ஒரு சின்ன ஆராய்ச்சி…

இது நேத்து உனக்கும் எனக்கும் பார்க்கும் போது எனக்கும் என் ரூம் மேட்டுக்கும் நடந்த ஒரு உரையாடல்…

ரூ.மே: நம்ம த்ரிஷா நடிச்ச வெற்றி படங்களுக்கும், தோல்வி படங்களுக்கும் வித்தியாசம் என்ன???

நான்: வந்த புதுசுல, கிடைச்ச படங்கள் எல்லாத்துலையும் நடிச்சாங்க…இப்ப கதைய தேர்ந்தெடுத்து நடிக்கறாங்க…

ரூ.மே: டேய் மச்சான் என்ன ஆச்சி உனக்கு. தெளிவா தானே இருக்க??? தமிழ் படத்துல ஹீரோஸே கதைய கேக்கறதில்லை. நீ என்னனா அவுங்க கதைய கேட்டு நடிக்கிறாங்கன்ற???

நான்: அப்படி இல்லை. படத்துல் அவுங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கற மாதிரி பாத்து நடிக்கிறாங்க…

ரூ.மே: டேய் என்னடா ஆச்சி உனக்கு. திருப்பாச்சி பாத்த இல்லை… அதுல அவுங்க தான் கதாநாயகினு பாட்ட வெச்சிதான் தெரிஞ்சிக்க முடியும்.

நான்: சரி இப்ப நல்ல பெரிய ஹீரோஸ் கூட நடிக்கிறாங்க…

ரூ.மே: “ஆறு” பாத்த இல்லை??? அப்பறம் என்ன இப்படி சொல்ற???

நான்: சரி நீயே சொல்லு…

ரூ.மே: சரி அவுங்க நடிச்ச ஹிட் படமெல்லாம் சொல்லு

நான்: சாமி, கில்லி, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும்

ரூ.மே: தெலுகு படத்தையும் சொல்லு…

நான்: வர்ஷம், நூ வொஸ்தானன்டே நேன்னொத்துன்டானா?, அத்தடு, பவுர்ணமி

ரூ.மே: பிளாப் படமெல்லாம் சொல்லு

நான்: லேசா லேசா, அலை, மனசெல்லாம், ஜி, எனக்கு 20 உனக்கு 18, ஆய்த எழுத்து, ஆதி, ஆறு, அல்லரி புல்லுடு (தெலுகு)…

ரூ.மே: நல்லா யோசிச்சி பாரு…

நான்: ஒன்னும் தெரியல நீயே சொல்லு.

ரூ.மே: ஹிட் படத்துல எல்லாம் அம்மணி பாவாடை தாவணில வருவாங்க…
பிளாப் படத்துல எல்லாம் மாடர்ன் டிரஸ்ல வருவாங்க :-)))

நான்: ஆஹா, இதை நான் யோசிக்கவே இல்லையே….
டேய் “ஜி”ல பாவாடை தாவணில தான வருவாங்க???

ரூ.மே: ஏன்டா “தலை” எஃபக்ட் இருக்கும் போதூ த்ரிஷா எஃபக்ட் ஒர்க் அவுட் ஆகாது. புரியுதா???

நான்: அது சரிதான்…சரி நான் ஒன்னு கேக்கறன். நீ சொல்லு.
“ஜி” படத்துக்கு பெயர் காரணம் சொல்லு.

ரூ.மே: நான் அந்த படம் பாக்கல நீயே சொல்லு…

நான்: டேய் மச்சான்…இப்ப என்ன ஆச்சி உனக்கு??? எத்தனை வருஷம் படம் பாக்கற… படத்துக்கும் பேருக்கும் என்னைக்காவது சம்பந்தம் இருக்குமா?

ரூ.மே: நிஜத்துல தான் நம்மல ஒரு பயலும் மதிக்க மாட்றான்…படத்து பேராவது நம்மல மதிக்கிற மாதிரி இருக்கணும்னா???

நான்: டேய் இது கொஞ்சம் டூ மச்…
திரைப்படத்துறைல டாப் ஹீரோஸ் (அதிக ரசிகர்கள்) யார் யார்???

ரூ.மே: எம்.ஜி.ஆர், ரஜினி.

நான்: இவுங்க ரெண்டு பேர் பேருலையும் ஒரு ஒத்தும இருக்கு பாரு…

ரு.மே: என்ன ஒத்தும???

நான்: அஜித் பேருலையும் அது இருக்குடா…நல்லா பாரு…

ரூ.மே: ஆமான்டா..மூணு பேர் பேருலையும் நடு எழுத்து ‘ஜி’

நான்: அதே :-))

Advertisements

15 பதில்கள்

  1. ஜி வ்வுன்னு ஏறுதுங்க உங்க ஆராய்ச்சி..பேசாமல் வரலாறு டாட் காமில் கட்டுரை எழுதலாமுங்க..

    -theevu-

  2. அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!

  3. ¬†¡ ¾¢ÕõÀ×õ ¾¡Å½¢Â¡!!!
    þÐìÌ §Áø ±Ð×õ ±Ø¾¢ ….¸¢ì¸ðʦ¸¡ûÇ ¿¡ý ¾Â¡Ã¡¸ þø¨Ä.

  4. ரொம்ப நல்ல ஆராய்ச்சி
    தொடர வாழ்த்துக்கள்

  5. வடுவூர்,
    என்ன சொல்றீங்கனே புரியல 😦

    சிவா,
    நீங்களாவது பாராட்றீங்களே!!! மிக்க மகிழ்ச்சி 🙂

  6. நல்ல ஆராய்ச்சிபா

  7. இதை கொடுக்க மறந்துட்டேன்.அதனால் தான் முதல் பின்னூட்டம் புரியவில்லை.
    மன்னிக்கவும்.
    http://harimakesh.blogspot.com/2006/07/25_30.html
    சும்மா!! :-))

  8. அதென்னவோ தமிழ்மணத்தில் த்ரிஷா மோகம் கொஞ்சம் ஜாஸ்தியாயிட்ட மாதிரி தெரியுது.நேத்து ஒருத்தர் அவர் பசங்க த்ரிஷாவை பாத்து வளர்வதா எழுதினார்.இன்னைக்கு நீங்க இதை எழுதறீங்க.

    எப்படியோ த்ரிஷாவுக்கு காஸ்ட்யூம் டிசைஙினில் கவனம் செலுத்த இது நல்ல சந்தர்ப்பம்

  9. $elvan,
    //அதென்னவோ தமிழ்மணத்தில் த்ரிஷா மோகம் கொஞ்சம் ஜாஸ்தியாயிட்ட மாதிரி தெரியுது//
    அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நம்ம ஆதரவு எல்லோருக்கும் உண்டு :-))

  10. வடுவூர்,
    உங்களோட தாவணி கனவுகளை நான் நியாபகாப்படுத்திட்டனா???
    பயப்படாம உளருங்க 🙂

  11. ஆழ்ந்த கருத்து அற்புதமான சிந்தனை..தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி… 🙂

  12. //ஆழ்ந்த கருத்து அற்புதமான சிந்தனை..தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி… 🙂 //

    syam,
    இனிமேல் யாராவது சொல்வாங்களா நான் இந்த பேரை வெச்சிக்கிட்டது தப்புனு 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: