கோழியின் அட்டகாசங்கள் – 4

ஒரு வழியாக டிகிரி முடிச்சி கோழி பெங்களூர் வந்து சேர்ந்தான்.

கோழியும், OPயும் பிரௌசிங் சென்டர் சென்று வந்தார்கள்.

OP: டேய், இன்னைக்கு பிரௌசிங் சென்டர்ல கோழி என்ன பண்ணான் தெரியுமா???

நான்: என்ன பண்ணான்?

கோழி: டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லை… இவன் கதைவிடறான்.

OP: இல்லை இல்லை உண்மைதான். கோழி தனியா ஒரு கேபின்ல உட்கார்ந்து பிரௌசிங் பண்ணிட்டு இருந்தான். சரி தனியா என்ன பண்றான்னு எட்டிப் பார்த்த CD-ROMஓட உள்ளே, வெளியே விளையாடிட்டு இருந்தான். டேய் கோழி என்னடா பண்றனு கேட்டேன். அதுக்கு “Click here to get a free DVD”னு ஒரு லிங் இருந்துச்சி, அதை கிளிக் பண்ணிட்டு DVD வரும்னு CD – ROMல செக் பண்ணிட்டு இருந்தான்.

கோழி: டேய் அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஏண்டா DVD போய் CD – ROMல வருமா??? DVD ROMஆ இருந்தா வந்திருக்கும்.

OP: கேளுடா!!! DVD ROMஆ இருந்தா வந்திருக்குமாம் :-)… இதை சொல்லிதான் நான் அவனை சமாதானப்படுத்திக் கூப்பிட்டு வந்தேன்….

ஒரு வாரத்திற்குள் கோழி C படிக்க ஆரம்பித்துவிட்டான்.

Swap two numbers… இதை கோழிக்கு OP சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தான்.

OP: a, b, c மூணு வேரியபுல்ஸ் (Variables)
இப்ப என்ன பண்ணனுமா a ல இருக்கற வேல்யூ b க்கு வரணும். ஒகே வா?

கோழி: ஹிம்… ஓகே

OP:
இது தான் லாஜிக்.
c=a;
a=b;
b=c;
புரியுதா???

கோழி திருதிருன்னு முழிச்சிட்டு இருந்ததை பார்த்த இருமி சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சான்.

இருமி: டேய் கோழி, உன் 2 கையை நீட்டு.

கோழி கையை நீட்டினான்.

இருமி ரெண்டு கையிலும் 2 பந்தை கொடுத்து…

இருமி: இப்ப இந்த கைல இருக்கிற பந்து அந்த கைக்கு வரணும்… அந்த கைல இருக்கிற பந்து இந்த கைக்கு வரணும். எப்படி மாத்துவ?

கோழி: அப்படியே மாத்திக்க வேண்டியதுதான்… (கோழி ரெண்டு கைல இருக்கற பந்தையும் அப்படியே மாத்திக்கிட்டான்)

இருமி: அப்படியெல்லாம் மாத்தக் கூடாது. இரு… இப்ப உன்னோட இந்த கை- i , அந்த கை – j, என்னொட இந்த கை – K… இப்ப உன் கை-i ல இருக்கிற பந்தை என் கை-K க்கு மாத்து. அப்பறம் உன் கை-j ல இருக்கிற பந்தை i-க்கு மாத்து…
இப்ப என் கை-K ல இருக்கிற இந்த பந்தை உன் கை-jக்கு மாத்து…
இப்ப பந்து ரெண்டும் மாறிடுச்சா???

கோழி: ஆமாம்டா….

இருமி: இப்ப புரியுதா….

கோழி: உம்ம்ம்.. புரிஞ்சிடுச்சி

கோழி போய் பெட்ல படுத்துட்டு மேல விட்டத்தைப் பார்த்து யோசிச்சிக்கிட்டு இருந்தான்.

இருமி: OP!!! கோழி ரொம்ப யோசிச்சிக்கிட்டு இருக்கான். எனக்கு அவனுக்கு புரிஞ்சிதானு தெரியல…

10 நிமிஷம் கழிச்சி கோழி வெளில வந்தான்…

கோழி: OP பரதேசி நாயே…. a,b,c ன்னு சொன்னா யாருக்காவது புரியுமா??? இனிமேவாது i, j, kனு சொல்லிக் கொடு… புரிஞ்சிதா???

:-))))))

அட்டகாசங்கள் தொடரும்…

Advertisements

12 பதில்கள்

  1. அதான OP க்கு ஒன்னுமே தெரியல…C சொல்லி குடுக்கனும்னா i,j,k வெச்சு சொல்லி தராம கோழிய தப்புசொன்னா எப்படி 🙂

  2. Syam said…
    //அதான OP க்கு ஒன்னுமே தெரியல…C சொல்லி குடுக்கனும்னா i,j,k வெச்சு சொல்லி தராம கோழிய தப்புசொன்னா எப்படி 🙂 //
    கோழிக்கு சொல்லி கொடுக்க நீங்க தான் சரியான ஆள்னு நினைக்கிறேன் :-))

  3. பாலாஜி

    கோல்டி பதிவும் இதுவும் படித்தேன்.மிகவும் தேர்ந்த எழுத்தாளராக நீங்கள் உருவாகி வருவது தெரிகிறது.மிகவும் சுவையாக,அருமையாக எழுதுகிறீர்கள்.

    அன்புடன்
    செல்வன்

  4. தம்பி,
    நல்லா சிரிங்க… அதுதான் நமக்கும் வேணும் 🙂

  5. செல்வன் said…
    //
    பாலாஜி

    கோல்டி பதிவும் இதுவும் படித்தேன்.மிகவும் தேர்ந்த எழுத்தாளராக நீங்கள் உருவாகி வருவது தெரிகிறது.மிகவும் சுவையாக,அருமையாக எழுதுகிறீர்கள்.

    அன்புடன்
    செல்வன்
    //

    செல்வன்,
    மிக்க நன்றி.

    நானே உங்ககிட்ட பதிவ படிச்சிங்களானு கேக்கலாம்னு இருந்தேன், சரி எப்படியும் நைட்டுக்குள்ள படிச்சிடுவீங்கனு ஒரு நம்பிக்கை இருந்தது. இப்ப தான் ஒரு சந்தோஷம்…

  6. It’s realy good…. ha..ha..ha.. :)))))
    Karvendan

  7. ஆமா அந்த கோழி இப்ப என்ன பன்றாரு? நீங்க் அடிச்ச கூத்துக்கு நொந்து 65 ஆயிருப்பாரே?

    :))
    :)))
    :))))
    :)))))
    :))))))))))))))))))

  8. Karvendan,
    நல்லா சிரிங்க…

    மகேந்திரன்.பெ said…
    //ஆமா அந்த கோழி இப்ப என்ன பன்றாரு? நீங்க் அடிச்ச கூத்துக்கு நொந்து 65 ஆயிருப்பாரே?//
    அடுத்த பகுதியில கோழியைப் பத்தி முழு விவரத்தையும் சொல்லிடறேன்… இந்த பதிவோட நோக்கமும் அதுல வரும்

  9. என்னது இது கோழியோட றெக்கையெல்லாம் பிரிச்சி மஞ்சத் தடவியாச்சு போல…அடுத்து அறுத்து கொழம்புலதான் போடனும் போல.

  10. G.Ragavan said…
    //என்னது இது கோழியோட றெக்கையெல்லாம் பிரிச்சி மஞ்சத் தடவியாச்சு போல…அடுத்து அறுத்து கொழம்புலதான் போடனும் போல. //
    அடுத்த பதிவுல தெரியும்.. பாருங்க

  11. வணக்கம் பாலாஜி

    நல்ல நகைச்சுவையான பதிவு ! வாழ்த்துக்கள்!

    நான் உங்கள் mail idக்குஒரு மெயில் அனுப்பியுள்ளேன்.அதையும் பார்த்து reply செய்யவும்!

    siva subramanian frm Tirunelveli

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: