கேப்டனுக்கு ஒரே போட்டியாளர்!!!

நகைச்சுவை படங்களில் நடிப்பதற்கு கேப்டனுக்கு போட்டியாளர்கள் யாருமில்லை என்று நினைத்திருந்த அகில இந்திய கேப்டன் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

அவருக்கு போட்டியாக ஆந்திராவில் ஒரு புயல் மையம் கொண்டிருந்ததை இத்தனை நாளாக யாரும் உணரவில்லை.

முன்னெச்சரிக்கை:
18 வயதுக்கு கீழிருப்பவர்களும், இதய பலகீனமுள்ளவர்களும் இதை பார்க்க வேண்டாம்.

MI-IIhttp://www.youtube.com/watch?v=ygR68FIvri0&search=ballaya

Attacking Terroristhttp://youtube.com/watch?v=GZJDTszmN_Y&search=balayya

Trainhttp://youtube.com/watch?v=5ZxyGrJpwN0&search=balayya

Bikehttp://www.youtube.com/watch?v=eB5JzLy2e3c&search=balayya

மேலே உள்ள காட்சிகளைப் பார்த்து நரசிம்மாவைவிட சிறந்த நகைச்சுவை படமாக பாலைய்யாவின் விஜயேந்திர வர்மா உள்ளதாக கேப்டன் ரசிகர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.
அதுவும் பாராசூட்டில் தரையிலிருந்து ஹைதராபாத்திலிருந்து பாகிஸ்தான் சென்று அனைத்து தீவிரவாதிகளையும் ஒரே ஆளாக கொன்ற பாலைய்யாவை Vice-Captainஆக சேர்த்துக் கொள்ளுமாறு ரசிகர்கள் கேப்டனை வேண்டியுள்ளனர்.

24 பதில்கள்

 1. கேப்டன் ரசிகர்
  உங்களை இனி சும்மா விடமாட்டார்:-)

 2. எதுவாக இருந்தாலும் விஜயேந்திர வர்மாவைப் பார்த்துவிட்டு சொல்லட்டும்.

  என்னதான் கேப்டன் Windows Media Playerல் டைப் செய்து பில் கேட்ஸை குழப்பியிருந்தாலும், பாலைய்யா தரையிலிருந்து பாராசூட்டில் மேலே செல்வதைப் பார்த்து கேப்டனே குழம்பிப் போய் இருப்பதாக அவருடைய ரசிகர் பெருமக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

 3. $elvan,
  நீங்களே கொஞ்ச நாள் முன்புவரை விஜயேந்திரவர்மா பாலைய்யாவை உங்கள் Profileல் வைத்திருந்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…

 4. அதை வேற கண்டுபிடிச்சுட்டீங்களா?:-)))

  அதெல்லாம் எதிர்கட்சிகளின் சதிங்க.நம்பாதீங்க பாலாஜி.:-))))

 5. பாலைய்யா, THE GREAT… இதை பார்த்து நாங்கள் சிரித்த சிரிப்புக்கு அளவே இல்லை…

 6. //அதுவும் பாராசூட்டில் தரையிலிருந்து ஹைதராபாத்திலிருந்து பாகிஸ்தான் சென்று அனைத்து தீவிரவாதிகளையும் ஒரே ஆளாக கொன்ற பாலைய்யாவை Vice-Captainஆக சேர்த்துக் கொள்ளுமாறு ரசிகர்கள் கேப்டனை வேண்டியுள்ளனர்.//

  என்னது…. தரையில் இருந்து பாராசூட்டில் பறந்து பாகிஸ்தான் போனாரா..?

  ஸ்ஸ்…. அப்பாடி இப்பவே கண்ணைக்கட்டுதே…

  அன்புடன்…
  சரவணன்.

 7. //அதை வேற கண்டுபிடிச்சுட்டீங்களா?//
  $elvan,
  உங்க பிளாக்கை நான் முதன்முதலாக திறந்ததே அந்த படத்தைப் பார்த்துத்தான்.

  //அதெல்லாம் எதிர்கட்சிகளின் சதிங்க.நம்பாதீங்க பாலாஜி.:-))))
  //
  இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது :-))

 8. உதய்,
  இந்த சீன்களை எல்லாம் விட படத்தில் பல காமெடி சீன்கள் உள்ளன… முடிந்தால் MI-4 பார்த்த மாதிரி இருக்கும்.

  சரவணன்,
  அந்த காட்சியைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் அப்லோட் செய்கிறேன்…
  இந்த மாதிரி எல்லாம் எப்படித்தான் யோசிப்பாங்களோ???

 9. வெட்டி, இந்த மேட்டர நானும் கேள்விப்பட்டேன். அது எல்லாம் சரி, உங்க ஆளு காஷ்மீரில் உள்ள தீவரவாதிகள், இந்திய ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்களிடம் 10 பக்க வசனத்தை தெலுங்கில் மாட்லாடுவாரா?
  அதைக் கேட்டு தீவரவாதிகள் திருந்துவார்களா?
  சூப்ரீம் கோர்டில் தெலுங்கில் மாட்லாடி நீதிபதியை மண்டைய பிச்சுக் வைக்கும் திறமை இருக்கா?

 10. சிவா,
  //உங்க ஆளு காஷ்மீரில் உள்ள தீவரவாதிகள், இந்திய ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்களிடம் 10 பக்க வசனத்தை தெலுங்கில் மாட்லாடுவாரா?
  //
  இவர் 10 பக்கத்துக்கு மேலையே மாட்லாடுவார். அதுவுன் ஹை-பிட்ச்ல 🙂

  //அதைக் கேட்டு தீவரவாதிகள் திருந்துவார்களா?
  //
  திருந்துவதற்கெல்லாம் இவர் நேரமே கொடுக்கமாட்டார். துப்பாக்கி இருந்தாலும் தள்வாரால(தான்) வெட்டி கொன்னுடுவார்…(நம்மை இல்லை) :-))

  //சூப்ரீம் கோர்டில் தெலுங்கில் மாட்லாடி நீதிபதியை மண்டைய பிச்சுக் வைக்கும் திறமை இருக்கா?
  //
  இந்த திறமை கேப்டனைத்தவிர உலகில் வேறு யாருக்குமில்லை 🙂

 11. வெட்டி நான் போன பின்னூட்டத்தில் சொன்னது எல்லாம் வாபஸ், நீ கொடுத்த பல சுட்டில ஒன்னே ஒன்னு தான் பார்த்தேன். MI… அதுவே நம்மலா முடியல. நான் வரல இந்த விளையாட்டுக்கு.

 12. வெட்டி..

  இங்கே உடன் வேலை பார்க்கும் தெலுங்கு நண்பனுக்கு உங்க பதிவைக் கூப்பிட்டு காண்பித்தேன்…

  அவனே பாலையாவினால் ரொம்ப நொந்து போய் இருக்கான்…

  அவன் கொடுத்த லின்க்..

  http://wehatebalayya.tk/

  :)))

 13. //வெட்டி நான் போன பின்னூட்டத்தில் சொன்னது எல்லாம் வாபஸ், நீ கொடுத்த பல சுட்டில ஒன்னே ஒன்னு தான் பார்த்தேன். MI… அதுவே நம்மலா முடியல.//

  அதுதானப் பாத்தன்!!! எப்படிடா இந்த லிங்கை எல்லாம் பாத்து நம்மல இப்படி கேட்கறாரேனு!!!

  டெரரிஸ்டை பாருங்க!!! சிரித்து சிரித்து வயிறு வலித்தால் நான் பொறுப்பல்ல…

 14. கப்பி,

  //இங்கே உடன் வேலை பார்க்கும் தெலுங்கு நண்பனுக்கு உங்க பதிவைக் கூப்பிட்டு காண்பித்தேன்…

  அவனே பாலையாவினால் ரொம்ப நொந்து போய் இருக்கான்…
  //

  நமக்கு ஒரு கேப்டனென்றால் அவர்களுக்கு ஒரு பாலைய்யா!!!

 15. முதல் பின்னூட்டம் உங்கள் சுட்டியை பார்க்காமல் பதிவிட்டிருந்தேன், அப்புறம் எல்லோரும் கதறுறத பார்க்கவும் அப்படியென்ன தான் இருக்குனு, முதல் சுட்டியை விபரீதம் புரியாமல் க்ளிக்கிட்டுட்டேன்.( ஏண்டா பார்த்தோம்னு வருத்தப்பட்டது வேற விசயம்),மத்ததெல்லாம் பார்க்குற அளவுக்கு மனசுல தெம்பு இல்லை,

  பாவம் எனதருமை ஆந்திரவாலாக்கள்…

  அந்த”எவர் கிரீன் விக்” புகழ் பாலையாவ்வோட சாகசங்களை(???)பர்க்கும் போது விஜயேந்திர வர்மன் எவ்வளவோ மேல்…
  அதிலும் பாலையா காட்டுற face expressions தாங்க முடியலைடா சாமி…

  அன்புடன்…
  சரவணன்.

 16. யப்போவ் சாமியோவ்….இதெல்லாம் என்னது….சொல்றது இல்லையா…..லேசா மயக்கம் வர்ராப்புல இருக்குதே….யாராவது கொஞ்சம் சோடா கொண்டாங்கப்போய்!

  விஜயேந்திரவர்மாவ இப்போதைக்கு அமெரிக்காவுக்கு அனுப்பி வெட்டிப்பயலைப் பார்க்கச் சொல்றதுதான் சரியாயிருக்கும்னு நெனைக்கிறேன்.

 17. //பாவம் எனதருமை ஆந்திரவாலாக்கள்…
  //
  நம்ம நரசிம்மா பாத்துட்டு அவுங்களும் அதைதான் சொன்னாங்க…
  நான் பதிலுக்கு ரமணா போட்டுக் காட்ட முதல் காட்சியிலே Windows Media Playerல் டைப் செய்து நமக்கு ஆப்பு அடித்துவிட்டார் கேப்டன்.

  //அதிலும் பாலையா காட்டுற face expressions தாங்க முடியலைடா சாமி…
  //
  அதுதான் ஹை-லைட்டே. அதுவும் அவருடைய ரோமண்டிக் எக்ஸ்பிரசனைப் பார்க்க வேண்டும் 😉

  ஆளைவிடுங்கடா சாமீனு சொல்லிட்டு ஓடிடுவீங்க!!!

 18. //யப்போவ் சாமியோவ்….இதெல்லாம் என்னது….சொல்றது இல்லையா…..லேசா மயக்கம் வர்ராப்புல இருக்குதே….யாராவது கொஞ்சம் சோடா கொண்டாங்கப்போய்!
  //
  நீங்க சொல்றதுக்கு முன்னாடியே முன்னெச்சரிக்கைப் போட்டுவிட்டேன் :-))

  //விஜயேந்திரவர்மாவ இப்போதைக்கு அமெரிக்காவுக்கு அனுப்பி வெட்டிப்பயலைப் பார்க்கச் சொல்றதுதான் சரியாயிருக்கும்னு நெனைக்கிறேன்//
  அனுப்புங்க!!! அனுப்புங்க!!! வயிறு வலிக்க சிரிக்க மற்றுமொரு வாய்ப்பு.
  நாங்க எல்லாம் நரசிம்மாவையே 4-5 தடவைப் பாத்தவங்க! எங்களுக்கேவா???

 19. குமரன் ஐயா,
  //:-)//

  வந்ததுக்கு அடையாளமா???

 20. $elvan,
  பாத்தீங்கல்ல? SK ஐயாவே ஆசிர்வதிச்சிட்டார் 😉

 21. Ya.But maybe he laughed at vijayendra varma and not at captain:-)

 22. //Ya.But maybe he laughed at vijayendra varma and not at captain:-)
  //
  Anyway!!! He doesnt feel bad abt this post. That’s the Power of Balaiyya…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: