• Top Clicks

  • எதுவுமில்லை
 • அதிகம் பார்வையிடப்பட்டவை

 • Blog Stats

  • 33,972 hits

தெய்வ குத்தமாயிடுமாம்…

அமெரிக்கா வந்து புதிது. வார நாட்கள் ஓரளவு பிரச்சனையில்லாமல் இருந்தது. வார இறுதி நாட்களில்தான் பிரச்சனை. பனி அதிகமாக இருந்ததால் வெளியே செல்ல முடியாத நிலை. வீட்டிலும் தனியாக உட்கார்ந்திருந்தால் மனம் வெறுமையாக இருந்தது.

ஏன்டா இங்க வந்தோம்னு எனக்கு நானே பல முறை கேட்டு கொண்டேன். இந்தியாவில் எப்போழுதும் நண்பர்களுடன் தங்கியிருந்ததால், தனிமையென்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் என்னோட மட்டுமே இருப்பது உயிர் போகும் வலியாக இருந்தது. பேசாம எப்படியாவது திரும்ப போயிடலாமனு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.

அந்த நேரத்தில்தான் பிளாக் அறிமுகமானது. இந்தியாவில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் அவர்களுடைய பிளாக் பற்றி சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் ஆங்கிலத்திலே இருந்தது. மேலும் அங்கே எனக்கு வேலையே இரவு 9 மணி வரை இருக்கும். வீட்டிற்கு வந்தால் நண்பர்களுடன் செலவு செய்யவே நேரம் சரியாக இருக்கும். அதனால் பிளாக் படிக்கவோ, எழுதவோ தோன்றவில்லை.

நான் பார்த்த முதல் தமிழ் பிளாக் டுபுக்கு அவர்களுடையது. குட்டி நாய்கிட்ட தேங்காய் மூடி கிடைச்சா என்ன பண்ணும். நானும் அதுவே தான் செய்தேன். அந்த பிளாக்ல இருக்கிற ஒரு பதிவு விடாம 2 -3 தடவை படித்தேன். கிட்டதட்ட 1 மாசம் தினமும் அதுல தான் இருந்தேன். தமிழ்மணம் அந்த பிளாக் மூலமா அறிமுகமாச்சு.

அடுத்து என்னை கவர்ந்த பிளாக் $elvan அவர்களுடையது. அதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு கனலை எரித்த கற்பின் கனலி. அந்த ஒரு பதிவை படித்ததிலிருந்து அவருடைய அனைத்து பதிவையும் படித்தேன். அந்த ஒரு பதிவை நிறைய பேருக்கு அனுப்பி வைத்தேன்.

கர்ணன் படத்துல கண்ணன் குந்தியிடம் சொல்லும் வசனம் “அத்தை! ஆசை யாரை விட்டது???”. இந்த வசனம் எனக்கு சரியாக பொருந்தியது.
நிறைய பிளாக் படித்த பிறகு நாமும் ஒன்று ஆரம்பிப்போமே என்று தோன்றியது.
தமிழில் எழுத யாரை கேட்கலாம் என்று தெரியவில்லை.

பொதுவா எனக்கு என் பேர்ல யாரையாவது பார்த்தால் பிடிக்காது. அதுக்கு எதுவும் பெருசா காரணம் இல்லை. ஸ்கூல்ல எப்பவுமே நாம வாத்தியார்கிட்ட நல்ல பிள்ளைனு பேர் வாங்கற டைப் (காலேஜ்ல இதுக்கு நேரெதிர்).. என் பேர கெடுக்கறதுக்குனே கொஞ்ச பேர் இருந்தானுங்க… அதனால அப்படி ஒரு எண்ணம்.

ஆனால் நான் ஆரம்பிக்கனும்னு நினைச்ச பேர்ல ஒருத்தர் இருந்தாரு. அதுவும் ஊரு, பேரு ரெண்டுமே ஒன்னாயிருக்கு. அதுவும் அவர் பதிவெல்லாம் நமக்கு புரியாத அளவுக்கு அதி புத்திசாலித்தனமா இருக்கு. நம்ம இப்ப அவர் பேர கெடுக்க போறமானு பயம் வந்திடுச்சு. சரி தமிழ்ல எப்படி எழுதறதுனு அவர்டயே கேப்போம்னு கேட்டேன்.

அடுத்த 5 நிமிடத்திற்குள் ஒரு விளக்கமான மெயில். அதுவும் வெறும் லிங் மட்டும் இல்லாமல் விளக்கத்துடன். அவர் ஒரு ஆளானு சந்தேகம் இன்னும் நிறைய பேருக்கு இருக்கு ;). ஆமாம் அது நம்ம பாபா தான் (பாஸ்டன் பாலா).

அதுக்கு பிறகு நான் பிளாக் ஆரம்பிப்பதற்குள் 2 மாதம் ஆனது. எங்கே தவறாக நினைப்பாறோ என்று நான் என்னை பற்றி அவருக்கு சொல்லவே இல்லை (15 நாட்களுக்கு முன்பு வரை). அவர் பேரை கெடுக்கற அளவுக்கு நான் எழுதலன்னு நினைக்கிறேன்… (நானும் பாஸ்டன் பாலாஜி தாங்க ;))

எனக்கு பிளாக் மூலமா நட்பாகி போன் பண்ணி, தமிழ்மணத்துல வீணா வம்புதும்புக்கு எல்லாம் போகாம எதாவது எழுதுனு சொன்னவர் உதய். அதற்கு பிறகு நான் அதிகமா எந்த வம்பு தும்புக்கும் போகலை.

தமிழ்மணத்தில் இணைந்துள்ளவர்களில் என்னை பார்த்து பேசிய ஒரே நபர் (சென்ற வாரம் விழாயன் முடிய), நம்ம உறக்கம் தொலைத்த இரவுகளில் நாயகன் கார்த்திக் பிரபு. என் மேல இருக்கற பாசத்துல என்னைப் பற்றி ஒரு பதிவே போட்டுட்டான். இந்த பதிவுக்கும் இவர்தான் காரணம்.

என்னுடைய இந்த பிளாக் டெம்ப்லேட் மாற்றி சரியாக வடிவமைத்து கொடுத்தவர், என்னையும் கதை எழுத வைத்தவர் நம்ம கப்பி.

இவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இதில் தெரிந்தோ தெரியாமலோ எனக்கு உதவியவர்கள் பலர். இவர்களுக்கு எல்லாம் பிறகு நன்றி தெரிவித்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் நாளை என்பது நிதர்சனமில்லை என்பதால் இன்றே தெரிவித்துக்கொள்கிறேன்.

அது என்னடா தெய்வ குத்தம்னு கேக்கறீங்களா??? ஏதோ ஆறு, ஆறுனு எல்லாரும் எழுதனாங்கலாம். நானும் எழுதனும்னு நம்ம கார்த்திக் பிரபு சொல்லிட்டாரு. அதனால ரெண்டையும் ஒன்னாக்கிட்டேன்.

பிகு:
எப்படியோ 50 பதிவு போட்டாச்சு.

34 பதில்கள்

 1. Quick 50! வாழ்த்துகள் 🙂

 2. Congrats for the 50th post!

 3. 50????wow…a good achievement within a short span of time.You are progressing very well.Your stories and kozi experiences are really good.Keep up the performance.

 4. நன்றிக்கு நன்றி :))

  50-க்கு வாழ்த்துக்கள்!!

  கலக்குங்க!! 🙂

 5. யப்போவ், 50-ஆ??? நடத்துங்க,நடத்துங்க…

 6. //(சென்ற வாரம் விழாயன் முடிய)//

  Whom did you meet after that?

 7. ஓ நீங்களும் பாஸ்டனா? சரிதான். இப்படி எத்தனை பேர் இன்னும் இங்கிட்டு திரியறாங்கன்னு தெரிலையே!

  சரிசரி.

  அம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். அப்படியே நூறடிச்சு ஓடிக்கிட்டேயிருங்க. எழுத்து முடியக்கூடாத இன்னிங்ஸ்!

 8. என்ன பாலாஜி. ரொம்ப மெதுவா இருக்கீங்களே. நானெல்லாம் தொடங்கி மூணாவது மாதமே 50வது பதிவு போட்டாச்சு. நீங்க என்னடான்னா ஏப்ரல்ல எழுதத் தொடங்கியிருக்கீங்க இப்பத் தான் 50வதா? ரொம்ப மெதுவா போறீங்களே?! 🙂 ஓ. முதல் பதிவு மே மாதத்துலத் தான் போட்டீங்களா? அப்பப் பரவாயில்லை. கொஞ்சம் பக்கத்துல வந்துட்டீங்க. 🙂

  50க்கு வாழ்த்துகள்.

  இப்பவும் தெய்வகுத்தம் ஆகும் போல இருக்கே. ஆறு விளையாட்டு விதிகளின் படி இன்னும் ஆறு பேரை நீங்க கூப்பிடணும். இல்லாட்டித் தெய்வக் குத்தம் ஆகிப் போகும். பாத்துக்கோங்க. 🙂

 9. பாபாகுமார்,
  நன்றி…

  செல்வன்,
  கதையை படிக்கறீங்களா??? பின்னூட்டத்தையே காணமேனு பாத்தேன்.

  கப்பி,
  நன்றி

  உதய்,
  நன்றி… அந்த கேள்விக்கு பதில் விரைவில் ஒரு பதிவில் வரும் 😉

 10. சுந்தர்,
  நீங்களும் பாஸ்டனா???
  நான் பக்கத்துல சப் – அர்ப்ல இருக்கேன்.

  குமரன்,
  நான் தமிழ்மணத்துல இனைந்தது ஜீன் -28 2 மாசத்துல 50 எழுதிட்டேனே இது போதாதா??? இதுக்கே ஒரு அனானி நல்லா வாழ்த்திட்டு போனாரு 😉

  ஓ!!! ஆறு பேரை கூப்பிடனுமா??? எல்லாரும் எழுதிட்டாங்களே…என்ன செய்ய???

 11. பின்னூட்டப் புயலார்,
  மிக்க நன்றி…

 12. Balaji,

  I have posted some of your good stories in muththamiz google group.See how many positive responses you got from there.

  http://groups.google.com/group/muththamiz/browse_thread/thread/78b4b67393511d41/be8f6c6f056cf87c#be8f6c6f056cf87c

 13. செல்வன்,
  மிக்க நன்றி…

 14. வெட்டியா எழுத ஆரம்பிச்சு 50 பதிவு வந்துருச்சா? :-)))

  வாழ்த்து(க்)கள்.

  மேன்மேலும் பதிவுகள் எழுதணும். எழுதுறீங்க.

 15. துளசி கோபால் said…
  //
  வெட்டியா எழுத ஆரம்பிச்சு 50 பதிவு வந்துருச்சா? :-)))

  வாழ்த்து(க்)கள்.
  //
  நன்றி. “எழுத ஆரம்பிச்சு” இது மட்டும் மேல இல்லனா ரொம்ப ஃபீல் பண்ணியிருப்பேன் 😉

  //
  மேன்மேலும் பதிவுகள் எழுதணும். எழுதுறீங்க.//

  கண்டிப்பா… டீச்சர் சொன்னா நான் தட்டவே மாட்டேன் 😉

 16. hi thalai en peraiyum ungal blogil pottadharkku mikka nandri ..
  romba quick a pirabalamagi irukeenga..50 padhivum potuteenga..ennai vida sandhosa pada yarum iruka mudiyadhu ..indhiya (chennai) varum podhu solunga vivarama pesuvom

  neenga boston la thana irukeenga ..numma balavuku(baba) en manmarndhu valthukkali sollungal..avar kitta irundhu nama niraiya kathukkanum..

 17. கார்த்திக் பிரபு,
  மிக்க நன்றி. வரும் போழுது கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன்.

  அவருக்கு ஏற்கனவே தெரியப்படுத்திவிட்டேன். உன்னை பற்றி நிறைய சொன்னார். நானும் அவரிடமிருந்து சின்ன சின்ன விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.

  அமுதா (ராம்குமார்),
  மிக்க நன்றி…

 18. ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்.
  உங்க டெம்ப்லேடை பார்த்தவுடன் “அட சூப்பரா இருகே!! என்று பார்த்தேன்.அது திரு கப்பி வேலை தானா?
  அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

 19. வடுவூர் குமார்,
  மிக்க நன்றி. நீங்க எல்லாம் தொடர்ந்து படிக்கிறதாலதான் நான் எல்லாம் எழுத முடியுது.

  அப்பறம் டெம்ப்லேட் நான் தான் செலக்ட் பண்ணேன். அதில் கமெண்ட் பகுதி அந்த பக்கத்திலே வரும் மாதிரி கப்பி கோட் எழுதி கொடுத்தார். அதுவும் நான் கேட்காமலே அவரே செய்து கொடுத்தார்…

 20. பதிவு எழுத ஆரம்பிச்ச 2 மாசத்திலே அம்பதா?

  ஆச்சரியமா இருக்கு பாபாஜி

  அடுத்த 5 மாசத்தில 500 அடிக்க வாழ்த்துக்கள்.

  கொஞ்சம் ஓவராதான் இருக்கோ?!!
  இருந்தாலும் நீங்க போடுவீங்கன்ற நம்பிக்கைல சொல்றேன்.

 21. தம்பி said…
  //பதிவு எழுத ஆரம்பிச்ச 2 மாசத்திலே அம்பதா?

  ஆச்சரியமா இருக்கு பாபாஜி
  //
  50 பதிவுகள் இருந்தாலும் சொல்லிக்கிற மாதிரி பதிவுகள் 10 தான் இருக்கும்.

  //
  அடுத்த 5 மாசத்தில 500 அடிக்க வாழ்த்துக்கள்.

  கொஞ்சம் ஓவராதான் இருக்கோ?!!
  இருந்தாலும் நீங்க போடுவீங்கன்ற நம்பிக்கைல சொல்றேன்.
  //
  இது கொஞ்சம் ஓவர் இல்ல… ரொம்ப ஓவர்.

  ஏற்கனவே தமிழ்மணத்துல நம்ம பதிவு அதிகமா இருக்கேனு எதுவும் எழுதாம உக்காந்திருக்கன்.

  பாராட்டுகளுக்கும் என் மேல் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றிகள் பல

 22. ஓ என் ப்ளாக படிச்சிட்டு இதவிட வெட்டித்தனம் வேற எதுவும் இருக்காதுன்னு தான் வெட்டிப்பயல்ன்னு பெயர் வைச்சிக்கிட்டீங்களா?? 🙂

  50க்கு வாழ்த்துக்கள் !!

 23. Dubukku said…
  //
  ஓ என் ப்ளாக படிச்சிட்டு இதவிட வெட்டித்தனம் வேற எதுவும் இருக்காதுன்னு தான் வெட்டிப்பயல்ன்னு பெயர் வைச்சிக்கிட்டீங்களா?? 🙂
  //
  குருவே சரணம்!!! உங்க ப்ளாக் படிச்சிட்டு, நாமெல்லாம் சத்தியமா ப்ளாக் ஆரம்பிக்க முடியாதுனு யோசிச்சிட்டு இருந்தேன்.

  அடுத்து தமிழ்மணத்துல நிறைய பேர் எழுதறத பாத்தவுடனே ஆசை வந்துடுச்சு.

  உங்களுடைய “நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் “, “நான் கெட்டு, நீ கெட்டு, கிரிக்கெட்டு” , “ஜொல்லி திரிந்த காலம்”, “தாமிரபரணி தென்றல்” எல்லாம் 2-3 தடவை படித்திருப்பேன்…

  இப்பவும் நீங்க போடற பதிவெல்லாம் படிச்சிட்டுதான் இருக்கேன். இன்னைக்கு கூட பம்பாய் படிச்சி சிரிச்சிட்டு இருந்தேன். எப்படித்தான் இப்படியெல்லாம் நக்கலா எழுதறீங்கனே தெரியல 😉

  //
  50க்கு வாழ்த்துக்கள் !!
  //
  மிக்க நன்றி… ஐம்பதாவது பதிவுக்கு வந்து முதல் பின்னூட்டம் போட்டுட்டீங்க :-))

 24. இப்ப தான் தேசிபண்டிட் லிங்க் குடுத்துட்டு வந்து பார்த்தா…ஹைய்யோ ரொம்ப ஓவரா புகழறீங்க…சரி சரி வீட்டுல உங்க கமெண்ட காட்டிட்டு சொல்றேன்…அப்புறமா அத டிலீட் செஞ்சிருங்க..என்ன 🙂

  //ஐம்பதாவது பதிவுக்கு வந்து முதல் பின்னூட்டம் போட்டுட்டீங்க // – பெரிய மனசு பண்ணி மன்னிச்சிருங்க…இனிமே அடிக்கடி வர்றேன்.

 25. //ஹைய்யோ ரொம்ப ஓவரா புகழறீங்க…சரி சரி வீட்டுல உங்க கமெண்ட காட்டிட்டு சொல்றேன்…அப்புறமா அத டிலீட் செஞ்சிருங்க..என்ன 🙂
  //
  உண்மையை தாங்க சொல்றேன்….
  மனசுக்கு ஏதாவது ரொம்ப கஷ்டமா இருந்தா உங்க பதிவை படிச்சு ஜாலி ஆயிடுவேன்.

  என் ஃபிரண்ட்ஸ்கிட்ட ப்ளாக்னா என்னனு சொல்றதுக்கு கூட உங்களுடைய பிளாக்தான் அனுப்பி வைத்தேன்.

  சரி பூஸ்ட் போதும்னு நினைக்கிறேன் 😉 நிறைய எழுதுங்க…

 26. வாழ்த்துகள் வெட்டி. ஐம்பது பதிவுகள் என்பது எளிதல்ல. அதிலும் வீணான பதிவுகள் இல்லாமல் போடுவது மிகக் கடினம். சாதனைக்கு வாழ்த்துகள். இன்னும் பல பதிக்க உங்கள் மேலாளர் இன்னும் நிறைய நேரம் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

 27. G.Ragavan said…
  //வாழ்த்துகள் வெட்டி. ஐம்பது பதிவுகள் என்பது எளிதல்ல. அதிலும் வீணான பதிவுகள் இல்லாமல் போடுவது மிகக் கடினம். சாதனைக்கு வாழ்த்துகள்//
  மிக்க நன்றி… நீங்க எல்லாம் கொடுக்கற உற்சாகம்தான் என்னை எழுத வைக்கிறது…

  // இன்னும் பல பதிக்க உங்கள் மேலாளர் இன்னும் நிறைய நேரம் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
  //
  இதுல எதாவது உள் குத்து இருக்கா???

 28. 50 க்கு வாழ்த்துக்கள்….சீக்கிரம் 100 அடிச்சு அப்படியே அது 1000..10,000 னு போக இன்னொரு வாழ்த்து 🙂

 29. வாழ்த்துக்கள் ஜுனியர் பாபா( பாஸ்டன் பக்கத்துல இருக்குற பாலாஜி) கவலைப்படாதிங்க இங்க வருகிற ஒவ்வொருத்தரும் படுகிற துன்பம் தான் இது போகப்போக இது பழகிடும்(குறைய வாய்ப்பே இல்ல)..

 30. Syam said…
  //
  50 க்கு வாழ்த்துக்கள்….சீக்கிரம் 100 அடிச்சு அப்படியே அது 1000..10,000 னு போக இன்னொரு வாழ்த்து 🙂 //

  மிக்க நன்றி… நான் இங்க இருக்கற வரைக்கும் தான் இந்த மாதிரி எழுதுவேன். இந்தியா போயிட்டா வாரத்துக்கு ஒன்னு போட்டாலே பெருசு. பாக்கலாம்…

  சந்தோஷ் said…
  //வாழ்த்துக்கள் ஜுனியர் பாபா( பாஸ்டன் பக்கத்துல இருக்குற பாலாஜி) கவலைப்படாதிங்க இங்க வருகிற ஒவ்வொருத்தரும் படுகிற துன்பம் தான் இது போகப்போக இது பழகிடும்(குறைய வாய்ப்பே இல்ல)..
  //
  நன்றி சந்தோஷ்…
  இப்ப பழகி போச்சு…

 31. கார்த்திக் பிரபு said…
  //
  emmadiyov evvalovo comments..kalkureenga balajeee..ippa ok thane
  //
  1. நான் கமென்ட்ஸ்ஸ பத்தி ஒன்னுமே சொல்லலையே… இப்ப ஓகேவானு கேட்டா நான் ஏதோ எல்லாத்தையும் கூப்பிட்டு போடுங்கனு சொல்ற மாதிரி இருக்கே!!! (இது நானா சேர்த்த கமென்ட்ஸ் இல்ல… அன்பால தானா சேர்ந்த கமென்ட்ஸ் 😉 )

  2. அங்க கொத்ஸ், தம்பி எல்லாம் சென்ச்சுரி போடறாங்க!!! நாம 30 அடிச்சாலே ரொம்ப பெருமப்படறயே கார்த்தி 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: