• Top Clicks

  • எதுவுமில்லை
 • அதிகம் பார்வையிடப்பட்டவை

 • Blog Stats

  • 28,692 hits
 • Advertisements

கோழியின் அட்டகாசகங்கள் – 5

இதுவரை நான் கோழி செய்ததாக சொன்னதில் 2-3 தான் உண்மை. மத்ததெல்லாம் கோழி செய்தான்னு OPதான் கதை கட்டிவிட்டது. ஆனால் எல்லோரும் அது உண்மைனு நம்பிடுவாங்க. கோழியும் எதுவும் பெருசா கண்டுக்கமாட்டான். அவர்களுக்குள் அப்படி ஒரு நட்பு…

கோழி பெங்களூர் வந்த புதிதில், எங்கள் நண்பர்களுள் ஒருவன் சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது.
“டேய் கோழி பெங்களூர் சுத்தி பார்க்க வந்திருக்கான். 1 மாசத்துல கிளம்பிடுவான். ஒழுங்கா அவனுக்கு எல்லா இடத்தையும் சுத்திக் காட்டுங்க”

ஆனால் ரூம்ல ஒவ்வொருவருக்கா வேலை கிடைக்க ஆரம்பித்தது. அதுவரைக்கும் விளையாட்டுப் பையனா நான் பார்த்த கோழி தீவிரமா படிக்க ஆரம்பிச்சான். சின்ன சின்ன டவுட்னாக்கூட கூச்சப்படாமக் கேட்டு தெரிஞ்சிக்கிட்டான்.

நான் தூங்கும் போதும் படிச்சிட்டுதான் இருப்பான், நான் எழுந்திரிக்கும் போதும் படிச்சிக்கிட்டு தான் இருப்பான். (நான் அப்போழுது வேலையில் சேர்ந்துவிட்டேன்). அவனுக்கு எது தேவையோ அதை மட்டும் படிச்சான். முதல்ல 4-5 கம்பெனி இண்டர்வியுவில ஊத்திக்கிச்சி… ஆனால் அதுல அவன் இண்டர்வியு போனதே எங்களுக்கு எல்லாம் ஆச்சரியம்.

கடைசியா அவனுக்கு ஒரு பெரிய MNCல வேலை கிடைச்சிது. கோழிக்கு வேலை கிடைச்சது எங்க பசங்க எல்லோருக்கும் நம்பிக்கையை கொடுத்தது. அதற்கு பிறகு ஊர்ல இருந்து வந்து வேலை வாங்கனவங்க நிறையப் பேர். அவர்களுக்கு கோழியும் சில சமயம் சொல்லி கொடுப்பான். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

அவனுக்கு லக்குல வேலை கிடைச்சதுன சொல்றவங்களும் இருக்காங்க… ஆனால் கூட இருந்து பாத்தவன் நான். அவனுடைய உழைப்பும், விடாமுயற்சியுமே அவனுக்கு வேலை வாங்கி கொடுத்தது…
இப்ப பிரமோஷன் எல்லாம் வாங்கி… மற்றவர்களை இண்டர்வியு செய்யும் நிலையில் அவன் இருக்கிறான்…

என்னை பொருத்தவரை கோழி ஒரு கதாநாயகன்!!!

Advertisements

27 பதில்கள்

 1. முயற்சி நிச்சியம் கைவிடாது…ஊர் ஆயிரம் பேசும், அதெல்லாம் நம்ம கண்டுக்கப்பிடாது..என்பதற்கு நல்ல உதாரணம் கோழி..மேலும் வளர வாழ்த்துக்கள்!

  சுவையாய் தொடர் எழுதியமைக்கு உங்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள்!!

 2. //முயற்சி நிச்சியம் கைவிடாது…ஊர் ஆயிரம் பேசும், அதெல்லாம் நம்ம கண்டுக்கப்பிடாது..என்பதற்கு நல்ல உதாரணம் கோழி..மேலும் வளர வாழ்த்துக்கள்!//
  சரியாக சொன்னீர்கள் சங்கர். அவன் மட்டும் ஊர்ல மத்தவங்க ஓட்டறதையெல்லாம் பெருசா எடுத்துருந்தானா இன்னைக்கு இவ்வளவு நல்ல நிலைமைல இருக்க முடியாது. ஹீரோக்கள் வானத்தில் இருந்து வருவதில்லை, நம் அருகிலே இருப்பார்கள். நாம்தான் இனம் கண்டுகொள்ள வேண்டும்.

  //சுவையாய் தொடர் எழுதியமைக்கு உங்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள்!!
  // நன்றி சங்கர்.

 3. இன்னா வாத்யாரே .. நாலு போஸ்ட்ல கோயிய சாத்து சாத்துன்னு சாத்திட்டு அஞ்சாவது போஸ்டல கீரோன்னா எப்டி?
  அன்னிக்கும் கோயி ஹீராதான் இன்னிக்கும் கோடி கீரோதான் இன்னா சொல்ர‌

 4. //இன்னா வாத்யாரே .. நாலு போஸ்ட்ல கோயிய சாத்து சாத்துன்னு சாத்திட்டு அஞ்சாவது போஸ்டல கீரோன்னா எப்டி?
  அன்னிக்கும் கோயி ஹீராதான் இன்னிக்கும் கோடி கீரோதான் இன்னா சொல்ர‌ //

  இதற்கு நான் சாவி போடுகிறேன்

 5. //இன்னா வாத்யாரே .. நாலு போஸ்ட்ல கோயிய சாத்து சாத்துன்னு சாத்திட்டு அஞ்சாவது போஸ்டல கீரோன்னா எப்டி?
  அன்னிக்கும் கோயி ஹீராதான் இன்னிக்கும் கோடி கீரோதான் இன்னா சொல்ர‌ //
  கோலி எப்பவுமே ஹீரோதாம்பா…
  முதல்ல 23-ம் புலிகேசில இருக்கற புலிகேசி மாதிரி இருந்தான்… இப்ப உக்கிரபுத்திரனா இருக்கான் 😉

 6. நைனா அது // உக்கிரபுத்திரனா // இல்ல”உக்கிர புத்தன்”

  கேரக்டரையே புரிஞ்சுக்கலின்னா எப்டி வாத்யாரே?

 7. //நைனா அது // உக்கிரபுத்திரனா // இல்ல”உக்கிர புத்தன்”

  கேரக்டரையே புரிஞ்சுக்கலின்னா எப்டி வாத்யாரே? //
  அனானி பேரா முக்கியம்? கேரக்டர்தான் உனக்கு புரிஞ்சிடுச்சி இல்லை.. அப்பறம் ஏன்???

  ஆமாம் அனானி, உங்க பேரை போட்டு எழுதறது??? ஏன்னா, இவ்வளவு நியாயமான கேள்வி கேட்டுருக்கீங்க… யாருன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான் 🙂

 8. //மத்ததெல்லாம் கோழி செய்தான்னு OPதான் கதை கட்டிவிட்டது.//

  அதுக்குத் தானே நட்பு 😉

  //என்னை பொருத்தவரை கோழி ஒரு கதாநாயகன்!!! //

  நேத்து கோழி போன் பண்ணி உங்களைத் திட்டிட்டாரோ?? :)))

  //அவனுடைய உழைப்பும், விடாமுயற்சியுமே அவனுக்கு வேலை வாங்கி கொடுத்தது…
  //

  தமிழ் சினிமா மாதிரி காமெடி தொடர்னாலும் மெசெஜ் சொல்லி முடிச்சுட்டீங்களே 🙂

  கோழி அட்டகாசங்கள் நல்லா இருந்துச்சு வெட்டி..வாழ்த்துக்கள்!

 9. Hello,
  I am also from coimbatore. i studied in SNR. As your friend did. in my college first lab …. we all are seeing computer first time in life and lab assitants explained how to use. how to insert the floppy…etc. at the end we want to leave the lab and lab asistant went some where. no body knows how to switch off the computer and we were afraid too. then finaly we deicded to call on staff for this. we called a staff and she also came. she asked what happen. one guy told we want to turn it off and want to know how also. she carried a smile on her face and asked one guy to take a look bechind the computer. one guy did it aand he told no switches on the backside of the monitor. she now starts laughing and asked him to look into the wall for a switch. our friend said no switches madam only power plug is there. she simply said ok “Pudungi vittudu athai”. He tried to pull from this side. a table was between the wall and him. so he applied some force and the panel got broken and he was standing with a broken panel with a plug.

  then lab assistant came and asked who did that and “dont you know how to shutdown a computer”.. when that time we were searching for her and she was not there…..

 10. //நேத்து கோழி போன் பண்ணி உங்களைத் திட்டிட்டாரோ?? :)))
  //
  கோழிக்கிட்ட நான் OP உன்னைப் பத்திப் போட்ட பிட்டெல்லாம் என் பிளாக்ல எழுத போறன்னு சொன்னேன். அவன் சொன்னது “Permission Granted”… அவனுக்கு இந்த பிளாக் எல்லாம் எதுவும் தெரியாது. நாந்தான் PDFல எடுத்து அனுப்பலாம்னு இருக்கேன்.

  //தமிழ் சினிமா மாதிரி காமெடி தொடர்னாலும் மெசெஜ் சொல்லி முடிச்சுட்டீங்களே 🙂
  //
  மெசெஜ்க்காக ஆரம்பிச்சதுதான் இந்த தொடரே!!! இதை படிச்சால் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வரும்னு நினைக்கிறேன்.

  //கோழி அட்டகாசங்கள் நல்லா இருந்துச்சு வெட்டி..வாழ்த்துக்கள்!
  // நன்றி.. கப்பி

 11. Akil,
  Our college also belongs to SNR trust.

  It happens to all for the first time… OP (mastermind of all these bits) is the one who taught me how to login and shutdown computer and he used to say… “Naan solli koadutha paiyan eppadi valanthutan paaru ;)”

 12. கடைசில அடிச்சாரு பாருங்க கோழி ஒரு ஸிக்ஸரு அது தான் ஹைலைட்டே…கோழி இன்னும் வளர வாழ்த்துக்கள்… 🙂

 13. Syam,
  தொடர்ந்து படித்ததற்கு நன்றி…

  உங்களுடைய வாழ்த்தை கோழிக்கு சொல்லிடறேன்…

 14. கோழியின் அட்டகாசங்களை படித்து வயிறு வலிக்க சிரித்தேன். எல்லா நட்பு வட்டத்திலும் அவரை போன்ற ஒருவர் கட்டாயம் இருப்பார். முடிவு அருமை.

 15. SathyaPriyan said…
  //
  கோழியின் அட்டகாசங்களை படித்து வயிறு வலிக்க சிரித்தேன். எல்லா நட்பு வட்டத்திலும் அவரை போன்ற ஒருவர் கட்டாயம் இருப்பார். முடிவு அருமை.
  //
  நன்றி சத்யா…

 16. வெட்டிப்பயல்,

  //மெசெஜ்க்காக ஆரம்பிச்சதுதான் இந்த தொடரே!!! இதை படிச்சால் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வரும்னு நினைக்கிறேன்.//

  இருந்தாலும் கோழியின் (OP யின்?)லீலைகள் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்தது வருத்தமே. 😉

  முடிந்தால் OP யையும் சக படைப்பளியாக்கி, ‘கற்பனையில் கோழி’ ன்னு புதிசா ஒரு தொடர் போடுங்க.

  நல்லாருந்தது. வாழ்த்துகள்.

 17. வணக்கத்துடன் said…
  //
  வெட்டிப்பயல்,

  //மெசெஜ்க்காக ஆரம்பிச்சதுதான் இந்த தொடரே!!! இதை படிச்சால் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வரும்னு நினைக்கிறேன்.//

  இருந்தாலும் கோழியின் (OP யின்?)லீலைகள் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்தது வருத்தமே. 😉

  முடிந்தால் OP யையும் சக படைப்பளியாக்கி, ‘கற்பனையில் கோழி’ ன்னு புதிசா ஒரு தொடர் போடுங்க.

  நல்லாருந்தது. வாழ்த்துகள்.
  //
  OPயை கேட்டால் இந்த மாதிரி 100 விஷயங்களை சொல்லுவான், ஆனால் கோழி பாவங்க!!! ஏற்கனவே போட்ட பிட்டுக்கே அளவில்லாமல் இருக்கு…

  முடிந்தால் மீண்டும் ஆரம்பிக்கிறேன்…

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

 18. வெட்டி கடேசில கருத்து கருத்துன்னு என் மடியில கைவக்கிறீங்களே நாயமா? நீங்க பாட்டுக்கு வின்டோசை ஓப்பன் பன்னுவது எப்படி, சேவலின் சில்லிண்டித் தனம்னு எதையாவது எழுதுங்களேன் :)))))))))))))))))))))))))))))))))))))))

 19. என்னது இது…றெக்கைய உரிச்சி மஞ்சத் தடவுனப்புறம் கொழம்பு வெப்பீங்கன்னு பாத்தா…நீங்க காளி கோயில் மாதிரி கோழி கோயில் கெட்டீருக்கீங்க…ம்ம்ம்ம்..

  உண்மையிலேயே நல்ல விஷயம்தான் சொல்லீருக்கீங்க. நானும் பெங்களூருக்கு வேலை தேடி வந்தப்ப வெவரம்..ரொம்பச் சுத்தம். அந்த மூனு நாலு மாசத்துல அவென்யூ தெருவுல பழைய புக்கு வாங்கிப் படிச்சதுதான் இன்னைக்கு இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கு. இந்த சமயத்துல என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். மிக்க நன்றி. மிக்க நன்றி.

 20. மகேந்திரன்.பெ said…
  //வெட்டி கடேசில கருத்து கருத்துன்னு என் மடியில கைவக்கிறீங்களே நாயமா? நீங்க பாட்டுக்கு வின்டோசை ஓப்பன் பன்னுவது எப்படி, சேவலின் சில்லிண்டித் தனம்னு எதையாவது எழுதுங்களேன் :))))))))))))))))))))))))))))))))))))))) //
  நான் கருத்து சொல்றது எல்லாம் சின்ன பசங்களுக்குத்தான் 😉

  அடுத்து பகுதி கொஞ்சம் நாள் கழித்து எழுதுவோம்… இப்ப தானே இதை முடிச்சி இருக்கோம்

 21. G.Ragavan said…
  //என்னது இது…றெக்கைய உரிச்சி மஞ்சத் தடவுனப்புறம் கொழம்பு வெப்பீங்கன்னு பாத்தா…நீங்க காளி கோயில் மாதிரி கோழி கோயில் கெட்டீருக்கீங்க…ம்ம்ம்ம்..

  உண்மையிலேயே நல்ல விஷயம்தான் சொல்லீருக்கீங்க. நானும் பெங்களூருக்கு வேலை தேடி வந்தப்ப வெவரம்..ரொம்பச் சுத்தம். அந்த மூனு நாலு மாசத்துல அவென்யூ தெருவுல பழைய புக்கு வாங்கிப் படிச்சதுதான் இன்னைக்கு இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கு. இந்த சமயத்துல என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். மிக்க நன்றி. மிக்க நன்றி.
  //
  கோவில் எல்லாம் கட்டலைங்க… உண்மையை சொன்னேன்.

  பெங்களூர் வாங்கடா வேலை வாங்கிடலாம்னு நான் சொன்னப்ப எவனுமே கேக்கலை… கோழிக்கு வேலை கிடைச்சவுடனே அத்தனை பயலுகளும் கிளம்பி வந்துட்டானுங்க.

  அதனாலதான் சொன்னேன்… அவன் ஹீரோன்னு…

 22. Super appu … How to type in tamil ? Pls guide me !

  /Anbudan Anbu

 23. அன்பு,
  மிக்க நன்றி…

  தமிழில் டைப் செய்ய

  http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?op=&cid=3

  மேற்சொன்ன தளத்தில் இருந்து இ-கலப்பையை இறக்கி கொள்ளவும்…
  மேற்கொண்ட உதவிகள் இந்த தளத்திலே இருக்கும்.

 24. கதையின் நீதி:

  கோழியப்பாத்தியா, கடசில MNC ல வேலைய கோழி அமுக்குறா மாரி அமுக்கிட்டான்…!! இந்த மாரி ஜோக் பார்ட்டிகிட்டல்லாம் ஜாக்ரதையா இருக்கணும்…

  😀

 25. சங்கர்,
  கஷ்டப்பட்டு படிச்சான்… சாதிச்சான்.

  எதுவும் தெரியாம இருக்கறது தப்பு இல்ல.தெரிஞ்சிக்காமலே இருக்கறதுதான் தப்பு 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: