ஏமாத்திட்டாங்களாம்!!!

தமிழகத்தில் வசிக்கும் என் அருமை வலையுலக நண்பர்களே!!!
உங்களிடம் ஒரு உதவி வேண்டியே இந்த பதிவு.

நேற்று என் நண்பன் ஒருவன் அவசரமாக போன் செய்து சொன்ன செய்தி.
“தமிழகம் எங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் புரட்சி கலைஞரின் “பேரரசு” படத்தில் கேப்டனுக்கு பன்ச் டயலாக் இல்லையாம். அதைப்போலவே அவருடைய மிரள வைக்கும் நடன காட்சிகளும் படத்தில் இல்லையாம். இது வாசிம் கானின் சதியாக இருந்தாலும் இருக்கலாம் என்று முன்னனி நாளிதழில் வெளிவரும் “சிட்டு குருவியார்” கேள்வி பதிலில் இருந்ததாம்”

இது என் நண்பன் என்னை ஏமாற்ற சொன்ன செய்தியோ என்று சந்தேகமாக உள்ளது. இந்த சந்தேகத்தை தயவு செய்து யாராவது தீர்த்து வையுங்களேன்.

“வேட்டையாடு விளையாடு”, “சில்லென்று ஒரு காதல்” போன்ற படத்திற்கு விமர்சனம் போட்ட வலைப்பதிவாளர்களே, உங்களிடமிருந்து தலைவரின் “பேரரசு” படத்திற்கும் விமர்சனத்தை எதிர்பார்த்து தூங்காமல் கண்விழித்திருக்கிறேன்…

கிசுகிசு:
படத்தில் இரண்டு சூரியனாம் 😉

(யாருப்பா அது, ஒண்ணுக்கே இங்க கண்ண கட்டுதுனு சொல்றது 😀 )

56 பதில்கள்

 1. யாராவது விமர்சனம் போடுங்கப்பா! படம் தேறிச்சுனா நானும் போய்ப் பார்ப்பேன்!

 2. போனதரம் எங்க தானைத்தலைவரை கிண்டல் செஞ்ச பாவத்துக்கு தான் இப்ப உங்க அவதாருக்கே ஆப்பு விழுந்தது.:-)

  புரியலையா?

  உங்க அவதார்(popeye) கைல இருக்கற ஸ்பினாச் கீரையை தடை பண்ணிட்டாங்கல்ல?அது எங்க கேப்டன் சொல்லித் தான்.இனியாவது கேப்டனை புகழ்ந்து எழுதவும்:-)))

 3. ஆவி,
  உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிடுச்சா???

  கேப்டன் படத்துக்கு விமர்சனம் எல்லாம் படிச்சுட்டு போய் பாக்க முடியுமா???

  எப்படியா இருந்தாலும் 2 மணி நேரம் ஜாலியா போகும்… தனியா போவாத பயுந்துடுவ!!! கூட உன் பிரெண்ட் ரத்தக் காட்டேரி இல்ல கொள்ளி வாய் பிசாசு யாரையாவது கூப்பிட்டு போ 😉

 4. //போனதரம் எங்க தானைத்தலைவரை கிண்டல் செஞ்ச பாவத்துக்கு தான் இப்ப உங்க அவதாருக்கே ஆப்பு விழுந்தது.:-)

  புரியலையா?

  உங்க அவதார்(popeye) கைல இருக்கற ஸ்பினாச் கீரையை தடை பண்ணிட்டாங்கல்ல?அது எங்க கேப்டன் சொல்லித் தான்.இனியாவது கேப்டனை புகழ்ந்து எழுதவும்:-)))
  //
  Gap10 படத்த பாக்க சொல்லித்தானே சொல்லியிருக்கேன் 😉

  இதுவும் ஒருவகைல அட்வர்டைஸ்மெண்ட் தானே!!!

  இருந்தாலும் பன்ச் டயலாக் இல்லாத கேப்டன் படத்த நெனச்சி கூட பாக்க முடியல 😦

 5. சரி விடுங்க வெட்டிப்பயல்!

  படத்துல பஞ்ச் டயலாக் இல்லைன்னா என்ன? இங்க எழுதி சந்தோஷப்பட்டுக்குவோம்!

  நான் ஆரம்பிச்சி வைக்கிறேன்.

  “பஞ்ச் டயலாக் சொல்லி போரடிக்கிற ஆள் நான் இல்லை, என் கிட்ட அடி வாங்கி பஞ்சு பஞ்சா பறந்து போகாத ஆளுகளும் இங்க இல்லை…”

 6. ஆவி கலக்கிட்ட போ!!!

  என்னால முடிஞ்சது:

  டயலாக் பேசி கொல்றவன் அந்த பேரரசு, டயலாக் பேசாமலே கொல்வான் இந்த பேரரசு!!!

 7. ஆமாம் பஞ்ச் டயலாக் என்றால் என்ன?

 8. என்ன கேள்வி கேட்டுட்டீங்க என்னார் ஐயா???

  பன்ச் டயலாக்கு உதாரணம் நான் தரேன்… புடிச்சுக்கோங்க!!!

  We will meet…will meet… meet

  புயல் அடிச்சு பொழச்சவன் இருக்கான்… இந்த பூபதி அடிச்சு பொழச்சவன் இல்ல

  துளசி வாசம் மாறனாலும் மாறும் ஆனா இந்த தவசி வாக்கு மாறாதுடா

  “I waando mari u”

  அடுத்தது என்ன நெருப்பா???

  இடி தரைல விழுந்தா தப்பிச்சிடலாம்… அதே தலைல விழுந்தா!!!

  NPC – Narasimma Penal Code

  மன்னிப்பு – தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்த

  இன்னும் வேணும்னா சொல்லுங்க தரேன் 😉

 9. //ஆமாம் பஞ்ச் டயலாக் என்றால் என்ன?//

  பஞ்ச் டயலாக் என்றால் “குத்து வசனம்” என்று பொருள். அதாவது சொல்லவரும் கருத்துக்கள் கேட்பவரின் மனதில் நேரிடையாக சென்று குத்த வேண்டும். ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். இன்று எல்லாருமே இதைப் பயன்படுத்தும்படி ஆகிவிட்டதால் தற்போதைய நிலையில் “காமெடி வசனங்கள்” என்றும் பொருள் கொள்ளலாம்.

 10. ஆவி,
  கலக்கிட்ட போ!!!

  இந்த படத்த மாத்தறது…

  இராத்திரி மணி 12ஆக போகுது…
  நான் இந்த ஆவிக்கெல்லாம் பயப்படமாட்டேன்… நம்ம ப்ளாக் பாத்து சின்ன பசங்க எல்லாம் பயந்துடுச்சுனா என்ன பண்றது 😦

 11. //இந்த படத்த மாத்தறது… //

  எங்க ஊர்ல இருக்குறதுலயே ரொம்ப சாதுவானது இந்த ஆவியோட படம்தான்.

 12. //எங்க ஊர்ல இருக்குறதுலயே ரொம்ப சாதுவானது இந்த ஆவியோட படம்தான்//

  போட்டோவுக்காக பவுடர்லாம் பூசி இருக்கற…

  கலக்குற ஆவி!!!

 13. ஒரு முக்கியமான டயலாக்க விட்டுட்டேன்…

  கரண்ட தொட்டா சாதாரண மனசனுக்குத்தான் சாக் (Saak) அடிக்கும்.
  நான் நரசிம்மா!!! நான் தொட்டா அந்த கரண்டுக்கே சாக் அடிக்கும்.

 14. நீங்க தான் வெட்டிபயல்…

  வேறவேலை யில்லாத வெட்டி….

  ஆவிக்கும் வேலயில்லா…
  மத்தவஙளுக்கும் வேலையில்லைன்னு நினத்தீங்களா..

  ரென்டும் சேந்துகிட்டு திராவிடன், கேப்டன் படத்த பத்தி விமர்சனம் வேறாகேட்கீங்க….

  யாராவது இவங்களுக்கு டிக்கெட் கொடுத்து தியேட்டரில் 3மணி நேரம் அடைத்துவைய்ங்க… கேப்டன் படம்பாத்து சாவட்டும்…

 15. திராவிட கப்தான் விஜய்காந்த்தின் பொறி பறக்கும் விமர்சனங்கள் தொகுப்பிற்கு நன்றி 😀

  வே.வி.-வின் முன்னாள் தயாரிப்பாளர்தானே ‘பேரரசு’வின் தயாரிப்பாளர்… எனவே இரண்டு படமும் ஒரே மாதிரிதானே இருக்கும் ;-))

 16. // உங்க அவதார்(popeye) கைல இருக்கற ஸ்பினாச் கீரையை தடை பண்ணிட்டாங்கல்ல?

  தடை பாக்கட் கீரைக்குத்தான். Popeye சாப்பிடுவது canned கீரை. 😉

 17. ஓ படம் வந்திருச்சா! இதெல்லாம் யாரும் சொல்லல…அவங்கள்ளாம் ரொம்ப நல்லவங்க.

 18. //நீங்க தான் வெட்டிபயல்…

  வேறவேலை யில்லாத வெட்டி….

  ஆவிக்கும் வேலயில்லா…
  மத்தவஙளுக்கும் வேலையில்லைன்னு நினத்தீங்களா.

  ரென்டும் சேந்துகிட்டு திராவிடன், கேப்டன் படத்த பத்தி விமர்சனம் வேறாகேட்கீங்க….

  யாராவது இவங்களுக்கு டிக்கெட் கொடுத்து தியேட்டரில் 3மணி நேரம் அடைத்துவைய்ங்க… கேப்டன் படம்பாத்து சாவட்டும்…
  //
  எலிவால்,
  கேப்டன் படம் பாத்தா சிரிச்சு சிரிச்சு வயிறுதான் புண்ணாகும்….

  எல்லாமே unintensional comedies 😉

 19. //யாராவது இவங்களுக்கு டிக்கெட் கொடுத்து தியேட்டரில் 3மணி நேரம் அடைத்துவைய்ங்க… கேப்டன் படம்பாத்து சாவட்டும்//

  இதோ பாருங்க எலிவால்ராஜா,
  உங்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

  கேப்டன் படம் பாக்குற தண்டனையெலாம் எனக்கு தரச் சொல்லி ஏன் தூண்டுறீங்க?

 20. //கேப்டன் படத்துக்கு விமர்சனம் எல்லாம் படிச்சுட்டு போய் பாக்க முடியுமா???
  //

  இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்…கேப்டன் படத்தைப் பற்றி தொடர்ந்து தவறான கருத்துக்களை பரப்பும் வெட்டிப்பயல் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்!!!

 21. //Boston Bala said…
  திராவிட கப்தான் விஜய்காந்த்தின் பொறி பறக்கும் விமர்சனங்கள் தொகுப்பிற்கு நன்றி 😀
  //
  இதுக்கே அசந்துட்டா!!! தலைவர் பன்ச் டயலாக் இன்னும் நிறைய இருக்கு!!!

  //
  வே.வி.-வின் முன்னாள் தயாரிப்பாளர்தானே ‘பேரரசு’வின் தயாரிப்பாளர்… எனவே இரண்டு படமும் ஒரே மாதிரிதானே இருக்கும் ;-))
  //
  ஓ!!! அப்படியா விஷயம்… அது தெரியாம போச்சே!

 22. விஜி said…
  // உங்க அவதார்(popeye) கைல இருக்கற ஸ்பினாச் கீரையை தடை பண்ணிட்டாங்கல்ல?

  தடை பாக்கட் கீரைக்குத்தான். Popeye சாப்பிடுவது canned கீரை. 😉
  //
  விஜி,
  தகவலுக்கு நன்றி…

  செல்வன்,
  நமக்கெல்லாம் ஆப்பு வெக்க முடியாது 😉 – popoye

 23. பேரரசு வந்துடுச்சா?? படம் எடுத்து எம்புட்டு நாளாச்சு!!!

 24. //G.Ragavan said…
  ஓ படம் வந்திருச்சா! இதெல்லாம் யாரும் சொல்லல…அவங்கள்ளாம் ரொம்ப நல்லவங்க
  //
  ஜிரா,
  கேப்டன் படம் ரிலீஸ் ஆனது கூட தெரியாம அப்படி என்னதான் பண்றீங்கனே தெரியல 😉

 25. “புயல் அடிச்சி கூட பொழச்சவன் இருக்கான்”
  ஆனா என் படத்தை பாத்துட்டு அதுக்கு விமர்சனமும் எழுதறவன் பொழச்ச்ச்சதான் சரித்திரமே இல்ல!

 26. //இதோ பாருங்க எலிவால்ராஜா,
  உங்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

  கேப்டன் படம் பாக்குற தண்டனையெலாம் எனக்கு தரச் சொல்லி ஏன் தூண்டுறீங்க?
  //

  தளபதியாரே,
  எலி சொன்னது என்னையும், ஆவியையும் நீங்க டென்ஷன் ஆகாதிங்க 😉

  பன்ச் டயலாக், கலர்புல் டான்ஸ் இல்லாத கேப்டன் படம் பாக்கறதுக்கு நாங்க என்ன பைத்தியமா 😉

 27. //இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்…கேப்டன் படத்தைப் பற்றி தொடர்ந்து தவறான கருத்துக்களை பரப்பும் வெட்டிப்பயல் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்!!! //

  உண்மையை தானே சொன்னேன்…

  விமர்சனம் பாக்காம படம் பாருங்கனு அட்வர்டைஸ்மெண்ட் கொடுத்தா தப்பா?

 28. //கப்பி பய said…
  பேரரசு வந்துடுச்சா?? படம் எடுத்து எம்புட்டு நாளாச்சு!!!
  //
  ஒரு வழியா ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

  (தியேட்டரை விட்டு இல்லப்பா ;))

 29. தம்பி said…
  //”புயல் அடிச்சி கூட பொழச்சவன் இருக்கான்”
  ஆனா என் படத்தை பாத்துட்டு அதுக்கு விமர்சனமும் எழுதறவன் பொழச்ச்ச்சதான் சரித்திரமே இல்ல!
  //

  தம்பி,
  கலக்கிட்ட போ

  இத அப்படியே
  “ஆனா என் படத்தை பாத்துட்டு எவனும் பொழச்ச்ச்சதான் சரித்திரமே இல்ல!”னு மாத்தனா இன்னும் கரெக்ட்டா இருக்கும் 😉

 30. //தளபதியாரே,
  எலி சொன்னது என்னையும், ஆவியையும் நீங்க டென்ஷன் ஆகாதிங்க //

  ஓ! உங்களையும், ஆவிப்பயலையுமா? மன்னிக்க ஆவிப் பொண்ணையுமா?

  அப்பாடா! இப்பதான் நிம்மதி!

  நான் கூட எல்லாருக்கும் இந்த தண்டனையோன்னு நினைச்சி பதறிப் போயிட்டேன்.
  இருங்க எஸ்.கே வருவாரு இன்னும் கொஞ்ச நேரத்துல!

 31. ////”புயல் அடிச்சி கூட பொழச்சவன் இருக்கான்”
  ஆனா என் படத்தை பாத்துட்டு அதுக்கு விமர்சனமும் எழுதறவன் பொழச்ச்ச்சதான் சரித்திரமே இல்ல!
  //

  ஓஹோ! இந்தப் படம் பார்த்துட்டு எங்க ஊருக்கு இன்னும் நிறையப் பேர் வருவாங்களா?

 32. //ஓ! உங்களையும், ஆவிப்பயலையுமா? மன்னிக்க ஆவிப் பொண்ணையுமா//

  என்னது,
  ஆவி பொண்ணா???
  நான் நீங்கதான் ஆவினு நெனச்சேன் 😉

  ஒரு வேல பவுடர் பூசி இருக்கறத வெச்சி பொண்ணுனு சொல்றீங்களா???

  //இருங்க எஸ்.கே வருவாரு இன்னும் கொஞ்ச நேரத்துல!
  //
  வரட்டும்… அவருக்குத்தான் வெயிட்டிங்.

  ஆமாம் நீங்க சொன்னது படத்தோட விமர்சனத்தோட தானே?

 33. //ஓஹோ! இந்தப் படம் பார்த்துட்டு எங்க ஊருக்கு இன்னும் நிறையப் பேர் வருவாங்களா? //

  ஆவி,
  நீ என்ன லூசா??? படத்தோட விமர்சனம் எழுதறவன பத்திதான தம்பி அப்படி சொல்லியிருக்காரு.

  அதனாலத்தான் யாரும் இன்னும் விமர்சனமே எழுதல 😉

 34. //நான் நீங்கதான் ஆவினு நெனச்சேன் //

  வாஸ்தவம்தான். நானும் ஓர் அப்பாவிதான்.
  (அப்ப்+ஆவி)

  ஆனால் இந்த ஆவி அல்ல.

  //ஒரு வேல பவுடர் பூசி இருக்கறத வெச்சி பொண்ணுனு சொல்றீங்களா???//

  அந்த ஆவியே சில இடங்களில் தன்னைப் பெண் ஆவின்னுதான் சொல்லிக்குது(றாங்க)!

 35. //வாஸ்தவம்தான். நானும் ஓர் அப்பாவிதான்.
  (அப்ப்+ஆவி)

  ஆனால் இந்த ஆவி அல்ல.
  //
  நானும் அதத்தான் சொன்னேன் 😉

  //
  //ஒரு வேல பவுடர் பூசி இருக்கறத வெச்சி பொண்ணுனு சொல்றீங்களா???//

  அந்த ஆவியே சில இடங்களில் தன்னைப் பெண் ஆவின்னுதான் சொல்லிக்குது(றாங்க)!
  //
  ஓ!!! அப்படியா விஷயம்…

 36. பவுடரா? என்ன பவுடர்?

  முகத்தில பூசுவாங்களா?, எதுக்கு?

 37. //தம்பி said…
  பவுடரா? என்ன பவுடர்?

  முகத்தில பூசுவாங்களா?, எதுக்கு?
  //
  தம்பி,
  ஆவி போட்டவ பாரு… புரியும் 😉

 38. தம்பி,
  பவுடர்னு சொன்னவுடனே ஒரு சூப்பர் டயலாக் நியாபகம் வந்துடுச்சு.

  நம்ம Gap10 சுதேசி படத்துல கருணாஸ்ஸ பாத்து ஒரு டயலாக் சொல்லுவாரு
  “பவுடர் பூசுணா நீ பன்னி மாதிரி இருப்படா”னு…

  கிசுகிசு:
  அந்த டயாலாக் ஆக்சுவலா யாரோ ஒரு மேக் அப் மேன் சொன்னதாம் 😉

 39. சுதேசி

  இப்படி ஒரு படம் வந்துச்சா?

 40. // தம்பி said…
  சுதேசி

  இப்படி ஒரு படம் வந்துச்சா?
  //
  தம்பி,
  என்ன இப்படி ஒரு கேள்விய கேட்டுட்ட???

  போன மார்ச்ல வந்துச்சு 😉

 41. //துளசி வாசம் மாறனாலும் மாறும் ஆனா இந்த தவசி வாக்கு மாறாதுடா//

  துளசின்னு படிச்சதும் அப்படியே ஆடிப்போயிட்டேன்.:-))))

 42. //துளசின்னு படிச்சதும் அப்படியே ஆடிப்போயிட்டேன்.:-)))) //
  டீச்சர்,
  இதை வெச்சே பிரச்சனை பண்ணிடுவோமா???

 43. துளசி டீச்சருக்கு ஆதரவா பிரச்சினையைக் கிளப்ப நான் ரெடி!

 44. //அமானுஷ்ய ஆவி said…
  துளசி டீச்சருக்கு ஆதரவா பிரச்சினையைக் கிளப்ப நான் ரெடி!
  //
  ஆவி,
  டீச்சருக்கு ஆதரவு கொடுக்கறது பிரச்சன இல்ல…

  Gap10ஐ எதிர்க்க முடியுமா உன்னால்???

 45. //

  ஆமாம் பஞ்ச் டயலாக் என்றால் என்ன?

  என்ன கேள்வி கேட்டுட்டீங்க என்னார் ஐயா???

  பன்ச் டயலாக்கு உதாரணம் நான் தரேன்… புடிச்சுக்கோங்க!!!

  We will meet…will meet… meet

  புயல் அடிச்சு பொழச்சவன் இருக்கான்… இந்த பூபதி அடிச்சு பொழச்சவன் இல்ல

  துளசி வாசம் மாறனாலும் மாறும் ஆனா இந்த தவசி வாக்கு மாறாதுடா

  “I waando mari u”

  அடுத்தது என்ன நெருப்பா???

  இடி தரைல விழுந்தா தப்பிச்சிடலாம்… அதே தலைல விழுந்தா!!!

  NPC – Narasimma Penal Code

  மன்னிப்பு – தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்த

  இன்னும் வேணும்னா சொல்லுங்க தரேன் 😉

  ஒரு முக்கியமான டயலாக்க விட்டுட்டேன்…

  கரண்ட தொட்டா சாதாரண மனசனுக்குத்தான் சாக் (Saak) அடிக்கும்.
  நான் நரசிம்மா!!! நான் தொட்டா அந்த கரண்டுக்கே சாக் அடிக்கும்.

  //

  Hi Balaji,

  chance-e illa ! super collection of comedy punches. 🙂 🙂
  ஆனாலும் நீங்க Gaப்10 ன ரொம்ப watch பண்ணிருக்கீங்க!

  சிவ சுப்ரமணியன்

 46. //chance-e illa ! super collection of comedy punches. 🙂 :)//
  Hi Siva,
  Thx!!!

  //
  ஆனாலும் நீங்க Gaப்10 ன ரொம்ப watch பண்ணிருக்கீங்க!
  //
  இதெல்லாம் நாமலா பதிய வெச்சது இல்ல… தானா பதிஞ்சது 😉

 47. Eppadi Irukirurirkal Nanbarkalae?

 48. அந்த கொடுமையை ஏன் கேட்கிறீங்க?? 1 விஜயகாந் போதாதென்று 2 விஜயகாந்….. கொடுமை அய்யா கொடுமை…. ஏன்டா இந்த படம் பாத்தேன் என்னு இருக்கு……… அய்யோ அய்யோ

 49. அது போதாதென்னு கடைசில அவரு ஆனந்தராஜ் வேற சொல்லுறாரு நீங்க real Gaப்10 சார் என்னு அய்யோ அய்யோ சின்னபிள்ளத்தனமா இல்ல இருக்கு……. Gaப்10 எப்பயுமே இந்த police யும் ஊர் பெரியவரயும் விட்டு வைக்க மாட்டார் போல இருக்கே ஒரு விஜயகாந் CBI மத்தவரு ஊர் போற்றும் சின்னய்யா….

 50. இதில Gaப்10தான் பஞ்ச் வசனம் பேசல ஆனால் சுத்தி உள்ளவங்க பேசின பஞ்ச் இருக்கே…. ஸப்பா ovar அப்பா over…….

 51. Anonymous said…
  //Eppadi Irukirurirkal Nanbarkalae? //
  என்னது நண்பர்களேவா???
  நான் தல இல்லப்பா!!! நான் தனி ஆள்தான்.

  அப்பறம் இவ்வளவு அக்கறையா விசாரிச்சிருக்கீங்க!!! நான் ரொம்ப நல்லா இருக்கேன்… நீங்க நலமா?

 52. ஆதவன்,
  உங்களுக்கு ரொம்ப தைரியம் அதிகம்னு நிருபிச்சிட்டீங்க 😉

  கேப்டன், சரத்குமார், தல படமெல்லாம் ஜோக் படம் பாக்கற மாதிரி பாக்கணும். நமக்கு அதுல இருந்து நிறைய டயலாக் கிடைக்கும். அப்பப்ப ரவுசு பண்ணும் போது அதை உபயோகபடுத்திக் கொள்ளலாம்.

 53. vettipayal verum payal illai, vishayam ulla payal thaan. Illaa vittaal, Naettraiya Vallarasu, Indraiya Perarasu, Naalaiya Thamizharasu aaga povadhaaga kanavil iruppavarukku Punch Dialogue edutthu kodukka mudiyumaa enna?

 54. Muthusivakumaran said…
  //
  vettipayal verum payal illai, vishayam ulla payal thaan.
  //
  ஏனுங்க!!! நான் நல்லா இருக்கறது புடிக்கலையா… நம்மல பத்தி தப்பு தப்பா சொல்லாதீங்க 😉

  // Illaa vittaal, Naettraiya Vallarasu, Indraiya Perarasu, Naalaiya Thamizharasu aaga povadhaaga kanavil iruppavarukku Punch Dialogue edutthu kodukka mudiyumaa enna?
  //
  Gap10க்கு பஞ்ச் டயலாக் அட்டகாசமா எழுதறீங்க!!!
  மேல இருக்கறது நீங்களா சொன்னதா இல்ல பேரரசுக்கு போட்டதாங்க?

 55. //கேப்டன், சரத்குமார், தல படமெல்லாம் ஜோக் படம் பாக்கற மாதிரி பாக்கணும்.//
  என்ன விஜய்ய விட்டுடீங்களே?? ஆனால் “பேரரசு” ஒரு தடவை பார்க்கலாம்… எதுக்கும் ஒரு டாக்டர(doctor)பக்கத்தில வைச்சுகிட்டு பாருங்க….. சரியா??

 56. //ஆதவன் said…
  //கேப்டன், சரத்குமார், தல படமெல்லாம் ஜோக் படம் பாக்கற மாதிரி பாக்கணும்.//
  என்ன விஜய்ய விட்டுடீங்களே?? ஆனால் “பேரரசு” ஒரு தடவை பார்க்கலாம்… எதுக்கும் ஒரு டாக்டர(doctor)பக்கத்தில வைச்சுகிட்டு பாருங்க….. சரியா??
  //
  வெற்றிகரமா பாத்தாச்சு!!! படத்தோட விமர்சனத்தை சீக்கிரம் போடறேன் 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: