தீயினால் சுட்ட புண்!!!

“டேய் கிருஷ்ணா! மணி 5:30 ஆச்சு… எழுந்திரி!” வழக்கம் போல் அம்மாவின் குரல்

“ஏம்மா! இப்படி உயிர வாங்கற!!! 7 மணிக்கு தான முகூர்த்தம்… பொறுமையா போயிக்கலாம்”

“ஏன்டா நேத்து நைட்டே நீ படுக்கறதுக்கு முன்னாடி சொன்னேன் இல்ல. காலைல சீக்கிரம் போகனும்னு”

“நம்ம கரெக்ட் டைமுக்கு போகலன்னா அங்க என்ன மாப்பிள தாலி கட்டறதையா நிறுத்த போறாரு”

“இப்படியெல்லாம் அதிக பிரசங்கித்தனமா பேசாத. உங்க அக்கா மாமனாரோட தம்பி பொண்ணு கல்யாணம். ஏற்கனவே அவ மாமனார் வேற உங்க அப்பா வராததுக்கே கோச்சுக்குவாரானு பயமா இருக்கு. நம்ம லேட்டா போனா அவ்வளவுதான்”

“அந்த ஆள எங்கயாவது போ சொல்லு. அப்பா என்ன ஓடி விளையாடவா போயிருக்காரு. வேலை விஷயமாத்தானே போயிருக்காரு. இவர் தப்பா நெனச்சா நாம ஒண்ணும் பண்ண முடியாது”

“இந்த பேச்சு பேசறதுக்கு நீ எழுந்திரிச்சு குளிச்சி, கெளம்பியிருக்கலாம்”

“சரி. நான் குளிச்சிட்டு வரேன்… காபி போட்டு வைங்க”

“அதெல்லாம் கல்யாண மண்டபத்துல போய் குடிச்சுக்கலாம்… நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா”

கல்யாண மண்டபத்திற்குள் போய் சேரும் போது மணி சரியாக 6:45.

“ஏம்மா… கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?” அக்காவின் குரலில் வழக்கம் போல் அதிகாரம் தெரிந்தது.

“எல்லாம் இவன் பண்ண வேல… இவன எழுப்பறதுக்குள்ள என் உயிரே போகுது”

“ஏன்டா ஒரு நாள் கூட உன்னால சீக்கிரம் எழுந்திரிக்க முடியாதா?”

“ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? நாங்க தான் முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி வந்துட்டோம் இல்ல”

“ஆமாம். எங்க உங்க வீட்ல இருந்து யாரையும் காணோம்னு இப்பதான் எங்க மாமியார் கேட்டாங்க”

“ஏன் ஆரத்தி எடுத்து வரவேற்கவா???”

“உனக்கு திமிருதான். அவுங்க முன்னாடி இப்படியெல்லாம் பேசி வைக்காத. அப்பறம் எனக்குத்தான் பிரச்சனை”

“சரி சரி நான் எதுவும் பேசல. அதுவும் இல்லாம நான் முகூர்த்தம் முடிஞ்சவுடனே கிளம்பறேன். எனக்கு கம்பெனில நிறைய வேலை இருக்கு”

“சரி முகூர்த்தம் முடிஞ்சவுடனே ஏழரைக்கு எல்லாம் பந்தி போட்டுடுவாங்க… சாப்பிட்டு போயிடு” அம்மாவின் குரல்

“என்னது பந்தியா??? ஏம்மா உயிர வாங்கற. காலங்காத்தால இவனுங்க கேசரி, இட்லி, வடை, பூரி, பொங்கல்னு தூக்கம் வர ஐட்டமா போட்டு உசுர வாங்குவாங்க. நான் கம்பெனில போய் ஏதாவது சாப்பிட்டுக்கறேன்”

“ஏன்டா ஐநூறு ரூபா மொய் வெக்கறோம். ரெண்டு பேர் கூட சாப்பிடலனா எப்படி?”

“ஏன். தெருல இருக்கறவங்க எல்லாத்தயும் கூப்பிட்டு வர வேண்டியதுதான? போம்மா நீ மொய் வெக்கறதால எல்லாம் என்னால சாப்பிட முடியாது”

எங்க அக்காவோட மாமியார் அவளை பார்த்து ஏதோ ஜாடை செய்து கூப்பிட அவள் இடத்தை காலி செய்தாள். அப்போது எங்களை பார்த்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தார்.

“நீங்க சாந்தி அம்மாதானே” எங்க அம்மாவை பார்த்து கேட்டார் அவர்.
ஏன் எல்லாம் இப்படி இருக்காங்க? கிருஷ்ணா அம்மானு சொன்னா குறைஞ்சிடுவாங்களா? வீட்ல இருக்குற பொண்ணு பேற சொல்லிதான் எல்லாம் சொல்லுவாங்க. அவளுக்கு தான் கல்யாணமாகி மாமியார் விட்டுக்கு போயிட்டா இல்ல. இனியாவது கிருஷ்ணா அம்மானு சொன்னா என்ன?
இந்த மாதிரி யார் சொன்னாலும் எனக்கு அவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும். இவர் மேலும் வெறுப்பு வர தவறவில்லை.

“ஆமாம். நீங்க அருண் அம்மாதான?”
எங்க அம்மா நல்லவங்களா இருக்காங்க. பரவாயில்லை!!!

“ஆமாம். பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. அருண் நாலு வயிசு இருக்கும் போது கொயம்பத்தூர்ல இருந்து கெளம்பனது”

“ஆமாம். பதினஞ்சு பதினாறு வருஷம் ஆகிடுச்சு. அதான் பாத்தவுடனே கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சு”

“ஆமாம் சாந்தி, கிருஷ்ணா எல்லாம் எப்படி இருக்காங்க. என்ன பண்றாங்க?”

“சாந்திக்கு கல்யாணமாயிடுச்சு. 1 பையன் இருக்கான் 2 வயசு ஆகுது. இதுதான் கிருஷ்ணா. இஞ்சினியரிங் படிச்சுட்டு இங்க ப்ரிக்கால்ல வேலை செய்யறான்”

“ஓ! இவ்வளவு பெரிய பையானா வளந்துட்டான்”

ஆமாம் பதினஞ்சு வருஷமா வளராம அப்பு கமல் மாதிரியா இருப்பாங்க? லேசாக சிரித்து வைத்தேன்.

“சின்ன வயசுல எப்பவும் நீ அவுங்க வீட்லதான் இருப்ப” அம்மா ஒத்து ஊதினார்கள்.

“இப்ப உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காது. அருண்ட கிள்ளு வாங்கிட்டு அழுதுட்டே உங்க வீட்டுக்கு ஓடிடுவ”

ஓ! இது வேற நடந்துருக்கா… அவனுக்கு இருக்கு.

“ஆமாம் அதுக்குத்தான் இவன் சூடு வெச்சிட்டானே!” அம்மா என்னை பார்த்து முறைத்து கொண்டே சொன்னார்கள்.
ஓ!!! பரவாயில்ல… அப்பவே நம்ம வெயிட்டு காமிச்சிட்டோம். மனதிற்குள் ஒரு சந்தோஷம்.

“ஆமாம் அருண் இப்ப என்ன பண்றா?”

“அருண் இங்க தான் காலேஜ்ல படிக்கறா”

“ஓ!!! காலேஜ் படிக்கிறாளா??? எந்த காலேஜ்”

“இங்கதான் அவினாஸிலிங்கம்ல ஹோம் சயின்ஸ் படிக்கிறா. இங்கதான நின்னுட்டு இருந்தா. எங்க காணோம்???
அங்க நின்னுட்டு இருக்கா. இருங்க கூப்பிட்டு வரேன்”

ஓ!!! அருண் பையன் இல்லயா? மனசன கொழப்பறதுலயே இருங்க…
மம்மி வீட்டுக்கு வா உனக்கு இருக்கு

அந்த ஆண்ட்டி சென்று 2 நிமிடத்திற்குள் வந்தார்கள். இந்த முறை அவருடன் ஒரு அழகான தேவதை இருந்தாள். பிங் சுடிதாரில் அழகாக இருந்தாள்.
பொதுவா சொந்தகாரர்கள் இருக்கும் இடத்தில் நான் நல்ல பிள்ளை. ஆனா இந்த முறை அம்மா பக்கத்துல இருந்ததையும் மறந்துவிட்டேன்.

2 நிமிடத்திற்குள் அறிமுகப்படலம் முடிந்து திரும்பிவிட்டாள். நானோ கனவுலகிலே சஞ்சரித்து இருந்தேன். அக்கா வந்து பேசியவுடன் தான் நினைவு திரும்பியது.

ஒருவழியாக சாப்பாடு பந்தியிலிருந்தும் தப்பித்து வெளியே வந்தேன்.

“ஏன் தம்பூல பையை வாங்காம வந்துட்ட? தேங்கா போட்ருக்காங்க”
அம்மா அக்கறையாக வழியனுப்ப வந்தாங்கனு பாத்தேன்… இல்ல மொய்கணக்க எப்படியாவது சரி பண்ணனும் வந்துருக்காங்க

“அம்மா அசிங்கமா தாம்பூலம் எல்லாம் என்னால வாங்க முடியாது. நீ பொறுமையா வரும் போது வாங்கிட்டு வா”

“சரி. நீ என்ன சொன்னாலும் கேக்கவே மாட்ட”

வெளியே வந்து திரும்பும் போது மண்டபத்திற்கு வெளியில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

“என்னங்க இங்க நின்னூட்டு இருக்கீங்க?” கூச்சப்படாமல் பேசினேன். அவளை தவிர வேறு யார் நின்றிருந்தாலும் பேசியிருக்க மாட்டேன் என்றே தோன்றியது.

“இல்ல காலேஜ்க்கு நேரமாச்சு. ஆட்டோ கிடைக்குமானு பாத்துட்டு இருக்கேன்”

“நானும் அந்த வழியாத்தான் போறேன். வேணும்னா வாங்க ட்ராப் பண்ணிடறேன்”

“இல்லைங்க உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்”

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க… நான் அந்த வழியாத்தான் போறேன்”

“சரி எனக்கும் நேரமாச்சு. நீங்க அந்த டர்னிங்ல நிக்கறீங்களா? நான் வந்து ஏறிக்கிறேன். இங்க யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க”

“யாருங்க தப்பா நினைக்கப் போறா. நீங்க வாங்க”

“இல்லைங்க வேணாம்” தயங்கினாள்.

“சரி நான் டர்னிங்ல வெயிட் பண்றேன்”
எல்லாமே இப்படித்தான் ஊர ஏமாத்தறாங்களா?

சரியாக மூன்று நிமிடத்திற்குள் வந்து வண்டியில் என் பின்னால் அமர்ந்தாள்.
இன்னைக்கு நல்ல நாள்தான்.

“ஆமாம்… உங்க பேர் கிருஷ்ணாதான?”

“ஆமாம்” இது தெரியாமத்தான் என் பின்னாடி வந்து உட்கார்ந்தாளா? கலிகாலம்.
“உங்க பேர் அருணாங்க?”

“அருண் இல்லைங்க… அருணா. வீட்ல பையன் யாரும் இல்லாததால என்ன அருண்னு கூப்பிட்டு சந்தோஷப்பட்டுக்கறாங்க. சரி நீங்க சாப்பிட்டீங்களா?”

“இல்லை. நீங்க?”

“நானும் சாப்பிடல. முதல் பந்தில உக்காந்தா அசிங்கமா இருக்குமேனு சாப்பிடாமலே வந்துட்டேன். எங்க காலேஜ் முன்னாடி ஒரு அண்ணபூர்ணா இருக்கு அங்க வேணும்னா ரெண்டு பேரும் சாப்பிடலாமா?”

“சாப்பிடலாமே” இன்னைக்கு உண்மையாலுமே அதிர்ஷ்ட நாள்தான்.

இருவரும் ஆளுக்கு ஒரு ரோஸ்ட் ஆர்டர் செய்தோம்.

“உங்களத்தான் நான் நினைவு தெரிஞ்ச நாளா தேடிக்கிட்டு இருக்கேன்”

என்னடா இப்படி சொல்றா? இவ எதுக்கு என்ன தேடனும். ஒரு வேளை “தித்திக்குதே”வா இருக்குமா? ச்ச இத கூட ஞாபகம் வெச்சிக்காம இருந்துட்டேனே. என்னை நானே நொந்து கொண்டேன்.

“என்னையா? ஏன்?”

“இங்க பாருங்க”
அவள் கையை நீட்டினால், அதில் நீட்டமாக ஒரு தழும்பு தெரிந்தது.

“என்னங்க எதோ தழும்பு மாதிரி இருக்கு”

“நல்லா கேளுங்க! நீங்க வெச்சது தான். நான் ஏதோ தெரியாம கிள்ளிட்டன்னு அடுப்புல இருந்து கொள்ளிக்கட்டை எடுத்து என் கைல வெச்சிட்டீங்களாம். எங்க அம்மா சொன்னாங்க”

இது கேக்கத்தான் என் கூட வண்டீல வந்தாளா? அக்கறையா சாப்பிட போகலாம்னு சொன்னது கூட இதுக்குத்தானா? நான் தான் அவசரப்பட்டுட்டனா?

“என்னங்க நான் என்ன தெரிஞ்சா பண்ணேன். ஏதோ தெரியாம கோபத்துல பண்ணது. எனக்கு சத்தியமா ஞாபகம் கூட இல்ல. அப்ப எனக்கு வயசு என்னா ஒரு ஆறு இல்லனா ஏழு இருக்குமாங்க? அப்ப பண்ண தப்புக்கு இப்ப வந்து கேட்டீங்கனா நான் என்ன பண்ண முடியும்? வேணும்னா சொல்லுங்க ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்”
அதிகமா பேசின மாதிரி தோன்றியது.

“ஆமாம். இதுக்கு போய் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவாங்களா? தெரியாம ஏதாவது சின்னதா பண்ணியிருந்தா பரவாயில்ல. தண்ணி காயறதுக்கு அடுப்பாங்கறைல வெச்சிருந்த விறகு கட்டய எடுத்துட்டு வந்து வெச்சிருக்கீங்க” கோபமாக பேசினாள். ஆனால் சமாதானமாகிவிடுவாள் என்று தோன்றியது.

“சரி அந்த சம்பவம்(?) உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

“இல்ல. எங்க அம்மாதான் சொன்னாங்க”

“பாருங்க உங்களுக்கும் ஞாபகமில்ல. எனக்கும் ஞாபகமில்ல. அப்பறம் எதுக்கு நீங்க இவ்வளவு டென்ஷம் ஆகறிங்க?”

“ஆமாம். உங்களுக்கு என்ன? சின்ன வயசுல எல்லாம் என்ன கரிகால சோழன் மாதிரி இவ கரிக்கை சோழினு ஓட்டுவாங்க. அப்ப இருந்தே உங்க மேல எனக்கு கோபம்”

“கரிக்கை சோழி ரொம்ப நல்லா இருக்கே!”

“என்னது?” முறைத்தாள். ஆனால் செல்லமாக முறைப்பது போல்தான் எனக்கு தோன்றியது.

“இப்ப என்ன பண்ண சொல்றீங்க? வேணும்னா நீங்களும் என் கைய சுட்டுக்கோங்க. தெரிஞ்சே யாராவது இந்த மாதிரி பண்ணுவாங்களா? அதுவும் அழகான பொண்ணு கைய சுடறதுக்கு யாருக்காவது மனசு வருமா?” ஓரளவு வழியாமல் சொன்னேன்.

“ரொம்ப ஐஸ் வெக்காதீங்க. நான் உங்களுக்கு சூடு எல்லாம் வெக்க போறதில்ல. இந்த பில்ல பே பண்ணிட்டு, என்ன காலேஜ்ல இறக்கி விட்டுடுங்க”
சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“நான் தெரியாம பண்ணிருந்தாலும், ஐ ரியலி ஃபீல் சாரி. மன்னிச்சுடுங்க”

“பரவாயில்ல. உங்க மேல ரொம்ப கோவமா இருந்தேன். இப்ப எல்லாமே போயிடுச்சு”

ஒரு வழியாக அவளை காலேஜில் இறக்கிவிட்டு, வேலைக்கு சென்றேன். நாள் முழுதும் அவள் நியாபகமாகவே இருந்தது. வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 7 ஆகியிருந்தது.

“இவ எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்தா? அவ மாமியார் வீட்ல இருந்து துரத்திவிட்டுட்டாங்களா?”

“டேய்! என்ன யாரும் தொரத்தல.. உன்னத்தான் நம்ம வீட்ல இருந்து துரத்திடுவாங்கனு நினைக்கிறேன்” அக்கா சிரித்து கொண்டே சொன்னாள்.

“என்ன யாரும் துரத்த முடியாது. அம்மா சூடா ஒரு கப் காபி கொடேன்”

“ஒரு அஞ்சு நிமிஷம் இரு. கொண்டு வரேன்”

“ஆமாம். அக்கா இன்னைக்கு காலைல ஒரு ஆண்ட்டி நம்ம அம்மாட்ட பேசிக்கிட்டு இருந்தாங்களே, அவுங்கள உனக்கு ஞாபகம் இருக்கா?”

“இருக்கே! நம்ம அருண் அம்மா. ஏன் உனக்கு ஞாபகமில்லையா?”

“இல்ல. அவுங்க நமக்கு என்ன வேணும்?”

“நம்ம பக்கத்து வீட்ல இருந்தாங்க. இப்ப சொந்தக்காரவங்க ஆகிட்டாங்க!” நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள். மனசுல பெரிய புத்திசாலினு நினைப்பு.

“கொஞ்சம் தெளிவா சொல்லு” கோபமாக கேட்டேன்

“எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான் அவுங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க” மறுபடியும் அதே நக்கல் சிரிப்பு.

“அவுங்க நமக்கு என்ன வேணும்” கோபத்தை அடக்கி கொண்டு கேட்டேன்

“அவங்க வீட்டுக்காரர் உனக்கு அண்ணன் முறை ஆகறாரு”

“என்னது? அண்ணனா? அவர் வயசு என்ன? என் வயசு என்ன? இப்ப உண்மைய சொல்லல உன் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது தலைல ப்ளேடு பொட்டுடுவன். ஆமாம்”

“ஏன்டீ அவனோட விளையாடற? அண்ணனும் இல்ல தம்பியுமில்ல. கொஞ்சம் தூரத்து சொந்தம்தான். அந்த பொண்ணு அருண பாத்தவுடனே எனக்கு புடிச்சு போச்சுடா. சரின்னு அவ அம்மாட்ட பேசி பாத்தேன் அவளும் சரி ஜாதகம் அனுப்பறேன் ஒத்து வந்துச்சுனா முடிச்சிக்கலாம்னு சொன்னா. உனக்கு புடிச்சியிருக்கா?”

அம்மா நீயே என் தெய்வம். உனக்கு கண்டிப்பாக கோவில் கட்டணும்.

“ஆமாம். அந்த பொண்ண இவன் “பே”னு பாத்தததான் கல்யாண மண்டபத்துல எல்லாரும் பாத்தாங்களே” அக்கா நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள்.
இதுக்குத்தான் அப்ப இருந்து இப்படி நக்கலா சிரிச்சிக்கிட்டே இருந்தாளா?

“என்ன கேக்காம எப்படி நீங்க ஜாதகம் பத்தியெல்லாம் பேசலாம்” கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன்.

“சரி. அவனுக்கு பிடிக்கலயாம். வேணாம்னு சொல்லிடுங்கம்மா” அக்கா ரொம்ப அக்கறையாக பேசினாள்.

“அதில்லமா… ஜாதகம் எல்லாம் மூட நம்பிக்கை. அது பாக்க வேணாம்னு சொன்னேன்” நான் வழிந்து கொண்டே சொன்னதை பார்த்து அம்மாவும், அக்காவும் சிரித்தனர்.

115 பதில்கள்

  1. ஆஹா ! அவினாசிலிங்கம், அண்ணபூர்ணா !
    அலைநீளம் சரியா வேலை செய்யுது.
    அப்படியே R.S.PURAM, CROSSCUT ROAD எல்லாம்
    போட்டிருந்தீங்கன்னா அப்படியே உயிர் வந்திருக்கும்.

    ஆமா!அவினாசிலிங்கம் எப்பங்க இஞ்சினீரிங் ஆச்சு!

  2. //ஆஹா ! அவினாசிலிங்கம், அண்ணபூர்ணா !
    அலைநீளம் சரியா வேலை செய்யுது.
    அப்படியே R.S.PURAM, CROSSCUT ROAD எல்லாம்
    போட்டிருந்தீங்கன்னா அப்படியே உயிர் வந்திருக்கும்.
    //
    நான் அந்த அண்ணபூர்ணால சாப்பிட்டிருக்கேன் 😉

    கல்யாண மண்டபம் எதுவும் ஞாபகமில்ல. 4 வருஷம் படிச்சேன் ஒரு கல்யாணம் கூட போனதில்ல. அதனால கரெக்ட்டா சொல்ல முடியல 😉

    அவினாசிலிங்கம் டீம்டு யுனிவர்சிட்டி. இஞ்சினியரிங் அங்க இருக்குங்க 😉

  3. பாபாஜி,

    கல்யாணத்துக்கு நீ வரமாட்டேன்னு ஓவரா அடம்பிடிக்குபோதே நினைச்சேன். எப்படியும் அங்க ஒரு ஜிகிடி இருக்கும் அது உன்னமயக்கும் இல்ல நீ அத மயக்குவேன்னு. கடைசில பாத்தா ரெண்டுமே இல்ல.

    ரொம்ப அருமையா இருந்தது படிக்க!

    கலக்கிட்டபோ!

  4. பாபாஜி,

    கல்யாணத்துக்கு நீ வரமாட்டேன்னு ஓவரா அடம்பிடிக்குபோதே நினைச்சேன். எப்படியும் அங்க ஒரு ஜிகிடி இருக்கும் அது உன்னமயக்கும் இல்ல நீ அத மயக்குவேன்னு. கடைசில பாத்தா ரெண்டுமே இல்ல.

    ரொம்ப அருமையா இருந்தது படிக்க!

    கலக்கிட்டபோ!

  5. நல்ல ஜாலியான கதை வெட்டி..’feel good’ படம் பார்க்கற மாதிரி..கலக்கல்!

    //பின்னூட்டமிட நேரமிருந்தால் நிறை – குறைகளை சொல்லவும்//

    ஏற்கனவே சொல்லியாச்சு 😀

  6. // தம்பி said…
    பாபாஜி,

    கல்யாணத்துக்கு நீ வரமாட்டேன்னு ஓவரா அடம்பிடிக்குபோதே நினைச்சேன். எப்படியும் அங்க ஒரு ஜிகிடி இருக்கும் அது உன்னமயக்கும் இல்ல நீ அத மயக்குவேன்னு. கடைசில பாத்தா ரெண்டுமே இல்ல.
    //
    தம்பி,
    நான் அடம்பிடிச்சனா??? அது நான் இல்ல… “கிருஷ்ணா” புரியுதா?

    எல்லா கதைக்கும் நம்மளையே மாட்டிவுடறாங்கப்பா!!!

    அப்பறம் கிருஷ்ணா அந்த பொண்ணு பாத்து மயங்கிட்டான்னுதான் நினைக்கிறேன் 😉

    //
    ரொம்ப அருமையா இருந்தது படிக்க!

    கலக்கிட்டபோ!

    //
    மிக்க நன்றி

  7. //நல்ல ஜாலியான கதை வெட்டி..’feel good’ படம் பார்க்கற மாதிரி..கலக்கல்!
    //
    கப்பி,
    மிக்க நன்றி

  8. தல சூப்பர் கதை. பேசாம இன்போசிஸ்ஸ விட்டுட்டு படம் எடுக்க வந்துருங்க. சத்தியமா சூப்பர் படம்லாம் எடுப்பீங்க.

    //ஓ!!! பரவாயில்ல… அப்பவே நம்ம வெயிட்டு காமிச்சிட்டோம். மனதிற்குள் ஒரு சந்தோஷம்.//

    //அம்மா அக்கறையாக வழியனுப்ப வந்தாங்கனு பாத்தேன்… இல்ல மொய்கணக்க எப்படியாவது சரி பண்ணனும் வந்துருக்காங்க//

    //ஆமாம். இதுக்கு போய் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவாங்களா? தெரியாம ஏதாவது சின்னதா பண்ணியிருந்தா பரவாயில்ல. தண்ணி காயறதுக்கு அடுப்பாங்கறைல வெச்சிருந்த விறகு கட்டய எடுத்துட்டு வந்து வெச்சிருக்கீங்க”//

    //சின்ன வயசுல எல்லாம் என்ன கரிகால சோழன் மாதிரி இவ கரிக்கை சோழினு//

    //அவங்க வீட்டுக்காரர் உனக்கு அண்ணன் முறை ஆகறாரு”

    “என்னது? அண்ணனா? அவர் வயசு என்ன? என் வயசு என்ன? இப்ப உண்மைய சொல்லல உன் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது தலைல ப்ளேடு பொட்டுடுவன். ஆமாம்”//

    இந்த டயலாக்குகளுக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தேன். இவ்ளோ நாள் நம்ம கார்ப்பரேட் கதையா குடுத்தீங்க. இப்ப கல்யாணக் கதையா? அருமையா இருந்துச்சு.

  9. அமுதன் said…
    //தல சூப்பர் கதை. பேசாம இன்போசிஸ்ஸ விட்டுட்டு படம் எடுக்க வந்துருங்க. சத்தியமா சூப்பர் படம்லாம் எடுப்பீங்க.
    //
    அமுதா,
    பாசத்திற்கு நன்றி…
    சினிமா எல்லாம் நாம நினைக்கிற மாதிரி சாதரண விஷயம் இல்லப்பா… நம்ம போர் அடிக்குதேனு கதை எழுதற ஆளுங்க. நமக்கு ctrl-c, ctrl-v போதும்.

    //இந்த டயலாக்குகளுக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தேன். இவ்ளோ நாள் நம்ம கார்ப்பரேட் கதையா குடுத்தீங்க. இப்ப கல்யாணக் கதையா? அருமையா இருந்துச்சு.
    //
    ஒரே மாதிரி எழுதனா போர் அடிக்கும். அதனாலதான் அடுத்த லெவலுக்கு வந்துட்டேன். கார்ப்பரேட் கதையும் வரும்.

    விளக்கமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

  10. mmm Antha Annapoornala mathiyana neram sappida poganum….evlo poonuga. azagau azaga…mmm coimbatore coimbatore than..Kathai nalla irunthuthu..

  11. கதை நல்லா இருக்குங்க.

    /எங்க காலேஜ் முன்னாடி ஒரு அண்ணபூர்ணா இருக்கு அங்க வேணும்னா ரெண்டு பேரும் சாப்பிடலாமா?”
    /
    அவினாசிலிங்கம் Engineering College ஒரு காட்டுக்குள்ள இருக்குது. அங்க ஒரு Hotel கூட கிடையாதே.

    அருணா ரொம்ப பொய் சொல்றா, கிருஸ்ணாவ பார்த்து பழக சொல்லுங்க. :-))

  12. //Akil S Poonkundran said…
    mmm Antha Annapoornala mathiyana neram sappida poganum….evlo poonuga. azagau azaga…mmm coimbatore coimbatore than..//
    நான் லீவ் நாள்ல போனேன் 😦

    //Kathai nalla irunthuthu..
    //
    மிக்க நன்றி

  13. // குறும்பன் said…
    கதை நல்லா இருக்குங்க.
    //
    மிக்க நன்றி குறும்பரே

    //
    /எங்க காலேஜ் முன்னாடி ஒரு அண்ணபூர்ணா இருக்கு அங்க வேணும்னா ரெண்டு பேரும் சாப்பிடலாமா?”
    /
    அவினாசிலிங்கம் Engineering College ஒரு காட்டுக்குள்ள இருக்குது. அங்க ஒரு Hotel கூட கிடையாதே.

    அருணா ரொம்ப பொய் சொல்றா, கிருஸ்ணாவ பார்த்து பழக சொல்லுங்க. :-))

    //
    அவினாசிலிங்கம் இஞ்சினியரிங் காலேஜிம் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் பக்கத்துலத்தானே இருக்குது :-/

  14. கதை நன்றாக உள்ளது

  15. கதை சூப்பர் பாலாஜி.மிக இயல்பாக எந்த செயற்கைதனமுமின்றி மிக அழகாக சென்றது.பாராட்டுக்கள்

  16. ஆமாங்க குறும்பன் நீங்க சொன்னது கரெக்ட்தான். நான் ரெண்டும் ஒன்னா இருக்கும்னு நெனச்சிட்டேன்…

    இப்ப மாத்தியாச்சு…

    ஆமாம்… அது பொண்ணுங்க காலேஜாச்சே!!! அந்த இடத்த எல்லாம் கரெக்டா தெரிஞ்சி வெச்சிருக்கீங்க… ஏதாவது குறும்புத்தனம் பண்ணிங்களா? 😉

  17. ENNAR said…
    //கதை நன்றாக உள்ளது //
    மிக்க நன்றி…

    நட்சத்திரம் இங்கே வந்து மின்னியதற்கு நன்றி

    Udhayakumar said…
    //சூப்பர்!!!!!!!! //

    மிக்க நன்றி உதய்

  18. செல்வன் said…
    //கதை சூப்பர் பாலாஜி.மிக இயல்பாக எந்த செயற்கைதனமுமின்றி மிக அழகாக சென்றது.பாராட்டுக்கள்
    //
    மிக்க நன்றி செல்வன். உங்களுடைய பின்னூட்டத்தைத்தான் ஆர்வமாக எதிர்பார்த்து இருந்தேன்…

  19. அமானுஷ்ய ஆவி said…
    //உள்ளாறும் ஆறியதா? //

    புண்ணு எப்பயோ ஆறிடுச்சு… வடுதான் ஆறாம இருந்துச்சு…

    இப்ப அதுவும் ஆறிடுச்சு 😉

  20. அவினாசிலிங்கம் காலேஜுக்கு நேர் பின்னாடிதான் எங்க காலேஜ். நானெல்லாம் அந்தப் பக்கம் போனதே கிடையாது. நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க 🙂

  21. //Udhayakumar said…
    அவினாசிலிங்கம் காலேஜுக்கு நேர் பின்னாடிதான் எங்க காலேஜ். நானெல்லாம் அந்தப் பக்கம் போனதே கிடையாது. நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க 🙂
    //

    நம்பிட்டேன்…
    நீங்களும் கோவைலதான் படிச்சீங்களா???

    உங்க கதைல நக்கல் கொஞ்சம் தூக்கலா இருக்கும் போதே கவனிச்சிருக்கனும்… மிஸ் பண்ணிட்டேன்.

  22. //வீட்ல இருக்குற பொண்ணு பேற சொல்லிதான் எல்லாம் சொல்லுவாங்க. அவளுக்கு தான் கல்யாணமாகி மாமியார் விட்டுக்கு போயிட்டா இல்ல. இனியாவது கிருஷ்ணா அம்மானு சொன்னா என்ன?
    இந்த மாதிரி யார் சொன்னாலும் எனக்கு அவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும்.//

    ஆகா..நீங்க நம்ம செட்டு. அது சரி இனம் இனத்தோடு தானே சேரும் 🙂

    கதை சூப்பர் பாலாஜி! இன்னாக் கொஞ்சம் எக்ஸ்ப்ரஸ் வேகம்! கனவு சீன்-ல்லாம் கிடையாதா?

    //கரிக்கை சோழி//
    திரைக்கதைக்கு தயாராவுறீங்களோ? வசனமெல்லாம் பின்னறீங்க?

  23. //தீயினால் சுட்ட புண்//
    இது புரியுது!

    நாவினால் சுட்ட வடு
    -இது என்னா?
    -கமல் டெக்னிக்??? முத்தமா…oops..சாரி மொத்தமா சொல்லுங்களேன்பா! சென்சார் எல்லாம் எதுக்கு? 🙂

    “சில்லுன்னு ஒரு காதல்” ன்னு உங்க கதையையும் சொல்லலாம் போல கீதே?

  24. kannabiran, RAVI SHANKAR (KRS) said…
    //ஆகா..நீங்க நம்ம செட்டு. அது சரி இனம் இனத்தோடு தானே சேரும் 🙂
    //
    ஆமாங்க KRS… இதுல ஒரு கொடும என்னானா, என்கிட்டயே வந்து ப்ரியா அம்மா (எங்க அக்கா பேர்) இருக்காங்களா?னு கேப்பாங்க. எனக்கு கோபம் வரும் பாருங்க!!! ப்ரியா அம்மா எல்லாம் இல்ல. பாலாஜி அம்மாதான் இருக்காங்கனு சொல்லிடுவேன்.

    //
    கதை சூப்பர் பாலாஜி! இன்னாக் கொஞ்சம் எக்ஸ்ப்ரஸ் வேகம்! கனவு சீன்-ல்லாம் கிடையாதா?
    //
    கனவு சீனெல்லாம் படத்துலதான்…
    நம்ம கதைல அதெல்லாம் நல்லா வராதுங்க… வேணும்னா அடுத்த கதைல முயற்சி பண்ணி பாக்கலாம்.

    //
    //கரிக்கை சோழி//
    திரைக்கதைக்கு தயாராவுறீங்களோ? வசனமெல்லாம் பின்னறீங்க?
    //
    எல்லாம் சும்மா தோன்றதுதான்…

  25. kannabiran, RAVI SHANKAR (KRS) said…
    //நாவினால் சுட்ட வடு
    -இது என்னா?
    -கமல் டெக்னிக்??? முத்தமா…oops..சாரி மொத்தமா சொல்லுங்களேன்பா! சென்சார் எல்லாம் எதுக்கு? 🙂
    //
    தீயினால் சுட்ட வடுனுதான் பேர் வெச்சிருக்கனும்… தப்பா வெச்சிட்டேன்… மாத்தனா தமிழ்மணத்துல பிரச்சனைனு விட்டுட்டேன் 😉

    கமல் ஸ்டைல்ல எல்லாம் வெக்கறதுக்கு இன்னும் வளரல 😉

    //”சில்லுன்னு ஒரு காதல்” ன்னு உங்க கதையையும் சொல்லலாம் போல கீதே? //
    ஏனுங்க “சில்லுன்னு ஒரு காதல்” கடியா இருக்குனு கேள்விப்பட்டேன்… நீங்க என்னனா நம்ம கதைய இப்படி சொல்லிட்டீங்களே 😦

  26. சில்லென்று ஒரு கதை. நல்லா இருந்தது.

    ஹோம்சயின்ஸ், பிரிக்கால்னு எழுதி மனச தொட்டுட்டீங்க போங்க.

    உதய் GCTன்னு நெனக்கிறேன்..

    அவினாசிலிங்கத்துல இன்ஜினியரிங் காலேஜ் இருக்குதா?
    //இத்த ‘என்னது காந்தி செத்துட்டாரா’ ஸ்டைலில் படிக்கவும் :)) //

    அடங்கொக்கமக்கா…, ஊரே மாறிட்டாப்புல இருக்கு.

  27. பெத்த ராயுடு said…
    //சில்லென்று ஒரு கதை. நல்லா இருந்தது.
    //
    மிக்க நன்றி ராயுடு.

    //
    ஹோம்சயின்ஸ், பிரிக்கால்னு எழுதி மனச தொட்டுட்டீங்க போங்க.
    //
    எங்க போனாலும் காலேஜ் படிச்ச ஊர மறக்க முடியுமா?

    //அவினாசிலிங்கத்துல இன்ஜினியரிங் காலேஜ் இருக்குதா?
    //இத்த ‘என்னது காந்தி செத்துட்டாரா’ ஸ்டைலில் படிக்கவும் :)) //
    //
    :-))

    //
    அடங்கொக்கமக்கா…, ஊரே மாறிட்டாப்புல இருக்கு.
    //
    ஆமாம்… இல்லையா பின்ன…
    இப்ப வேற TCS, Wiproக்கு எல்லாம் கலைஞர் நிலம் கொடுத்துருக்காராம் 🙂

  28. எந்த கல்லுரி பாலாஜி

    பூ.சோ.காவா?(P.S.G TECH?)

  29. அனானி,
    அந்த அளவுக்கு எல்லாம் நாம கட் ஆப் எடுக்கல…

    Sri Ramakrishna Engineering Collegeனு துடியலூர் பக்கத்துல ஒரு காலேஜ் இருக்கு… நான் குப்ப கொட்னது அங்க தான் 😉

  30. கல்யாணத்தை குறி வைத்து சென்ற காதல் கதை. உரையாடல் இயல்பாக இருந்தது. ரசித்தேன். குறிப்பாக ‘கரிக்கை சோழி’.

    உங்கள் கதையில் வருவது மேட்டுப்பாளயம் சாலையில் இருக்கும் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியா? அங்கொரு அண்ணப்பூர்ணா இப்போது இருக்கிறதா?

    நான் GCT யில் படித்தபோது (1979) இந்தக் கல்லூரி இருந்தது. ஆனால் அண்ணாப்பூர்ணா உணவகம் இருந்த நினைவு இல்லை.

    உங்கள் கதை பழைய ஞாபகங்களக் கிளறிவிட்டுவிட்டது. நன்றி.

  31. –எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான்–

    எப்படி இப்படியெல்லாம்??? 😉

    அப்புறம் அருணைக் காலேஜுக்கு அனுப்பாம ரெண்டு பேரும் சேர்ந்து கற்பகம் காம்ப்ளெக்சில “கஜினி” பார்த்ததா பட்சி சொல்லுதே…உண்மையோ??

    Good one.ரசித்துப் படித்தேன்.

  32. hi vets

    story romba nalla irundhuchu,krishna = karthik’ayum ,aruna = revathy’ayum charactersuku fix panni storya padithen, it was great. innum niraivana kathaigal ezhutha en vazhthukkal.

  33. ஓகை said…
    //கல்யாணத்தை குறி வைத்து சென்ற காதல் கதை. உரையாடல் இயல்பாக இருந்தது. ரசித்தேன். குறிப்பாக ‘கரிக்கை சோழி’.
    //
    மிக்க நன்றி

    //
    உங்கள் கதையில் வருவது மேட்டுப்பாளயம் சாலையில் இருக்கும் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியா? அங்கொரு அண்ணப்பூர்ணா இப்போது இருக்கிறதா?

    நான் GCT யில் படித்தபோது (1979) இந்தக் கல்லூரி இருந்தது. ஆனால் அண்ணாப்பூர்ணா உணவகம் இருந்த நினைவு இல்லை.
    //
    ஆமாம் இப்போது அங்கே அன்னப்பூர்ணா உணவகம் இருக்குறது.

  34. nallla iruku thalaippum ..thithikkudhey yum …but mudivil neeenga innum kurumbu panni irukalamo nu thonudhu..any way nan nall enjoy panninane story a..balaji ungalukku naalllevy kadhai eludha varudhu kalakal .valthukkal..nan eludhradhai niruthitane

  35. சுதர்சன்.கோபால் said…
    //–எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான்–

    எப்படி இப்படியெல்லாம்??? 😉
    //
    எல்லாம் சும்மா தோன்றதுதான்… எனக்கு நல்ல நாளே யார் யார் என்ன சொந்தம்னே தெரியாது :))

    //
    அப்புறம் அருணைக் காலேஜுக்கு அனுப்பாம ரெண்டு பேரும் சேர்ந்து கற்பகம் காம்ப்ளெக்சில “கஜினி” பார்த்ததா பட்சி சொல்லுதே…உண்மையோ??
    //
    இருக்கலாம்… என்ஜாய் பண்ணட்டும் விடுங்க…

    //
    Good one.ரசித்துப் படித்தேன்.
    //
    மிக்க நன்றி!!! தொடர்ந்து படிக்கவும்!

  36. yogen said…
    //
    hi vets

    story romba nalla irundhuchu,krishna = karthik’ayum ,aruna = revathy’ayum charactersuku fix panni storya padithen, it was great. innum niraivana kathaigal ezhutha en vazhthukkal.
    //

    மிக்க நன்றி யோகன் அவர்களே!
    முடிந்த வரையில் எழுதுகிறேன்!!!

  37. கார்த்திக் பிரபு said…
    //
    nallla iruku thalaippum ..thithikkudhey yum …
    //
    மிக்க நன்றி கார்த்திக்

    //
    but mudivil neeenga innum kurumbu panni irukalamo nu thonudhu..
    //
    கதை ஏற்கனவே பெருசாயிட்ட மாதிரி தோனுச்சு… அதனால முடிச்சிட்டேன்… தேதி 18 ஆகிடுச்சு இல்ல 😉

    //
    any way nan nall enjoy panninane story a..balaji ungalukku naalllevy kadhai eludha varudhu kalakal .valthukkal..
    //
    மிக்க நன்றி. நான் கதை எழுத போறன்னு சொன்னப்ப என் ஃபிரெண்ட் ஒருத்தவங்க விழுந்து விழுந்து சிரிச்சாங்க 😉

    //nan eludhradhai niruthitane //
    ஏன் திடீர்னு இந்த முடிவு???

  38. //அந்த அளவுக்கு எல்லாம் நாம கட் ஆப் எடுக்கல…//

    அப்போ ஆப்ல ஒரு கட்டிங் போடுங்க எல்லாம் சரியாகிடும்!:))

  39. // தம்பி said…
    //அந்த அளவுக்கு எல்லாம் நாம கட் ஆப் எடுக்கல…//

    அப்போ ஆப்ல ஒரு கட்டிங் போடுங்க எல்லாம் சரியாகிடும்!:))
    //

    தம்பி,
    இப்ப ஃபீல் பண்ணி ஒண்ணும் ஆக போறது இல்ல…

    அதுவும் இல்லாம காலேஜ்ல நல்லா என்ஜாய் பண்ணியாச்சு… அப்பறம் எதுக்கு ஃபீல் பண்ணனும் 😉

  40. வெட்டி, மிகப் பிரமாதம். நன்றாக இருக்கிறது. இவ்வளவு இயல்பாக எழுத எங்க கத்துக்கிட்ட? லேசா பொறாமையாவும் இருக்கு. ஆனா கெட்ட எண்ணத்துல இல்ல. இயல்பா கதை சொல்ல இது நல்ல முறை.

    கரிக்கைச் சோழி, அருண்-அருணா, தூக்கம் வர்ர ஐட்டங்கள், இன்னும் இன்னும் பல முந்திரிப் பருப்புகளை ருசித்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

    மொத வேலையா….டேட்டாபேஸ்ல இருந்து உன்னோட வீட்டு நம்பர எடுத்து….நடக்குறச் சொல்லி….கலியாணத்துக்கு ஏற்பாடு செய்யனும். செஞ்சிர்ரேன்.

  41. G.Ragavan said…
    //
    வெட்டி, மிகப் பிரமாதம். நன்றாக இருக்கிறது. //
    மிக்க நன்றி தலைவா… போன கதை நிறைய பேருக்கு புரியாம போனதால எடுத்த முயற்சிதான் இது.

    //இவ்வளவு இயல்பாக எழுத எங்க கத்துக்கிட்ட? லேசா பொறாமையாவும் இருக்கு. ஆனா கெட்ட எண்ணத்துல இல்ல. இயல்பா கதை சொல்ல இது நல்ல முறை.
    //
    எல்லாம் ஒரு முயற்சிதான். நமக்கு என்ன வரும்னு நமேக்கே தெரியாது.

    நீங்க சொல்லித்தான் தெரியனுமா? உங்களுக்கு பெரிய மனசுங்கறதால இப்படி சொல்றீங்க. எனக்கு புரியுது.

    //கரிக்கைச் சோழி, அருண்-அருணா, தூக்கம் வர்ர ஐட்டங்கள், இன்னும் இன்னும் பல முந்திரிப் பருப்புகளை ருசித்தேன். மிகவும் சுவையாக இருந்தது.
    //
    மிக்க நன்றி… எல்லாத்தையும் கவனிச்சிருக்கீங்க.

    “அருண்-அருணா” ரொம்ப யோசித்து வைத்தது. ஒரு பேர் கூட நியாபகத்துக்கு வரல 😦
    (ஆர்க்குட்ல எல்லாம் தேடினேன்னா பாத்துக்கோங்க 😉 )

    //மொத வேலையா….டேட்டாபேஸ்ல இருந்து உன்னோட வீட்டு நம்பர எடுத்து….நடக்குறச் சொல்லி….கலியாணத்துக்கு ஏற்பாடு செய்யனும். செஞ்சிர்ரேன்//
    என்ன பேச்சு இது??? இங்க அப்படி என்ன நடக்குது? நான் ரொம்ப சின்ன பையன்… காலேஜ் முடிச்சே மூணு வருஷம்தான் ஆகுது.

    முதல்ல உங்க வீட்டு நம்பரை கண்டு பிடிக்கணும்னு இங்க பக்கத்துல ஒரு ஆள் சொல்லிட்டு இருக்காரு (வேலவன் பெயர் கொண்டவர் ;))

  42. hai பாலாஜி,

    பொதுவாகவே சினிமாவில்(real kalyaana veedum than) வரும் கல்யாண கலாட்டா எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். So இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது!

    இயல்பான நடை கதையில்,கூடவே நல்ல நகைச்சுவை யும் -simply superb!

    வாழ்த்துக்கள்.

    சிவ சுப்பிரமணியன்.

  43. vnsmanian said…
    //இயல்பான நடை கதையில்,கூடவே நல்ல நகைச்சுவை யும் -simply superb!

    வாழ்த்துக்கள்.

    சிவ சுப்பிரமணியன்.
    //
    மிக்க நன்றி சிவா…

  44. //அமுதா,
    பாசத்திற்கு நன்றி…
    சினிமா எல்லாம் நாம நினைக்கிற மாதிரி சாதரண விஷயம் இல்லப்பா… நம்ம போர் அடிக்குதேனு கதை எழுதற ஆளுங்க. நமக்கு cட்ர்ல்-c, cட்ர்ல்-வ் போதும்.//

    கரிக்கை சோழி, என்னது அண்ணனா?
    போன்றவை உங்களுடைய கற்பனைகளாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அட்லீஸ்ட் ஒரு காமெடி குறும்படமாவது எடுக்கலாம் தல.

    சோம்பேறி பையன் நம்ம கதைக்கு விமர்சனம் குடுத்ருக்கார். பாத்தீங்களா? உங்க பின்னூட்டத்த தான் ரசிக்கத்தக்க பின்னூட்டமாக குறிப்பிட்டிருக்கிறார். 🙂

  45. அமுதன் said…
    //கரிக்கை சோழி, என்னது அண்ணனா?
    போன்றவை உங்களுடைய கற்பனைகளாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அட்லீஸ்ட் ஒரு காமெடி குறும்படமாவது எடுக்கலாம்//
    அது நம்ம கற்பனைதான்… ஆனால் நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் திறமை இல்லப்பா 😦

    //
    சோம்பேறி பையன் நம்ம கதைக்கு விமர்சனம் குடுத்ருக்கார்.
    //
    நல்ல மார்க்கும் போட்டுருக்கார்.
    உண்மையிலே கதை நன்றாக இருந்தது. தொடர்ந்து எழுதவும்.

  46. லம்பயீ கரியோ லொவீயா

    ??

  47. தம்பி said…
    //லம்பயீ கரியோ லொவீயா//
    தம்பி,
    என்ன ஆச்சு உனக்கு? ஜிரா பதிவுல போட வேண்டியதை நம்ம பதிவுல போடற!!!

  48. //லம்பயீ கரியோ லொவீயா//

    ப்ரெஞ்ச் நாட்டு பிகர் பேர் மாதிரி இருக்கே யார்கிட்டயாவது இந்த பேர சொல்லி பீட்டர் விடலாமேன்னு போறவழியெல்லாம் சொல்லிகிட்டே போனேன். எல்லாரும் காட்டுவாசிய பாக்கறாமாதிரி பாக்கறாங்கபா வெட்டி!

  49. தம்பி said…
    //
    //லம்பயீ கரியோ லொவீயா//

    ப்ரெஞ்ச் நாட்டு பிகர் பேர் மாதிரி இருக்கே யார்கிட்டயாவது இந்த பேர சொல்லி பீட்டர் விடலாமேன்னு போறவழியெல்லாம் சொல்லிகிட்டே போனேன். எல்லாரும் காட்டுவாசிய பாக்கறாமாதிரி பாக்கறாங்கபா வெட்டி!
    //
    பிரெஞ்ச் பிகர் பேர ஏம்பா போற வழியெல்லாம் சொல்லற??? மனசுக்குள்ள சொல்லிக்கோ 😉

  50. கதை நல்லா இருந்திச்சி பாலாஜி..

  51. சந்தோஷ் said…
    //
    கதை நல்லா இருந்திச்சி பாலாஜி..
    //
    மிக்க நன்றி… சந்தோஷ்

  52. 50 க்கு வாழ்த்துக்கள்!!

    வழக்கம்போல 100 ல் சந்திப்போம்!

  53. // தம்பி said…
    50 க்கு வாழ்த்துக்கள்!!
    //
    நன்றி தம்பி…

    //
    வழக்கம்போல 100 ல் சந்திப்போம்!
    //
    “வழக்கம்போல”னா???

    இதுக்கு முன்னாடி நான் ஒரு தடவ தாம்பா 100 போட்ருக்கேன்… அதுவும் நம்ம கொல்ட்டிக்கு 😉

  54. //இதுக்கு முன்னாடி நான் ஒரு தடவ தாம்பா 100 போட்ருக்கேன்… அதுவும் நம்ம கொல்ட்டிக்கு 😉 //

    ஆராய்ச்சியெல்லாம் பண்ணப்படாது!!

    அப்படியே போட்டு பழக்கமாயிடிச்சி தல!

  55. தம்பி said…
    //
    //இதுக்கு முன்னாடி நான் ஒரு தடவ தாம்பா 100 போட்ருக்கேன்… அதுவும் நம்ம கொல்ட்டிக்கு 😉 //

    ஆராய்ச்சியெல்லாம் பண்ணப்படாது!!
    //
    ஆமாம்… இதுக்கெல்லாம் போய் ஆராய்ச்சி பண்ணுவாங்களா? அதெல்லாம் மனசுல இருந்து தானா வரது 😉

  56. ஏற்கனவே வந்த என்னுடைய கருத்துக்களை அட்டகாசமாக பிரதிபலிக்கும் சில பின்னூட்டங்களை வழிமொழிகிறேன் 🙂

    கப்பி நல்ல ஜாலியான கதை வெட்டி..’feel good’ படம் பார்க்கற மாதிரி..

    அமுதன் பேசாம இன்போசிஸ்ஸ விட்டுட்டு படம் எடுக்க வந்துருங்க. சத்தியமா சூப்பர் படம்லாம் எடுப்பீங்க.

    (சூப்பர் படமோ இல்லையோ… நிச்சயம் சூப்பர் ஹிட் படம் கொடுத்து தயாரிப்பாளரை வாழ வைப்பீர் 😉

    ஓகை ரசித்தேன். குறிப்பாக ‘கரிக்கை சோழி’.

    அடுத்து ஒரு ஸ்க்ரீன்ப்ளே கொடுங்க வி.பி.

  57. // எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான் அவுங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க //

    சகல வீட்டுக்காரரோட என்றால் வேட்டையாடு விளையாடு போலவா ?
    :-)))

  58. Boston Bala said…
    //
    ஏற்கனவே வந்த என்னுடைய கருத்துக்களை அட்டகாசமாக பிரதிபலிக்கும் சில பின்னூட்டங்களை வழிமொழிகிறேன் 🙂
    //
    எனக்கும் பிரச்சனையில்லை… ctrl-c , ctrl-v பண்ணிடுவேன் 😉

    //கப்பி நல்ல ஜாலியான கதை வெட்டி..’feel good’ படம் பார்க்கற மாதிரி..
    //

    மிக்க நன்றி

    //
    அமுதன் பேசாம இன்போசிஸ்ஸ விட்டுட்டு படம் எடுக்க வந்துருங்க. சத்தியமா சூப்பர் படம்லாம் எடுப்பீங்க.

    (சூப்பர் படமோ இல்லையோ… நிச்சயம் சூப்பர் ஹிட் படம் கொடுத்து தயாரிப்பாளரை வாழ வைப்பீர் 😉
    //
    பாசத்திற்கு (உள்குத்திற்கும் ;)) நன்றி…
    சினிமா எல்லாம் நாம நினைக்கிற மாதிரி சாதரண விஷயம் இல்லப்பா… நம்ம போர் அடிக்குதேனு கதை எழுதற ஆளுங்க. நமக்கு ctrl-c, ctrl-v போதும்.

    //
    ஓகை ரசித்தேன். குறிப்பாக ‘கரிக்கை சோழி’.
    //
    மிக்க நன்றி

    //
    அடுத்து ஒரு ஸ்க்ரீன்ப்ளே கொடுங்க வி.பி.
    //
    நீங்க கேட்டு கொடுக்காமா போயிடுவனா? ஒரு வாரம் போகட்டும்.

  59. லதா said…
    //
    // எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான் அவுங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க //

    சகல வீட்டுக்காரரோட என்றால் வேட்டையாடு விளையாடு போலவா ?
    :-)))
    //
    ஏனுங்க அவுங்க என்ன உண்மையான சொந்தத்தையா சொன்னாங்க??? அது கிருஷ்ணாவ நக்கல் பண்ண அவுங்க சொன்ன டயலாக். அவுங்களும் கிருஷ்ணாவுமே கவனிக்காத போது நமக்கு எதுக்கு??? 😉

    இதெல்லாம் ஆராயக்கூடாது… ஆமா சொல்லிட்டேன். :))

  60. இதுவும் யூகிக்க முடிகிற முடிவுதான். என்னுடைய தீமும் இதுவே, வித்தியாசமான நடையில், இங்கே. கல்யாணவீட்டைக் கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  61. //எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான் அவுங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க//

    தல என்ன உறவு நான் கண்டுபிச்சிட்டேன்.

    நீங்க சொல்லுங்க பாப்போம்.

    இப்படிக்கு,
    மேக்ரோமண்டையன்.

  62. நெல்லை சிவா said…
    //
    இதுவும் யூகிக்க முடிகிற முடிவுதான்.
    என்னுடைய தீமும் இதுவே, வித்தியாசமான நடையில், இங்கே.
    //
    சிவா,
    நான் சொன்னத தப்பா எடுத்துக்கிட்டீங்கனு நினைக்கிறேன். உங்க கதைல ரெண்டு பொண்ணுங்க இருப்பாங்கனு எல்லாரும் நினைத்து ரெண்டும் ஒண்ணுதான்னு சொல்ற மாதிரி இருந்துச்சு. அதனாலத்தான் அப்படி சொன்னேன்.

    மத்தபடி உங்க கதை அருமையா இருந்துச்சு. அதைத்தான் அங்கயே சொல்லிட்டேனே!

    //கல்யாணவீட்டைக் கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
    //
    மிக்க நன்றி

  63. //
    மேக்ரோமண்டையன் said…
    //எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான் அவுங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க//

    தல என்ன உறவு நான் கண்டுபிச்சிட்டேன்.

    நீங்க சொல்லுங்க பாப்போம்.

    இப்படிக்கு,
    மேக்ரோமண்டையன்.
    //
    மேக்ரோ,
    அந்த உறவுலத்தான் ஒரு தப்பு இருக்குனு லதா சொல்லிட்டாங்க இல்ல… அப்பறம் என்ன லந்து வேண்டியிருக்கு?

    அது சும்மா வெறுப்பேத்தறதுக்காக சொன்னது 😉

  64. //சகல விட்டுக்காரரோட//

    இதுதான் அந்த தப்பு .

    இப்படிக்கு,
    மேக்ரோமண்டையன்

  65. //
    மேக்ரோமண்டையன் said…
    //சகல விட்டுக்காரரோட//

    இதுதான் அந்த தப்பு .

    இப்படிக்கு,
    மேக்ரோமண்டையன்
    //
    மேக்ரோ,
    அதத்தான் லதா மேல சொல்லிட்டாங்களே! போட்டிக்கு அனுப்பன கதைய மாத்தக்கூடாது. அதனால மாத்தல.

    அதுவும் இல்லாம அது சும்மா வெறுப்பேத்த வேகமா சொன்னது. தப்பு இருக்கறதும் அதுக்கு பலம் தான் 😉

  66. /எங்க மாமனாரோட தங்கச்சி(சித்தி) விட்டுக்காரோரோட(சித்தப்பா) தம்பியோட(சித்தப்பா) சகல(சித்தப்பா) விட்டுக்காரரோட(இது தவறு இல்லாமல் இருந்தால்) தங்கச்சியோட(அத்தை) பொண்ணுட(அண்ணி or மதினி) பையனைத்தான்(மகன்) அவுங்க(மருமகள்) கல்யாணம் பண்ணியிருக்காங்க//
    அதாவது கிருஷ்ணாவுக்கு அருணா பேத்தி…..ஹி…ஹி

    எங்க மாமனாரோட தங்கச்சி(சித்தி) விட்டுக்காரோரோட(சித்தப்பா) தம்பியோட(சித்தப்பா) சகல(சித்தப்பா) விட்டுக்காரரோட(இது தவறு வீட்டுக்காரி(சித்தி)் என்று இருந்தால்) தங்கச்சியோட(சித்தி) பொண்ணுட(தமக்கை) பையனைத்தான்(மருமகன்) அவுங்க(மகள்) கல்யாணம் பண்ணியிருக்காங்க
    அதாவது கிருஷ்ணாவுக்கு அருணா திரும்பவும் பேத்தி…..ஹி…ஹி

    இப்படிக்கு,
    மேக்ரோமண்டையன்.

    (கடி எப்படி)

  67. மேக்ரோமண்டையன் said…
    //
    /எங்க மாமனாரோட தங்கச்சி(சித்தி) விட்டுக்காரோரோட(சித்தப்பா) தம்பியோட(சித்தப்பா) சகல(சித்தப்பா) விட்டுக்காரரோட(இது தவறு இல்லாமல் இருந்தால்) தங்கச்சியோட(அத்தை) பொண்ணுட(அண்ணி or மதினி) பையனைத்தான்(மகன்) அவுங்க(மருமகள்) கல்யாணம் பண்ணியிருக்காங்க//
    அதாவது கிருஷ்ணாவுக்கு அருணா பேத்தி…..ஹி…ஹி

    எங்க மாமனாரோட தங்கச்சி(சித்தி) விட்டுக்காரோரோட(சித்தப்பா) தம்பியோட(சித்தப்பா) சகல(சித்தப்பா) விட்டுக்காரரோட(இது தவறு வீட்டுக்காரி(சித்தி)் என்று இருந்தால்) தங்கச்சியோட(சித்தி) பொண்ணுட(தமக்கை) பையனைத்தான்(மருமகன்) அவுங்க(மகள்) கல்யாணம் பண்ணியிருக்காங்க
    அதாவது கிருஷ்ணாவுக்கு அருணா திரும்பவும் பேத்தி…..ஹி…ஹி

    இப்படிக்கு,
    மேக்ரோமண்டையன்.

    (கடி எப்படி)
    //
    தெய்வமே!!! நீ எங்கப்பா இருக்க???
    உன் கால காட்டு!!!

    இவ்வளவு திறமைய வெச்சிக்கிட்டு நீ அனானிய இருக்க… ஒண்ணும் தெரியாத நானெல்லாம் ப்ளாக் எழுதறேன்… இதத்தான் கலிகாலம்னு சொல்லுவாங்க!!!

  68. ரெம்ப நல்ல கதைங்க. எளிய நிகழ்வுன்னாலும் அருமையா கொண்டுபோயிருக்கீங்க.

    🙂

  69. சிறில் அலெக்ஸ் said…
    //
    ரெம்ப நல்ல கதைங்க. எளிய நிகழ்வுன்னாலும் அருமையா கொண்டுபோயிருக்கீங்க.

    🙂
    //
    மிக்க நன்றி அலெக்ஸ்!!!

  70. புண்ணு இன்னும் ஆறலியா?

    அட மேக்ரோமண்டையன், என்னப்ப ரொம்பநாளா ஆளையே காணும். பேத்தின்னு சரியா கண்டுபுடிச்ச நீங்க இனிமே மேக்ரோ இல்ல மெகா!:))

  71. தம்பி said…
    //
    புண்ணு இன்னும் ஆறலியா?
    //
    தம்பி,
    16-17 வருசமா ஆறாம இருக்குமா? அதுதான் சொன்னேன் இல்ல “தீயினால் சுட்ட வடு”ன்னு பேர் வெச்சியிருக்கனும்னு…

    //
    அட மேக்ரோமண்டையன், என்னப்ப ரொம்பநாளா ஆளையே காணும். பேத்தின்னு சரியா கண்டுபுடிச்ச நீங்க இனிமே மேக்ரோ இல்ல மெகா!:))
    //
    மேக்ரோ ஆஸ்திரேலியால இருக்கு… நாளக்கு பதில் சொல்லும் 😉

  72. i am having some font problem that I can read your post. I can read only the comments in tamil. anything changed recently?

  73. I can not view your posing. I can only see the comments. any font problem. anything changed recently?
    pl explain. thanks rama

  74. rama said…
    //
    I can not view your posing. I can only see the comments. any font problem. anything changed recently?
    //
    no… I didnt change anything in my template.

    If you are using IE, please Set ur View->Encoding as Unicode.

    I beleive there wont be any problem if you view it in Firefox.

    If u still have any issues please let me know.

    Regards,
    Balaji

  75. சரி ஜாலியா போச்சு 🙂 நிஜ வாழ்க்கையும் இப்படி இருந்தா… 😉

  76. பொற்கொடி said…
    //
    சரி ஜாலியா போச்சு 🙂
    //
    மிக்க நன்றி… ஜாலிக்காக எழுதன கதைதான் இது!!!

    //
    நிஜ வாழ்க்கையும் இப்படி இருந்தா… 😉
    //
    எது? கொல்லிக்கட்டையால கைய சுடறதா??? 😉 (Just Kidding)

  77. ஹிஹி கரெக்டா பிடிச்சீங்க.. அத தான் நா சொன்னேன்…எத்தன பேருக்கு கிடைக்கும் சொல்லுங்க எதிரிய கொள்ளிக்கட்டையால சுடற வாய்ப்பு :))

  78. பொற்கொடி said…
    //
    ஹிஹி கரெக்டா பிடிச்சீங்க.. அத தான் நா சொன்னேன்…எத்தன பேருக்கு கிடைக்கும் சொல்லுங்க எதிரிய கொள்ளிக்கட்டையால சுடற வாய்ப்பு :))
    //
    ஆஹா!!! எத்தன பேருக்கு கிடைக்கும்ன்றது முக்கியமில்லை…
    எத்தன பேரு இந்த மாதிரி கிளம்பியிருக்கீங்கன்றதுதான் முக்கியம் :-/

    கிருஷ்ணாவ நினைச்சு சந்தோஷப்படாதீங்க. இத்தன வருஷமா பழி வாங்கனும்னு நினச்சிட்டு இருந்த பொண்ணத்தான் அவர் கட்டிக்கப்போறாரு… ஐயோ பாவம்!!!

  79. வெட்டி,
    நல்ல கதை. மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    //ஓ!!! அருண் பையன் இல்லயா? மனசன கொழப்பறதுலயே இருங்க…//

    இந்த வரியைப் படிக்க முன்னர் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்.

  80. //வெற்றி said…
    வெட்டி,
    நல்ல கதை. மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
    //
    மிக்க நன்றி வெற்றி!!!

    //
    //ஓ!!! அருண் பையன் இல்லயா? மனசன கொழப்பறதுலயே இருங்க…//

    இந்த வரியைப் படிக்க முன்னர் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்.
    //
    //
    ஆமாங்க!!! அவன் பையன்னு நெனச்சதாலத்தான் கிருஷ்ணா கூட நெருப்பு வெச்சிட்டான்னு சொன்னதுக்கு சந்தோஷப்பட்டான் 😉

  81. அடடா!! 🙂 கண் முன்னாடி பாத்திரங்கள நடிக்க வெச்சிருக்கீங்க!! சூப்பர்.

    சரவ்.

  82. //Anonymous said…
    அடடா!! 🙂 கண் முன்னாடி பாத்திரங்கள நடிக்க வெச்சிருக்கீங்க!! சூப்பர்.

    சரவ்.
    //
    சரவ்,
    மிக்க நன்றி!!!

  83. நடுவில் இருந்த வேலை பளுவில் இந்தப் பதிவை விட்டிருப்பேன், அதிசய எண்ணுக்கு நன்றி, கதை சூப்பரு, கோவை-யை கதைக்களனா வச்சுருந்ததால நான் ஒரு நனவிடை தோய்ஞ்செந்திரிச்சேன்.

    //ஆமாம் பதினஞ்சு வருஷமா வளராம அப்பு கமல் மாதிரியா இருப்பாங்க?//

    //ஓ!!! பரவாயில்ல… அப்பவே நம்ம வெயிட்டு காமிச்சிட்டோம். மனதிற்குள் ஒரு சந்தோஷம்.//

    உங்க லொள்ளுக்கு அளவில்லாம போச்சு பாலாஜி,

    நானெல்லாம் சின்னப்புள்ளை-ல கூட நல்ல பயலா இருந்துருக்கேன் சே…

    கரிக்கை சோழி – நல்லா இருந்துச்சு, ஆனாலும் அந்த ரெஸ்டாரெண்ட்டில் நடக்கும் உரையாடலில் இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் வச்சுருந்துருக்கலாம், அவசரமா இல்ல பெருசா போயிடுமோன்ற பயமோ?

    அப்படியே “கண்ட நாள் முதல்” படம் பார்த்த திருப்தி

  84. // ராசுக்குட்டி said…
    நடுவில் இருந்த வேலை பளுவில் இந்தப் பதிவை விட்டிருப்பேன், அதிசய எண்ணுக்கு நன்றி, கதை சூப்பரு, கோவை-யை கதைக்களனா வச்சுருந்ததால நான் ஒரு நனவிடை தோய்ஞ்செந்திரிச்சேன்
    //
    மிக்க நன்றி ராசுக்குட்டி.

    போன முறை கோகோ பண்ண விளம்பரம் ரொம்ப பிடிச்சு போய் தான் நாமளும் அந்த மாதிரி ஏதாவது பண்ணனும்னு அதிசய எண் ஐடியா வந்துச்சு!!!

    //
    உங்க லொள்ளுக்கு அளவில்லாம போச்சு பாலாஜி,

    நானெல்லாம் சின்னப்புள்ளை-ல கூட நல்ல பயலா இருந்துருக்கேன் சே…
    //
    நானும் இப்ப கூட நல்லபுள்ளை தாங்க! அதெல்லாம் கதைல வரது. இந்த மாதிரி அளும்பு பண்ணிருந்தன்னா வீட்ல சாப்பாடே போட்ருக்க மாட்டாங்க 😉

    //
    கரிக்கை சோழி – நல்லா இருந்துச்சு, ஆனாலும் அந்த ரெஸ்டாரெண்ட்டில் நடக்கும் உரையாடலில் இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் வச்சுருந்துருக்கலாம், அவசரமா இல்ல பெருசா போயிடுமோன்ற பயமோ?
    //
    கதைல ரொமான்ஸே வேணாம்னு தான் யோசிச்சேன்… ஆனால் கொஞ்சமாவது வேணுமேனுதான் அந்த ரெஸ்டாரெண்டே வந்துச்சு. அதுவுமில்லாமல் நீங்க சொன்ன ரெண்டு காரணமும் இருந்துச்சு. ரொம்ப பெருசாயிருந்தாலும் நிறைய பேர் படிக்கமாட்டாங்க 😦

    //அப்படியே “கண்ட நாள் முதல்” படம் பார்த்த திருப்தி
    //
    ஆமாம் நான் அதை யோசிக்கவே இல்ல. அதுல பிரசன்னா பேர் கூட கிருஷ்ணாதான் 😉

  85. முதல் போணி செய்த பெருசுக்கு நன்றி!

  86. தம்பி said…
    //
    முதல் போணி செய்த பெருசுக்கு நன்றி!
    //
    தம்பி,
    பாசக்கார பையனா இருக்கயே!!! இன்னும் ஆட்டம் முடியல… கடைசியா நன்றி சொல்லி போட்டக்கலாம் 😉

  87. //நானெல்லாம் அந்தப் பக்கம் போனதே கிடையாது. நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க 🙂

    நானும்தானுங்க..

    சூப்பர் கதை. ஒரு வரியில சொல்லணும்னா … இங்கே பாருங்க.

  88. முரட்டுக்காளை,
    மிக்க நன்றி!!!

  89. //ஓகை said
    கல்யாணத்தை குறி வைத்து சென்ற காதல் கதை. உரையாடல் இயல்பாக இருந்தது. ரசித்தேன். குறிப்பாக ‘கரிக்கை சோழி’.

    உங்கள் கதையில் வருவது மேட்டுப்பாளயம் சாலையில் இருக்கும் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியா? அங்கொரு அண்ணப்பூர்ணா இப்போது இருக்கிறதா?

    நான் GCT யில் படித்தபோது (1979) இந்தக் கல்லூரி இருந்தது. ஆனால் அண்ணாப்பூர்ணா உணவகம் இருந்த நினைவு இல்லை.

    உங்கள் கதை பழைய ஞாபகங்களக் கிளறிவிட்டுவிட்டது. நன்றி.
    //

    ஆஹா, எங்க ஆளு… வணக்கம் சீனியர்….

    //பெத்த ராயுடு said
    சில்லென்று ஒரு கதை. நல்லா இருந்தது.

    ஹோம்சயின்ஸ், பிரிக்கால்னு எழுதி மனச தொட்டுட்டீங்க போங்க.

    உதய் GCTன்னு நெனக்கிறேன்..
    //

    பெத்தராயுடு, நீங்களுமா?

  90. //முரட்டுக்காளை said…
    //நானெல்லாம் அந்தப் பக்கம் போனதே கிடையாது. நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க 🙂

    நானும்தானுங்க..
    //

    முரட்டுக்காளை, நீங்களுமா????

  91. பாலாஜி,

    கதை சூப்பர்…ரியல் லைப் இன்சிடண்ட் இல்லையே…!!?

    மற்றும் உங்கள் நடை சூப்பர். ( நடு நடுவே கமெண்ட் தோணியில் உங்கள் கருத்து போடுவது!!)

    இப்படி எழுதும் நடைக்கு patent வாங்கிவிடுவது நல்லது! 😀

    வாழ்த்துக்கள்.!

  92. கரிக்கை சோழி. இது வரை யாரும் கண்டு பிடிக்காத வார்த்தை.
    இந்த மாதிரி நிறைய சொல்லுங்களேன்.
    இரும்பொறை ?
    நல்ல சந்தோஷமான கதை. ஊட்டி வரை உறவு, காதலிக்க நேரமில்ல எல்லாம் சேர்த்து பார்த்த அழகைக் கொடுக்கிறது.நல்ல சம்பவம்.

  93. Udhayakumar said…
    //முரட்டுக்காளை, நீங்களுமா???? //

    //பெத்தராயுடு, நீங்களுமா?//

    உதய்,
    நீங்களுமா???
    (நீங்க கேக்கலாம் நான் கேக்கக்கூடாதா?) 😉

  94. வஜ்ரா said…
    //பாலாஜி,

    கதை சூப்பர்…ரியல் லைப் இன்சிடண்ட் இல்லையே…!!?
    //
    நன்றி சங்கர்.
    அதெல்லாம் இல்ல சங்கர்… கதை தான்

    //மற்றும் உங்கள் நடை சூப்பர். ( நடு நடுவே கமெண்ட் தோணியில் உங்கள் கருத்து போடுவது!!)
    //
    அது என் கருத்து இல்ல 😦
    அது கிருஷ்ணாவுடைய எண்ணவோட்டம். யாராவது பேசும் போது நம்ம இந்த மாதிரி நினைப்போம்… ஆனால் வெளியே சொல்லமாட்டோம் அந்த மாதிரிதான் இதுவும்.

    //
    இப்படி எழுதும் நடைக்கு patent வாங்கிவிடுவது நல்லது! 😀

    வாழ்த்துக்கள்.!
    //
    🙂
    அப்படியே தேன்கூடு பக்கம் போய் ஓட்டு போட்டுடுங்க 😉

  95. valli said…
    //கரிக்கை சோழி. இது வரை யாரும் கண்டு பிடிக்காத வார்த்தை.
    இந்த மாதிரி நிறைய சொல்லுங்களேன்.
    இரும்பொறை ?
    //
    :-))
    கண்டுபிடிப்போம்… பேருதான!!! ஈஸியா பிடிச்சிடலாம் 😉

    //
    நல்ல சந்தோஷமான கதை. ஊட்டி வரை உறவு, காதலிக்க நேரமில்ல எல்லாம் சேர்த்து பார்த்த அழகைக் கொடுக்கிறது.நல்ல சம்பவம்.
    //
    மிக்க நன்றிங்க!!!
    (புது படத்துல எதுவும் உங்களை கவரவில்லையா?)

  96. //போன முறை கோகோ பண்ண விளம்பரம் ரொம்ப பிடிச்சு போய் தான் //

    அட நெறய பேரு சலிச்சுகிட்டாங்க கவிதையொன்ன எழுதிட்டு மைக் செட்-லாம் ஓவருன்னு… ஆனா இது கொஞ்சம் அறிவுப் பூர்வமா நல்லா இருந்தது.

    நூறுக்கும், போட்டியில் வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துக்கள்!

  97. நூறாவது பின்னூட்டத்துக்கு எதுனா பரிசு இருக்கா?

  98. சொல்ல மறந்துட்டனே… ஓட்டு போட்டாச்சு!

  99. கோயமுத்தூர்-ல இருந்து ஒரு படையே இருக்கும் போல இருக்கு பேசாம சென்னைப் பட்டினம் மாதிரி கொங்கு தேசம்-னு ஒரு வலைப்பூ தொடங்கலாமோ!

  100. முதல் பின்னுட்டம் இட்ட பெருசுக்கும் நூறாவது பின்னூட்டமிட்ட ராசுக்குட்டிக்கும்
    வெட்டி சார்பாக தம்பியின் வாழ்த்துக்கள்!!

    ஷ்ஷபா இப்பவே கண்ண கட்டுதே!!:))

  101. wow..first 100?

    All the best.

    May this 100 become 200,300,500 and 1000 in future

  102. //சென்னைப் பட்டினம் மாதிரி கொங்கு தேசம்-னு ஒரு வலைப்பூ தொடங்கலாமோ!

    ராசு, நல்ல யோசனை. நான் ஆட்டத்துக்கு ரெடி..!

  103. //பெத்தராயுடு, நீங்களுமா? //
    உதய், நான் PSG Tech.

  104. // ராசுக்குட்டி said…
    அட நெறய பேரு சலிச்சுகிட்டாங்க கவிதையொன்ன எழுதிட்டு மைக் செட்-லாம் ஓவருன்னு… ஆனா இது கொஞ்சம் அறிவுப் பூர்வமா நல்லா இருந்தது.
    //
    எனக்கு என்னுமோ அது ரொம்ப பிடிச்சு இருந்தது. கோகோ விளம்பரம் பண்றது நமக்காக வேறு யாரோ பண்ற மாதிரி இல்ல இருக்கு. அதுதான் அதுல ப்ளஸ்.
    அதுவும் இல்லாம அது படிச்சு ஆடியோ எல்லாம் போட்டு கலக்கனீங்க!

    //
    நூறுக்கும், போட்டியில் வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துக்கள்!
    //
    மிக்க நன்றி!!!

    //ராசுக்குட்டி said…
    நூறாவது பின்னூட்டத்துக்கு எதுனா பரிசு இருக்கா?
    //
    கண்டிப்பா!!! உங்களுடைய அடுத்த பதிவுக்கு 10 பின்னூட்டங்கள் இடப்படும் 😉

    //ராசுக்குட்டி said…
    சொல்ல மறந்துட்டனே… ஓட்டு போட்டாச்சு!
    //
    மிக்க நன்றி!!!

    // ராசுக்குட்டி said…
    கோயமுத்தூர்-ல இருந்து ஒரு படையே இருக்கும் போல இருக்கு பேசாம சென்னைப் பட்டினம் மாதிரி கொங்கு தேசம்-னு ஒரு வலைப்பூ தொடங்கலாமோ!
    //
    நல்ல யோசனையா இருக்கே!!! சீக்கிரமே தொடங்கிடுவோம் 😉

  105. // செல்வன் said…
    wow..first 100?
    //
    இல்ல… நம்ம “கொல்ட்டி” ஏற்கனவே தொட்டுட்டாரு 😉

    //All the best.

    May this 100 become 200,300,500 and 1000 in future
    //
    மிக்க நன்றி செல்வன்.
    வெள்ளிக்காக காத்திருக்கிறேன்!!! (வியாழனன்று தானே உங்கள் பரிட்சை முடிகிறது) இன்னும் அரவிந்தசாமியை மறக்கவில்லை 😉

  106. //தம்பி said…
    முதல் பின்னுட்டம் இட்ட பெருசுக்கும் நூறாவது பின்னூட்டமிட்ட ராசுக்குட்டிக்கும்
    வெட்டி சார்பாக தம்பியின் வாழ்த்துக்கள்!!
    //
    தம்பி,
    உன் பாசத்திற்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்…

    நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு…

    இப்போழுதிக்கு ஒரு ஓட்டுதான்… அத போட்டுட்டேன் 😉

  107. யோவ் இது நல்லா இல்ல….. இப்படி எல்லாருமே சூப்பரா கதை எழுதினா நான் என்ன செய்யுறது?? கள்ள வோட்டுத்தான் போடனும்…..ஆமா ஒருத்தன் எத்தனை வோட்டு போடலாம்??

  108. ஆதவன்,
    ஒருத்தர் எத்தனை படைப்புகளுக்கு வேண்டுமென்றாலும் ஓட்டு போடலாம் 🙂

    மறக்காம போட்டுடுங்க 😉

  109. சூ… சூ… சூப்பருங்க 🙂

  110. சூ… சூ… சூப்பருங்க 🙂

  111. //Syam said…
    சூ… சூ… சூப்பருங்க 🙂
    //
    மிக்க நன்றி!!!
    ஆமாம் அவினாஸிலிங்கம் போயி கடல சாகுபடி பண்ணியிருக்கீங்களா???

  112. அருமை வெட்டி…அழகான கதை அமைப்பு வாழ்த்துக்கள்…

    /*அருண் நாலு வயிசு இருக்கும் போது கொயம்பத்தூர்ல இருந்து கெளம்பனது”*/

    /*அப்ப எனக்கு வயசு என்னா ஒரு ஆறு இல்லனா ஏழு இருக்குமாங்க?*/

    இந்த லாஜிக்கை சரி பண்ணியிருக்கலாம் திரும்ப ஒரு முறை படிச்சிருந்தால்…

    கதை சென்றவிதம் அருமை அதிலும் அருண் — அருணா ஆன இடம்…

    தகவலுக்கு : அவினாசி லிங்கத்தில் பொறியியல் இருக்கு ஆனா கோவையில் இல்லை துடியலூரிலிருந்து தடாகம் செல்லும் வழியில் பொன்னூத்து என்ற இடத்தில் இருக்கு.

  113. /*அருண் நாலு வயிசு இருக்கும் போது கொயம்பத்தூர்ல இருந்து கெளம்பனது”*/

    /*அப்ப எனக்கு வயசு என்னா ஒரு ஆறு இல்லனா ஏழு இருக்குமாங்க?*/

    இந்த லாஜிக்கை சரி பண்ணியிருக்கலாம் திரும்ப ஒரு முறை படிச்சிருந்தால்…

    சாரி 🙂 அவசரத்தில் நான் தான் தப்பா 2 முறை படிச்சுட்டேன் போல 😦

வெட்டிப்பயல் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி