இந்து மதமும் சாதியும்!!!

$elvan அவர்களின் பதிவில் மயூரான் அவர்கள் கேட்டக் கேள்வியின் பதிலாக இந்த பதிவு.

மதத்தின்/கடவுளின் அடிப்படையில் தோன்றியதா சாதி? எனக்கு புரிந்த வகையில் இல்லை. அப்படி என்றால் திருமாலை வணங்குபவர்கள் அனைவரும் ஒரு சாதியாகவும், சிவனை வணங்குபவர்கள் அனைவரும் ஒரு சாதியாகவும் இருந்திருக்க வேண்டும்.

தொழிலை சார்ந்தே சாதிகள் அமைந்தன. அதனால் அன்றைய நிலையில் ஒரு சில நன்மைகளும் இருந்தன. வைத்தியன் மகன் சிறுவயதிவிருந்தே தந்தைக்கு உதவி செய்து தொழிலைக் கற்றுக் கொண்டான். வணிகனுடைய பிள்ளைகள், கோவில் அர்ச்சகரின் பிள்ளைகள், விவசாயின் பிள்ளைகள், அரச வாரிசுகள் என்று அனைவரும் பெரும்பாலும் தங்கள் தந்தையிடமிருந்தே கற்றனர்.
(இன்றைய கல்வி வசதி அவர்களுக்கு இல்லை)

இது அனைவருக்கும் பொருந்தியதாகவே இருந்தது. ஒரு பெருவணிகனுடைய மகன் விவசாயம் செய்ய வந்தால் அவனுக்கு அந்த தொழிலில் அனுபவமிருக்காது. அதனால் அதில் அவனுடைய வெற்றி வாய்ப்பும் குறைவே.
இன்றைய நிலையில் இருக்கும் புத்தகங்கள் அவர்களுக்கு இருந்திருக்குமா என்பதும் சந்தேகமே.

பெண் கொடுக்கும் விஷத்திலும் இதுவே முறையானது. வணிகன் ஒருவனின் மகள் அரச குடும்பத்தில் சென்றால் பணம் அதிகம் சம்பாதிப்பது ஒன்றே அவள் குறியாக இருக்குமே தவிர மக்கள் நலனில் எண்ணம் செல்லாது.
அதனால் ஒரே தொழில் செய்யும் மக்களுக்குள் பெண் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.

முதலில் இந்த முறையில் மக்களுக்கு எளிமையாக இருப்பதற்காகவே சாதிகள் தோன்றின. பிறகு இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வலியவன் எளியோனை அடக்கி ஆள ஆரம்பித்தான்.

இன்று பலர் சொல்வது போல் தமிழர்கள் அனைவரும் முட்டாள்களாக இருந்ததாகவும், எங்கிருந்தோ வந்தவர்கள் அவர்களை ஏமாற்றிவிட்டதாகவும் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை.

சாதியின் இன்றைய நிலை:
ராஜாஜி அவர்களின் குலவழிக் கல்வி மட்டும் இன்று தமிழ் நாட்டில் இருந்திருந்தால், நானெல்லாம் இன்று வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கமாட்டேன். எங்கோ மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன்.

கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் திட்டத்தால் அனைவருக்கும் கல்வி என்ற நிலை ஏற்பட்டது. பள்ளியில் அனைத்து சாதி மக்களும் இணைந்து பாடம் படிப்பதனால் அவரவர் தங்களின் சாதியின் அடையாளத்தை இழந்து வருகின்றனர்.

இன்று பல கலப்பு திருமணங்கள் நடக்கின்றன. சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் நான் பார்த்து பல காதல் திருமணங்களுக்கு பெற்றோர்கள் மறுப்பு
தெரிவித்தாலும் ஒருவழியாக இறுதியில் ஒத்துக் கொள்கின்றனர்.

கல்வி முறை மாறி 50 வருடங்கள் தான் ஆகிறது. ஓரளவு மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மையே. 2000 ஆண்டுகளாக ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் வரும். பொறுத்திருங்கள் இன்னும் 50-100 ஆண்டுகளுக்குள் முற்றிலும் மாறிவிடும்.

ஏதோ என் அறிவிற்குட்பட்ட அளவிற்கு எழுதியிருக்கிறேன்.

மாற்றம் ஒன்றே நிலையானது….

34 பதில்கள்

 1. நல்ல கருத்துக்கள். பழையதப் போட்டு கிண்டிக்கிட்டே இருப்பதைவிட இன்றும் நாலையும் நம்மால் என்ன செய்யமுடியும், நாம் என்ன செய்யவாண்டுமென்பதே சிறந்தது.

  நாளை சாதி கலையும் என்கிற நம்பிக்கைத்ந்திருக்கிரீர்கள் மகிழ்ச்சி.

  Specialization of labor. அந்தக் காலாத்து வழிமுறைதான். இன்னும் இது கார்ப்பரேட் பழக்கமாக இருக்கிறது.

 2. Yes, castes system was social intitution grown out of proffession .And it must have advantage in the intial time for soomth functioning of affairs of a society.But it had got corrupted by selfish individuals and finally the whole system became inhuman. As for as I know ,in intial period the system was flexible which mean any one can become preist by learning and learning was also not restricted to some groups. It all started changing when people started to dominate others for narrow parachial purposes. Any way we need to get away this evil system.
  Your post is a nice one.keep it up.
  Venkatesh
  Singapore
  Sorry I don’t know how to make comment in Tamil.

 3. தெளிவான விளக்கம்.
  சாதியினால் செய்யப்படும் சில அவலங்கள் ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
  இதற்கு சாதி காரணமில்லை.
  அதன் பெயரால் கொடுமை செய்யும் சில கொடியவர்களே!
  இப்படிப்பட்டவர்கள் எல்லாத் தலைமுறைகளிலும், எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்! இனிமேலும் இருப்பார்கள்!
  இவர்களை சட்டம் கொண்டே தனிப்பட்ட முறையில் அடக்க திட்டங்கள் தீட்ட வேண்டுமேயல்லாது, ஒரு இனத்தையே ஒழி என்று சொல்வதெல்லாம் ‘ஊரான் செலவில் சூன்யம் வைக்க’ முற்படும் சந்தர்ப்பவாதிகளின் வேலையே!

  எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்னும் மனப்பான்மை!
  நன்றி.

 4. சிறில் Alex,
  //பழையதப் போட்டு கிண்டிக்கிட்டே இருப்பதைவிட இன்றும் நாளையும் நம்மால் என்ன செய்யமுடியும், நாம் என்ன செய்யவாண்டுமென்பதே சிறந்தது.
  //
  தவறான வரலாற்றைக் கற்பித்து பழிக்கு பழி வாங்கும் எண்ணத்தை ஒரு சிலர் புகுத்துவதால்தான் பழையதை கிண்ட வேண்டியதாயிற்று.
  அடுத்து என்ன செய்யனும்னு தானே செல்வன் சொல்லி இருக்காரு.

 5. Venkat,
  Thanks for sharing your thoughts.

  SK ஐயா,
  மிக்க நன்றி.

  //இவர்களை சட்டம் கொண்டே தனிப்பட்ட முறையில் அடக்க திட்டங்கள் தீட்ட வேண்டுமேயல்லாது, ஒரு இனத்தையே ஒழி என்று சொல்வதெல்லாம் ‘ஊரான் செலவில் சூன்யம் வைக்க’ முற்படும் சந்தர்ப்பவாதிகளின் வேலையே!
  //
  சரியாக சொன்னீர்கள்.

 6. நல்ல பதிவு பாலாஜி,

  சாதி உருவாக யார் மீதும் பழி போடவேண்டிய அவசியமில்லை.ஆனால் அதை ஒரு விபத்தாக எண்ணி மறந்துவிட்டு ஜாதியை ஒழித்து அனைத்து மனிதரும் சமம் என்று சமத்துவத்தை பரப்பி கலப்பு திருமணங்களை ஆதரித்து மனிதநேயம் வளர்ப்பதே நம் தலையாய கடமை.

  ஜாதி ஒழியணும்,அழியணும்.சமத்துவம் மலரணும்

  அன்பே சிவம்

 7. $elvan,
  மிக்க நன்றி.

  //அனைத்து மனிதரும் சமம் என்று சமத்துவத்தை பரப்பி கலப்பு திருமணங்களை ஆதரித்து மனிதநேயம் வளர்ப்பதே நம் தலையாய கடமை.
  //
  சரியாக சொன்னீர்கள்.

 8. ஜாதி தொழிலை சார்ந்து அமைந்தது. அது அமைவதற்கு காரணம் நம் சுயநலமே.

  ஒரு தச்சன் தன் மகனை தச்சன் ஆக்குகிறான். அவனுக்கு அங்கே கிடைத்தது ஒரு இலவச தச்சர்

  ஒரு கொத்தனார் தன் மகனை ஒர் கொத்தனார் ஆக்குகிறார். அங்கெ அவருக்கு கிடைத்தது ஒரு இலவசக் கொத்தனார் (நம்மாளை மனதில் வைத்து எழுதவில்லை)

  ஒரு டாக்டர், ஒரு வக்கீல், அரசியல்வாதி, வியாபாரி, சினிமாக்காரர்கள் தத்தம் வாரிசுகளை அந்தந்த துறைகளில் இறக்குகின்றனர்.
  அது அவர்களின் சுயநலமே.

  என்று ஒருவர் ஒரு தொழிலை தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறதோ அன்று ஜாதிகள் மறையும்

 9. சிவா,
  அவர்களின் விருப்பப்படி
  தச்சன் மகன் தச்சனாவதிலோ, கொத்தனார் மகன் கொத்தனார் ஆவதிலோ பிரச்சனையில்லை.

  தச்சன் மகன் “தச்சனாகத்தான்” ஆக வேண்டும் என்று சொல்வதுதான் பிரச்சனை. இன்று அந்த பிரச்சனை ஓரளவு சரியாகியுள்ளது.

  இன்னும் 2-3 தலை முறைகளில் முழுதும் சரியாகிவிடும் என்றே நம்புகிறேன்.

 10. ஐயா! வெட்டிப்பயல்!
  எல்லோரும்-எல்லாமும் செய்யலாம் .என்ற நிலை உருவாகியுள்ளது. சலவைத் தொழிலாளியின் பிள்ளை வழக்கறிஞராகலாம்;பொற்றொழிலாளி பிள்ளை வைத்தியராகலாம்.அந்தப் படிப்பைப் படித்தால்; ஆனாலும் தோண்டிப் பார்க்கும் குணம் இன்னும் முற்றாகப் போகவில்லை. எந்த நிலையிலும் ஹரிசனன் கோவில் பூசகனாக; அந்தப் படிப்பைச் செவ்வனே படித்தாலும் முடியுமா? அந்நிலை வந்து விடுமென பார்பனர் பதறுவது தெரியலையா?? எனவே எத்தனை நூற்றாண்டு போனாலும்; இது மறாதையா?
  யோகன் பாரிஸ்

 11. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற புது சட்டத்தை மறந்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

  தில்லை கோவிலை எடுத்துக் கொண்டால் அங்கே பார்ப்பனர்கள் அனைவரும் அர்ச்சகராக முடியாது.

  50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலைமை வேறு, இன்று இருக்கும் நிலைமை வேறு. அதே போல் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னால் நிலைமை இதைவிட பன்மடங்கு மாறும் என்றே நான் கருதுகிறேன்.

 12. //எனவே எத்தனை நூற்றாண்டு போனாலும்; இது மறாதையா?//
  Unfortunately, all those who are commenting like this are not Hindus, but from other religions.

 13. அருமையான கருத்துக்கள். இதை இதை இதையேத்தான் நானும் நினைத்திருந்தேன். (‘தூக்குத் தூக்கி’ படத்தில் வரும், “நான் நினைத்தேன் நீ சொல்லிவிட்டாய்”, “அதுதானே நமக்குள் இருக்கிற ஒற்றுமை” என்று).

 14. //Unfortunately, all those who are commenting like this are not Hindus, but from other religions.
  //
  Anony, it doesnt matter who said that. Its our duty to make it false. Everyone wants to live in a society which is safe and has Progress for all…

 15. சீனு,
  மிக்க மகிழ்ச்சி.

  நம்மல மாதிரியே ஒருத்தர் சிந்திக்கிறார்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

 16. இப்போது மிகத் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட ராஜாஜி அவர்களின் கல்வித் திட்டத்தைப் பற்றிப் பேசுவேன். 1953 ஆம் வருடம் சென்னை மாகாணத்தின் நிலையைப் பார்ப்போம்:

  குழந்தைகள் இரண்டு வேளையும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த முறை அமுலில் இருந்தது. பல ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கே வர இயலாத நிலை. நிதி நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. 40 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருந்தனர். பல பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் இல்லை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.

  அப்போது ராஜாஜி அவர்கள் முன்னிறுத்திய ஆரம்பக் கல்வி வெறும் ஏட்டளளவில் நிற்காமல் தொழில் சார்ந்ததாயிற்று. இரண்டு வேளைகளும் பள்ளி இருந்ததால், பல ஏழைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையே தவிர்த்தனர். ஏனெனில் தங்கள் தொழில்களில் அவர்கள் தங்கள் பிள்ளைகள் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்த்தனர். மேலும் இரு வேளையும் வகுப்புக்கு வர வேண்டிய நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு மட்டும் கல்வி தர முடிந்தது.

  ராஜாஜி அவர்களின் திட்டம் இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே வீச்சில் தீர்வு கண்டது. அதாவது, மாணவர்கள் தினம் மூன்று மணி நேரம் மட்டுமே வகுப்புக்கு வர வேண்டியது. அந்த தினசரி அவகாசத்தில் பெறும் கல்வி அவர்களுக்கு முழுப்பரீட்சை எழுதும் அளவுக்கு பாடம் கற்பிக்கப் போதுமானதாக இருந்தது. காலையில் ஒரு பேட்ச் வகுப்புக்கு வர வேண்டியது, மாலையில் இன்னொரு பேட்ச். இதனால் 100 பேருக்கு பதில் 200 பேருக்கு ஒரு பள்ளியில் கல்வி அளிக்க முடிந்தது. அதே கட்டிடம், அதே மற்ற வசதிகள். ஆனால் பலன் இரு மடங்குப் பேருக்கு. பிள்ளைகள் வகுப்புக்குச் செல்லாத நேரத்தில் ஏதாவது தொழில் கற்றுக் கொள்ளலாம் என்றுக் திட்டமிடப்பட்டது. பள்ளிகளுக்கு அனுப்பாமல் தங்களிடமே தொழில் கற்றுக் கொள்வதற்காக வைத்திருக்கும் பெற்றோரிடம் தினசரி 3 மணி நேரத்துக்காவது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம் என்பது வலியுறுத்தப் பட்டது. முதலில் ஆரம்ப வகுப்புகளுக்கு மட்டும் இத்திட்டம் அமல் செய்வது என்றும், பிறகு படிபடியாக நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இதை விரிவுபடுத்தலாம் என்றும் திட்டமிடப்பட்டது. கிராமங்களில் கல்வி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே இத்திட்டம் சோதனை முறையில் அங்கு மட்டுமே நடத்த முடிவு செய்யப் பட்டது.

  என்னத் தொழில் கற்பது? இதில் மாணவர்களது பெற்றோர்களுக்கு பூரண சுதந்திரம் கொடுக்கப் பட்டது. அதற்கு முக்கியக் காரணம் அப்போதிருந்த ஆசிரியர்கள் எல்லோரும் மக்காலே முறையில் கல்வி கற்று பேனா பிடிக்கும் வேலைகளுக்கே லாயக்காய் இருந்தனர். ஆதாரக் கல்வி அளிக்கவே பணம் இன்றிக் கஷ்டப்பட்ட அரசு கண்டிப்பாகத் தொழில் கல்வியைப் பள்ளிகளில் அளிக்கும் நிலையில் இல்லை. அதற்கான கட்டிட அல்லது வேறு வசதிகள் இல்லவே இல்லை. ராஜாஜியின் எதிர்ப்பார்ப்பு என்னவென்றால், தன் சுயநலத்துக்காகவாவது ஒரு தகப்பன் தன் மகனுக்க்குத் தான் செய்யும் தொழிலில் சிறந்தப் பயிற்சியே அளிப்பான் என்பதே.

  உண்மையை கூறப்போனால் இக்கல்வி இருக்கும் வசதிகளை முடிந்த அளவுக்கு எவ்வளவு பேருக்கு அளிக்க முடியுமோ அத்தனைப் பேருக்கு அளிப்பது என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. ஏற்கனவே கூறியது போல எந்தத் தொழிலைக் கற்பதென்பது பெற்றோர்கள் விருப்பத்துக்கே விடப்பட்டது. தச்சன் மகன் வேறு தொழில் கற்கலாம் அல்லது ஒன்றுமே கற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். ஒன்றுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக யாரும் சம்பந்தப்பட்டக் குழந்தைகளை தண்டிக்கப்போவதில்லை. அத்தொழில்களில் தேர்வும் கிடையாது. அந்தத் தரத்தில் ஒரு பள்ளியால் நிச்சயம் பயிற்சி தந்திருக்க முடியாது.

  ஒரு தொழில் கற்றுக் கொண்டால் கைகளுக்கு ஒருங்கிணைந்து வேலை செய்யும் திறன் வரும். மூன்று மணி நேரக் கல்வியே பரீட்சைகளில் தேர்வு பெறப் போதுமானது. ஆகவே மாணவர்கள் பள்ளியிறுதித் தேர்வு எழுதவோ மேற்படிப்பு படிக்கவோ எந்த விதத் தடையும் இல்லை.

  நிறையப் பேருக்குத் தெரியாத இன்னொரு விஷ்யம். 1953 – 54 கல்வியாண்டில் இம்முறை நிஜமாக அமலுக்கு வந்தது. பல ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர் வருகையில் முன்னேற்றத்தைப் பார்த்தனர். கூடிய சீக்கிரம் நகரங்களுக்கும் இம்முறையை விஸ்தரிக்க வேண்டும் என்றக் கோரிக்கையும் எழுந்தது.

  21 ஜூன் 1953 கல்கி இதழில் கிண்டி பொறியியல் கல்லூரியின் அப்போதைய முதல்வர் கர்னல் எஸ். பால் கூறியதன் சாரம்: இக்கல்விமுறை அவர் மாணவராக இருந்தப்போது யாழ்ப்பாணத்தில் காரை நகரில் செயல்பட்டது. கல்வியின் தரம் அருமை. பால் அவர்கள் சக்கிலிய மற்றும் தச்சுத் தொழிலில்களில் தேர்ச்சி பெற்றார். அது அவர் மேல் படிப்புக்குச் செல்லத் தடையாக இல்லை. சொல்லப் போனால் அவர் தன்னம்பிக்கை அதிகமானது. இவ்வாறு கூறியது பொறியியல் கல்லூரி முதல்வர்.

  சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம். 1953-ல் பள்ளி செல்லும் வயதில் 80 லட்சம் குழந்தைகள் இருந்தனர். அவர்களில் 70 லட்சம் பேர் கிராமத்தில். கிராமத்துக் குழந்தைகளில் 38.5 லட்சம் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதில்லை.மீதி 32.5 லட்சம் குழந்தைகளில் 10 லட்சம் பேர் மட்டும் கல்வியைத் தொடர்கின்றனர். மற்றவர்கள் படிப்பைப் பாதியில் விடுபவர்கள். ஆக 60 லட்சம் குழந்தைகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு எப்படியாவது பகுதி நேர படிப்பையாவதுக் கொடுப்பதே ராஜாஜி அவர்களின் புதுக் கல்வித் திட்டத்தின் நோக்கம்.

  எப்படியும் தங்கள் தொழிலில் தங்களுக்கு உதவியாக இருப்பதற்காகக் குழந்தைகளின் படிப்பை நிறுத்தும் பெற்றோர்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் சாதகமான மனநிலைக்கு வருவதற்காகவே எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இம்முறையை ராஜாஜி அவர்கள் எங்கிருந்தோ திடீரென்று கொண்டு வந்துவிடவில்லை. அச்சமயம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்ததுதான் அத்திட்டம். பல கல்வி வல்லுனர்களிடம் ஆலோசனைக் கேட்டுத்தான் இம்முறை பரீட்சார்த்த முறையில் அமலுக்கு வந்தது.

  கையில் ஒரு தொழில் இருப்பது எவ்வளவு சுயநம்பிக்கைத் தரும் என்பதை உணர நிஜமாகவே ஒரு தொழிலைத் தெரிந்து வைத்துக் கொண்டால் புரிந்து கொள்ளலாம். ராஜாஜி அவர்கள் கூறிய கல்விமுறை சரியானபடி நிறைவேற்றப் பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைப் பார்ப்போம். மக்காலே கல்வி முறையால் நடந்த விபரீதங்கள் இல்லாமல் போயிருக்கும்.

  அவை என்ன? தகப்பன் நெற்றி வேர்வை நிலத்தில் விழப்பாடுபடுவான். பிள்ளை ஏட்டுக் கல்வி படிப்பான். டிகிரியும் வாங்கி விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்? அத்தனைப் பேருக்கும் வெள்ளைக் காலர் வேலைக்கு எங்குப் போவது? படித்த மாணவர்களும் கையில் அழுக்கு ஏறும் தந்தையின் தொழிலைச் செய்யும் மனநிலையில் இல்லை. மகன் பந்தாவாக ஊரைச் சுற்றி வர, தகப்பன் உடல்நிலை பாதிக்கப்படுவதுதான் மிச்சம். ராஜாஜி கூறிய முறையில் தொழிலுக்கு மரியாதை வந்திருக்கும். ஏட்டுப் படிப்பும் படித்ததால் அவர்களை யாரும் சுலபத்தில் ஏமாற்றியிருக்க முடியாது. வேலை கிடைக்கிறதோ இல்லையோ கைவசம் தொழில் இருக்கவே இருக்கிறது. இந்த அருமையானக் கல்வி முறைக்குத்தான் குலக்கல்வி என்றுப் பெயரிட்டு கூக்குரலிட்டனர். பின்னால் வந்தத் தலைவர்கள் அதை அவசரம் அவசரமாகக் கைவிட்டதுதான் பெரிய சோகம்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 17. ***Anony, it doesnt matter who said that. Its our duty to make it false. ***

  Of course, even I wish to make it false. But the intention with which they say is the problem.

 18. வெட்டிப்பயல்னு பேர வெச்சுக்கு அதுக்கேத்த மாதிரி பேசுற வழக்கமில்லையா? 🙂

  சாதீய, மத…மற்றும் எந்த விதத்திலும் உயர்வு தாழ்வு சொல்லல் ஒழிய வேண்டும். எந்தத் தொழிலும் விரும்பியர் செய்யும் நிலை வர வேண்டும். இதில் எல்லாத் தொழிலும் அடங்கும். பிறப்பால் இந்தத் தொழில் என்ற நிலை எந்தத் தொழிலுக்கும் இருக்கக் கூடாது.

  கைத்தொழிலைக் கற்க வேண்டியதுதான். ஆனால் அது தந்தையின் தொழிலாக மட்டுமே இல்லாமல் விருப்பத் துறையாக இருப்பதே சிறந்தது.

  நிலமை நிச்சயம் மாறும். கண்டிப்பாக மாறும். ஐயமில்லை.

 19. //தச்சன் மகன் “தச்சனாகத்தான்” ஆக வேண்டும் என்று சொல்வதுதான் பிரச்சனை. இன்று அந்த பிரச்சனை ஓரளவு சரியாகியுள்ளது.//

  சமுதாயம் சொல்வது நிறுத்திவிட்டது. அந்தந்த தந்தை சொல்லவேண்டும். அப்போது மாற துவங்கிவிடும்

  //எந்த நிலையிலும் ஹரிசனன் கோவில் பூசகனாக; அந்தப் படிப்பைச் செவ்வனே படித்தாலும் முடியுமா? அந்நிலை வந்து விடுமென பார்பனர் பதறுவது தெரியலையா?? எனவே எத்தனை நூற்றாண்டு போனாலும்; இது மறாதையா?
  //

  மாறும்.

  கோவிலில் பூசாரியாக அரிசனன் ஆகிவிட்டால் நாடு முன்னேறிவிடுமா?
  எல்லோரும் சேர்ந்து உழைத்தால் தான் முன்னேறும். பொருளாதார நிலை உயர்ந்தால் சாதியாவது கோவிலாவது

 20. // கோவிலில் பூசாரியாக அரிசனன் ஆகிவிட்டால் நாடு முன்னேறிவிடுமா?
  எல்லோரும் சேர்ந்து உழைத்தால் தான் முன்னேறும். பொருளாதார நிலை உயர்ந்தால் சாதியாவது கோவிலாவது //

  கோயில் பூசாரியாக யார் இருந்தாலும் நாடு முன்னேற வேண்டும். அந்த நிலையும் வரும். நிச்சயம் வரும்.

 21. டோண்டு ராகவன் ஐயா,
  தங்களுடைய கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  நீங்கள் கூறிய கல்வி முறையில் உள்ள அனைத்து நன்மைகளையும் எடுத்து சொல்லிவிட்டீர்கள். ஆனால் அதனால் உள்ள தீமைகளை சொல்லவில்லையே?

  ஆரம்ப நிலைப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் ஒரு வேளைப் படிக்க வேண்டும், ஒரு வேளை தந்தைக்கு உதவ வேண்டும். என்ன கொடுமை ஐயா?
  குழந்தைகள் தச்சு வேலை செய்ய வேண்டும், சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வேண்டும், பட்டறையில் வேலை செய்ய வேண்டும், ஓட்டலில் மேஜை துடைக்க வேண்டும், துப்பரவு தொழிளாலர்களின் பிள்ளைகள் கக்கூஸ் கழவ வேண்டும்.
  குழந்தைத் தொழிலாளர்களை நாமே உருவாக்க வேண்டும்.
  என்ன நியாயம் ஐயா இது?

  பெற்றவர்கள், பெரியவர்கள் சொகுசாக பிள்ளைகளிடம் வேலை வாங்குவார்கள், குழந்தைகள் உழைக்க வேண்டும்.

  எத்தனை குழந்தைகள் தொழில் கற்றுக் கொண்ட பிறகு 12 வயதுக்கு மேல் படிக்க வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்.

  நம் பிள்ளையின் வாழ்க்கை நிலையை முன்னேற்ற நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வேண்டுமென்றாலும் உழைக்கலாம். பாவம் குழந்தைகளை விளையாடவிடுங்கள்.

  நாம் கஷ்டப்படுவோம் அவர்கள் சந்தோஷமாக வாழ!!!

  ஒரு தலைமுறை வாழ அதற்கு முந்தைய தலைமுறை உழைப்பதில் தவறில்லை.

  நல்ல திட்டங்கள் புத்திசாலிகளால் உருவாவதில்லை. இரக்க குணம் கொண்டவர்களால்தான் உருவாக்கப்படுகிறது.

  சத்துணவு திட்டத்தால் பள்ளிக்கு வந்த குழந்தைகளைக் கேட்டுப் பாருங்கள். புரியும்!!!

 22. ராகவன்,
  //வெட்டிப்பயல்னு பேர வெச்சுக்கு அதுக்கேத்த மாதிரி பேசுற வழக்கமில்லையா? 🙂
  //
  இதுக்குத்தான் பாலைய்யாவைப் பற்றி சொல்லிட்டனே!!!

  //சாதீய, மத…மற்றும் எந்த விதத்திலும் உயர்வு தாழ்வு சொல்லல் ஒழிய வேண்டும். எந்தத் தொழிலும் விரும்பியர் செய்யும் நிலை வர வேண்டும். இதில் எல்லாத் தொழிலும் அடங்கும். பிறப்பால் இந்தத் தொழில் என்ற நிலை எந்தத் தொழிலுக்கும் இருக்கக் கூடாது.

  கைத்தொழிலைக் கற்க வேண்டியதுதான். ஆனால் அது தந்தையின் தொழிலாக மட்டுமே இல்லாமல் விருப்பத் துறையாக இருப்பதே சிறந்தது.
  //
  சரியாக சொன்னீர்கள்.

  //நிலமை நிச்சயம் மாறும். கண்டிப்பாக மாறும். ஐயமில்லை//
  அதைத்தான் அனைவரும் எதிர்ப்பார்க்கிறோம்.

 23. இந்து மதத்தில் சாதிப்பேட் ஆழ வேரூண்ர முக்கிய காரணமே பார்ப்பனர்கள்தான். இன்னும் ஒரு மில்லியன் பெரியார் பிறந்தாலும் ஐநூறு வருடங்களே ஆனாலும் பார்ப்பனர்கள் இருக்கும்வரை ஜாதிப்பேய் ஒழியாது!!!

 24. விடாது கருப்பு,
  //இந்து மதத்தில் சாதிப்பேட் ஆழ வேரூண்ர முக்கிய காரணமே பார்ப்பனர்கள்தான். இன்னும் ஒரு மில்லியன் பெரியார் பிறந்தாலும் ஐநூறு வருடங்களே ஆனாலும் பார்ப்பனர்கள் இருக்கும்வரை ஜாதிப்பேய் ஒழியாது!!!
  //
  ஒரு சாரர்மேல பழியப் போட்டுட்டு மத்தவங்க தப்பிக்கக்கூடாது…
  கல்வி இன்று அனைவரையும் மனிதர்களாக்கியுள்ளது. எனக்கு நம்பிக்கையிருக்கிறது.

  ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் கோவில் பூசாரியைவிட மன்னன் சக்தி வாய்ந்தவன். பிராமணர்கள் யாரும் மன்னர்களாக இருந்ததில்லை. பிராமணர்களிலும் தட்சனையை மட்டும் எதிர்ப்பார்த்து வாழ்ந்தவர்கள் பலர்.
  சத்ரியர்களிடம் அதிகாரம் இருந்தது. வைசியரிடம் செல்வமிருமந்தது.
  இவர்கள் அனைவரும் சேர்ந்தே சூத்திரர்களுக்கு துரோகம் செய்தனர்.

  ஆனால் அனைவருமே வெள்ளையரிடம் அடிமையாக இருந்தோம். பிறகே அடிமை வாழ்வு எப்படி என்று அனைவரும் உணர்ந்தனர்.

  கல்வி ஒன்றே அனைத்துப் பிரச்சனைக்கும் முடிவைத் தரும்.

 25. அனானி,
  மன்னிக்கவும். தேவையில்லாமல் ஒருவரின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்.

  வேண்டுமென்றால் அவர் பயன்படுத்தும் பேரையே சொல்லுங்கள்.

 26. //கோவில் பூசாரியைவிட மன்னன் சக்தி வாய்ந்தவன். பிராமணர்கள் யாரும் மன்னர்களாக இருந்ததில்லை. பிராமணர்களிலும் தட்சனையை மட்டும் எதிர்ப்பார்த்து வாழ்ந்தவர்கள் பலர். //

  மன்னர்களையே அடிபணிய வைக்கும் பார்ப்பனர் இருந்தனர். இப்போது உள்ள ஜாதி பிரச்சனைகளுக்கு அவர்கள் மட்டுமே காரணம் இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் அவர்களே முதல் குற்றவாளிகள்.

 27. //ஆனால் அதனால் உள்ள தீமைகளை சொல்லவில்லையே?//

  என்னங்க மூதறிஞர் கொண்டுவந்த அருமையான திட்டத்தினை இப்படி சொல்லிவிட்டீர்கள். அவர் ஊருக்கு ஊர் Vocational Training Institute ஆரம்பித்து அதில்தான் மாணவர்களை படிக்க சொன்னார்.

  அந்த அற்புதமான திட்டம் தொடர்ந்து இருந்தால் நான் கண்டிப்பாக மாடு மேய்கும் ஒரு உன்னதமான high tech வேலையில் இருந்திருப்பேன். எல்லாத்தையும் அந்த சின்ன புத்தி கொண்ட கருப்புக்காக்காய் கெடுத்துவிட்டது.

 28. பல கருத்துக்கள் நேர்மையானவை. நானும் இம்மாதிரிக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறேன்.

  கண்டிப்பாக கல்வி முறையிலான மாற்றம் வந்து 50 ஆண்டுகளில் நெறியற்ற திராவிடக் கட்சித் தலைவர்களால் தவறுதலாக வழிநடத்தப் பட்டும் நாம் முன்னேறி இருக்கிறோம். பரவலாக எல்லோராலும் பாராட்டப்பட்ட சாதி உணர்வு படித்த இன்றய இளைஞர்களிடம் குறைந்திருக்கிறது.

  ஆனால் பதவி சுகம் கண்ட திராவிட இயக்கங்களினால் மீண்டும் அவசியமற்று சிதம்பரம் மாதிரியான சர்ச்சைகளினால், தமது சிறுபான்மை அரசினை நிலையாக்கிட தமிழ்மொழிக் கேடயத்துடன் திராவிடக் கட்சிகள் மீண்டும் மிருக வெறியை வலிந்து ஏற்றுகின்றன.

  இன்று கல்வி முறை மாறிவிட 50 ஆண்டுகளில், 40 ஆண்டுகளாக ஐம்பது டிகிரி வெய்யிலில், நிதர்சனத்தில் குவைத் பாலைவனத்தில் 60 டிகிரி உஷ்ணமான வேலைச் சூழலில் பாய்லர் எஞ்சினியர்களாக பல பிராமணர்கள் வேலை செய்யவில்லையா?

  சமூகத்திலுள்ள சாதி அமைப்பு, கால ஓட்டத்தில், கல்வி முறை மாறிய சூழலில் தானே மாறும்.

  டெக்னாலஜி வராத காலத்தில் மனிதன் மனிதக்கழிவை எடுக்கும் அவலச்சூழலுக்கு அனைத்து சமூகத்தின் ஆளாதிக்கத்தில் பாதிக்கப்பட்டவன்,
  உண்மையில் மிகவும் நசுக்கப்பட்ட துப்புறவாளர் சமூகம் இன்றும் சென்னைநகரில் பாதாளச் சாக்கடை அடைத்துக்கொண்டால் இச்சமூக மனிதன் மேன் ஹோலில் இறங்கி முக்குளித்து அடைப்பெடுக்கும் அவலம்.

  டெக்னாலஜி வந்துவிட்ட நிலையிலும், இந்த திராவிட இயக்கங்களின் 40 ஆண்டு கால சமூகநீதியிலான ஆட்சியில்தான் இன்றும் 2006ல் நடந்தேறுகிறது.

  உண்மையில் இடஒதுக்கீடு சமூகத்தில் இம்மாதிரி கல்வி தேவைப்படுவோர்க்கு என்ன செய்தது?

  ராம்தாஸ் மகன் மத்திய அமைச்சர் ஆவதை, கருணாநிதி மகன் ,பேரன் அமைச்சர் ஆவது, பல ஆயிரம் கோடிகளில் வர்த்தக சாம்ராஜ்யம், இவைகளுக்குத் தொந்திரவு வராமலிருக்க இட ஒதுக்கீடு, தமிழ்மொழி, பிராமண சாதி இவை கேடயமகப் பயன்படுத்தப்படுகின்றன.

  தமிழகம் எனில் கருணாநிதி குடும்பம், மாறன் குடும்பம், ராமதாஸ் குடும்பம் மட்டும் தானா?

  இன்று தமிழகத்தின் 65,000,000 தமிழர்களாலும் இந்த மூன்று குடும்பங்கள் மாதிரி 40ஆண்டுகளில் வளர முடிந்திருக்கிறதா?

  அல்லது இவர்கள் இன்று இம்மாதிரி நேர்மையற்று வளர்ந்தது தான் புதிய மரபா?

 29. //பல கருத்துக்கள் நேர்மையானவை//
  மிக்க நன்றி.

  நடப்பது மக்களாட்சி. தலைவர்களை குறை சொல்லி பிரயோஜனமில்லை. காமராஜரை தோற்க வைத்தது நாம்.

  இன்றும் நல்லக்கண்ணு போன்ற எளிமையனவர்கள் இருக்கிறார்கள். நாம்தான் வீண்பகட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழர்கள் கடின உழைப்பாளிகள் எந்த தலைவர்கள் இருந்தாலும் நாம் முன்னேறுவோம்.

 30. அருண்மொழி,
  முதல் குற்றவாளி, இரண்டாவது குற்றவாளினு பழி போடுவதை நிறுத்தி, அனைவரும் முன்னேறும் வழியைப் பார்ப்பதே புத்திசாலித்தனம்…

  இன்று அதிகமாக கலப்பு திருமணம் நடப்பது பிராமணர்களிடம்தான்…

 31. //அந்த அற்புதமான திட்டம் தொடர்ந்து இருந்தால் நான் கண்டிப்பாக மாடு மேய்கும் ஒரு உன்னதமான high tech வேலையில் இருந்திருப்பேன். எல்லாத்தையும் அந்த சின்ன புத்தி கொண்ட கருப்புக்காக்காய் கெடுத்துவிட்டது//

  வஞ்சப் புகழ்ச்சியணிலக் கூட அவரைத் திட்டுவதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

  நான் படிக்கல, படிக்கலனா எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும். “எல்லாரும் படிக்கனும். அதுக்காக பிச்சை எடுக்கக்கூட நான் தயார்”னு சொன்ன முதல்வர். இவர் ஒருவர் மட்டும் இல்லாமல் இருந்த தமிழ்நாடு பீகாரை மிஞ்சி இருக்கும்.

 32. இந்தியாவில்தான் சாதி சாதி என்று அடித்துக்கொள்கிறார்கள்.இந்தியாவை விட்டு வெளியே கொஞ்சம் எட்டிப்பாருங்கள்.வெளிநாட்டு தமிழர்கள்(இன்றய தலைமுறை)சாதியை ஒரு பொருட்டாக எண்ணுவதிலை.
  நான் முன்றாவது தலைமுறையாக(150 வருடம்) மலேசியாவில் வாழ்கிறேன்.இங்கே பலருக்கு, தான் என்ன சாதி என்று தெரியாது.பக்கத்து நாட்டில்கூட(singapore)இதே நிலைமைதான்.

 33. //நான் படிக்கல, படிக்கலனா எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும். “எல்லாரும் படிக்கனும். அதுக்காக பிச்சை எடுக்கக்கூட நான் தயார்”னு சொன்ன முதல்வர். இவர் ஒருவர் மட்டும் இல்லாமல் இருந்த தமிழ்நாடு பீகாரை மிஞ்சி இருக்கும். ///

  தமிழ்நாட்டை வாழ வைத்த தெய்வம் கர்மவீரர் காமராஜர்.

  அணைக்கட்டுகள்,இலவச பள்ளிக்கூடங்கள்,சாலைகள் என அவர் செய்த சாதனை கொஞ்சமா நஞ்சமா?

 34. ரெங்கா,
  இங்கயும் இன்னும் 2 தலைமுறையில நிலைமை மாறிடும்னு எனக்கு நம்பிக்கையிருக்கு…

  $elvan,
  //தமிழ்நாட்டை வாழ வைத்த தெய்வம் கர்மவீரர் காமராஜர்.

  அணைக்கட்டுகள்,இலவச பள்ளிக்கூடங்கள்,சாலைகள் என அவர் செய்த சாதனை கொஞ்சமா நஞ்சமா?
  //
  சரியாக சொன்னீர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: