• Top Clicks

  • எதுவுமில்லை
 • அதிகம் பார்வையிடப்பட்டவை

 • Blog Stats

  • 28,634 hits
 • Advertisements

நானாத்தான் நாறிட்டனா!!!

சரி நம்ம ராசா தலைப்ப சொன்னவுடனே இந்த முறை க்ரைம் கதை மாதிரி முயற்சி செஞ்சி பாக்கலாம்னு ட்ரை பண்ணேன்…

நேத்து பாத்து என் ஃபிரெண்ட் ஒருத்தன்ட இருந்து மெயில்…
“டேய் பாலாஜி கத நல்லா ஜோக்கா போயிட்டு இருக்கு தொடர்ந்து எழுதுனு. ”

அடப்பாவி மக்கா!!! த்ரில்லர் எழுதனும்னு பக்கத்துல இருக்குற சுடுகாட்டுல போய் உக்காந்து எழுதனா, உனக்கு அது ஜோக் கதையாடானு திட்டி மெயில் அனுப்பனேன்.

அடுத்து கதை முடிச்சவுடனே, டேய் கதைல வர எல்லாமே ஹேலோசினேஷனானு கேட்டு ஒருத்தவன் போன் பண்ணான்.
ஆமாம்டா நீ என்கிட்ட பேசற பாரு இதுவே உண்மை இல்ல இதுவும் ஹேலோசினேஷன் தான்னு போனை வெச்சிட்டேன்.

இன்னைக்கு காலைல ஃபிரெண்ட் ஒருத்தவண்ட GTalkல பேசும் போது…
“என்னடா மச்சான் யாருக்குமே புரியாத மாதிரி கதை எழுதிட்டேன்டா”னு ரொம்ப ஃபீல் பண்ணி சொன்னேன். அதுக்கு அவன்…

“யார்டா சொன்னா யாருக்கும் புரியலைனு. எனக்கு நல்லா புரிஞ்சிதுடா. கதைல யாருமே சாகல ஆக்ஸிடெண்ட் ஆனதே ஹேலோசினேஷன் தான”னு கேட்டான்…

சாமீகளா!!! ஆள விடுங்கப்பா!!! நான் இனிமே க்ரைமே எழுதலனு சொல்லி வெச்சிட்டேன்.

சரி, உங்களுக்காவது சொல்லிடறேன்.

2 வருஷத்துக்கு முன்னாடி அவன் பண்ண ஆக்சிடெண்ட் அவனை நல்லா பாதிச்சிருக்கு. அத பத்தி அவனுக்கு இருந்த பயம் முத்தி போய் டாக்டர்ட போயிருக்கான். டாக்டருக்கு சின்ன சந்தேகம் இருந்ததால அவனை பயமுறுத்த வேண்டாம்னு அடுத்த வாரம் வர சொல்லிவிட்டார். கடைசியா அவர் சீனியர் டாக்டர்கிட்ட கேஸ் ஹிஸ்டரி சொல்லி அவருடைய சந்தேகத்தையும் சொல்லறார். இருந்தாலும் அவருக்கு அதுல திருப்தி இல்ல.

அந்த ஒரு வாரத்துக்குள்ள தான் அவன் பாண்டில இருந்து சென்னை வர வழியில ஒரு பொண்ணுக்கு லிப்ட் கொடுத்தான். அந்த பொண்ணுதான் அவன் கற்பனை. அவள் கத்தியால குத்தறானு பயத்துல அவன் இதயம் நின்னு போச்சு. உடனே பக்கத்துல இருக்குற மரத்துல வண்டி மோதி ஆக்ஸிடெண்ட் மாதிரி ஆயிடுச்சு. அத பத்திதான் போலீஸ் விசாரனை பண்ணாங்க!!!

போதும்னு நினைக்கிறேன்… இப்ப படிச்சு பாருங்க புரியும்.

முதல் முறையா எழுதனதால இந்த மாதிரி தப்பாயிடுச்சு. அடுத்த முறை திருத்திக்கிறேன்.

உதய், உங்க தலைப்பை அடிச்சிட்டேன்… தப்பா எடுத்துக்காதீங்க 😉

Advertisements

13 பதில்கள்

 1. அதெல்லாம் நாறலை வெட்டி…நல்லாதான் வந்திருக்கு…ஒய் டென்சன்??

  //முதல் முறையா எழுதனதால இந்த மாதிரி தப்பாயிடுச்சு. அடுத்த முறை திருத்திக்கிறேன்.
  //
  அடுத்த முறையும் இதே கதையா?? :))

 2. கப்பி,
  //அதெல்லாம் நாறலை வெட்டி…நல்லாதான் வந்திருக்கு…ஒய் டென்சன்??
  //
  மிக்க நன்றி… இருந்தாலும் ஒரு பயம் தான்.

  //அடுத்த முறையும் இதே கதையா?? :))
  //
  எப்படியும் நல்லதா ஒரு க்ரைம் எழுதாம வலையுலகை விட்டு போவதில்லைனு ஒரு முடிவு பண்ணிட்டேன்…

  இதுவே நல்லா இருக்குனு சொன்னா நீங்க எல்லாம் தப்பிச்சிடுவீங்க 😉

 3. முருகா முருகா முருகா முருகா

 4. G.Ragavan said…
  //முருகா முருகா முருகா முருகா//

  முருகு என்றால் அழகுதானே???

  அப்படி என்றால் என் கதை ரொம்ப அழகா இருக்கா???

  மிக்க நன்றி

 5. //உதய், உங்க தலைப்பை அடிச்சிட்டேன்… தப்பா எடுத்துக்காதீங்க 😉 //

  நானே அதை வடிவேலு கிட்ட இருந்துதான் (படம்:திமிரு) கடன் வாங்கினேன்.

  நான் இன்னொரு தடவை படிச்சிட்டு சொல்லறேன்னு சொன்னேன், அதுக்குள்ள நீங்களே…. ???

 6. //நானாத்தான் நாறிட்டனா!!! //

  நானாத்தான் நாறிட்டனா??? அப்படின்னு தானே இருக்கணும்…

  ஒரு கைதியின் டைரி நேத்துப் பார்த்தேன். “அய்யோ, என்னை கொல்லப் போறங்களே” ந்னு டாக்டர் உண்ணி அழுகறப்போ, ஐஜி சொல்லுவாரு “Why are you so excited?”ன்னு 🙂

  நானே நாறீட்டனே!!! கூட நல்லாத்தான் இருக்கு 🙂

  ரொம்ப பீல் பண்ணாதீங்க, நீங்க ஜெயிப்பீங்க…

 7. உதய்,
  //நானே அதை வடிவேலு கிட்ட இருந்துதான் (படம்:திமிரு) கடன் வாங்கினேன்.
  //
  தெரியும்… இருந்தாலும் வலையுலகில் அதை பயன்படுத்தியவர் நீங்க தானே!!! அதனாலதான் உங்கள சொன்னேன்… அதுவும் இல்லாம இது உங்க பதிவுக்கும் ஒரு அட்வர்டைஸ்மெண்ட் ஆகிடுச்சு இல்ல… (லிங்க் குடுக்க மறந்துட்டனா??? கொடுத்துடறேன் ;))

  //
  நான் இன்னொரு தடவை படிச்சிட்டு சொல்லறேன்னு சொன்னேன், அதுக்குள்ள நீங்களே…. ???
  //
  திரும்ப படிச்சு புதுசா ஏதாவது வெர்ஷன் சொன்னீங்கனா, நம்ம மனசு தாங்காது. அதனாலத்தான்…. 😉

  //நானாத்தான் நாறிட்டனா??? அப்படின்னு தானே இருக்கணும்…
  //
  ஆமாம்…

  //ஒரு கைதியின் டைரி நேத்துப் பார்த்தேன். “அய்யோ, என்னை கொல்லப் போறங்களே” ந்னு டாக்டர் உண்ணி அழுகறப்போ, ஐஜி சொல்லுவாரு “Why are you so excited?”ன்னு 🙂
  //
  ஏன்டா நாயே உன்ன கொல்றன்னு சொன்னா தெரிஞ்சி இருக்கும்னு சொல்லி இருக்கனும்…

  இந்த ஐஜிங்க தொல்ல தாங்க முடியலப்பா…

  //ரொம்ப பீல் பண்ணாதீங்க, நீங்க ஜெயிப்பீங்க… //
  ஜெயிக்கறதவிட நல்ல படைப்பை கொடுக்கறதுதானே முக்கியம். (சும்மா பில்ட் அப்… அதுக்காக ஓட்டு போடாம விட்டுடாதீங்க ;))

 8. /நான் இனிமே க்ரைமே எழுதலனு சொல்லி வெச்சிட்டேன/
  அப்பாடா. 🙂

  இப்ப கதை புரியுதுங்க.

  /எப்படியும் நல்லதா ஒரு க்ரைம் எழுதாம வலையுலகை விட்டு போவதில்லைனு ஒரு முடிவு பண்ணிட்டேன்…/
  வலையுலகை விட்டு போறதா எண்ணம் இல்லன்னு நேராவே சொல்லலாமே. எதுக்கு சுத்தி வலைச்சு சொல்லனும்? :-))

  உங்களுக்கு ஓட்டு உண்டு. அது உறுதி.

 9. //வலையுலகை விட்டு போறதா எண்ணம் இல்லன்னு நேராவே சொல்லலாமே. எதுக்கு சுத்தி வலைச்சு சொல்லனும்? :-))
  //

  என்னங்க இப்படி சொல்லிட்டீங்க?
  உங்களுக்கு புடிச்ச நாவலாசிரியர் (க்ரைம்) யார்னு சொல்லுங்க. (தமிழ் மட்டும்) அப்பறம் ஈஸியா எழுதிடலாம்.

  இந்த கதைல குழப்பம் இருக்கறதுக்கு காரணம். வழக்கமா க்ரைம் (தமிழ்) நாவல்ல 2 (அ) 3 ட்ராக் இருக்கும். மூணும் ஒரு இடத்தில் சந்திக்கும். இதில் 4 ட்ரேக்குகள் அதுவும் சீக்கிரமாகவே வெவ்வேறு விதமாக சந்திக்கின்றன. கடைசியில் நீங்களே புரிந்து கொள்வீர்கள் என்று நான் விளக்க விரும்பவில்லை.

  எதுக்கும் இன்னுமொருமுறை படித்து பார்க்கவும் 😉

  //உங்களுக்கு ஓட்டு உண்டு. அது உறுதி//
  இது போதும்… ஆமாம் உங்க ஓட்டதான சொன்னீங்க 😉

 10. வெட்டிப்பயல் சொன்னார்:
  //இதுவே நல்லாருக்குன்னு சொன்னா…….தப்பிச்சுடிவீங்க..//
  நல்லாருக்கு
  நல்லாருக்கு
  நல்லாருக்கு
  சொன்ன சொல் மீறாதிங்கோவ்

 11. //sivagnanamji(#16342789) said…
  வெட்டிப்பயல் சொன்னார்:
  //இதுவே நல்லாருக்குன்னு சொன்னா…….தப்பிச்சுடிவீங்க..//
  நல்லாருக்கு
  நல்லாருக்கு
  நல்லாருக்கு
  சொன்ன சொல் மீறாதிங்கோவ்
  //
  தமிழ் வலைப்பூ வாசகர்களை காப்பாற்றிவிட்டீர்கள் சிவஞானம்ஜி.
  இது உள்குத்து பின்னூட்டமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது 😉

 12. ஆஹா க‌தைய த‌ப்பா புரிஞ்சிகிட்டேனா? இந்த ல‌ட்ச‌ண‌த்துல ‘you didn’t kill anybody in this story’‍னு பின்னூட்டம் வேற பெருசா புரிஞ்ச்கிட்ட மாறி போட்டுட்டேனே.”அப்போ நானாத்தான் நாறிட்டனா??”

  நீங்க ம‌ட்டும் இல்ல‌ எங்க‌ளையும் சொல்ல வ‌ச்சிட்டீங்களே!!! :((

  //யார்டா சொன்னா யாருக்கும் புரியலைனு. எனக்கு நல்லா புரிஞ்சிதுடா. கதைல யாருமே சாகல ஆக்ஸிடெண்ட் ஆனதே ஹேலோசினேஷன் தான”னு கேட்டான்…//

  ஹையா, company க்கு ஆள் இருக்குதுங்கோவ்.. :))

 13. chinnathambi said…
  //ஆஹா க‌தைய த‌ப்பா புரிஞ்சிகிட்டேனா? இந்த ல‌ட்ச‌ண‌த்துல ‘you didn’t kill anybody in this story’‍னு பின்னூட்டம் வேற பெருசா புரிஞ்ச்கிட்ட மாறி போட்டுட்டேனே.”அப்போ நானாத்தான் நாறிட்டனா??”
  //
  பரவாயில்லை… இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களே!!! அதுவே சந்தோஷம்தான் 😉

  //நீங்க ம‌ட்டும் இல்ல‌ எங்க‌ளையும் சொல்ல வ‌ச்சிட்டீங்களே!!! :((//
  😉

  //
  //யார்டா சொன்னா யாருக்கும் புரியலைனு. எனக்கு நல்லா புரிஞ்சிதுடா. கதைல யாருமே சாகல ஆக்ஸிடெண்ட் ஆனதே ஹேலோசினேஷன் தான”னு கேட்டான்…//

  ஹையா, company க்கு ஆள் இருக்குதுங்கோவ்.. :))
  //
  நிறைய பேர் இருக்காங்க… கவலைப்படாதீங்க…

  (முதல் தடவை படிச்சிட்டு நானே அப்படித்தான் நினைச்சிக்கிட்டேன்..
  நம்புங்க… நிஜமாத்தான் சொல்றேன் ;))
  8:32 PM

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: