ஏன் சார்னு கேட்டேன். “நீ எழுதியிருந்த ஃபார்முல தப்பு. ரீடிங் தப்பு. அதச் சொல்லாப் போனேன். அவரு அதக் கேக்காமலே மார்க்கு போட்டுட்டாரு”ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாரு. அந்த எக்சாம்ல எனக்கு நூத்துக்கு தொன்னூத்தெட்டு.

  அந்த எக்ஸ்பெரிமெண்ட்டை யாரும் அந்த நேரத்துக்குள்ள செஞ்சு முடிக்க முடியாது. ரீடிங்கும் ஒழுங்கா வராது. (என்னன்னு மறந்து போச்சு). அதுனால யாரும் வெக்க மாட்டாங்களாம். அத முயற்சி செஞ்சி பாக்கனும்னு நெனச்சு செஞ்சதுக்கு அவரு மதிச்சு மார்க்கு போட்டாராம். தெரியாத கேள்விக்கு எதையாவது ஒளராம பளிச்சுன்னு தெரியாதுன்னு சொன்னதும் அவருக்குப் பிடிச்சிருந்ததாம்.

 29. இன்னொரு விஷயம். சில மாணவர்கள் சில ஆசிரியர்களை படாத பாடு படுத்தியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் காத்திருந்து பழி வாங்குவதும் உண்டு. சில ஆசிரியர்களும் மோசமானவர்களாக இருப்பதும் உண்டு. நல்லது கெட்டது எங்கும் உண்டு.

 30. //அடப்பாவிகளா…

  இந்த வழக்கம் போல மானே தேனே பொன்மானே ங்குறதுக்கு இப்புடி ஒரு அர்த்தம் இருக்கா…? //
  சங்கர் நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்ககளே 😉

 31. // கப்பி பய said…
  பழசையெல்லாம் ஞாபகப்படுத்தி ஏன்யா வயித்தெறிச்சலைக் கிளப்பறீங்க 😀

  எப்படியெல்லாம் ஆப்படிக்கலாமோ அப்படியெல்லாம் அடிப்பாங்க…ஒன்னா ரெண்டா…எல்லா சோகக் கதையும் சொல்ல ஆரம்பிச்சா ஒரு தொடராக தான் போடனும் 😦
  //
  கப்பி,
  நீ போடு படிக்க நாங்க ரெடியா இருக்கோம் 😉

 32. //மேக்ரோமண்டையன் said…
  //லேப்ல முதல் அவுட்புட் காட்றது நானாத்தான் இருப்பேன்… ஆனா அவுட்புட்டே வாங்காத பொண்ணுங்கதான் அந்த லேப்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவாங்க //

  இன்னொன்னு..

  3rd yearல graphic Design lab(நான் mech என்பதால் lab test பெயர் சரியா தெரியவில்லை) ஆண்களுக்கு கொடுக்கப்பட்டது Cயில் இரயில் பெட்டி டிசைன், பெண்களுக்கு கொடுக்கப்பட்டது concenteric Circle.
  அதைக்கூட பண்ணமுடியாமல் அழுத பெண்கள் உண்டு.

  மேக்ரோமண்டையன்
  //
  இது வருஷா வருஷம் நடக்கற கூத்து!!!
  Linked List ப்ரோக்ராம் எல்லாம் வெக்க கூடாதுனு ஒரு போராட்டம் வேற நடக்கும்…

  சரி அவுங்கள குறை சொல்ற நேரத்துல நம்ம பசங்க மட்டும் லேசு பட்டவங்களா??? யாரும் அசைன்மெண்ட் செய்ய மாட்டோம். பொண்ணுங்க அத செஞ்சாலும் சப்மிட் பண்ண விடமாட்டோம். அப்படியே சப்மிட் பண்ணா வாத்தியார் டெஸ்க்ல இருந்து ஆட்டயப் போட்டுட்டு வந்துடுவானுங்க…

  பொண்ணுங்களுக்கு அதிக மார்க் போட்டுக்கோ!!! ஆனால் பசங்கள ஃபெயில் ஆக்க வேணாம் 😦

 33. // தம்பி said…
  //லேப்ல முதல் அவுட்புட் காட்றது நானாத்தான் இருப்பேன்… ஆனா அவுட்புட்டே வாங்காத பொண்ணுங்கதான் அந்த லேப்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவாங்க//

  சரியா சொன்னீங்க வெட்டி!

  அவுட்புட் வரலைன்னு கடைசி வரைக்கும் ஒரு பையன் உக்காந்து இருந்தான்னா அவன பெயிலாக்கிடுவானுங்க, இதே ஒரு பொண்ணு அவுட்புட் வரலைன்னு அழுதானு வச்சிக்க, அழுவாத கண்ணுன்னு கண்ண தொடச்சி உடாத கொறையா ஆதரவு சொல்லி 90 மார்க் போட்டவனுங்கள நான் பாத்திருக்கேன்.
  //
  இது 100க்கு 100 உண்மை. நான் பல தடவை அனுபவித்திருக்கிறேன்.

  ஒரு பொண்ணு கூட எனக்கு தெரிஞ்சி எங்க காலேஜ்ல லேப்ல கப் வெச்சது இல்ல

 34. //viji said…
  Hi dear Vetti payal,
  You made good point. but dont blme Lecturers for this, only few persons .1 % are doing like that. others never reduce marks and they dont play with students life, unles that student must be punished for some reasons. they are also humen and they were also students onceupon a time.
  for your kind information onceupon a time i was lectrer i never put internal mark below 18(out of 20) to any of my students.
  //
  Hello Sir,
  Even I have seen very good lecturers like you. But they are very rare. I was one among the toppers in my class (say Class 2nd among boys) but my internal marks were always in the range of 12-17.

  I never felt bad for that because I very well know that I can score more marks in the remaining 80.
  But giving marks less than 10 is too bad…

  If you are still in touch with ur friends (who are lecturers), please ask them not to play with the life of students.

 35. வெட்டிபயல், ஆசிரியர் ஆக வேண்டுமென்று ஆசிரியராக வருபவர்கள் நம் நாட்டில் குறைவு.

  சில நிர்பந்தங்களால் ஆசிரியர் ஆவர் அதிகம்.

  நிர்பந்தங்கள் :

  1. சொந்த ஊரில் இருக்கவேண்டிய அவசியம்.

  2. மற்ற கம்பெனிகளில் வேலைக் கிடைக்காமல் இருப்பது

  3. கணவன்/மனைவிக்கு இடமாற்றம் கிடைக்காத போது இவருடைய திறமைக்கு ஏற்றவாறு அந்த ஊரில் வேலைக் கிடைக்காமல் இருப்பது

  இதைக் களைய ஆசிரியர்களுக்கு மாதம் 1 லட்சம் சம்பளம் தந்தால் திறமையானவர்கள் வருவார்கள்

  ஒரு மாணவன் எக்ஸ்டர்னலில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் அவனுடைய் இண்டர்னெலை மீள் பார்வை செய்ய வழிவகை இருக்க வேண்டும்.

  ஆசிரியர்களை அவதியுள்ளாக்கும் மாணவர்களுக்கு வேறுவித கடுமையான தண்டனைகள் தேவை

 36. ஜி.ரா,
  You got it for your Attitude.

  நான் இரண்டாமாண்டுல இருந்து எல்லா லேப்லையும் 90க்கு மேலதான். எங்க க்ளாஸ்லையே நான் மட்டும்தான் அந்த மாதிரி எல்லா லேப்லையும் வாங்கியிருக்கேன். (எலக்ட்ரிக்கல் லேப்ல நான் ஒருத்தன் தான் 90க்கு மேல)

  முதலாமாண்டு எல்லா லேப்லையும் 70 மார்க் போட்டாங்க. என் பர்சண்டேஜ் 72. என்ன விட படிக்காத பசங்க எல்லாம் 75க்கு மேல… என்னனு பாத்தா எல்லாருக்கும் லேப்ல 90க்கு மேல. எல்லாரும் நல்ல பசங்களா நடிச்சு வாங்கிட்டாங்க.

  அப்ப போய் வாத்தியார்ட சண்டை போட்டேன். அது எப்படி நான் நல்லா பண்ணியும் எனக்கு 70 தான் போட்டீங்கனு. அதுக்கு அவர் சொன்ன பதில் “எக்ஸ்டர்னல் போட்டாரு… நான் ஒன்னும் பண்ண முடியாது”

  நான் பதிலுக்கு அவர்ட கேட்ட கேள்வி. “எக்ஸ்டர்னல் என்ன லூசா முதல்ல முடிச்சு எல்லா கேள்விக்கும் பதில் சொன்ன எனக்கு 70 போட்டுட்டு அவனுக்கு 95 போட்றதுக்கு… அவன் உங்களுக்கு க்ளோஸ்னு நீங்க போட்ருக்கீங்க. நீங்க அவனுக்கு எவ்வளவு வேணா போட்டுக்கோங்க… I dont Care. ஆனா எனக்கு நல்ல மார்க் வரலைனா நான் HODகிட்ட தான் பேச வேண்டியது இருக்கும்”னு சொல்லிட்டேன்.

  அதுல இருந்து அவர் நமக்கு நல்ல மார்க் போட்டுட்டாரு. அதுவும் சும்மா இல்ல… இது வரைக்கும் இரண்டு லேப் தவிர (அதுக்கும் காரணம் இருக்கு…) மீதி எல்லாமே நான் தான் முதல்ல முடிப்பேன்… அப்படி இருந்தும் போனா போதுன்னு 91 – 92 போடுவாரு. மத்தவங்களுக்கு எல்லாம் 95க்கு மேல தான் 🙂

  ஒரு சில நல்லவங்களும் இருக்காங்க!!! அவுங்க லேப்ல எல்லாம் 95க்கு மேல எடுத்துடுவேன்.

  எப்படியோ இப்ப நாங்க எல்லாம் நல்ல நிலைமைல தான் இருக்கோம்!!!

 37. சிவா,
  நீங்க சொல்றது ரொம்ப சரி.

  நான் பசங்களுக்கு தண்டனை வேணாம்னு சொல்லல. வேற மாதிரி கொடுங்க. லேப்ல குறைக்கறது கூட பரவாயில்ல. ஆனா இண்டர்னல் நீங்களே பின்னாடி நினைச்சா கூட மாத்த முடியாத ஒன்னு. அதுதான் பண்ணாதீங்கனு சொல்றேன்.

 38. மாற்று மருந்து இல்லாத விஷம்தான் அது. நீ சொன்னது உண்மைதான் வெட்டி, என் தம்பி உட்பட நிறைய பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

  ஒரே ஒரு சப்ஜெக்ட் தான் ஆனா ரொம்ப கஷ்டப்பட்டுட்டானுங்க, அதுவும் ரெண்டாவது வருஷம்லாம் வாத்தியார் இவங்க கட்சிக்கு வந்துட்டாரு ஆனாலும் அவரால கூட எதுவும் பண்ண முடியாததால ஒரு குற்ற உணர்ச்சியோடே கூட சுத்திட்ருப்பார்!

 39. // ராசுக்குட்டி said…
  மாற்று மருந்து இல்லாத விஷம்தான் அது. நீ சொன்னது உண்மைதான் வெட்டி, என் தம்பி உட்பட நிறைய பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

  ஒரே ஒரு சப்ஜெக்ட் தான் ஆனா ரொம்ப கஷ்டப்பட்டுட்டானுங்க, அதுவும் ரெண்டாவது வருஷம்லாம் வாத்தியார் இவங்க கட்சிக்கு வந்துட்டாரு ஆனாலும் அவரால கூட எதுவும் பண்ண முடியாததால ஒரு குற்ற உணர்ச்சியோடே கூட சுத்திட்ருப்பார்!
  //
  ராசுக்குட்டி,
  ஒரு சப்ஜக்ட்ட வெச்சிட்டு ஒருத்தவன் ரெண்டு வருஷமா உக்காந்திருக்கான்.
  அந்த வாத்தியார்ட போனா அவரும் ரொம்ப வருத்தப்பட்டாராம்.

  யுனிவர்சிட்டி ஏதாவது பண்ணாத்தான் உண்டு 😦

 40. நாங்க பாலிடெக்னிக்கில் படிக்கும் போது இந்த பிரச்சனை அவ்வளவாக தெரியவில்லை.முதல் வருடத்தில் அவர் போட்ட மார்க்கை காட்டிலும் நான் எடுத்த நூறு அவரை “உறுத்த” என்னிடம் வந்து தான் ஏதோ தப்புபண்ணிய மாதிரி சொன்ன நல்ல வாத்தியாரும் இருக்காங்க.

 41. இன்டர்னலை வைத்து விளையாடுவது தனியார் கல்லூரிகளில் சர்வசாதாரணம்.இதை தடுக்க நெறிமுறைகள் அவசியம்.முடிந்தால் தனியார் கல்லூரிகளில் இன்டர்னலையே தூக்கி விடலாம்.ஆனால் ஆசிரியர்கள் சொல்வது என்னவெனில் இன்டர்னல் இல்லாவிட்டால் மாணவர்கள் ரவுடித்தனம் செய்வார்கள் என்கிரார்கள்.

  ஒன்றும் புரியலை.

 42. //வடுவூர் குமார் said…
  நாங்க பாலிடெக்னிக்கில் படிக்கும் போது இந்த பிரச்சனை அவ்வளவாக தெரியவில்லை.முதல் வருடத்தில் அவர் போட்ட மார்க்கை காட்டிலும் நான் எடுத்த நூறு அவரை “உறுத்த” என்னிடம் வந்து தான் ஏதோ தப்புபண்ணிய மாதிரி சொன்ன நல்ல வாத்தியாரும் இருக்காங்க.
  //
  உண்மைதான் இந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கு. இண்டர்னெல்ல முதல் செம் குத்தன ஒரு சில சின்சியரான ஆசிரியர்கள் நான் மீதி 80க்கு வாங்கன மார்க்கை பார்த்து அடுத்த செமஸ்டர் நல்ல மார்க் போட்டுள்ளார்கள்.

 43. // செல்வன் said…
  இன்டர்னலை வைத்து விளையாடுவது தனியார் கல்லூரிகளில் சர்வசாதாரணம்.இதை தடுக்க நெறிமுறைகள் அவசியம்.முடிந்தால் தனியார் கல்லூரிகளில் இன்டர்னலையே தூக்கி விடலாம்.ஆனால் ஆசிரியர்கள் சொல்வது என்னவெனில் இன்டர்னல் இல்லாவிட்டால் மாணவர்கள் ரவுடித்தனம் செய்வார்கள் என்கிரார்கள்.

  ஒன்றும் புரியலை.
  //
  செல்வன்,
  இதெல்லாம் கொஞ்சம் ஓவர். எப்படியும் லேப் 200 மார்க் ஒவ்வொரு செம்மும் அவர்கள் கையில்தான் இருக்கிறது. அதை போலவே மீதி மதிப்பெண்களும் படிக்காமல் எடுக்க முடியாது. கொஞ்சம் மனசாட்சியோடு நடந்து கொண்டாலே போதும் என்று நான் நினைக்கிறேன்!!!

  இதனால் ஆசிரியர்கள் மேல் எனக்கு மதிப்பில்லை என்று அர்த்தமில்லை. உண்மையிலே ஆசிரியர்களாக நடந்து கொண்டவர்கள் என் தெய்வங்களே!!!

 44. idhu madri nan nera anubava patirukken.. kudiya seekram ezhudanum.. internal illa external nadakra sadhi ellam kuda sollanum!

 45. // பொற்கொடி said…
  idhu madri nan nera anubava patirukken.. kudiya seekram ezhudanum.. internal illa external nadakra sadhi ellam kuda sollanum!
  //
  சீக்கிரம் சொல்லுங்க!!! நாங்களும் தெரிஞ்சிக்கறோம் 😉

 46. “ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களா???”
  இதே கேள்வியை மாணவனைப் பார்த்தும் மத்தவங்கள் கேட்கலாம் இல்லையா?

  மாணவர்கள் எல்லாம் “மகாத்மா”க்களில்லை. நீங்க சொன்னமாதரி உங்கள் நண்பர் இன்டெர்னலில் குறைந்து எடுத்திருந்தான்னா அவர் அவரை ரொம்ப மகாத்மா போல சொல்லியிருப்பார். அவர் செய்த செயலை நியாயப்படித்திருப்பார்.
  உங்கள் நண்பரை கேட்டு பார்த்திங்களா எத்தனைபேர்கள் அந்த ஆசிரியரிடம் 1, 2 மார்க் வாங்கியிருப்பார்கள். நான் நினைப்பது சரிஎன்றால் உங்கள் நண்பன் ஒருவர்மட்டுமாக யிருக்கும்.

  அதற்காக அனைத்து வாத்திமார்களும் மகாத்மாக்கள் என கூறவில்லை, ஒரு சில மனநோய் பிடித்த வாத்திமார்களும் இருக்கிறார்கள்.

  என்னதான் நல்ல வாத்திமாராகயிருந்தாலும் ஒரு சில மாணவர்கள் செய்யும் கலாட்டாகள் மனவெறுக்கச்செய்யும் அதுவே பழிவாங்க செய்யும்.
  ஏன் மாணவர்கள் இதுபோல கலாட்டா செய்கிறாகள்.. எதை நிருபிக்க இதுபோல கலாட்டாக்கள்.
  ஒரு பின்னூட்டத்தில்
  //பெரிய தப்பெல்லாம் இல்ல வெட்டி ஹாஸ்டலுக்குள்ள விளையாட்டுத்தனமா பட்டாசு வெடிச்சோம் அதுவும் விளையாட்டுத்தனமா வார்டன் ரூம் பக்கமா போய் விழுந்து வெடிச்சிருச்சி.//

  ஏன் ஹாஸ்டலுக்குள்ள வெடி வெடிக்கல்லான்னு சொல்லியிருந்தாங்களா என்ன?

  அப்படியே இருந்தாலும் ஹாஸ்டலுக்குள்ள வெடிவெடிப்பது உங்களுக்கே நல்லதான செயலா படுதா?

  சில சம்யங்களில் நம்மமேலயே தப்பவச்சிகிட்டு மத்தவங்க மேது கோப படுறது எந்த விததில நியாயம்.

  அது சரி இதுமாதரி இன்டெர்னல் மார்க்ஸ் இருக்கிற கல்லூரியில படிக்கிற நீங்கள், இந்த கிரேட் சிஸ்டத்தில படித்தால் என்ன பாடுபடுவீங்களோ.

  கிரேட் சிஸ்டத்தில் வாத்திமார்களே எக்ஸாம் வைப்பாங்க.. அவங்களுக்கு அதுல முழுசுதந்திரம் உண்டு, அப்ப ஒரு வாத்தி நினைத்தால் ஒருவனை பெயிலா போடலாம் தெரியும்மா?

  இங்க வந்திருக்கிற பின்னூட்டகளை பார்க்கும் போது மாணவர்கள் மாணவர்கள் பெயரில் நாங்கள் என்ன வேணா பண்ணுவோம், நாங்கள் எல்லாம் மகாத்மாக்கள், நாங்கள் என்ன தப்பு செய்தாலும் நீங்க எங்களை ஓண்ணும் செய்ய கூடாது.

  பின்னூட்டத்தில பாருங்க, ஒரு வாத்தி இலகினமனசாயிருந்தா தப்பு, கொஞ்சம் கடுமையா யிருந்தா தப்பு, நேர்மையா யிருந்தாலும் இல்லாவிட்டாலும் தப்பு.. என்னங்க இது…..

  வாத்திக்காக பேசுர நான் வாத்தியில்லைங்கோ…..
  எனக்கு தெரிந்த ஒரு மாணவன், ஒரு வாத்தி வகுப்பவிட்டு வெளியே போகசொன்னதுக்கு அந்தவாத்திய ஆள்வச்சி அடிச்ச மாணவனை எனக்கு தெரியுங்கோ

  ஒரு வாத்தி பண்ண தப்புக்கு அவரோட பெண்ணை ரேங்கிங் பெயரில அசிங்க படித்தின மாணவனைத்தெரியுங்கோ….

  அதே சமயம் ஒரு மாணவன் எல்லோர் முன்னாடியும் கேள்வி கேட்டான் என்ற ஒரே காரணத்திற்காக அவனை F கிரேட் கொடுத்து பெயிலாக்கிய வாத்தியையும், ஒரு பொண்ணுகூட்டப்ப வீட்டுக்கு வரலன்னுத்க்காக அந்த பெண்ண பெயிலாக்கிய வாத்தியையும் தெரியுங்கோ….

  இங்க யாரும் யோக்கியம் கிடையாதுங்க…. இப்ப பண்ணிங்கனா அதுக்கு தகுந்த இன்னும் ஒண்ணு பெரிசா திரும்பவரும்

  வாத்திங்கள தெய்வம்மா நினைத்து, எல்லாத்தையும் பொருத்துபாரு ஏன் நினைத்திங்க….

 47. எலிவால்ராஜா,
  அந்த பையன் தப்பு செய்லனு நான் சொல்லல. அவன் அப்படி சொன்னாலும் நான் நம்பமாட்டேன். அவன் பண்ண தப்பு, இண்டர்னல் டெஸ்ட்ல ஃபெயிலானது அடுத்து ரீ-டெஸ்ட் எழுதாது.

  அதுக்காக இண்டர்னல்ல 1 மார்க் போடறது நியாயமே இல்லை. காலேஜ் படிக்கும் போது பசங்க கொஞ்சம் விளையாட்டுத்தனமா தான் இருப்பாங்க. அதுக்காக அவுங்க வாழ்க்கையே அழிக்கற மாதிரி செய்ய வேண்டாமே!

  லேப்ல ஃபெயில் பண்றது கூட பரவாயில்லனுதான் நான் சொல்லியிருக்கேன். ஏன்னா அடுத்த செமஸ்டர்ல க்ளியர் பண்ணிக்கலாம். ஆனா இண்டர்னல் மாத்த முடியாத ஒன்னு.

  மாணவர்கள் மகாத்மாக்கள் இல்லை. ஆனால் ஆசிரியர்கள் தண்டனையை யோசிச்சு கொடுக்கனும்.

 48. இதுதாங்க நாம செய்யிர தப்பு, நமக்கு விளையாட்டா தெரியரது மத்தவ்ங்களுக்கு மன வேதனை.

  இந்த ஒரு மாணவன் பெயிலானா மத்தமாணவங்களுக்கு ஒரு பாடங்க…. மத்த மாணவங்க அந்த வாத்திய பார்த்தால் எந்த தப்பும் செய்யமாட்டாங்க பாருங்க…..

  உங்கள் நண்பனுக்கு (ஏன் எல்லாம் மாணவருக்கும்தான்) “காரியம் ஆகிரவறைக்கும் காலபுடிக்க தெரியாம” இருந்துயிருக்கு.

  எனக்கு இந்த மாணவனுக்கு ஏற்ப்படத விட மிக மோசமாக பாதிக்க பட்ட மாணவ(வி)(களை) தெரியுங்க….

  அந்த மாணவனைப்பாத்து கவலைதான் படத்தோணுது…..

  பாவம்…

 49. எலிவால்ராஜா,
  அவன் ஒருத்தவனுக்கு மட்டும் அவர் குத்தல. நிறைய பேருக்கு குத்திருக்காரு.

  நான் அவனுக்கு மட்டும் சொல்லல. எங்க க்ளாஸ்லையே எலக்ட்ரிக்கல் பேப்பர்ல அதிகபட்ச மார்க் 16தான் போட்டாங்க.

  இந்த மாதிரி பல பேப்பர்ஸ் இருக்கு.

  ஒருத்தவன் வாழ்க்கைய அழிச்சி மத்தவங்களுக்கு எடுத்துக்காட்ட உருவாக்கனா… நாளைக்கு அவன் வந்து குண்டு வெச்சா ஒத்துக்குவீங்களா?

 50. I got 4 marks in internal and 78 Marks in external (out of 80) in microproccessors and digital systems. If i got 20 in internal, i should have been Ist in university.

 51. //Anonymous said…
  I got 4 marks in internal and 78 Marks in external (out of 80) in microproccessors and digital systems. If i got 20 in internal, i should have been Ist in university.
  //
  Could you pls tell us y u got 4 in internals?

 52. எங்க கல்லூரியிலும் இரண்டாமாண்டு எலக்ட்ரிக்கல் லேபில் இருந்த வாத்தியார்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் மாணவர்களை மட்டும் வேட்டையாடி விளையாடிய சம்பவம் நடந்தது. பலருக்கும் மார்க்குகள் ஒற்றைப் படையில் கொடுத்து பெயிலாக்கியும் விட்டர்கள். மாணவிகள் மட்டும் தப்பித்தது வேறு விஷயம்.

  இத்தனைக்கும் சீனியர்கள் இந்த லேப் பற்றி எச்சரித்ததில் பசங்க எல்லாரும் முடிந்த அளவு கலாட்டாக்கள் எதுவும் செய்யாமல் அடக்கியே வாசித்தார்கள். லேபில் ரேகிங் அளவிற்கு நம்மளைக் கேள்வி கேட்டது இப்ப நினைத்தாலும் கோபம் வருகிறது. மதியம் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே வந்த எக்ஸ்டெர்னல் வாத்தியாரும், எலக்ட்ரிக்கல் வாத்தியாரம்மாவும் நம்ம எலக்ட்ரிக்கல் அறிவை சோதிக்கிறேன் பேர்வழி என்று அரைமணி நேரம் “3-பின் பிளக்குல ஏன் ஒரு பின் மட்டும் பெருசா இருக்கு?”, “எலக்ட்ரானிக்ஸ் பீல்டு பெருசா, இல்ல எலக்ட்ரிக்கலா?” (நாம எலக்ட்ரானிக்ஸ்..) , “கம்ப்யூட்டர் பீல்டு ஏன் வாழ்க்கையில் உதவாது? (கம்யூட்டர் இல்லாம இருக்கலாம், ஃபேன் இல்லாம இருக்க முடியுமா?)” போன்ற அறிவுப்பூர்வமான கேள்விகளால் கலாட்டா செய்து நோகடித்தார்கள். (நல்ல வேளை, இதையெல்லாம் தாண்டி 90+ மார்க்குகள் நமக்கு வந்தது).

  எனக்கென்னவோ இது போன்ற இண்டெர்னல் கொடுமைகள் எல்லா இடத்திலேயும் நடக்கிறது என்றே தோன்றுகிறது. பாதிக்கப்படுவது வாங்கிய குறைந்த மார்க்குகளை வாழ்க்கை முழுக்க சுமக்கும் மாணவ மாணவியர்கள் தான்..

  //அந்த வயசுல அவங்க செய்யற சின்ன தப்புக்கு அவுங்க வாழ்க்கையையே வீணாக்காதீங்க… // – மிகச் சரி.

 53. முரட்டுக்காளை,
  சரியாக சொன்னீர்கள்.

  எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் ஆசிரியர்களே அப்படித்தான்… எங்களுக்கும் அதே போல் இண்டர்னலுக்கு அவர் கேட்கும் கேள்வி மிகவும் கடினமாக இருக்கும். 3 இண்டர்னல் பரிட்சையில் 2 பரிட்சைகளில் வகுப்பில் ஒருவர் மட்டும்தான் பாஸ். ஒரு பரிட்சையில் வகுப்பில் இருப்பவர் அனைவரும் ஃபெயில்.

  கேட்டால் நான் IIT தரத்திற்கு கேள்வி கேட்கிறேன் என்றார். IIT தரத்திற்கு இருந்தால் நாங்கள் ஏன் ராமகிருஷ்ணாவில் படிக்க போகிறோம். இதனால் அந்த ஒருவருக்கு மட்டும் தான் இண்டர்னலில் 16. பாதி பேருக்கு மேல் ஒற்றை இலக்க எண்கள்தான்.

  அந்த ஒருவருக்கு மட்டும் லேப்பில் 91. அவர் மனதில் ஒரு தகுதியை வைத்துக்கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடியது மிகவும் வேதனையான ஒன்று.

 54. //IIT தரத்திற்கு இருந்தால் நாங்கள் ஏன் ..// சரியான கேள்வி வெட்டி..

  பொதுவாக கல்லூரியில் சேரும்பொழுது ஒரு விடுதலை** உணர்வு மாணவ மாணவியரிடம் காணப்படும்..! ஆனால் அவர்களின் துள்ளலை அடக்கி ஒடுக்கும் லேப்-பாக இந்த எலக்ட்ரிக்கல் லேப் கண்டிப்பாக இருக்கும்.

  பின்னாளில் ஒரு எலக்ட்ரிக்கல் விரிவுரையாளரிடம் கேட்டே விட்டேன் “ஏன் சார் நீங்களெல்லாம் மட்டும் இப்படி?” அது போன்ற லேப்பில் பாதுகாப்பான வழிமுறைகள் பின்பற்ற வேண்டி இருக்கும் தருணங்களில் இப்படி கடுமையாக நடந்துகொள்வதாகவும், எதிர்த்துப் பேசும் சில மாணவர்களை இப்படி லேப்-பில் கை வைக்காமல் வேறு எப்படி கட்டுப்படுத்துவது எனவும் வாதாட வேறு செய்தார்.

  வேகமாக ஓடும் எலக்ட்ரிக்கல் மெஷினில் ஒரு நீளமுடி சிக்கிக் கொண்டாலும் ஆபத்து தான் என்றாலும் “ஏம்மா, நீ என்ன பெரிய கூந்தல் ஆழகியா? முடியை லேப் கோட்டுக்குள் போடு, இல்லென்னா…” ஒரு மேடம் சக மாணவியை தேவைக்கு அதிகமாய் சாடிய போது நமக்கே வலித்தது.

 55. பை தி பை சொல்ல மறந்திட்டேனே, போன பின்னூட்டத்தில் போட்ட ** – “விடுதலை” அக்டோபர் மாத போட்டித் தலைப்பு பா… 🙂

 56. மு.கா,
  அவர்கள் சொல்வது நியாயம்தான்… ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக போகும் போது மாணவர்களுக்கு அவர்கள் மேல் இருக்கும் மதிப்பு போய்விடுகிறது.

  மாணவர்களோட நல்லதுக்குனு சொல்லிட்டு மார்க் குறைக்கறது எந்த வகைல நியாயம்??? :-/

  ————–
  அப்ப அடுத்த மாசத்துக்கு முதலிடத்துக்கு ரெடியாயிட்டீங்க!!! வாழ்த்துக்கள்

 57. thalaiva eppo katchi arambichinga,

  naan idhil udanadiya urupinar aganoom. indha madhiri vathikalukku anniyanla varra mathiri yennachum dhandanai kodukkanum thalaiva.yenna dhandanai kodukkalam sollunga..plz.

 58. //manoj.ureka said…
  thalaiva eppo katchi arambichinga,

  naan idhil udanadiya urupinar aganoom. indha madhiri vathikalukku anniyanla varra mathiri yennachum dhandanai kodukkanum thalaiva.yenna dhandanai kodukkalam sollunga..plz.
  //
  மனோஜ்,
  ஆசிரியர்களுக்கு தண்டனையா? என்னப்பா இது அநியாயம். ஆசிரியர்கள் கடவுள் மாதிரி. அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டத்தான் நினைத்தேனே தவிற அவர்களை தரம் தாழ்த்தி பேச அல்ல.

  தன்னால் ஒரு மாணவனின் வாழ்க்கையே சீரழிந்து விட்டது என்று நினைத்து வருந்துவதற்கு முன் அதை தடுக்கவே நான் விரும்புகிறேன்.

 59. ஹலொ மக்களே,
  இங்க இருக்கற பல பின்னூட்டங்கள பாக்கற போது நெறைய பேரு Electrical Dept. சைக்கொ னு சொல்ற மாதிரி இருக்கு. அதுல கொஞ்சம் உன்மை இருந்தாலும் அது மாணவர்களோட நன்மைக்காகத்தான், அப்படி இல்லனா நீங்க லேப் ல தப்பு பன்னுவிங்க, வேற லெப்ல எல்லாம் mistake பன்னினா அது என்னனு உங்களால பாக்க முடியும், திருத்திக்களாம், ஆனா எலக்ட்ரிகல் லேப்ல பன்னினா “பாக்க நீ இருக்க மாட்ட”…?

 60. விஜி,
  நீங்க சொல்ற மாதிரி மிரட்டறது பரவாயில்லை. இண்டர்னல் மார்க் குறைக்கறது, லேப் மார்க் குறைக்கறது எல்லாம் எந்த வகைல நியாயம்.

  பிராஜக்ட்ல எங்க டிப்பார்ட்மெண்ட்ல (Comp Sci) 180க்கு மேல தாராளமா வாங்கலாம். ஆனா EEE பசங்களுக்கு 130-160 வரைக்கும் தான் போடுவாங்க. அவுங்க என்ன தப்பு பண்ணாங்க?

  எங்க பிராஜக்ட் எந்த ரேஞ்ச்க்கு இருக்கும்னு எனக்கு தெரியும். பசங்களை திட்றது வேற, மார்க் குறைக்கிறது வேற… 😦

 61. அருமையான விவாதம்! பாராட்டுக்கள்!

  தற்போது நான் இஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறேன்.
  நானும் சராசரி மாணவன் தான்.இன்டர்னல் மார்க்கும் சராசரி தான்!

  வெட்டி அவர்களின் ஆதங்கம் நியாயமானதே என்று பலரும் விவாதித்திருக்கிறீர்கள். நன்று. அதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.

  நான் பார்த்தவரையில் ஒரு சிலரே அம்மாதிரியானவர்கள்.மற்றபடி நல்ல மதிப்பெண் வாங்குவதற்கு பாடங்களை விட ஆசிரியர்களைப் புரிந்து கொள்வது தான் மிகத் தேவையாக இருக்கிறது.இதுதான் என் கருத்து…

  அப்புறம் வெட்டி… உங்களது வலைத்தளத்தை மிக அருமையாகவும் அழகாகவும் எளிமையாகவும் வடிவமைத்திருக்கிறீர்கள். ரொம்ப நல்லயிருக்கு!

 62. சிவாஜி,
  மிக்க நன்றி!!!

  ஆசிரியர்களை புரிந்து கொள்ளவில்லை என்பதற்காக மாணவனின் வாழ்க்கையை பாழாக்கும் உரிமையை அவருக்கு யார் தந்தார்கள். இவர்களும் ஒரு காலத்தில் மாணவர்கள் தான். இவர்கள் பிள்ளைகளும் நாளைக்கு ஒருவரிடம் படிக்கத்தான் போகிறார்கள்.

  நான் இங்கே சொல்வது தவறு செய்யும் ஆசிரியர்களை பற்றி மட்டுமே…

 63. சில பெண்கள் கண்ணைக் கசக்கி இண்டெர்னல் மார்க் வாங்கினாலும், அவர்கள் வேறுவித கொடூரங்களை அனுபவிக்கிறார்கள். எனக்கு தெரிந்து காட்டங்குளத்தூரில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் ஒரு ஜொள்ளுபார்ட்டியின் டார்ச்சரால் முதுகலை பெண்களின் கண்ணீர் கதைகளை கேட்டிருக்கிறேன். அவனுக்கு பயந்து படிப்பை நிறுத்தவும் முயற்சி செய்த பெண்களுண்டு.

 64. எங்கள் கல்லூரியில் இண்டர்னல் மார்க் மிட் செம், எண்ட் செம், வருகைப்பதிவு, செமினார், அசைன்மெண்ட் போன்றவற்றை உள்ளடக்கியதால், வெளிப்படையாக இருக்கும், இம்முறையை அனைத்து கல்லூரிகளும் பின்பற்றலாம் !!

 65. //Anonymous said…
  சில பெண்கள் கண்ணைக் கசக்கி இண்டெர்னல் மார்க் வாங்கினாலும், அவர்கள் வேறுவித கொடூரங்களை அனுபவிக்கிறார்கள். எனக்கு தெரிந்து காட்டங்குளத்தூரில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் ஒரு ஜொள்ளுபார்ட்டியின் டார்ச்சரால் முதுகலை பெண்களின் கண்ணீர் கதைகளை கேட்டிருக்கிறேன். அவனுக்கு பயந்து படிப்பை நிறுத்தவும் முயற்சி செய்த பெண்களுண்டு.
  //

  ஆமாம்… நீங்க சொல்றதும் சரிதான்… 😦

  ஆனா எங்க காலேஜ்ல அந்த அளவுக்கு எல்லாம் எப்பவும் போனதில்லை… அப்பப்ப வழிஞ்சிக்கிட்டு மார்க் போடுவாங்க.. அவ்வளவுதான்…

 66. //சோம்பேறி பையன் said…
  எங்கள் கல்லூரியில் இண்டர்னல் மார்க் மிட் செம், எண்ட் செம், வருகைப்பதிவு, செமினார், அசைன்மெண்ட் போன்றவற்றை உள்ளடக்கியதால், வெளிப்படையாக இருக்கும், இம்முறையை அனைத்து கல்லூரிகளும் பின்பற்றலாம் !!
  //
  நீங்க சொல்ற மாதிரி ஒரு சில ஆசிரியர்கள் எங்க காலேஜ்லையும் செய்வாங்க… ஆனால் எல்லாரும் செஞ்சா பிரச்சனை ஓரளவுக்கு தீர்ந்திடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: