• Top Clicks

  • எதுவுமில்லை
 • அதிகம் பார்வையிடப்பட்டவை

 • Blog Stats

  • 28,692 hits
 • Advertisements

கோழியின் அட்டகாசங்கள் -1

காலேஜ் முதல் வருடத்தில் சீனியர் அதிகமாக ரேகிங் செய்யுமிடத்தில் மெஸ்ஸிற்கு தான் முதலிடம்…

ஞாயிறு மதியம் சிக்கன். எல்லோரும் பம்பிட்டே சாப்பிட்டிருந்தோம்…
திடிர்னு சிக்கன் தீந்திடுச்சி (பர்ஸ்ட் இயர் பசங்க வந்திருக்காங்க கொஞ்சம் அதிகமா செய்யனும்னு தெரியாதா அந்த மெஸ்ல இருக்கறவனுங்க செஞ்ச வேலை).

எங்க முன்னாடி உட்கார்ந்திருந்த சீனியர்கிட்ட வந்த அவன் பிரண்டு,

சீ.2: டேய் மச்சான் சிக்கன் தீந்திடுச்சாம்…திரும்ப புதுசா செஞ்சிட்டு இருக்கானுங்க… இன்னும் அரை மணி நேரமாகுமாம்…

சீ.1: அதுவறைக்கும் என்ன பண்ணலாம்????

சீ.2: (என்னிடம்) டேய் நீ என்ன டிப்பார்ட்மென்ட்ரா?

நான்: ஐ.டி சார் (அண்ணானு சொல்ல கூடாதாம்)

சீ.2: சரி நீ போய் மெஸ்ல சாப்பிட்டுட்ருக்கற ஐ.டி பசங்க எல்லாத்தையும் கூப்ட்டு வா…

நான்: சரிங்க சார்

சீ.1: மவனே அப்படியே எஸ்ஸான…அவ்வளவுதான்…தெரியுமில்லை.

நான்: அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் சார்…

சீ.2: சரி போ…5 நிமிஷத்தில இங்க இருக்கனும். (என் பக்கத்தில் அமர்ந்திருப்பவனிடம்) டேய்…நீ 1,2 சொல்லு…
(என்னிடம்) அவன் 300 சொல்லி முடிக்கறத்துக்குள்ள நீ இங்க இருக்கனும்.

நான்: சரி சார்… (மனசுக்குள்ள: நாதாரி நாயி… பெரிய M.N.நம்பியார்னு நினைப்பு…உனக்கெல்லாம் சத்தியமா வாஷ் அவுட்தான்டா ஆகும்)

5 நிமிடத்திற்குள் ஒருவழியாக மெஸ்ல இருக்கிற எல்லா ஐ.டி பசங்களையும் கூப்பிட்டு வந்துவிட்டேன்.

சீ.2: (என்னிடம்) சரி நீ உக்காரு…
(மீதி இருப்பவர்களை பார்த்து) ஏன்டா நீங்க எல்லாம் சிக்கனையே பாத்ததில்லையா??? ஏன்டா இப்படி ஊருக்கு முன்னாடி வந்து தின்னு தீக்கறீங்க?

நான் மனதிற்குள்: டேய் நாயே உனக்கு கிடைக்கலங்கற வயித்தெரிச்சல்ல பேசிட்டு… எங்களை அலையறோங்கிறயா???

சீ.1: சரி… இப்ப நீங்க என்ன பண்ண போறீங்கனா, ஒருத்தவன் ஒருத்தவனா
வந்து கோழி புடிக்கிறீங்க..என்ன புரியுதா???

ஒவ்வொருத்தவனா வந்து கோழி புடிக்கிற மாதிரி நடித்தார்கள்…

சீனியர் கமென்ட்ஸ்:
* ஏன்டா கோழி புடிடானா நாய் புடிக்கிற மாதிரி ஓடற…
* ஏன்டா செத்த கோழியா புடிக்கிற…ஒளுங்கா புடிடா
* டேய மச்சான், அங்க பாருடா அவன் கோழி புடிடானா கபடி ஆடறான்

கூடவே நிறைய சென்ஸார் செய்ய வேண்டிய வசனங்கள்…

இந்த நிலைமையில் எங்களை காப்பாற்ற வந்தான் காரமடை சிங்கம்…

அவன் கோழி புடிக்கிற அழக பாத்து எல்லோரும் அரண்டு போயிட்டானுங்க…
(அப்பறம் ஒவ்வோரு சீனியர் ரூமுக்கும் போயி கோழி புடிச்சி காட்டினான். அது வேற கதை)

அன்றிலிருந்து அவன் பெயர் “கோழி” என்றானது…அவன் செய்த அட்டகாசங்களுக்கு அளவே இல்லை… அதை பற்றிய ஒரு தொடரே இது…

Advertisements

4 பதில்கள்

 1. எங்க செட்லயும்(என்ன செட்டு பெரிய சேவிங் செட்டு) ஒரு கோழி இருக்கான்..இவனுடைய பெயர்க்காரணம்..பிராய்லர் கோழி மாதிரி 24X7 தீனி கிடைச்சா சாப்பிட்டுட்டே இருப்பான் 🙂

 2. syam,
  எங்க இந்த பதிவுக்கு பின்னூட்டமே இல்லாம முடிஞ்சிடுமானு பார்த்தேன்!!!
  நல்ல வேலை காப்பற்றிவிட்டீர்கள் 🙂

 3. பாபாண்ணே,
  ரொம்ப நன்றி…
  தொடர்ந்து படிக்கவும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: